Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Book Back QuestionsTnpsc

தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும் Book Back Questions 9th Social Science Lesson 3

9th Social Science Lesson 3

3] தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

புலிமான் கோம்பை நடுகற்கள்: தேனி மாவட்டத்தின் வைகை ஆற்றுப் பள்ளத்தாக்கில் உள்ள ஊர் புலிமான் கோம்பை (புள்ளிமான் கோம்பை) ஆகும். 2006ஆம் ஆண்டில் இந்த ஊரிலிருந்து தமிழ் பிராமி கல்வெட்டுகளுடன் கூடிய அரிய நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டன. புலிமான் கோம்பையில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளில் ஒன்றில் கீழ்க்கண்ட செய்தி காணப்படுகிறது. “கூடல் ஊர் ஆகோள் பெடு தீயன் அந்தவன் கல்”. இதன் பொருள்: “கூடலூரில் ஆநிரை கவர்ந்த போது நடந்த பூசலில் கொல்லப்பட்ட தீயன் அந்தவனின் கல்”.

நகர்மையம்: திட்டமிட்ட வடிவமைப்பும், செங்கல் கட்டுமானங்களும் கொண்ட மக்கள் வசிப்பிடமே நகரம் ஆகும். வேளாண்மை, கால்நடை வளர்ப்பு அல்லாத ஏனைய தொழில்களில் ஈடுபடுகின்ற மக்கள் அவ்விடங்களில் பெருமளவில் வாழ்வார்கள். நகரங்களில் பற்பல உற்பத்திப் பணிகள் நடைபெறும்.

கொடுமணல்: கொடுமணல், தமிழ்நாட்டில் ஈரோடுக்கு அருகில் உள்ளது. சங்க இலக்கியமான பதிற்றுப்பத்தில் குறிப்பிடப்படும் கொடுமணல் தான் இவ்வூர் எனக்கருதப்படுகிறது. பெருங்கற்கால முதுமக்கள் தாழிகளும் இரும்பு, மணிக்கற்கள், சங்கு வேலைப்பாடுகள் குறித்த சான்றுகளும் இங்கே கிடைத்துள்ளன. தமிழ் பிராமி எழுத்துகள் கொண்ட 300க்கும் மேற்பட்ட மட்கலப் பொறிப்புகள் இந்த ஊரில் கிடைத்துள்ளன.

மதுரைக்கு அருகே உள்ள கீழடி: மதுரையிலிருந்து இராமேஸ்வரம் செல்லும் நெடுஞ்சாலையில் சிலைமான் என்ற ஊருக்கு அருகில் கீழடி உள்ளது. இங்கே பள்ளிச் சந்தைத்திடல் என்று அழைக்கப்படும் பரந்த தென்னந்தோப்பில் இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறையினர் மற்றும் தமிழ்நாடு தொல்லியல் ஆய்வுத்துறையினர் மேற்கொண்ட அகழாய்வுகளின் மூலம் சங்க காலத்து நகரம் புதையுண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. செங்கற் கட்டுமானங்கள், கழிவுநீர் வழிகள், தமிழ் பிராமி எழுத்துகள் கொண்ட மட்கல ஓடுகள், செம்மணிக்கற்களாலான அணிகள், முத்து, இரும்பு பொருள்கள், விளையாட்டுப்பொருள்கள், கண்ணுக்கு மை தீட்டும் செப்புக் கம்பி போன்றவை கண்டறியப்பட்டுள்ளன. இன்னும் அகழாய்வுகளை மேற்கொண்டால், கைத்தொழில் முறைகள் மற்றும் பண்பாட்டு நடவடிக்கைகள் குறித்தும் பல தகவல்கள் வெளிவரும்.

பட்டணம், கேரளா: கேரளத்தின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள வடக்குப் பரவூர் என்ற ஊரை ஓட்டிய வடக்கேகரா என்ற சிற்றூரின் அருகே பட்டணம் அமைந்துள்ளது. மேலை நாடுகளோடும் கீழை நாடுகளோடும் வணிகத் தொடர்பு கொண்டிருந்த பழங்காலத் துறைமுகம் தான் பட்டணம்.

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. சங்க காலத்தில் பயன்படுத்தப்பட்ட எழுத்து முறை யாது?

(அ) ஆங்கிலம்

(ஆ) தேவநாகரி

(இ) தமிழ்-பிராமி

(ஈ) கிரந்தம்

2. தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்குச் சென்ற வியாபாரிகளையும் குதிரை வணிகர்களையும் பற்றிக் குறிப்பிடுகின்ற, இலங்கையின் பாலி மொழி வரலாற்று நூல் எது?

(அ) தீபவம்சம்

(ஆ) அர்த்தசாஸ்திரம்

(இ) மகாவம்சம்

(ஈ) இண்டிகா

3. காடாக இருந்த இடங்களை வேளாண் நிலங்களாக மாற்றுதல், நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்துதல் ஆகிய பெருமைகளுக்கு உரிய சோழ அரசன் யார்?

(அ) கரிகாலன்

(ஆ) முதலாம் இராஜராஜன்

(இ) குலோத்துங்கன்

(ஈ) முதலாம் இராஜேந்திரன்

4. சேரர்களை பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டு எது?

(அ) புகளுர்

(ஆ) கிர்நார்

(இ) புலிமான் கோம்பை

(ஈ) மதுரை

5. (i) பொருள் பரிமாற்றத்துக்கான ஊடகமாக நாணயங்கள் இடைக்கற்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன

(ii) மெளரியர் காலத்தில் வட இந்தியாவில் இருந்த சாதாரண மக்கள் பிராகிருத மொழி பேசினார்கள்.

(iii) ரோமானிய ஆவணமான வியன்னா பாப்பிரஸ், முசிறி உடனான வணிகத்தைக் குறிப்பிடுகிறது.

(iv) தமிழ் இலக்கண நூலான பத்துப்பாட்டில் திணைக் குறித்த கருத்து இடம் பெற்றுள்ளது.

(அ) i சரி

(ஆ) ii சரி

(இ) ii மற்றும் iii சரி

(ஈ) iii மற்றும் iv சரி

6. (i) பதிற்றுப்பத்து பாண்டிய அரசர்களையும் அவர்களின் ஆட்சிப் பகுதிகளையும் குறித்துச் சொல்கிறது.

(ii) காவிரிப்பூம்பட்டினத்தில் நடந்த வணிக நடவடிக்கைகளை அகநானூறு விவரிக்கிறது.

(iii) சோழர்களின் சின்னம் புலி ஆகும்; அவர்கள் புலி உருவம் பொறித்த, சதுர வடிவிலான செம்பு நாணயங்களை வெளியிட்டார்கள்.

(iv) நெய்தல் என்பது மணற்பாங்கான பாலைவனப் பகுதி ஆகும்.

(அ) i சரி

(ஆ) ii மற்றும் iii சரி

(இ) iii சரி

(ஈ) iv சரி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. கற்கள், செப்பேடுகள், நாணயங்கள், மோதிரங்கள் ஆகியவற்றின் மீது பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் ————— ஆகும்.

2. கடந்த காலச் சமூகங்கள் குறித்து அறிந்து கொள்வதற்கான சான்றுகளாக உள்ள சில பொருட்களை மீட்டெடுப்பதற்கு ஓரிடத்தை முறைப்படி தோண்டுதல் —————- ஆகும்.

3. மௌரியர் காலத்தில் ஆட்சிக்கலை மற்றும் பொருளாதாரம் குறித்து கௌடில்யர் எழுதிய நூல் ———— ஆகும்.

4. ————— என்பது பிரிவு அல்லது வகை என்ற பொருளில் செய்யுள்களில் பயன்படுத்தப்பட்ட கருப்பொருள்; மேலும், இது ஒரு வாழ்விடத்தை அதன் தனித்தன்மை வாய்ந்த இயற்கைக்கூறுகளுடன் குறிப்பதாகவும் உள்ளது.

5. கிரேக்கர்கள், ரோமானியர்கள், மேற்கு ஆசியர்கள் ஆகியோரை உள்ளடக்கிய மேற்கத்தியர்களை ————– என்னும் சொல் குறிக்கிறது.

III. பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. அ) இரும்பை உருக்கியதற்கான சான்றுகள் கொடுமணல், குட்டூர் ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.

ஆ) எரித்ரியன் கடலின் பெரிப்ளுஸ் இந்தியா உடனான மிளகு வணிகம் குறித்துக் கூறுகிறது.

இ) இந்தியாவில் தொடக்க காலத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயங்களில் உருவங்கள் பொறிக்கப்பட்டிருந்தன; நாணயங்கள் பெரும்பாலும் தங்கத்தால் செய்யப்பட்டிருந்தன.

ஈ) சங்க காலம் வெண்கலக் காலத்தில் வேரூன்றத் தொடங்கியது.

2. அ) சேரர்கள் காவிரிப்பகுதியை ஆட்சி செய்தனர். அவர்களின் தலைநகர் உறையூர் ஆகும்.

ஆ) மாங்குளம் தமிழ்-பிராமி கல்வெட்டுக் குறிப்புகள் அரசன் கரிகாலனைக் குறிப்பிடுகின்றன.

இ) தமிழ்-பிராமி கல்வெட்டுக் குறிப்புகளில் காணப்படும் வணிகன், நிகமா ஆகிய சொற்கள் வணிகர்களில் வெவ்வேறு வகையினரைக் குறிப்பிடுவதாகும்.

ஈ) உப்பு விற்றவர்கள் வணிகர்கள் என்று அழைக்கப்பட்டனர்; அவர்கள் வணிகத்துக்காக மாட்டு வண்டியில் தங்கள் குடும்பத்தினருடன் பயணம் செய்தார்கள்.

IV. பொருத்துக:

1. கல்வெட்டியல் – அ] முக்கியமான வரலாற்று நிகழ்வுகளின் தொகுப்பு

2. காலவரிசைக் குறிப்புகள் – ஆ] சங்க காலத் துறைமுகம்

3. மேய்ச்சல் வாழ்க்கை – இ] விலையுயர்ந்த கல்லில் செய்யப்பட்ட ஆபரணம்

4. புடைப்பு மணிகள் (cameo) – ஈ] கல்வெட்டுக் குறிப்புகளை ஆராய்வது

5. அரிக்கமேடு -உ] கால்நடைகளை வளர்த்துப் பிழைக்கும் நாடோடி மக்கள்

விடைகள்:

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. தமிழ்-பிராமி, 2. மகாவம்சம், 3. கரிகாலன், 4. புகளுர், 5. i மற்றும் ii சரி, 6. iii சரி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. கல்வெட்டியல், 2. தொல்லியல், 3. அர்த்தசாஸ்திரம், 4. திணை, 5. யவனர்

III. பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. இரும்பை உருக்கியதற்கான சான்றுகள் கொடுமணல், குட்டூர் ஆகிய இடங்களில் காணப்படுகின்றன, 2. தமிழ்-பிராமி கல்வெட்டுக் குறிப்புகளில் காணப்படும் வணிகன், நிகமா ஆகிய சொற்கள் வணிகர்களில் வெவ்வேறு வகையினரைக் குறிப்பிடுவதாகும்.

IV. பொருத்துக:

1. ஈ, 2. அ, 3. உ, 4. இ, 5. ஆ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!