Book Back QuestionsTnpsc

நடுவண் அரசு Book Back Questions 10th Social Science Lesson 19

10th Social Science Lesson 19

19] நடுவண் அரசு

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

புதுதில்லியில் உள்ள ராஷ்டிரபதி பவன் – குடியரசுத் தலைவரின் இல்லம் ஆகும். அவருடைய இல்லம் மற்றும் அலுவலகம் இரண்டும் ஒரே கட்டடத்தில் அமைந்துள்ளன. இருந்த போதிலும் அவருக்கு இருப்பிடத்துடன் கூடிய அலுவலகங்கள் மேலும் இரண்டு இடங்களில் உள்ளன. அங்கு வருடத்திற்கு ஒரு முறை சென்று தன்னுடைய அலுவலக பணிகளை அவர் மேற்கொள்கிறார். அவைகள் சிம்லாவில் உள்ள ரிட்ரீட் கட்டடம் (The Retreat Building) மற்றும் ஹைதராபாத்தில் உள்ள ராஷ்டிரபதி நிலையம் ஆகும். இவைகளில் ஒன்று வடக்கிலும் மற்றொன்று தெற்கிலும் அமைந்துள்ளது. இது நாட்டின் ஒற்றுமையையும், மக்களின் பல்வேறுபட்ட கலாச்சாரத்தின் ஒற்றுமையையும் பறைசாற்றுகின்றது.

கேரளா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் அதிக பட்சமாக 9 முறை குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

முடிவு வாக்கு (Casting vote): மாநிலங்களவையில் சட்ட மசோதாவின் மீது நடைபெற்ற வாக்கெடுப்பு சமநிலையில் இருக்கும் பட்சத்தில் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 100இன் படி துணைக் குடியரசுத் தலைவர் வாக்கு அளிக்கலாம். இது சட்ட மசோதாவின் ஒப்புதலுக்கு ஒரு வாக்கு மட்டுமே தேவை என்ற நிலையைக் குறிக்கிறது. அவருடைய முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க எவருக்கும் உரிமை இல்லை.

குடியரசுத் தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் பதவிகள் ஒரே சமயத்தில் காலியாக இருக்கும் பட்சத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி குடியரசுத் தலைவரின் பணிகளைச் செயலாற்றுவார். 1969ஆம் ஆண்டு இத்தகைய ஒரு நிகழ்வின் போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி M. ஹிதயதுல்லா குடியரசுத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

நிதி மசோதா: நிதி மசோதாவினை திருத்தம் செய்யவோ அல்லது நிராகரிக்கவோ மாநிலங்களவைக்கு அதிகாரம் இல்லை. மக்களவையில் மட்டுமே நிதி மசோதாவினை அறிமுகப்படுத்த முடியும். இம்மசோதா மாநிலங்களவையின் ஒப்புதலுடன் சட்டமாக மாறும். மாநிலங்களவை 14 நாட்களுக்குள் ஒப்புதல் அளிக்கவில்லையெனில், ஒப்புதல் பெறாமலேயே சட்டமாகிவிடும். மாநிலங்களவையின் சட்டத் திருத்தத்திற்கான முன்மொழிவுகளை மக்களவை கருத்தில் கொள்ள வேண்டியதில்லை. எந்த முன்மொழிவுகளையும் மக்களவை நிராகரிக்கலாம்.

தமிழகத்திலிருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள்: மாநிலங்களவை – 18 உறுப்பினர்கள்; மக்களவை – 39 உறுப்பினர்கள்.

நாடாளுமன்றக் கூட்டத் தொடர்: பட்ஜெட் கூட்டத்தொடர் – பிப்ரவரி முதல் மே வரை; மழைக் (பருவ) காலக் கூட்டத்தொடர் – ஜீலை முதல் செப்டம்பர் வரை; குளிர் காலக் கூட்டத் தொடர் – நவம்பர் மற்றும் டிசம்பர்.

புதுதில்லியில் அமைந்துள்ள இந்திய உச்ச நீதிமன்றம் 1950 ஜனவரி 28ஆம் நாள் துவங்கப்பட்டது. இது 1935ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட கூட்டாட்சி நீதிமன்றத்தைத் தொடர்ந்து உருவாக்கப்பட்டது.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. நடுவண் அரசின் அரசியலமைப்புத் தலைவர் ___________ ஆவார்.

(அ) குடியரசுத் தலைவர்

(ஆ) தலைமை நீதிபதி

(இ) பிரதம அமைச்சர்

(ஈ) அமைச்சர்கள் குழு

2. ஒரு மசோதாவை நிதி மசோதாவா அல்லது இதர மசோதாவா என தீர்மானிக்கும் அதிகாரம் பெற்றவர்.

(அ) குடியரசுத் தலைவர்

(ஆ) இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர்

(இ) நாடாளுமன்ற விவகார அமைச்சர்

(ஈ) லோக் சபாவின் சபாநாயகர்

3. அமைச்சர்கள் குழு ஒட்டுமொத்தமாக இதற்குப் பொறுப்புடையவர்களாவர்.

(அ) குடியரசுத் தலைவர்

(ஆ) மக்களவை

(இ) பிரதம அமைச்சர்

(ஈ) மாநிலங்களவை

4. லோக்சபா தேர்தலில் போட்டியிட தேவையான குறைந்த பட்ச வயது ___________

(அ) 18 வயது

(ஆ) 21 வயது

(இ) 25 வயது

(ஈ) 30 வயது

5. இந்திய மாநிலங்களின் எல்லைகளை மாற்றியமைக்கும் அதிகாரம் பெற்றவர்/பெற்ற அமைப்பு.

(அ) குடியரசுத் தலைவர்

(ஆ) பிரதம அமைச்சர்

(இ) மாநில அரசாங்கம்

(ஈ) நாடாளுமன்றம்

6. கீழ்க்காணும் எந்த விதியின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் நிதி நெருக்கடி நிலையினை அறிவிக்கிறார்?

(அ) சட்டப்பிரிவு 352

(ஆ) சட்டப்பிரிவு 360

(இ) சட்டப்பிரிவு 356

(ஈ) சட்டப்பிரிவு 365

7. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மற்ற நீதிபதிகளை நியமிப்பவர்.

(அ) குடியரசுத் தலைவர்

(ஆ) இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர்

(இ) ஆளுநர்

(ஈ) பிரதம அமைச்சர்

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. __________ மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதல் இன்றி நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த முடியாது.

2. ___________ நாட்டின் உண்மையான தலைவராகவும், நாட்டின் முக்கியச் செய்தி தொடர்பாளராகவும் செயல்படுகிறார்.

3. ___________ அலுவல் வழியில் மாநிலங்களவையின் தலைவர் ஆவார்.

4. நாடாளுமன்ற இரு அவைகளிலும் உரையாற்றவும், கூட்டத்தொடரில் பங்கு கொள்ளவும் உரிமை பெற்றவர் ____________

5. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மற்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது __________

6. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலன் __________ ஆகும்.

7. தற்சமயம், உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உட்பட நீதிபதிகளின் எண்ணிக்கை ————–

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. i) மாநிலங்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 250.

ii) இலக்கியம், அறிவியல், கலை, சமூக சேவை ஆகிய துறைகளில் சிறந்த அறிவு மற்றும் அனுபவம் பெற்ற 12 நபர்களை மாநிலங்களவைக்கு குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.

iii) மாநிலங்களவை உறுப்பினராவதற்கு 30 வயதுக்குக் குறைவாக இருத்தல் கூடாது.

iv) மாநிலங்களவை உறுப்பினர்கள் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

(அ) ii & iv சரியானவை

(ஆ) iii & iv சரியானவை

(இ) i & iv சரியானவை

(ஈ) i, ii & iii சரியானவை

2. i) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மற்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 62.

ii) நடுவண் அரசின் மூன்றாவது அங்கம் நீதிதுறை ஆகும்.

iii) அடிப்படை உரிமைகள் தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தின் மேல்முறையீட்டு அதிகாரங்களுக்கு உட்பட்டது.

iv) உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் ஆணை இந்தியாவின் அனைத்துப் பகுதியிலுள்ள நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்தும்.

(அ) ii & iv சரியானவை

(ஆ) iii & iv சரியானவை

(இ) i & iv சரியானவை

(ஈ) i & ii சரியானவை

பொருத்துக:

1. சட்டப்பிரிவு 53 – மாநில நெருக்கடி நிலை

2. சட்டப்பிரிவு 63 – உள்நாட்டு நெருக்கடி நிலை

3. சட்டப்பிரிவு 356 – குடியரசுத் தலைவரின் நிர்வாக அதிகாரங்கள்

4. சட்டப்பிரிவு 76 – துணைக் குடியரசுத் தலைவரின் அலுவலகம்

5. சட்டப்பிரிவு 352 – இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர் அலுவலகம்

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. குடியரசுத் தலைவர் 2. லோக்சபாவின் சபாநாயகர் 3. மக்களவை 4. (25 வயது)

5. நாடாளுமன்றம் 6. சட்டப்பிரிவு 360 7. குடியரசுத் தலைவர்

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. நிதி 2. பிரதம அமைச்சர் 3. துணைக் குடியரசுத் தலைவர்

4. இந்திய அட்டர்னி ஜெனரல் 5. (65) 6. உச்சநீதிமன்றம் 7. (28)

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றைத் தேர்வு செய்க:

1. i, ii & iii சரியானவை

2. ii & iv சரியானவை

பொருத்துக: (விடைகள்)

1. சட்டப்பிரிவு 53 – குடியரசுத் தலைவரின் நிர்வாக அதிகாரங்கள்

2. சட்டப்பிரிவு 54 – துணைக் குடியரசுத் தலைவரின் அலுவலகம்

3. சட்டப்பிரிவு 356 – மாநில நெருக்கடிநிலை

4. சட்டப்பிரிவு 76 – இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர் அலுவலகம்

5. சட்டப்பிரிவு 352 – உள்நாட்டு நெருக்கடி நிலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!