Book Back QuestionsTnpsc

நிலவரைபடத்தை கற்றறிதல் Book Back Questions 7th Social Science Lesson 22

7th Social Science Lesson 22

22] நிலவரைபடத்தை கற்றறிதல்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

ஆரம்ப காலங்களில் காகிதத்தோல் (விலங்குகளின் தோல்), பாப்பிரஸ் (Papyrus), துணிகள், ஈரநிலம் மற்றும் களிமண் பலகைகள் நிலவரைபடம் தயாரிக்க பயன்படுத்தப்பட்டன.

நிலவரைபடத்தை உருவாக்கும் அறிவியல் என்பது கார்ட்டோகிராஃபி என அழைக்கப்படுகிறது. கார்டே (Carte) என்பது நிலவரைபடம் கிராபிக் (Graphic) என்பது வரைதல். நிலவரைபடத்தை வரைந்து உருவாக்குபவர் கார்டோகிராஃபர் (Cartographer) ஆவர்.

மின்னணு வரைபடங்கள் (Digital Maps) என்பது உலகம் முழுவதும் அமைந்துள்ள புவியியல் பகுதிகள் மற்றும் தலங்களைக் குறித்து அதிகப்படியான தகவல்களை வழங்கும் வலைதள சேவைப்பகுதி ஆகும்.

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. நிலவரைபடம் உருவாக்குதலின் அறிவியல் பிரிவு என அழைக்கப்படுகிறது ———-

(அ) புவியியல் (ஜியோகிராஃபி)

(ஆ) கார்டோகிராஃப்ட்

(இ) பிஸியோகிராபி

(ஈ) பௌதீக புவியியல்

2. வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய நான்கும் ——— திசைகள் ஆகும்.

(அ) முக்கியமான

(ஆ) புவியியல்

(இ) அட்சரேகை

(ஈ) கோணங்கள்

3. கலாச்சார நிலவரை படங்கள் என்பன ———— அமைப்புகளைக் காட்டுகின்றன.

(அ) இயற்கையான

(ஆ) மனிதனால் உருவாக்கப்பட்ட

(இ) செயற்கையான

(ஈ) சுற்றுச்சூழல்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. புவியியலாளர்களின் ஒரு முக்கிய கருவியாக ————- அமைகிறது.

2. முதன்மை திசைகளுக்கு இடையே உள்ள திசைகள் இடைநிலை ———- எனப்படும்.

3. நிலவரைபடத்தில் உள்ள ———– வரைபடத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள வண்ணங்கள் மற்றும் சின்னங்களை விளக்குகிறது.

4. காடாஸ்ட்ரல் நிலவரைபடங்கள் ———— என அழைக்கப்படுகின்றன

5. சிறிய அளவை நிலவரைபடங்கள் ———- மற்றும் ———- போன்ற அதிக பரப்பளவு இடங்களைக் காட்ட உதவுகின்றன.

III. பொருந்தாததை வட்டமிடுக:

1. வடகிழக்கு, அளவை, வடமேற்கு மற்றும் கிழக்கு

2. வெண்மை, பனி, உயர்நிலம் மற்றும் சமவெளி

3. நில அமைப்பு நிலவரைபடம், மண் நிலவரைபடம், இயற்கை அமைப்பு நிலவரைபடம் மற்றும் நிலவரைபட நூல்.

4. வானிலை முன்னறிவிப்பு, காலநிலை, மழைவீழச்சி மற்றும் வெப்பநிலை

IV. பொருத்துக:

1. மேல் வலது மூலை – அ) அடர்த்தி மற்றும் வளர்ச்சி

2. குறிப்பு – ஆ) மாவட்டம் அல்லது நகரம்

3. பெரிய அளவை நிலவரைபடம் – இ) இயற்கை நில அமைப்பு

4. இயற்கை அமைப்பு வரைபடம் – ஈ) வண்ணங்கள் மற்றும் சின்னங்கள்

5. மக்கள் தொகை வரைபடம் – உ) “N” எழுத்து

V. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. i. நிலவரைபட நூல் என்பது பல வகைப்பட்ட நிலவரைபடங்கள் கட்டமைக்கப்பட்ட தொகுதி ஆகும்.

ii. நிலவரை பட நூலின் வரைபடங்கள் சிறிய அளவையில் வரையப்படுகின்றன.

Iii. முக்கியமற்ற விவரங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.

(அ) i மற்றும் iii சரி

(ஆ) ii மற்றும் iii சரி

(இ) i மற்றும் ii சரி

(ஈ) i, ii மற்றும் iii சரி

2. கூற்று 1: உலக உருண்டை என்பது புவியின் முப்பரிமாண மாதிரி

கூற்று 2: இதனை இது கையாள்வதற்கும், எடுத்துச் செல்வதற்கும் எளிது. சுருட்டியோ அல்லது மடித்தோ கையில் எடுத்துச் செல்வதற்கும் எளிது.

(அ) கூற்று 1 சரி, 2 தவறு

(ஆ) கூற்று 1 தவறு, 2 சரி

(இ) இரண்டும் சரி

(ஈ) இரண்டும் தவறு

விடைகள்:

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. கார்டோகிராஃப்ட், 2. முக்கியமான, 3. மனிதனால் உருவாக்கப்பட்ட

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. நிலவரைபடங்கள், 2. திசைகள், 3. குறீயீடுகள், 4. கிராம மற்றும் நகரங்களின் வரைபடங்கள், 5. கண்டங்கள் மற்றும் நாடுகள்

III. பொருந்தாததை வட்டமிடுக:

1. அளவை, 2. சமவெளி, 3. நிலவரைபட நூல், 4. காலநிலை

IV. பொருத்துக:

1. உ, 2. ஈ, 3. ஆ, 4. இ, 5. அ

V. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1.) i, ii மற்றும் iii சரி, 2. கூற்று 1 சரி, 2 தவறு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!