Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Book Back QuestionsTnpsc

நிலப்பரப்பும் பெருங்கடல்களும் Book Back Questions 6th Social Science Lesson 6

6th Social Science Lesson 6

6] நிலப்பரப்பும் பெருங்கடல்களும்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

இலக்கியத்தில் சங்க இலக்கியத்தில் நிலவகைப்பாடு: குறிஞ்சி-மலையும், மலைசார்ந்த நிலமும்; முல்லை-காடும் காடு சார்ந்த நிலமும்; மருதம்-வயலும் வயல் சார்ந்த நிலமும்; நெய்தல்-கடலும் கடல் சார்ந்த நிலமும்; பாலை-மணலும் மணல் சார்ந்த நிலமும்.

நிலச்சந்தி: இரண்டு பெரிய நிலப்பரப்புகளை இணைக்கக் கூடியதும் அல்லது இரண்டு பெரிய நீர்ப்பரப்புகளை பிரிக்கக்கூடியதுமான மிக குறுகிய நிலப்பகுதி நிலச்சந்தி ஆகும்.

தருமபுரி பீடபூமி, கோயமுத்தூர் பீடபூமி மற்றும் மதுரை பீடபூமி ஆகியன தமிழ்நாட்டில் காணப்படும் பீடபூமிகளாகும்.

ஆற்றுச் சமவெளிகள் பண்டைய நாகரிகங்களின் தொட்டிலாக விளங்கின. இந்தியாவில் சிந்து நதி மற்றும் எகிப்தின் நைல் நதி போன்ற ஆற்றுச் சமவெளிகளில் நாகரிகங்கள் தோன்றி செழித்தோங்கி வளர்ந்தன.

புவியின் மேற்பரப்பிலுள்ள பொருள்களை (பாறைகள்) அரித்து அகற்றுதலே அரித்தல் எனப்படுகிறது. இவ்வாறு அரிக்கப்பட்ட பாறை துகள்கள் கடத்தப்பட்டு தாழ்நிலப் பகுதிகளில் படிய வைக்கப்படுகின்றன. இச்செயல் படியவைத்தல் எனப்படுகிறது.

உலகின் உயரமான எவரெஸ்ட் சிகரம் (8, 848 மீ) மரியானா அகழியில் (10, 994 மீ) மூழ்கிவிடும் என்றால் அதன் ஆழத்தை உணர்ந்தறிவாயாக. கடலின் ஆழத்தை மீ என்ற குறியீட்டால் குறிப்பிட வேண்டும்.

ஸ்பெயின் நாட்டின் மாலுமி பெர்டினாண்டு மெகல்லன் பசிபிக் என பெயரிட்டார். பசிபிக் என்பதன் பொருள் அமைதி என்பதாகும்.

6o கால்வாய் – இந்திரா முனையையும் இந்தோனேசியாவையும் பிரிக்கிறது. 8o கால்வாய் மாலத் தீவையும் மினிக்காய் தீவையும் பிரிக்கிறது. 9o கால்வாய் லட்ச தீவையும் மினிக்காய் தீவையும் பிரிக்கிறது. 10o கால்வாய் அந்தமான் தீவையும் நிக்கோபார் தீவையும் பிரிக்கிறது.

பாக் நீர்ச்சந்தி வங்காள விரிகுடாவையும் பாக் வளைகுடாவையும் இணைக்கிறது.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

1. மிகச்சிறிய பெருங்கடல்

(அ) பசிபிக் பெருங்கடல்

(ஆ) இந்தியப் பெருங்கடல்

(இ) அட்லாண்டிக் பெருங்கடல்

(ஈ) ஆர்க்டிக் பெருங்கடல்

2. மலாக்கா நீர்ச்சந்தியை இணைப்பது

(அ) பசிபிக் பெருங்கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்

(ஆ) பசிபிக் பெருங்கடல் மற்றும் தென் பெருங்கடல்

(இ) பசிபிக் பெருங்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல்

(ஈ) பசிபிக் பெருங்கடல் மற்றும் ஆர்க்டிக் பெருங்கடல்

3. அதிகமான கப்பல் போக்குவரத்து நடைபெறும் பெருங்கடல்

(அ) பசிபிக் பெருங்கடல்

(ஆ) அட்லாண்டிக் பெருங்கடல்

(இ) இந்தியப்பெருங்கடல்

(ஈ) ஆர்க்டிக் பெருங்கடல்

4. உறைந்த கண்டம்

(அ) வட அமெரிக்கா

(ஆ) ஆஸ்திரேலியா

(இ) அண்டார்டிகா

(ஈ) ஆசியா

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. உலகின் மிகப்பெரிய கண்டம் _________

2. இந்தியாவில் கனிம வளம் நிறைந்த பீடபூமி ____________

3. பெருங்கடல்களில் மிகப்பெரியது ___________

4. டெல்டா ___________ நிலை நிலத்தோற்றம்.

5. தீவுக்கண்டம் என அழைக்கப்படுவது ___________

பொருந்தாததை வட்டமிடுக:

1. ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, இலங்கை

2. ஆர்க்டிக் பெருங்கடல், மத்திய தரைக் கடல், இந்தியப் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல்

3. பீடபூமி, பள்ளத்தாக்கு, சமவெளி, மலை

4. வங்காள விரிகுடா, பேரிங் கடல், சீனக் கடல், தாஸ்மானியா கடல்.

5. ஆண்டிஸ், ராக்கி, எவரெஸ்ட், இமயமலை.

பொருத்துக:

1. தென்சான்ட்விச் அகழி – அ. அட்லாண்டிக் பெருங்கடல்

2. மில்வாக்கி அகழி – ஆ. தென் பெருங்கடல்

3. மரியானா அகழி – இ. இந்தியப் பெருங்கடல்

4. யுரேஷியன் படுகை – ஈ. பசிபிக் பெருங்கடல்

5. ஜாவா அகழி – உ. ஆர்க்டிக் பெருங்கடல்

கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்க:

1. சமவெளிகள் ஆறுகளால் தோற்றுவிக்கப்படுகின்றன.

2. இந்தியப் பெருங்கடலின் ஆழமான பகுதி “சான்ட்விச்” அகழி.

3. பீடபூமிகள் வன்சரிவைக் கொண்டிருக்கும்.

மேற்கூறிய கூற்றுகளில் சரியானவற்றைக் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைப் பயன்படுத்திக் கண்டறிக:

(அ) 1 மற்றும் 3

(ஆ) 2 மற்றும் 3

(இ) 1, 2 மற்றும் 3

(ஈ) 2 மட்டும்

கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்க:

கூற்று 1: மலைகள் இரண்டாம் நிலை நிலத்தோற்றங்கள் ஆகும்.

கூற்று 2: உலகிலேயே மிகவும் ஆழமான அகழி மரியானா அகழி.

(அ) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

(ஆ) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

(இ) இரண்டு கூற்றுகளும் சரி

(ஈ) இரண்டு கூற்றுகளும் தவறு.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. ஆர்க்டிக் பெருங்கடல் 2. பசிபிக்பெருங்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல்

3. அட்லாண்டிக் பெருங்கடல் 4. அண்டார்டிகா

கோடிட்ட இடத்தை நிரப்புக: (விடைகள்)

1. ஆசியா 2. சோட்டாநாகபுர் 3. பசுபிக் 4. (3) 5. ஆஸ்திரேலியா

பொருந்தாததை வட்டமிடுக: (விடை)

1. இலங்கை

2. மத்திய தரைக்கடல்

3. பள்ளத்தாக்கு

4. வங்காள விரிகுடா

5. எவரெஸ்ட்

பொருத்துக: (விடைகள்)

1. தென்சான்ட்விச் அகழி – தென் பெருங்கடல்

2. மில்வாக்கி அகழி – அட்லாண்டிக் பெருங்கடல்

3. மரியான அகழி – பசிபிக் பெருங்கடல்

4. யுரேஷியன் படுகை – ஆர்க்டிக் பெருங்கடல்

5. ஜாவா அகழி – இந்தியப் பெருங்கடல்

கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்க: (விடை)

1. (1 மற்றும் 3)

2. இரண்டு கூற்றுகளும் சரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!