Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
MCQ Questions

பண்பாட்டு ஒருமைப்பாடு: இந்தியாவில் பக்தி இயக்கம் 11th History Lesson 8 Questions in Tamil

11th History Lesson 8 Questions in Tamil

8] பண்பாட்டு ஒருமைப்பாடு: இந்தியாவில் பக்தி இயக்கம்

1) தாய் தெய்வ வழிபாடு கீழ்காணும் எந்த இடத்தில் தொடங்கியது?

A) ஹரப்பா

B) மொகஞ்சதாரோ

C) லோத்தல்

D) காலிபங்கன்

(குறிப்பு – ஆரிய மொழி பேசிய மக்களின் வருகையோடு இந்தியா வந்த வேத மதம் ஹிந்து நாகரிகத்தின் பல கூறுகளை உள்வாங்கிக் கொண்டது. ஹரப்பாவில் தாய் தெய்வ வழிபாடு தொடங்குகிறது)

2) சிந்துவெளியில் கண்டெடுக்கப்பட்ட சிற்பம் கீழ்க்காணும் எந்த தெய்வத்தை பிரதிபலித்தது?

A) சிவன்

B) விஷ்ணு

C) இந்திரன்

D) வருணன்

(குறிப்பு – நீண்ட பண்பாட்டு வரலாற்றை கொண்டிருக்கும் நாடான இந்தியாவில், மதங்கள் பல்வகைப்பட்ட மரபுகளோடு தொடர்புகொண்டு வளர்ந்துள்ளன. சிந்துவெளியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு சிற்பம் சிவன் என அடையாளம் காணப்பட்டுள்ளது)

3) கீழ்காணும் கடவுள்களுள் வேத கடவுள் அல்லாதவர் யார்?

A) வருணன்

B) இந்திரன்

C) அக்கினி

D) பிரம்மன்

(குறிப்பு – இந்திரன், வருணன் மற்றும் அக்கினி ஆகியோர் முக்கிய வேத கடவுள்கள் ஆவர். சிவன் மற்றும் விஷ்ணு வழிபாடு பின்னர் வளர்ந்தனவாகும்)

4) பொது ஆண்டுக்கு முந்திய முதலாயிரமாண்டின் இடைப்பகுதியில் சிந்து கங்கைச்சமவெளியில் தோன்றிய மதம் எது?

I. பௌத்தம்

II. சமணம்

III. சீக்கியம்

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – பொது ஆண்டுக்கு முந்திய முதலாயிரமாண்டின் (கி.மு 1000) இடைப்பகுதியில் சிந்து கங்கை சமவெளியில் பௌத்தம் மற்றும் சமனம் எனும் இரு மகத்தான மதங்கள் உருவாகின.( ஆசிவகம் போன்ற ஏனைய புறக்கோட்பாட்டு மதங்கள் போன்றே) இவை வைதீக வேத மத நடைமுறைகளை எதிர்த்தன)

5) ஆதிசங்கரர் உருவாக்கிய தத்துவக்கோட்பாடு எது?

A) துவைதம்

B) அத்வைதம்

C) விசிஷ்டாத்வைதம்

D) இவை எதுவும் அல்ல

(குறிப்பு – ஆதிசங்கரர் பிற மதக் கோட்பாடுகளை எதிர்கொள்ளும் பொருட்டு இந்து மதத்திற்கு அத்வைதம் என்னும் தத்துவக் கோட்பாட்டை வழங்கினார்)

6) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – தென்னிந்தியா ஏழாம் நூற்றாண்டிலிருந்து பத்தாம் நூற்றாண்டு வரை மத மறுமலர்ச்சியின் இல்லமாக விளங்கியது.

கூற்று 2 – பதினோராம் நூற்றாண்டில் ஒரு தத்துவ, சித்தாந்த இயக்கமாக மறுவடிவம் கொண்டது.

கூற்று 3 – பக்தி வழிபாடு அடியார்கள் கொடுத்த ஊக்கத்தினால் 14ஆம் நூற்றாண்டில் இந்தியா முழுவதிலும் பரவியது

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லா கூற்றுகளும் சரி

(குறிப்பு – சைவ நாயன்மார்களும் வைணவ ஆழ்வார்களும் உள்ளத்தை உருக்கும் பாடல்களால் பக்தி கோட்பாட்டிற்கு ஒரு வடிவம் கொடுத்து மக்களின் ஆதரவைப் பெற்றனர். வரலாற்று ஆய்வாளர்கள் இதனை பக்தி இயக்கம் என அழைக்கின்றனர்)

7) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. பௌத்தமும் சமணமும் பெரும்பாலும் வணிக வர்க்கத்தினரால் ஆதரிக்கபட்டன.

II. பக்தி இயக்கம் நிலவுடைமை சாதிகளிடையே இருந்து தோன்றியதால் அது பௌத்தத்தையும் சமணத்தையும் விமர்சனம் செய்தது.

III. இதன் விளைவாக அரசர்களின் ஆதரவை பெறுவதில் மோதல்கள் ஏற்பட்டன.

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – பக்தியானது சாதி, பாலின வேறுபாடுகள் இன்றி அனைவராலும் அணுக இயலும் என்ற நிலையை ஏற்படுத்தியது மூலம் சமணமும் பௌத்தமும் பிராமணர்களின் அதிகாரத்தை எதிர்த்தன)

8) தேவாரம் என்னும் நூல் கீழ்க்கண்ட யாரால் எழுதப்பட்ட பாடல்களைக் கொண்டவை ஆகும்?

A) திருநாவுக்கரசர்

B) திருஞானசம்பந்தர்

C) சுந்தரர்

D) இம்மூவரும்

(குறிப்பு – பக்தி இலக்கியங்கள், பெரும்பாலும் புராணங்கள் திருத்தொண்டர்கள் ஐ பற்றிய வரலாற்று நூல்கள் ஆகியவை தமிழகத்தில் நடைபெற்ற மத மோதல்கள் குறித்த செய்திகளை வழங்குகின்றன. தேவாரம் ஆனது திருநாவுக்கரசர் என்றழைக்கப்படும் அப்பர், ஞானசம்பந்தர் மற்றும் சுந்தரர் ஆகிய மூவரால் எழுதப்பட்ட பாடல்களைக் கொண்டவை)

9) தேவாரம் பன்னிரு திருமுறைகளுள் எந்த இடத்தில் வகிக்கிறது?

A) முதல் ஏழு திருமுறைகள்

B) எட்டு மற்றும் ஒன்பதாம் திருமுறைகள்

C) பத்தாம் திருமுறை

D) பதினோராம் திருமுறை

(குறிப்பு – தேவாரம் அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவரால் எழுதப்பட்ட பாடல்களைக் கொண்டவை. இவை மூன்றும் சேர்ந்து பன்னிரு சைவத் திருமுறைகளில் முதல் ஏழு திருமுறைகளாக இடம்பெறுகின்றன. மாணிக்கவாசகரின் பாடல்கள் எட்டாவது திருமுறையாகும்)

10) 63 நாயன்மார்கள் பற்றி கூறும் நூல் எது?

A) பெரியபுராணம்

B) சிவபுராணம்

C) அடியார் புராணம்

D) இது எதுவும் அல்ல

(குறிப்பு – அறுபத்து மூன்று நாயன்மார்கள் பற்றி கூறும் சேக்கிழாரின் பெரியபுராணம் பக்தி இயக்கம் குறித்த முக்கிய சான்று ஆகும். வைணவ அடியார்கள் ஆன ஆழ்வார்களின் பாடல்கள் நாலாயிர திவ்ய பிரபந்தமாக தொகுக்கப்பட்டுள்ளன)

11) யாருடைய காலத்தில் முதன்முதலாக சைவமும் வைணவமும் ஒரு புறமாகவும் சமணம் மறுபுறமாகவும் இருந்து மோதிக்கொண்டன?

A) சேரர்கள்

B) சோழர்கள்

C) பாண்டியர்கள்

D) பல்லவர்கள்

(குறிப்பு – பல்லவர் காலத்தில்தான் முதன் முதலாக சைவமும் வைணவமும் ஒரு புறமாகவும் சமணம் மறுபுறம் இருந்து மோதிக்கொண்டன. முதலாம் மகேந்திரவர்ம பல்லவர் சமணத்தை பின்பற்றியதால் ஏனைய மதங்களை சேர்ந்தவர்களை துன்புறுத்தினார்)

12) தர்மசேனன் என்னும் இயற்பெயர் கீழ்க்கண்டவரில் யாருடையது ஆகும்?

A) சுந்தரர்

B) திருஞானசம்பந்தர்

C) அப்பர்

D) மாணிக்கவாசகர்

(குறிப்பு – அப்பர் தொடக்கத்தில் சமண மதத்தை சார்ந்தவராக இருந்தார். தருமசேனர் என்னும் பெயரை உடையவராய் இருந்தார். பின்னர் தமது தமக்கையின் செல்வாக்கால் சைவ சமயத்தை தழுவினார்)

13) முதலாம் மகேந்திரவர்மன் யாரால் ஈர்க்கப்பட்டு சைவ மதத்திற்கு மாறினார்?

A) சுந்தரர்

B) திருஞானசம்பந்தர்

C) அப்பர்

D) மாணிக்கவாசகர்

(குறிப்பு – அப்பர் தொடக்கத்தில் சமணராக தருமசேனர் என்னும் பெயருடன் இருந்தார். பின்னர் தமது தமக்கையின் செல்வாக்கால் சைவ மதத்தைத் தழுவினார். சில சமணர்களால் தூண்டப்பட்ட மகேந்திரவர்ம பல்லவர் அப்பரை மீண்டும் சமணராக மாறும்படி வற்புறுத்தினார். எனினும் முடிவில் மகேந்திரவர்மன் சைவ மதத்திற்கு மாறினார்)

14) சமணர்கள் கழுவில் ஏற்ற காரணம் என்ன?

A) பிற சமய வழிபாட்டினரை கொன்றதால்

B) இறையியல் வாதங்களில் தோற்றதால்

C) பிற சமயங்களை தூற்றியதால்

D) இது எதுவும் அல்ல

(குறிப்பு – மரபு சார்ந்த ஒரு கதையின் படி திருஞானசம்பந்தர் இறையியல் வாதங்களில் சமணர்களை வென்றதால் தோற்றுப்போன சமணர்கள் கழுவில் ஏற்றப்பட்டனர்)

15) கீழ்காணும் எந்த பாண்டிய அரசன் சைவ மதத்தில் இருந்து சமண சமயத்திற்கு மாறிய பின்னர் மீண்டும் சைவ மதத்திற்கு மாறியவர்?

A) சுந்தரபாண்டியன்

B) வீர சேகர பாண்டியன்

C) மாறவர்மன் அரிகேசரி

D) வீரபாண்டியன்

(குறிப்பு – கூன்பாண்டியன் எனவும் அறியப்பட்ட மாறவர்மன் அரிகேசரி (640-670) சைவத்தில் இருந்து சமணத்திற்கு மாறிய பின்னர் சம்பந்தருடைய செல்வாக்கால் மீண்டும் சைவரானார். ஒரு சைவ கதையின்படி சைவத்திற்கு திரும்பிய பின்னர் சமணர் பலரை மதுரை மாவட்டத்திலுள்ள சமந்தம் என்னும் ஊரில் கொல்லும்படி ஆணையிட்டதாகவும் தெரிகிறது)

16) பௌத்த சமண பாதங்களை முற்றிலுமாக எதிர்க்கும் பிரிவான ‘பரபக்கம்’ என்னும் பிரிவு எந்த நூலில் அமைந்துள்ளது?

A) சிவஞான சித்தியார்

B) பெரியபுராணம்

C) திருத்தொண்டர் புராணம்

D) நாலாயிர திவ்ய பிரபந்தம்

(குறிப்பு – சைவ சித்தாந்தம் போன்ற தத்துவ ஆய்வு நூல்கள் பௌத்த சமண தத்துவ மோதல்களை விரிவாக விளக்குகின்றன. சைவ சித்தாந்த நூல்களில் ஒன்றான சிவஞானசித்தியாரில் பரபக்கம் என்ற பெயரில் தனி பிரிவு ஒன்று உள்ளது. அது பௌத்த சமண மதங்களை முற்றிலுமாக எதிர்க்கின்றது)

17) பௌத்தமும் சமணமும் கீழ்காணும் எந்த நூற்றாண்டில் முற்றிலுமாக தோற்கடிக்கப்பட்டன?

A) பத்தாம் நூற்றாண்டில்

B) பதினோராம் நூற்றாண்டில்

C) பன்னிரண்டாம் நூற்றாண்டில்

D) பதின்மூன்றாம் நூற்றாண்டில்

(குறிப்பு – தத்துவம் சார்ந்த வாதங்கள் ஒரு பக்கம் நடைபெற்றாலும் பக்தி இயக்கம் மன்னர் ஆதரவைப் பெற்று இருந்ததன் விளைவாக பௌத்தமும் சமணமும் தோல்வியைச் சந்தித்தன. பதினோராம் நூற்றாண்டில் இவ்விரு மதங்களும் முற்றிலுமாக தோற்கடிக்கப்பட்டன)

18) பௌத்தம் மற்றும் சமணம் ஆகியவற்றின் மையக்கருத்தான ______________ சைவமும் வைணவமும் ஏற்றுக்கொண்டன.

A) அன்புடைமையை

B) பொருளுடைமையை

C) துறவறத்தை

D) உருவ வழிபாட்டினை

(குறிப்பு – பௌத்தம், சமணம் ஆகியவற்றின் மையக்கருத்தான துறவறத்தை சைவமும் வைணவமும் ஏற்றுக்கொண்டன. பௌத்தம், வைணவம் ஆகிய இரண்டும் எளிமையையும் உலக சுகங்களை மறுப்பதையும் முன்னிறுத்திய போது பக்தி இயக்கம், விழாக்கள், சடங்குகள் என வாழ்க்கையை கொண்டாடியது)

19) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – புறச் சமயங்கள் வடமொழியான பிராகிருதத்தை பயன்படுத்ததற்கு எதிர்வினையாக தமிழ்மொழிக்கு மேல் அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டது.

கூற்று 2 – பௌத்தமும் சமணமும் ஊழ்வினை கோட்பாட்டை பேசியபோது பக்தி இயக்கத்தை விளக்கியவர்கள் சிவனையும் விஷ்ணுவையும் சரணடைவது மூலம் விதியை வெல்ல முடியும் எனக் கூறினர்

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) இரண்டு கூற்றுகளும் சரி

D) இரண்டு கூற்றுகளும் தவறு

(குறிப்பு – பௌத்தம் மற்றும் சமணம் ஆகியவற்றுடன் ஏற்பட்ட மோதலின் விளைவாக வேத மதங்கள் சில மாறுதல்களுக்கு உள்ளாயின)

20) ராமானுஜர் உருவாக்கிய தத்துவக் கோட்பாடு எது?

A) துவைதம்

B) அத்வைதம்

C) விசிஷ்டாத்வைதம்

D) இவை எதுவும் அல்ல

(குறிப்பு – தென்னிந்தியாவில் பக்தி இயக்கம் அதன் புகழின் உச்சத்தை எட்டிய போது பக்தி கோட்பாட்டளவில் வைணவ புலவர்களாலும் அடியார்களாளும் தத்துவ தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விளக்கப்பட்டது. ராமானுஜர் விசிஷ்டாத்வைதம் என்னும் தத்துவத்தை உருவாக்கினார்)

21) கீழ்க்காணும் எந்த சமூகப் பின்னடைவுகளுக்கு எதிராக வட இந்தியாவில் பக்தி இயக்கம் குரல் கொடுத்தது?

I. சாதியை அடிப்படையாகக் கொண்ட பிரிவினைகள்

II. ஒதுக்கி வைத்தல்

III. பல கடவுள்களை வணங்கும் முறை

IV. உருவவழிபாடு

A) I, II, III

B) I, II, IV

C) II, III, IV

D) I, II, III, IV

(குறிப்பு – தமிழகத்தில் பக்தி இயக்கம் ஏழாம் நூற்றாண்டிலேயே செழித்தோங்கி இருந்த நிலையில் வட இந்தியாவில் பதினைந்தாம் நூற்றாண்டில் தான் அது முழு வேகத்தை பெற்றது. இக்காலத்தில் பெரும் எண்ணிக்கையில் பக்தி பாடல்கள் எழுதப்பட்டன)

22) கீழ்க்கண்டவர்களுள் இஸ்லாமிய ஞானிகளாக கருதப்படுபவர்கள் யார்?

I.சூபி

II. வாலி

III. தர்வீஷ்

IV. பக்கீர்

A) I, II, IV மட்டும்

B) I, III, IV மட்டும்

C) II, III, IV மட்டும்

D) I, II, III, IV

(குறிப்பு – இந்து மதத்தில் தோன்றிய பக்தி இயக்கத்திற்கு இணையாக இஸ்லாம் மதத்தில் அதை போன்ற கருத்துக்களை சூஃபியிசம் கொண்டிருந்தது. சூபி, வாலி, தர்வீஷ், பக்கீர் ஆகிய பெயர்கள் இஸ்லாமிய ஞானிகளே குறிப்பதாகும். இவர்கள் தியானம், யோகா பயிற்சிகள், துறவரம், தியாகம் போன்றவற்றின் மூலம் உள்ளுணர்வை பெருக்கி இறைநிலையை உணர்ந்தவர்கள் ஆவர்)

23) சூபியிசம் கீழ்க்காணும் எந்த நூற்றாண்டில் செல்வாக்குப் பெற்ற சக்தியாக விளங்கியது?

A) பத்தாம் நூற்றாண்டில்

B) பதினோராம் நூற்றாண்டில்

C) பன்னிரண்டாம் நூற்றாண்டில்

D) பதிமூன்றாம் நூற்றாண்டில்

(குறிப்பு – துருக்கிய படையெடுப்புடன் கூடிய இஸ்லாமின் வருகை வேத மதங்களுக்கும் குருமார்களுக்கும் பெரும் சவாலாக திகழ்ந்தது. பன்னிரண்டாம் நூற்றாண்டில் இஸ்லாமியரின் சமூக வாழ்வில் சூபியிசம் செல்வாக்கு மிக்க சக்தியாக விளங்கியது)

24) சூபியிசம் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. சூபியிசம் இஸ்லாமின் உள்ளுணர்வு சார்ந்த உள்முகமான, ஆச்சரியமான மற்றொரு பக்கம் ஆகும்.

II. இவர்கள் மனித குலத்தின் மேம்பாட்டிற்காக பணி செய்தனர். இவர்கள் தத்துவஞானிகள் ஆவர்.

III. இறைவனை அனைத்துக்கும் மேலான அழகின் உச்சம் என சூபிகள் கருதினர்.

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – இறைவனை அனைத்துக்கும் மேலான அழகின் உச்சம் என சூபிகள் கருதினர். அவ்வழகை கண்டு ஆச்சரியப்படவேண்டும், அதை நினைத்து மகிழ்ச்சி கொள்ளுதல் வேண்டும், முழு கவனத்தையும் இறைவன் மேல் குவித்தல் வேண்டும் என்றனர்)

25) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. சூபிசம் அனைத்து விதமான மத சம்பிரதாயம், பழமைவாதம், வெளிவேடம் ஆகியவற்றை எதிர்த்தது.

II. ஆன்மீக பேரின்ப நிலையை மட்டும் இலக்காகக் கொண்ட புதிய உலக ஒழுங்கை உருவாக்க ஆசை கொண்டது

III. சூபீஸம் பல பிரிவுகளைக் கொண்டது ஆகும்.

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – சூபிகளின் மகத்தான பங்களிப்பு இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையேயான வெறுப்பின் கூறிய முனைகளை மழுங்கடித்து அவர்களிடையே சகோதரத்துவத்தையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்தியதாகும்)

26) பக்தி இயக்கத்தின் சிறப்பியல்புகளாக கருதப்படுவனவற்றுள் தவறானது எது?

A) பக்தி இயக்க சீர்திருத்தவாதிகள் ஒரு கடவுள் கொள்கையை போதித்தனர்.

B) குருவானவர் வழிகாட்டியாகவும் ஆசிரியராகவும் இருத்தல் வேண்டும்.

C) ஆழ்ந்த பக்தியுடன் பாடல்கள் பாட வேண்டும் என வலியுறுத்தினர்

D) எந்த மொழியையும் புனிதமான மொழி என அவர்கள் கருதினர்

(குறிப்பு – பக்தி இயக்கத்தின் சிறப்பியல்புகளாக கருதப்படுவன, பிறப்பு இறப்பு எலும்பு சுழற்சியிலிருந்து விடுபட முடியும் என நம்பினர். இறைவனிடம் ஆழமான மற்றும் நம்பிக்கையும் கொள்வதன் மூலம் முக்தி அடைய முடியும் என்னும் கருத்தை முன்வைத்தனர். உருவ வழிபாட்டை விமர்சனம் செய்தனர். மனிதர்கள் உட்பட அனைத்து உயிரினங்களும் கடவுளின் குழந்தைகளே எனக் கூறினர்)

27) கீழ்க்கண்டவரில் ராமானந்தரின் சீடராக இருந்தவர் யார்?

A) நாமதேவர்

B) கபீர்

C) சைதன்யர்

D) குருநானக்

(குறிப்பு – இடைக்கால இந்தியாவின் மிக முக்கியமான பண்பாட்டு ஆளுமையாக கபீர் கருதப்படுகிறார். புனிதங்கள் எனக் கருதப்பட்டவற்றை கேள்விக்குறியாக்கும் அவருடைய பாடல்கள், சடங்குகள் சம்பிரதாயங்களை கேலிக்குரியதாக்கி கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறார் என்ற கருத்தை முன்வைத்தன)

28) கபீர் பற்றிய கீழ்காணும் கூற்றுகளில் எது தவறானது?

A) இவர் ராமானந்தரின் சீடர் ஆவார்.

B) உருவ வழிபாடு, பல கடவுள் வழிபாடு போன்றவற்றை எதிர்த்தார்.

C) இஸ்லாம் மதத்தில் இருந்த சம்பிரதாயங்களை கடுமையாக விமர்சித்தார்

D) இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரிப்பதற்கு ஆதரவு காட்டினார்.

(குறிப்பு – முற்போக்கான மதச்சிந்தனைகளைக் கொண்ட கபீர், இந்து இஸ்லாமிய மதங்களில் உள்ள பிரிவினைவாதங்களையும், குறுகிய மனப்பான்மைகளையும் எதிர்த்தார். இந்து சமூகத்தின் கீழ் தட்டுகளை சார்ந்த மக்கள் அவருடைய கருத்துக்களால் கவரப்பட்டனர். கடவுளை அடைய அவர் கண்டடைந்த பாதை கீழ்நிலையில் உள்ளோருக்கும் மேல் நிலையில் உள்ளோருக்கும் ஏற்புடையதாக இருந்தது)

29) சூபிசம் கொண்டுள்ள பிரிவுகளில் கீழ்க்கண்டவற்றுள் எது சரியானது?

I. சிஸ்டி

II. சுரவார்ட்டி

III. குவாதிரியா

IV. நஸ்பந்தி

A) I, II, IV மட்டும்

B) I, III, IV மட்டும்

C) II, III, IV மட்டும்

D) I, II, III, IV

(குறிப்பு – சூபிகள் கடவுளை மஸ்க் ( நேசிக்கப்படவேண்டியவர்) என்றும் தங்களை ஆசிக் ( நேசிப்பவர்கள்) என்றும் நம்பினர். பின்னாளில் சூபியிசம் பல பிரிவுகளைக் கொண்டதாக மாறியது)

30) அவர்களில் யார் தோல் பதனிடுவோர் குடும்பத்தை சேர்ந்தவர் என வரலாற்று அறிஞர்கள் கூறியுள்ளனர்?

A) நாமதேவர்

B) கபீர்

C) சைதன்யர்

D) ரவிதாஸ்

(குறிப்பு – ரவிதாஸ் பதினாறாம் நூற்றாண்டின் பக்தி இயக்கத்தை சேர்ந்த கவிஞரும் துறவியும் ஆவார். பஞ்சாப், ராஜஸ்தான், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்களால் குருவாக வணங்கப்படுபவர். அவர் இயற்றிய பக்தி பாடல்கள் பக்தி இயக்கத்தின் மேல் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தின)

31) சீக்கியர்களின் மத பாடல்களில் யாருடைய பாடல்கள் இடம்பெற்றுள்ளன?

A) கபீர்

B) ரவிதாஸ்

C) நாமதேவர்

D) சைதன்யர்

(குறிப்பு – ரவிதாஸ் பக்தி இயக்க துறவியும், புலவருமான ராமானந்தரின் சீடர்களில் ஒருவராவார். சீக்கியர்களின் மத பாடல்களில் ரவிதாசரின் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. சாதி அடிப்படையிலான சமூக பிரிவுகள் ஆண், பெண் சமத்துவமின்மை ஆகியவற்றுக்கு எதிராக பேசினார்)

32) சீக்கிய மதத்தை உருவாக்கியவர் யார்?

A) குருநானக்

B) குரு கோவிந்த சிங்

C) குரு அர்ஜுன் சிங்

D) நாமதேவர்

(குறிப்பு – குருநானக் மிகப்பெரும் அமைப்பின் செல்வாக்குமிக்க துறவியாவார். அவரால் நிறுவப்பட்ட சீக்கிய மதம் அவருடைய, ஐயப்பாடிற்கு அப்பாற்பட்ட பண்பாட்டு ஒற்றுமை சிந்தனையை பறைசாற்றுகிறது)

33) சீக்கிய மதத்தின் கடைசி குரு யார்?

A) குரு ராமதாஸ்

B) குரு தேக் பகதூர் சிங்

C) குரு அர்ஜுன் தேவ்

D) குரு கோவிந்த சிங்

(குறிப்பு – சீக்கிய குருக்களின் தலைமையில் சீக்கிய மதம் பஞ்சாப் முழுவதும் விரிவடைந்து பெருவாரியான மக்களை ஈர்த்தது. சீக்கிய மத போதனைகள் வலிமை வாய்ந்த சமூக உணர்வை ஏற்படுத்தின. அக்காலத்தில் நிலவிய அரசியல் சூழல் முகலாயப் பேரரசுடன் பகைமையை உருவாக்கிக் அடக்குமுறைக்கு வழிவகுத்து இறுதியில் குருக்களின் உயிர் தியாகத்தில் முடிந்தது)

34) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – குரு கோவிந்த சிங் சீக்கிய மதத்தின் கடைசி குரு ஆவார்.

கூற்று 2 – அவருக்குப் பின்னர் கிரந்த சாகிப் (புனித நூல்) குருவாக கருதப்பட்டது.

கூற்று 3 – குருநானக்கின் போதனைகள் குரு கிரந்த சாகிப் ஆகும்.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லா கூற்றுகளும் சரி

(குறிப்பு – குருநானக்கின் போதனைகள் ஆதிகிரந்தம் ஆகும். ஏனைய சீக்கிய குருக்களின் போதனைகளும், ராமானந்தர், கபீர், நாமதேவர் போன்ற பக்தி இயக்கக் கவிஞர் களின் சூபி துறவிகளின் போதனைகளும் ஆதி கிரந்தத்தோடு சேர்த்து குரு கிரந்த சாகிப் எனப்படுகிறது)

35) சைதன்யர் கீழ்காணும் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார்?

A) பீகார்

B) குஜராத்

C) வங்காளம்

D) பஞ்சாப்

(குறிப்பு – வங்காளத்தைச் சேர்ந்த சைதன்யர் பக்தி இயக்கத்தின் ஒரு குறிப்பிட்ட நிலையை பிரதிபலித்தார். கபீர் மற்றும் அவரைத் தொடர்ந்து வந்த பக்தி இயக்க துறவிகளின் போதனைகளில் இருந்து அவர் வேறுபட்டார். அனைத்து வேறுபாடுகளையும் கடந்து நிற்கும் இறைவனை புரிந்து கொள்ள மக்களை ஒருங்கிணைத்த கபீரை போலல்லாமல் சைதன்யர் ஏனைய கடவுள்கள் காட்டிலும் கிருஷ்ணர் உயர்வானவர் என கொண்டார்)

36) இறைவழிபாட்டில் குழுவாக கூடி பாட்டிசைத்து அத்துடன் பரவசத்தை ஏற்படுத்தும் நடனமாடும் பழக்கத்தை பிரபலமாக்கியவர் யார்?

A) கபீர்

B) நாமதேவர்

C) சைதன்யர்

D) ரவிதாஸ்

(குறிப்பு – சைதன்யர் இறைவழிபாட்டில் குழுவாக கூடி பாட்டிசைத்து அத்துடன் பரவசத்தை ஏற்படுத்தும் நடனமாடும் பழக்கத்தை பிரபலம் ஆக்கினார். அவருடைய இயக்கம் வங்காளத்திலும் ஒரிசாவிலும் பிரபலமானது.)

37) நாமதேவர் கீழ்க்காணும் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார்?

A) பீகார்

B) குஜராத்

C) மகாராஷ்டிரா

D) வங்காளம்

(குறிப்பு – மகாராஷ்டிராவில் சதாரா மாவட்டத்தில் நரஸ் வாமணி எனும் கிராமத்தில் தையல் கலைஞரின் மகனாக நாமதேவர் பிறந்தார்)

38) நாமதேவர் யாரால் ஈர்க்கப்பட்டார்?

A) ஜன தேவர்

B) சைதன்யர்

C) குருநானக்

D) ராமானந்தர்

(குறிப்பு – நாமதேவர், ஜன தேவர் எனும் துறவியால் ஈர்க்கப்பட்டு பக்தி இயக்கத்தில் பங்கெடுத்தார். நாமதேவர் பந்தர்பூரிலுள்ள விட்டலாவின்(விஷ்ணு) மேல் தீவிர பக்தி கொண்டவர்.)

39) அபங்க எனும் இந்து மத குருமார்கள் இறைவனைப் புகழ்ந்து எழுதிய பாடல்களை எழுதியவர் யார்?

A) ஜன தேவர்

B) நாமதேவர்

C) குருநானக்

D) ராமானந்தர்

(குறிப்பு – நாமதேவர் பெரும்பாலும் தன் சீடர்களுடன் பெரும்பாலான நேரத்தை இறைவழிபாட்டிலும் தானே இயற்றிய பாடல்களைப் பாடுவதிலும் கழித்தார். மராத்திய மற்றும் இந்திய மொழிகளில் அபங்க( மகாராஷ்டிராவை சேர்ந்த இந்து மத குருமார்கள் இறைவனை புகழ்ந்து எழுதிய பாடல்கள்) என்றழைக்கப்பட்ட பாடல்களை எழுதினார். இவர் பஞ்சாப் வரை பயணம் மேற்கொண்டார்)

40) அலகாபாத் என்றழைக்கப்படும் பிரயாகையில் பிறந்தவர் யார்?

A) ஜன தேவர்

B) சைதன்யர்

C) குருநானக்

D) ராமானந்தர்

( குறிப்பு – ராமானந்தர் மாதவாச்சாரியாரின் தத்துவ பள்ளியை சேர்ந்தவர். ராமானந்தர் ராமானுஜரின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டவர். பிரயாகை என்றழைக்கப்படும் அலகாபாத்தில் பிறந்த ராமானந்தர் காசியில் இந்து மத தத்துவத்தின் உயர் கல்வியைக் கற்று ராமானுஜரின் பள்ளியில் போதகராக பணியில் அமர்ந்தார்)

41) ராமானந்தரின் சீடர்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்தவர்கள் கீழ்க்கண்டவர்களுள் யார்?

I. ரவிதாஸ்

II. கபீர்

III. சூர்தாஸ்

A) I, II மட்டும்

B) I, III மட்டும்

C) II, III மட்டும்

D) இவர்கள் அனைவரும்

(குறிப்பு – கடவுளின் முன் அனைவரும் சமம் என்ற கொள்கையை ராமானந்தர் போதித்தார். சமூகத்தின் அடித்தளத்தில் சேர்ந்த மக்கள் இவரை பின்பற்றினர். ரவிதாஸ், கபீர் மற்றும் இரண்டு பெண்கள் அவருடைய 12 சீடர்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர் என்பது மரபு)

42) பிராந்திய மொழியான இந்தியில் தனது கொள்கைகளை போதித்தவர்களில் முதலாமவர் கீழ்கண்டவருள் யார்?

A) ஜன தேவர்

B) சைதன்யர்

C) குருநானக்

D) ராமானந்தர்

(குறிப்பு – ராமானந்தரின் சீடர்கள், மிதவாதிகள் மற்றும் முற்போக்கர்கள் என இரு பிரிவாக பிரிந்தனர். துளசிதாசர் உள்ளடக்கிய முற்போக்கு பிரிவினர் இந்துக்களும் முஸ்லிம்களும் ஏற்றுக் கொள்ளும் வகையில் புதிய சிந்தனையை உருவாக்கப் பெரும் முயற்சி எடுத்தனர்)

43) மீராபாய் கீழ்காணும் எந்த மாநிலத்தில் பிறந்தார்?

A) ராஜஸ்தான்

B) பஞ்சாப்

C) மகாராஷ்டிரா

D) மத்திய பிரதேசம்

(குறிப்பு – மீராபாய் ராஜஸ்தானில், மேர்தா மாவட்டத்தில் குத் என்னும் ஊரில் பிறந்தார். ஜோத்புர் அரசை நிறுவிய ராணா ஜோதாஜியின் கொள்ளு பேத்தி ஆவார்)

44) மேவாரின் அரசனான ராணா சங்காவின் மகனான போஜராஜன் என்பவரை மணந்தவர் யார்?

A) மீராபாய்

B) ஜான்சிராணி

C) சிந்தியா பாட்டீல்

D) இவர்கள் யாரும் அல்ல

(குறிப்பு – கிருஷ்ணரின் தீவிர பக்தையாக மாறிய மீராபாய் அரண்மனையை விட்டு வெளியேறி அன்பே கடவுளை அடையும் வழி என போதனை செய்யவும் பஜனை பாடல்களை பாடவும் தொடங்கினார்.)

45) சூர்தாஸ் கீழ்காணும் எந்த முகலாய மன்னரின் அவையில் இடம் பெற்றிருந்தார்?

A) ஷாஜகான்

B) ஜஹாங்கீர்

C) அக்பர்

D) அவுரங்கசீப்

(குறிப்பு – அக்பரின் அவையில் இடம்பெற்றிருந்த சூர்தாஸ் ஆக்ராவின் பார்வை திறனற்ற பாடகன் என பலராலும் அறியப்பட்டவர். சூர்தாஸ் டெல்லி சுல்தானியர் காலத்து வைணவ போதகரான வல்லபாச்சாரியார் என்பவரின் சீடர் என நம்பப்படுகிறது)

46) கிருஷ்ணரை பற்றிய ‘பாலலீலா’ என்னும் என்னும் நூலை எழுதியவர் யார்?

A) மீராபாய்

B) ராமானந்தர்

C) சூர்தாஸ்

D) துக்காராம்

(குறிப்பு – சூர்தாஸ் அன்பெனும் மதத்தையும் தனிப்பட்ட கடவுளிடம் பக்தியோடு இருப்பதையும் போதித்தார். கடவுள் கிருஷ்ணரை குறித்து ஹிந்தி மொழியில் உணர்வுபூர்வமான பாடல்களை இயற்றினார். சூர்தாஸின் கவிதைகளில் கிருஷ்ணருடைய பால லீலா முக்கிய கருப்பொருளாக விளங்கியது)

47) சூர்தாசரின் படைப்புகளுள் அல்லாதது எது?

A) சூர்சாகர்

B) சூர்சரவளி

C) சைத்ய லகிரி

D) தஸ்கிரா இஸிந்த்

(குறிப்பு – பால லீலா, சூர்சாகர், சூர்சரவளி, சைத்யலகிரி போன்றவை சூர்தாஸ் அவர்களின் படைப்புகளாகும். அவருடைய மாபெரும் படைப்பான சூர்சாகர் அல்லது சூர் சமுத்திரம் கிருஷ்ணர் பிறந்ததில் இருந்து மதுராவிற்க்குப் புறப்படும் வரையிலான கதைகளை கொண்டுள்ளது)

48) துக்காராம் மகாராஷ்டிராவில் பூனாவுக்கு அருகே ______________ பிறந்தார்.

A) 1600 இல்

B) 1602 இல்

C) 1604 இல்

D) 1608 இல்

(குறிப்பு – துக்காராம் 1608 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் பூனாவுக்கு அருகே ஒரு கிராமத்தில் பிறந்தார். சத்ரபதி சிவாஜி, ஏக் நாத், ராம்தாஸ் போன்றோரின் சமகாலத்தவர் ஆவார்)

49) துக்காராம் போதித்தவைகளில் கீழ்க்கண்டவற்றுள் தவறானது எது?

A) இவர் கடவுள் வடிவமற்றவர் என்றார்.

B) இவர் வேத வேள்விகள் மற்றும் சடங்குகளை நிராகரித்தார்.

C) இவர் உருவ வழிபாட்டை ஏற்றார்.

D) இவர் புனிதப் பயணங்களை நிராகரித்தார். உலக நடவடிக்கைகளில் ஆன்மீக இன்பத்தை துய்க்க முடியாது எனக்கூறினார்

(குறிப்பு – துக்காராம் உருவவழிபாடு நிராகரித்தார். கடவுள் பற்று, மன்னிக்கும் மனப்பாங்கு, மன அமைதி ஆகியவற்றை போதித்தார். சமத்துவம் சகோதரத்துவம் ஆகிய செய்திகளை பரப்பினார். இந்து முஸ்லிம் ஒற்றுமையை ஏற்படுத்த முயன்றார்)

50) வர்ணாசிரம கொள்கையின் படி முக்தி என்பது யாருக்கு மட்டுமே உரியது?

A) முதல் படிநிலையை சேர்ந்த மக்களுக்கு

B) முதலிரண்டு படிநிலையை சேர்ந்த மக்களுக்கு

C) முதல் மூன்று படிநிலையை சேர்ந்த மக்களுக்கு

D) நான்கு படிநிலைகளை சேர்ந்த மக்களுக்கும்

(குறிப்பு – முக்தி என்பது வர்ணாசிரமக்கொள்கையின்படி முதல் மூன்று படிநிலைகளை சேர்ந்த மக்களுக்கு மட்டுமே உரியது என்ற நம்பிக்கையை மாற்றி அது அனைவருக்கும் உரியது என்ற கருத்தை முன்வைத்தது பக்தி இயக்கம். பெண்களுக்கும் சமூகத்தின் அடித்தட்டில் இருந்த மக்களுக்கும் சேர்த்து ஆன்ம விடுதலைக்கான வழியை காட்டியது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!