Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
MCQ Questions

நீர்க்கோளம் 11th Geography Lesson 3 Questions in Tamil

11th Geography Lesson 3 Questions in Tamil

3] நீர்க்கோளம்

1) உலக நன்னீர் அளவில் அண்டார்டிகாவில் எத்தனை சதவீதம் உள்ளது?

A) 85% B] 90% C] 92% D] 95%

விடை: B] 90%

  • உலகின் 85% மக்கள் தொகையில் பாதிக்கு மேற்பட்ட மிக வறட்சியான பகுதியில் வசிக்கின்றனர்.

2) புவியின் மொத்த பரப்பில் நீரின் அளவு எவ்வளவு?

A] 65% B] 70.8% C] 72.14% D] 74.38%

விடை: B] 70.8%

  • புவியின் மொத்த பரப்பில் 361 மில்லியன் சதுர கிலோ மீட்டர் நீர் உள்ளது. நிலமானது 29.2 ( 148 மில்லியன் சதுர கிலோமீட்டர் ) சதவீதமும் காணப்படுகிறது.

3) உலக நீரில் உவர் நீரின் அளவு எவ்வளவு?

A] 94.2% B] 95.46% C] 96.50% D] 98.68%

விடை: C] 96.50%

  • 96.1% நீர் உவர் நீராக கடல்களிலும், பெருங்கடல்களிலும் காணப்படுகிறது. நன்னீரின் அளவு வெறும் 2.5 சதவீதம் மட்டுமே. உவர்ப்பான நிலத்தடி நீரும், உவர் ஏரி நீரும் இணைந்து ஒரு சதவீதம் காணப்படுகிறது.

4) நீரில் உள்ள உப்பின் அளவு எவ்வளவு சதவீதத்துக்கு குறைவாக இருந்தால் அதை நன்னீர் என்கிறோம்?

A] 0.5% B] 1% C] 1.5% D] 2%

விடை: B] 1%

  • கடல் நீருடன் ஒப்பிடும்போது நீரில் உப்பின் அளவு ஒரு சதவீதத்துக்கும் குறைவாக இருந்தால் அதை நன்னீர் என்கிறோம்.

5) ஓர நீரின் உவர்ப்பியம் அளவு எவ்வளவு?

A] 0.35 – 1 % B] 0.25 – 0.75 % C] 0.55 – 1.5 % D] 0.75 – 1.75 %

விடை: A] 0.35 – 1 %

  • ஓர நீர் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் பல இடங்களில் பயன்பாட்டிற்கு உகந்ததாக உள்ளது. நன்னீர் பரவலில் 28.6% பனியாறுகளாகவும், பணி குமிழ்களாகவும் முடக்கப்பட்டுள்ளது.

6) கீழ்கண்டவற்றுள் சரியான கூற்றை தேர்ந்தெடு.

1) மொத்த நன்னீர் அளவில் 30.1 சதவீதம் நிலத்தடி நீராக உள்ளது.

2) மீதமுள்ள 1.3 சதவீதம் நீர் புவி மேற்பரப்பு நீராக காணப்படுகிறது.

A] 1 மட்டும் B] 2 மட்டும் C] 1 & 2 D] எதுவும் இல்லை

விடை: C] 1 & 2

  • புவி மேற்பரப்பு நீர் என்பது நிலம் மற்றும் கடல் பகுதியில் காணப்படும் பனிக்கட்டி, ஆறுகள், ஏரிகள், சதுப்பு நிலங்கள் மற்றும் உவர் சேற்று நிலங்களில் காணப்படும் நீர், மண், வளிமண்டலம் மற்றும் உயிர் கோளத்தில் காணப்படும் ஈரப்பதம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.

7) கீழ்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடு.

1) கங்கை ஆறு இமயமலையிலுள்ள கங்கோத்ரி என்ற பனியாற்றில் உற்பத்தியாகிறது.

2) காவிரி ஆறு கர்நாடக மாநிலத்தில் உள்ள குடகு மாவட்டத்தில் தலைக்காவிரி என்ற ஊற்றில் உற்பத்தியாகிறது.

  • ஆறுகள் பெரும்பாலும் மலைகளில் காணப்படும் பனியாறுகளிலோ, ஊற்றுகளிலோ அல்லது ஏரிகளிலோ உற்பத்தியாகின்றன.

8) நைல் நதி எங்கு உற்பத்தியாகிறது?

A] ஆல்பர்ட் ஏரி B] கிவு ஏரி C] மலாவி ஏரி D] விக்டோரியா ஏரி

விடை: D] விக்டோரியா ஏரி

  • நைல் உகாண்டா நாட்டில் உள்ள விக்டோரியா ஏரியில் உற்பத்தியாகிறது. ஆறுகள் வரையறைக்குட்பட்ட இரு கரைகளுக்கு இடையேயான வழியில் ஓடி இறுதியில் கடலின் முகத்துவாரத்தில் அல்லது ஒரு ஏரியில் விழுகிறது.

9) கீழ்கண்டவற்றுள் உள்நாட்டு வடிகால் என்று அழைக்கப்படுவது எது?

A] ஒரு ஆறு ஏரியில் கலப்பது

B] ஒரு ஆறு நிலத்தால் சூழப்பட்ட உள்நாட்டு கடலில் கலப்பது

C] A & B

D] ஆறுகள் நீர்த்தேக்கத்தில் கலப்பது

விடை: C] A & B

  • ஒரு ஆறு ஏரியிலோ அல்லது நிலத்தால் சூழப்பட்ட உள்நாட்டு கடலில் கலந்தால் அதனை உள்நாட்டு வடிகால் என்கிறோம்.

10) உலகிலேயே மிக நீளமான ஆறு எது?

A] அமேசான் ஆறு B] நைல் நதி C] மிசிசிப்பி ஆறு D] யாங்சே ஆறு

விடை: B] நைல் நதி

  • நைல் நதி எகிப்து, உகாண்டா, எத்தியோப்பியா, கென்யா, தான்சானியா, காங்கோ, ருவாண்டா, புருண்டி, சூடான் மற்றும் எரித்திரியா ஆகிய நாடுகள் வழியே ஓடி கெய்ரோ நகரத்தில் வடக்கில் டெல்டாவை உருவாக்கி மத்திய தரைக் கடலில் கலக்கிறது.

11) அமேசான் ஆறு எந்த கடலில் கலக்கிறது?

A] தென் அட்லாண்டிக் பெருங்கடல் B] வட அட்லாண்டிக் பெருங்கடல்

C] கிழக்கு அட்லாண்டிக் பெருங்கடல் D] மேற்கு அட்லாண்டிக் பெருங்கடல்

விடை: A] தென் அட்லாண்டிக் பெருங்கடல்

  • அமேசான் ஆறு உலகின் இரண்டாவது நீளமான நதியாகும். இது உலகின் மற்ற ஆறுகளைக் காட்டிலும் மிகப்பெரிய ஆற்று கொப்பரையை கொண்டுள்ளது. இந்த ஆறு பெரு, கொலம்பியா மற்றும் பிரேசில் வழியாக பாய்கிறது.

12) கீழ்கண்டவற்றுள் ஆசியாவின் மிக நீளமான ஆறு எது?

A] சிந்து நதி B] யாங்ட்ஸிகியாங் ஆறு

C] மஞ்சளாறு D] கங்கை ஆறு

விடை: B] யாங்ட்ஸிகியாங் ஆறு

  • சீனாவின் யாங்ட்ஸிகியாங் நதி ஆசியாவின் மிக நீளமான ஆறு ஆகும். இது உலகின் மூன்றாவது நீளமான ஆறு ஆகும்.

13) மிசிசிப்பி ஆறு எங்கு அமைந்துள்ளது?

A] ஐக்கிய அமெரிக்க நாடு B] கனடா

C] பிரேசில் D] மெக்சிகோ

விடை: A] ஐக்கிய அமெரிக்க நாடு

  • ஐக்கிய அமெரிக்க நாட்டின் மிக நீளமான ஆறு மிசிசிப்பி – மிசௌரி. இது உலகின் நான்காவது பெரிய ஆறாகும்.

14) உலகில் உள்ள ஆறுகளில் காணப்படும் நீரின் அளவு எவ்வளவு?

A] 1500 கன கிலோமீட்டர் B] 1804 கன கிலோமீட்டர்

C] 2039 கன கிலோமீட்டர் D] 2120 கன கிலோமீட்டர்

விடை: D] 2120 கன கிலோமீட்டர்

  • மத்திய கிழக்கு நாடுகளை தவிர ஆசியாவில் ஓடும் ஆறுகளின் நீரின் அளவு வருடத்திற்கு 13,300 கன கிலோ மீட்டர் ஆகும். வட அமெரிக்காவில் இது வருடத்திற்கு 12,000 கன கிலோ மீட்டராக உள்ளது.

15) 1 TMC = ____ .

A] 100 மில்லியன் கன அடி நீர் B] 1000 மில்லியன் கன அடி நீர்

C] 100 பில்லியன் கன அடி நீர் D] 1000 பில்லியன் கனஅடி நீர்

விடை: B] 1000 மில்லியன் கன அடி நீர்

  • டி.எம்.சி என்பது one Thousand Million Cubic என்பதன் சுருக்கம் ஆகும். இது ஆயிரம் மில்லியன் கன அடி நீர் என்பதாகும். ( 1,000,000,000=1 பில்லியன் ). இது இந்தியாவில் நீர்த்தேக்கங்கள் அல்லது ஆறுகளில் உள்ள நீரின் கன அளவை குறிக்கும் அலகாகும்.

16) கீழ்க்கண்டவற்றுள் உலகின் மிக ஆழமான நன்னீர் ஏரி எது?

A] உலார் ஏரி B] பைக்கால் ஏரி C] சுப்பீரியர் ஏரி D] மிச்சிகன் ஏரி

விடை: B] பைக்கால் ஏரி

  • ஏரி என்பது ஒரு பெரிய அளவிலான நீர் நிலை ஆகும். ஏரிகள் பெரும்பாலும் புவித்தட்டு நகர்வு, எரிமலை, ஆறுகள், பனியாறுகள் போன்றவற்றால் உருவாகி இருக்கலாம். சில சமயங்களில் விண்கற்கள் விழுந்து ஏற்படுத்திய பள்ளங்களாக இருக்கலாம்.

17) உலகின் மிகப் பெரிய உப்பு ஏரி எது?

A] செங்கடல் B] காஸ்பியன் கடல் C] சாம்பார் ஏரி D] லோனார் ஏரி

விடை: B] காஸ்பியன் கடல்

  • காஸ்பியன் கடல், பைக்கால் ஏரி, உலார் ஏரி ஆகியவை புவி அசைவினால் ஏற்பட்டவையாகும்.

18) இந்தியாவில் காணப்படும் மிகப்பெரிய உப்பங்கழி ஏரி எது?

A] புலிக்காட் ஏரி B] சிலிகா ஏரி C] தால் ஏரி D] லோக்தாக் ஏரி

விடை: B] சிலிகா ஏரி

  • உப்பங்கழி ஏரிகள் கடலலை படிவுகளால் உருவாகின்றன. மகாராஷ்டிராவில் உள்ள லோனார் ஏரி பிளைஸ்டோஸின் காலகட்டத்தில் விண்கற்கள் புவி மீது ஏற்படுத்திய பள்ளம் என நம்பப்படுகிறது.

19) ஈர நிலங்கள் கீழ்க்கண்டவற்றுள் எவற்றை குறிக்கும்?

1) சேறு சகதி, தாவரக் கழிவுகள் கொண்ட நிலங்கள்

2) நீர் ஓடிக் கொண்டிருக்கும் அல்லது தேங்கி நிற்கும் நிலங்கள்

  • ஈர நிலங்கள் மேற்கண்டவை மட்டுமல்லாமல் நன்னீர் அல்லது உவர் நீர் பாயும் இடங்களையும் மற்றும் தாழ் ஓத நாட்களில் கடல் நீர் ஆறு மீட்டருக்கும் குறைவாக உள்ள இடங்களையும் குறிக்கும்.

20) கீழ்க்கண்டவற்றுள் கட்ச் வளைகுடா பகுதி எதற்கு எடுத்துக்காட்டாகும்?

A] உவர் சேற்று நிலம் B] சதுப்பு நிலம்

C] நன்னீர் சேற்று நிலம் D] நன்னீர் சதுப்பு நிலம்

விடை: A] உவர் சேற்று நிலம்

  • சேற்று நிலங்கள் என்பவை ஏரிகள், ஆறுகள் மற்றும் பெருங்கடல்களை சுற்றியுள்ள ஈரநிலங்களை குறிக்கும். இங்கு செழிப்பான மரங்கள் இல்லாமல் பெரும்பாலும் புற்களும், நாணல்களும் மட்டும் காணப்படும்.

21) கீழ்க்கண்டவற்றுள் நன்னீர் சதுப்பு நிலத்திற்கு எடுத்துக்காட்டு எது?

A] பிச்சாவரம் B] சுந்தரவனக்காடுகள்

C] பள்ளிக்கரணை D] ராம்சரோவர் காடுகள்

விடை: C] பள்ளிக்கரணை

  • சதுப்பு நிலம் என்பது மெதுவாக நகரும் ஆறுகளின் ஓரங்களில் காணப்படும் ஈரநிலமாகும். இங்கு அடர்த்தியான மரங்களும், கொடிகளும் வளர்ந்து காணப்படும்.

22) பின்வருவனவற்றுள் ஆயிரம் ஏரிகளின் நாடு என்று அழைக்கப்படுவது எது?

A] ஸ்காட்லாந்து B] தாய்லாந்து

C] நெதர்லாந்து D] பின்லாந்து

விடை: D] பின்லாந்து

23) இந்தியாவில் உள்ள மிகப் பெரிய உவர் நீர் ஏரி எது?

A] உலார் ஏரி B] சாம்பார் ஏரி

C] லோனார் ஏரி D] சிலிகா ஏரி

விடை: B] சாம்பார் ஏரி

  • சுமத்ரா தீவில் உள்ள டோபா ஏரியானது உலகின் மிகப்பெரிய மறு எழுச்சி பெற்ற எரிமலை வாயாகும்.

24) நீர் ஊடுருவும் பாறைகள் வழியாக நீரானது உள்ளே இறங்கி நீர் உட்புகாத பாறையின் மேல் பகுதியில் தேங்கி நிற்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A] நீர்க்கொள் படுகை B] நிலத்தடி நீர்மட்டம்

C] மேற்பரப்பு நீர் D] நிலத்தடி நீர்

விடை: A] நீர்க்கொள் படுகை

  • கடற்கரையோரங்களில் உள்ள நீர்க்கொள் படுகையில் காணப்படும் அதிகபட்ச நிலத்தடி நீரை அளவுக்கு அதிகமாக வெளிக்கொணர்ந்தால் கடல் நீர் அதிக பொறையிடங்களை நிரப்ப கடல் நீர் உட்புகுந்து விடுகின்ற நிகழ்வை உவர்நீர் ஊடுருவல் என்கிறோம்.

25) ஒரு நீர்க்கொள் படுகையின் பூரித நிலையை அடைந்த மேல்மட்ட அடுக்கை எவ்வாறு அழைக்கிறோம்?

A] கிணறு B] ஏரி C] குளம் D] நிலத்தடி நீர்மட்டம்

விடை: D] நிலத்தடி நீர்மட்டம்

  • நில மேற்பரப்பில் பெய்யும் மழை நீரானது பூமிக்குள் ஊடுருவி நிலத்தடி நீராக நிரப்பப்படுகிறது. நிலத்தடி நீர் மட்டம் ஆனது பருவ காலங்களுக்கு ஏற்ப மாறுபடும் தன்மை கொண்டது.

26) கீழ்க்கண்டவற்றுள் புவியின் ஆற்றல் சமன்பாட்டை கட்டுப்படுத்துவது எது?

A] பனிப்படலம் B] பனிக்கோளம் C] வளிமண்டலத்தில் உள்ள பனிப்படிகம் D] பனி ஏரி

விடை: B] பனிக்கோளம்

  • பனிக்கோளம் என்பது பனியாறுகள், பனிப்படலம், பனியுறை, பனி ஏரி, நிரந்தர பணி பகுதிகள், பருவ காலங்களில் பொழியும் பனி, வளிமண்டலத்தில் உள்ள பனிப்படிகம் போன்ற வடிவில் உறைந்து காணப்படும் நீராகும்.

27) கீழ்க்கண்ட எந்த இடங்களில் நிரந்தர பனிப் பகுதி காணப்படுகிறது?

1) கிரீன்லாந்து 2) பின்லாந்து 3) அண்டார்டிகா 4) ஆஃல்பைன்

A] 1, 2 & 3 B] 1, 3 & 4 C] 2, 3 & 4 D] 1, 2, 3 & 4

விடை: B] 1, 3 & 4

  • பனிக்கோளம் புவியின் ஆற்றல் சமன்பாட்டை கட்டுப்படுத்துவதால், புவியின் காலநிலையானது பெரிய அளவில் பனிக் கோளத்தின் தாக்கத்திற்கு உள்ளாகிறது. கிரீன்லாந்து மற்றும் அண்டார்டிகாவில் காணப்படும் நிரந்தர பனி பகுதியானது பனிப்படலம், மலைப்பனியாறு மற்றும் உயர் அட்சப்பகுதிகளில் நிரந்தர பனி படிவாகவும் உள்ளது.

28) தொடர்ச்சியாக எத்தனை ஆண்டிற்கு மேல் நீர் உறைந்து காணப்படுவதை நிரந்தர பனிப்படிவு என்கிறோம்?

A] 2 B] 3 C] 4 D] 5

விடை: A] 2

  • தொடர்ச்சியாக இரண்டு ஆண்டிற்கு மேல், நிலத்திற்கு( பாறை மற்றும் மண் ) மேலும் கீழும் நீர் உறைந்து காணப்படுவதை நிரந்தர பனிப் படிவு என்கிறோம். பெரும்பாலான நிரந்தர பனிப்படிவு உயர் அட்ச பகுதிகளில் காணப்படுகிறது. ஆனால் ஆல்பைன் நிரந்தர பனிப்படிவு தாழ் அட்ச பகுதிகளில் உள்ள உயரமான மலைகளில் காணப்படுகிறது.

29) கிளிமஞ்சாரோ மலை எந்த நாட்டில் அமைந்துள்ளது?

A] அங்கோலா B] மொசாம்பிக் C] தான்சானியா D] கென்யா

விடை: C] தான்சானியா

  • வெப்பமான புவியிடை கோட்டுக் அருகில் அமைந்துள்ள கிளிமஞ்சாரோ மலை நிரந்தர பனிப் படிவைக் கொண்டுள்ளது. இதன் உயரம் 5895 மீட்டர் ஆகும். ஆப்பிரிக்கா கண்டத்தில் அமைந்துள்ளது.

30) கீழ்கண்டவற்றுள் பருவகால பனி மற்றும் பனிபடிகப்பொழிவு காணப்படும் இடம் எது?

1) மத்திய அட்ச பகுதிகள்

2) உயர் அட்ச பகுதிகளின் தாழ்வான இடங்கள்

3) தாழ்வான அட்சங்களின் உயரமான மலைப்பகுதிகள்

4) மத்திய அட்சங்களின் உயரமான பகுதிகள்

A] 1 & 2 மட்டும் B] 2 & 3 மட்டும் C] 1 & 3 மட்டும் D] 2 & 4 மட்டும்

விடை: C] 1 & 3 மட்டும்

  • கடல் பனி என்பது உறைந்த நிலையில் உள்ள கடல் நீரை குறிக்கும். இக்கடல் பனியின் உருவாக்கம், வளர்ச்சி மற்றும் உருகுதல் ஆகிய அனைத்தும் கடலின் வரையறைக்குட்பட்டது.

31) அடர்த்தியான மிதந்துகொண்டிருக்கும் பனிப் பலகை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A] பனிப்படிகம் B] பனிப்படிவ அடுக்கு C] பனி படலம் D] பனியுறை

விடை: B] பனிப்படிவ அடுக்கு

  • பனிப் படிவ அடுக்கு பனியாறு அல்லது பனிக்கட்டிகள் கடற்கரையை நோக்கி வந்து கடலில் கலக்கும் போது உருவாகிறது.

32) உலகின் மிகப்பெரிய பனி படிவ அடுக்குகள் எங்கு காணப்படுகிறது?

A] அண்டார்டிகா B] ஆர்டிக் C] கிரீன்லாந்து D] ஐஸ்லாந்து

விடை: A] அண்டார்டிகா

  • உலகின் மிகப்பெரிய பனி படிவ அடுக்குகளான ராஸ் மற்றும் ஃபில்னர் – ரான் பனி படிவ அடுக்குகள் அண்டார்டிகாவில் காணப்படுகின்றன. பனியாறுகளிலிருந்தோ, பனிக்கட்டியிலிருந்தோ உடைந்து, பிரிந்து வந்து கடலில் மிதந்து கொண்டிருப்பது பனிப்பாறைகள் ஆகும்.

33) கீழ்கண்டவற்றுள் உலகம் முழுமைக்குமான ஆற்றல் சமன்பாட்டை நிர்ணயிப்பது எது?

A] பனிக்கோளத்தின் ஒளி திருப்புத்திறன் B] உயிர்கோளத்தின் ஒளி திருப்புத்திறன்

C] பாறைக் கோளத்தின் ஒளி திருப்புத்திறன் D] நீர் கோளத்தின் ஒளி திருப்புத்திறன்

விடை: A] பனிக்கோளத்தின் ஒளி திருப்புத்திறன்

  • பனிக்கோளம் உலக காலநிலையை சுட்டிக் காட்டுவதாக இருக்கிறது. பனிக்கோளத்தில் ஏற்படும் மாற்றங்கள் புவி மேற்பரப்பு வெப்பம், மண்ணின் ஈரப்பதம், காற்றின் வெப்பம், வெப்பக் கதிர்வீச்சு, காற்றோட்டம், மேகங்கள், மழைப்பொழிவு, கடல் நீர்மட்டம், கடல் மேற்பரப்பு வெப்பம், உவர்ப்பியம், கடல் நீரோட்டம், தாவரம், விலங்குகள் மற்றும் நுண்ணுயிரிகளைப் பாதிக்கின்றது.

34) வளி மண்டலத்தில் ஏற்படும் கார்பன் சுழற்சியில் கார்பனை விடுவிப்பது எது?

A] எரிமலை B] தாவரங்கள் C] பனிக்கோளம் D] வாகனங்கள்

விடை: C] பனிக்கோளம்

  • திட நிலையில் பனியில் உறைந்துள்ள கார்பன் பனி உருகும் போது வெளியேற்றப்படுகிறது.

35) பெருங்கடல் என்ற சொல் எந்த மொழியில் இருந்து பெறப்பட்டது?

A] லத்தீன் B] கிரேக்கம் C] ஆங்கிலம் D] அரபிக்

விடை: B] கிரேக்கம்

  • பெருங்கடல்கள் என்ற சொல் ஓசியனஸ் என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து பெறப்பட்டது. இதற்கு புவியைச் சுற்றி காணப்படும் மிகப்பெரிய ஆறு என்பது பொருள்.

36) புவியின் உள் இயக்க சக்திகளால் உண்டான கண்டங்களை சூழ்ந்து காணப்படும் தொடர்ச்சியான நீர்ப்பரப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A] கடல்கள் B] விரிகுடா C] வளைகுடா D] பெருங்கடல்கள்

விடை: D] பெருங்கடல்கள்

  • பெருங்கடல்களிலும்., கடல்களிலும் காணப்படும் நீரை கடல் நீர் என்கிறோம்.

37) புவியின் மொத்த பரப்பில் பெருங்கடலின் பரப்பு எவ்வளவு?

A] 269 மில்லியன் சதுர கிலோமீட்டர் B] 281 மில்லியன் சதுர கிலோமீட்டர்

C] 333 மில்லியன் சதுர கிலோமீட்டர் D] 361 மில்லியன் சதுர கிலோமீட்டர்

விடை: D] 361 மில்லியன் சதுர கிலோமீட்டர்

  • புவி தற்போது 5 பெருங்கடல்களை கொண்டுள்ளது. பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், ஆர்டிக் பெருங்கடல் மற்றும் தென் பெருங்கடல் ஆகியவை பெருங்கடல்கள் ஆகும்.

38) ஒரு கடலின் ஒரு பகுதி தீவுகளினால் அல்லது தீவு கூட்டங்களால் சூழப்பட்டு இருந்தால் அது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A] தீவு கடல் B] தீவருகு கடல் C] தீபகற்ப கடல் D] தீவு ஏரி

விடை: B] தீவருகு கடல்

  • தீவருகு கடல் என்பது அதன் ஒரு பகுதி தீவுகளினால் அல்லது தீவுக்கூட்டங்களால் அல்லது தீபகற்பத்தின் சூழ்ந்து அல்லது நிலப்பகுதியை நோக்கி காணப்படும் பெருங்கடலின் விரிவாக்கத்தால் சூழப்பட்டு காணப்படும் கடலாகும். பொதுவாக அவைகள் ஆழமற்றதாக இருக்கும்.

39) கீழ்கண்டவற்றுள் தீவருகு கடல் அல்லாதது எது?

1) செங்கடல் 2) ஜாவா கடல் 3) வங்காள விரிகுடா 4) அந்தமான் கடல்

A] 1 மட்டும் B] 2 மட்டும் C] 3 மட்டும் D] எதுவுமில்லை

விடை: D] எதுவுமில்லை

  • அந்தமான் கடல், அரபிக்கடல், வங்காள விரிகுடா, ஜாவா கடல், பாரசீக வளைகுடா மற்றும் செங்கடல் ஆகியவை இந்திய பெருங்கடலில் உள்ள தீவருகு கடல்களாகும்.

40) எல்லா ஓத நிலைகளுக்கான கடல் மேற்பரப்பின் சராசரி உயரம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A] சராசரி கடல் மட்டம் B] சராசரி நீர்மட்டம்

C] கடல் மட்டம் D] நீர்மட்டம்

விடை: A] சராசரி கடல் மட்டம்

  • கடல் நீர் மட்டத்தை அடிப்படையாகக் கொண்டு புவி நிலதோற்றத்தின் உயரமும், கடலடி நிலத் தோற்றத்தின் ஆழமும் கணக்கிடப்படுகிறது.

41) மூன்று பக்கம் நிலத்தாலும் ஒரு பக்கம் பெருங்கடலை நோக்கியும் இருக்கும் நீர்ப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A] தீவருகு கடல் B] தீபகற்ப கடல்

C] விரிகுடா D] வளைகுடா

விடை: C] விரிகுடா

  • விரிகுடா என்பது மூன்று பக்கமும் நிலத்தால் சூழப்பட்ட ஒரு பக்கம் ஒரு பெருங்கடலை நோக்கி பெரிய திறப்பை கொண்டிருக்கும் நீர் பகுதியைக் குறிக்கும்.

42) அனைத்து பக்கங்களிலும் நிலத்தால் சூழப்பட்ட பெரிய நீர்ப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A] நிலச் சந்தி B] தீபகற்ப கடல் C] விரிகுடா D] வளைகுடா

விடை: D] வளைகுடா

  • வளைகுடா என்பது குறுகிய திறப்பை கொண்டு அனைத்து பக்கத்திலும் நிலத்தால் சூழப்பட்ட பெரிய அளவிலான நீர் பகுதியாகும்.

43) உலகின் மிகப் பெரிய வளைகுடா எது?

A] பெர்சியன் வளைகுடா B] மெக்ஸிகோ வளைகுடா

C] ஏடன் வளைகுடா D] ஓமன் வளைகுடா

விடை: B] மெக்சிகோ வளைகுடா

  • பத்திரமான வளைகுடா, கடற்கழி, கடல் சுருக்கு, சிறு வளைகுடா ஆகியவையும் வளைகுடாவின் வகைகள் ஆகும். ஆனால் அதன் அளவு மற்றும் ஆழத்தின் அடிப்படையில் விரிகுடாவிலிருந்து வேறுபடுகிறது.

44) இரண்டு பெருங்கடல்களை இணைக்கின்ற குறுகிய நீர்வழி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A] நிலச் சந்தி B] நீர்ச்சந்தி C] விரிகுடா D] இணைப்பு சந்தி

விடை: B] நீர்ச்சந்தி

  • எடுத்துக்காட்டாக பாக் நீர்ச்சந்தி, மன்னார் வளைகுடாவையும் வங்காள விரிகுடாவையும் இணைக்கிறது.

45) சூயஸ் நிலச் சந்தி கீழ்க்கண்ட எந்த இரண்டு பகுதிகளை இணைக்கிறது?

A] தென் அமெரிக்கா மற்றும் வட அமெரிக்கா B] தென்னமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா

C] ஆப்பிரிக்கா கண்டம் மற்றும் ஆசிய கண்டம் D] ஆப்பிரிக்க கண்டம் மற்றும் ஐரோப்பா கண்டம்

விடை: C] ஆப்பிரிக்க கண்டம் மற்றும் ஆசிய கண்டம்

  • குறுகலான ஒரு நிலப்பகுதி இரண்டு மிகப் பெரிய நிலப் பகுதிகளை இணைக்குமானால் அது நிலச்சந்தி என அழைக்கப்படுகிறது.

46) கீழ்கண்டவற்றுள் சூழப்பட்ட கடலுக்கு எடுத்துக்காட்டு எது?

A] காஸ்பியன் கடல் B] மத்திய தரைக்கடல்

C] ஜாவா கடல் D] அந்தமான் கடல்

விடை: B] மத்திய தரைக்கடல்

  • சூழப்பட்ட கடல் என்பது கண்டங்களின் உட்புறம் அமைந்து, பிற பெருங்கடலுடன் நீர் சந்தியால் இணைக்கப்பட்டுள்ள கடலைக் குறிக்கும்.

47) பெருங்கடலுடன் ஒருபுறம் நிலத்தால் சூழப்பட்டு மிகப் பெரிய திறப்புடன் கூடிய கடல் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A] தீவுகள் B] தீபகற்பம் C] பகுதி சூழப்பட்ட கடல் D] சூழப்பட்ட கடல்

விடை: C] பகுதி சூழப்பட்ட கடல்

  • பகுதி சூழப்பட்ட கடல் அடுத்துள்ள பெருங்கடலில் அனைத்து அம்சங்களையும் பெற்றிருக்கும். ஒரு பகுதி மூடப்பட்டுள்ள கடலுக்கும், பெருங்கடலுக்கும் இடையே ஒரு தீவு தொடர் காணப்படும். கரீபியன் கடல் இதற்கு ஒரு சிறந்த உதாரணம் ஆகும்.

48) கீழ்க்கண்டவற்றுள் மிக அதிகமான உவர்ப்பியம் கொண்டுள்ள ஏரிகள் என அழைக்கப்படுவது எது?

A] சூழப்பட்ட கடல் B] உப்பு நிறைந்த ஏரி

C] பகுதி சூழப்பட்ட கடல் D] நிலத்தால் சூழப்பட்ட கடல்

விடை: D] நிலத்தால் சூழப்பட்ட கடல்

  • நிலத்தால் சூழப்பட்ட கடல் என்பது இயற்கையான எந்தவிதத் திறப்பும் இல்லாமல் அனைத்து பக்கங்களிலும் நிலத்தால் சூழப்பட்டு காணப்படுகிறது. இவை அதிகமான உவர்ப்பியம் கொண்டுள்ள ஏரிகள் ஆகும்.

49) ஜோர்டான் ஆறு கீழ்க்கண்ட எந்த கடலில் கலக்கிறது?

A] சாக்கடல் B] செங்கடல் C] காஸ்பியன் கடல் D] கரீபியன் கடல்

விடை: A] சாக்கடல்

  • சாக்கடலும், காஸ்பியன் கடல் உம் நிலத்தால் சூழப்பட்ட கடலுக்கு சிறந்த உதாரணங்களாகும். வோல்கா ஆறு காஸ்பியன் கடலில் கலக்கிறது.

50) U – வடிவ செங்குத்து சரிவு பள்ளத்தாக்கு கடல் நீரில் பகுதியாக மூழ்கி இருப்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A] ரியா கடற்கரை B] கோல்டன் கடற்கரை

C] ஃபியர்டு கடற்கரை D] U – வடிவ கடற்கரை

விடை: C] ஃபியர்டு கடற்கரை

  • ஃபியர்டு கடற்கரை என்பது பனியாற்றல் உருவான U வடிவ செங்குத்துச் சரிவுப் பள்ளத்தாக்கு கடல் நீரில் பகுதியாக மூழ்கியிருப்பதாகும். எடுத்துக்காட்டாக சோனே ஃபியர்டு,நார்வே ( 203 கி.மீ)

51) V – வடிவ மென்சரிவுப் பள்ளத்தாக்கு கடல் நீரில் பகுதி மூழ்கி இருப்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A] கோல்டன் கடற்கரை B] V – வடிவ கடற்கரை

C] ஃபியர்டு கடற்கரை D] ரியா கடற்கரை

விடை: D] ரியா கடற்கரை

  • ரியா கடற்கரை என்பது ஆற்றால் உருவாக்கப்பட்ட V வடிவ மென்சரிவு பள்ளத்தாக்கு கடல்நீரில் பகுதியாக மூழ்கி இருப்பதாகும். சிட்னியில் உள்ள ஜார்ஜ் நதியால் உருவாக்கப்பட்டுள்ள கடற்கரை ரியா கடற்கரைக்கு சிறந்த உதாரணமாகும்.

52) பெருங்கடல்களின் வாழ்க்கை சுழற்சி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A] வில்லியம் சுழற்சி B] வில்சன் சுழற்சி

C] நெல்சன் சுழற்சி D] பெருங்கடல் சுழற்சி

விடை: B] வில்சன் சுழற்சி

53) சூயஸ் கால்வாய் முறையாக திறக்கப்பட்ட ஆண்டு எது?

A] 1832 B] 1863 C] 1869 D] 1876

விடை: C] 1869

  • எகிப்தில் உள்ள சூயஸ் கால்வாய் செயற்கையான கடல்நீர் மட்ட நீர் வழிப்பாதை ஆகும். சூயஸ் கால்வாய் மத்திய தரைக்கடலையும் செங்கடலையும் இணைக்கிறது. இது முறைப்படி நவம்பர் 17ஆம் தேதி 1869 அன்று திறக்கப்பட்டது.

54) கீழ்கண்டவற்றுள் பெருங்கடல்களின் பரவல் அளவுகளில் சரியானதை தேர்ந்தெடு.

1) பசிபிக் பெருங்கடல் – 46%

2) அட்லாண்டிக் பெருங்கடல் – 24%

3) இந்தியப் பெருங்கடல் – 20%

4) ஆர்டிக் பெருங்கடல் – 6%

5) தென் பெருங்கடல் – 4%

A] 1, 2, 3 & 4 B] 2, 3 & 4 C] 1, 2 & 3 D] 2, 3 & 5

விடை: C] 1, 2 & 3

  • ஆர்டிக் பெருங்கடல் உலகப் பெருங்கடல் பரப்பளவில் நான்கு சதவீதத்தையும், தென் பெருங்கடல் ஆறு சதவீதத்தையும் கொண்டுள்ளது.

55) பசிபிக் பெருங்கடல் என்பதன் பொருள் என்ன?

A] பெரிய நீர்ப்பகுதி B] பெரிய கடல்

C] அமைதியான பெருங்கடல் D] பெரிய பெருங்கடல்

விடை: C] அமைதியான பெருங்கடல்

  • உலக பெருங்கடல்களின் மிகப் பெரியது பசுபிக் பெருங்கடல் ஆகும். உலக கண்டங்கள் அனைத்தையும் ஒன்றிணைத்து உருவாகும் பரப்பை காட்டிலும் பசிபிக் பெருங்கடல் அளவில் பெரியதாகும்.

56) மெகல்லன் எந்த கடலுடன் பசிபிக் பெருங்கடலை ஒப்பிட்டு இப்பெயரை சூட்டினார்?

A] இந்திய பெருங்கடல் B] அட்லாண்டிக் பெருங்கடல்

C] ஆர்டிக் பெருங்கடல் D] தென் பெருங்கடல்

விடை: B] அட்லாண்டிக் பெருங்கடல்

  • போர்ச்சுக்கல் நாட்டு கடல் வழி ஆய்வு பணியாளரான பெர்டினான்ட் மெகல்லன் 1821 ஆம் ஆண்டு பசிபிக் பெருங்கடல் என பெயரிட்டார். பசிபிக் பெருங்கடலின் ஆழம் 4280 மீட்டர் ஆகும்.

57) பாஞ்சியா கண்டம் உடைந்து உருவான பெருங்கடல் எது?

A] பசிபிக் பெருங்கடல் B] ஆர்டிக் பெருங்கடல்

C] தென் பெருங்கடல் D] அட்லாண்டிக் பெருங்கடல்

விடை: D] அட்லாண்டிக் பெருங்கடல்

  • உலகின் இரண்டாவது பெரிய பெருங்கடலான அட்லாண்டிக் பெருங்கடலில் கிரேக்கப் புராணங்களில் வரும் அட்லஸ் என்பவரின் பெயரால் அழைக்கப்படுகிறது.

58) உலகின் மூன்றாவது பெரிய பெருங்கடல் எது?

A] இந்தியப் பெருங்கடல் B] தென் பெருங்கடல்

C] அட்லாண்டிக் பெருங்கடல் D] ஆர்டிக் பெருங்கடல்

விடை: A] இந்திய பெருங்கடல்

  • இந்திய நாட்டை அடுத்து உள்ளதால் இப்பெயர் பெற்றது. இதன் அமைதியான திறந்தவெளியில் நீர் அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடலில் வாணிபம் நடைபெறுவதற்கு முன்பே இப்பகுதியில் வாணிபத்தை ஊக்கப்படுத்தி இருந்தது.

59) உலகின் பெருங்கடல்களில் சமீபத்தில் தோன்றியது எது?

A] அட்லாண்டிக் பெருங்கடல் B] ஆர்டிக் பெருங்கடல்

C] தென் பெருங்கடல் D] இந்திய பெருங்கடல்

விடை: C] தென் பெருங்கடல்

  • தென் பெருங்கடல் உலகின் நான்காவது பெரிய கடல் ஆகும். 30 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் அண்டார்டிகா கண்டத்தில் எனது தென் அமெரிக்கா கண்டம் விடுபட்டு நகர்ந்ததால் உருவானது. பிறகு டேரேக் இடைவெளியும் தோன்றியது.

60) கீழ்க்கண்டவற்றுள் சர்வதேச நீர்ப்பரப்பு சார் அமைப்பு பற்றி சரியானதை தேர்ந்தெடு.

1) சர்வதேச நீர்ப்பரப்பு சார் அமைப்பு என்பது உலக நாடுகளுக்கு இடையேயான அரசாங்க அமைப்பாகும்.

2) இது உலக கடல்கள், பெருங்கடல் மற்றும் அனைத்து நீர்வழிப்பாதைகளையும் அளவை செய்து வரை படங்கள் வரைந்து தருகின்றது.

61) கீழ்க்கண்டவற்றுள் உவர்ப்பியம் குறைவாக காணப்படும் பெருங்கடல் எது?

விடை: B] ஆர்டிக் பெருங்கடல்

  • ஆர்டிக் பெருங்கடல் மற்ற நான்கு பெருங்கடல்களைக் காட்டிலும் ஆழமற்ற மிகவும் சிறிய கடல் ஆகும். இது முழுவதுமாக யூரேசியா மற்றும் வட அமெரிக்காவால் சூழப்பட்டுள்ளது.

62) ஆர்டிக் பெருங்கடலை பசிபிக் பெருங்கடலோடு இணைக்கும் நீர்ச்சந்தி எது?

A] பாக் நீர்ச்சந்தி B] மலாக்கா நீர்ச்சந்தி

C] கிப்ரால்ட்டர் நீர்ச்சந்தி D] பேரிங் நீர்ச்சந்தி

விடை: D] பேரிங் நீர்ச்சந்தி

  • கிரீன்லாந்து கடல் மற்றும் லாப்ரடார் கடல் இப்பெருங்கடலை அட்லாண்டிக் பெருங்கடலோடு இணைக்கிறது.

63) ஆர்டிக் பெருங்கடலில் ஆழமான பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A] லிட்கீ B] சேலஞ்சர் C] சுண்டா D] ஹாரிஸோன்

விடை: A] லிட்கீ

  • லிட்கீ ஐரோப்பிய ஆழ்கடல் கொப்பரையில் காணப்படுகிறது. இதன் ஆழம் 5,450 மீட்டர் ஆகும்.

64) ஒரு நாட்டின் பிராந்திய கடல் என்பது தாழ் ஓத எல்லைக் கோட்டில் இருந்து எவ்வளவு தூரத்தில் உள்ளது?

A] 10 நாட்டிக்கல் மைல் B] 13 நாட்டிக்கல் மைல்

C] 14 நாட்டிக்கல் மைல் D] 17 நாட்டிக்கல் மைல்

விடை: B] 13 நாட்டிக்கல் மைல்

  • பிராந்திய கடல்நீர் பகுதியில்தான் ஒரு நாட்டுக்கு முழு இறையாண்மை உள்ளது. தாழ் ஓதத்தின் அடிப்படை எல்லைக்கோடு தான் கடல்சார் மண்டலங்களை வகைப்படுத்துவதற்கு உதவும் வரையறையாகும்.

65) அடிப்படை எல்லைக்கோட்டில் இருந்து 24 கடல் மைல் தொலைவில் பிரதேச கடல் பகுதிக்கு வெளியிலும் காணப்படும் நீர் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A] நாட்டிக்கல் மைல் B] தனித்து பொருளாதார மண்டலம்

C] பிராந்திய கடல் பகுதி D] தொடர்ச்சியான கடல்

விடை: D] தொடர்ச்சியான கடல்

66) ஒரு கடல்மைல் என்பது ____ மீட்டராகும்.

A] 1546 B] 1456 C] 1852 D] 1582

விடை: C] 1852 மீட்டர்

  • ஒரு கடல்மைல் என்பது பூமியின் சுற்றளவை வைத்து கணக்கிடப்படுகிறது. இது ஒரு நிமிட அட்ச ரேகைக்கு சமமானது. அது அட்சரேகையில் ஒரு பாகையில் அறுபதில் ஒரு பங்கிற்கு சமமாகும். ஒரு கடல்மைல் என்பது கடலில் தொலைவை அளக்க பயன்படும் அலகாகும்.

67) தனித்த பொருளாதார மண்டலம் என்பது அடிப்படை எல்லைக் கோட்டில் இருந்து எவ்வளவு தூரத்தில் அமைந்துள்ளது?

A] 100 கடல் மைல்கள் B] 150 கடல் மைல்கள்

C] 200 கடல் மைல்கள் D] 250 கடல் மைல்கள்

விடை: C] 200 கடல் மைல்கள்

  • ஒரு கடற்கரையோர நாட்டுக்கு இந்த சிறப்பு பொருளாதார மண்டலத்தில் முழு அதிகாரம் உண்டு. இங்கு மீன் பிடித்தல், சுரங்கங்கள் பராமரிப்பு, எண்ணெய்க் கிணறு தோண்டுதல் போன்ற பொருளாதார வளங்களை பயன்படுத்தி கொள்ளவும் உற்பத்தி செய்யவும் அதிகாரம் கொண்டுள்ளது.

68) தனித்த பொருளாதார மண்டலத்தை தாண்டி உள்ள கடல் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A] உள் கடல் B] வெளி கடல்

விடை: B] வெளி கடல்

  • இப்பகுதி பன்னாட்டு கடல் பகுதி எனவும் அழைக்கப்படுகிறது. இங்கு எந்த ஒரு நாட்டிற்கும் இறையாண்மையும் பிற அதிகாரங்களும் இல்லை.

69) இந்திய தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மீன் அதிகம் கிடைக்க சாத்தியமான மண்டலங்களை பற்றி தெரிவிக்கின்றது?

A] 2 B] 3 C] 4 D] 5

விடை: B] 3

  • இந்திய தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையமானது தன் கடல்சார் செயற்கைகோளின் தொலை நுண்ணுணர்வை பயன்படுத்தி கடலின் மேல் மட்ட வெப்பத்தை உணர்ந்து எந்த இடத்தில் மீன்வளம் திரண்டு காணப்படுகிறது என்ற தகவல் சேவையை தருகிறது.

70) கீழ்க்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடு.

1) புவியின் மேற்பரப்பிலுள்ள நிலத்தோற்றங்கள் போலவே கடலடி பரப்பிலும் பலவகையான நிலத்தோற்றங்கள் காணப்படுகின்றன.

2) கடலடி நிலத்தோற்றங்கள் நிலத்தோற்ற விளக்கப்படம் அல்லது உயர விளக்கப்படம் உதவியுடன் விளக்கிக் காட்டப்படுகின்றன.

  • கடலடி பரப்பில் உயரமான மலைகளும் ஆழமான பள்ளங்களும் சமவெளிகளும் கொப்பரைகளும் மற்றும் எரிமலைகளும் காணப்படுகின்றன. நிலத்தோற்றம் விளக்கப்படம் என்பது கடல் மட்டத்திற்கு மேல் அல்லது கீழ் காணப்படும் நிலத்தோற்ற அமைப்பை வரைந்து காட்டும் கோட்டுப்படமாகும்.

71) கண்டத்திட்டு கடலின் தரை பகுதியில் எவ்வளவு சதவீதத்தைக் கொண்டுள்ளது?

A] 5% B] 7% C] 9% D] 12%

விடை: B] 7%

  • கண்டத்திட்டு மென்சரிவுடன் சராசரியாக 200 மீட்டர் ஆழம் வரை காணப்படுகிறது.

72) கடற்கரையில் இருந்து கடலை நோக்கி காணப்படும் நீரில் மூழ்கியுள்ள கண்டங்களின் விழிம்பு பகுதிகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A] கண்டச் சரிவு B] கண்ட உயர்வு

C] எரிமலைத் தீவு D] கண்டத் திட்டு

விடை: D] கண்டத்திட்டு

  • கண்டத்திட்டு பகுதியின் அகலம் இடத்திற்கு இடம் மாறுபடுகிறது. ஏனெனில் கடற்கரையோரப் பாறைகளின் தன்மைக்கு ஏற்ப கண்டத்தின் அகலம் வேறுபடுகிறது.

73) பெட்ரோலியம், இயற்கை எரிவாயு போன்ற படங்களுக்கு பெயர் பெற்ற நிலத்தோற்றம் எது?

A] கண்ட உயர்வு B] கண்டத் திட்டு

C] கண்டச் சரிவு D] எரிமலைத் தீவு

விடை: B] கண்டத்திட்டு

  • கண்டத் திட்டுகள் பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, கனிமவள படிவுகள் மற்றும் பவளப்பாறைகள் போன்ற வளங்களுக்குப் பெயர் பெற்றவையாகும்.

74) கீழ்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடு.

1) கண்டத்திட்டு மாறும் புவியின் மேற்பரப்பாக இருந்தால் குறுகியதாகவும் இல்லையென்றால் அகலமானதாகவும் இருக்கும்.

2) கண்டச் சரிவு பகுதிகளில் தான் கிராண்டு போன்ற உலகப் புகழ்பெற்ற மீன்பிடி தளங்கள் அமைந்துள்ளன.

விடை: A] 1 மட்டும்

  • கிராண்ட் திட்டு போன்ற உலகப் புகழ்பெற்ற மீன்பிடி தளங்கள் கண்டத்திட்டு பகுதியில் அமைந்துள்ளது.

75) கீழ்கண்டவற்றுள் கண்டத் திட்டுகள் உருவாக காரணமாக இருந்தவை எவை?

1) கடல் அரிப்பு 2) கடல் அசைவுகள் 3) ஆறுகளின் படிவுகள் 4) கடந்த காலங்களில் கடல் மட்டத்தில் ஏற்பட்ட மாற்றங்கள்

A] 1, 2 & 3 B] 2, 3 & 4 C] 1, 3 & 4 D] 1, 2, 3 & 4

விடை: D] 1, 2, 3 & 4

  • மேற்கூறிய ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட காரணிகள் இணைந்து கண்டத்திட்டுகளை உருவாக்குகின்றன.

76) உலகின் அகலமான கண்டத்திட்டு பகுதி எங்கு அமைந்துள்ளது?

A] அமெரிக்கா B] ரஷ்யா C] இந்தியா D] சீனா

விடை: B] ரஷ்யா

  • உலகின் அகலமான கண்டத்திட்டு பகுதி ரஷ்யாவின் சைபீரியா கடற்கரையை ஒட்டி காணப்படுகிறது. இதன் அகலம் 1210 கிலோ மீட்டர் ஆகும்.

77) கீழ்கண்டவற்றை தவறானதை தேர்ந்தெடு.

1) இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் காணப்படும் கண்டத்திட்டு யமுனா மற்றும் பிரம்மபுத்திரா ஆறுகளால் உருவாக்கப்பட்ட டெல்டாவால் ஏற்பட்டவையாகும்.

2) இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் காணப்படும் கண்டத்திட்டுகள் பிளவுகளாலும் அதன் விளைவால் நிலம் நீரில் மூழ்கியதாலும் ஏற்பட்டவைகளாகும்.

  • இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் காணப்படும் கண்டத் திட்டு கங்கை, கோதாவரி, கிருஷ்ணா மற்றும் காவிரி ஆறு கல்லால் உருவாக்கப்பட்ட டெல்டாவால் ஏற்பட்டவையாகும்.

78) கண்டத்திட்டு பகுதியிலிருந்து ஆழ்கடல் நோக்கி செல்லும் கடல் பகுதியை எவ்வாறு அழைக்கிறோம்?

A] ஆழ்கடல் சரிவு B] கண்டத்திட்டு சரிவு C] கண்டச் சரிவு D] கண்ட உயர்வு

விடை: C] கண்டச் சரிவு

  • கண்டத்திட்டின் சரிவுக் கோணம் 50 லிருந்து 600 வரை காணப்படுகிறது. பொதுவாக கண்ட சரிவுகள் நிலப்பகுதி அரித்தல், கண்ட பலகைகள் நகர்தல் மற்றும் பூமியின் சமமாக்கும் செயல்களினால் உருவாகின்றன என நம்பப்படுகிறது.

79) மொத்த தரைப்பரப்பில் கண்டச் சரிவு பரப்பு எவ்வளவு?

A] 6% B] 7% C] 8% D] 9%

விடை: D] 9%

  • கண்டச் சரிவு பகுதியில் நிலச்சரிவு, கலங்கலான நீரோட்டங்கள், படிவுகளின் குவியல்கள், அகழிகள், ஆறுகளாலும் நீரோட்டங்களாலும் உருவாகிய மடுக்கள் ஆகியவை ஏற்படுகின்றன.

80) கண்டச் சரிவுக்கும் கடலடி பரப்புக்கும் இடைப்பட்ட பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A] மத்திய கடலடி மலைத்தொடர்கள் B] கடலடி சமவெளி

C] கண்ட உயர்ச்சி D] கண்டத்திட்டு

விடை: C] கண்ட உயர்ச்சி

  • கண்ட உயர்ச்சி கண்டத்தின் எல்லையை கடலடி சமவெளியில் இருந்து பிரிக்கும் இறுதிப் பகுதியாகும்.

81) கீழ்கண்டவற்றுள் நிலத்தின் மீது ஆறுகளால் உருவாகும் வண்டல் விசிறிகளை ஒத்திருக்கும் படிவுகளை கொண்டுள்ள பகுதி எது?

A] கண்டத்திட்டு B] கண்டச் சரிவு

C] கடலடி சமவெளி D] கண்ட உயர்ச்சி

விடை: D] கண்ட உயர்ச்சி

  • கண்ட உயர்ச்சி மொத்த கடலடி தரைப்பரப்பில் 5% கொண்டுள்ளது.

82) கடலடி நிலப்பரப்பில் மிகவும் பரந்து காணப்படும் நிலத்தோற்றம் எது?

A] கடலடி சமவெளி B] மத்திய கடலடி மலைத்தொடர்கள்

C] அகழி D] கண்டத்திட்டு

விடை: A] கடலடி சமவெளி

  • இது மொத்த கடலடி பரப்பில் 50 சதவீதத்திற்கு மேல் காணப்படுகிறது. இந்த இடத்தில் மிகவும் மென்மையான படிவுகள் படிந்து காணப்படுகின்றன. இப்படிவுகள் களிமண் துகள்களாலும், கடல் நுண்ணுயிரிகளாலும் ஆன கலவையாகும்.

83) கடலடி நிலத்தோற்றங்களைப் பற்றி அறிந்துகொள்ள எப்பகுதியிலுள்ள படிவுகள் பயன்படுகின்றன?

A] கண்டத்திட்டு B] கடலடி சமவெளி

C] கண்டச் சரிவு D] அகழி

விடை: B] கடலடி சமவெளி

  • கடந்த காலத்தின் புவி அமைப்பியல் நிகழ்வுகளை அறிந்துகொள்ள படிவு பாறைகளின் ஆய்வுகள் எவ்வாறு பயன்படுகிறதோ அதுபோல கடலடி நிலத்தோற்றங்களைப் பற்றி அறிந்துகொள்ள கடலடி சமவெளியில் உள்ள படிவுகள் பயன்படுகின்றன.

84) கீழ்க்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடு.

1) மத்திய கடலடி மலைத் தொடர்கள் என்பது கடலுக்கு அடியில் காணப்படும் மலைகளைக் குறிக்கும்.

2) உலகின் மிக நீளமான மலைத் தொடர் 56,000 கிலோ மீட்டர் நீளமும், 800 முதல் 1500 கிலோ மீட்டர் அகலமும் கொண்டது.

A] 1 மட்டும் B] 2 மட்டும்

C] 1 & 2 D] எதுவும் இல்லை

விடை: C] 1 & 2

  • மலைகள் தொடர்ச்சியாக இணைந்து ஒரு உலகளாவிய கடலடி மலைத் தொடராக காணப்படுகின்றன. இவை புவிக்குள் ஏற்படும் கண்ட நகர்வு சக்திகளால் உருவாகின்றன. விலகும் புவித்தட்டு எல்லையில் விரிசல் வழியாக மாக்மா வெளியேறி புதிய கடல் மேலோட்டை உருவாக்கும் இடத்தில் மத்திய கடலடி மலைத் தொடர்கள் உருவாகின்றன.

85) அகழி கடலடி சமவெளியில் இருந்து எவ்வளவு ஆழம் கொண்டுள்ளது?

A] 2 – 3 கி.மீ B] 3 – 4 கி.மீ C] 2 – 4 கி.மீ D] 3 – 5 கி.மீ

விடை: B] 3 – 4 கி.மீ

  • அகழி என்பது கடலடி சமவெளியின் அடிப்பகுதிகளில் ஏற்படும் புவித்தட்டு நகர்வு சக்தியால் உருவாகும் மிக நீளமான குறுகிய செங்குத்து சரிவுடைய ஆழமான பகுதி ஆகும்.

86) கீழ்க்கண்டவற்றுள் மிக ஆழமான அகழி எது?

A] சுண்டா அகழி B] குரில் அகழி

C] டோங்கா அகழி D] சேலஞ்சர் பள்ளம்

விடை: D] சேலஞ்சர் பள்ளம்

  • சேலஞ்சர் பள்ளம் என்பது மரியானா அகழியில் உள்ள உலகின் மிக ஆழமான பள்ளம் ஆகும். இது வட பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ளது. இதன் ஆழம் 10,994 மீட்டர் ஆகும்.

87) கீழ்க்கண்டவற்றுள் கிழக்கு இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள அகழி எது?

A] மரியானா அகழி B] சுண்டா அகழி

C] டிசார் ரோமான்ச் அகழி D] குரில் அகழி

விடை: B] சுண்டா அகழி

  • சுண்டா அகழி 7,450 மீட்டர் ஆழம் கொண்டது.

88) உலகின் இரண்டாவது ஆழமான அகழி எங்கு அமைந்துள்ளது?

A] தென் பசிபிக் பெருங்கடல் B] வட பசிபிக் பெருங்கடல்

C] கிழக்கு இந்திய பெருங்கடல் D] தென் அட்லாண்டிக் பெருங்கடல்

விடை: A] தென் பசிபிக் பெருங்கடல்

  • டோங்கா அகழியே உலகின் இரண்டாவது ஆழமான அகழி ஆகும். இது ஆல்ரிக் அகழி எனவும் அழைக்கப்படுகிறது. இது 10,882 மீட்டர் ஆழம் கொண்டது.

89) கீழ்க்கண்டவற்றுள் தென் அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள அகழி எது?

A] குரில் அகழி B] டோங்கா அகழி

C] டிசார் ரோமான்ச் அகழி D] சேலஞ்சர் பள்ளம்

விடை: C] டிசார் ரோமான்ச் அகழி

  • டிசார் ரோமான்ச் அகழி 7,761 மீட்டர் ஆழம் கொண்டது. குரில் அகழி வட பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ளது. இதன் ஆழம் 10,554 மீட்டராகும்.

90) உலகில் உள்ள அகழிகளின் எண்ணிக்கை யாது?

A] 15 B] 18 C] 23 D] 26

விடை: D] 26

  • குவியும் எல்லைப் பகுதியில் ஒரு புவி தட்டின் கீழ் மற்றொரு புவித்தட்டு அமிழ்வதால் அகழி உருவாகிறது.

91) கீழ்கண்டவற்றுள் தவறானதை தேர்ந்தெடு.

1) அட்லாண்டிக் பெருங்கடலில் 4 அகழிகள் காணப்படுகிறது.

2) இந்திய பெருங்கடலில் 2 அகழிகள் காணப்படுகிறது

3) பசிபிக் பெருங்கடலில் 20 அகழிகள் காணப்படுகிறது.

A] 1 & 2 மட்டும் B] 2 & 3 மட்டும்

C] 1 & 3 மட்டும் D] 1, 2 & 3

விடை: D] 1, 2 & 3

  • உலகில் உள்ள 26 அகழிகளில் அட்லாண்டிக் பெருங்கடலில் மூன்றும் இந்திய பெருங்கடலில் ஒன்றும் பசிபிக் பெருங்கடலில் 22 அகழிகளும் காணப்படுகின்றன.

92) அனைத்து பக்கங்களிலும் நீரினால் சூழப்பட்ட கடலில் காணப்படும் நிலப்பகுதிகளை எவ்வாறு அழைக்கிறோம்?

A] தீவுகள் B] கடற் குன்றுகள்

C] கடலடி சமவெளி D] மத்திய கடலடி மலைத் தொடர்கள்

விடை: A] தீவுகள்

  • தீவுகள் கண்டத்திட்டு பகுதிகளிலோ, கடல் அடியிலிருந்தோ தோன்றியதாக இருக்கலாம். பெரும்பாலான தீவுகள் எரிமலைச் செயலினால் உருவானவை.

93) கீழ்க்கண்டவற்றுள் தவறானதை தேர்ந்தெடு.

1) தீவுக்கூட்டங்கள் பெருங்கடல் தட்டு அழுந்தியதால் உருவானவையாகும்.

2) கடல்வாழ் நுண்ணுயிரிகள் மற்றும் பவளப்பாறைகள் அயனமண்டல வெப்ப நீரில் தோன்றி உருவாக்கும் தீவுகள் பவளத்தீவுகள் எனப்படும்.

விடை: D] எதுவும் இல்லை

  • ஜப்பான் தீவுக்கூட்டம் பெருங்கடல் தட்டு அழுந்தியதால் உருவான தீவு கூட்டத்திற்கு எடுத்துக்காட்டாகும்.

94) இந்தியாவின் லட்சத்தீவுகள் கீழ்கண்ட எதன் காரணமாக உருவானது?

A] டெல்டாக்கள் B] எரிமலைகள்

C] பவளப்பாறைகள் D] தீவுக்கூட்டங்கள்

விடை: C] பவளப்பாறைகள்

  • அந்தமான் நிக்கோபார் தீவுகளின் சில பகுதிகள் எரிமலைகளால் உருவானது.

95) தட்டையான உச்சி பகுதிகளை கொண்டு கடலுக்கடியில் காணப்படும் எரிமலைக்குன்றுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A] கடற் குன்றுகள் B] ஆழ்கடல் மட்டக்குன்றுகள்

C] ஆழ்கடல் குன்றுகள் D] கடல் எரிமலைகள்

விடை: B] ஆழ்கடல் மட்டக்குன்றுகள்

  • ஆழ் கடல் மட்டக்குன்றுகள் புவித் தட்டுகள் மெதுவாக நகர்வதால் உண்டாகும் எரிமலை சங்கிலித் தொடரின் ஒரு பகுதியாகும்.

96) கடல் நீருக்கு அடியில் காணப்படும் கூம்பு வடிவ எரிமலைகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

C] கடல் எரிமலைகள் D] ஆழ்கடல் குன்றுகள்

விடை: A] கடற் குன்றுகள்

  • கடற் குன்றுகள் தனது சுற்றுப்புற நிலப்பரப்பிலிருந்து ஆயிரம் மீட்டர் அல்லது அதற்கு மேல் தனியாக உயர்ந்து நிற்கும் மலை ஆகும்.

97) மொத்த கடலடி பரப்பில் கடற் குன்றுகளின் பரப்பு எவ்வளவு?

A] 2.08% B] 3.27% C] 4.39% D] 5.74%

விடை: C] 4.39%

  • கடற் குன்றுகளும், கடல்மட்ட குன்றுகளும், அதிக அளவில் வட பசிபிக் பெருங்கடலில் காணப்படுகின்றன.

98) கீழ்க்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடு.

1) பசிபிக் பெருங்கடலில் கிழக்கு கடற்கரையில் அகழிகள் அமைந்துள்ளதால் இங்கு உள்ள கண்டத் திட்டுகள் மிகவும் குறுகியதாக காணப்படுகின்றன.

2) ஆஸ்திரேலியா மற்றும் கிழக்கு இந்திய தீவுகளை சுற்றியுள்ள கடற்கரை பகுதிகளில் காணப்படும் கண்டத் திட்டுகள் 100 கிலோ மீட்டர் முதல் 1,700 கிலோ மீட்டர் அகலம் வரை வேறுபட்டு காணப்படுகின்றன.

  • ஆஸ்திரேலியா மற்றும் கிழக்கு இந்திய தீவுகளை சுற்றியுள்ள கடற்கரை பகுதிகளில் காணப்படும் கண்டத் திட்டுகள் 160 கிலோ மீட்டர் முதல் 1600 கிலோ மீட்டர் அகலம் வரை வேறுபட்டு காணப்படுகின்றன. பசிபிக் பெருங்கடலின் மேற்கு பகுதியில் அகலமான கண்டத் திட்டுகள் காணப்படுகின்றன.

99) கீழ்கண்டவற்றுள் பசிபிக் பெருங்கடலில் காணப்படாத ஆழ்கடல் மலைத்தொடர் எது?

A] ஆல்பட்ராஸ் பீடபூமி B] கோக்கோஸ் மலைத்தொடர்

C] டாஸ்மேனியா கொப்பரை D] அலுசியன் மலைத்தொடர்

விடை: C] டாஸ்மேனியா கொப்பரை

  • பசிபிக் பெருங்கடலில் ஆழ்கடல் மலைத்தொடர்கள் அதிகமாக இல்லாததால் ஆழ்கடல் சமவெளிகள் மிகவும் அகலமாக காணப்படுகின்றன. நியூசிலாந்திற்கு அருகில் உள்ள டாஸ்மேனியா கொப்பரை மற்றும் கிழக்கு பசிபிக் கொப்பரை ஆகியன பசிபிக் பெருங்கடலில் காணப்படும் முக்கியமான கொப்பரைகள் ஆகும்.

100) பசிபிக் பெருங்கடலில் காணப்படும் தீவுகளின் எண்ணிக்கை யாது?

A] 9,000 B] 12,000 C] 18,000 D] 25,000

விடை: D] 25,000

  • வடக்கு மற்றும் தெற்கு பசிபிக் பெருங்குரலில் அதிக எண்ணிக்கையிலான தீவுக்கூட்டங்கள் காணப்படுகின்றன.

101) ஹவாய் தீவுகள் கீழ்க்கண்ட எந்த செயலினால் உருவாக்கப்பட்டது?

A] கடல் கோள் B] எரிமலை வெடிப்பு

C] நிலநடுக்கம் D] பாறை வெடிப்பு

விடை: B] எரிமலை வெடிப்பு

102) கீழ்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடு.

1) வட அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள நியூபவுண்ட்லாந்து டாகர் திட்டு என்று அழைக்கப்படுகிறது.

2) வட அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள பிரிட்டிஷ் தீவுகள் டாகர் திட்டு என்றழைக்கப்படுகிறது.

விடை: B] 2 மட்டும்

  • வட அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள நியூபவுண்ட்லாந்து கிராண்ட் திட்டு என்று அழைக்கப்படுகிறது. தென் அட்லாண்டிக் பகுதியில் பாகியா பிளாங்காவுக்கும் அண்டார்டிகாவுக்கும் இடையில் மிக விரிவான கண்டத்திட்டு காணப்படுகிறது.

103) மத்திய அட்லாண்டிக் மலைத்தொடர் கீழ்கண்ட எந்த வடிவில் அமைந்துள்ளது?

A] S B] U C] V D] Z

விடை: A] S

  • மிகவும் ஆச்சரியமான கடலடி நிலதோற்றமாக 16,000 கிலோ மீட்டர் நீளத்தில் S வடிவில் மத்திய அட்லாண்டிக் மலைத்தொடர் அமைந்துள்ளது. இது வடக்கில் ஐஸ்லாந்தில் இருந்து தெற்கில் பவௌட் தீவு வரை செல்கிறது.

104) யுரேஷியன் புவித்தட்டையும் வடஅமெரிக்க புவித்தட்டையும் பிரிக்கும் மலைத்தொடர் எது?

A] கோக்கோஸ் மலைத்தொடர் B] அலுசியன் மலைத்தொடர்

C] மத்திய அட்லாண்டிக் மலைத்தொடர் D] தென் அட்லாண்டிக் மலைத்தொடர்

விடை: C] மத்திய அட்லாண்டிக் மலைத்தொடர்

  • அதுபோலவே ஆப்பிரிக்க புவி தட்டையும் தென்னமரிக்க புவி தடையும் தென் அட்லாண்டிக் பகுதியில் பிரிக்கின்றது. ஐஸ்லாந்து மற்றும் பாரோ போன்ற சில சிகரங்கள் மத்திய அட்லாண்டிக் மலைத்தொடரில் காணப்படுகின்றன.

105) அட்லாண்டிக் பெருங்கடலில் காணப்படும் பள்ளங்களில் மிகவும் ஆழமானது எது?

A] ரோமான்ச் பள்ளம் B] தெற்கு சாண்ட்விச் அகழி

C] பியூர்ட்டோரிக்கோ பள்ளம் D] டோங்கா அகழி

விடை: C] பியூர்ட்டோரிக்கோ பள்ளம்

  • மத்திய அட்லாண்டிக் மலைத்தொடர் அட்லாண்டிக் பெருங்கடலை கிழக்கு, மேற்கு என இரு பெரும் கொப்பரைகளாகப் பிரிக்கிறது. இதனைத் தவிர ஸ்பெயின் கொப்பரை, வடக்கு மற்றும் தெற்கு கானரி கொப்பரை, கினியா கொப்பரை, பிரேசில் கொப்பரை மற்றும் லாப்ரடார் கொப்பரை ஆகியன பிற கொப்பரைகள் ஆகும்.

106) கீழ்கண்டவற்றுள் தென் அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் காணப்படாத தீவு எது?

A] சாண்ட்விச் தீவுகள் B] பாலி தீவுகள்

C] ஜார்ஜியா தீவுகள் D] பாக்லாந்து தீவுகள்

விடை: B] பாலி தீவுகள்

  • வட அட்லாண்டிக் கண்டத்திட்டு பகுதியில் அமைந்துள்ள பிரிட்டிஷ் தீவுகள் மற்றும் நியூபவுண்ட்லாந்து ஆகியன புகழ்பெற்ற தீவுகள் ஆகும். வட அமெரிக்காவிற்கு அருகில் மேற்கிந்திய தீவு கூட்டம் காணப்படுகிறது.

107) இந்திய பெருங்கடலில் கண்டத்தின் வேறுபட்ட அகலம் எவ்வளவு?

A] 152 கி.மீ – 230 கி.மீ B] 165 கி.மீ – 243 கி.மீ

C] 172 கி.மீ – 266 கி.மீ D] 192 கி.மீ – 280 கி.மீ

விடை: D] 192 கி.மீ – 280 கி.மீ

  • இந்திய பெருங்கடலில் கண்டத்திட்டானது வேறுபட்ட அகலத்தில் காணப்படுகிறது. அரபிக்கடல், வங்காள விரிகுடா மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளை சுற்றியுள்ள கடற்கரை பகுதிகளில் மேற்கண்ட வேறுபட்ட அகலம் காணப்படுகிறது.

108) இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள மத்திய மலைத் தொடர் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A] வங்காள இந்திய மலைத்தொடர் B] இந்திய பெருங்கடல் மலைத்தொடர்

C] அராபிக் இந்திய மலைத்தொடர் D] மேற்கு ஆஸ்திரேலியா மலைத்தொடர்

விடை: C] அராபிக் இந்திய மலைத்தொடர்

  • பிற மலைத்தொடர்கள் ஆன கிழக்கிந்திய மலைத்தொடர்கள், மேற்கு ஆஸ்திரேலிய மலைத்தொடர், தெற்கு மடகாஸ்கர் மலைத்தொடர் ஆகியவைகளும் இந்திய பெருங்கடலில் காணப்படுகின்றன.

109) கீழ்க்கண்டவற்றுள் இந்திய பெருங்கடலில் காணப்படாத கொப்பரை எது?

A] தென்னிந்திய கொப்பரை B] வடக்கு மற்றும் தெற்கு கானரி கொப்பரை

C] அரேபிய கொப்பரை D] வட ஆஸ்திரேலிய கொப்பரை

விடை: B] வடக்கு மற்றும் தெற்கு கானரி கொப்பரை

  • கோமரோ கொப்பரை, வட ஆஸ்திரேலியா கொப்பரை, தென்னிந்திய கொப்பரை, அரேபிய கொப்பரை ஆகியவை இந்திய பெருங்கடலில் காணப்படும் கொப்பரைகள் ஆகும்.

110) இந்திய பெருங்கடலின் சராசரி ஆழம் எவ்வளவு?

A] 3452 மீட்டர் B] 3675 மீட்டர்

C] 3890 மீட்டர் D] 3964 மீட்டர்

விடை: C] 3890 மீட்டர்

111) கீழ்கண்டவற்றுள் இந்திய பெருங்கடலின் ஆழமான பகுதியான சுண்டா அகழி எங்கு காணப்படுகிறது?

A] சுமத்ரா தீவு B] கிராண்ட் கோமரின் தீவு

C] லமு தீவு D] ஜாவா தீவு

விடை: D] ஜாவா தீவு

  • ஜாவா தீவுக்கு அருகில் சுண்டா ஆழ்கடல் பள்ளம் காணப்படுகிறது. மடகாஸ்கரும் இலங்கையும் இந்திய பெருங்கடலில் காணப்படும் முக்கிய தீவுகள் ஆகும்.

112) கீழ்க்கண்டவற்றுள் இமயமலையில் பகுதியான அரக்கன் யோகமா மலைத்தொடரின் தொடர்ச்சியாக கடல் மேலெழுந்த பகுதி எது?

A] அந்தமான் நிக்கோபார் தீவுகள் B] மாலத்தீவுகள்

C] மடகாஸ்கர் தீவுகள் D] இலங்கை தீவுகள்

விடை: A] அந்தமான் நிக்கோபார் தீவுகள்

113) கீழ்க்கண்டவற்றுள் எரிமலையினால் உண்டாகும் ஹாட்ஸ்பாட் அமைந்துள்ள தீவு எது?

A] நியாஸ் தீவு B] ரியூனியன் தீவு

C] பெம்பா தீவு D] நெல்சன் தீவு

விடை: B] யூனியன் தீவு

114) கடல் நீரின் குளிர்ந்த நிலை அல்லது வெப்பமான நிலையை அளந்து கூறுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A] குளிர் நிலை B] அழுத்த நிலை

C] வெப்பநிலை D] வெப்ப அழுத்த நிலை

விடை: C] வெப்பநிலை

  • பொதுவாக வெப்ப நிலையானது வெப்பநிலைமானி பயன்படுத்தி டிகிரி செல்சியஸ் என்ற அலகில் கூறப்படுகிறது.

115) பெருங்கடல் நீரானது அதிகபட்ச வெப்பத்தை கீழ்க்கண்ட எந்த செயலின் மூலமாக பெறுகிறது?

A] கடலடி எரிமலை வெடிப்பு B] வெப்ப நீரோட்டம்

C] குளிர் நீரோட்டம் D] சூரியனின் வெப்பக் கதிர் வீசல்

விடை: D] சூரியனின் வெப்ப கதிர் வீசல்

  • நீரின் வெப்பம் மற்றும் குளிர்ச்சி அடையும் திறன் நிலத்தின் தன்மையில் இருந்து குறிப்பிட்ட அளவு வேறுபடுகிறது.

116) கீழ்க்கண்டவற்றுள் பெருங்கடலின் வெப்பக்கிடை பரவலை பாதிக்காத காரணி எது?

A] தீர்க்கக் கோடுகள் B] அட்சக்கோடுகள்

C] வீசும் காற்று D] பெருங்கடல் நீரோட்டங்கள்

விடை: A] தீர்க்கக் கோடுகள்

  • அட்சக்கோடுகள், வீசும் காற்று, பெருங்கடல் நீரோட்டங்கள் மற்றும் தல வானிலை ஆகியவை பெருங்கடலின் வெப்ப பரவலை பாதிக்கும் முக்கிய காரணிகளாகும்.

117) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றை தேர்ந்தெடு.

1) நிலப்பகுதியிலிருந்து பெருங்கடல் அல்லது கடலை நோக்கி வீசும் காற்று பெருங் கடல் நீரின் வெப்பத்தை உயர்த்துகிறது.

2) குளிர்காலத்தில் பனி மூடிய பகுதிகளில் இருந்து கடலை நோக்கி வீசும் காற்று கடல் நீரின் வெப்பத்தை குறைக்கிறது.

  • காற்று வீசும் திசை பெருங்கடலின் வெப்ப பரவலை வெகுவாக பாதிக்கிறது.

118) வியாபார காற்று வீசும் பகுதிகளில் கடல் நீரின் வெப்ப நிலை மாறுபாடு என்ன?

A] அதிகரிக்கும் B] குறையும்

C] மாறாது இருக்கும் D] அதிகரித்து பின் குறையும்

விடை: B] குறையும்

  • வியாபார காற்று வீசும் பகுதிகளில் கடற்கரையில் இருந்து வீசும் காற்று கடலின் கிளர்ந்தெழும் குளிர்ந்த நீரை மேலும் உயர்த்துவதால் கடல் நீரின் வெப்ப அளவு குறைகிறது. அதே சமயம் கடலிலிருந்து வீசும் காற்று வெப்பநீரை ஒரே பகுதியில் குவிப்பதால் கடல் நீரின் வெப்பநிலையை குறிப்பிட்ட அளவு உயர்த்துகிறது.

119) கல்ப் நீரோட்டம் என்பது எவ்வகையான நீரோட்டம்?

A] குளிர் நீரோட்டம் B] வெப்ப குளிர் நீரோட்டம்

C] வெப்ப நீரோட்டம் D] எதுவும் இல்லை

விடை: C] வெப்ப நீரோட்டம்

  • எப்ப நீரோட்டங்கள் எங்கெல்லாம் செல்கிறதோ அங்கு பெருங்கடல் நீரின் வெப்பத்தை அதிகரிக்கச் செய்யும் அதேவேளையில் குளிர் நீரோட்டங்கள் பெருங் கடல் நீரின் வெப்பத்தை குறைக்கின்றன.

120) கீழ்க்கண்டவற்றில் சரியானதை தேர்ந்தெடு.

1) கல்ப் நீரோட்டம் வட அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரை மற்றும் ஐரோப்பாவின் மேற்கு கடற்கரைப் பகுதிகளில் வெப்பத்தை அதிகரிக்கின்றது.

2) லாப்ரடார் குளிர் நீரோட்டம் வட அமெரிக்காவின் வட கிழக்கு கடற்கரையின் வெப்பத்தை குறைகின்றது.

121) கீழ்கண்டவற்றில் கடல் நீரின் மேற்பரப்பு வெப்பத்தை பாதிக்கும் காரணிகள் யாவை?

1) கடலடி மலைத் தொடர்கள் 2) மேகமூட்டம் 3) ஆவியாதல் 4) திரவமாதல்

  • இவற்றைத் தவிர உள்ளூர் வானிலை மாற்றங்கள் ஆன புயல், சூறாவளி, ஹரிகேன், மூடுபனி போன்றவையும் கடல் நீரின் மேற்பரப்பு வெப்பத்தை பாதிக்கின்றன.

122) புவியிடை கோட்டு பகுதியில் பெருங்கடல்களின் வெப்ப அளவு எவ்வளவு?

A] 18° – 23° செல்சியஸ் B] 20° – 24° செல்சியஸ்

C] 22° – 25° செல்சியஸ் D] 27° – 30° செல்சியஸ்

விடை: D] 27° – 30° செல்சியஸ்

  • தினசரி வெப்பநிலை வீச்சும் வருடாந்திர வெப்பநிலை வீச்சும் நிலப்பகுதியைக் காட்டிலும் பெருங்கடல்களில் மிகவும் குறைவு. உண்மையில் புவியிடைக் கோட்டுப் பகுதியில் பெருங்கடல்களின் வெப்பம் அதிகம் கிடையாது. ஆனால் புவியிடை கோட்டுக்கு சற்று வடக்கில் தான் வெப்பம் அதிகம் காணப்படுகிறது.

123) துருவங்களில் காணப்படும் வெப்பநிலை அளவு எவ்வளவு?

A] – 1.9° செல்சியஸ் B] – 2.7° செல்சியஸ்

C] – 3.4° செல்சியஸ் D] – 4.6° செல்சியஸ்

விடை: A] – 1 .9° செல்சியஸ்

  • வட கோளத்தில் பெருங்கடல்களில் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையை ஆகஸ்ட் மாதத்திலும், பிப்ரவரி மாதத்திலும் காணப்படுகிறது. இதற்கு எதிர்மறையாக தென்கோளத்தில் பதிவாகிறது.

124) பெருங்கடலின் இரண்டறக் கலந்த மேற்பரப்பு நீர் அடுக்கின் வெப்பநிலை எவ்வளவு?

A] 25° – 30 ° செல்சியஸ் B] 20° – 30° செல்சியஸ்

C] 20° – 25° செல்சியஸ் D] 30° – 35° செல்சியஸ்

விடை: C] 20° – 25° செல்சியஸ்

  • இந்த அடுக்கின் ஆழம் பருவ காலத்திற்கு ஏற்ப மாறுபடும். இந்த செங்குத்து பரவல் அயன மண்டலத்தில் 200 மீட்டர் ஆழம் வரை காணப்படுகிறது.

125) வெப்பநிலை சரிவு அடுக்கின் ஆழம் எவ்வளவு?

A] 100 – 300 மீட்டர் B] 200 – 500 மீட்டர்

C] 300 – 700 மீட்டர் D] 200 – 1000 மீட்டர்

விடை: D] 200 – 1000 மீட்டர்

  • பெருங்கடலின் இரண்டறக் கலந்த மேற்பரப்பு நீர் அடுக்கின் கீழ் தான் வெப்பநிலை சரிவு அடுக்கு காணப்படுகிறது.

126) வெப்ப நிலையில் சரிவு அடுக்கில் 4000 மீட்டருக்கு கீழ் வெப்பநிலை ____ என்ற அளவில் நிலையாக இருக்கும்.

A] 2° செல்சியஸ் B] 4° செல்சியஸ்

C] 6° செல்சியஸ் D] 8° செல்சியஸ்

விடை: B] 4° செல்சியஸ்

  • வெப்பநிலை சரிவு அடுக்கில் ஆழம் அதிகரிக்க அதிகரிக்க வெப்பநிலை வேகமாக குறைகிறது. வெப்பநிலை சரிவு அடுக்குக்கு கீழ் 4000 மீட்டர் வரை வெப்பநிலை குறைகிறது.

127) கடல் நீரின் ஆழம் எந்த அலகால் அளக்கப்படுகிறது?

A] சோனார் B] பாதோம் C] கேண்டிலா D] பார்செக்

விடை: B] பாதோம்

  • ஒரு பாதோம் என்பது 6 அடி அல்லது 1.8 மீட்டருக்கு சமம்.

128) உவர்ப்பியம் என்பது எவ்வளவு கிராம் கடல் நீருக்கும் அதில் கரைந்துள்ள உப்பின் எடைக்கும் இடையே உள்ள விகிதம் ஆகும்?

A] 100 கிராம் B] 300 கிராம் C] 800 கிராம் D] 1000 கிராம்

விடை: D] 1000 கிராம்

  • இது ‰ என்று ஆயிரத்தின் பகுதியாக எந்த அலகும் இல்லாமல் கூறப்படுகிறது. எடுத்துக்காட்டாக, 30 ‰ என்றால் கொடுக்கப்பட்டுள்ள 1000 கிராம் கடல் நீரில் 30 கிராம் உப்பு உள்ளது என்று பொருள்.

129) பெருங்கடலின் சராசரி உவர்ப்பியம் எவ்வளவு?

A] 30‰ B] 35‰ C] 40 ‰ D] 45 ‰

விடை: B] 35 ‰

130) கீழ்கண்டவைகளில் கடல் நீரின் உவர்ப்பியத்தை பாதிக்கும் காரணிகள் யாவை?

1) கடல் நீர் ஆவியாகும் விதம்

2) கோள் காற்றுகளால் மேலெழும் ஆழ்கடல்நீர்

3) கடல் நீரோட்டங்களால் கலக்கும் நீர்

4) மழைப்பொழிவுகள்

5) துருவப் பகுதியில் உள்ள பனி உருகி கடல் நீரில் கலப்பது

A] 1, 2,3 & 4 B] 2, 3, 4 & 5 C] 1, 3, 4 & 5 D] 1, 2, 3, 4 & 5

விடை: D] 1, 2, 3, 4 & 5

  • மேலும் ஆறுகளில் இருந்து கடலில் சேரும் நன்னீர் அளவும் பெருங்கடல்களில் உவர்ப்பியம் அளவை பாதிக்கும் காரணியாக உள்ளது.

131) கீழ்கண்டவற்றுள் பெருங்கடலின் உப்பு தன்மைக்கு காரணம் அல்லாதது எது?

1) புவி மேற்பரப்பில் ஏற்படுகின்ற வானிலை சிதைவு மற்றும் ஆற்றின் அரித்தலால் பெரும்பாலான பெருங்கடல்கள் உப்பை பெறுகின்றன.

2) பெருங்கடலில் சில வகை உப்புகள் கடலடித் தரைப்பரப்பில் காணப்படும் பாறைகளும், படிவுகளும் நீரில் கரைந்து உருவாகுபவை ஆகும்.

  • வேறு சில வகை உப்புகள் எரிமலை வெடித்து சிதறும் போது புவியோட்டிலிருந்து வெளிப்பட்டு திடப் பொருட்களாகவும், வாயுக்களாகவும் அருகில் உள்ள கடல் நீரில் கரைந்து ஏற்படுபவை ஆகும்.

132) பெருங்கடல்களின் சராசரி உவர்ப்பியம் புவியிடை கோட்டிலிருந்து துருவத்தை நோக்கி செல்லச்செல்ல _____ .

A] அதிகரிக்கும் B] குறையும் C] மாறாது இருக்கும் D] குறைந்து பின் அதிகரிக்கும்

விடை: B] குறையும்

  • கண்டங்களின் கடலோர எல்லைப்பகுதியில் ஆற்றின் நன்னீர் சேர்வதால் உவர்ப்பியமானது பெருங்கடலின் உட்பகுதியை விட குறைவாக இருக்கிறது.

133) உலகின் அதிக உவர்ப்பியம் கீழ்கண்ட எந்த அட்சங்களுக்கு இடையில் காணப்படுகிறது?

A] 200 வடக்கு மற்றும் 400 வடக்கு B] 300 வடக்கு மற்றும் 500 வடக்கு

C] 400 வடக்கு மற்றும் 600 வடக்கு D] 500 வடக்கு மற்றும் 800 வடக்கு

விடை: A] 200 வடக்கு மற்றும் 400 வடக்கு

  • இந்தப் பகுதி அதிக வெப்பம், அதிக நீராவியாதல் அதே நேரத்தில் புவியிடைகோட்டுப் பகுதியை விட குறைவான மழைப்பொழிவு போன்ற தன்மையைக் காரணமாக கொண்டுள்ளது.

134) அதிகபட்ச உவர்ப்பியம் கீழ்க்கண்ட எந்த இடத்தில் காணப்படுகிறது?

A] சாக்கடல் B] வான் ஏரி C] பெரிய உப்பு ஏரி D] செங்கடல்

விடை: B] வான் ஏரி

  • அதிகபட்ச உவர்ப்பியம் துருக்கியில் உள்ள வான் ஏரியில் பதிவாகியுள்ளது. இரண்டாவதாக சாக்கடலும் மூன்றாவதாக அமெரிக்க ஐக்கிய நாட்டின் உட்டாவாவில் உள்ள பெரிய உப்பு ஏரியிலும் காணப்படுகிறது.

135) கீழ்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடு.

A] வான் ஏரியில் உள்ள உவர்ப்பியதின் அளவு 330‰

B] சாக்கடலில் உள்ள உவர்ப்பியத்தின் அளவு 338‰

C] பெரிய உப்பு ஏரியில் உள்ள உவர்ப்பியத்தின் அளவு 200‰

D] செங்கடலில் உள்ள உவர்ப்பியத்தின் அளவு 247‰

விடை: A] வான் ஏரியில் உள்ள உவர்ப்பியதின் அளவு 330‰

  • சாக்கடலில் உள்ள உவர்ப்பியத்தின் அளவு 238‰. பெரிய உப்பு ஏரியில் உள்ள உவர்ப்பியத்தின் அளவு 220‰ ஆகும்.

136) ஒரே அளவு உவர்ப்பியம் கொண்ட பகுதிகளை இணைக்கும் கற்பனை கோட்டின் பெயர் என்ன?

A] சமஅளவு கோடு B] கற்பனை கோடு

C] சம உவர்ப்பியக் கோடு D] உவர்ப்பிய கோடுகள்

விடை: C] சம உவர்ப்பியக் கோடு

137) சாக்கடலில் காணப்படும் உப்பின் அளவு மற்ற கடல்களோடு ஒப்பிடும் போது எவ்வளவு மடங்கு அதிகமாக உள்ளது?

A] 5.2 மடங்கு B] 3.7 மடங்கு C] 8.6 மடங்கு D] 7.3 மடங்கு

விடை: C] 8.6 மடங்கு

  • சாக்கடல் கடல் மட்டத்திலிருந்து 423 மீட்டர் தாழ்வாக அமைந்துள்ளது. இது நிலப்பரப்பின் மிகத் தாழ்வான பகுதி ஆகும்.

138) கீழ்கண்ட எந்த கடலில் உவர்ப்பியம் காரணமாக மனிதர்கள் மிதக்க முடியும்?

A] அரபிக்கடல் B] காஸ்பியன் கடல் C] கரீபியன் கடல் D] சாக்கடல்

விடை: D] சாக்கடல்

  • சாக்கடல் 377 மீட்டர் ஆழம் கொண்டது. இக்கடலின் அதிக உவர்ப்பியம் காரணமாக மனிதர்களால் இதன் மீது மிதக்க முடிகிறது. அதிக உவர்ப்பியம் காரணமாக உயிரினங்கள் ஏதுமில்லாத கடலாக காணப்படுகிறது.

139) கடல் நீரானது தனது ஆற்றலை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்தும் போக்கினை எவ்வாறு அழைக்கிறோம்?

A] அலைகள் B] ஓதங்கள் C] கடல் நீரோட்டங்கள் D] காற்றியக்கும் நீரோட்டங்கள்

விடை: A] அலைகள்

140) கீழ்க்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடு.

1) ஒரு அலையின் மேற்பகுதி அல்லது உயர்ந்த பகுதி அலைமுகடு என்று அழைக்கப்படுகிறது.

2) அலையின் கீழ் அல்லது தாழ்வான பகுதி அலை அகடு என்று அழைக்கப்படுகிறது.

3) வீசும் காற்றிற்கும் அது கடக்கும் நீரின் மேற்பரப்பிற்கும் இடைப்பட்ட தூரம் அலைக்களம் ஆகும்.

A] 1 & 2 B] 2 & 3 C] 1 & 3 D] 1, 2 & 3

விடை: D] 1, 2 & 3

141) இரண்டு முகடு அல்லது அலை அகடுகளுக்கிடையேயான கிடைமட்ட தூரம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A] அலை உயரம் B] அலை நீளம்

C] அலை வீச்சு D] அலைக்களம்

விடை: B] அலை நீளம்

  • அலை முகடு மற்றும் அலை அகடுகளுக்கு இடையேயுள்ள செங்குத்து தூரம் அலை உயரம் என்று அழைக்கப்படுகிறது.

142) அலை உயரத்தில் ஒரு பாதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A] அலை அதிர்வெண் B] அலைக்களம்

C] அலை வீச்சு D] அலையின் காலம்

விடை: C] அலை வீச்சு

வீசும் காற்றிற்கும் அது கடக்கும் நீரின் மேற்பரப்பிற்கும் இடைப்பட்ட தூரம் அலைக்களம் என்று அழைக்கப்படுகிறது.

143) ஒரு அலைநீளம் நிலையான புள்ளியை கடந்து செல்லும் நேரம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A] அலைக்களம் B] அலையின் காலம்

C] அலை வீச்சு D] அலை திசைவேகம்

விடை: B] அலையின் காலம்

  • ஒரு குறிப்பிட்ட நேரம் அல்லது அலகு இடைவெளியில் ஒரு நிலையான புள்ளியிலிருந்து கடந்து செல்லும் அலை நீளங்களின் எண்ணிக்கை அலை அதிர்வெண் என்று அழைக்கப்படுகிறது.

144) கீழ்க்கண்டவற்றுள் அலையின் நீளம், உயரங்களுக்கு இடையேயுள்ள விகிதங்களுக்கு சமமாக இருப்பது எது?

A] அலைக்களம் B] அலை வீச்சு

C] அலை செஞ்சரிவு நிலை D] அலை திசைவேகம்

விடை: C] அலை செஞ்சரிவு நிலை

  • அலை நீளத்தை பிரிப்பதற்கு ஆகும் வேகம் அலை திசைவேகம் என்று அழைக்கப்படுகிறது.

145) சூரியன் மற்றும் சந்திரனின் ஈர்ப்பு விசையினால் பெருங்கடலின் நீர்மட்டம் குறிப்பிட்ட கால இடைவெளியில் உயர்ந்து தாழ்வதை எவ்வாறு அழைக்கிறோம்?

A] ஓதங்கள் B] அலைகள்

C] கடல் நீரோட்டங்கள் D] காற்றியக்க நீரோட்டங்கள்

விடை: A] ஓதங்கள்

146) முதன்முதலாக ஓதங்களை அறிவியல் பூர்வமாக விளக்கியவர் யார்?

A] கலிலியோ B] ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

C] சர் ஐசக் நியூட்டன் D] ஸ்டீபன் ஹாக்கிங்

விடை: C] சர் ஐசக் நியூட்டன்

  • நிலத்தை நோக்கி மேலெழும் கடல் நீர் மட்டத்தை அதி ஓதம் அல்லது உயர் ஓதம் என்கிறோம். கடலை நோக்கிச் சரியும் கடல் நீர் மட்டத்தை தாழ் ஓதம் அல்லது கீழ் ஓதம் என்கிறோம்.

147) ஒவ்வொரு நாளும் கடல் நீர் மட்டமானது எத்தனை முறை உயர்ந்தும் தாழ்ந்தும் காணப்படுகிறது?

A] 2 B] 3 D] 4 D] 5

விடை: A] 2

  • மிக உயரமான ஓதங்கள் முழுநிலவு நாளன்றும் அமாவாசை அன்றும் ஏற்படுகிறது. இது மிதவை ஓதம் எனப்படும். மிதவை ஓதங்கள் சூரியன், புவி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது உருவாகிறது.

148) சூரியன், புவி, சந்திரன் ஆகிய மூன்றும் செங்குத்து கோணத்தில் அமையும்போது உண்டாவது எது?

A] உயர்மட்ட ஓதங்கள் B] தாழ்மட்ட ஓதங்கள்

C] மிதவை ஓதம் D] எதுவும் இல்லை

விடை: B] தாழ்மட்ட ஓதங்கள்

  • மிக தாழ்வான ஓதங்கள் தாழ்மட்ட ஓதங்கள் எனப்படும்.

149) ஓத விசை காரணமாக ஏற்படும் கடல் நீரின் நகர்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A] நீரோட்டம் B] ஓத நீரோட்டம்

C] கடல் நீரோட்டம் C] கரும் ஓதம்

விடை: B] ஓத நீரோட்டங்கள்

  • ஓத நீரோட்டங்கள் அதிக உயரம் மற்றும் விசையுடன் ஒரு குறுகிய கடலோர திறப்பின் வழியாக ஓடுகின்றன. உதாரணமாக கனடாவின் நோவாஸ்காட்டியாவிற்கும், நியுப்ரன்ஸ்விக்குக்கும் இடையே காணப்படும் பண்டி வளைகுடாவில் காணப்படும் உயர்வு ஓதத்திற்கும், தாழ் ஓதத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு 14 மீட்டர் ஆகும்.

150) கீழ்கண்டவற்றுள் இந்தியாவிலுள்ள ஓத துறைமுகங்கள் யாவை?

1) விசாகப்பட்டினம் 2) சென்னை 3) கல்கத்தா 4) காண்ட்லா

A] 1 & 2 B] 2 & 3 C] 3 & 4 D] 1, 2 & 4

விடை: C] 3 & 4

  • கப்பல்கள் வந்து செல்ல ஓத நீரோட்டத்தை பயன்படுத்தும் துறைமுகங்களை ஓத துறைமுகங்கள் என்கிறோம்.

151) காம்பே வளைகுடாவின் அதிகபட்ச ஓத வீதம் எவ்வளவு?

A] 7 மீட்டர் B] 8 மீட்டர் C] 10 மீட்டர் D] 11 மீட்டர்

விடை: D] 11 மீட்டர்

  • மேற்கு கடற்கரையில் காணப்படும் காம்பே மற்றும் கட்ச் வளைகுடாக்கள் முறையே 6.77 மீட்டர் மற்றும் 5.23 மீட்டர் என்ற அளவிலான சராசரி ஓத வீதத்துடன் 11 மீட்டர் மற்றும் 8 மீட்டர் அளவிலான அதிகபட்ச ஓத வீதத்தைக் கொண்டுள்ளது.

152) கீழ்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடு.

1) ஆறுகளால் படிய வைக்கப்படும் வண்டல் படிவுகளை நீக்கி துறைமுகத்தை பாதுகாக்க ஓதங்கள் உதவுகிறது.

2) ஐக்கிய அரசு, கனடா, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் ஓத ஆற்றல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

  • இந்தியாவில் காம்பாட் வளைகுடா, கட்ச் வளைகுடா மற்றும் சுந்தர வனப்பகுதி போன்றவை ஓத ஆற்றலை உற்பத்தி செய்வதற்கான வாய்ப்பை கொண்டுள்ளன.

153) பெருங்கடலின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு குறிப்பிட்ட திசையில் நகரும் நீர் தொகுதியினை எவ்வாறு அழைக்கிறோம்?

A] கடல் நீரோட்டங்கள் B] ஓத நீரோட்டங்கள்

C] ஓடைகள் D] அலைகள்

விடை: A] கடல் நீரோட்டங்கள்

  • புவி சுழற்சி, கடல் நீரின் வெப்ப வேறுபாடு, உவர்ப்பியம், அடர்த்தி ஆகியவையும் மற்றும் ஒரு எல்லைவரை காற்றின் அழுத்தமும், காற்றும் கடல் நீரோட்டங்கள் உருவாக காரணமாகும். பெருங்கடல் நீரோட்டங்கள் அவை தோன்றும் விதம், கொள்ளளவு, திசைவேகம் மற்றும் அதன் எல்லைகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன.

154) கோள் காற்றுகளால் கடலின் மேற்பரப்பு நீர் மெதுவாக நகருவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A] ஓதங்கள் B] அலைகள்

C] கடல் நீரோட்டங்கள் D] காற்றியக்கும் நீரோட்டங்கள்

விடை: D] காற்றியக்கும் நீரோட்டங்கள்

  • ஒரு குறிப்பிட்ட திசையில் அதிக திசைவேகத்துடன் நகருவது பெருங்கடல் நீரோட்டமாகும். ஒரு குறிப்பிட்ட திசைவேகத்தில் அதிக அளவிலான பெருங்கடல்நீர் நகர்வதை ஓடைகள் என்கிறோம்.

155) கீழ்க்கண்டவற்றுள் மிக அதிக திசைவேகத்தில் ஓடக்கூடியது எது?

A] காற்றியக்கும் நீரோட்டங்கள் B] ஓடைகள்

C] அலைகள் D] ஓதங்கள்

விடை: B] ஓடைகள்

  • பெருங்கடல் நீரோட்டங்கள் வெப்ப நிலையால் வேறுபடுகின்றன. புவியிடைக்கோட்டிற்கு அருகில் உருவாகும் நீரோட்டங்களை வெப்ப நீரோட்டங்கள் என்றும் துருவப் பகுதியிலிருந்து உருவாகும் நீரோட்டங்களை குளிர் நீரோட்டங்கள் என்றும் அழைக்கிறோம்.

156) கீழ்க்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடு.

1) நீர்ப்பரப்பின் மேல் பகுதிக்கும் கீழ் பகுதிக்கும் இடையே காணப்படும் உவர்ப்பியம் மற்றும் வெப்ப செயற்பாட்டின் காரணமாக பெருங் கடல் நீரின் செங்குத்து சுழற்சியானது உருவாகிறது.

2) பெருங்குடல் நீர் மேலெழுதல் என்பது அடர்த்தியான குளிர்ந்த மற்றும் வளமிக்க பெருங்கடல் நீர் கீழ்ப்பகுதியிலிருந்து மேல் நோக்கி நகர்ந்து வளமற்ற வெப்பமான கடல் மேற்பரப்பை இடமாற்றம் செய்வதாகும்.

157) சுழல் வட கோளார்த்தத்தில் எந்த திசையில் சுற்றுகிறது?

A] கடிகாரச் சுழற்சி B] எதிர் கடிகார சுழற்சி

C] கீழ்நோக்கிய சுழற்சி D] மேல்நோக்கிய சுழற்சி

விடை: A] கடிகார சுழற்சி

  • பெரிய அளவிலான நீரோட்டங்களின் சுழற்சியை சுழல் என்கிறோம். சுழல் வட கோளார்த்தத்தில் கடிகார சுழற்சியிலும் தென் கோளார்த்தத்தில் எதிர் கடிகார சுழற்சியிலும் சுழல்கிறது.

158) பெருங்கடல் நீரானது எதற்கிடையில் சுழன்று கொண்டிருக்கிறது?

A] ஆழ்கடல் மற்றும் கடற்கரை

B] புவியிடைக்கோடு மற்றும் துருவப் பகுதி

C] புவியிடை கோடு மற்றும் மிதவெப்ப மண்டலப்பகுதி

D] மிதவெப்ப மண்டலம் மற்றும் துருவப் பகுதி

விடை: B] புவியிடைக்கோடு மற்றும் துருவப் பகுதி

  • புவியிடை கோட்டுப் பகுதியில் இருந்து வெப்ப நீரோட்டமானது துருவப் பகுதியை நோக்கி நகர்ந்து அதிக அடர்த்தியின் காரணமாக உயர் அட்சப்பகுதியில் மூழ்கி மீண்டும் புவியிடைகோட்டுப் பகுதியை நோக்கி நகர்ந்து ஒரு சுழற்சியை நிறைவு செய்கிறது.

159) வட புவியிடைக்கோட்டு நீரோட்டம் எங்கு உருவாகிறது?

A] நியூசிலாந்து B] மெக்சிகோ

C] ஆஸ்திரேலியா D] தென் கொரியா

விடை: B] மெக்சிகோ

  • வடக்கு புவியிடைகோட்டு நீரோட்டமானது மெக்சிகோவிற்கு மேற்கில் உள்ள ரிவில்லா கிகிடோ தீவுகளுக்கு அருகில் உருவாகி சுமார் 12,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு பிலிப்பைன்ஸ் தீவுகளை நோக்கி கிழக்கு மேற்கு திசையில் நகர்கிறது.

160) வட புவியிடைக்கோட்டு நீரோட்டம் எவ்வகை நீரோட்டம்?

A] குளிர் நீரோட்டம் B] மிதவை நீரோட்டம்

C] வெப்ப நீரோட்டம் D] எதுவும் இல்லை

விடை: C] வெப்ப நீரோட்டம்

  • கலிபோர்னியா நீரோட்டத்திலிருந்து மெக்சிகோ கடற்கரையை ஒட்டி வடக்கு நோக்கி ஓடும் தென் கிழக்கு பருவ காற்று காற்றியக்க நீரோட்டத்திலிருந்தும் வட புவியிடைகக்கோட்டு பகுதி நீரை பெறுகிறது.

161) வட புவியிடைக் கோட்டு நீரோட்டத்தில் வடக்கு கிளை கீழ்க்கண்ட எந்த நீரோட்டத்துடன் இணைகிறது?

A] பெரு நீரோட்டம் B] ஆஸ்திரேலியன் நீரோட்டம்

C] குரோசியா நீரோட்டம் D] கலிபோர்னியா நீரோட்டம்

விடை: C] குரோசியா நீரோட்டம்

  • வட புவியிடைக் கோட்டு நீரோட்டத்தின் வலதுபுறத்தில் அதிகமான சிறு நீரோட்டங்கள் இணைவதால் நீரின் அளவானது கிழக்கிலிருந்து மேற்காக அதிகரிக்கிறது. இதன் தென்கிளை ஆஸ்திரேலியன் நீரோட்டமாக நகர்கிறது.

162) தெற்கு புவியிடைக்கோட்டு நீரோட்டம் எவ்வளவு தூரம் நீண்டு காணப்படுகிறது?

A] 10,267 கி.மீ B] 11,597 கி.மீ

C] 12,430 கி.மீ D] 13,600 கி.மீ

விடை: D] 13,600 கி.மீ

  • தெற்கு புவியிடைக் கோட்டு நீரோட்டம் வியாபார காற்றுகளால் உந்தப்பட்டு கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி நகர்கிறது. இந்நீரோட்டம் வடக்குபுவியிடைக் கோட்டு நீரோட்டத்தை விட வலுவானது.

163) கீழ்க்கண்டவற்றுள் ஜப்பான் நீரோட்டம் என்று அழைக்கப்படுவது எது?

A] பெரு நீரோட்டம் B] குரோசியா நீரோட்டம்

C] ஒயாஷியோ நீரோட்டம் D] கலிபோர்னியா நீரோட்டம்

விடை: B] குரோசியா நீரோட்டம்

  • நீரோட்டமானது 30 டிகிரி வடக்கு அட்ச ரேகை வரை வடக்கு கீழைக்காற்றுகளின் திசையில் நகர்ந்து செல்கிறது. இது பார்மோசா கடலோரத்திலிருந்து வெப்பநீரை சுமந்து செல்கிறது.

164) குரோசியா நீரோட்டம் கீழ்க்கண்ட எந்த நீரோட்டத்துடன் கலக்கிறது?

A] வடபுவியிடைக் கோட்டு நீரோட்டம் B] தெற்கு புவியிடைக் கோட்டு நீரோட்டம்

C] பெரு நீரோட்டம் D] ஒயாஷியோ நீரோட்டம்

விடை: D] ஒயாஷியோ நீரோட்டம்

  • ஒயாஷியோ நீரோட்டத்துடன் கலந்து குரில் தீவுகளுக்கு அப்பால் செல்கிறது.

165) கீழ்கண்டவற்றுள் குளிர் நீரோட்டம் எது?

A] வட புவியிடைக்கோட்டு நீரோட்டம் B] தெற்கு புவியிடை கோட்டு நீரோட்டம்

C] குரோசியா நீரோட்டம் D] ஒயாஷியோ நீரோட்டம்

விடை: D] ஒயாஷியோ நீரோட்டம்

166) கீழ்கண்டவற்றுள் கலிபோர்னியா நீரோட்டம் பற்றிய சரியான கூற்றை தேர்ந்தெடு.

1) இது 48° வடக்கு அட்சத்திற்கும் 23° வடக்கு அட்சத்திற்கும் இடையே ஐக்கிய நாட்டின் மேற்கு கடற்கரை வழியாக தெற்கு நோக்கி நகர்ந்து செல்கிறது.

2) இது ஒரு வெப்ப நீரோட்டம் ஆகும்.

  • இது ஒரு குளிர் நீரோட்டம் ஆகும். இந்த குளிர் நீரோட்டமானது மேலெழும் அதிக குளிர்ந்த நீரை பெறுகிறது. இது வியாபார காற்றுவீசும் பகுதியை அடையும்போது, இது வலதுபுறமாக திசைதிருப்பப்பட்டு புவியிடை கோட்டு நீரோட்டத்துடன் கலந்துவிடுகிறது.

167) கீழ்க்கண்டவற்றுள் ஹம்போல்ட் நீரோட்டம் என்று அழைக்கப்படுவது எது?

A] கலிபோர்னியா நீரோட்டம் B] குரோசியா நீரோட்டம்

C] ஒயாஷியோ நீரோட்டம் D] பெரு நீரோட்டம்

விடை: D] பெரு நீரோட்டம்

  • பசிபிக் பெருங்கடல் நீரோட்டங்களில் மிக நன்றாக கண்டறியப்பட்ட நீரோட்டம் என்றால் அது பெரு நீரோட்டமாகும். 1802 ஆம் ஆண்டு அலெக்ஸாண்டர் வான் ஹம்போல்ட் என்ற ஆராய்ச்சியாளர் நீரோட்டத்தை பற்றி அதிக தகவல்களை கண்டறிந்ததால் ஹம்போல்ட் நீரோட்டம் என அழைக்கப்படுகிறது.

168) கீழ்கண்டவற்றுள் பெரு நீரோட்டம் பற்றிய சரியான கூற்றை தேர்ந்தெடு.

1) இது அட்லாண்டிக் நீரோட்டத்தின் குளிர்ந்த நீரை எடுத்துச் செல்கிறது.

2) இது ஒரு குளிர் நீரோட்டம் ஆகும்.

  • பெரு நீரோட்டம் தென் அமெரிக்கா மேற்கு கடற்கரை வழியாக வடக்கு நோக்கி நகர்ந்து 40 டிகிரி தெற்கில் காணப்படும் வடக்கு நோக்கித் திரும்பும் அண்டார்டிகா நீரோட்டத்தின் குளிர்ந்த நீரை எடுத்துச் செல்கிறது.

169) கீழ்க்கண்டவற்றுள் வெப்ப நீரோட்டம் எது?

A] கலிபோர்னியா நீரோட்டம் B] ஒயாஷியோ நீரோட்டம்

C] பெரு நீரோட்டம் D] எதிர் நீரோட்டம்

விடை: D] எதிர் நீரோட்டம்

  • பசிபிக் பெருங்கடலில் புவியிடை கோட்டுக்கு அருகில் உள்ள வெப்ப நீரானது 400 மீட்டர் ஆழத்தில் 180 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு வெப்ப நீரோட்டமாக நகர்ந்து செல்வதை எல்நினோ அல்லது எதிர் நீரோட்டம் என்கிறோம்.

170) கீழ்க்கண்டவற்றுள் காற்றியக்க நீரோட்டம் எது?

A] வடபுவியிடைக் கோட்டு நீரோட்டம் B] தெற்கு புவியிடை கோட்டு நீரோட்டம்

C] மேற்கு காற்று நீரோட்டம் D] கலிபோர்னியா நீரோட்டம்

விடை: C] மேற்கு காற்று நீரோட்டம்

  • இது பசிபிக் பெருங்கடலில் டாஸ்மேனியாவிலிருந்து தென்னமரிக்க கடற்கரை வரை கிழக்கு நோக்கி நகர்ந்து செல்லும் காற்றியக்க நீரோட்டம் ஆகும்.

171) கீழ்கண்டவற்றுள் மேற்கு காற்று காற்றியக்க நீரோட்டம் பற்றிய சரியான கூற்றை தேர்ந்தெடு.

1) இது ஒரு வெப்ப நீரோட்டம் ஆகும்.

2) உறுமும் நாற்பதுகளின் தாக்கத்தால் இதன் வேகம் மிக அதிகமாக உள்ளது.

  • இது ஒரு குளிர் நீரோட்டம் ஆகும். இது இரு கிளைகளாக பிரிந்து ஒரு கிளை தெற்கு நோக்கி நகர்ந்து கேப் முனை வழியாக அட்லாண்டிக் பெருங்கடலை அடைகிறது. மற்றொரு கிளை வடக்கு நோக்கி பெரு கடற்கரை வழியாக நகர்ந்து பெரு நீரோட்டத்துடன் இணைகிறது.

172) கீழ்க்கண்டவற்றுள் 5° வடக்கு முதல் 20° வடக்கு அட்சத்தில் காணப்படும் நீரோட்டம் எது?

A] லாப்ரடார் நீரோட்டம் B] வட புவியிடைக்கோட்டு நீரோட்டம்

C] தென் புவியிடைக் கோட்டு நீரோட்டம் D] கல்ப் நீரோட்டம்

விடை: B] வட புவியிடைக்கோட்டு நீரோட்டம்

  • இது கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பாய்கிறது. இது ஒரு வெப்ப நீரோட்டம் ஆகும். ஆப்பிரிக்காவின் கிழக்குக் கடற்கரையை விட்டு நீங்கிய பிறகு இது தனது முக்கிய தன்மைகளை பெறுகிறது.

173) கீழ்கண்ட எந்த நீரோட்டத்தின் கிளை நீரோட்டம் ஆண்டிலிஸ் நீரோட்டம் என்று அழைக்கப்படுவது எது?

A] கல்ப் நீரோட்டம் B] லாப்ரடார் நீரோட்டம்

C] வட புவியிடைக்கோட்டு நீரோட்டம் D] கானரீஸ் நீரோட்டம்

விடை: C] வட புவியிடைக்கோட்டு நீரோட்டம்

  • தென் அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையை அடைந்த உடன் இரண்டு கிளைகளாக பிரிகிறது. மேற்கிந்திய தீவுகள் கடற்கரை வழியாக நகரும் ஒரு கிளை ஆண்டிலிஸ் நீரோட்டம் என்று அழைக்கப்படுகிறது. மற்றொரு கிளை கரீபியன் கடல் பக்கம் திருப்பி விடப்படுகிறது.

174) தென் புவியிடைக்கோட்டு நீரோட்டம் கீழ்க்கண்டவற்றுள் எந்த நீரோட்டத்தின் தொடர்ச்சியாகும்?

A] பெங்குலா நீரோட்டம் B] கல்ப் நீரோட்டம்

C] கானரீஸ் நீரோட்டம் D] எல்நினோ நீரோட்டம்

விடை: A] பெங்குலா நீரோட்டம்

  • இந்நீரோட்டம் ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா கடற்கரைக்கு இடையில் 0° தெற்கு முதல் 12° தெற்கு வரை உள்ள அட்சப்குதியில் நகர்கிறது.

175) கீழ்கண்டவற்றுள் வியாபார காற்றுகளால் உருவான நீரோட்டம் எது?

A] எதிர் நீரோட்டம் B] கலிபோர்னியா நீரோட்டம்

C] தென் புவியிடைக்கோட்டு நீரோட்டம் D] குரோசியா நீரோட்டம்

விடை: C] தென் புவியிடைக்கோட்டு நீரோட்டம்

  • இது வட புவியிடைக்கோட்டு நீரோட்டத்தை விட வலுவானது. இது ஒரு வெப்ப நீரோட்டம் ஆகும்.

176) கீழ்க்கண்டவற்றுள் மெக்சிகோ வளைகுடாவில் தொடங்கி, குளிர் அட்ச பகுதிகளுக்கு வெப்பநீரை சுமந்து செல்லும் நீரோட்டம் எது?

A] ஒயாஷியோ நீரோட்டம் B] கல்ப் நீரோட்டம்

C] கானரீஸ் நீரோட்டம் D] குரோசியா நீரோட்டம்

விடை: B] கல்ப் நீரோட்டம்

  • இந்நீரோட்டமானது 40° அட்சக்கோட்டை அடையும்வரை, மேற்கு காற்றுகளின் திசை மற்றும் மையவிலக்கு விசை காரணமாக அமெரிக்காவின் கிழக்குக் கரையை ஒட்டி கனடாவின் நியூபவுண்ட்லாந்துக்கு அருகில் குளிர்ந்த லாப்ரடார் நீரோட்டத்துடன் கலக்கிறது.

177) கல்ப் நீரோட்டம் எவ்வகை நீரோட்டம்?

A] வெப்ப நீரோட்டம் B] குளிர் நீரோட்டம்

C] மிதவை நீரோட்டம் D] எதுவும் இல்லை

விடை: A] வெப்ப நீரோட்டம்

  • இந்த நீரோட்டம் பான்ஸ் டி லியோன் என்பவரால் 1513 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

178) கீழ்க்கண்டவற்றுள் கானரீஸ் நீரோட்டம் பற்றிய சரியான கூற்றை தேர்ந்தெடு.

1) ஆப்பிரிக்காவின் மேற்குக் கடற்கரையில் மாடிரியா முதல் வெடர்டிமுனை வரை நகர்ந்து செல்லும் குளிர்ந்த பெருங்கடல் நீரோட்டம் கானரீஸ் நீரோட்டமாகும்.

2) இது தெற்கு நோக்கி நகர்ந்து தெற்கு புவியிடை கோட்டு நீரோட்டத்துடன் இணைகிறது.

  • கானரீஸ் நீரோட்டம் தெற்கு நோக்கி நகர்ந்து வட புவியிடைக்கோட்டு நீரோட்டத்துடன் இணைகிறது.

179) கீழே குறிப்பிட்டுள்ளவை எவ்வகை நீரோட்டத்தை குறிக்கும்?

வட அட்லாண்டிக் பெருங்கடலில் பப்பின் வளைகுடா மற்றும் டேவிஸ் நீர்ச்சந்தி வழியாக தெற்கு நோக்கி ஒரு குளிர் நீரோட்டம் பாய்கிறது.

A] கல்ப் நீரோட்டம் B] கானரீஸ் நீரோட்டம்

C] லாப்ரடார் நீரோட்டம் D] எல்நினோ நீரோட்டம்

விடை: C] லாப்ரடார் நீரோட்டம்

  • இது துருவப் பகுதியில் இருந்து கிரீன்லாந்து கடற்கரை வழியாக மிகக் குளிர்ந்த நீரை சுமந்து செல்கிறது.

180) சர்கேசோ கடல் எந்த பெருங்கடலில் அமைந்துள்ளது?

A] இந்திய பெருங்கடல் B] பசிபிக் பெருங்கடல்

  • சர்கேசோ கடல் வட அட்லாண்டிக் பெருங்கடலில் மூன்றில் இரண்டு பங்கு பரப்பை ஆக்கிரமித்துள்ளது. இது 700 மைல் அகலம் முதல் 2,000 மைல்கள் நீளத்திற்கும் பரவியுள்ளது.

181) கீழ்கண்டவற்றுள் நில எல்லையில்லா கடல் எது?

A] பால்டிக் கடல் B] காஸ்பியன் கடல்

C] சர்கேசோ கடல் D] லேப்ரடார் கடல்

விடை: C] சர்கேசோ கடல்

  • இந்த கடல் பரப்பு முழுவதும் சர்கேசம் என்ற பழுப்பு பச்சை நிற கடற்பாசிகள் மூடப்பட்டு காணப்படுவதால் சர்கேசோ கடல் என்றழைக்கப்படுகிறது. கடல் நான்கு புறத்திலும் கடல் நீரோட்டங்களால் மட்டும் சூழப்பட்டு ஒரு எல்லைக்குள் அமைந்து காணப்படுகிறது.

182) கீழ்கண்டவற்றுள் சர்கேசோ கடலின் எல்லைகளில் சரியானது எது?

1) வடக்கு – கானரி நீரோட்டம்

2) தெற்கு – வட அட்லாண்டிக் நீரோட்டம்

3) கிழக்கு – வட அட்லாண்டிக் புவியிடைக்கோட்டு நீரோட்டம்

A] 1 & 2 மட்டும் B] 2 & 3 மட்டும் C] 1 & 3 D] எதுவும் இல்லை

விடை: D] எதுவும் இல்லை

  • சர்கேசோ கடலின் வடக்கில் வட அட்லாண்டிக் நீரோட்டமும், கிழக்கில் கானரி நீரோட்டமும், தெற்கில் வட அட்லான்டிக் புவியிடைக்கோட்டு நீரோட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளது.

183) ஆப்பிரிக்காவின் மேற்கு கடற்கரை வழியாக நகர்ந்து செல்லும் நீரோட்டம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A] குரோசியா நீரோட்டம் B] பெங்குலா நீரோட்டம்

C] கல்ப் நீரோட்டம் D] எல்நினோ நீரோட்டம்

விடை: B] பெங்குலா நீரோட்டம்

  • இது ஒரு குளிர் நீரோட்டம் ஆகும். இது துணை அண்டார்டிகா நீர் பரப்பிலிருந்து மிகக் குளிர்ந்த நீரினை சுமந்து சென்று தெற்கு புவியிடை கோட்டு நீரோட்டத்தில் கலந்து விடுகிறது.

184) தென்னிந்திய சுழல் கீழ்க்கண்ட எந்த நீரோட்டங்களால் ஆனது?

1) தெற்கு புவியிடைக்கோட்டு நீரோட்டம் 2) மடகாஸ்கர் நீரோட்டம் 3) கல்ப் நீரோட்டம் 4) குரோசியா நீரோட்டம்

A] 1 & 2 B] 2 & 3 C] 3 & 4 D] 1 & 4

விடை: A] 1 & 2

  • தென்னிந்திய சுழலானது தெற்கு புவியிடை கோட்டு நீரோட்டம், மடகாஸ்கர் நீரோட்டம், காற்றியக்க நீரோட்டம் மற்றும் மேற்கு ஆஸ்திரேலிய நீரோட்டம் போன்றவற்றால் ஆனதாகும்.

185) அண்டார்டிகா துருவ சுற்று நீரோட்டமானது எந்தெந்த அட்சரேகைகளுக்கு இடைப்பட்ட பகுதியில் ஓடுகிறது?

A] 20° மற்றும் 30° B] 30° மற்றும் 40°

C] 40° மற்றும் 50° D] 40° மற்றும் 60°

விடை: D] 40° மற்றும் 60°

  • இது மேலை காற்றுகளால் தூண்டப்பட்டு மேற்கிலிருந்து கிழக்காக அண்டார்டிகாவை முழுவதுமாக சுற்றி வருகிறது. இந்த நீரோட்டத்திற்குள் மேற்கு நோக்கிய எதிர் நீரோட்டமும் காணப்படுகிறது.

186) தென் பெருங்கடலின் நீர் சுழற்சியானது கீழ்க்கண்ட எந்த வகை காற்றுகளால் உருவாகின்றன?

A] கிழக்கு மேற்கத்திய B] வடக்கு மேற்கத்திய

C] மேற்கு தெற்கத்திய D] வடகிழக்கு தெற்கத்திய

விடை: B] வடக்கு மேற்கத்திய

  • அண்டார்டிகாவை சுற்றி தென் பெருங்கடல் காணப்படுகிறது. பசிபிக், அட்லாண்டிக் மற்றும் இந்திய பெருங்கடல் போன்ற அனைத்து பெரிய பெருங்கடல்களும் இணைந்து ஒரு உலகளாவிய துருவ நீர்ச்சுற்றாக இந்த தென் பகுதி காணப்படுகிறது.

187) கீழ்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடு.

1) பசுபிக் பெருங்கடல் – ஹம்போல்ட் நீரோட்டம்

2) அட்லாண்டிக் பெருங்கடல் – பால்க்லாந்து மற்றும் பெங்குலா நீரோட்டம்

3) இந்திய பெருங்கடல் – மேற்கு ஆஸ்திரேலிய நீரோட்டம்

A] 1 & 2 B] 2 & 3 C] 1 & 3 D] 1, 2 & 3

விடை: D] 1, 2 & 3

  • மேற்கண்ட மூன்று பெரும் கடல் நீரோட்டங்களும் அவற்றில் பகுதி குளிர்ந்த நீரை தென் பெருங்கடலில் இருந்து பெறுகின்றன. பெருங்கடல் மேற்பரப்பு நீரோட்டங்களை தவிர, பெருங்கடல் மேற்பரப்புக்கு கீழ் ஒரு சிக்கலான அமைப்புடைய நீரோட்டங்கள் தென்பெருங்கடலுக்கும் அதன் வடக்கிலுள்ள பெருங்கடலுக்கும் இடையில் காணப்படுகிறது.

188) கீழ்க்கண்டவற்றுள் பெருங்கடல் நீரோட்டங்களின் சிறப்பம்சங்கள் யாவை?

1) பெருங்கடல் நீரோட்டங்கள் உலக காலநிலையில் பெரும் பங்கு வகிக்கின்றன.

2) வெப்ப நீரோட்டமும், குளிர் நீரோட்டமும் சந்திக்கின்ற இடத்தில் அடர் மூடுபனி உருவாகிறது.

3) வெப்ப நீரோட்டம் அது நகர்ந்து செல்லும் கடற்கரையோர பகுதியின் வெப்ப நிலையை அதிகரிக்கிறது.

A] 1 & 2 B] 2 & 3 C] 1 & 3 D] 1, 2 & 3

விடை: A] 1 & 2

  • வெப்ப நீரோட்டம் அது நகர்ந்து செல்லும் கடற்கரையோர பகுதியின் வெப்பநிலையைக் குறைக்கிறது. கல்ப் வெப்ப நீரோட்டம், லாப்ரடார் குளிர் நீரோட்டத்தை நியூ பவுண்ட்லாந்திற்கு அருகில் சந்திக்கின்ற இடத்தில் மிக அடர்த்தியான மூடுபனி உருவாகிறது.

189) கீழ்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடு.

1) வெப்ப நீரோட்டத்தின் மீது வீசுகின்ற காற்று வெப்பம் அடைவதால் அதிக மழைப் பொழிவை தருகிறது.

2) குளிர் நீரோட்டத்தின் மீது வீசுகின்ற காற்று கடுமையான வறட்சி உண்டாக்குகிறது.

  • உதாரணமாக, பெரு நீரோட்டத்தின் மீது வீசுகின்ற காற்றில் மிகவும் குளிர்ச்சியாகவும், வறண்டும் காணப்படுகிறது.

190) கீழ்க்கண்ட எந்த வகை நீரோட்டம் அட்டகாமா பாலைவனம் உருவாக காரணமாக இருந்தது?

A] பெரு நீரோட்டத்தின் குளிர்ந்த வறண்ட காற்று B] கல்ப் நீரோட்டத்தின் குளிர்ந்த காற்று

C] பெரு நீரோட்டத்தின் வெப்ப காற்று D] குரோசியா நீரோட்டத்தின் வெப்ப காற்று

விடை: A] பெரு நீரோட்டத்தின் குளிர்ந்த வறண்ட காற்று

  • பெரு நீரோட்டத்தின் மீது வீசுகின்ற காற்று மிகவும் குளிர்ச்சியாகவும், வறண்டும் காணப்படுகிறது.

191) ஜப்பான் நாட்டின் துறைமுகங்களை குளிர்காலத்தில் கூட இயங்க வைக்கும் நீரோட்டம் எது?

A] கல்ப் நீரோட்டம் B] ஒயாஷியோ நீரோட்டம்

C] பெங்குலா நீரோட்டம் D] குரோசியா நீரோட்டம்

விடை: D] குரோசியா நீரோட்டம்

  • நீரோட்டங்கள் உலக வெப்பநிலையை ஒழுங்குபடுத்துகின்றன. கப்பலை எளிதாக செலுத்த பெரிதும் உதவுகின்றன. கல்ப் நீரோட்டம் ரஷ்யா மற்றும் ஸ்காண்டிநேவியாவின் இயற்கை மற்றும் செயற்கை துறைமுகங்கள் ஆண்டு முழுவதும் செயல்பட உதவுகிறது.

192) கீழ்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடு.

1) நீரோட்டங்கள் சிலவகை மீன்கள் அது தோன்றிய இடத்தை விட்டு பிற இடங்களில் பரவி காணப்படவும் உதவுகின்றன

2) உலகின் முக்கிய மீன்பிடி தளங்கள் வெப்ப குளிர் நீரோட்டங்களும் குளிர் நீரோட்டங்களும் சந்திக்கும் இடங்களில் காணப்படுகிறது.

  • மேலும் சூரிய ஒளி ஊடுருவும் பகுதிகளில் பெருங்கடல்களில் மேல் நோக்கிய மற்றும் கீழ் நோக்கிய கிளர்கையின் காரணமாக தாதுக்கள் மேல்நோக்கி உந்தப்பட்டு மீன்களுக்கு பயன்படும் பைட்டோ பிளாங்டன்கள் உற்பத்திக்கு உதவுகின்றன.

193) கீழ்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடு.

1) கிராண்ட் திட்டு – நியூ பவுண்ட்லாந்து

2) அகுல்காஸ் திட்டு – ஆப்பிரிக்காவின் மேற்கு கடற்கரை

3) டாகர் திட்டு – தென்சீனக்கடல்

A] 1 & 2 B] 2 & 3 C] 1 & 3 D] 1, 2 & 3

விடை: A] 1 & 2

  • டாகர் திட்டு அட்லாண்டிக் பெருங்கடலில் வட அமெரிக்காவின் வட கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இவை அனைத்தும் சிறந்த மீன்பிடித் தளங்களாக விளங்குகின்றன.

194) பெட்ரோ திட்டு எந்த பெருங்கடலில் அமைந்துள்ளது?

C] பசிபிக் பெருங்கடல் D] இந்தியப் பெருங்கடல்

விடை: D] இந்தியப் பெருங்கடல்

  • ரீட் திட்டு தென்சீனக்கடலில் அமைந்துள்ளது. இது சிறந்த மீன்பிடிதத் தளமாக உள்ளது.

195) எல்நினோ எத்தனை வருடங்களுக்கு ஒருமுறை ஏற்படுகிறது?

A] 2 அல்லது 4 B] 2 அல்லது 7 C] 3 அல்லது 5 D] 3 அல்லது 7

விடை: B] 2 அல்லது 7

  • எல்நினோ என்பது 5° வடக்கு முதல் 5° தெற்கு அட்ச பகுதிகள் வரையிலும் மற்றும் 120° மேற்கு முதல் 170° மேற்கு தீர்க்க பகுதிகள் வரை அமைந்துள்ள புவியிடை கோட்டு பசுபிக் பெருங்கடல் பகுதியில் இயல்பு நிலையிலிருந்து அதிகரிக்கும் கடல் மேற்பரப்பின் வெப்ப நிலையை குறிக்கும் ஒரு நிகழ்வாகும்.

196) கீழ்க்கண்ட எந்த நிலைகளில் எல்நினோ நிகழ்கிறது?

1) வெப்பநிலை அதிகரிப்பு ஒன்றரை முதல் இரண்டு வருடங்களுக்கு நீடித்தல்

2) இவ்வெப்ப நிலை அதிகரிப்பு மேற்பரப்பிலிருந்து 20 மீட்டர் ஆழம் வரை பரவி இருத்தல்

3) பசிபிக் பெருங்கடலின் மேல் மாறுபட்ட செங்குத்து காற்று சுழற்சி நிலை ஏற்படும் போது

A] 1 & 2 B] 2 & 3 C] 3 & 1 D] 1, 2 & 3

விடை: C] 3 & 1

  • வெப்பநிலை அதிகரிப்பு மேற்பரப்பில் இருந்து 30 மீட்டர் ஆழம் வரை பரவி இருத்தல். மேலும் புவியிடை கோட்டு பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்கு பகுதியில் ஈக்வேடார் நாட்டிற்கும் சர்வதேச தேதிக் கோட்டிற்கும் இடையில் கடலின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிக்கும்போதும் எல்நினோ நிகழ்கிறது.

197) எல்நினோவால் உலக அளவில் ஏற்படும் விளைவுகளில் சரியானது எது?

1) எல்நினோ நீரோட்டம் ஜெட் காற்றை பாதிக்கிறது.

2) காற்று சுழற்சியினால் ஏற்படும் மாற்றம் பல நாடுகளின் பொருளாதாரத்தை பாதிக்கிறது.

3) ஜப்பான் கடலில் அதிக எண்ணிக்கையில் சூறாவளி உருவாகிறது.

A] 1 & 3 மட்டும் B] 1 & 2 மட்டும் C] 2 & 3 D] 1, 2 & 3

விடை: B] 1 & 2

  • எல்நினோ விளைவுகள் உலக அளவில் எதிர் கொள்ளப்படுகிறது. உலகளாவிய வானிலை தன்மையில் பெரிய அளவில் ஏற்படும் மாற்றம் சுற்றுச்சூழல் பாதிப்பு, விவசாயம், வெப்பமண்டல சூறாவளி, காட்டுத் தீ, வறட்சி வெள்ளம், வெள்ளம் தொடர்பான சுகாதாரக்கேடு ஆகியவற்றை பாதிக்கிறது. ஜப்பான் கடலில் குறைந்த எண்ணிக்கையில் சூறாவளி உருவாகிறது.

198) எல்நினோவால் ஏற்படும் விளைவுகளில் சரியானது எது?

1) குளிர்காலத்தில், கலிபோர்னியா அதிக மழையையும், வட ஐரோப்பாவில் வறண்ட குளிர்காலமும், தென் ஐரோப்பாவில் மிதமான குளிரும் காணப்படுகின்றன.

2) கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் உள்ள பெரு அதிக மழைப்பொழிவை பெறுகிறது

3) தென்கிழக்கு ஆசியா மிகுந்த வறட்சியையும் காட்டு தீயையும் எதிர்கொள்கிறது.

A] 1 & 2 B] 2 & 3 C] 3 & 1 D] 1, 2 & 3

விடை: D] 1, 2 & 3

  • கிழக்கு பசிபிக் பெருங்கடலில் வெப்பம் அதிகரிப்பது இந்தியாவில் காணப்படும் இயல்பான பருவக்காற்று கால நிலையோடு தொடர்புடையதாகும். அதேவேளையில் மத்திய பசிபிக் பெருங்கடலில் வெப்பம் அதிகரிப்பது இந்தியாவில் வறட்சி நிலை உருவாக காரணமாகிறது. தொடர்ந்து மேற்கு பகுதியை நோக்கி வெப்பம் அதிகரிக்கும்போது இந்திய பருவக்காற்று முடக்கப்படுகிறது.

199) வியாபார காற்று வலிமை அடையும் போது கிழக்கு பசிபிக் பெருங்கடலில் எந்தவகை நீரோட்டம் மேலெழும்புகிறது?

A] வெப்ப நீரோட்டம் B] குளிர் நீரோட்டம்

C] மிதவை நீரோட்டம் D] எதுவும் இல்லை

விடை: B] குளிர் நீரோட்டம்

  • லாநினோ என்பதை எல்நினோவிற்கு எதிர்மறையான நிகழ்வு ஆகும். காற்று சுழற்சியானது மேற்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் மட்டும் வீசுகிறது. தென்கிழக்கு ஆசியாவில் ஈர காலநிலையும், தென்னமெரிக்காவில் வறண்ட நிலையும் பதிவாகிறது.

200) கிழக்கு மற்றும் மேற்கு அயனமண்டல பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் காற்றழுத்த வேறுபாட்டினை எவ்வாறு அழைக்கிறோம்?

A] தெற்கு அலைவு B] மேற்கு அலைவு

C] கிழக்கு அலைவு D] வடக்கு அலைவு

விடை: A] தெற்கு அலைவு

  • வானியல் வல்லுனர்கள் தெற்கு அலைவிற்கும், எல்நினோ, லாநினா நிகழ்வுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை ஆராய்ந்து உறுதிப்படுத்தியுள்ளனர்.

201) தெற்கு அலைவு மற்றும் எல்நினோ, லாநினா நிகழ்வுகளையும் சேர்த்து ஆய்வு செய்யும்போது ____ என்ற சுருக்கமான சொல் பயன்படுத்தப்படுகிறது.

A] ELSO B] ENSO C] NESO D] LESO

விடை: B] ENSO

  • ENSO என்பது ElNino Southern Oscillation என்று பொருள்படும்.

202) எல்நினோவிற்கும், லாநினாவிற்கும் முறையே பெரு நாட்டு மீனவர்கள் வைத்த பெயர் யாது?

A] சிறியவர்கள், பெரியவர்கள் B] அதிகமானது, குறைவானது

C] ஆண் குழந்தை, பெண் குழந்தை D] வேகமானது, மெதுவானது

விடை: C] ஆண் குழந்தை, பெண் குழந்தை

  • ஒரு கிறிஸ்துமஸ் சமயத்தில் முதன்முதலாக எல்நினோ காலநிலை பற்றிய அறிந்ததால் பெருருநாட்டின் மீனவர்கள் ஆண் குழந்தை அல்லது குழந்தை இயேசு என்று எல்நினோவிற்கும், பெண் குழந்தை என்று லாநினாவிற்கும் பெயர் வைத்தனர்.

203) கீழ்க்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடு.

1) நார்வே கடற்கரை மற்றும் வெடல் கடல் ஆகிய அட்லாண்டிக் பெருங்கடலின் எல்லை பகுதியில் கடல் நீரானது கீழ் இறங்குகிறது.

2) வட பசிபிக் பெருங்கடலிலும், இந்தியப் பெருங்கடலிலும் குளிர்நீர் மேலெழுகிறது.

  • உலகப் பெருங் கடலில் ஏற்படும் மேற்கண்ட சுழற்சியானது கடத்துப் பட்டை என அழைக்கப்படுகிறது. மெதுவான நிதானமான முப்பரிமாண இந்நீர் சுழற்சியானது, நீரில் கரைந்த வாயுக்கள் மற்றும் திட பொருட்களை பகிர்ந்து, சத்துக்களை நீரில் கலந்து வெவ்வேறு பெருங்கடல் கொப்பரைகளுக்கு எடுத்துச் செல்கின்றன.

204) கடத்துப் பட்டை சுழற்சியில் பாதிப்பு ஏற்பட்டால் எத்தனை ஆண்டிற்குள் காலநிலை மாற்றம் ஏற்படும்?

A] 4 B] 6 C] 8 D] 10

விடை: D] 10

  • கடத்துப் பட்டை சுழற்சியானது புவியின் காலநிலையை நிலைப்படுத்துகிறது. இக்கடத்துப் பட்டை சுழற்சியானது இயல்பான பெருங்கடல் சுழற்சியின் எளிமைப்படுத்தப்பட்ட விளக்கமாகும்.

205) கண்டச் சரிவிற்கும், ஆழ்கடல் சமவெளிக்கும் இடைப்பட்ட பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A] கண்ட எழுச்சி B] ஆழ்கடல் எழுச்சி

C] கடலடி பிளவு D] கண்ட உயர்வு

விடை: A] கண்ட எழுச்சி

206) வெப்பம் மற்றும் உவர்ப்பிய வேறுபாட்டால் பெருங்கடல்களில் உருவாகும் நீர் சுழற்சி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A] கடல் சுழற்சி B] வெப்ப உவர் சுழற்சி

C] வெப்ப உமிழ் சுழற்சி D] வெப்பம் கொள் சுழற்சி

விடை: B] வெப்ப உவர் சுழற்சி

207) காற்றினால் உந்தப்பட்டு உருவாகும் அலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A] சிறுகு அலை B] காற்றலை

C] உந்த அலை D] பெருகு அலை

விடை: D] பெருகு அலை

  • இது தல காற்றுகளால் பாதிக்கப்படுவது இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!