Book Back QuestionsTnpsc

தொழிற்புரட்சி Book Back Questions 9th Social Science Lesson 10

9th Social Science Lesson 10

10] தொழிற்புரட்சி

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

இங்கிலாந்தில் 1750இல் 4. 7 மில்லியன் டன்களாக இருந்த நிலக்கரி உற்பத்தி 1900இல் 250 மில்லியன் டன்களாக அதிகரித்தது.

1806இல் பிரான்சில் வேளாண்மை உற்பத்தியில் ஈடுபட்ட மக்கள் தொகை 65. 1 விழுக்காடாக இருந்தது. 1896இல் இது 42. 5 விழுக்காடாகக் குறைந்தது. அதே காலகட்டத்தில் தொழில் துறையில் வேலைவாய்ப்புகளின் பங்கு 20. 4 விழுக்காட்டில் இருந்து 31. 4 விழுக்காடாக அதிகரித்தது.

நீராவி இயந்திரப் பயன்பாட்டால் 1837இல் 419 ஆக இருந்த பிரஷ்ய தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 1849இல் 1, 444 ஆக உயர்ந்தது. 1820இல் பத்து இலட்சம் டன்களாக இருந்த நிலக்கரி உற்பத்தி, அடுத்த 30 ஆண்டுகளில் அறுபது இலட்சம் டன்களுக்கும் அதிகமாக உயர்ந்தது. 1810இல் 46, 000 டன்களாக இருந்த இரும்பு உற்பத்தி, 1850 வாக்கில் 5, 29, 000 டன்களாக அதிகரித்தது. 1850இல் 3, 638 மைல் நீளமாக இருந்த ரயில்பாதை 1870இல் 11, 600 மைல் நீளமாக அதிகரித்தது.

போட்டிகளைக் கட்டுப்படுத்தவும் விலை உயர்வைத் தக்க வைக்கவும் உற்பத்தியாளர்கள் அல்லது விநியோகிப்பாளர்கள் ஏற்படுத்திக் கொள்ளும் கூட்டமைப்பே கார்டெல் ஆகும்.

1846இல் எலியாஸ் ஹோவே என்ற அமெரிக்கர் துணி தைக்கும் “தையல் இயந்திரத்தை”க் கண்டுபிடித்தார். துணிகளை வெண்மையாக்குவது, சாயமிடுவது, அச்சிடுவது போன்ற புதிய முறைகளின் கண்டுபிடிப்புகளால் 19ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் பல்வேறு நிறங்களில் துணிகளைத் தயாரிக்க முடிந்தது.

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. நீராவி படகுப் போக்குவரத்துச் சேவையை நிறுவியவர் யார்?

(அ) ஆர்க்ரைட்

(ஆ) சாமுவேல் கிராம்ப்டன்

(இ) ராபர்ட் ஃபுல்டன்

(ஈ) ஜேம்ஸ் வாட்

2. மான்செஸ்டர் நகரம் ஏன் ஜவுளி உற்பத்திக்கு உகந்த இடமாக கருதப்பட்டது?

(அ) நிலம் கிடைக்கப்பெற்றமை

(ஆ) மிகுந்த மனித வளம்

(இ) நல்ல வாழ்க்கைச் சூழல்

(ஈ) குளிர்ச்சியாக தட்பவெப்ப நிலை

3. தையல் இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர் யார்?

(அ) எலியாஸ் ஹோவே

(ஆ) எலி-விட்னி

(இ) சாமுவேல் கிராம்டன்

(ஈ) ஹம்ப்ரி டேவி

4. நீராவி இயந்திரத்தை பிரான்சில் அறிமுகம் செய்த குடும்பம் எது?

(அ) டி வெண்டெல்

(ஆ) டி ஹிண்டல்

(இ) டி ஆர்மன்

(ஈ) டி ரினால்ட்

5. சிலேட்டரை அமெரிக்கத் தொழில் புரட்சியின் தந்தை என அழைத்தவர் யார்?

(அ) எப். டி. ரூஸ்வெல்ட்

(ஆ) ஆண்ட்ரூ ஜேக்சன்

(இ) வின்ஸ்டன் சர்ச்சில்

(ஈ) உட்ரோ வில்சன்

6. கீழ்க் காண்பனவற்றில் எது ஹே மார்க்கெட் நிகழ்ச்சியின் நினைவு நாளாகக் கடைபிடிக்கப்படுகிறது?

(அ) சுதந்திர தினம்

(ஆ) உழவர் தினம்

(இ) உழைப்பாளர் தினம்

(ஈ) தியாகிகள் தினம்

7. எங்கு ஜோல் வெரெய்ன் சுங்க ஒன்றியம் உருவாக்கப்பட்டது?

(அ) இங்கிலாந்து

(ஆ) ஜெர்மனி

(இ) பிரான்ஸ்

(ஈ) அமெரிக்கா

8. பிரான்சில் முதல் மோட்டார் வாகனங்களை உற்பத்தி செய்தவர் யார்?

(அ) லூயி ரெனால்ட்

(ஆ) அர்மான் பியூகாட்

(இ) தாமஸ் ஆல்வா எடிசன்

(ஈ) மெக் ஆடம்

9. எக்கண்டுபிடிப்பு பருத்தியிலிருந்து கொட்டைகளைப் பிரித்தது?

(அ) உருட்டாலைகள்

(ஆ) பஞ்சுக் கடைசல் இயந்திரம்

(இ) ஸ்பின்னிங் மியூல்

(ஈ) இயந்திர நூற்புக்கருவி

10. கீழ்க்காண்பனவற்றில் எது இரும்பை உருக்குவதற்காக முற்காலத்தில் பயன்படுத்தப்பட்டது?

(அ) கற்கரி

(ஆ) கரி

(இ) விறகு

(ஈ) காகிதம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. —————– இங்கிலாந்தில் ஆடவர்க்கு வாக்குரிமை கோரியது.

2. —————- உலகம் முழுவதும் சாலைகள் அமைக்கப்படும் முறையை மாற்றியமைத்தது.

3. விரைவாகவும் குறைந்த செலவிலும் எஃகை உற்பத்தி செய்யும் முறையை ————- கண்டுபிடித்தார்.

4. விஞ்ஞான சோசலிஸத்தை முன்வைத்தவர் ————– ஆவார்.

5. ஜெர்மனியில் முதல் இருப்புப்பாதை ————— ஆண்டில் இயக்கப்பட்டது.

III. பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. i) இங்கிலாந்துச் சுரங்க முதலாளிகள் சுரங்கங்களுக்குள் நீர்க்கசிவு ஏற்படும் பிரச்சனையை எதிர்கொண்டனர்.

ii) இவ்வேலையில் மனித உழைப்பை ஈடுபடுத்துவது குறைவான செலவுடையதாக இருக்கும்.

iii) சுரங்கங்களிலிருந்து நீரை வெளியேற்றும் நீராவி இயந்திரத்தை நியூட்டன் கண்டுபிடித்தார்.

iv) சுரங்கங்களிலிருந்து நிலக்கரியைப் பெற வேண்டுமானால் நீரை வெளியேற்றியாக வேண்டும்.

(அ) i சரி

(ஆ) ii மற்றும் iii சரி

(இ) i மற்றும் iv சரி

(ஈ) iii சரி

2. i) தங்கள் உரிமைகளைப் பெறுவதற்காகத் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களை உருவாக்கிக் கொண்டனர்.

ii) ஜெர்மனியின் அரசியல் முறை தொழிற்புரட்சிக்குக் குறிப்பிடத்தக்க முக்கியச் சவாலாக அமைந்திருந்தது.

iii) முதலாளிகளைப் பாதுகாப்பதற்காகக் கார்ல் மார்க்ஸ் சோசலிஸத்தை முன்வைத்தார்.

iv) ஜெர்மனியில் இயற்கை வளங்கள் ஏதுமில்லை

(அ) i சரி

(ஆ) ii மற்றும் iii சரி

(இ) i மற்றும் iv சரி

(ஈ) iii சரி

3. கூற்று: விடுமுறை பெறுவதற்குத் தொழிலாளர் உரிமை பெற்றிருந்தனர்.

காரணம்: பணியாளர்களைப் பாதுகாக்கச் சட்டங்கள் இருந்தன.

(அ) கூற்று சரி காரணம் தவறு

(ஆ) கூற்று, காரணம் இரண்டுமே தவறு

(இ) கூற்று, காரணம் இரண்டுமே சரி

(ஈ) கூற்று சரி காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கமல்ல.

4. கூற்று: சிலேட்டர் அமெரிக்கத் தொழிற்புரட்சியின் தந்தை என அழைக்கப்படுகிறார்.

காரணம்: அவருடைய நூற்பாலையின் நகலாகப் பல நூற்பாலைகள் உருவாயின. அவருடைய தொழில் நுட்பம் பிரபலமானது.

(அ) கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்.

(ஆ) கூற்று தவறு, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்.

(இ) கூற்று, காரணம் இரண்டுமே தவறு

(ஈ) கூற்று, காரணம் இரண்டுமே சரி.

IV. பொருத்துக:

1. பென்ஸ் – அ] அமெரிக்கா

2. பாதுகாப்பு விளக்கு – ஆ] லூயி ரொனால்ட்

3. நான்கு சக்கரவாகனம் – இ] ஹம்பரி டேவி

4. மாபெரும் ரயில்வே ஊழியர் போராட்டம் – ஈ] லங்காஷையர்

5. நிலக்கரி வயல் – உ] ஜெர்மனி

விடைகள்:

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. ராபர்ட் ஃபுல்டன், 2. குளிர்ச்சியாக தட்பவெப்ப நிலை, 3. எலியாஸ் ஹோவே, 4. டி வெண்டெல், 5. ஆண்ட்ரூ ஜேக்சன், 6. உழைப்பாளர் தினம், 7. ஜெர்மனி, 8. அர்மான் பியூகாட், 9. பஞ்சுக் கடைசல் இயந்திரம், 10. கற்கரி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. சாசன இயக்கம், 2. சாலை அமைக்கும் முறை, 3. ஹென்றி பெஸ்ஸிமர், 4. கார்ல் மார்க்ஸ், 5. 1835

III. பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. i மற்றும் iv சரி, 2. i மற்றும் ii சரி, 3. கூற்று, காரணம் இரண்டுமே தவறு, 4. கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்

IV. பொருத்துக:

1. உ, 2. இ, 3. ஆ, 4. அ, 5. ஈ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!