Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Book Back QuestionsTnpsc

பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள் Book Back Questions 8th Social Science Lesson 24

8th Social Science Lesson 24

24] பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

உலோக பணத்தின் வரலாறு: தங்கம், வெள்ளி, வெண்கலம் போன்ற விலை மதிப்பற்ற உலோகங்கள் உலோக பணமாக பயன்படுத்தப்பட்டன. உலோகத்தின் நிலையான எடை மற்றும் துல்லியம் குறிப்பாக தங்கம், வெள்ளி ஆகியவை முத்திரையுடன் பரிமாற்ற கருவியாக செயல்பட்டது. அவைகள் வெவ்வேறு பிரிவுகளாக, எளிதாக பிரிப்பதற்கும், எடுத்து செல்வதற்கும், செலுத்துவதற்கும் வசதியாக இருந்தன. பண்டைய வரலாற்று ஆசிரியரான ஹெரோடோடஸ் கி. மு, (பொ. ஆ. மு) 8ஆம் நூற்றாண்டில் லிடியாவின் பேரரசர் மிடாஸ் உலோக நாணயத்தை கண்டு பிடித்தார். ஆனால் லிடியாவை விட பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் தங்க நாணயங்கள் பயன்படுத்தப்பட்டன. உலக நாணயங்கள் வெளியீட்டார்களில் சீனா மற்றும் மத்திய கிழக்கு லிடியாவுடன் பண்டைய இந்தியாவும் உள்ளன. இந்தியாவில் கி. மு. 6ஆம் நூற்றாண்டில் முதன் முறையாக மஹாஜனபதங்கள் ஆட்சியில் பூரணாஸ், கர்ஷபணம், பனாஸ் போன்ற நாணயங்கள் அச்சடிக்கப்பட்டன. தங்கம், வெள்ளி, தாமிரம் அல்லது ஈயம் போன்ற நாணயங்களை மௌரியர்கள் துளையிட்டு வெளியிட்டனர். இந்திய கிரேக்க குஷாண அரசர்கள் கிரேக்க மரபுப்படி சித்திரங்கள் பொறிக்கப்பட்ட நாணயங்களை அறிமுகப்படுத்தினர். 12வது நூற்றாண்டில் டெல்லி துருக்கி சுல்தான்கள் தங்கள் நாணயங்களில் இந்திய அரசர்களின் உருவத்தை நீக்கி இஸ்லாமிய எழுத்துக்களை பொறித்து வெளியிட்டனர். தங்கம், வெள்ளி மற்றும் தாமிரத்தால் ஆன நாணயங்களை டாங்கா என்றும், மதிப்பு குறைந்த நாணயங்களை ஜிட்டால் என்றும் அழைத்தனர். 1526யில் இருந்த முகலாய சாம்ரஜ்யம் முழு சாம்ராஜ்யத்திற்கான பணவியல் முறையை ஒருங்கிணைத்தும், இந்த சகாப்த பரிணாம பண வளர்ச்சியில் செர்ஷா சூரி, ஹீமாயூனை தோற்கடித்து ஆட்சியில் இருந்த போது 178 கிராம் எடையுள்ள வெள்ளி நாணயத்தை வெளியிட்டார். அது “ரூபியா” என அழைக்கப்பட்டது மற்றும் 40 தாமிர துண்டுகள் அல்லது பைசா போன்றவற்றை பயன்படுத்தினர். முகலாய காலம் முழுவதும் வெள்ளி நாணயம் பயன்பாட்டில் இருந்தது. ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி 1600ஆம் ஆண்டில் முகலாய நாணயத்தை பிரபலப்படுத்தியது. ஆனால் 1717இல் முகலாய பேரரசர் பாருக்ஷாயர், ஆங்கிலேயர்களுக்கு முகலாய பண நாணயத்தை பம்பாய் அச்சகத்தில் அச்சடிக்க அனுமதி அளித்தனர். ஆங்கில தங்க நாணயங்கள் கரோலினா என்றும், வெள்ளி நாணயங்களை ஏஞ்ஜேலினா என்றும், செம்பு நாணயங்களை கப்ரூன் என்றும் மற்றும் வெண்கல நாணயத்தை டின்னி எனவும் அழைத்தனர்.

பணத்தின் (ரூபாய்) குறியீடு: இந்திய ரூபாய் குறியீடு தமிழ்நாட்டில் உள்ள விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த திரு. உதயகுமார் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. இது ஜீலை 15, 2010 அன்று இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டது.

பணவீக்கம் மற்றும் பணவாட்டம்: பணவீக்கம் என்பது விலைகள் உயர்ந்து, பணத்தின் மதிப்பு வீழ்ச்சியடைவதையும் குறிக்கும். பணவாட்டம் என்பது விலைகள் குறைந்து பணத்தின் மதிப்பு உயர்வதைக் குறிக்கும்.

பணம் மதிப்பிழப்பு: 2016 நவம்பர் 8ஆம் தேதி இந்தியாவில் இந்திய அரசாங்கம் கருப்பு பணத்திற்கு எதிராக அனைத்து ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுக்களை பண மதிப்பிழப்பு செய்வதாக அறிவித்தது.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. உலோக பணத்திற்காக எந்த உலோகம் பயன்படுத்தப்பட்டன?

(அ) தங்கம்

(ஆ) வெள்ளி

(இ) வெண்கலம்

(ஈ) மேற்கூறிய அனைத்தும்

2. இந்திய ரூபாய் குறியீட்டினை (₹) வடிவமைத்தவர் யார்?

(அ) உதயகுமார்

(ஆ) அமர்த்தியா சென்

(இ) அபிஜித் பானர்ஜி

(ஈ) இவற்றில் எவரும் இல்லை

3. பணத்தின் மதிப்பு

(அ) அக பணமதிப்பு

(ஆ) புற பண மதிப்பு

(இ) அ மற்றும் ஆ

(ஈ) எதுவுமில்லை

4. வங்கி பணம் என்பது எது?

(அ) காசோலை

(ஆ) வரைவு

(இ) கடன் மற்றும் பற்று அட்டைகள்

(ஈ) மேற்கூறிய அனைத்தும்

5. தவறான ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும். முதலீட்டுக் கருவி போன்றவைகள்

(அ) பங்கு வர்த்தகம்

(ஆ) பத்திரங்கள்

(இ) பரஸ்பர நிதி

(ஈ) வரி செலுத்துவது

6. பின்வருவனவற்றில் கருப்புப் பணம் குவிப்பதற்கு காரணமானவர்கள்

(அ) வரி ஏய்ப்பவர்கள்

(ஆ) பதுக்குபவர்கள்

(இ) கடத்தல்காரர்கள்

(ஈ) மேற்கண்ட அனைத்தும்

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. நிகழ்நிலை வங்கியை ___________ என்று அழைக்கலாம்.

2. பணம் எதையெல்லாம் செய்யவல்லதோ அதுவே ____________

3. மின்னணு வங்கியை ___________ என்றும் அழைக்கலாம்.

4. கடன் அட்டைகள் மற்றும் பற்று அட்டைகள் ___________ பணமாகும்.

5. இந்திய ரிசர்வ் வங்கி தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு ___________

பொருத்துக:

1. பண்டமாற்று முறை வரி ஏமாற்றுபவர்கள்

2. இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் மின்னணு பணம்

3. மின்-பணம் நுகர்வு தவிர்த்த வருமானம்

4. சேமிப்பு பண்டங்களுக்கு பண்டங்கள் பரிமாற்றம்

5. கருப்பு பணம் 1935

சரியான கூற்றை தேர்ந்தெடுக்கவும்:

1. பண்டமாற்று முறையில் பல குறைபாடுகளாவன:

I. இருமுகத்தேவை பொருத்தமின்மை

II. செல்வத்தை சேமிக்க சிரமமில்லை.

III. பொதுவான மதிப்பின் அளவுகோல்

IV. பொருட்களின் பகுபடாமை

அ) I மற்றும் II சரி

(ஆ) I மற்றும் IV சரி

(இ) I, III மற்றும் IV சரி

(ஈ)மேற்கூறிய அனைத்தும்

தவறான இணையைக் கண்டறிக:

1. பரிமாற்றத்திற்கு பணத்தின் சமீபத்திய வடிவங்கள்

(அ) பற்று அட்டை

(ஆ) பண்டமாற்று முறை

(இ) கடன் அட்டை

(ஈ) நிகழ் நிலை வங்கி

2. பொருளாதாரத்தில் இருப்புப் பணத்தின் விளைவுகள்

(அ) இரட்டை பொருளாதாரம்

(ஆ) சமத்துவம் வலுவிழத்தல்

(இ) உற்பத்தியில் விளைவுகள் இல்லை

(ஈ) ஆடம்பர நுகர்வுச் செலவு

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. மேற்கூறிய அனைத்தும் 2. உதயகுமார் 3. அ மற்றும் ஆ 4. காசோலை

5. வரி செலுத்துவது 6. மேற்கண்ட அனைத்தும்

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. இணைய வங்கி 2. பணம் 3. தேசிய மன்னணு நிதி 4. நெகிழிப் 5. (1935)

பொருத்துக: (விடைகள்)

1. பண்டமாற்று முறை – பண்டங்களுக்கு பண்டங்கள் பரிமாற்றம்

2. இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் – 1935

3. மின் – பணம் – மின்னணு பணம்

4. சேமிப்பு – நுகர்வு தவிர்த்த வருமானம்

5. கருப்பு பணம் – வரி ஏமாற்றுபவர்கள்

சரியான கூற்றை தேர்ந்தெடுக்கவும்:

1. i iii மற்றும் iv சரி

தவறான ஒன்றினை கண்டுபிடிக்க

1. பண்டமாற்று முறை

2. உற்பத்தியில் விளைவுகள் இல்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!