MCQ Questions

தேர்தல் மற்றும் பிரதிநித்துவம் 11th Political Science Lesson 11 Questions in Tamil

11th Political Science Lesson 11 Questions in Tamil

11] தேர்தல் மற்றும் பிரதிநித்துவம்

1) வாக்குரிமை என்னும் சொல் பிராங்க் என்னும் __________சொல்லில் இருந்து வந்ததாகும்.

A) ஆங்கிலேய

B) பிரெஞ்சு

C) ஆங்கிலோ – பிரெஞ்சு

D) ஆங்கிலோ – லத்தீன்

(குறிப்பு – வாக்குரிமை என்னும் சொல் சுதந்திரம் எனப் பொருள் தரும் பிராங்க் என்னும் ஆங்கிலோ-பிரெஞ்சு கலவை சொல்லிலிருந்து பெறப்பட்டதாகும்)

2) இந்திய அரசமைப்பின் எந்த பகுதியை தேர்தலை பற்றியதாகும்?

A) பகுதி-14

B) பகுதி-15

C) பகுதி-16

D) பகுதி-17

(குறிப்பு – இந்திய அரசமைப்பின் பகுதி 15 தேர்தலை பற்றியதாகும். தேர்தல் என்பது தங்களின் சார்பாக ஒரு யாரேனும் ஒருவரை அரசியல் தலைவராகவோ அல்லது பிரதிநிதியாகவோ அரசாங்கத்தில் பங்குபெற தேர்ந்தெடுப்பதற்காக வாக்களிக்கும் நடைமுறையாகும்.)

3) இந்திய அரசியலமைப்பின் எந்த உறுப்புகள் தேர்தலைப் பற்றிக் கூறுகிறது?

A) உறுப்புகள் 320 – 330

B) உறுப்புகள் 322 – 330

C) உறுப்புகள் 324 – 329

D) உறுப்புகள் 324 – 330

(குறிப்பு – இந்திய அரசமைப்பின் பகுதி-15இல், உறுப்புகள் 324 – 329 தேர்தலைப் பற்றி கூறுகிறது)

4) வயதுவந்தோர் வாக்குரிமையின் அடிப்படையில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என கூறும் இந்திய அரசமைப்பின் உறுப்பு எது?

A) உறுப்பு 325

B) உறுப்பு 326

C) உறுப்பு 327

D) உறுப்பு 328

(குறிப்பு – மக்களவைக்கும் மாநில சட்டப்பேரவைகளுக்கும் வயது வந்தோர் வாக்குரிமையின் அடிப்படையில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டுமென இந்திய அரசமைப்பின் உறுப்பு 326 விளக்குகிறது)

5) தேர்தல்கள் என்பவை பண்டைய காலத்தில் கீழ்காணும் எந்த இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது?

I. ஏதன்ஸ்

II. உரோமாபுரி

III. இங்கிலாந்து

A) I, II இல் மட்டும்

B) I, III இல் மட்டும்

C) II, III இல் மட்டும்

D) இவை அனைத்திலும்

(குறிப்பு – தேர்தல்கள் என்பவை பண்டைய ஏதென்ஸ், ரோமாபுரி ஆகியவற்றிலும் போப்பாண்டவர் மற்றும் ரோமானியப் பேரரசர்கள் தேர்வு ஆகியவற்றிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது)

6) தற்கால தேர்தல்களின் தோற்றம் என்பது எந்த நூற்றாண்டில் தொடங்கியது ஆகும்?

A) பதினைந்தாம் நூற்றாண்டில்

B) பதினாறாம் நூற்றாண்டில்

C) பதினேழாம் நூற்றாண்டில்

D) பதினெட்டாம் நூற்றாண்டில்

(குறிப்பு – தற்கால தேர்தல்களின் தோற்றம் என்பது 17 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் படிப்படியாக எழுச்சி கண்ட பிரதிநிதித்துவ அரசாங்கங்கள் மூலமாகவும் பின்னர் வட அமெரிக்காவிலும் தோன்றியது ஆகும்)

7) தேர்தல் பற்றிய கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – மக்களின் குரல் ஓங்கி ஒலிப்பதற்கு தேர்தலில் வாக்களிப்பது சிறந்த வழியாகும்.

கூற்று 2 – தேர்தல்கள் மற்றும் பிரதிநிதித்துவம் ஆகியவை அரசாங்கத்தை உருவாக்குதலின் அடிப்படையாகும்.

கூற்று 3 – தேர்தலில் வாக்களிப்பது என்பது கட்டாயம் அல்ல.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லா கூற்றுகளும் சரி

(குறிப்பு – பிரதிநிதித்துவ மக்களாட்சியில் தேர்தல்கள் மிகவும் முக்கியமானவையாகும். சட்டப்பேரவையிலும், மாநிலங்களவையிலும் மக்களின் குரல் ஓங்கி ஒலிப்பதற்கு தேர்தலில் வாக்களிப்பது சிறந்த வழியாகும்)

8) ஒரு தேர்தலில் வாக்காளர் கீழ்க்காணும் எந்த தேர்வுகளை மேற்கொள்கிறார்?

I. தங்களுக்கான சட்டங்களை உருவாக்கும் அவரை தேர்வு செய்வர்.

II. அரசாங்கத்தை அமைத்து பெரும்பான்மை முடிவுகளை எடுப்போரை தேர்வு செய்வர்

III. அரசாங்கம் மற்றும் சட்டம் இயற்றுதலில் வழிகாட்டக்கூடிய கொள்கைகளை கொண்ட கட்சியை தேர்வு செய்வர்.

A) I, II மட்டும்

B) II, III மட்டும்

C) I, III மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – ஒரு தேர்தலில் வாக்காளர் மேற்கண்ட பல்வேறு தேர்வுகளை மேற்கொள்கிறார். தேர்தல் இல்லாத மக்களாட்சி என்பது ஒரு வேளை சாத்தியமாவதற்கு மக்கள் அனைவரும் ஒவ்வொரு நாளும் ஒன்றுகூடி அனைத்து முடிவுகளையும் எடுக்க வேண்டும் இது பெரிய சமூகத்தில் சாத்தியமாகாது. எனவே தேர்தல் என்பது அவசியமாகிறது)

9) தேர்தலை மக்களாட்சியினதாக ஆக்குவதற்கு கீழ்க்கண்டவற்றில் எது அவசியமாகிறது?

I. அனைவருக்கும் தேர்வு செய்யும் வாய்ப்பு இருக்க வேண்டும். ஒருவருக்கு ஒரு வாக்கு மற்றும் ஒவ்வொரு வாக்கிற்கும் சமமான மதிப்பு என்பது இதன் பொருளாகும்.

II. மக்களால் விரும்பப்படும் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

III. தேர்தல்கள் ஒரு சில ஆண்டுகளுக்கு ஒரு முறை தகுந்த இடைவெளியில் நடத்தப்பட வேண்டும்.

A) I, II மட்டும் அவசியம்

B) II, III மட்டும் அவசியம்

C) I, III மட்டும் அவசியம்

D) இவை அனைத்தும் அவசியம்

(குறிப்பு – தேர்தல் என்பது மக்கள் தங்களின் விருப்பங்களுக்கு தகுந்தவாறு தேர்ந்தெடுக்கும் வகையில் சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தல்களாக நடத்தப்பட வேண்டும். தேர்தல் என்பது ஒரு முறையான முடிவாக்க நடைமுறையாகும் )

10) பன்மைத்துவ அல்லது பெரும்பான்மை முறைமைகளின் வகைகளாக கீழ்க்கண்டவற்றுள் எதை கூறலாம்?

I. முதலில் நிலையை கடந்து செல்லுதல்

II. தொகுதி வாக்கு

III. கட்சி தொகுதி வாக்கு

IV. மாற்று வாக்கு

V. இரு சுற்று முறை

A) I, II, III, IV மட்டும்

B) II, III, IV, V மட்டும்

C) II, III, IV மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – பன்மைத்துவம் அல்லது பெரும்பான்மை முறைமைகளின் கொள்கைகள் மிகவும் எளிமையானவையாகும். மக்கள் வாக்களித்த பிறகு வாக்குகள் எண்ணப்பட்டு அதிக வாக்குகளைப் பெற்ற வேட்பாளர் அல்லது கட்சிகள் வெற்றி பெற்றவையாக அறிவிக்கப்படுகின்றன)

11) முதலில் நிலையைக் கடந்து செல்லுதல் என்னும் (FPTP) உரை முதன் முதலில் எங்கு காணப்பட்டது?

A) அமேரிக்கா

B) இங்கிலாந்து

C) ஆஸ்திரேலியா

D) சீனா

(குறிப்பு – முதலில் நிலையை கடந்து செல்லுதல் என்பது பன்மைத்துவம் அல்லது பெரும்பான்மை முறையின் எளிமையான வடிவமாகும்.இது ஒரு உறுப்பினர் தொகுதிகள் மற்றும் வேட்பாளரை மையப்படுத்துவதுடன் வாக்களித்தலும் பயன்படுத்தப்படுகிறது)

12) முதலில் நிலையை கடந்து செல்லுதல் (FPTP) என்னும் முறை காணப்படாத நாடு எது?

A) இந்தியா

B) அமெரிக்கா

C) பாலஸ்தீனம்

D) இங்கிலாந்து

(குறிப்பு – முதலில் நிலையைக் கடந்து செல்லுதல் என்னும் முறை இங்கிலாந்து தவிர அமெரிக்கா, கரிபியன் நாடுகள், வங்கதேசம், மியான்மர், இந்தியா, மலேசியா, நேபாளம் மற்றும் தெற்கு பசிபிக் பகுதிகளில் உள்ள சில நாடுகளிலும் காணப்படுகிறது)

13) ஒரு வேட்பாளர் பிற வேட்பாளர்களை விட அதிக வாக்குகளை பெற்றிருந்தாலே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படும் முறை கீழ்க்கண்டவற்றுள் எது?

A) தொகுதி வாக்கு முறை

B) கட்சி தொகுதி வாக்கு முறை

C) முதலில் நிலையை கடந்து செல்லுதல் முறை

D) மாற்று வாக்கு முறை

(குறிப்பு – FPTP என்னும் முறையில் வேட்பாளர் அறுதிப் பெரும்பான்மை பெற வேண்டிய அவசியமில்லை. செல்லத் 8தகுந்த வாக்குகளில் பிற வேட்பாளர்களை விட அதிக வாக்குகளைப் பெற்று இருந்தாலே வெற்றி பெற்றவர் ஆவார்.)

14) அரசியல் கட்சிகளே இல்லாத அல்லது பலவீனமாக உள்ள நாடுகளில் காணப்படும் முறை கீழ்க்கண்டவற்றுள் எது?

A) தொகுதி வாக்கு முறை

B) கட்சி தொகுதி வாக்கு முறை

C) முதலில் நிலையை கடந்து செல்லுதல் முறை

D) மாற்று வாக்கு முறை

(குறிப்பு – தொகுதி வாக்கு என்பது அரசியல் கட்சிகள் இல்லாத அல்லது பலவீனமாக உள்ள நாடுகளில் காணப்படுவதாகும். இந்த முறையில் தனிப்பட்ட வேட்பாளர்களுக்கு வாக்கு அளிக்கும் திறனை வாக்காளர்கள் தக்க வைத்துக் கொள்வதால் தொகுதி வாக்கு முறை பாராட்டப்படுகிறது)

15) தொகுதி வாக்கு முறை நடைமுறையில் இல்லாத நாடு கீழ்க்கண்டவற்றில் எது?

A) லெபனான்

B) மாலத்தீவுகள்

C) சிங்கப்பூர்

D) குவைத்

(குறிப்பு – கேமன் தீவுகள், பாக்லாந்து தீவுகள், கர்ன்சே, குவைத், லாவோஸ், லெபனான், மாலத்தீவுகள், பாலஸ்தீனம், சிரிய அரபிக்குடியரசு ஆகியவை தொகுதி வாக்கு முறையிலான வாக்காளர் முறைமைகளை பின்பற்றுகின்றன)

16) கீழ்காணும் எந்த முறையில் வேட்பாளர்களுக்கு தகுந்த வாக்குகள் வாக்காளர்களுக்கு இருக்கும்?

A) தொகுதி வாக்கு

B) கட்சி தொகுதி வாக்கு

C) மாற்று வாக்கு

D) இரு சுற்று முறை

(குறிப்பு – தொகுதி வாக்கு என்பது ஒரு பன்மைத்துவ அல்லது பெரும்பான்மை முறைமையில் பல் உறுப்பினர் மாவட்டங்களில் பயன்படுத்துவதாகும். இது தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய வேட்பாளர்களுக்கு தகுந்த வாக்குகள் வாக்காளர்களுக்கு இருக்கும் அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்ற வேட்பாளர் வெற்றி பெறுகிறார்)

17) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. தொகுதி வாக்கு என்பது அரசியல் கட்சிகளை இல்லாத அல்லது பலவீனமான உள்ள நாடுகளில் காணப்படுவதாகும்.

II. தனிப்பட்ட வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும் திறனை வாக்காளர்கள் தக்கவைத்துக்கொள்வது தொகுதி வாக்கு முறை பாராட்டப்படுகிறது.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – தொகுதி வாக்கு முறையில் பொதுவாக கட்சிகளைக் காட்டிலும் வேட்பாளர்களுக்காக மக்கள் வாக்களித்தாலும் பெரும்பாலான முறைமைகளில் மக்கள் தங்களின் விருப்பத்திற்கு தக்கவாறு வாக்களிக்கின்றனர்)

18) கீழ்க்கண்டவற்றில் எது சமநிலையான இன அடிப்படை பிரதிநிதித்துவத்திற்கு உதவுகிறது?

A) தொகுதி வாக்கு

B) கட்சி தொகுதி வாக்கு

C) மாற்று வாக்கு

D) இரு சுற்று முறை

(குறிப்பு – கட்சி தொகுதி வாக்கு என்பது பயன்படுத்துவதற்கு எளிதானதாகும். இது வலுவான கட்சி வேட்பாளர்களில் சிறுபான்மையினர் பிரதிநிதித்துவம் பெறும் வகையில் கலவையாக அமைந்துள்ளது)

19) கட்சி தொகுதி வாக்கு முறை நடைமுறையில் இல்லாத நாடு கீழ்க்கண்டவற்றுள் எது?

A) டிஜிபெளடி

B) சிங்கப்பூர்

C) ஆஸ்திரேலியா

D) செனகல்

(குறிப்பு – கட்சி தொகுதி வாக்கு முறை டிஜிபெளடி, சிங்கப்பூர், செனகல் துனிசியா போன்ற நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. இது சமநிலையிலான இன அடிப்படை பிரதிநிதித்துவத்திற்கு உதவுகிறது)

20) கீழ்க்கண்டவற்றில் எது முன்னுரிமைவாக்கு எனவும் அழைக்கப்படுகிறது?

A) தொகுதி வாக்கு

B) கட்சி தொகுதி வாக்கு

C) மாற்று வாக்கு

D) இரு சுற்று முறை

(குறிப்பு – மாற்று வாக்கு முறையில் வாக்காளர்கள் தங்களின் முதல் விருப்பத் தேர்வைவிட வேட்பாளர்களுக்கிடையே முன்னுரிமை அளிக்கின்றனர்.இதனால் இது முன்னுரிமை வாக்கு எனவும் அழைக்கப்படுகிறது.)

21) மாற்று வாக்கு முறை கீழ்க்காணும் எந்த நாட்டில் நடைமுறையில் இல்லை?

A) ஆஸ்திரேலியா

B) பிஜி

C) லெபனான்

D) பாப்புவா கினியா

(குறிப்பு – மாற்று வாக்கு முறை ஆஸ்திரேலியா, பிஜி, பாப்புவா கினியா ஆகிய நாடுகளில் பின்பற்றப்படுகிறது. பல வேட்பாளர்கள் மொத்தமாக பெற்ற வாக்குகளை மாற்றுவதன் மூலம் ஒட்டுமொத்த விருப்பமும் இணைக்கப்பட்டு பிரதிநிதித்துவபடுத்தப்படுகிறது.)

22) இரு சுற்று முறை என்பது பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. இதில் முதல் சுற்றில் எந்த கட்சி அல்லது வேட்பாளருக்கும் அறுதிப் பெரும்பான்மை பெறாத நிலையில் இரண்டாவது சுற்று தேர்தல் நடைபெறும்.

II. இரு சுற்று முறை எப்போது பெரும்பான்மை அல்லது பன்மைத்துவவடிவம் எடுக்குமெனில், ஒருவேளை இரண்டாம் சுற்றில் இரண்டு வேட்பாளர்களுக்கு மேல் போட்டியிடும் நிலையில் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறுபவர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – இரு சுற்று முறையின் முக்கிய இயல்பே அதன் பெயரில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது ஒரே தேர்தலாக அல்லாமல் ஒரு வாரம் அல்லது 15 நாட்கள் இடைவெளியில் இரு சுற்றுகளாக நடைபெறுகிறது)

23) கீழ்க்கண்ட எந்த முறை தேசிய சட்டமன்ற உறுப்பினர் தேர்விற்கும், குடியரசுத் தலைவருக்கான நேரடி தேர்தலுக்கும் உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது?

A) தொகுதி வாக்கு

B) கட்சி தொகுதி வாக்கு

C) மாற்று வாக்கு

D) இரு சுற்று முறை

(குறிப்பு – இரு சுற்று முறை தேசிய சட்டமன்ற உறுப்பினர் தேர்விற்க்கும், குடியரசுத் தலைவருக்கான நேரடி தேர்தலுக்கும் உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரே தேர்தலாக அல்லாமல் ஒரு வாரம் அல்லது 15 நாட்கள் இடைவெளியில் இது சுற்றுகளாக நடைபெறுகிறது)

24) இரு சுற்றும் முறை கீழ்க்காணும் எந்த நாட்டில் பயன்பாட்டில் இல்லை?

A) உஸ்பெகிஸ்தான்

B) ஈரான்

C) லாவோஸ்

D) வியட்நாம்

(குறிப்பு – இரு சுற்று முறை மத்திய ஆப்பிரிக்க குடியரசு, காங்கோ, கபோன், ஈரான், மாலி மெளரிடானியா, ஹைதி, வியட்நாம், தஜிகிஸ்தான் உஸ்பெகிஸ்தான் போன்ற நாடுகளில் பின்பற்றப்படுகிறது.)

25) பொருத்துக

I. தொகுதி வாக்கு – a) TRS

II. கட்சி தொகுதி வாக்கு – b) BV

III. மாற்று வாக்கு – c) PBV

IV. இரு சுற்று முறை – d) AV

A) I-b, II-c, III-d, IV-a

B) I-b, II-d, III-c, IV-a

C) I-c, II-b, III-a, IV-d

D) I-a, II-c, III-b, IV-d

(குறிப்பு – பன்மைத்துவ அல்லது பெரும்பான்மை முறைமைகளை ஐந்துவகையாக அடையாளப்படுத்தலாம். அவை முதலில் நிலையை கடந்து செல்லுதல்(FPTP), தொகுதி வாக்கு(BV), கட்சி தொகுதி வாக்கு(PBV), மாற்று வாக்கு(AV) மற்றும் இரு சுற்று முறை(TRS)ஆகும்.)

26) பொருத்துக

I. தொகுதி வாக்கு – a) சிங்கப்பூர்

II. கட்சி தொகுதி வாக்கு – b) ஆஸ்திரேலியா

III. மாற்று வாக்கு – c) குவைத்

IV. இரு சுற்று முறை – d) ஈரான்

A) I-c, II-a, III-b, IV-d

B) I-b, II-d, III-c, IV-a

C) I-c, II-b, III-a, IV-d

D) I-a, II-c, III-b, IV-d

(குறிப்பு – பலவகையான பன்மைத்துவ அல்லது பெரும்பான்மை முறைமைகளை அடையாளப்படுத்தலாம் எனினும், குடியரசுத் தலைவருக்கான நேரடி தேர்தலுக்கு உலகம் முழுவதும் இரு சுற்று முறை (TRS) பயன்படுத்தப்படுகிறது)

27) தமிழகத்தின் நாடாளுமன்றத் தொகுதிகள் எத்தனை?

A) 38 தொகுதிகள்

B) 39 தொகுதிகள்

C) 40 தொகுதிகள்

D) 41 தொகுதிகள்

(குறிப்பு – தமிழகத்தில் மொத்தம் 39 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளது. ஒரு தொகுதிக்கு ஒருவர் வீதம் 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்)

28) மக்களவைத் தேர்தலுக்காக நமது நாடு எத்தனை தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது?

A) 543 தொகுதிகள்

B) 544 தொகுதிகள்

C) 545 தொகுதிகள்

D) 546 தொகுதிகள்

(குறிப்பு – மக்களவைத் தேர்தலுக்காக நமது நாடு 543 தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதி நாடாளுமன்ற உறுப்பினர் என அழைக்கப்படுகிறார். மக்களவைக்கு இரு உறுப்பினர்களை குடியரசுத் தலைவர் தேர்வு செய்கிறார். மக்களவை மொத்தம் 545 உறுப்பினர்களை கொண்டதாகும்)

29) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – ஒவ்வொரு வாக்கிற்கும் சமமதிப்பு என்பது மக்களாட்சியின் தேர்தலில் இயல்புகளில் ஒன்றாகும்.

கூற்று 2 – ஒவ்வொரு மாநிலமும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தொகுதிகளைக் கொண்டுள்ளது.

கூற்று 3 – மக்களவையில் அனைத்து மாநிலங்களுக்கும் சமமான உறுப்பினர்கள் உள்ளனர்.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லா கூற்றுகளும் சரி

(குறிப்பு – ஒவ்வொரு தொகுதியும் கிட்டத்தட்ட சமமான மக்கள் தொகை உள்ளதாக இருக்க வேண்டும் என அரசு அமைப்பு கூறுகிறது. எனினும் மக்களவையில் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே அளவிலான உறுப்பினர்கள் என்பது இல்லை. மக்களவை உறுப்பினர் எண்ணிக்கை மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது)

30) தனித்தொகுதி என்பது கீழ்கண்டவர்களில் எந்த பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது?

I. பட்டியல் இனத்தவர்

II. பழங்குடியினர்

III. பிற நலிந்த பிரிவினர்

IV. பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர்

A) I, II மட்டும்

B) I, II, III மட்டும்

C) I,II, IV மட்டும்

D) இவை அனைத்திற்கும்

(குறிப்பு – நமது அரசமைப்பினை உருவாக்கியவர்கள் நலிந்த பிரிவினருக்கு சிறப்பு அமைப்பாக தனித்தொகுதிகள் பற்றி சிந்தித்தனர். சில தொகுதிகள் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பிற நலிந்த பிரிவினருக்கு மாவட்ட மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் நீட்டிக்கப்பட்டுள்ளது)

31) மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைக்கான தொகுதிகள் வரையறுக்கப்படுவது முக்கியமாக எதன் அடிப்படையிலானது?

A) புவியமைப்பு

B) மக்கள் தொகை

C) நிர்வாக அமைப்பு

D) எல்லைகள்

(குறிப்பு – மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே மக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவைக்கான தொகுதிகள் வரையறுக்கப்படுகின்றன.தொகுதி வரையறை செய்யும் போது அதன் புவியமைப்பு, இயற்கையான இயல்புகள், நிர்வாக அமைப்புகள், தகவல்தொடர்பு மற்றும் பொதுமக்களின் வசதி ஆகியவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன)

32) தவறான இணை எது?

A) முதல் வரையறை ஆணையச் சட்டம் – 1952

B) இரண்டாவது வரையறை ஆணை சட்டம் – 1960

C) மூன்றாவது வரையறை ஆணை சட்டம் – 1973

D) நான்காவது வரையறை ஆணை சட்டம் – 2002

(குறிப்பு – தொகுதி வரையறை சட்டங்கள் மொத்தம் நான்கு ஆகும். அவை முறையே, 1952, 1963, 1973, 2002 இல் மேற்கொள்ளப்பட்டவையாகும்)

33) கீழ்க்கண்டவற்றில் எதை வாக்களிக்கும்போது அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம்?

I. வாக்காளர் அடையாள அட்டை

II. குடிமை வழங்கல் அட்டை

III. ஆதார் அட்டை

IV. ஓட்டுனர் உரிமம்

A) I, II மட்டும்

B) I, II, III மட்டும்

C) I,II, IV மட்டும்

D) இவை அனைத்தும்.

(குறிப்பு – வாக்களிக்க செல்லும்போது வாக்காளர் அடையாள அட்டை கொண்டு செல்வது அவசியமாகிறது. எனினும் இதனை தவிர ஆதார் அட்டை, குடிமை வழங்கல் அட்டை மற்றும் ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றின் அசல் சான்று ஆகியவற்றினை வாக்களிப்பதற்கான ஆவணமாக காட்டலாம்)

34) இந்தியாவில் தேர்தல் நடைமுறையில் இல்லாதது கீழ்க்கண்டவற்றுள் எது?

A) தேர்தல் அறிவிப்பு

B) வேட்புமனு தாக்கல்

C) தொகுதிகளை பிரித்தல் அல்லது இணைத்தல்

D) தேர்தல் பரப்புரை

(குறிப்பு – தொகுதிகளை மறுவரையறை செய்தல், தேர்தல் அறிவிப்பு, வேட்புமனுத்தாக்கல், வேட்புமனுக்களை சரிபார்த்தல், தேர்தல் பரப்புரை, வாக்களித்தல் நடைமுறை, வாக்கு எண்ணிக்கை மற்றும் தேர்தல் முடிவுகளை அறிவித்தல் போன்றவை இந்தியாவில் தேர்தல் நடைபெறும் முறைகளாகும்)

35) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. ஒரு வாக்காளர் ஒரு தொகுதிக்கு மேல் தங்களை பதிவு செய்ய முடியாது.

II. 18 வயது நிரம்பியவர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும்.

III. 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிக்க முடியும்.

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I மட்டும் சரி

D) இவை அனைத்திற்கும்

(குறிப்பு – இந்தியாவில் 18 வயது நிரம்பியவர்கள் வாக்களிக்க முடியும். எனினும் அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கும் பட்சத்தில் அவர் வாக்காளர் அடையாள அட்டை போன்ற அடையாள ஆவணங்களை கொண்டு வாக்களிக்க முடியும்)

36) எந்த அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலமாக இந்திய குடிமக்களின் வாக்களிக்கும் வயது 21 லிருந்து 18 ஆக குறைக்கப்பட்டது?

A) 61வது சட்டத்திருத்தம்

B) 42 வது சட்டத்திருத்தம்

C) 32வது சட்டத்திருத்தம்

D) 55வது சட்டத்திருத்தம்

(குறிப்பு – 61வது சட்டத்திருத்தம், 1989இன்படி இந்திய குடிமக்களின் வாக்களிக்கும் வயது 21 லிருந்து 18 ஆக குறைக்கப்பட்டது)

37) இந்தியாவில் வேட்பாளராக விண்ணப்பிக்க தேவையான குறைந்தபட்ச வயது எது?

A) 18 வயது

B) 21 வயது

C) 25 வயது

D) 30 வயது

(குறிப்பு – தேர்தலில் வாக்களிப்பதற்கான குறைந்தபட்ச வயது 18 எனில் வேட்பாளர் ஆவதற்கான குறைந்தபட்ச வயது 25 ஆகும். ஓர் மக்களாட்சி அடிப்படையிலான தேர்தலில் உண்மையான விருப்பத்தேர்வு மேற்கொள்ள மக்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்)

38) ஒரு கட்சியினால் வேட்பாளராக அறிவிக்கப்படுபவர் கீழ்க்கண்டவற்றில் எவ்வாறு அழைக்கப்படுவார்?

A) கட்சி நியமன வேட்பாளர்

B) வேட்பாளர்

C) கட்சி வேட்பாளர்

D) கட்சி நியமன சீட்டு

(குறிப்பு – அரசியல் கட்சிகள் வேட்பாளரை நியமிக்கும் போது அவர் கட்சியின் சின்னம் மற்றும் ஆதரவினை பெறுகிறார். கட்சியின் வேட்பாளர் நியமனத்தினை கட்சியின் நியமனச்சீட்டு என அழைக்கின்றனர்)

39) வேட்புமனு தாக்கல் செய்ய விரும்பும் வேட்பாளர் கீழ்க்காணும் எந்த தகவலை தர வேண்டியது இல்லை?

A) வேட்பாளருக்கு எதிரான குற்றவியல் வழக்குகள் விவரம்

B) வேட்பாளர் மற்றும் குடும்பத்தினருடைய உடைய சொத்து விவரம்.

C) வேட்பாளரின் தேர்தல் வாக்குறுதி விபரம்

D) வேட்பாளரின் கல்வித்தகுதிகள்

(குறிப்பு – வேட்புமனு தாக்கல் செய்ய விரும்பும் ஒவ்வொருவரும் பிணைத் தொகையாக குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும். வேட்பாளர் தனக்கு எதிராக உள்ள குற்றவியல் வழக்கு விவரங்களையும், தன்னுடைய மற்றும் தன் குடும்பத்தினர் உடைய சொத்து விவரங்களையும், தனது கல்வித் தகுதிகளையும் சமர்ப்பிக்க வேண்டும்)

40) சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் எவ்வளவு தொகையை பிணைத் தொகையாக செலுத்த வேண்டும்?

A) ஐந்தாயிரம் ரூபாய்

B) பத்தாயிரம் ரூபாய்

C) இருபதாயிரம் ரூபாய்

D) முப்பதாயிரம் ரூபாய்

(குறிப்பு – மனுத்தாக்கல் செய்ய விரும்பும் ஒவ்வொருவரும் பிணைத் தொகையாக குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பத்தாயிரம் ரூபாயும், மக்களவைத் தேர்தலுக்கு 25 ஆயிரம் ரூபாயும் பிணைத் தொகையாக செலுத்த வேண்டும்)

41) தேர்தல் பரப்புரையின் போது ஒரு ஒரு வேட்பாளர் கீழ்க்கண்டவற்றில் எதை செய்ய முடியாது?

I. வாக்காளர்களுக்கு கையூட்டு அளித்தல் அல்லது அச்சுறுத்தல்.

II. சாதி மற்றும் மதத்தின் பெயரால் வாக்களிக்கும்படி வேண்டுதல்.

III. தேர்தல் பரப்புரைக்கு அரசாங்கத்தின் வளங்களைப் பயன்படுத்துதல்.

A) I, II மட்டும்

B) II, III மட்டும்

C) I, III மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – ஓர் மக்களாட்சியில் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் விரும்பும் வகையில் தேர்தல் பரப்புரையை சுதந்திரமாக மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் இருப்பினும், நமது தேர்தல் சட்டங்களின் படி ஒரு கட்சி அல்லது வேட்பாளர் மேற்கண்டவற்றை செய்ய முடியாது)

42) தேர்தல் பரப்புரையின் போது ஒரு கட்சி அல்லது வேட்பாளர் கீழ்கண்டவற்றில் எதை செய்ய முடியாது?

I. தேர்தல் பரப்புரைக்காக மத வழிபாட்டுத் தலங்களை பயன்படுத்துதல்.

II. தேர்தலுக்காக அரசு வாகனங்கள், விமானங்கள் மற்றும் அரசு அலுவலர்களை பயன்படுத்துதல்.

III. புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல்.

A) I, II மட்டும்

B) II, III மட்டும்

C) I, III மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – மேற்கண்டவற்றை ஒரு அமைச்சரோ அல்லது வேட்பாளரோ செய்யும்போது அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்ட பின்னரும் நீதிமன்றம் அத்தேர்தலை நிராகரித்து உத்தரவிடலாம்.)

43) இந்தியாவில் முதல் பொதுத் தேர்தல் எந்த ஆண்டு நடைபெற்றது?

A) 1948 இல்

B) 1950 இல்

C) 1951 இல்

D) 1955 இல்

(குறிப்பு – இந்தியாவின் முதலாவது பொதுத்தேர்தல், இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் 1951-1952ம் ஆண்டில் நடைபெற்றது. மொத்தம் 489 மக்களவை இடங்களுக்கான தேர்தல் நடைபெற்றது. அதில் காங்கிரஸ் கட்சி 324 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஜவகர்லால் நேரு இந்தியாவின் முதல் பிரதமர் ஆனார்)

44) இந்தியாவின் முதல் மக்களவைப் பொதுத்தேர்தலில் எத்தனை சதவீத வாக்குகள் பதிவாகின?

A) 62.4%

B) 64.7%

C) 67.6%

D) 69.4%

(குறிப்பு – இந்தியாவின் முதல் மக்களவை பொதுத் தேர்தலில் 67..6 சதவீத வாக்குகள் பதிவானது. மொத்தம் 489 மக்களவை இடங்களுக்கான தேர்தலில் காங்கிரஸ் கட்சி 364 இடங்களில் வெற்றி பெற்றது. எஸ் கட்சி மொத்தம் பதிவான வாக்குகளில் 45 சதவீத வாக்குகளைப் பெற்றது)

45) இந்தியாவின் முதல் பொது மக்களவைத் தேர்தலில் எத்தனை கட்சிகள் போட்டியிட்டன?

A) 50 கட்சிகள்

B) 52 கட்சிகள்

C) 54 கட்சிகள்

D) 56 கட்சிகள்

(குறிப்பு – அக் 25, 1951 முதல் பிப் 21, 1952 வரை நடைபெற்ற முதல் மக்களவை பொதுத் தேர்தலில், மொத்தம் 54 கட்சிகள் போட்டியிட்டன. 26 இந்திய மாநிலங்கள் மற்றும் 401 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது)

46) இந்திய அரசமைப்பின் எந்த உறுப்பு பேச்சு மற்றும் கருத்தை வெளிப்படுத்தும் சுதந்திரத்திற்கான உரிமையை வழங்குகிறது?

A) உறுப்பு 18

B) உறுப்பு 19

C) உறுப்பு 19-A

D) உறுப்பு 20

(குறிப்பு – மக்களாட்சியில் தகவல்களை பெறும் உரிமை என்பது முழுவதுமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், அது மக்களாட்சி எனும் கருத்திலிருந்து வெளிப்படக்கூடிய இயற்கை உரிமையாகும். இந்திய அரசமைப்பின் உறுப்பு 19-அ பேச்சு மற்றும் கருத்தை வெளிப்படுத்தும் சுதந்திரத்திற்கான உரிமையை வழங்குகிறது)

47) இந்திய அரசமைப்பின் எந்த உறுப்பு தேர்தல் ஆணையத்தினை அமைப்பதைப் பற்றி விளக்குகிறது?

A) உறுப்பு 323

B) உறுப்பு 324

C) உறுப்பு 325

D) உறுப்பு 326

(குறிப்பு – இந்திய அரசமைப்பின் உறுப்பு 324 ஓர் தேர்தல் ஆணையத்தை அமைப்பதைப் பற்றி விளக்குகிறது. இது சுதந்திரமாகவும், நடுநிலையாகவும், ஒழுங்கான முறையில் தேர்தலை நடத்துகிறது. இந்த ஆணையமானது நாடாளுமன்றம், சட்டமன்றம், குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல்களை மேற்பார்வையிட்டு வழிகாட்டுவதுடன் தேர்தலையும் நடத்துகிறது)

48) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. தேர்தல் ஆணையம் ஒரு சுதந்திரமான அமைப்பாகும்.

II. இந்திய தேர்தல் ஆணையம் ஒரு தலைமை தேர்தல் ஆணையாளரை கொண்டுள்ளது.

III. இந்திய தேர்தல் ஆணையம் 3 தேர்தல் ஆணையாளர்களை கொண்டுள்ளது.

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – இந்திய தேர்தல் ஆணையம் ஒரு தலைமை தேர்தல் ஆணையாளர் மற்றும் இரண்டு தேர்தல் ஆணையாளர் களைக் கொண்டுள்ளது. இது நாடாளுமன்றம் சட்டமன்றம் குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர் தேர்தல்களை நடத்தும் பொறுப்பையும் கொண்டுள்ளது.)

49) தலைமை தேர்தல் ஆணையரின் பதவிக்காலம் எத்தனை?

A) 4 வருடங்கள்

B) 5 வருடங்கள்

C) 6 வருடங்கள்

D) 3 வருடங்கள்

(குறிப்பு – இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையரின் பதவிக்காலம் ஆறு வருடங்கள் அல்லது 65 வயது ஆகும்.(இதில் முந்தையது).மேலும் இவர் குடியரசு தலைவரால் நியமனம் செய்யப்படுகிறார்.)

50) பிற தேர்தல் ஆணையாளர்கள் யாருடைய பரிந்துரையின் பேரில் நியமனம் செய்யப்படுகிறார்கள்?

A) பிரதமர்

B) குடியரசு தலைவர்

C) தலைமை தேர்தல் ஆணையர்

D) உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

(குறிப்பு – இந்தியாவின் தலைமை தேர்தல் குடியரசு தலைவரால் நியமனம் செய்யப்படுகிறார். அவரின் பரிந்துரையின் பெயரால் பிற தேர்தல் ஆணையாளர்கள் குடியரசு தலைவரால் நியமனம் செய்யப்படுகிறார்.)

51) தமிழகத்தில் எந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல் மிக நீண்டகாலம் நடந்தது?

A) 1952 ஆம் ஆண்டு

B) 1962 ஆம் ஆண்டு

C) 1967 ஆம் ஆண்டு

D) 1985 ஆம் ஆண்டு

(குறிப்பு – 1952ஆம் ஆண்டில் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை தேர்தல் மிக நீண்டகாலம் நடைபெற்ற தேர்தல் ஆகும். இதன் வாக்குப்பதிவு 9 நாட்கள் நடைபெற்றது)

52) இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரங்களில் அல்லாதது கீழ்க்கண்டவற்றுள் எது?

A) வாக்காளர் பட்டியல் தயாரித்தல்

B) அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம் அளித்தல்.

C) நாடாளுமன்ற உறுப்பினர்களை நியமனம் செய்தல்.

D) தொகுதிக்கான இடங்களை ஒதுக்கீடு செய்தல்

(குறிப்பு – நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதியிழப்பினை முடிவு செய்தல், வாக்காளர் பட்டியல் தயாரித்தல், வாக்காளர் பட்டியலை திருத்துதல் போன்றவை தேர்தல் ஆணையத்தின் பணிகளாகும்)

53) தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்கள் உச்சவரம்பினை இறுதி செய்யும் அதிகாரம் யாருக்கு உள்ளது?

A) குடியரசு தலைவர்

B) பிரதமர்

C) பாராளுமன்றம்

D) இந்திய தேர்தல் ஆணையம்

(குறிப்பு – தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களை உச்சவரம்பு இறுதி செய்யும் அதிகாரமும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களை கேட்டு பெறும் பணிகளும் இந்திய தேர்தல் ஆணையத்தின் பணிகள் மாறும் கடமைகளாகும்)

54) ஒரு மாநிலத்தின் தலைமை தேர்தல் அதிகாரியை நியமிப்பவர் யார்?

A) குடியரசுத் தலைவர்

B) பிரதமர்

C) இந்திய தலைமை தேர்தல் ஆணையர்

D) மாநிலத்தின் ஆளுநர்

(குறிப்பு – ஒரு மாநிலம் அல்லது ஒன்றிய பிரதேசத்தின் தலைமை தேர்தல் அதிகாரி அந்த மாநில ஒன்றிய பிரதேசத்தின் தேர்தல் பணிகளை மேற்பார்வையிடும் அதிகாரத்துடன் தேர்தல் ஆணையத்தின் மேற்பார்வை, வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாட்டில் செயல்படுகிறார்)

55) ஒரு நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற தொகுதியின் வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி கீழ்கண்டவர்களில் யாருடையதாகும்?

A) தலைமை தேர்தல் அதிகாரி (CEO)

B) மாவட்ட தேர்தல் அதிகாரி (DEO)

C) வாக்காளர் பதிவு அலுவலர் (ERO)

D) தேர்தல் நடத்தும் அலுவலர் (RO)

(குறிப்பு – இந்திய தேர்தல் ஆணையம் மாநிலம் அல்லது ஒன்றியப் பிரதேச அரசுகளுடன் கலந்தாலோசித்த பின்னர் வாக்காளர் பதிவு அலுவலர்கள் நியமிக்கிறது. ஒரு நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற தொகுதியின் வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி வாக்காளர் பதிவு அலுவலர்களுடையதாகும்)

56) பொருத்துக

I. தார்க்குந் குழு – a) 1993

II. தினேஷ் கோஸ்வாமி குழு – b) 1998

III. வேரா குழு – c) 1974

IV. இந்திரஜித் குழு – d) 1990

A) I-c, II-d, III-a, IV-b

B) I-b, II-d, III-c, IV-a

C) I-c, II-b, III-a, IV-d

D) I-a, II-c, III-b, IV-d

(குறிப்பு – மேற்கண்ட குழுக்கள் தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான குழுக்கள் ஆகும். இந்தக் குழுக்கள் அளித்த பரிந்துரையின் அடிப்படையில் தேர்தல் முறைமையில் அவ்வபோது சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன)

57) பொருத்துக

A) டங்கா குழு – a) 1999

B) வீரப்ப மொய்லி ஆணையம் – b) 2002

C) வேங்கட செல்லையா ஆணையம் – c) 2010

D) இந்திய சட்ட ஆணையத்தின் அறிக்கை – d) 2007

A) I-c, II-d, III-b, IV-a

B) I-b, II-d, III-c, IV-a

C) I-c, II-b, III-a, IV-d

D) I-a, II-c, III-b, IV-d

(குறிப்பு – மேற்கண்ட குழுக்கள் தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான குழுக்கள் ஆகும். இந்தக் குழுக்கள் அளித்த பரிந்துரையின் அடிப்படையில் தேர்தல் முறைமையில் அவ்வபோது சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன)

58) மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் எந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது?

A) 1988 இல்

B) 1989 இல்

C) 1990 இல்

D) 1991 இல்

(குறிப்பு – 1989 ஆம் ஆண்டு மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் தேர்தலில் பயன்படுத்தப்படும் வகையில் அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டன. 1989ம் ஆண்டு வாக்குச்சாவடியில் கைப்பற்றுவதை தடுப்பதற்கு தேர்தலை ஒத்திவைக்கும் நடைமுறை கொண்டு வரப்பட்டது)

59) தபால் வாக்கு மூலம் வாக்களிக்கும் முறை எந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது?

A) 1997 இல்

B) 1998 இல்

C) 1999 இல்

D) 2000 இல்

(குறிப்பு – 1999 ஆம் ஆண்டு வாக்காளர்களில் ஒரு பிரிவினர் தபால் வாக்கினை (Postal Ballot) பயன்படுத்தி வாக்களிக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது. தேர்தல் தினத்தன்று பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளித்தல், ஆயுதங்களுக்கு தடை போன்றவைகள் தேர்தல் சீர்திருத்த சட்டங்கள் மூலம் கொண்டு வரப்பட்டது)

60) எந்த ஆண்டு முதல் வேட்பாளரின் தேர்தல் செலவு கணக்கில் பயண செலவினங்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டது?

A) 2001 முதல்

B) 2002 முதல்

C) 2003 முதல்

D) 2004 முதல்

(குறிப்பு – 2003இல் மாநிலங்களவைத் தேர்தல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வேட்பாளரின் வசிப்பிடம் தொடர்பான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன.மேலும் வெளிப்படையான வாக்கெடுப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டது)

61) தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்தி முடிவுகளை அறிவிப்பதற்கு கட்டுப்பாடுகள் எந்த ஆண்டு முதல் விதிக்கப்பட்டன?

A) 2006 முதல்

B) 2007 முதல்

C) 2008 முதல்

D) 2009 முதல்

(குறிப்பு – 2009இல் தேர்தலின்போது தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களை தகுதி இழப்பு செய்வதுடன் மூன்று மாத காலத்திற்குள் குற்றம் சாட்டப்பட்டவரின் மீதான விவரங்களை குறிப்பிட்ட அதிகாரி சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது)

62) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. 2010 முதல் வெளிநாடுவாழ் இந்திய குடிமக்களுக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது.

II. 2011-ம் ஆண்டு தேர்தலில் செலவினங்களுக்கான உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டது

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – 2003 ஆம் ஆண்டில் ராணுவத்தில் பணிபுரிபவர்கள் தங்களின் சார்பாக பதிலி வாக்கு(Proxy Vote) அளிக்கும் முறை கொண்டு வரப்பட்டு ராணுவ சட்டத்திற்கு இசைவான வகையில் செயல்படுத்தப்பட்டுள்ளது)

63) எந்த சட்ட திருத்தத்தின் மூலமாக ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு மாறும் கட்சி கட்சி தாவல் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது?

A) 51வது அரசமைப்புச் சட்டத் திருத்தம்

B) 52 ஆவது அரசமைப்பு சட்ட திருத்தம்

C) 53வது அரசமைப்புச் சட்டத்திருத்தம்

D) 54வது அரசமைப்புச் சட்டத்திருத்தம்

(குறிப்பு – 52ஆவது அரசமைப்புச் சட்டத்திருத்தம் 1985 இன், மூலமாக ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு மாறும் நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினரை தகுதி இழப்பு செய்யும் நடைமுறை கொண்டு வரப்பட்டது)

64) கட்சி தாவல் தடைச் சட்டத்தில் எந்த அரசமைப்புச் சட்டத்திருத்தம் மூலம் திருத்தம் செய்யப்பட்டது

A) 90வது அரசமைப்புச் சட்டத் திருத்தம்

B) 91வது அரசமைப்புச் சட்டத் திருத்தம்

C) 92வது அரசமைப்புச் சட்டத் திருத்தம்

D) 93வது அரசமைப்புச் சட்டத் திருத்தம்

(குறிப்பு – 2003 ஆம் ஆண்டில் 91 ஆவது அரசமைப்பு சட்ட திருத்தம் மூலமாக கட்சி தாவல் தடை சட்டம் திருத்தம் செய்யப்பட்டது. அதாவது கட்சி பிளவுரும் சூழலில் கட்சி தாவலின் அடிப்படைகள் பொருந்தாது என்பதாகும்)

65) 52 ஆவது அரசமைப்பு சட்ட திருத்தத்தின் மூலமாக கட்சி தாவல் தடைச் சட்டம் எந்த ஆண்டு உருவானது?

A) 1980 இல்

B) 1985 இல்

C) 1990 இல்

D) 1995 இல்

(குறிப்பு – ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு மாறும் நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினரை தகுதி இழப்பு செய்யும் நடைமுறை 1985ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டம் பின்னர் கட்சிதாவல் தடைச் சட்டம் என பெயரிடப்பட்டது)

66) கட்சி தாவல் தடைச் சட்டத்திற்கு எந்த அட்டவணை இந்திய அரசமைப்பில் இணைக்கப்பட்டது?

A) 8வது

B) 9வது

C) 10வது

D) இது எதுவும் இல்லை

(குறிப்பு – கட்சித்தாவல் தடை சட்டத்திற்காக பத்தாவது அட்டவணை இந்திய அரசமைப்பில் இணைக்கப்பட்டது. 52ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் உருவான இந்த சட்டம், 91 ஆவது அரசமைப்பு சட்ட திருத்தத்தின் மூலமாக சிறு திருத்தம் செய்யப்பட்டது)

67) கட்சி தாவல் தடைச் சட்டத்தின் மூலமாக தகுதி இழப்பு என்பது கீழ்க்காணும் எந்த நிகழ்வில் நிகழும்?

I. ஒரு உறுப்பினர் தான் சார்ந்த கட்சியின் வழிகாட்டுதலுக்கு எதிராக வாக்களித்தல்.

II. ஒரு சுயேட்சை வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் ஒரு அரசியல் கட்சியில் சேருதல்.

III. ஒரு நியமன உறுப்பினர் தான் பதவியேற்ற நாளிலிருந்து ஆறு மாத காலத்திற்குள் ஏதேனும் ஒரு அரசியல் கட்சியில் சேருதல்.

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) இவை அனைத்தும் சரி

(குறிப்பு – மேற்கண்ட அனைத்து நிகழ்வின் போதும் ஒரு உறுப்பினர், கட்சி தாவல் தடைச் சட்டத்தின் மூலம் உறுப்பினர் பதவியை இழக்கிறார். ஒரு உறுப்பினர் விருப்பத்தின் அடிப்படையில் உறுப்பினர் பதவியை விட்டு விலகுதல் அல்லது வாக்களிப்பில் இருந்து கட்சியின் முன் அனுமதியின்றி விலகி இருத்தல் ஆகியவற்றாலும் தகுதி இழப்பு செய்யப்படலாம்)

68) கட்சி தாவல் தடைச் சட்டம் எப்போது விதிவிலக்கிற்கு உள்ளாகிறது?

I. ஒரு கட்சி மற்றொரு கட்சியுடன் இணைக்கப்படும் போது கட்சிகளின் அடிப்படையில் ஒரு உறுப்பினரின் மீது நடவடிக்கை எடுக்க முடியாது.

II. சமையல் வழிநடத்தும் பொறுப்பிற்கு ஒரு உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் தனது கட்சி உறுப்பினர் பதவியில் இருந்து விலகினாலும், கட்சி தாவல் தடைச் சட்டம் கட்சி தாவல் தடைச் சட்டம், விலக்களிக்கிறது.

A) I மட்டும்

B) II மட்டும்

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – மேற்கண்ட இரு நிகழ்வுகள், கட்சி தாவல் தடை சட்டத்திற்கு விதிவிலக்காக உள்ளது. அவை நடத்தும் பொறுப்பில் உள்ளவரே கட்சி தாவல் தொடர்பான தகுதி இழப்பு பிரச்சனைகளை இறுதி செய்ய முடியும்)

69) கட்சி தாவல் தடை சட்டத்தின் விதிமுறைகளை அவையில் எத்தனை நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும்?

A) 10 நாட்களுக்குள்

B) 20 நாட்களுக்குள்

C) 30 நாட்களுக்குள்

D) 45 நாட்களுக்குள்

(குறிப்பு – இந்திய அரசமைப்பின் பத்தாவது அட்டவணையில் உள்ள அம்சங்களை செயல்பாட்டிற்கு கொண்டு வரும் விதிமுறைகளை உருவாக்கும் அதிகாரம் அவையை நடத்துபவருக்கே உள்ளது. அத்தகைய விதிகள் 30 நாட்களுக்குள் அவையில் தாக்கல் செய்யப்பட வேண்டும்)

70) மாநிலங்களவை உறுப்பினர்கள் யாரால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்?

A) மக்களால்

B) சட்டமன்ற உறுப்பினர்களால்

C) மக்களவை உறுப்பினர்களால்

D) இவர்கள் யாரும் அல்ல

(குறிப்பு – நமது மாநிலங்களவை தேர்தலில் மாற்று தரக்கூடிய வாக்கு முறை பின்பற்றப்படுகிறது. மாநிலங்களவை உறுப்பினர்கள் மாநிலங்களின் சட்டப்பேரவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.)

71) முதலில் நிலையைக் கடந்து செல்லுதல் என்னும் முறையானது கீழ்கண்ட எந்த பதவிக்கான தேர்தலில் பயன்படுத்தப்படுகிறது?

A) சட்டமன்ற உறுப்பினர்

B) மக்களவை உறுப்பினர்

C) மாநிலங்களவை உறுப்பினர்

D) குடியரசு தலைவர்

(குறிப்பு – முதலில் நிலையை கடந்து செல்லும் முறையானது மிகவும் எளிதான முறையாக கருதப்படுகிறது. மாநிலங்களவை உறுப்பினரை தேர்ந்தெடுப்பதற்கு இந்த முறை பின்பற்றப்படுகிறது)

72) அரசின் நிதியுதவியுடனான தேர்தல் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. அரசின் நிதி உதவியுடனான தேர்தல்கள் என்னும் கருத்தாக்கமே ஊழலை குறைப்பதற்காக வடிவமைக்கப்பட்டதாகும்.

II. அரசியல் கட்சிகளின் நிதியில் வெளிப்படைத் தன்மையை எட்டுவதற்கு சிறந்த வழியாக அரசின் நிதியுதவியுடனான தேர்தல்கள் பரிந்துரைக்கப்படுகின்றன.

III. இதில் தனிநபர் நிதியளிப்புகளுக்கு மாற்றாக அரசாங்கமே தேர்தல்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்கிறது.

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கு தனியார் நிதி உதவி இருக்குமெனில், சமுதாயத்தில் உள்ள பொருளாதார சமத்துவமின்மை என்பது அரசாங்கத்தில் அரசியல் சமத்துவமின்மையாக உருமாறுகிறது)

73) அரசின் நிதி உதவியுடனான தேர்தல்கள் குறித்து அமைக்கப்பட்ட குழு எது?

A) தினேஷ் கோஸ்வாமி குழு

B) இந்திரஜித் குப்தா குழு

C) வேரா குழு

D) வெங்கடா செல்லையா குழு

(குறிப்பு – அரசின் நிதி உதவி உடனான தேர்தல்கள் பற்றி ஆராய்வதற்காக இந்திரஜித்குப்தா தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவானது அரசியல் கட்சிகளுக்கு அரசின் நிதி உதவியுடன் தேர்தலை நடத்துவதற்கான அரசமைப்பு அம்சங்கள், சட்டக் கூறுகள், பொது விருப்பம் போன்றவற்றினை கொள்கை அடிப்படையில் ஆராயும் அதிகார வரம்பினை கொண்டிருந்தது)

74) இந்திரஜித் குப்தா குழு எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?

A) 1994 இல்

B) 1996 இல்

C) 1998 இல்

D) 2000 இல்

(குறிப்பு – இந்திரஜித் குப்தா குழு, 1998 ஆம் ஆண்டு அரசின் நிதிஉதவி உடனான தேர்தல்கள் குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்டது.)

75) தேர்தலில் அரசின் நிதி உதவி பெறுவதற்கு தேவையான தகுதிகளுள் சரியானது எது?

I. சுயேச்சை வேட்பாளராக இருக்க வேண்டும்.

II. தேசிய அல்லது மாநில கட்சியின் வேட்பாளராக இருக்க வேண்டும்

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – அரசின் தேர்தல் நிதி உதவி சுயேச்சை வேட்பாளர்களுக்கு வழங்கப்படமாட்டாது.வாக்காளர் மத்தியில் பிரபலமாக இருப்பதுடன், தங்களுக்கென தேர்தல் ஆணையத்தால் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள தேசிய அல்லது மாநில கட்சிகளின் வேட்பாளர்கள் மட்டுமே அரசின் தேர்தல் நிதி உதவி அளிக்கப்படும்)

76) இந்திரஜித் குப்தா குழு, தேர்தல் நிதி உதவியாக மத்திய அரசின் சார்பாக எத்தனை கோடி ரூபாயை செலவிட பரிந்துரை செய்தது?

A) 500 கோடி ரூபாய்

B) 600 கோடி ரூபாய்

C) 700 கோடி ரூபாய்

D) 800 கோடி ரூபாய்

(குறிப்பு – இந்திரஜித் குப்தா குழு தனியாக தேர்தல் நிதியை உருவாக்க பரிந்துரைத்தது. இதற்கு மத்திய அரசின் சார்பாக வருடத்திற்கு 600 கோடி ரூபாயும் அனைத்து மாநில அரசுகளும் அதற்கு நிகரான பங்களிப்பினை ஒட்டுமொத்தமாக மேற்கொள்ள வேண்டும் எனவும் பரிந்துரை செய்தது)

77) நோட்டா என்பதற்கான சரியான பொருள் எது?

A) தேர்தலை நிராகரிக்கும் வாக்காளர் உரிமை

B) அனைத்து வேட்பாளர்களையும் நிராகரிக்கும் வாக்காளர் உரிமை

C) எல்லோருக்கும் வாக்களிக்கும் வாக்காளர் உரிமை

D) இவை எதுவும் அல்ல.

(குறிப்பு – தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் நிராகரிக்கும் வாக்காளரின் உரிமை, நோட்டா என்று அழைக்கப்படுகிறது. நமது அரசியல் முறைமையை தூய்மைப்படுத்தும் நோக்கி உச்சநீதிமன்றம் கூறியது என்னவெனில் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் நிராகரிக்கும் உரிமை வாக்காளர்களுக்கு உள்ளது என்பதாகும்)

78) நோட்டா அறிமுகப்படுத்துவதற்கு முன்பு வரை வேட்பாளர்களை நிராகரிக்க கீழ்காணும் எந்த அம்சம் பயன்படுத்தப்பட்டது?

A) செல்லாத வாக்கு செலுத்துதல்

B) எதிர்மறை வாக்களித்தல்

C) வாக்களிக்க மறுப்பு கூறுதல்

D) வாக்கினை திரும்ப அளித்தல்

(குறிப்பு – போட்டோ அறிமுகப்படுத்துவதற்கு முன்பு வரை எதிர்மறை வாக்கு (Negative Voting) எனும் அம்சம் பயன்பாட்டில் இருந்தது. எதிர்மறை வாக்கியம் செலுத்த விரும்பும் வாக்காளர்களுக்கு தனி வாக்குச்சீட்டு காணப்படுவதுடன் ஒரு பதிவேட்டில் அவர்களின் பெயரும் பதிவு செய்யப்படும்.)

79) ஒரு வாக்காளர் தனது வாக்காளர் வரிசை எண்ணை 17 படிவத்தில் பதிவு செய்த பின்னர் எதிர்மறை வாக்கினை செலுத்தலாம் என்று கூறும் தேர்தல் நடத்தை விதிமுறை பிரிவு எது?

A) தேர்தல் நடத்தை விதிமுறைகள், 1961 பிரிவு 48

B) தேர்தல் நடத்தை விதிமுறைகள், 1961 பிரிவு 49(0)

C) தேர்தல் நடத்தை விதிமுறைகள், 1961 பிரிவு 48(3)

D) தேர்தல் நடத்தை விதிமுறைகள், 1961பிரிவு 46(2)

(குறிப்பு – தேர்தல் நடத்தை விதிமுறைகள் 1961-ம் ஆண்டின் பிரிவு 49(0) கூறுவது என்னவெனில் ஒரு வாக்காளர் தனது வாக்காளர் வரிசை எண்ணை 17Aபடிவத்தில் பதிவு செய்த பின்னர் எதிர்மறை வாக்கினை செலுத்தலாம். அவ்வாறு எதிர்மறை வாக்கினை செலுத்த விரும்பும் வாக்காளர்களுக்கு தனி வாக்குச்சீட்டு தரப்படுவது உடன் ஒரு பதிவேட்டில் அவர்களின் பெயரும் பதிவு செய்யப்படும்)

80) நோட்டா வாக்கினை பதிவு செய்யும் பொத்தான் (Button) மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் எந்த இடத்தில் தரப்பட்டுள்ளது?

A) வேட்பாளர் பட்டியலில் இறுதியில்

B) வேட்பாளர் பட்டியலில் முதலில்

C) வேட்பாளர் பட்டியலில் இடையில்

D) வேட்பாளர் பட்டியலில் அல்லாமல் தனியாக

(குறிப்பு – மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் தரப்பட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் இறுதியில் நோட்டா வாய்ப்பு தரப்பட்டுள்ளது. மேற்கண்ட வழியில் எவருமில்லை என்பது நோட்டா(None Of The Above) என்பதற்கான பொருளாகும்.)

81) நோட்டா வாக்கினை அனுமதிக்கும் நாடுகளின் பட்டியலில் தவறானது எது?

A) கொலம்பியா, உக்ரைன்

B) வங்கதேசம், பின்லாந்து

C) பிரேசில், இந்தியா

D) பிரிட்டன்

(குறிப்பு – உலகில் 12க்கும் மேற்பட்ட ஜனநாயக நாடுகளில் நோட்டா வாக்களிக்கும் முறை பயன்பாட்டில் உள்ளது. கொலம்பியா, உக்ரைன், பிரேசில், வங்கதேசம், பின்லாந்து, ஸ்பெயின், ஸ்வீடன், சிலி, பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகள் நோட்டாவை பின்பற்றுகின்றன.)

82) நோட்டா பொத்தானை மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வைக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் எந்த ஆண்டு ஆணையிட்டது?

A) 2010 ஆம் ஆண்டு, செப்டம்பர்

B) 2011 ஆம் ஆண்டு, செப்டம்பர்

C) 2013 ஆம் ஆண்டு, செப்டம்பர்

D) 2015ஆம் ஆண்டு, செப்டம்பர்

(குறிப்பு – 2013ம் ஆண்டு செப்டம்பரில், நோட்டா பொத்தானை மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற 5 சட்டமன்ற தேர்தல்களில், நோட்டா வாக்களிக்கும் முறை அறிமுகமானது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!