Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Samacheer NotesTnpsc

நுகர்வு மற்றும் முதலீடு சார்புகள் Notes 12th Economics Lesson 4 Notes in Tamil

12th Economics Lesson 4 Notes in Tamil

4. நுகர்வு மற்றும் முதலீடு சார்புகள்

“மதிப்புக் கோட்பாட்டின் இரு பக்கங்களாக தேவைக் கோட்பாடும் அளிப்புக் கோட்பாடும் உள்ளன. அது போல ஏற்ற இறக்கங்களின் (Business Cycle) கோட்பாட்டின் இருபக்கங்களாக பெருக்கி மற்றும் முடுக்கி கோட்பாடுகள் உள்ளன. இருபக்கங்களும் செயல்படுவதை விளக்குவதே முழுக்கோட்பாடாகும்”.

  • J.R.ஹிக்ஸ்

அறிமுகம்

  • இரண்டாம் அத்தியாயத்தில் நாட்டு வருமானம் மற்றும் அதன் அளவீடு, முக்கியத்துவம் மற்றும் சிக்கல்களைப் பற்றி பார்த்தோம். இந்த அத்தியாயம் நுகர்வுச் சார்பு மற்றும் முதலீட்டுச் சார்பு பற்றி விளக்குகிறது. இது நாட்டு வருமானத்தை பாதிக்கும் முக்கிய காரணியாக செயலாற்றுகிறது.
  • நாட்டு வருமான வளர்ச்சியை முடுக்கி விடுவதுதான் பேரியல் பொருளாதாரத்தின் முக்கிய நோக்கமாகும். தேசிய வருவாயானது நுகர்வு பண்டங்கள் (C) மற்றும் முதலீட்டுப் பண்டங்களை (I) உள்ளடக்கி இருப்பதை நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம்.
  • முதலீட்டுக்கும் தேசிய வருவாய்க்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. முதலீட்டை அதிகரிப்பதால் எந்த அளவுக்கு தேசிய வருவாய் அதிகரிக்கும் என்பதை “பெருக்கி” காட்டுகிறது. அந்த “பெருக்கியின்” மதிப்பு நுகர்வுச் சார்பு அல்லது இறுதிநிலை நுகர்வு நாட்டத்தைப் பொறுத்தே அமைகிறது.
  • நுகர்வுச் சார்பு என்பது நுகர்வுச் செலவுக்கும் தேசிய வருவாய்க்கும் உள்ள தொடர்பாகும். தேசிய வருவாயில் செலவிடப்படாமல் உள்ள தொகை சேமிப்பு ஆகும். இது பின் மூலதனமாக மாறுகிறது. நுகர்வுச் செலவிற்கும் மூலதனச் செலவிற்கும் உள்ள தொடர்பை முடுக்கி கோட்பாடு விளக்குகிறது. இவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை.
  • இந்த அத்தியாயத்தில் நுகர்வுச் சார்பு, நுகர்வு சார்ந்த உளவியல் கோட்பாடு, முதலீட்டுச் சார்பு, பெருக்கி, முடுக்கி போன்றவற்றை அறியலாம்.

நுகர்வுச் சார்பு

நுகர்வுச் சார்பின் பொருள்

வருவாய்க்கும் நுகர்வுக்கும் உள்ள தொடர்பையே “நுகர்வு சார்பு” அல்லது “நுகர்வு நாட்டம்” என்கிறோம். இது “மொத்த நுகர்வு மற்றும் மொத்த நாட்டு வருமானம் ஆகிய இரு ஒட்டுமொத்தத்திற்கிடையேயான சார்பு தொடர்பாகும்”.

இதனை C = f(Y) எனலாம்.

இதில் C = நுகர்வு; Y = வருமானம்; f = சார்பு

எனவே நுகர்வுச் சார்பு நுகர்வு மற்றும் வருமானத்திற்கிடையேயான சார்புத் தொடர்பை விளக்குகிறது. C = சார்பு மாறி, y = சாரா மாறியாகவும் உள்ளது.

இங்கு வருவாய் மற்றும் நுகர்வு மட்டுமே பேசப்படுகின்றன. இவற்றைப் பாதிக்கக்கூடிய எத்தனையோ மாறிகள் இருக்கலாம். அவை அனைத்திலும் மாற்றம் இல்லை என அனுமாதித்தே இந்த சார்பு விளக்கப்படுகிறது.

நுகர்வுச் சார்பு அட்டவணை பல்வேறு வருமான நிலைகளில் உள்ள பல்வேறு நுகர்வுச் செலவினைக் காட்டுவதாகும். கீழ்க்காணும் ஒரு கற்பனை அட்டவணை நுகர்வுச் சார்பை விளக்குகிறது.

வருமானம் – நுகர்வு அட்டவணை (₹ கோடிகளில்)

வருமானம்

Y

நுகர்வு

C

சேமிப்பு

S

0 20 -20
60 70 -10
120 120 0
180 170 10
240 220 20
300 270 30
360 320 40

C = 100 + 0.8Y

என்று கொள்ளும்போது MPC = 0.8

வருமானம் பூஜ்யம் (Y = 0) ஆனாலும் நுகர்வுச் செலவு 100 ஆக (C = 100) இருக்கும். வருமானம் 100 (Y = 100) எனில் நுகர்வுச் செலவு 180 (C = 180) ஆகவும், வருமானம் 200 (Y = 200) எனில் நுகர்வுச் செலவு 260 (C = 260) ஆகவும், வருமானம் 300 (Y = 300) எனில் நுகர்வுச் செலவு 340 ( C = 340) ஆகவும் இருக்கும்.

Y = 300 எனில்

C = 340 ஆக இருக்கும் போது

(MPC = )

கணிதரீதியாக

C = a + b Y or C = 20 + 0.8Y

இதில் a > மற்றும் b <

C = நுகர்வு, a = 20 = நிலையானது, Y = வருமானம்

B = MPC (இறுதிநிலை நுகர்வு நாட்டம்) = 0.8 =

தரப்பட்டுள்ள அட்டவணையில் நுகர்வு செலவு அதிகரிப்பதானது என்பது அதிகரிக்கும் வருமானத்தைச் சார்ந்து உள்ளது. இங்கு வருமானம் பூஜ்யமாக இருந்தாலும் மக்கள் ஏற்கனவே உள்ள சேமிப்பை சாப்பிடுவதற்கு செலவு செய்பவர் அப்பொழுதுதான் உயிர்வாழ முடியும் (தன்னாட்சி நுகர்வு).

இந்த வரைபடத்தில் வருமானம் M = 120 ஆக இருக்கும்போது நுகர்வும் (C) 120 ஆக உள்ளது (B – என்னும் புள்ளியில்).

வருவாய் Y = 180 ஆக அதிகரிக்கும் போது நுகர்வு C = 170 ஆக உயர்கிறது (S என்னும் புள்ளியில்) Y 360 ஆக உயர்ந்தால், C = 320, S = 40

மேற்காண் வரைபடத்தில் வருமானம் படுகிடைக் கோட்டிலும், நுகர்வு செங்குத்துக் கோட்டிலும் விளக்கப்படுகிறது. 45 –டிகிரி கோட்டின் எல்லா புள்ளியிலும் நுகர்வும் வருமானமும் சமமாக உள்ளது. வருமான மாற்றத்திற்கு சமமான அளவில் நுகர்வும் மாறும் என்ற எடுகோளைக் கொண்டுள்ளதாதல் நேர்கோட்டு நுகர்வுச் சார்பாக உள்ளது.

நுகர்வுச் சார்பானது நுகர்வுக்காக செலவிடும் தொகையை மட்டும் அளவிடாமல், சேமிக்கப்பட்ட தொகையையும் சேர்த்து மதிப்பிடுகிறது. 450 கோடு என்பது பூஜ்ய சேமிப்பையையும், C என்னும் கோடு நுகர்வு மற்றும் சேமிப்பின் பகிர்வைக் காட்டுகிறது.

முக்கிய கருத்துருக்கள்

  1. சராசரி நுகர்வு நாட்டம் = =
  2. இறுதிநிலை நுகர்வு நாட்டம்

=

  1. சராசரி சேமிப்பு நாட்டம் =
  2. இறுதிநிலை சேமிப்பு நாட்டம்
  3. சராசரி நுகர்வு நாட்டம்

வருமானத்திற்கும் நுகர்வுக்குமான வீதமே சராசரி நுகர்வு நாட்டமாகும். கணிதரீதியாக

APC =

இங்கு, C – நுகர்வு , Y – வருமானம்

2. இறுதிநிலை நுகர்வு நாட்டம்

வருமான மாற்றத்திற்கும் நுகர்வு மாற்றத்திற்கிடையேயான வீதமே இறுதிநிலை நுகர்வு நாட்டம் என வரையறை செய்யப்படுகிறது. கணித ரீதியாக

MPC =

இங்கு

= நுகர்வு மாற்றம்

= வருமான மாற்றம்

MPC – நேர்மறை எண் ஆனால் ஒன்றுக்கும் கூறைவானது.

0 <

3. சராசரி சேமிப்பு நாட்டம் (APS)

வருமானத்திற்கும், சேமிப்பிற்குமிடையேயான வீதமே சேமிப்பு நாட்டம் எனப்படும். சராசரி சேமிப்பு நாட்டம் என்பது மொத்த சேமிப்பை மொத்த வர்வாய் வகுத்தால் கிடைக்கக்கூடியதாகும். வேறுவகையில் கூறினால் மொத்த வருவாய்க்கும், மொத்த சேமிப்பிற்கிடையேயான வீதமாகும். கணிதரீதியாக

APS =

இங்கு S = சேமிப்பு, Y = வருமானம்

4. இறுதிநிலை சேமிப்பு நாட்டம்

வருமான மாற்றத்திற்கும் சேமிப்பு மாற்றத்திற்கும் இடையேயுள்ள வீதமே இறுதிநிலை சேமிப்பு நாட்டமாகும்.

இறுதிநிலை சேமிப்பு நாட்டத்தை அறிய சேமிப்பு மாற்றத்தை, வருமான மாற்றத்தினால் வகுத்தால் கிடைக்கும். கணித ரீதியாக

MPS =

இங்கு,

= சேமிப்பு மாற்றம்

= வருமான மாற்றம்

மேலும் MPC + MPS = 1

MPS = 1- MPC மற்றும் MPC = 1- MPS

பொதுவாக சராசரி நுகர்வு நாட்டம் சதவீதமாகவும், இறுதிநிலை நுகர்வு நாட்டம் பின்னமாகவும் இருக்கும்.

APC, MPC, APS மற்றும் MPS கணக்கிடுதல்

வருமானம்

Y

நுகர்வு

C

APC%

C/Y

APS%

S/Y

MPC MPS
120 120 (120/120) 100 = 100 (0/120)0
180 170 (170/180)100 = 94 (10/180)100 50/60 = 0.63 0.17

கீன்ஸின் நுகர்வு பற்றிய உளவியல் விதி (Keyne’s Psychological Law of Consumption)

கீன்ஸ் நுகர்வு பற்றிய உளவியல் (மனஇயல்) விதி ஒன்றை முன்மொழிந்தார். அதனடிப்படையில் நுகர்வுச் சார்பை உருவாக்கினார். “உளவியல் விதியின் அடிப்படையாக மனிதன் தன் முன் அறிவு அனுபவம் மற்றும் விரிவான உண்மை ஆகியவற்றின் அடிப்படையில் பெரும் நம்பிக்கிஅயுடன் வருவாய் உயரும்போது நுகர்வை அதிகமாக்குவார்கள்; ஆனால் வருவாய் கூடிய அளவுக்கு நுகர்வு அதிகரிக்காது”. இந்த விதி மனிதன் வருமானம் உயர்ந்த முழு அளவிற்கும் செலவு செய்யமாட்டார்கள் என எடுத்துரைக்கிறது.

அனுமானங்கள்

கீன்ஸின் விதி கீழ்க்காணும் அனுமானங்களை உள்ளடக்கியது.

  1. மற்றவை மாறாது

வருமான பகிர்வு, சுவை, பழக்கவழக்கம், சமூக காரணிகள், விலை மாற்றம், மக்கள் தொகை பெருக்கம் போன்றவை மாறாமல் நிலையாக உள்ளது என்ற அனுமானத்தின் அடிப்படையில் நுகர்வு வருமானத்தை மட்டும் சார்ந்ததாகும்.

2. சுமூகமான சூழல் நிலவுகிறது

இந்த விதி நாட்டில் இயல்பான நிலை நிலவும்போது மட்டும் பொருத்தமானதாக அமையும். அபரிமிதமான மற்றும் அசாதாரண சூழ்நிலைகளான போர், புரட்சி, மிக வேக பணவீக்கம் போன்றவற்றின் போது இந்த விதி செயல்படாது. மக்கள் அதிகரித்த மொத்த பணத்தையும் நுகர்விற்கே செலவிடுவர்.

3. முதலாளித்துவ பொருளாதாரத்தில் தலையிடாக் கொள்கை கடைப்பிடிக்கப்படுகிறது

அரசு தலையிடாது. மக்கள் சுதந்திரமாக நுகர்வு பற்றிய முடிவினை எடுப்பார்கள். நாடு செல்வமிக்கது; முதலாளித்துவம் நிலவுகிறது.

விதியின் கருத்துக்கள்

இவ்விதி மூன்று கருத்துக்களைக் கொண்டது.

  1. வருமானம் உயரும்போது, நுகர்வு செலவும் அதிகரிக்கும். ஆனால் சிறிய அளவாக இருக்கும். காரணம் வருமானம் அதிகரிக்கும் போது, பகுதி பகுதியாக நம் விருப்பமும் நிறைவேறும், ஆதலால் நுகர்வு பொருட்களின் மீது செய்கின்ற செலவு குறைகிறது. எனவே நுகர்வு செலவு ஆனது வருமானம் அதிகரிக்கும் போது அதிகரிக்கும், ஆனால் குறைந்த அளவே அதிகரிக்கும்.
  2. அதிகரித்த வருமானம் நுகர்வு செலவிற்கும், சேமிப்பிற்கும் இடையே சில விகிதத்தில் பிரிக்கப்படுகின்றது. இது முதல் கருத்துரையின் படி தொடர்கிறது. ஏனெனில் முழுவதுமான அதிகரித்த வருமானம் நுகர்வில் முழுவதுமாக செயல்படவில்லை, மீதம் சேமிக்கப்படும் இதன் வழியில் நுகர்வும், சேமிப்பும் ஒன்றோடு ஒன்று நகர்கின்றது.
  3. அதிகரிக்கின்ற வருமானம் எப்பொழுதும் நுகர்வு மற்றும் சேமிப்பை இரண்டை அதிகரிக்க செய்யும். இது அதிகரித்த வருமானம் ஒன்று நுகர்வுகோ அல்லது சேமிப்பிற்கோ கொண்டு செல்லும். ஆதலால் அதிகரிக்கின்ற வருமானம், நுகர்வு மற்றும் சேமிப்பை இரண்டையும் அதிகரிக்கும்.

இவ்விதியின் மூன்று கருத்துரைகள் பின்வரும் அட்டவணை 3-ன் உதவியுடன் விளக்கப்படுகிறது.

அட்டவணை

விதியின் மூன்று கருத்துரைகள்

வருமானம்

Y

நுகர்வு

C

சேமிப்பு

S = Y – C

120 120 0
180 170 10
240 220 20

கருத்துரை (1)

வருமானம் ₹60 கோடிகளாக அதிகரிக்கின்றது மற்றும் நுகர்வு ₹50 கோடிகளாக அதிகரிக்கிறது.

கருத்துரை (2)

அதிகரித்த ₹60 கோடி வருமானம் இரண்டாக, நுகர்விற்கும், சேமிப்பிற்கும் இடையே முறையே பிரிக்கின்றது. (அதாவது ₹50 கோடிகளில் மற்றும் ₹10 கோடிகளில்)

கருத்துரை (3)

வருமானம் அதிகரிக்கும் பொழுது நுகர்வு மற்றும் சேமிப்பு அதிகரிக்கின்றது. நுகர்வோ அல்லது சேமிப்போ குறையவில்லை.

இந்த மூன்று கருத்துரைகளும் வரைபடத்தில் விளக்கப்பட்டுள்ளது. இங்கே வருமானம் படுகிடையாகவும் மற்றும் நுகர்வு சேமிப்பு செங்குத்து அச்சிலும் அளவிடப்படுகிறது. C-என்பது நுகர்வு சார்வு வளைகோடு, 45-டிகிரி கோடு வருமானம் மற்றும் நுகர்வை அளவு சமமாக இருப்பதைக் காட்டுகிறது.

கருத்துரை (1)

120 லிருந்து 180 ஆக வருமானம் அதிகரிக்கும் பொழுது நுகர்வும் 120லிருந்து 170ஆக அதிகரிக்கின்றது. ஆனால் அதிகரித்த நுகர்வு அதிகரித்த வருமானத்தை காட்டிலும் 10 குறைவு. அது சேமிக்கப்படுகிறது.

கருத்துரை (2)

180 லிருந்து 240 ஆக வருமானம் அதிகரிக்கும் பொழுது இது இரண்டு பகுதிகளாக நுகர்வு 170லிருந்து 220 ஆகவும், சேமிப்பாக 10 லிருந்து 20 ஆகவும் முறையே பிரிகின்றது.

கருத்துரை (3)

வருமானம் 180 லிருந்து 240 உயரும்போது நுகர்வை 170 லிருந்து 220 ஆகவும், சேமிப்பை 10 லிருந்து 20 ஆகவும் அதிகரிக்க செய்கிறது. C கோட்டிற்கும் 450 கோட்டிற்கும் இடையேயுள்ள அகன்ற பகுதி சேமிப்பைக் காட்டுகிறது.

நுகர்வு சார்பை தீர்மானிக்கின்ற காரணிகள் (அகவய மற்றும் புறவய காரணிகள்)

நுகர்வு சார்பை தூண்டுகின்ற காரணிகளை ஜே.எம்.கீன்ஸ் இரண்டாக பிரிக்கின்றார். அதாவது அகவய காரணிகள் மற்றும் புறவயக் காரணிகள்.

அ) அகவய காரணிகள்

அகவய காரணிகள் உளவியல் சிந்தனைகளுடன் தொடர்புடையது. நுகர்வு சார்பை தூண்டுகின்ற முக்கிய அகவய காரணிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கீன்ஸ் எட்டு நோக்கங்களை பட்டியலிட்டு உள்ளார். இவை தனி நபர்களை செலவு செய்வது இருந்து விலக்களிக்கிறது அவையாவன:

  1. முன்னெச்சரிக்கை நோக்கம் : எதிர்பாராமல் ஏற்படும் நிகழ்விற்காக கையில் ரொக்கமாக வைப்பது. எ.கா. விபத்து, உடல் நலனின்மை
  2. எதிர்பார்க்கும் நோக்கம் : எதிர்கால தேவைக்கான விருப்பம். எ.கா. வயதான காலம்
  3. கணிக்கும் நோக்கம் : விருப்பம் மற்றும் பாராட்டை அனுபவிப்பதற்கான விருப்பம்.
  4. முன்னேறும் நோக்கம் : வாழ்க்கைத் தரத்தை முன்னேற்ற விரும்புதல் சார்ந்த விருப்பம்.
  5. பணவியல் சுதந்திர நோக்கம்
  6. வாணிப நோக்கம் (வியாபாரத்தை முன்னேற்றுவதற்கான நோக்கம்)
  7. கர்வ நோக்கம் (விட்டுச் செல்வதற்கான விருப்பம்)
  8. பேராசை நோக்கம் (முற்றிலும் மோசமான உள்ளுணர்வு)

கீன்ஸ் : முன்னெச்சரிக்கை , எதிர்பார்த்தல் கணித்தல், முன்னேறுதல், பணவியல் சுதந்திரம், வாணிபம், கர்வம், பேராசை ஆகியவை நுகர்ச்சியைப் புறக்கணிக்கும் நோக்கங்களாகக் கூறியுள்ளார்.

அரசாங்கம், நிறுவனங்கள் மற்றும் வாணிப கழகங்கள், தொழிற்சாலைகளும் பின்வரும் நான்கு நோக்கங்களுக்காக முக்கியமாக சேமிக்கும்.

  1. வாணிப நோக்கம் : கடன் இல்லாமல் மூலதன முதலீடு மேற்கொள்வதற்காக வளங்களை பெறும் விருப்பம்.
  2. நீர்மைதன்மை நோக்கம் : அவசரகாலம், சிக்கல்களை சந்திப்பதற்காக நீர்மை வளங்களை பாதுகாக்கும் நோக்கம்.
  3. முன்னேறும் நோக்கம்: வருமானத்தை அதிகரிப்பதற்காகவும், வெற்றி பெறும் மேலாண்மையை நிரூபிக்க வேண்டியதற்கான நோக்கம்.
  4. நிதி விவேக நோக்கம் : கடனை செலுத்த, தேய்மானம் மற்றும் பழங்கால தொழில் நுட்பத்தை மாற்றும் நோக்கம் போன்றவற்றிற்கு தேவையான நிதி ஆதாரங்களை உறுதிப்படுத்தும் விருப்பம்.

கீன்ஸ் அகவயக் காரணிகள் குறுகிய காலத்தில் மாறாது என்றும் எனவே, நுகர்வுச் சார்வு குறுகிய காலத்தில் நிலையானது என்கிறார்.

ஆ) புறவயக் காரணிகள்

புறவயக் காரணிகள் உண்மையான மற்றும் அளவிடக்கூடியது. நீண்ட காலங்களில் இந்த காரணிகள் எளிதாக மாற்றம் அடையும். பெரும்பான்மையான புற காரணிகள் நுகர்வு சார்பை தீர்மானிக்கின்றவைகளாகும்.

  1. வருமான பகிர்வு

செல்வந்தர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையே பெரிய அளவில் வேறுபாடு இருந்தால், நுகர்வு குறைவாக இருக்கும். காரணம் செல்வந்தர்கள் குறைவான நுகர்வு விருப்பமும், அதிகப்படியான சேமிப்பு விருப்பமும் கொண்டு இருப்பர். சமநிலை வருமான பகிர்வுடைய சமூகத்தில் அதிகமான நுகர்வு விருப்பம் இருக்கும். V.K.R.V.ராவ் அவர்களால் இக்கருத்து வலியுறுத்தப்பட்டது.

2. விலை அளவு

நுகர்வு சார்பை மிக முக்கியமான தீர்மானிக்கின்ற காரணியாக இருப்பது விலை அளவே ஆகும். விலை வீழ்ச்சி அடையும் போது, உண்மை வருமானம் அதிகரிக்கும், மக்கள் அதிகமாக நுகர்வார்கள் மற்றும் சமூகத்தில் நுகர்வு விருப்பம் அதிகரிக்கும்.

3. கூலி அளவு

நுகர்வு சார்பை தீர்மானிக்கின்ற முக்கியமானதாக கூலி அளவு இருக்கின்றது. நுகர்விற்கும், கூலிக்கும் இடையே நேர்மறையான தொடர்பை கொண்டு இருக்கும். கூலி அதிகரிக்கும் போது நுகர்வுச் செலவும் அதிகரிக்கும். மேலும் எதிர்பாராத லாபம் ஏற்படும் போது இதே மாதிரி விளைவு ஏற்படும்.

4. வட்டி விகிதம்

வட்டி விகிதமும் நுகர்வுச் சார்பை தீர்மானிக்கின்ற முக்கிய காரணியாகும். அதிக வட்டி விகிதம் மக்களை அதிக அளவில் பணத்தை சேமிக்க ஊக்கம் அளிக்கும் மற்றும் நுகர்வை குறைக்கும்.

5. நிதி கொள்கை

அரசாங்கம் வரியை குறைக்கும் போது, செலவிடத்தக்க வருமானம் அதிகரிக்கும் மற்றும் சமூகத்தில் நுகர்வு விருப்பம் அதிகரிக்கும். வளர்வீத வரிக் கொள்கையானது ஏழைகளுக்கு சாதகமான வருமான பகிர்வை தருவதால், ஏழைகளின் நுகர்வு விருப்பம் மாறும்.

6. நுகர்வோர் கடன்

சுலப தவணைகளாக நுகர்வுக் கடன் அளிக்கும் போது அவர்கள் நுகர்வோர் பொருட்களான கனரக வாகனங்கள், பிரிட்ஜ், கம்யூட்டர் போன்றவற்றினை வாங்குவார்கள். இது நுகர்வை அதிகப்படுத்தும்.

7. மக்கள் தொகை காரணிகள்

மற்றவை மாறாமல் இருக்கும் போது குடும்ப அளவு அதிகமாக இருந்தால், நுகர்வு அதிகமாக இருக்கும். மேலும் குடும்ப அளவு, குடும்ப வாழ்க்கை சுழற்சி நிலை, இருப்பிடம் மற்றும் வேலைவாய்ப்பு நுகர்வுச் சார்பை பாதிக்கும். ஆரம்பநிலை கல்வி பயிலும் மாணவர்களை விட குடும்பத்தில் கல்லூரி கல்வி பயிலும் மாணவர்கள் அதிகமாக செலவு செய்வார்கள் கிராமப்புற குடும்பங்களை விட நகர்ப்புற குடும்பங்கள் அதிகமாக செலவு செய்யும்.

8. டூசன் பெரியின் அனுமானம்

நுகர்வு சார்பை பாதிக்கும் இரண்டு உற்று நோக்குதலை டூசன் பெரி ஏற்படுத்தியுள்ளார்.

அ) நுகர்வு செலவானது தற்போதைய வருமானத்தை மட்டும் சார்ந்து இல்லாமல் முந்தைய வருமானத்தையும், வாழ்க்கை தரத்தையும் சார்ந்து இருக்கும். தனி நபர்கள் குறிப்பிட்ட வாழ்க்கை தரத்துடன் வாழ்ந்து பழக்கப்பட்டு இருப்பதால், தற்போதைய வருமானம் குறைந்தாலும் தொடர்ந்து ஒரே மாதிரியாக நுகர்வு செலவு மேற்கொள்வார்கள்.

ஆ) வெளிக்காட்டும் விளைவின் காரணமாகவும் நுகர்வு தீர்மானிக்கப்படுகிறது. குறைவான வருமான உடைய மக்களும், அதிக வருமான உடைய மக்களின் நுகர்வு தரத்தால் துண்டப்படுவார்கள். மற்றொரு வகையில் ஏழை மக்கள் செல்வந்தர்களின் நுகர்வே போன்றே செலவு செய்வார்கள். இது அவர்களின் வருமானத்தையும் தாண்டி செலவு செய்ய வைக்கும்.

9. எதிர்பாராத லாபம் அல்லது நஷ்டம்

பங்குச் சந்தையில் ஏற்படும் எதிர்பாராத மாற்றம் லாபத்தையோ அல்லது நஷ்டத்தையே ஏற்படச் செய்து நுகர்வு சார்பை மேல் நோக்கியோ அல்லது கீழ் நோக்கியோ நகரச் செய்யும்.

முதலீட்டு சார்பு

முதலீட்டுச் சார்பு என்பது முதலீடு மற்றும் வட்டி வீதத்திற்கிடையேயான தொடர்பைக் குறிப்பிடுகிறது. முதலீட்டிற்கும் வட்டி வீதத்திற்கும் உள்ள சார்பு தலைகீழ் தொடர்பு உள்ளது. முதலீட்டுச் சார்பானது கீழ்நோக்கிச் செல்லும்.

I = f (r)

I = முதலீடு (சார்பு மாறிகள்)

R = வட்டி வீதம் (சார்பற்ற மாறிகள்)

முதலீடு – பொருள்

முதலீடு என்பது பங்குகள், கடன் பத்திரங்கள், அரசாங்க பங்கு மற்றும் பத்திரங்கள் வாங்குவது ஆகும். கீன்ஸின் கூற்றுப்படி, முதலீடு என்பது நிதி முதலீட்டை மட்டும் குறிக்கும், உண்மையான முதலீட்டைக் குறிக்காது. இது மாதிரியான முதலீடு நாட்டின் உண்மையான மூலதன இருப்பில் சேர்ப்பதில்லை.

கீன்ஸின் பார்வையில் முதலீடு மூலதன முதலீட்டுச் செலவை உள்ளடக்கியது ஆகும்.

முதலீட்டின் வகைகள்

தன்னிச்சையான முதலீடு மற்ரும் தூண்டப்பட்ட முதலீடு.

  1. தன்னிச்சையான முதலீடு

தன்னிசையான முதலீடு என்பது மூலதனத் திரட்சியின் மீது ஆகும் செலவு ஆகும். மாறுகின்ற வருமானம், வட்டி விகிதம், இலாப வீதத்தை சார்ந்து இருக்காது.

பொருளாதார நடவடிக்கைகளில் சுதந்திரமான எதையும் சாராத முதலீடு இது. தன்னிடையான முதலீடு வருமானம் நெகிழ்ச்சியற்றது, தன்னிச்சையான முதலீடு அளவு எல்லா நிலைகளிலும் ஒரே மாதிரியாக இருக்கும்.

தன்னிச்சை முதலீட்டு வரை கோடு X அச்சுக்கு படிக்கிடை இணைக்கோடாக இருக்கும்.

பொதுவாக, அரசு நலத்தினை கருத்தில் கொண்டு தன்னிச்சையான முதலீட்டை மேற்கொள்ளும்.

தன்னிடை முதலீடு

  • முதலீடு நாட்டு வருமானத்தைச் சார்ந்ததல்ல.
  • இலாப நோக்கின்றி நலத்திற்காக முதலீடு மேற்கொள்ளப்படுகிறது.
  • உதாரணம் : சாலைகள் அமைத்தல், பாலங்கள், பள்ளிகள், தொண்டு நிறுவனங்கள்
  • உயரும் கச்சாப் பொருட்கள் மற்றும் உழைப்பாளர்களின் ஊதியம் ஆகியவற்றை பாதிக்காது.
  • நாட்டு வளர்ச்சிக்கும், பொருளாதார மந்தத்திலிருந்து விடுபடுவதற்கும் இது அவசியம்.

பொருளாதார மந்த காலத்தில் அரசு தன்னிச்சை முதலீட்டிற்கு ஊக்கமளிக்கும். நலப் பொருளாதாரத்தின் முக்கிய பகுதி தன்னிச்சையான முதலீடு ஆகும்.

  1. தூண்டப்பட்ட முதலீடு

பொருளாதாரம் வளர்ச்சி அடையும் போது அதிகரிக்கின்ற வருமானம் மற்றும் தேவை உயர்வினால் ஏற்படும் நிலையான சொத்து மற்றும் பங்குகள் மீதான செலவே தூண்டப்பட்ட முதலீடு ஆகும்.

தூண்டப்பட்ட முதலீடு லாப நோக்கம் உடையது. தேசிய வருமானத்தில் ஏற்படும் மாற்றத்தோடு தொடர்புடையது. தேசிய வருமானத்திற்கும், தூண்டப்பட்ட முதலீட்டிற்கும் நேரிடையான தொடர்பு இருக்கிறது. தேசிய வருமானம் குறைந்தால் தூண்டப்பட்ட முதலீடும் குறையும் மற்றும் தூண்டப்பட்ட முதலீடு வருமான நெகிழ்ச்சியுடையது. பின்வருமாறு நேர்மறை சாய்வு கோடாக இருக்கும்.

வ.எண் தன்னிச்சையான முதலீடு ஊக்குவிக்கப்பட்ட முதலீடு
1 தன்னிச்சையானது திட்டமிடப்பட்டது
2 வருவாயைப் பொறுத்து நெகிழாதது வருவாயைப் பொறுத்து நெகிழ்வது
3 நல நோக்கமுடையது இலாப நோக்கமுடையது

முதலீட்டுச் சார்பின் காரணிகள் (Determinants of Investment Function)

தொன்மைப் பொருளியல் அளிஞர்கள் முதலீடு வட்டிவீதத்தை மட்டுமே சார்ந்தது என்று கூறினார்கள். ஆனால் உண்மையில் முதலீடு பல காரணிகளைப் பொறுத்து அமைகிறது. அவை கீழ்வருமாறு:

  1. வட்டி வீதம்
  2. நிலையற்ற தன்மை
  3. அரசியல் சூழல்
  4. மக்கள் தொகை வளர்ச்சி விகிதம்
  5. மூலதனப் பொருட்களின் இருப்பு
  6. புதிய பொருட்களின் தேவை
  7. முதலீட்டாளர்களின் வருமான அளவு
  8. கண்டுபிடிப்புகளும், புத்தாக்கமும்
  9. நுகர்வுத் தேவை
  10. அரசுக் கொள்கை
  11. மூலதனம் கிடைத்தல்
  12. முதலீட்டாளர்களின் சொத்துக்களின் ரொக்கத்தன்மை

ஆகிய காரணிகள் முதலீட்டளவை நிர்ணயிக்கின்றன.

கீன்ஸின் கருத்துப்படி, வாணிப எதிர்பார்ப்பு மற்றும் இலாபம் ஆகியவை முதலீட்டு அளவை முடிவு செய்வதில் முக்கிய காரணிகளாக விளங்குகின்றது. மேலும் அவர் முதலீடு மூலதன இறுதிநிலை ஆக்கத்திறன் மற்றும் வட்டி வீதத்தைப் பொருத்து அமையும் என்கிறார்.

  1. தனியார் முதலீடு என்பது மூலதன இருப்பை அதாவது தொழிற்சாலை அல்லது இயந்திரங்களை அதிகரிக்க செய்வது.
  2. மூலதனத்தின் இறுதிநிலை ஆக்கத்திறன் (MEC) என்பது முதலீட்டுத் திட்டத்தில் கிடைக்கும் எதிர்பார்க்கப்படும் வருமானம் ஆகும். குறிப்பாக இருக்கின்ற ஆண்டு உற்பத்தியில் ஏற்படும் இறுதியாக அதிகரிக்கப்பட்ட ஒரு அலகு மூலதனத்தினால் ஏற்பட்ட உற்பத்தியாகும்.
  3. மூலதன இறுதிநிலை ஆக்கத்திறன் 5 சதவீதமாகவும், வட்டி வீதம் 4 சதவீதமாக இருக்கும் பொது 4 சதவீத வட்டியில் கடன் வாங்கினாலும் 5 சதவீத உற்பத்தி எதிர்பார்க்கப்படுவதால் வாங்கலாம்.

வட்டி வீதத்திற்கும் முதலீட்டிற்கும் இடையே உள்ள உறவு

  • வட்டி வீதத்திற்கும் முதலீட்டிற்கும் இடையே உள்ள உறவு எவ்வாறு பொருளாதாரத்தை பாதிக்கிறது என்பதை விளக்கப்படுகிறது. கடன்களின் மீதான வட்டி வீதம் உயரும்போது, குறைவான முதலீடே நடைபெறும். ஏனெனில் வட்டி வீதம் அதிகரிக்கும் போது கடன் பெறுவதற்கான செலவு அதிகரிக்கும். இதனால் அதிக வருவாய் தரக்கூடிய இனங்களில் மட்டும் முதலீடு செய்யப்படும்.

வட்டி வீதமும் முதலீட்டு அளவும்

கடனுக்கான செலவு உண்மையாக உயரும்போது குறைந்த அளவு முதலீட்டில் இலாபம் தரக்கூடிய இனங்களில் முதலீடு செய்வர்.

5 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக வட்டி வீதம் அதிகரித்தால், முதலீட்டின் அளவு ₹100 கோடியிலிருந்து ₹80 கோடியாக குறைவதைக் காணலாம்.

முதலீட்டிற்கான செலவு அதிகளவு வாய்ப்புச் செலவாக இருப்பதால் வட்டி வீதம் குறையும் போது, முதலீட்டை அதிகரிக்கும் போக்கு ஏற்பட்டு விடும்.

  1. அதிக வட்டியோடு வங்கியில் இருந்து பணம் பெறுவது அதிக செலவிற்கு வழி வகுக்கும்.
  2. வங்கியில் பணத்தை சேமிப்பதினால் அதிகப்படியான ஈவு வீதம் கிடைக்கும். ஆதலால் சேமிப்பை நிதி முதலீட்டிற்கு பயன்படுத்துவதில் குறைந்த வட்டி செலுத்துவதற்கான வாய்ப்புச் செலவாக அமையும்.

வட்டி வீதம் அதிகரிப்பதால், நிறுவனம் ஆதாயத்தை அதிகரிப்பதற்கான தேவை ஏற்படும்.

மூலதன இறுதிநிலை ஆக்கத்திறன்

தன்னிச்சையான முதலீட்டை தீர்மானிக்கின்ற முக்கிய காரணியான மூலதன இறுதிநிலை ஆக்கம் என்ற கருத்தினை ஜே.என்.கீன்ஸ் 1936-ல் அறிமுகப்படுத்தினார். கூடுதலான மூலதன அலகிலிருந்து இருந்து எதிர்பார்க்கப்படும் இலாபமே மூலதன ஆக்கத்திறன் (MEC) என்று வரையறுக்கலாம்.

எதிர்பார்க்கப்படும் வருவாய்க்கும் மூலதனத்திற்கான செலவிற்கும் உள்ள வீதமே மூலதன இறுதிநிலை ஆக்கத்திறன் ஆகும்.

MEC இரண்டு காரணிகளை சார்ந்து இருக்கும்

  1. மூலதன சொத்தின் மூலம் கிடைக்கும் வருங்கால லாபம்
  2. மூலதன சொத்தின் அளிப்பு விலை

முதலீட்டு முடிவை மேற்கொள்ளும் போது கீழ்க்கண்ட மூன்று காரணிகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுகின்றது.

  • மூலதனத்தின் செலவு
  • அதன் வாழ்நாளில் எதிர்பார்க்கப்படும் விளைவு விகிதம்
  • அங்காடியில் உள்ள வட்டிவிகிதம்

MEC-யை பாதிக்கும் காரணிகள்

மூலதன இறுதிநிலை ஆக்கத்திறன் குறுகிய கால மற்றும் நீண்ட கால காரணிகளால் தூண்டப்படுகிறது. இந்த காரணிகளை சுருக்கமாக காணலாம்.

அ) குறுகிய கால காரணிகள்

i) பொருளுக்கான தேவை

ஒரு குறிப்பிட்ட பொருளின் சந்தை விலை உயரும் என்ற எதிர்பார்ப்பும், அதன் செலவு குறைந்தும் காணப்படும்போது முதலீட்டிலிருந்து எதிர்பார்க்கும் வருவாய் அதிகரிக்கும். தொழில் முனைவோர்கள் பொருட்களுக்கான தேவை குறையும் என்றும் செலவு கூடும் என்று எதிர்பார்த்தால் முதலீடு குறையும்.

ii) நீர்மைதீன்மையிள்ள சொத்துக்கள்

செயல்திறன் மூலதனத்தை அதிக அளவில் தொழில் முனைவோர் வைத்திருந்தால், தன் வழியே வரும் முதலீட்டு வாய்ப்புகளின் நன்மையை ஏற்றுக் கொள்வர். இது மூலதனத்தின் இறுதிநிலை ஆக்கத்திறனை அதிகரிக்கும்.

iii) வருமானத்தில் ஏற்படும் திடீர் மாற்றம்

தொழில்முனைவோரின் திடீர் வருமான மாற்றமும் மூலதனத்தின் இறுதிநிலை ஆக்கத்திறனைப் பாதிக்கும். வணிக சமூகம் எதிர்பாராமல் இலாபமோ அல்லது வரி சலுகைகளோ பெற்றால் மூலதனத்தின் இறுதிநிலை ஆக்கத்திறன் அதிகரிக்கும். ஆதலால் நாட்டில் முதலீடு அதிகரிக்கும். மாறாக, வருமானம் குறைந்தால் மூலதனத்தின் இறுதிநிலை ஆக்கத்திறன் குறையும்.

iv) நடைமுறை முதலீட்டு வீதம்

குறிப்பிட்ட தொழில்களில் உள்ள நடைமுறை முதலீட்டு வீதமும் மூலதனத்தின் இறுதிநிலை ஆக்கத்திறனைப் பாதிக்கின்ற மற்றொரு காரணி ஆகும். குறிப்பிட்ட தொழில்கள் ஏற்கனவே அதிக அளவில் முதலீடு செய்யப்பட்ட நிலையில் அதே தொழிலில் மேலும் முதலீடு செய்தால் மூலதனத்தின் இறுதிநிலை ஆக்கத்திறனைக் குறைக்கும்.

v) நம்பிக்கை மற்றும் நம்பிக்கையற்ற அலைகள்

வணிகச் சூழ்நிலைகளில் ஏற்படும் நம்பிக்கை மற்றும் நம்பிக்கையற்ற நிலைகள் மூலதனத்தின் இறுதிநிலை உற்பத்தித் திறனைப் பாதிக்கும். தொழில் செய்பவர் எதிர்கால நம்பிக்கை கொண்டிருந்தால் இறுதிநிலை உற்பத்தித் திறன் அதிகமாகவும், மாறாக நம்பிக்கையற்று இருந்தால் இறுதிநிலை உற்பத்தித் திறன் குறைவாகவும் இருக்கும்.

ஆ) நீண்ட கால காரணிகள்

மூலதன இறுதிநிலை ஆக்கத்திறனை பாதிக்கின்ற நீண்ட காலக் காரணிகள் பின்வருமாறு:

i) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம்

மக்கள் தொகை வளர்ச்சி விகிதமும் மூலதன இறுதிநிலை ஆக்கத்திறனை பாதிக்கின்றது. மக்கள் தொகை வளர்ச்சி மிக அதிகமாக இருந்தால், வெவ்வேறு வகையான பொருட்களுக்கு தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே விரைவான மக்கள் தொகை வளர்ச்சி மூலதன ஆக்கத்திறனை அதிகரிக்கும், குறைவான வளர்ச்சி முதலீட்டை குறைத்து, அதன் மூலம் மூலதன இறுதிநிலை ஆக்கத்திறனையும் குறைக்கும்.

ii) தொழில் நுரட்ப முன்னேற்றம்

தொழில்களில் முதலீடும், தொழில் நுட்ப முன்னேற்றமும் ஏற்பட்டால் நிகர இலாபத்தில் சுபிட்சமான ஏற்றத்தை கொண்டு வரும். எடுத்துக்காட்டாக 20ம் நூற்றாண்டில் ஆட்டோ மொபைல்ஸ் துறையில் ஏற்பட்ட முன்னேற்றத்தினால் ரப்பர் தொழிற்சாலை, எஃகு மற்றும் எண்ணெய் தொழிற்சாலை முதலியவற்றில் பெரிய அளவில் உந்துதல் ஏற்படச் செய்தது. ஆதலால் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில் நுட்ப முன்னேற்றம் பலவகையான திட்டங்களுக்கு முதலீடு செய்வதற்கு ஊக்கம் அளித்து மூலதன இறுதிநிலை ஆக்கத்திறனையும் அதிகரிக்கும்.

iii) பண மற்றும் நிதி கொள்கை

மலிவுப் பண கொள்கை மற்றும் தளர்வான வரிக் கொள்கை அதிகப்படியான இலாபத்தை ஈட்ட வழி செய்து, அதனால் மூலதன இறுதிநிலை ஆக்கத்திறனையும் உயர்த்துகிறது.

iv) அரசியல் சூழ்நிலை

அரசியல் நிலைபெற்ற தன்மை, சுமூகமான நிர்வாகம், சட்ட ஒழுங்கு பாதுகாப்பு ஆகியவையும் மூலதன இறுதிநிலை ஆக்கத்திறனை அதிகரிக்கிறது.

v) வளங்கள் கிடைப்பது

மலிவான மற்றும் மிகுதியான இயற்கை வளங்கள், திறன்மிக்க உழைப்பாளர்கள், மூலதன இருப்பு போன்றவும் மூலதன இறுதிநிலை ஆக்கத்திறனை அதிகரிக்கின்றது.

முதலீட்டின் இறுதி நிலை உற்பத்தித் திறன் (MEI)

ஒரு குறிப்பிட்ட காலத்தில், மேற்கொள்ளப்பட்ட கூடுதல் முதலீட்டில் இருந்து எதிர்ப்பார்க்கப்படுகிற விளைவின் விகிதம் முதலீட்டின் இறுதிநிலை உற்பத்தித் திறன் ஆகும். கடனுக்கான வட்டி வீதம் அதிகமாக இருந்தால், பல்வேறு திட்டங்களில் தொழில் செய்வதற்கான ஆர்வம் குறையும். இதனால் நிறுவனங்களின் இலாப விகிதம் குறையும்.

மூலதனத்தின் இறுதிநிலை உற்பத்தித் திறன் (MEC) முதலீட்டின் இறுதி நிலை உற்பத்தித் திறன் (MEI)
  1. இது மூலதனத்தின் அளிப்பு விலையைப் பொறுத்து அமைகிறது.
  1. மூலதனத்தின் தேவையில் ஏற்பட்ட மாற்றங்கள், விலையை தூண்டும் மாற்றத்தைப் பொறுத்து அமைகிறது.
2) ஆரம்பத்தில் உள்ள மூலதனத்தை கணக்கில் கொள்ளாமல் ஒவ்வொரு மூலதன அலகிலிருந்து கிடைக்கும் விளைவைக் குறிக்கிறது. 2) ஆரம்ப மூலதனத்திற்குப் பின்னர் வந்த மூலதனத்தின் விளைவு விகிதத்தைக் காட்டுகிறது.
3) வரைபடத்தில் படுக்கை அச்சில் மூலதன இருப்பு அளக்கப்படுகிறது. 3) வரைபடத்தில் படுக்கை அச்சில் முதலீடு அளவு அளக்கப்படுகிறது.
4) இது ஒரு “இருப்பு” கருத்துரு (stock) 4) இது ஒரு ஓட்டக் (FLOW) கருத்துரு
5) ஒவ்வொரு வட்டிவீத அளவிலுமான உத்தம மூலதன இருப்பை இது நிர்ணயிக்கிறது 5) கொடுக்கப்பட்ட மூலதன இருப்பில், ஒவ்வொரு வட்டி வீத அளவிலும் நிகர முதலீடு எவ்வளவு என்பதை நிர்ணயிக்கிறது.

பெருக்கி (Multiplier)

பெருக்கிக் கோட்பாட்டை முதலில் எப்.ஏ.கான் வேலை வாய்ப்பின் அடிப்படையில் உருவாக்கினார். ஜே.எம்.கீன்ஸ் இதனை வருமானம் அல்லது முதலீட்டுப் பெருக்கியாக மாற்றி அமைத்தார்.

தேசிய வருமானத்தின் மாற்றத்திற்கும் முதலீட்டில் ஏற்படும் மாற்றத்திற்கும் உள்ள வீதத்தை பெருக்கி என்று வரையறுக்கலாம். என்பது முதலீட்டில் அதிகரிப்பையும், மற்றும் என்பது வருமானத்தில் அதிகரிப்பையும் குறிக்கின்றது, எனவே பெருக்கி K = . என உள்ளது. முதலீடு மாற்றத்தினால் வருமானம் மாறுவதால் பெருக்கியை முதலீட்டு பெருக்கி என அழைக்கப்படுகிறது.

பெருக்கியின் எடுகோள்கள்

கீன்ஸின் பெருக்கியின் கோட்பாடு சில எடுக்கோள்களின் அடிப்படையில் செயல்படுகிறது. அவை:

  1. தன்னிச்சையான முதலீட்டில் மாற்றம் உண்டு.
  2. தூண்டப்பட்ட முதலீடு இல்லை.
  3. இறுதிநிலை நுகர்வு நாட்டம் நிலையாக இருக்கும்.
  4. நுகர்வு நடப்பு வருமானத்தைச் சார்ந்தே அமையும்.
  5. பெருக்கியின் செயல்பாட்டில் கால இடைவெளி இல்லை.
  6. உறுதித் தேவைக்கேற்ப நுகர்வு பொருள்கள் கிடைக்கும்.
  7. நாடு மூடிய பொருளாதாரமாகும், அந்நிய நாட்டின் செயல்பாடுகள் தாக்கத்தை ஏற்படுத்தாது.
  8. விலையில் மாற்றம் இல்லை.
  9. முழு நிலை வேலைவாய்ப்பு நிலைக்கு கீழ் பொருளாதாரம் செயல்படுகிறது.

இறுதிநிலை நுகர்வு நாட்டமும் பெருக்கியும்

இறுதிநிலை நுகர்வு நாட்டம் என்பது வருமானத்தில் நுகர்வுக்காக செலவிடும் பங்கைக் குறிப்பதாகும். இறுதிநிலை நுகர்வு நாட்டம் வருவாய் (Y) மாற்றத்திற்கும், நுகர்வு (C) மாற்றத்திற்கிடையேயான தொடர்பினைக் குறிப்பிடுகிறது.

குறியீடாக MPC =

பெருக்கியின் மதிப்பு MPC யைப் பொறுத்து அமையும் பெருக்கி

(K) = 1/ 1-MPC

ஒன்றிலிருந்து இறுதிநிலை நுகர்வு நாட்ட மதிப்பைக்கழித்து பெறப்படும் மதிப்பின் தலைகீழ் விகிதமே பெருக்கி ஆகும். இறுதிநிலை சேமிப்பு நாட்டத்தின் மதிப்பு 1 – MPC. (MPC + MPS = 1) என்பதால் பெருக்கியின் மதிப்பு 1/MPS ஆகும். எனவே பெருக்கி என்பது MPS இன் தலைகீழ் விகிதம் ஆகும். பெருக்கி MPS க்கு தலைகீழ் விகிதத்திலும் MPCக்கு நேர்விகிதத்திலும் தொடர்புடையது.

எண் வடிவில் MPCயின் மதிப்பு 0.75 என்றால் MPS இன் மதிப்பு 0.25 ஆகவும் K மதிப்பு 4 ஆகவும் இருக்கும்.

சூத்திரத்தைப் பயன்படுத்தி K = 1/ 1-MPC

K 1/1-0.75 = 1/0.25 = 4

அட்டவணை 4.

கீழ்க்காணும் மதிப்புகளைக் கொண்டு பெருக்கி செயல்படும் விதத்தை விளக்கப்படுகின்றது.

MPC MPS K
0.00 1.00 1
0.10 0.90 1.11
0.50 0.50 2.00
0.75 0.25 4.00
0.90 0.10 10.00
1.00 0.00

C = 100 + 0.8y; I = 100 I = 10

Y = C + I

= 100 + 0.8y + 100

0.2y = 200 ; Y = 1000

இங்கு C = 100 + 0.8y = 100 +0.8(1000)

= 900;

S = 100 = I

முதலீடு 10 அதிகரித்தால், I = 110,

Y = 100 + 0.8y + 110

0.2y = 210

Y = = 1050

இங்கு C = 100 = 0.8(1050) = 940; S = 110 = I

வரைபட விளக்கம்

45 கோடு y = C + S

இது இரண்டு அச்சுக்களுக்கும் இணையாகச் செல்வதைக் குறிக்கிறது. இறுதிநிலை நுகர்வு நாட்டம் 0.8 என அனுமானிக்கப்படுகிறது (C = 100 + 0.8y)

ஒட்டுமொத்த தேவை (C + I) தேவைக் கோடு 450 கோட்டை B என்ற புள்ளியில் வெட்டுச் செல்கிறது.

Y = 500 ஆக இருக்கும்போது C = 100 + 0.8y

= 100 + 0.8(500)

= 100 + 400 = 500 (புள்ளி A)

I = 100 ஆக இருக்கும்போது

Y = 1000, C = 900; S = 100 = I

புதிய ஒட்டுமொத்த தேவை கோடு,

C + I = 100 + 0.8Y +100 +10

Y =

C = 940 ; S = 110 = I

பெருக்கி செயல்படும் விதம்

அரசு ₹100 கோடி பொதுப்பணிக்காக கூலி, இதர பொருட்கள் வாங்குவதற்காக செலவிடுகிறது எனக் கொள்வோம். இந்த ₹100 கோடி உழைப்பாளர்களுக்கும் பொருட்களை அளித்தவர்களுக்கும் வருமானமாக அமையும். இங்கு இறுதிநிலை நுகர்வு நாட்டம் 0.8(80%) எனக் கொண்டால் ₹80 கோடியை நுகர்வுச் செலவுக்கும், மீதம் ₹20 கோடிகளை சேமிக்கவும் செய்வர். இதில் மேற்காண் வருமானம் பெற்றவர்களின் இறுதிநிலை நுகர்வு நாட்டம் 0.8 எனில் ₹80 கோடியில் ₹64 கோடி நுகர்வுச் செலவுக்கும் மீதம் ₹16 கோடியை சேமிக்கவும் செய்வர். இந்த வழியில் நுகர்வுச் செலவானது ஒரு சங்கிலித் தொடர் போன்று சென்று கொண்டே செல்லும்.

நேர்மறை மற்றும் எதிர்மறைப் பெருக்கியின் விளைவுகள்
நேர்மறைப் பெருக்கி எதிர்மறைப் பெருக்கி
உட்செலுத்தலில் துவக்க நிலையில் ஏற்படும் அதிகரிப்பானது (கசிவு குறையும் போது) மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மிகப்பெரிய இறுதிநிலை உயர்வை ஏற்படுத்தும். உட்செலுத்தலில் துவக்க நிலையில் ஏற்படும் குறைவானது (கசிவு அதிகரிக்கும் போது) மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மிகப்பெரிய இறுதிநிலைக் குறைவை ஏற்படுத்தும்.

எனவே இறுதி முடிவுகள்

அல்லது

= 100+80+64 + 51.2 ….

= 500

அதாவது 100 1/1-4/5

100 x 1/1/5

100 x 5 = ₹500 கோடிகள்

உதாரணமாக C = 100 + 0.8Y , I = 100,

என்றால் Y = 100 +0.8Y + 100

0.2Y = 200

Y = 200/0.2 = 1000 புள்ளி B

I இன் மதிப்பு 110, ஆக அதிகரிக்கப்பட்டால்

0.2Y = 210

Y = 210/0.2 = 1050 புள்ளி D

I, ₹10 அதிகரித்தால், Y ₹50 அதிகரிக்கும்.

இது பெருக்கியின் விளைவு.

புள்ளி Aயில் , Y = C = 500

C = 100 + 0.8(500) = 500; S = 0

புள்ளி Bயில் , Y = 1000

C = 100 + 0.8(1000) = 900; S = 100 = I

புள்ளி Dஇல், Y = 1050

C = 100 +0.8(1050) = 940; S = 110 = I

I மதிப்பு 10 அதிகரிக்கும் போது Y மதிப்பு 50 அதிகரிக்கும். இதுவே பெருக்கி விளைவாகும்.

K =

பெருக்கியின் வகைகள்

இயங்கா மற்றும் இயங்கும் பெருக்கி

  1. இயங்கா பெருக்கி

இது உடன்நிகழ் (Simultaneous) பெருக்கியெனவும், காலமில்லா பெருக்கி, தர்க்க ரீதி பெருக்கி எனவும் அழைக்கப்படுகிறது. இதில் முதலீடு மாற்றமும் வருமான மாற்றமும் உடன் நிகழ்பவை. காலதாமதம் கணக்கில் எடுக்கப்படுவதில்லை. பொருளாதாரம் ஒரு சமநிலையில் இருந்து மறுசமநிலை வருமானத்திற்குப் போகும்போது MPC மாறாது என கருதப்படுகிறது.

2. இயங்கும் பெருக்கி

இது தொடர் நிகழ் (SEQUENCE) பெருக்கி எனவும் அழைக்கப்படுகிறது. உண்மையில் முதலீடு செய்த உடனே வருவாய் கூடிவிடுவதில்லை. ஒருவரிடம் இருந்து மற்றவரிடம் பணம் செல்ல காலதாமதம் ஆகலாம். வருமானம் கூடுவதற்கும் நுகர்வு கூடுவதற்கும் இடையில் கால இடைவெளி இருக்கலாம். அந்தக் கால இடைவெளியையும் கருத்தில் கொள்கிறது இயங்கும் பெருக்கி.

பெருக்கியின் கசிவுகள் (LEAKAGES)

பெருக்கியின் எடுகோளானது அதிகரித்த வருமானத்தின் ஒரு பகுதி நுகர்விற்காக செலவிடப்படுகின்றது என்பதே. ஆனால் நடைமுறையில் மக்கள் அதிகரித்த வருமானத்தை வேறு ஒரு பொருட்களின் மீதும் செலவு செய்வார்கள். இவ்வகைச் செலவுகளே கசிவுகள் எனப்படும்.

பழைய கடன்களை திரும்ப செலுத்துதல்

பழைய கடன்களை திரும்ப செலுத்துவதற்காக அதிகரித்த வருமானம் பயன்படுமானால், MPC குறைந்து அதன் காரணமாக பெருக்கியின் மதிப்பு தடைப்படும்.

செல்வத்தை வாங்குதல்

அதிகரித்த வருமானம் நடைமுறையில் உள்ள செல்வங்களாக நிலம், கட்டிடம் மற்றும் பங்குகளை வாங்குவதற்காக பயன்படுத்தினால் பணம் மக்களிடையே சுழன்றுக் கொண்டு இருக்கும். நுகர்வுக்குள் வராது. இதன் விளைவாக பெருக்கியின் மதிப்பு பாதிக்கும்.

பண்டங்களையும், பணிகளையும் இறக்குமதி செய்தல்

இறக்குமதி செய்யப்படுகின்ற பண்டங்களுக்காகவும், பணிகளுக்காகவும் வருமானத்தை செலவு செய்தால் நாட்டை விட்டு பணம் வெளியேறும். இது நாட்டின் குறிப்பிட்ட அளவு வருவாய் ஓட்டத்தில் திரும்பி வரும் வாய்ப்பு மிகக் குறைவு. ஆதலால் இறக்குமதி பெருக்கியின் மதிப்பை குறைக்கும்.

நுகர்வு பொருட்களின் கிடைக்காமை

பெருக்கி கோட்பாடு தேவை ஏற்பட்டவுடன் நுகர்வதற்கு பொருட்கள் அளிக்கப்படுவதாக அனுமானம் கொண்டுள்ளது. சில நேரங்களில் கால இடைவெளி ஏற்படும். இந்த இடைவெளியில் தேவைக்கேற்ப அளிப்பு இருக்காது. அதனால் பணவீக்கம் ஏற்படும். இது நுகர்வுச் செலவையையும், பெருக்கியின் மதிப்பையையும் குறைத்துவிடும்.

முழு வேலை வேலை வாய்ப்பு நிலை

முழு வேலை வாய்ப்பு நிலையில், பெரும்பாலும் எல்லா வளங்களும் பயன்படுத்தப்பட்டு இருக்கும். ஆதலால் அதிகரிக்கின்ற வருமானம் பணவீக்கத்திற்கு வழி வகுத்து உண்மை வருமானம் ஏற்படாமல் செய்து விடும்.

பெருக்கியின் பயன்கள்

  1. வருமானம் மற்றும் வேலைவாய்ப்பு கோட்பாட்டில் முதலீட்டின் முக்கியத்துவத்தை பெருக்கி சுட்டிக் காட்டுகிறது.
  2. வாணிப சுழற்சியின் பல்வேறு நிலைகளுக்கான காரணங்களை விளக்குகின்றது.
  3. சேமிப்பு (S) மற்றும் முதலீடு (I) இடையே சமநிலை ஏற்பட உதவுகிறது.
  4. அரசாங்க கொள்கைகளை வழிவகுக்க உதவி புரிகிறது.
  5. வேலையில்லா நிலையை போக்கவும், முழு வேலைவாய்ப்பு நிலையை அடையவும் உதவுகின்றது.

பெருக்கியின் வகைகள்

  1. வரி பெருக்கி
  2. வேலைவாய்ப்பு பெருக்கி
  3. வெளிநாட்டு வர்த்தக பெருக்கி
  4. முதலீடு பெருக்கி

முடுக்கி கோட்பாடு

தோற்றம் அஃடாலியின் (1909), ஹாட்ரி (1913) மற்றும் பிக்கர் டைக் (1914) போன்றவர்களின் கருத்துக்களை ஆராய்ந்து பெறப்பட்டது. இருந்த போதிலும், இந்த கருத்தை செம்மைப்படுத்தி மேம்படுத்தி எளிமையான முடுக்கி மாதிரியாக 1917இல் தந்தவர் ஜே.எம்.கிளார்க் ஆவார். பின்னர் இதனை வணிகச் சூழலுடன் தொடர்புபடுத்தி மேம்படுத்தியவர்கள் ஹிக்ஸ், சாமுவேல்சன் மற்றும் ஹராடு போன்றவர்களாவர்கள்.

பொருள்

பொருளாதாரத்தில் நுகர்வு பொருட்களின் தேவை அதிகரிக்கின்ற போது பொதுவாக இயந்திரங்களின் (முதலீட்டு பொருட்கள்) தேவையை முடுக்கிவிட்டு அதிகரிக்க வழி செய்யும். முடுக்கி என்பது அதிகரித்த நுகர்வு மற்றும் அதன் விளைவினால் ஏற்படும் அதிகரிக்கும் முதலீட்டுக்கான தொடர்பை குறிக்கும் எண் மதிப்பு ஆகும்.

முடுக்கி (

இதில் = முடுக்கி

= முதலீட்டுச் செலவில் மாற்றம் (100 என்போம்)

= நுகர்வுத் தேவையில் மாற்றம் (50 என்போம்)

முடுக்கியானது முதலீட்டு மாற்றத்திற்கும் நுகர்வின் மாற்றத்தீற்கும் உள்ள விகிதத்தை வெளிப்படுத்துகின்றது.

வரைவிலக்கணம்

“தூண்டப்பெற்ற முதலீட்டிற்கும் தொடக்கத்தில் நுகர்வுச் செலவில் ஏற்படும் மாற்றத்திற்கும் இடையேயுள்ள விகிதம்”

  • கே.கே. குரிஹாரா

அனுமானமாக ₹50 கோடி நுகர்வுப் பொருட்களின் தொழில்களில் செலவு செய்யும் போது, ₹100 கோடி முதலீட்டு பொருட்கள் தொழில்களில் முதலீடு செய்ய வழி வகுக்கிறது. அப்படியானால் முடுக்கி 2 ஆகும்.

முடுக்கி =

எடுகோள்கள்

  1. நுகர்வு பொருட்கள் தொழில் துறையில் எச்ச சக்தியின்மை.
  2. நிலையான மூலதனம் – வெளியீடு விகிதம்
  3. தேவையின் அதிகரிக்கும் தன்மை நிலையாக இருக்கும் என்று அனுமானித்தல்
  4. நிதி அளிப்பு மற்றும் மற்ற உள்ளீடுகள் நெகிழ்ச்சியுடையது.
  5. மூலதனப் பொருட்கள் தேவைப்படும் அளவுக்கு பகுக்க முடியும்.

முடுக்கி கோட்பாடு செயல்படும் விதம்

ஒரு எளிமையான எடுத்துக்காட்டின் மூலம் முடிக்கியின் செயல்பாட்டை பின்வருமாறு விளக்கலாம்.

1000 நுகர்வு பொருட்களை தயாரிப்பதற்கு 100 இயந்திரங்கள் தேவைப்படுவதாக எடுத்துக்கொள்வோம். 10 வருடங்கள் அந்த இயந்திரங்களின் வாழ்நாள் என்று கொள்வோம். அதாவது ஒவ்வொரு வருடமும் 10 எந்திரங்களை மாற்றியமைக்கப்படுகிறது. காரணம் நிலையான 1000 நுகர்வு பொருட்களை தயாரிப்பதற்காக இதனை மாற்றியமைக்கும் தேவை எனப்படுகிறது.

10 சதவீதம் அளவிற்கு (அதாவது 1000லிருந்து 1100 ஆக) நுகர்வு பொருட்களின் தேவை அதிகரிக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இதன் விளைவாக மேலும் 10 இயந்திரங்களின் தேவை அதிகரிக்கும். எனவே மொத்த இயந்திர தேவை 20 ஆகும். (10 மாற்றமைப்பதற்காக மற்றும் 10 அதிகரித்த தேவையை சந்திப்பதற்காக) இங்கே 10 சதவீதம் நுகர்வு பொருட்கள் தேவையானது 100 சதவீதத்திற்கு இயந்திரத்தி தேவை அதிகரிக்கின்றது என்பது குறிக்கின்றது (10 லிருந்து 20 வரை) ஆதலால் இறுதியாக ஒரு சிறிய நுகர்வு பொருட்களின் தேவையில் மாற்றம் அதிகப்படியான முதலீட்டு மாற்றத்திற்கு வழிவகுக்கிறது.

முடுக்கியின் செயல்பாடு

வரைபட விளக்கம்

SS என்பது சேமிப்பு கோடு. II என்பது முதலீட்டு கோடு E1 புள்ளியில் பொருளாதாரம் OY1 வருமானத்துடன் சமநிலையில் இருக்கிறது. சேமிப்பும் முதலீடும் OI2 ல் சமநிலையாக உள்ளது. இப்பொழுது முதலீடு OI2 லிருந்து OI4 ஆக அதிகரிக்கிறது. இது வருமானத்தை OY1லிருந்து OY3ஆக அதிகரிக்கிறது. E3 சமநிலைப் புள்ளியில் முதலீடு I2I4ஆக முழுவதுமாக வெளிப்புற காரணியில் அதிகரிக்கின்றது என்றால், வருமானமும் Y1Y3 ஆக முடுக்கியின் விளைவாக அதிகரிக்கும். ஆனால் இவ்வரைப்படத்தில் வெளிபுற முதலீடு I2I3 ஆகவும், தூண்டப்பட்ட முதலீடு I3I4 ஆகவும் இருக்கிறது என்று அனுமானித்துக் கொள்வோம். ஆதலால், அதிகரித்த வருமானம் Y1Y2ஆனது பெருக்கியின் விளைவாலும் மற்றும் அதிகரித்த வருமானம் Y2Y3 ஆனது முடுக்கியின் விளைவாலும் ஏற்படுகின்றது.

வரையறைகள்

  1. நிலையான மூலதனம் – வெளியீடு விகிதம் என்ற எடுகோள் உண்மையானது அல்ல.
  2. முழு நிலை வேலைவாய்ப்பிற்கு முன்பு வரை மட்டுமே வளங்கள் கிடைக்கும்.
  3. மூலதன பொருட்கள் தொழிற்சாலையில் உபரி சக்தி உள்ளதாக அனுமானிக்கப்படுகிறது.
  4. முடுக்கியானது தேவை அதிகரித்தல் நிலையானது என்ற நிலையில் மட்டுமே வேலை செய்யும்.
  5. கடன் எளிதாக கிடைத்தால் மட்டுமே முடுக்கி செயல்படும்.
  6. நுகர்வு பொருட்கள் தொழிலில் பயன்படுத்தாத அல்லது மிகுதியான திறன் இருந்தால், முடுக்கி கோட்பாடு செயல்படாது.

மிகைப் பெருக்கி (K மற்றும் ஐ இணைத்து)

மிகைப் பெருக்கி எளிய பெருக்கியைவிட சிறந்ததாகும், ஏனெனில் எளிய பெருக்கி தன்னிச்சை முதலீட்டை மட்டும் உள்ளடக்கி இருக்கும், ஆனால் மிகைப் பெருக்கி தன்னிச்சை முதலீடு மற்றும் தூண்டப்பட்ட முதலீடு ஆகிய இரண்டையும் கொண்டிருக்கும்.

ஆரம்ப முதலீட்டினால் வருமானத்தில் ஏற்படும் மொத்த விளைவை அறிய ஹிக்ஸ் K மற்றும் ஐ இணைத்து மிகைப் பெருக்கி என்பதை கணித ரீதியில் உருவாக்கினார். மிகைப் பெருக்கியானது தூண்டப்பட்ட நுகர்வு மற்றும் தூண்டப்பட்ட முதலீடு ஆகியவை இணைந்து செயல்படுவதாகும்.

நெம்புகோல் இயக்க விளைவு

பெருக்கியின் தாக்கமும், முடுக்கியின் தாக்கமும் ஒருங்கிணைந்து செயல்படும் தாக்கம் நெம்புகோல் இயக்க விளைவு எனப்படும். இது பொருளாதாரத்தில் அதிகமான அல்லது குறைவான வருமானம் பெருக்குவதை கூறுகின்றது.

குறியீடாகக் கூறினால்

Y = C + IA + IP

Y = மொத்த வருவாய்

C = நுகர்வுச் செலவு

IA = தன்னிச்சையான முதலீடு

IP = தூண்டப்பட்ட தனியார் முதலீடு

தொகுப்புரை

மூன்று தலைப்புகளின் அடிப்படையில் நுகர்வு சார்பு மற்றும் முதலீடு சார்பின் பகுதிகளை தொகுக்கப்பட்டுள்ளது.

நுகர்வுச் சார்பானது தேசிய வருவாய் மற்றும் நுகர்வுச் செலவுக்கிடையேயான தொடர்பினை சராசரி நுகர்வு விருப்பு (APC), இறுதிநிலை நுகர்வு விருப்பு (MPC), சராசரி சேமிப்பு விருப்பு (APS) மற்றும் இறுதிநிலை சேமிப்பு விருப்பு (MPS) என்பதன் வாயிலாக எடுத்துரைக்கிறது. உள்ளார்ந்த மற்றும் வெளிப்புறக் காரணிகள் நுகர்வுச் சார்பை தீர்மானிக்கின்றன.

முதலீடு சார்பு தன்னிச்சையான முதலீட்டையும், தூண்டப்பட்ட முதலீட்டையும் உள்ளடக்கியது. முதலீட்டுச் சார்பான முதலீட்டிற்கும் வட்டி வீதத்திற்கும் உள்ள சார்பு தொடர்பாகும். மூலதனத்தின் இறுதிநிலை ஆக்கத்திறனும், வட்டி வீதமும் முதலீட்டைத் தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாகும்.

பெருக்கி இறுதிநிலை நுகர்வு விருப்பு (MPC) க்கு நேரடியாகவும் மற்றும் இறுதி நிலை சேமிப்பு விருப்பு (MPS)க்கு தலைகீழ் தொடர்பாகவும் உள்ளது. முடுக்கி கோட்பாடானது நுகர்வுச் செலவில் ஏற்படும் மாற்றம் முதலீட்டின் அளவை எவ்வளவு மாற்றுகிறது என்பதை விளக்குகிறது. பெருக்கி, முடுக்கி ஒருங்கிணைப்பை மிகப் பெருக்கி எனவும் கூறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!