Book Back QuestionsTnpsc

நீதித்துறை Book Back Questions 8th Social Science Lesson 23

8th Social Science Lesson 23

23] நீதித்துறை

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

ஸ்மிருதி இலக்கியங்கள்: பண்டைய இந்தியாவில் ஸ்மிருதிகள் தனிமனிதனின் சமூகக் கடமைகளை வரையறுத்தன. அவை மனுஸ்மிருதி, நாரதஸ்மிருதி, யக்ஞவல்கிய ஸ்மிருதி போன்றவையாகும்.

கல்கத்தா உயர் நீதிமன்றம் நாட்டின் மிகப்பழமையான உயர்நீதிமன்றமாகும். இது 1862ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அதே சமயம் அலகாபாத் உயர் நீதிமன்றம் நாட்டின் மிகப் பெரிய நீதிமன்றமாகும்.

ஒரு சுதந்திரமான நீதித்துறை என்ற கருத்தை முன்மொழிந்த முதல் அரசியல் தத்துவஞானி மாண்டெஸ்கியூ ஆவார். இவர் புகழ்பெற்ற பிரெஞ்சு தத்துவ ஞானி ஆவார். சட்டமன்றம், நிர்வாகம் மற்றும் நீதித்துறை ஆகிய மூன்று பிரிவுகளாக அரசாங்கம் செயல்பட வேண்டும் என்ற அதிகாரப்பகிர்வு கோட்பாட்டில் அவர் நம்பிக்கை கொண்டிருந்தார்.

தேசிய சட்ட சேவைகள் அதிகாரம் (NALSA): இது 1987ஆம் ஆண்டு சட்ட சேவைகள் அதிகார சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது. இது சமுதாயத்தின் நலிந்த பிரிவினருக்கு இலவச சட்ட உதவிகள் வழங்குவதோடு பிரச்சனைகளுக்கு இணக்கமான தீர்வு காண லோக் அதாலத்தை ஏற்பாடு செய்கிறது.

பொது நலவழக்கு (Public Interest Litigation): இது பொதுநலனைப் பாதுகாப்பதற்காக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் வழக்கு ஆகும். உச்ச நீதிமன்றம் இந்த முறையை அறிமுகப்படுத்தியது. இது ஒரு நபர் தனது வழக்கு தொடர்பான நீதிமன்றத்தை அணுக அனுமதிக்கிறது. அடிப்படை மனித உரிமைகள் மீறல், சமய உரிமைகள், மாசுபாடு, மற்றும் சாலைப்பாதுகாப்பு ஆகியவற்றிற்காக பொது நல வழக்கை எவரும் தாக்கல் செய்யலாம். இது தொடர்பான எழுதப்பட்ட புகார் கடிதம் மூலம் இவ்வழக்கினைப் பதியலாம். பொது நல வழக்கு என்ற கருத்து இந்திய நீதித்துறைக்குப் புதிதான ஒன்றாகும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. இந்தியாவின் மிக உயர்ந்த மற்றும் இறுதியான நீதித்துறை ________

(அ) குடியரசுத் தலைவர்

(ஆ) நாடாளுமன்றம்

(இ) உச்ச நீதிமன்றம்

(ஈ) பிரதம அமைச்சர்

2. ____________ க்கு இடையே பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கான ஒரு செயல்முறையை நீதிமன்ற அமைப்பு வழங்குகிறது.

(அ) குடிமக்கள்

(ஆ) குடிமக்கள் மற்றும் அரசாங்கம்

(இ) இரண்டு மாநில அரசாங்கங்கள்

(ஈ) மேற்கண்ட அனைத்தும்

3. கீழ்க்கண்ட எந்த அதிகார வரம்பின் மூலம் இரு மாநிலங்களுக்கிடையேயான பிரச்சனைகளை உச்ச நீதிமன்றம் தீர்க்க வழிவகை செய்கிறது?

(அ) முதன்மை அதிகார வரம்பு

(ஆ) மேல்முறையீட்டு அதிகார வரம்பு

(இ) ஆலோசனை அதிகார வரம்பு

(ஈ) மேற்கண்ட எதுவுமில்லை

4. பின்வரும் எந்த மாநிலம்/யூனியன் பிரதேசம் ஒரு பொதுவான உயர்நீதிமன்றத்தைக் கொண்டுள்ளது?

(அ) பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர்

(ஆ) அஸ்ஸாம் மற்றும் வங்காளம்

(இ) பஞ்சாப், ஹரியானா மற்றும் சண்டிகர்

(ஈ) உத்தரபிரதேசம் மற்றும் பீகார்

5. பொதுநல வழக்கு முறை இந்தியாவில் __________ ஆல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

(அ) உச்ச நீதிமன்றம்

(ஆ) நாடாளுமன்றம்

(இ) அரசியல் கட்சிகள்

(ஈ) அரசியலமைப்பு சட்ட திருத்தங்கள்

6. இந்தியாவில் உச்ச நிலையில் உள்ள நீதிமன்றங்கள் எத்தனை?

(அ) ஒன்று

(ஆ) இரண்டு

(இ) மூன்று

(ஈ) நான்கு

7. உச்ச நீதிமன்றம் அமைந்துள்ள இடம்

(அ) சண்டிகர்

(ஆ) பம்பாய்

(இ) கல்கத்தா

(ஈ) புதுதில்லி

8. FIR என்பது

(அ) முதல் தகவல் அறிக்கை

(ஆ) முதல் தகவல் முடிவு

(இ) முதல் நிகழ்வு அறிக்கை

(ஈ) மேற்கூறிய எவையுமில்லை

9. குற்றவியல் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் ___________ என அழைக்கப்படுகின்றன.

(அ) மாவட்ட நீதிமன்றங்கள்

(ஆ) அமர்வு நீதிமன்றம்

(இ) குடும்ப நீதிமன்றங்கள்

(ஈ) வருவாய் நீதிமன்றங்கள்

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. ___________ நீதிமன்றம் இந்தியாவின் பழமையான நீதிமன்றம் ஆகும்.

2. அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் ___________ மற்றும் ___________ உடன் இந்திய நீதித்துறையை நிறுவினர்.

3. புகழ்பெற்ற பிரெஞ்சு தத்துவஞானியான ____________ “ஒரு சுதந்திரமான நீதித்துறை” என்ற கருத்தை முன்மொழிந்தார்.

4. ___________ பணம், சொத்து, சமூகம் தொடர்பான பிரச்சனைகளைக் கையாளுகிறது.

5. பழங்காலத்தில் பெரும்பாலான அரசர்களின் நீதிமன்றங்கள் ___________ ன்படி நீதியை வழங்கின.

பொருத்துக:

1. உச்ச நீதிமன்றம் – சமூக கடமைகள்

2. உயர் நீதிமன்றம் – விரைவான நீதி

3. லோக் அதாலத் – இறுதி மேல் முறையீட்டு நீதிமன்றம்

4. சர் எலிஜா இம்ஃபே – மாநிலத்தின் உயர்ந்த நீதிமன்றம்

5. ஸ்மிருதி – முதல் தலைமை நீதபதி

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக:

1. 1951ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் நாள் இந்திய உச்ச நீதிமன்றம் தொடங்கப்பட்டது.

2. துக்ளக் ஆட்சிக்காலத்தில் சட்ட நடைமுறைகள் அரபு மொழியில் எழுதப்பட்டன.

3. 1773ஆம் ஆண்டு ஒழுங்கு முறைச்சட்டம் உச்ச நீதிமன்றம் அமைப்பதற்கு வழிவகுத்தது.

4. சதர் திவானி அதாலத் ஒரு குற்றவியல் நீதிமன்றமாகும்.

5. இந்தியாவில் மிகப்பெரிய நீதிமன்றம் அலகாபாத் நீதிமன்றம் ஆகும்.

6. இந்திய அரசியலமைப்புச் சட்டம் அனைத்துக் குடிமக்களுக்கான நீதியைப் பாதுகாக்கிறது.

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. பின்வரும் கூற்றை ஆராய்க:

i) மெக்காலே பிரபுவால் ஒரு சட்ட ஆணையம் அமைக்கப்பட்டது.

ii) இது இந்தியச் சட்டங்களை நெறிமுறைப்படுத்தியது.

மேலே கொடுக்கப்பட்ட எந்த கூற்று/கூற்றுகள் சரியானவை.

(அ) i மட்டும்

(ஆ) ii மட்டும்

(இ) i மற்றும் ii

(ஈ) இரண்டும் இல்லை

2. பின்வரும் கூற்றை ஆராய்க:

i) இந்திய தண்டனைச் சட்டம் 1860இல் உருவாக்கப்பட்டது.

ii) கல்கத்தா உயர்நீதிமன்றம் 1862இல் நிறுவப்பட்டது.

iii) 1935ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம் கூட்டாட்சி நீதிமன்றத்தை உருவாக்கியது.

மேலே கொடுக்கப்பட்ட எந்த கூற்று/கூற்றுகள் சரியானவை

(அ) i மட்டும்

(ஆ) ii மற்றும் iii மட்டும்

(இ) i, iii மட்டும்

(ஈ) அனைத்தும்

3. இந்திய உச்ச நீதிமன்றம் பற்றிய பின்வரும் எந்த கூற்றுச் சரியானது அல்ல.

i) இந்தியாவின் உச்ச நீதிமன்றம் நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்றம் ஆகும்.

ii) இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் IVவது அத்தியாயத்தின் கீழ் பகுதி V-இன்படி நிறுவப்பட்டது.

iii) ஒரு உயர்நீதிமன்றத்திலிருந்து மற்றொரு நீதிமன்றத்திற்கு வழக்குகளை உச்ச நீதிமன்றத்தால் மாற்ற முடியாது.

iv) இதன் முடிவுகள் அனைத்து நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்துகிறது.

(அ) i

(ஆ) ii

(இ) iii

(ஈ) iv

4. கூற்று: உச்ச நீதிமன்றம் ஒரு ஆவண நீதிமன்றமாகும்.

காரணம்: இது நீதிமன்ற நடவடிக்கைகளின் பதிவுகளைப் பராமரிக்கிறது மற்றும் அதன் முடிவுகள் கீழ் நீதிமன்றங்களை கட்டுப்படுத்தும்.

(அ) கூற்று சரி, காரணம் தவறு

(ஆ) கூற்று காரணம் இரண்டும் தவறு

(இ) கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்

(ஈ) கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல

5. ஆம் இல்லை எனக் கூறுக.

1. ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் உச்ச நீதிமன்றத்தை அணுகலாம்.

2. பணக்காரர் மற்றும் சக்தி படைத்த மக்கள் நீதித்துறை அமைப்பை கட்டுப்படுத்துகின்றனர்

3. ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் நீதிமன்றங்களின் மூலம் நீதியைப் பெற உரிமை உடையவராவர்.

4. அரசியல்வாதிகள் நீதிபதிகளைக் கட்டுப்படுத்த முடியாது.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. உச்சநீதிமன்றம் 2. மேற்கண்ட அனைத்தும் 3. முதன்மை அதிகார வரம்பு

4. பஞ்சாப், ஹரியானா மற்றும் சண்டிகர் 5. உச்சநீதிமன்றம் 6. ஒன்று 7. புதுதில்லி

8. முதல் தகவல் அறிக்கை 9. அமர்வு நீதிமன்றம்

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. கல்கத்தா 2. சுதந்திரம் மற்றும் நடுநிலைமைத் தன்மை 3. மாண்டெஸ்கியூ

4. உரிமையியல் சட்டம் 5. தர்மத்தி

பொருத்துக: (விடைகள்)

1. உச்ச நீதிமன்றம் – இறுதி மேல் முறையீட்டு நீதிமன்றம்

2. உயர் நீதிமன்றம் – மாநிலத்தின் உயர்ந்த நீதிமன்றம்

3. லோக் அதாலத் – விரைவான நீதி

4. சர் எலிஜா இம்ஃபே – முதல் தலைமை நீதிபதி

5. ஸ்மிருதி – சமூக கடமைகள்

சரியா / தவறா எனக் குறிப்பிடுக: (விடைகள்)

1. தவறு

2. சரி

3. சரி

4. தவறு

5. சரி

6. சரி

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றைத் தேர்வு செய்க:

1. i மற்றும் ii

2. அனைத்தும்

3. iii

4. கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.

5. ஆம் இல்லை எனக் கூறுக.

அ) ஆம்

ஆ) இல்லை

இ) ஆம்

ஈ) ஆம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!