Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Book Back QuestionsTnpsc

பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை Book Back Questions 8th Social Science Lesson 22

8th Social Science Lesson 22

22] பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

இந்திய ஆயுதப் படைகளைக் கௌரவிப்பதற்காக இந்திய அரசால் தேசியப் போர் நினைவுச் சின்னம் (National War Memorial) கட்டப்பட்டுள்ளது. இந்நினைவுச் சின்னம் புது டெல்லியில் உள்ள இந்தியா கேட் அருகில் 40 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. போரின் போது நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த இந்திய இராணுவ வீரர்களின் பெயர்கள் நினைவுச் சின்னத்தின் சுவர்களின் கல்வெட்டில் பொறிக்கபட்டுள்ளன.

பீல்டு மார்ஷல் (Field Marshal): இது ஐந்து நட்சத்திர அந்தஸ்து கொண்ட பொது அதிகாரி பதவி. இது இந்திய இராணுவத்தின் உயர்ந்த பதவி ஆகும். சாம் மானக்ஷா என்பவர் இந்தியாவின் முதல் பீல்டு மார்ஷல் ஆவார். கே. எம். கரியப்பா இரண்டாவது பீல்டு மார்ஷல் ஆவார். இந்திய விமானப்படையில் ஐந்து நட்சத்திர அந்தஸ்து கொண்ட மார்ஷல் பதவிக்கு உயர்வு பெற்ற முதல் மற்றும் ஒரே அதிகாரி அர்ஜீன் சிங் ஆவார்.

1758ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட “மெட்ராஸ் ரெஜிமென்ட்” (The Madras Regiment) இந்திய இராணுவத்தின் மிகப்பழமையான காலாட்படை பிரிவுகளில் ஒன்றாகும். இந்த “ரெஜிமென்ட்” தமிழ்நாட்டின் உதகமண்டலத்தில் உள்ள வெல்லிங்டன் எனுமிடத்தில் அமைந்துள்ளது. 1962இல் நடந்த சீன – இந்திய போரானது இராணுவ அதிகாரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியதின் அவசியத்தை உணர்த்தியது. இந்திய இராணுவத்தின் அவசர ஆணையத்திற்கான அதிகாரிகளுக்குப் பயிற்சியளிக்க பூனா மற்றும் சென்னை ஆகிய இடங்களில் “அதிகாரிகள் பயிற்சிப் பள்ளிகள்” (Officers Training Schools – OTS) நிறுவப்பட்டது. 1998 ஜனவரி 1 முதல் அதிகாரிகள் பயிற்சிப் பள்ளியானது “அதிகாரிகள் பயிற்சி அகாடமி” (Officers Training Academy – OTA) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

கி. பி. (பொ. ஆ) 1025இல் தமிழ்நாட்டில் இருந்து சோழ மன்னர் முதலாம் இராஜேந்திரன் தென் கிழக்கு ஆசியாவின் கடல் சார் பகுதியான ஸ்ரீ விஜயம் மீது தன் கடற்படையெடுப்பைத் தொடங்கினார். மேலும் தற்போது கெடா என்றழைக்கப்படும் கடாரம் பகுதியை வென்றார். முதலாம் இராஜேந்திர சோழனின் ஸ்ரீவிஜயத்துக்கு எதிரான இந்த கடல் கடந்த படையெடுப்பு இந்திய வரலாற்றில் சிறப்பான நிகழ்வாக கருதப்படுகிறது.

தேசிய மாணவர் படை (National Cadet Corps – NCC): தேசிய மாணவர் படை என்பது இராணுவப்படை, கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு முத்தரப்பு சேவை அமைப்பாகும். இந்த அமைப்பு நாட்டின் இளைஞர்களை ஒழுக்கமான மற்றும் தேசபக்தி மிக்க குடிமக்களாக உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளது. தேசிய மாணவர் படை என்பது ஒரு தன்னார்வ அமைப்பாகும். இது இந்தியா முழுவதும் உள்ள உயர் நிலைப்பள்ளிகள், கல்லூரிகள், மற்றும் பல்கலைக்கழகங்களிலிருந்து மாணவர்களைத் தேர்ந்தெடுக்கிறது மேலும் மாணவர்களுக்குச் சிறிய ஆயுதங்கள் மற்றும் அணிவகுப்புகளில் அடிப்படை இராணுவப் பயிற்சியும் அளிக்கிறது.

ஜனவரி 15 – இராணுவ தினம்; பிப்ரவரி 1 – கடலோரக் காவல்படை தினம்; மார்ச் 10 – மத்திய தொழிலக பாதுகாப்புப் படை தினம்; அக்டோபர் 7 – விரைவு அதிரடிப்படை தினம்; அக்டோபர் 8 – விமானப்படை தினம்; டிசம்பர் 4 – கடற்படை தினம்; டிசம்பர் 7 – ஆயுதப்படைகள் கொடி தினம்.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம், சீனா, பூடான், வங்காளதேசம் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளுடன் இந்தியா பொதுவான நில எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது. மேலும் இலங்கையுடன் பொதுவான கடல் எல்லையையும் பகிர்ந்து கொள்கிறது.

நெல்சன் மண்டேலா: இவர் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் (தென் ஆப்பிரிக்கா) தலைவராக செயல்பட்டார். இவர் இனவெறிக்கு எதிரான ஓர் உறுதியான போராளி ஆவார். நிறவெறிக் கொள்கை என்பது இனப்பாகுபாட்டின் ஒரு மோசமான வடிவம் ஆகும். இது மனிதாபிமானத்திற்கும், மக்களாட்சிக்கும் எதிரானது. இனவெறிக் கொள்கை மற்றும் அனைத்து வகையான இனப்பாகுபாட்டிற்கும் எதிராக இந்தியா போராடியது. 1990ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் இனவெறிக் கொள்கையை முடிவுக்கு கொண்டு வந்தது. இந்திய வெளியுறவுக் கொள்கையின் மிகச்சிறந்த வெற்றியாகும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. இந்திய ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி ____________

(அ) குடியரசுத் தலைவர்

(ஆ) பிரதம அமைச்சர்

(இ) ஆளுநர்

(ஈ) முதலமைச்சர்

2. இந்திய ராணுவப் படையின் முதன்மை நோக்கமானது

(அ) தேசிய பாதுகாப்பு

(ஆ) தேசிய ஒற்றுமை

(இ) அந்நிய ஆக்கிரமிப்பிலிருந்து நாட்டைக் காத்தல்

(ஈ) மேற்கூறிய அனைத்தும்

3. இராணுவ தினம் அனுசரிக்கப்படும் நாள்

(அ) ஜனவரி 15

(ஆ) பிப்ரவரி 1

(இ) மார்ச் 10

(ஈ) அக்டோபர் 7

4. அஸ்ஸாம் ரைபிள்ஸ் எதன் கீழ் செயல்படுகிறது?

(அ) பாதுகாப்பு அமைச்சகம்

(ஆ) தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

(இ) திட்ட மேலாண்மை நிறுவனம்

(ஈ) உள்துறை அமைச்சகம்

5. இந்தியக் கடலோரக் காவல்படை நிறுவப்பட்ட ஆண்டு

(அ) 1976

(ஆ) 1977

(இ) 1978

(ஈ) 1979

6. இந்திய வெளியுறவுக் கொள்கையானது பல்வேறு கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டது. அவைகளுள் ஒன்று

(அ) சத்தியமேவ ஜெயதே

(ஆ) பஞ்சசீலம்

(இ) மேற்கூறிய இரண்டும்

(ஈ) மேற்கூறிய எவையுமில்லை

7. பின்வருவனவற்றுள் எந்த தீவுகள் இந்தியாவிற்கு சொந்தமானவை?

(அ) அந்தமான் மற்றும் மாலத்தீவு

(ஆ) அந்தமான் மற்றும் லட்சத்தீவுகள்

(இ) இலங்கை மற்றும் மாலத்தீவு

(ஈ) மாலத்தீவு மற்றும் லட்சத்தீவுகள்

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. மெட்ராஸ் ரெஜிமெண்ட் பிரிவின் மையம் அமைந்துள்ள இடம் ____________

2. இந்திய கடற்படையின் தலைமை தளபதி ____________ ஆவார்.

3. இந்திய விமானப்படையிலிருந்து ஐந்து நட்சத்திர அந்தஸ்து கொண்ட மார்ஷல் பதவிக்கு உயர்வு பெற்ற முதல் மற்றும் ஒரே அதிகாரி ___________ ஆவார்.

4. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையினை வடிவமைத்த முதன்மைச் சிற்பி ___________

5. அணிசேராமை என்ற சொல்லை உருவாக்கியவர் _____________

பொருத்துக:

1. நெல்சன் மண்டேலா – 8 உறுப்பினர்கள்

2. தேசிய போர் நினைவுச்சின்னம் – பீல்டு மார்ஷல்

3. மானக்க்ஷா – எரிசக்தி மேம்பாடு

4. சார்க் – இனவெறிக் கொள்கை

5. பி. சி. ஐ. எம். – புது டெல்லி

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக:

1. மத்திய ஆயுதக் காவல் படைகள் (CAPF) பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.

2. மெட்ராஸ் ரெஜிமென்ட் பழமையான காலாட்படைப் பிரிவுகளில் ஒன்று.

3. விரைவு அதிரடிப் படையானது, மத்திய ரிசர்வ் காவல் படையின் (CRPF) ஒரு சிறப்பு பிரிவு ஆகும்.

4. NCC மாணவர்களுக்கு அடிப்படை இராணுவப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

5. வங்காள தேசம் இந்தியாவின் ஒரு பகுதி ஆகும்.

6. இந்தியாவிற்கும், ASEAN என்ற கூட்டமைப்பில் உள்ள நாடுகளுக்கும் மியான்மர் ஒரு நிலப்பாலமாக செயல்படுகிறது.

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. ஆயுதப்படைகள் தொடர்பான பின்வரும் கூற்றினை ஆராய்க.

I. இந்திய இராணுவப் படை ஆயுதப் படைகளின் நில அடிப்படையிலான பிரிவு ஆகும்.

II. இந்திய இராணுவப் படையின் நோக்கம் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல் மனித மீட்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறது.

(அ) I மட்டும் சரி

(ஆ) II மட்டும் சரி

(இ) I மட்டும் II சரி

(ஈ) I மட்டும் II தவறு

2. கூற்று: குடியரசுத் தலைவர் இந்திய ஆயுதப் படைகளின் தலைமை தளபதி ஆவார்.

காரணம்: குடியரசுத் தலைவர் நாட்டின் தலைவராகவும் மிக உயர்ந்த பதவி நிலையையும் வகிக்கிறார்.

(அ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்

(ஆ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல

(இ) கூற்று சரி, காரணம் தவறு

(ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு

3. கூற்று: பன்னாட்டு கூட்டுறவை இந்தியா ஆதரிக்கிறது.

காரணம்: நட்பு-கூட்டுறவு மூலம் நாடுகளுக்கிடையே உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்க முடியும் என்று இந்தியா நம்புகிறது.

(அ) கூற்று சரி, காரணம் தவறு

(ஆ) கூற்று, காரணம் இரண்டும் தவறு

(இ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்

(ஈ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல

4. இனவெறிக்கொள்கை பற்றி பின்வரும் எந்த கூற்று சரியானவை அல்ல.

I. நிறவெறிக் கொள்கை என்பது இனப்பாகுபாட்டின் ஒரு மோசமான வடிவம்.

II. இது மனிதாபிமானத்திற்கு எதிரானது.

III. இனப்பாகுபாட்டுக் கொள்கை இந்தியாவில் நடைமுறையில் உள்ளது.

(அ) I மற்றும் II

(ஆ) II மற்றும் III

(இ) II மட்டும்

(ஈ) III மட்டும்

5. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.

(அ) மாலத்தீவு

(ஆ) இலங்கை

(இ) மியான்மர்

(ஈ) லட்சத்தீவுகள்

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. குடியரசுத் தலைவர் 2. மேற்கூறிய அனைத்தும் 3. ஜனவரி 15

4. உள்துறை அமைச்சகம் 5. 1978 6. பஞ்சசீலம்

7. அந்தமான் மற்றும் லட்சத்தீவுகள்

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. தமிழ்நாட்டின் உதகமண்டலத்தில் உள்ள வெல்லிங்டன் 2. அட்மிரல் 3. அர்ஜீன் சிங்

4. ஜவகர்லால் நேரு 5. வி. கே. கிருஷ்ணமேனன்

பொருத்துக: (விடைகள்)

1. நெல்சன் மண்டேலா – இனவெறிக் கொள்கை

2. தேசிய போர் நினைவுச்சின்னம் – புது டெல்லி

3. மானக்ஷா – பீல்டு மார்ஷல்

4. சார்க் – 8 உறுப்பினர்கள்

5. பி. சி. ஐ. எம் – எரிசக்தி மேம்பாடு

சரியா / தவறா எனக் குறிப்பிடுக:

1. தவறு

2. சரி

3. சரி

4. தவறு

5. சரி

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றைத் தேர்வு செய்க:

1. i மற்றும் ii சரி

2. கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.

3. கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.

4. iii மட்டும்

5. மியான்மர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!