Book Back QuestionsTnpsc

நீர் Book Back Questions 8th Science Lesson 13

8th Science Lesson 13

13] நீர்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

ஹென்றி கேவென்டிஷ் ஒரு ஆங்கில தத்துவியலாளர், அறிவியலாளர், வேதியியலாளர் மற்றும் இயற்பியலாளர் ஆவார். இவர் ஹைட்ரஜன் வாயுவைக் கண்டறிந்தார். ஹைட்ரஜனை எளிதில் எரியும் காற்று என இவர் அழைத்தார். உலோகங்களை செறிவு மிகுந்த அமிலங்களுடன் கலந்து ஹைட்ரஜனை உருவாக்கினார். மேலும் உலோகங்களை செறிவு மிகுந்த காரங்களுடன் சேர்த்து கார்பன் டை ஆக்சைடையும் இவர் உருவாக்கினார்.

பனிக்கட்டியின் மேல் சறுக்கும் ஸ்கேட்டர்கள் அதன் மீது அழுத்தத்தைச் செலுத்துகிறார்கள். இந்த அழுத்தம் பனிக்கட்டியின் உறைநிலையைக் குறைக்கிறது. இதன் விளைவாக ஸ்கேட்டின் அடியில் பனிக்கட்டி உருகி ஸ்கேட்டர்களால் எளிதில் பனிக்கட்டியின் மீது சருக்க முடிகிறது. ஸ்கேட்டர்கள் முன்னோக்கி நகரும் போது அழுத்தம் குறைந்து நீர் மீண்டும் பனிகட்டியாக மாறுகிறது.

தூய நீர் கீழ்க்காணும் இயற்பியல் பண்புகளைப் பெற்றுள்ளது. தூய நீரின் கொதிநிலையானது ஒரு வளிமண்டல அழுத்தத்தில் 1000C ஆகும். தூய நீரின் உறைநிலையானது ஒரு வளிமண்டல அழுத்தத்தில் O0C ஆகும். தூய நீரின் அடர்த்தியானது 1 கி/செ.மீ3 ஆகும்.

மீன் மற்றும் இறைச்சியை பனிகட்டியினுள் வைப்பதன் மூலம் கெட்டுவிடாமல் அவற்றைப் பராமரிக்க முடியும். பனிக்கட்டியின் உள்ளுறை வெப்பம் அதிகமாக இருப்பதால், அது உருகும் போது மீன்களிலிருந்து அதிக அளவு வெப்பத்தை உறிஞ்சிக் கொள்கிறது. இதனால் உணவினை குறைந்த வெப்ப நிலையில் நீண்ட நேரம் கெட்டுப்போகாமல் பாதுகாக்க முடிகிறது.

தாமிரம் எந்த வெப்ப நிலையிலும் நீருடன் வினைபுரிவதில்லை. ஆகையால், குழாய்கள் மற்றும் கொதிகலன்கள் உருவாக்குவதில் தாமிரம் பயன்படுத்தப்படுகிறது.

குழாய் நீர், நதி நீர் மற்றும் கிணற்று நீர் ஆகியவை திடப்பொருள்களைக் கொண்டுள்ளன. ஆனால், மழை நீர் மற்றும் வடிகட்டிய நீரில் திடப்பொருள்கள் கரைந்திருப்பதில்லை. எனவே, இந்த நீர் ஆவியான பிறகு பொதுமைய வளையங்களை உருவாக்குவதில்லை.

சாக்கடலில் (Dead Sea) நீரின் உப்புத் தன்மை மிக அதிகம். இது உப்பு நிறைந்த ஒரு ஏரியாகும். இந்த ஏரி கடலுடன் இணைந்திருக்காமல் தனித்துக் காணப்படுகிறது. இது நிலத்தால் சூழப்பட்டுள்ளதால் இதிலுள்ள நீர் ஆவியாகி உப்புத் தன்மையின் அளவு சீராக அதிகரித்து வருகிறது. தற்போது அதன் உப்புத் தன்மை மிக அதிகமாக இருப்பதால் கடல் வாழ் உயிரினங்கள் அதில் வாழ முடியாது. எனவே தான், இது சாக்கடல் என்று அழைக்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் 4.6 மில்லியன் குழந்தைகள் வயிற்றுப் போக்கினால் இறக்கின்றனர். தூய நீர் சுகாதாரம் மற்றும் உடல்நலத்தை மேம்படுத்துகிறது.

நீரில் கலந்துள்ள மாசுக்கள் மற்றும் கிருமிகளை நீக்குவதற்கு RO சுத்திகரிப்பான்கள் பயன்படுகின்றன. மேலும், இவை நீரின் சுவையையும் கூட்டுகின்றன. RO என்பது நீர் சுத்திகரிப்பான்களில் பயன்படுத்தப்படும் ‘Reverse Osmosis’ எனப்படும் தொழில் நுட்பத்தைக் குறிக்கிறது. மேலும், சில ROக்களில் கிருமிகளை அழிக்கக் கூடிய புற ஊதா (UV) அலகுகளும் நீரைச் சுத்திகரிப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றன.

வாலை வடிநீர் மற்றும் காய்ச்சிய நீர் சுவையாக இருப்பதில்லை. காற்று, கார்பன் டை ஆக்சைடு மற்றும் தாதுக்கள் கரைந்துள்ளதாலேயே குடிநீர் நல்ல சுவையைப் பெற்றுள்ளது.

பூமியின் மீது காணப்படும் நீரில் 90% நீர் விவசாயம் மற்றும் நீர்ப்பாசனத்திற்காகவே பயன்படுத்தப்படுகிறது.

இந்தியாவில் மிகப்பெரிய நீர் மாசுபாட்டு மூலம் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் ஆகும். துணி துவைத்தல், சமைத்தல், குளித்தல் போன்றவற்றிற்காக ஒரு நபர் ஒரு நாளைக்கு சராசரியாக 135 லிட்டர் நீரைப் பயன்படுத்துகிறார்.

காய்கறிகளை விளைவிப்பதற்கு நெகிழித் தாள்கள் விவசாயத்தில் பயன்படுத்தப்படுகின்றன. அறுவடைகால முடிவில், இந்த நெகிழித் தாள்கள் மீண்டும் மண்ணிலேயே உழவு செய்யப்படுகின்றன. நெகிழித் தாள்கள் சிறிய துண்டுகளாக உடைந்து மண் புழுக்களால் உண்ணப்படுகின்றன. இது அவற்றின் ஆரோக்கியத்திற்கும் மண்ணிற்கும் தீங்கு விளைவிக்கின்றது.

ஒவ்வொரு நன்னீர் மூலத்திலும் நுண்ணிய நெகிழித் துண்டுகள் காணப்படுகின்றன. ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிக் பகுதியின் உறைந்த நீர்ப் பரப்பிலிருந்து 5,000 மீட்டர் ஆழம் கொண்ட ஆழ்கடல் தளத்தின் அடிப்பகுதி வரை அவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் பாட்டிலில் அடைக்கப்பட்ட நீர் மற்றும் குழாய் நீரில் நுண்ணிய நெகிழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. எந்த வெப்ப நிலையில் நீர் பனிக்கட்டியாக மாற்றமடையும்?

அ) 00 C

ஆ) 1000 C

இ) 1020 C

ஈ) 980 C

2. நீரின் கார்பன் டை ஆக்சைடின் கரைதிறன் அதிகமாவது

அ) குறைவான அழுத்தத்தில்

ஆ) அதிகமான அழுத்தத்தில்

இ) வெப்ப நிலை உயர்வால்

ஈ) ஏதுமில்லை

3. நீரினை மின்னாற்பகுக்கும் போது எதிர்மின் வாயில் சேகரிக்கப்படும் வாயு.

அ) ஆக்சிஜன்

ஆ) ஹைட்ரஜன்

இ) நைட்ரஜன்

ஈ) கார்பன் டை ஆக்சைடு

4. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது நீரை மாசுபடுத்தும்?

அ) ஈயம்

ஆ) படிகாரம்

இ) ஆக்சிஜன்

ஈ) குளோரின்

5. நீரின் நிரந்திர கடினத்தன்மைக்குக் காரணமாக இருப்பவை

அ) சல்பேட்டுகள்

ஆ) தூசுக்கள்

இ) கார்பனேட் மற்றும் பைகார்பனேட்

ஈ) கரைந்துள்ள பிற பொருள்கள்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. நீர் நிறமற்றது, மணமற்றது மற்றும் _____________

2. நீரின் கொதிநிலை ___________

3. நீரின் தற்காலிகக் கடினத்தன்மை ____________ முறையில் நீக்கப்டுகிறது.

4. நீர் ____________ வெப்ப நிலையில் அதிக அடர்த்தியினைப் பெற்றிருக்கும்.

5. ஏற்றம் ___________ செயல்பாட்டைத் துரிதப்படுத்தும்.

III. சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக

1. கழிவு நீரினை நன்கு சுத்திகரித்த பிறகே நன்னீர் நிலைகளில் கலக்க அனுமதிக்கப்பட வேண்டும்.

2. கடல் நீரில் உப்புகள் கரைந்துள்ளதால் அதனை விவசாயத்திற்குப் பயன்படுத்தலாம்.

3. வேதி உரங்களை அதிக அளவில் பயன்படுத்துவதால் மண்ணின் தரம் குறைந்து நீர் மாசுபடுகிறது.

4. நீரின் அடர்த்தியானது அனைத்து வெப்ப நிலையிலும் மாறாமல் இருக்கும்.

5. கடின நீரில் சோப்பு நன்கு நுரையினைத் தரும்

IV. பொருத்துக:

1. சர்வ கரைப்பான் – அ. நீர் மாசுபடுத்தி

2. கடின நீர் – ஆ. கிருமிகளைக் கொல்லுதல்

3. கொதித்தல் – இ. ஓசோனேற்றம்

4. நுண்ணுயிர் நீக்கம் – ஈ. நீர்

5. கழிவுநீர் – உ. வயிற்று உபாதைகள்

V. கீழ்க்காணும் கூற்றுகளுக்கு காரணம் கூறுக:

1. வீழ்படிவுத் தொட்டியில் நீருடன் படிகாரம் சேர்த்தல்.

2. நீர் ஒரு சர்வ கரைப்பான்.

3. பனிக்கட்டி நீரில் மிதத்தல்.

4. நீர்வாழ் விலங்கினங்கள் நீரினுள் சுவாசித்தல்.

5. கடல் நீர் குடிப்பதற்கு உகந்த நீரல்ல.

6. பாத்திரங்களைத் தூய்மையாக்க கடின நீர் உகந்தது அல்ல.

விடைகள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. 00 C, 2. அதிகமான அழுத்தத்தில், 3. ஹைட்ரஜன், 4. ஈயம், 5. சல்பேட்டுகள்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. சுவையற்றது, 2. 1000 C, 3. கொதிக்க வைத்தல், 4. 40 C, 5. வீழ்ப்படிதல்

III. சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக

1. சரி, 2. பயன்படுத்த முடியாது, 3. சரி, 4. மாறும், 5. மென்னீரில்

IV. பொருத்துக:

1. ஈ, 2. உ, 3. ஆ, 4. இ, 5. அ

V. கீழ்க்காணும் கூற்றுகளுக்கு காரணம் கூறுக:

1. சில நேரங்களில் வீழ்படிதலை துரிதப்ப டுத்துவதற்காக பொட்டாஷ் படிகாரமானது நீருடன் சேர்க்கப்படுகிறது. இந்நிகழ்வினை ஏற்றம் (loading) என்கிறோம். பொட்டாஷ் படிகாரமானது மாசுடன் சேர்ந்து வீழ்படிதலைத் துரிதப்படுத்துகிறத

2. கரைப்பான் என்பது பிற பொருள்களைக் (கரைபொருள்) கரைக்கக்கூடிய பொருளாகும். எடுத்துக்காட்டாக, உப்புக் கரைசலில் நீர் கரைப்பானாகவும், உப்பு கரைபொருளாகவும் உள்ளது. பிற திரவங்களுடன் ஒப்பிடுகையில் தண்ணீருக்கு மட்டுமே அநேக பொருள்களைக் கரைக்கும் தனித்துவமான பண்பு உள்ளது. இது உப்பு, சர்க்கரை போன்ற திடப்பொருள்களையும், தேன், பால் போன்ற திரவங்களையும், ஆக்சிஜன், கார்பன் டைஆக்சைடு போன்ற வாயுக்களையும் கரைக்கும் திறன் பெற்றது. எனவே, இது சர்வ கரைப்பான் என்று அழைக்கப்படுகிறது.

3. அறை வெப்பநிலையில் உள்ள நீர் நிறைந்த குவளையினுள் பனிக்கட்டித் துண்டுகளைப் போடும்போது, அவை மிதக்கின்றன. ஏனெனில், பனிக்கட்டியானது நீரைவிட இலேசானது. பனிக்கட்டியின் அடர்த்தியானது நீரின் அடர்த்தியை விட குறைவு என்பதை இது குறிக்கிறது.

4. திடப்பொருள்கள் மற்றும் தாதுக்கள் தவிர, காற்றும் நீரில் கரைந்துள்ளது. அனைத்து இயற்கை நீர் ஆதாரங்களிலும் காற்று கரைந்துள்ளது. நீரில் நைட்ரஜனின் கரைதிறனைவிட ஆக்சிஜனின் கரைதிறன் அதிகமாக உள்ளது. நீரில் நைட்ரஜன் மற்றும் கார்பன் டைஆக்சைடு தவிர சுமார் 35.6% ஆக்சிஜனும் கரைந்துள்ளது. இவைஉயிரினங்கள் உயிர்வாழ்வதற்கு நீரில் காற்று கலந்திருப்பது அவசியமாகும்.

5. ஒவ்வொரு லிட்டர் கடல் நீரிலும் 35 கிராம் சாதாரண உப்பு எனப்படும் சோடியம் குளோரைடு கரைந்துள்ளது. அது உவர் நீர் எனப்படும். இது பருகுவதற்கு உகந்ததல்லாத நீர் எனப்படுகிறது.

6. சில நேரங்களில் உப்பு மற்றும் தாதுக்கள் நீரில் அதிகளவில் கரைந்திருக்கும். இவை நுரைக்குப் பதிலாக ’ஸ்கம்’ என்ற படிவை ஏற்படுத்துகின்றன. இது அழுக்கு நீக்குதலை மேலும் கடினமாக்குகிறது. இவ்வகையான நீரானது கடின நீர் என்றழைக்கப்படுகிறது. கால்சியம் மற்றும் மெக்னீசியம் உப்புகள் நீரில் கரைந்திருப்பதே அதன் கடினத்தன்மைக்குக் காரணமாகும். இது பாத்திரங்கள் மற்றும் கொள்க லன்களின் மீது கடினமான படிவுகளை உருவாக்கி அவற்றைச் சேதப்படுத்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!