Book Back QuestionsTnpsc

பாய்மங்கள் Book Back Questions 9th Science Lesson 3

9th Science Lesson 3

3] பாய்மங்கள்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

கணக்கீடு 1: 90 கிலோ நிறையைக் கொண்ட மனிதன் ஒருவன் தன் இரு கால்களிலும் தரையில் நிற்கிறான். தரையுடன் கால்களின் பரப்பளவு 0.036 மீ2 ஆகும். (g = 10 மீ வி-2 எனக் கொள்க). அவன் உடல எவ்வளவு அழுத்தத்தை தரையில் ஏற்படுத்துறது,

தீர்வு: மனிதனின் எடை (உந்து விசை),

F = mg = 90 கிகி x 10 மீ வி-2 = 900 நியூட்டன்

அழுத்தம், P = F / A = 900 நியூட்டன் / 0.036 மீ2 பாஸ்கல்.

ஒரு சிறிய ஆணி நமது உடலைத் துளைக்கும் போது வலியை உணர்கிறோம். ஆனால், சிலர் ஆணிப் படுக்கையில் படுத்தாலும், அவர்கள் உடலில் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்கிறது. அது எப்படி? ஏனெனில், அவர்கள் உடல், ஆணியைத் தொடும் பரப்பானது அதிகமாக உள்ளது.

கணக்கீடு 2: 0.85 மீ திரவத்தம்ப உயரமுள்ள நீர் (அடர்த்தி, ρw = 1000 கிகி மீ-3) மற்றும் அதே உயரமுள்ள மண்ணெண்ணெய் (அடர்த்தி, ρk = 800 கிகி மீ-3) ஆகியவை செலுத்தும் அழுத்தத்தைக் கணக்கிடுக.

தீர்வு: நீரினால் ஏற்படும் அழுத்தம் = hρwg = 0.85 மீ x 1000 கிகி மீ-3 x 10 மீவி-2 = 8500 பாஸ்கல்

மண்ணெண்ணையினால் ஏற்படும் அழுத்தம் = hρkg = 0.85 மீ x 800 கிகி மீ-3 x 10 மீ வி-2 = 6800 பாஸ்கல்.

மனிதனின் நுரையீரல் கடல்மட்ட வளிமண்டல அழுத்தத்தில் (101.3kpa) சுவாசிப்பதற்கேற்ப தகுந்த தகவமைப்பைக் கொண்டுள்ளது. உயரமான மலைகளின் மேலே செல்லும் போது அழுத்தம் குறைவதால், மலையேறுபவர்களுக்கு உயிர்வாயு உருளை இணைந்த சிறப்பான சுவாசிக்கும் இயந்திரங்கள் தேவைப்படுகின்றன. அதுபோலவே, கடல் மட்டத்தைவிட அழுத்தம் அதிகமான சுரங்கங்களுக்குள் வேலை செய்பவர்களுக்கும் சிறப்பான சுவாசிக்கும் கருவிகள் தேவைப்படுகின்றன.

கணக்கீடு 3: இயற்பியல் ஆய்வகத்தில் உள்ள பாதரச காற்றழுத்தமானி ஒன்று 732 மி.மீ அளவினை பாதரசத் தம்பத்தில் குறிக்கிறது. அங்குள்ள வளிமண்டல அழுத்தத்தைக் கணக்கிடுக. பாதரசத்தின் அடர்த்தி, ρ = 1.36 x 104 கிகி மீ-3 எனவும், g = 9.8 மீ வி-2 எனவும் கொள்க.

தீர்வு: ஆய்வகத்தில் வளிமண்டல அழுத்தம்

P = hρg = 732 x 10-3 x 1.36 x 104 x 9.8 = 9.76 x 104 பாஸ்கல் = 0.976 x 105 பாஸ்கல்

எரிபொருள் நிரப்பும் இடங்களில் வாகனங்களின் டயர் அழுத்தம் psi என்னும் அலகுகளில் குறிப்பிடப்படுகிறது. psi என்னும் அலகு ஒரு அங்குலத்தில் (inch) செயல்படும் ஒரு பாஸ்கல் அழுத்தம் ஆகும். இது அழுத்தத்தை அளக்கும் ஒரு பழமையான முறையாகும்.

கணக்கீடு 4: 2000 கி.கி எடை கொண்ட வாகனத்தைத் தூக்குவதற்கு நீரியல் அமைப்பு பயன்படுத்தப்படுகிறது. வாகனம் இருக்கும் பிஸ்டனின் பரப்பளவு 0.5 மீ2 மற்றும் விசை செயல்படும் பிஸ்டனின் பரப்பளவு 0.03 மீ2 எனில், வாகனத்தைத் தூக்குவதற்குத் தேவைப்படும் குறைந்த அளவு விசை யாது?

கொடுக்கப்பட்டவை: வாகனம் உள்ள பிஸ்டனின் பரப்பளவு (A1) = 0.5 மீ2

வாகனத்தின் எடை (F1) = 2000 கிகி x 9.8 மீ வி-2

F2 என்ற விசை செயல்படும் பரப்பளவு (A2) = 0.03 மீ2

தீர்வு: P1 =P2; F1/A1 = F2/A2 மேலும் F2 = F1/A1A2; F2 = (2000 x 9.8) 0.03/0.5 = 1176 N

கணக்கீடு 5: 12 செ.மீ நீளமும் 11 செ.மீ அகலமும், 3.5 செ.மீ தடிமனும் கொண்ட ஒரு விநோதமான பொருள் உன்னிடம் உள்ளது. அதன் நிறை 1155 கிராம் எனில், a) அதன் அடர்த்தி யாது? b) தண்ணீரில் அது மிதக்குமா? மூழ்குமா?

தீர்வு: பொருளின் அடர்த்தி = நிறை / பருமன் = 1155 கி / 12 செ.மீ x 11 செ.மீ x 3.5 செமீ = 1155/462 = 2.5 கி செமீ-3

அந்த விநோதமான பொருள் நீரை விட அதிக அடர்த்தி உடையதால் அது நீரில் மூழ்கும்.

நன்னீரை விட உப்பு நீர் (கடல் நீர்) அதிகமான மிதப்பு விசையை ஏற்படுத்தும். ஏனெனில் மிதப்பு விசையானது பாய்மங்களின் பருமனைச் சார்ந்தது போல அதன் அடர்த்தியையும் சார்ந்துள்ளது.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. நீரில் மூழ்கியிருக்கும் காற்றுக்குமிழி மேலே எழும்பும் போது, அதன் அளவு

(அ) குறையும்

(ஆ) அதிகரிக்கும்

(இ) அதே அளவில் இருக்கும்

(ஈ) குறையும் அல்லது அதிகரிக்கும்

2. வளிமண்டலத்தில் மேகங்கள் மிதப்பதற்கு, அவற்றின் குறைந்த ___________ காரணமாகும்.

(அ) அடர்த்தி

(ஆ) அழுத்தம்

(இ) திசைவேகம்

(ஈ) நிறை

3. அழுத்த சமையற்கலனில் (pressure cooker) உணவு விரைவாக சமைக்கப்படுவதற்குக் காரணம், அதனுடைய

(அ) அதிகரிக்கப்பட்ட அழுத்தம் கொதி நிலையைக் குறைக்கிறது.

(ஆ) அதிகரிக்கப்பட்ட அழுத்தம் கொதி நிலையை உயர்த்துகிறது.

(இ) குறைக்கப்பட்ட அழுத்தம் கொதி நிலையை உயர்த்துகிறது.

(ஈ) அதிகரிக்கப்பட்ட அழுத்தம் உருகு நிலையைக் குறைக்கிறது.

4. நீருள்ள வாளியில், காற்றுப் புகாத அடைப்பானால் மூடப்பட்ட காலி பிளாஸ்டிக் பாட்டில் ஒன்று கீழ்நோக்கி அழுத்தப்படுகிறது. பாட்டில் கீழ்நோக்கி தள்ளப்படும் போது, அதன் அடிப்பகுதியில் செயல்படும் விசையானது அதிகரிக்கிறது. இதற்கான காரணம் என்ன?

(அ) அதிக பருமனுள்ள நீர் வெளியேற்றப்படுகிறது.

(ஆ) அதிக எடையுள்ள நீர் வெளியேற்றப்படுகிறது.

(இ) ஆழம் அதிகரிக்கும் போது அழுத்தம் அதிகரிக்கின்றது.

(ஈ) மேலே கூறிய யாவும்.

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. பொருளானது திரவத்தில் மூழ்கியிருக்கும் போது உணரப்படும் எடையானது அதன் உண்மையான எடையை விட ___________ ஆகத் தோன்றும்.

2. வளிமண்டல அழுத்தத்தை அளவிடப் பயன்படும் கருவி __________ ஆகும்.

3. திரவத்தில் மூழ்கியுள்ள பொருளின் மீது செயல்படும் மிதப்பு விசையின் எண் மதிப்பு திரவத்தின் _________ ஐப் பொறுத்தது.

4. பழரசம் அருந்தப் பயன்படும் உறிஞ்சு குழல் __________ மூலம் வேலை செய்கிறது.

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக:

1. இடப்பெயர்ச்சி செய்யப்பட்ட நீரின் எடை மிதப்பு விசையைத் தீர்மானிக்கிறது.

2. ஒரு பொருளின் வடிவம் அப்பொருள் மிதக்குமா இல்லையா என்பதைத் தீர்மானிக்கிறது.

3. மிக உயரமான கட்டடங்களின் அடிப்பாகம் அகலமாக இருப்பதால், கட்டடம் அதிக அழுத்தத்தை புவியின் மீது செலுத்துகிறது.

4. ஆர்க்கிமிடிஸ் தத்துவம் வாயுக்களுக்கும் பொருந்தும்.

5. நீரியல் அழுத்தி எண்ணெய் வித்துக்களிலிருந்து எண்ணெய் எடுக்க பயன்படுகிறது.

பொருத்துக:

1. அடர்த்தி – hρg

2. 1 கிராம் எடை – பால்

3. பாஸ்கல் விதி – நிறை / பருமன்

4. பாய்மம் ஏற்படுத்தும் அழுத்தம் – அழுத்தம்

5. பால்மானி – 980 டைன்

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

(அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் உண்மை. மேலும், காரணம் கூற்றின் சரியான விளக்கம்

(ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் உண்மை. ஆனால், காரணம் கூற்றின் தவறான விளக்கம்

(இ) கூற்று உண்மை. ஆனால் காரணம் தவறு

(ஈ) கூற்று தவறு. ஆனால் காரணம் உண்மை

1. கூற்று: ஒரு பொருள் மதிப்பதற்கு, தனது எடைக்குச் சமமான எடையுள்ள நீரை வெளியேற்ற வேண்டும்.

காரணம்: அப்பொருள் எந்தவொரு கீழ்நோக்கிய விசையையும் உணர்வதில்லை.

2. கூற்று: நீரியல் தூக்கி பாஸ்கல் விதியின் அடிப்படையில் செயல்படுகிறது.

காரணம்: ஓரலகு பரப்பில் செயல்படும் செங்குத்து விசையே அழுத்தம் ஆகும்.

சரியான விடையைத் தேர்ந்தெடு: (விடைகள்)

1. அதிகரிக்கும் 2. அடர்த்தி 3. அதிகரிக்கப்பட்ட அழுத்தம் கொதி நிலையை உயர்த்துகிறது 4. மேலே கூறியயாவும்

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. குறைவு 2. காற்றழுத்தமானி 3. அடர்த்தி 4. காற்றழுத்தம்

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: (தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக)

1. சரி

2. தவறு

சரியான விடை: ஒரு பொருளின் அடர்த்தி அப்பொருள் மிதக்குமா இல்லையா என்பதை தீர்மானிக்கிறது.

3. தவறு

சரியான விடை: மிக உயரமான கட்டடங்களில் அடிப்பாகம் அகலமாக இருப்பதால் கட்டடம் குறைந்த அழுத்தத்தை புவியின் மீது செலுத்துகிறது.

4. சரி

5. சரி

பொருத்துக: (விடைகள்)

1. அடர்த்தி – நிறை/பருமன்

2. 1 கிராம் எடை – 980 டைன்

3. பாஸ்கல் விதி – அழுத்தம்

4. பாய்மம் ஏற்படுத்தும் அழுத்தம் – hρg

5. பால்மானி – பால்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!