Book Back QuestionsTnpsc

நிலவரைபடத் திறன்கள் Book Back Questions 9th Social Science Lesson 18

9th Social Science Lesson 18

18] நிலவரைபடத் திறன்கள்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

நிலவரைபடவியலாளர் என்பவர் புவியியல் தகவல்களைச் சேகரித்து, ஆய்வு செய்து, விவரணம் செய்து, அரசியல், கலாச்சார மற்றும் கல்வி நோக்கங்களுக்காக நிலவரைபடங்கள் மற்றும் விளக்கப்படங்களை உருவாக்குபவர் ஆவார்.

1 செ. மீ = 2 கி. மீ என்றால் அளவையைப் பின்னமுறையில் மாற்று.

இந்தியாவில் முதன்மை நிலப்பரப்பின் அட்ச, தீர்க்கப்பரவல்: 8o 4` வ முதல் 37o 6` வ அட்சம் வரை, 68o 7` கி முதல் 97o 25` கி தீர்க்கம் வரை உள்ளது. இங்கு (o) என்பது கோணம் (`) என்பது நிமிடம் ஆகும்.

புவியின் உண்மையான வடிவம் ஜியாய்டு எனப்படுகிறது. இது ஒரு நீள்வட்டக் கோளம் ஆகும். ஐக்கிய நாடுகள் சபையின் கொடியில் “சமதள துருவ கோட்டுச் சட்டம் சித்தரிக்கப்பட்டுள்ளது. 1945ஆம் ஆண்டு முதன்முதலாக வரையப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் கொடியில் இதில் 90o மேற்கு தீர்க்கக்கோடு மேல்நோக்கி இருந்தது. அதனால் வடஅமெரிக்கா முதன்மையாகத் தெரிந்தது. அடுத்த ஆண்டு நடுநிலை வகிக்கும் வகையில் சர்வதேச தேதிக் கோடு 180o கிழக்கு, பசிஃபிக் பேராழியின் மத்தியில் மேல்நோக்கித் தெரியும் வகையில் உருமாற்றம் செய்யப்பட்டது. மேலும் நிலவரைபடம் 60o தெற்கு அட்சக் கோட்டில் நிறுத்தப்பட்டிருப்பதால், அண்டார்டிகா தென்படவில்லை.

நமது உடலில் மூன்று தொலை உணர்வு உறுப்புகள் காணப்படுகின்றன. கண்கள் – கண்களின் பார்வை. மூக்கு – வாசனையின் உணர்வு. காது – கேட்கும் உணர்வு.

பெலிக்ஸ் நடார், ஒரு பிரெஞ்சு புகைப்படக்காரர். மேலும் பத்திரிக்கையாளர், நாவலாசிரியர் மற்றும் பலூன் உருவாக்குபவர். இவர் கி. பி. 1858ஆம் ஆண்டில் முதன்முதலாக வான்வழி புகைப்படங்களை எடுத்த முதல் நபர் ஆவார். பாரிஸ் சுரங்கக் கல்லறையில் வேலை பார்த்து வந்த அவர், 1853ஆம் ஆண்டில் தனது முதல் புகைப்படங்களை எடுத்ததுடன், புகைப்படம் எடுப்பதில் செயற்கை ஒளியை பயன்படுத்துவதில் முன்னோடியாகவும் திகழ்ந்தார். கி. பி. 1863ஆம் ஆண்டில், நடார் ஒரு பெரிய (6000 மீ3) “லீ ஜென்ட்” (தி ஜெயண்ட்) என்று பெயரிடப்பட்ட பலூனை உருவாக்கினார்.

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. 20ம் நூற்றாண்டில் தலப்பரப்பு அளவிடுதலின் புதிய நிலை

(அ) தலப்படங்கள்

(ஆ) வானவியல் புகைப்படங்கள்

(இ) நிலவரப்படங்கள்

(ஈ) செயற்கைகோள் பதிமங்கள்

2. ஒரு நிலவரைபடத்தின் கருத்து (அல்லது) நோக்கத்தைக் குறிப்பிடுவது.

(அ) தலைப்பு

(ஆ) அளவை

(இ) திசைகள்

(ஈ) நிலவரைப்படக் குறிப்பு

3. நிலவரைபடத்தில் உறுதியான கருத்தை வெளிப்படுத்துவதற்குப் பயன்படும் நிரந்தர குறியீடுகள்

(அ) முறைக்குறியீடுகள்

(ஆ) இணைப்பாய புள்ளிகள்

(இ) வலைப்பின்னல் அமைப்பு

(ஈ) திசைகள்

4. மிகப்பரந்த நிலப்பரப்பில் குறைந்த விவரத்தை தரக்கூடிய நிலவரைபடம்

(அ) பெரிய அளவை நிலவரைபடம்

(ஆ) கருத்துசார் வரைபடம்

(இ) இயற்கை வரைபடம்

(ஈ) சிறிய அளவை நிலவரைபடம்

5. உலக அமைவிடத்தை கண்டறியும் தொகுதியில் (GPS) பயன்படுத்தப்படும் செயற்கைக்கோள்கள்

(அ) 7

(ஆ) 24

(இ) 32

(ஈ) 64

II. பொருத்துக:

1. நிலவரைபடங்களை உருவாக்கும் அறிவியல் கலை – அ] அமெரிக்க ஐக்கிய நாடுகள்

2. கருத்துசார் வரைபடம்- – ஆ] ஜியாய்டு

3. புவியின் வடிவம – இ] இன்மார்சாட்

4. செயற்கைகோள் – ஈ] அரசியல் வரைபடம்

5. நவ்ஸ்டார் – உ] நிலவரைபடக் கலையியல்

III. பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. கூற்று (A): செங்குத்துக் கோடுகளும் இடைமட்டக் கோடுகளும் ஒரு புள்ளியில் சந்திப்பதன் மூலம் உருவாக்கும் வலை அமைப்பிற்கு இணைப்பாயங்களின் அமைப்பு.

காரணம் (R): கிடைமட்டமாகவும், செங்குத்தாகவும் செல்லும் கோடுகள் முறையே வடக்கைக்கோடுகள், கிழக்கைக்கோடுகள் என்று அழைக்கப்படுகின்றன.

(அ) A மற்றும் R இரண்டும் சரி Rஆனது Aவிற்கு சரியான விளக்கம்

(ஆ) A மற்றும் R இரண்டும் சரி ஆனால் Rஆனது Aவிற்கு சரியான விளக்கமல்ல

(இ) A சரி R தவறு

(ஈ) A தவறு R சரி

2. கூற்று (A): ஒரு நிலவரைபடத்தில் உள்ள வரைபடக் குறிப்புகள் வரைபடத்தில் உள்ள செய்திகளைப் புரிந்து கொள்ளப் பயன்படாது.

காரணம் (R): இது பொதுவாக நிலவரை படத்தின் அடிப்பகுதியில் இடது அல்லது வலது புற ஓரத்தில் காணப்படும்.

(அ) A தவறு R சரி

(ஆ) A மற்றும் R இரண்டும் சரி ஆனால் R ஆனது Aவிற்கு சரியான விளக்கமல்ல

(இ) A சரி ஆனால் R தவறு

(ஈ) A மற்றும் R இரண்டும் சரி, Rஆனது Aவிற்கு சரியான விளக்கம்

விடைகள்:

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. செயற்கைகோள் பதிமங்கள், 2. தலைப்பு, 3. முறைக்குறியீடுகள், 4. சிறிய அளவை நிலவரைபடம், 5. 24

II. பொருத்துக:

1. உ, 2. ஈ, 3. ஆ, 4. இ, 5. அ

III. பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. A மற்றும் R இரண்டும் சரி ஆனால் Rஆனது Aவிற்கு சரியான விளக்கமல்ல, 2. A தவறு R சரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!