Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Book Back QuestionsTnpsc

நவீன யுகத்தின் தொடக்கம் Book Back Questions 9th Social Science Lesson 8

9th Social Science Lesson 8

8] நவீன யுகத்தின் தொடக்கம்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

மனிதாபிமானம்: மனிதாபிமானம் என்னும் கருத்து மறுமலர்ச்சியின் மையக்கூறாகும். இது மனித கண்ணியத்தையும் இயல்பையும் வலியுறுத்தியது. இடைக்காலத்தில், மனிதர்கள் கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காகவே படைக்கப்பட்ட முகவர்கள் என்ற கருத்து நிலவியது. மறுமலர்ச்சி கால மனிதாபிமானம் பல்வேறு குண நலன்களைப் பெற்றுள்ள மனிதர்கள் அவற்றைப் பயன்படுத்தி உன்னத நிலையை அடைய வேண்டும் என்னும் கருத்தை வலியுறுத்தியது. மேலுலகம் நோக்கிய அவர்களின் பார்வையை இவ்வுலகம் நோக்கித் திருப்பியது. ஆன்மீக உலகிலிருந்து பொருள் உலகை நோக்கித் திருப்பியது. மரணத்திற்குப் பின்னரான வாழ்வின் மீதான அவர்களின் கவனத்தை இவ்வுலக வாழ்க்கையை நோக்கித் திருப்பியது.

கத்தோலிக்க மத ஒறுப்பு நீதிமன்றம் (இன்குஷிசன்): கத்தோலிக்க மத நீதிமன்றம் மதநம்பிக்கைக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டிருப்பவர்களைக் கையாள்வதற்காக கத்தோலிக்கத் திருச்சபையால் உருவாக்கப்பட்ட அமைப்பே மத நீதிமன்றமாகும். குற்றமிழைத்ததாக கண்டறியப்பட்டவர்கள் தங்கள் கருத்தைக் கைவிட்டுத் திருந்தினால் அவர்களுக்கு எளிய தண்டனைகளும் சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டன. தங்களைத் திருத்திக் கொள்ள மறுப்பவர்கள் கட்டி வைக்கப்பட்டு கொளுத்தப்பட்டனர். மத நீதிமன்றங்களிலேயே மிகவும் பழிக்கப்பட்டது ஸ்பானிய மத நீதிமன்றமாகும்.

புனித இக்னேஷியஸ் லயோலாவும், இயேசு சபையும்: கிறித்துவ மதத்தைப் பரப்புரை செய்வதற்காக இயேசு சபையை புனித இக்னேஷியஸ் லயோலா நிறுவினார். அதனுடைய முக்கியத்துவமிக்க பணி என்பது, ஆதரவற்றோருக்குக் கல்விச் சேவையை வழங்குவதுதான். ஆதரவற்றவர்களுக்கான அது உறைவிடங்கள், அனாதை இல்லங்கள், கல்வி நிலையங்கள் போன்ற எண்ணற்ற அமைப்புகளை இயேசு சபை தொடங்கியது. வெகுவிரைவில் அவர்களுடைய இறைப்பணியாளர்கள் உலகின் எல்லாப் பாகங்களிலும் கத்தோலிக்க மதத்தைப் பரப்பும் பணிகளில் ஈடுபட்டிருப்பதைக் காண முடிந்தது.

அமெரிக்க நாடுகளுக்கும் ஐரோப்பாவுக்குமிடையே அல்லது புதிய உலகத்திற்கும் பழைய உலகத்திற்குமிடையே, தாவரங்கள், விலங்குகள், தொழிலநுட்பம் பண்பாடு மற்றும் விநோதமான நோய்கள் ஆகியவற்றின் இடப்பெயர்வுக்கு ஐரோப்பிய காலனியாதிக்க சக்திகள் அமெரிக்காவை வெற்றி கொண்டதே காரணமாகும். இது கொலம்பியப் பறிமாற்றம் (Columbian Exchange) என்று அறியப்படுகிறது.

ஐரோப்பிய நவீன கால விடியலின் போது இந்தியாவில்: கி. பி. (பொ. ஆ) 1526ஆம் ஆண்டு மொகலாய அரசு தோற்றுவிக்கப்பட்டது. கி. பி. (பொ. ஆ) 1336ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட விஜய நகர அரசு கிருஷ்ணதேவராயர் (கி. பி. (பொ. ஆ) 1509-29) ஆட்சியில் உச்ச நிலையை அடைந்தது. போர்த்துக்கீசியர்கள் தங்களது பேரரசைக் கீழ் திசையில் (இந்தியா, மலாக்கா, இலங்கை) நிறுவி, கோவாவைத் தலைநகராகக் கொண்டு கடல் பகுதியையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். தமிழ்நாட்டில் மதுரை நாயக்கர்கள் பாண்டிய அரசை 72 பாளையங்களாகப் பிரித்து ஆட்சி நடத்தினார்கள். ஜெசூட் மிஷனரிகளின் வருகையும், இயேசு சங்கத்தின் உறுப்பினரான புனித பிரான்சிஸ் சேவியர் பணிகளும் தூத்துக்குடியில் மீனவச் சமூகத்தைச் சார்ந்தவர்களைக் கத்தோலிக்க கிறித்துவச் சமயத்தைத் தழுவுவதற்குக் காரணமாக அமைந்தன.

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. கீழ்க்கண்டவர்களின் யார் மனித நேயத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்?

(அ) லியானார்டோ டாவின்சி

(ஆ) பெட்ரார்க்

(இ) ஏராஸ்மஸ்

(ஈ) தாமஸ் மூர்

2. ‘ஸ்கூல் ஆஃப் ஏதென்ஸ்’ என்ற ஓவியத்தை வரைந்தவர்.

(அ) ரஃபேல்

(ஆ) மைக்கேல் ஆஞ்சலோ

(இ) அல்புருட் டியுரர்

(ஈ) லியானார்டோ டாவின்சி

3. வில்லியம் ஹார்வி ————- கண்டுபிடித்தார்.

(அ) சூரியனே பிரபஞ்சத்தின் மையம்

(ஆ) பூமியே பிரபஞ்சத்தின் மையம்

(இ) புவியீர்ப்பு விசை

(ஈ) இரத்தத்தின் சுழற்சி

4. “தாண்ணூற்றைந்து கொள்கைகள்”களை எழுதியவர் யார்?

(அ) மார்ட்டின் லூதர்

(ஆ) ஸ்விங்லி

(இ) ஜான் கால்வின்

(ஈ) தாமஸ்மூர்

5. “கிறிஸ்தவ மதத்தின் நிறுவனங்கள்” என்ற நூலை எழுதியவர் ————-

(அ) மார்ட்டின் லூதர்

(ஆ) ஸ்விங்லி

(இ) ஜான் கால்வின்

(ஈ) செர்வாண்டிஸ்

6. பூமத்திய ரேகையை கடந்த முதல் மாலுமி யார்?

(அ) மாலுமி ஹென்றி

(ஆ) லோபோ கோன்ஸால்வ்ஸ்

(இ) பார்த்தலோமியோ டயஸ்

(ஈ) கொலம்பஸ்

7. பசிபிக் பெருங்கடல் எனப் பெயரிட்டவர்——————

(அ) கொலம்பஸ்

(ஆ) அமெரிகோ வெஸ்புகி

(இ) ஃபெர்டினான்ட் மெகெல்லன்

(ஈ) வாஸ்கோடகாமா

8. அமெரிக்க கண்டம் ————— என்பவரின் பெயரால் பெயரிடப்பட்டுள்ளது.

(அ) அமெரிகோ வெஸ்புகி

(ஆ) கொலம்பஸ்

(இ) வாஸ்கோடகாமா

(ஈ) ஹெர்நாண்டோ கார்டஸ்

9. கிழக்கு இந்தியாவில் போர்ச்சுகீசியர்களின் வசமிருந்த பகுதிகளுக்குத் தலைமையகமாக ————- இருந்தது.

(அ) மணிலா

(ஆ) பம்பாய்

(இ) பாண்டிச்சேரி

(ஈ) கோவா

10. கீழ்க்கண்ட தாவரங்களுள் எது அமெரிக்காவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது?

(அ) கரும்பு

(ஆ) சர்க்கரைவள்ளிக்கிழங்கு

(இ) அரிசி

(ஈ) கோதுமை

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. கி. பி. 1453இல் கான்ஸ்டாண்டிநோபிளை —————- கைப்பற்றினர்.

2. ————- என்பவர் மனிதநேயவாதிகளிடையே ஒரு இளவரசர் என்று அறியப்படுகிறார்.

3. ————– சிஸ்டைன் திருச்சபை மேற்கூரைகளில் வரையப்பட்ட தன்னுடைய ஓவியங்களுக்காக புகழ்பெற்றவராவார்.

4. கத்தோலிக்க திருச்சபை நிறுவனத்துக்கு உள்ளேயே மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தம் ————— ஆகும்.

5. வணிகப்புரட்சியின் தலையாய அம்சங்கள் —————-, —————— மற்றும் —————- ஆகும்.

III. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. அ) மார்ட்டின் லூதர், கத்தோலிக்க திருச்சபையால் பாகுபாட்டுடன் நடத்தப்பட்டதால் அவர், அதனுடனான உறவைத் துண்டித்துக் கொண்டார்.

ஆ) ஜெனிவாவில் இருந்து ஜான் கால்வினின் அரசாங்கம் தாராளமயமானதாகவும் வேடிக்கை நிரம்பியதாகவும் இருந்தது.

இ) எட்டாம் ஹென்றி கத்தோலிக்க திருச்சபையுடன் ஆழமான இறையியல் வேறுபாடுகளைக் கொண்டிருந்தார்.

ஈ) தேவாலயத்துக் கூட்டு வழிபாட்டின் முக்கியத்துவத்தையும், விழாக்களின் முக்கியத்துவத்தையும் ட்டென்ட் கவுன்சில் மீண்டும் வலியுறுத்தி அழுத்தம் தந்தது.

2. அ) புதிய தரை மற்றும் கடல்வழி கண்டுபிடிப்புகளால் பொருளாதார மையங்கள் இத்தாலிய நகர அரசுகளிலிருந்து ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலுக்கு மாற்றப்பட்டன.

ஆ) குதிரைகள் அமெரிக்காவை பிறப்பிடமாகக் கொண்டவை.

இ) நவீன யுகத்தின் தொடக்க காலத்தில், பொருளாதார நடவடிக்கைகளில் அரசு தலையிடவில்லை.

ஈ) போர்ச்சுகீசியர்கள் அரேபியர்களுடன் இணைந்து இந்தியாவில் வாணிக நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

IV. பொருத்துக:

1. நிலபிரபுத்துவம் – அ] ஏகபோக வர்த்தகம்

2. மனிதாபிமானம் – ஆ] மதத்திற்குப் புறம்பானவர் மீது விசாரணை

3. நீதி விசாரணை – இ] ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான வர்த்தகப் பரிமாற்றம்

4. மெர்க்கண்டலிசம் – ஈ] சமூக பொருளாதார அமைப்பின் படிநிலை

5. கொலம்பிய பரிமாற்றம் – உ] மனித கௌரவம்

விடைகள்:

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. பெட்ரார்க், 2. ரஃபேல், 3. இரத்தத்தின் சுழற்சி, 4. மார்ட்டின் லூதர், 5. ஜான் கால்வின், 6. லோபோ கோன்ஸால்வ்ஸ், 7. ஃபெர்டினான்ட் மெகெல்லன், 8. அமெரிகோ வெஸ்புகி, 9. கோவா, 10. சர்க்கரைவள்ளிக்கிழங்கு

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. துருக்கியர், 2. எராஸ்மஸ், 3. மைக்கேல் ஆஞ்சலேயா, 4. எதிர்மத சீர்திருத்தம், 5. வங்கிகள் கூட்டுப்பங்கு, நிறுவனங்களின் தோற்றம், வர்த்தகத்தின் வளர்ச்சி

III. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. தேவாலயத்துக் கூட்டு வழிபாட்டின் முக்கியத்துவத்தையும், விழாக்களின் முக்கியத்துவத்தையும் ட்டென்ட் கவுன்சில் மீண்டும் வலியுறுத்தி அழுத்தம் தந்தது, 2. புதிய தரை மற்றும் கடல்வழி கண்டுபிடிப்புகளால் பொருளாதார மையங்கள் இத்தாலிய நகர அரசுகளிலிருந்து ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலுக்கு மாற்றப்பட்டன.

IV. பொருத்துக:

1. ஈ, 2. உ, 3. ஆ, 4. அ, 5. இ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!