Book Back QuestionsTnpsc

பாறை மற்றும் மண் Book Back Questions 8th Social Science Lesson 9

8th Social Science Lesson 9

9] பாறை மற்றும் மண்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

பாறையியல் என்பது “புவி மண்ணியலின்” ஒரு பிரிவு ஆகும். இது பாறைகள் ஆய்வுடன் தொடர்புடையது. பாறையியல் (Petrology) என்ற சொல் கிரேக்க மொழியிலிருந்து பெறப்பட்டது. “பெட்ரஸ்” (Petrus) என்பது பாறைகளையும் Logos “லோகோஸ்” என்பது அதைப் பற்றி படிப்பு ஆகும்.

இக்னியஸ் (Igneous) என்ற சொல் இலத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்டது. இக்னியஸ் என்றால் “தீ” என்று பொருள்படும்.

இத்தாலியில் உள்ள மவுண்ட் வெசூவியஸ், மவுண்ட் ஸ்ட்ராம்போலி மற்றும் மவுண்ட் எட்னா ஹவாய் தீவுகளில் உள்ள மவுனாலோவா மற்றும் மௌனாக்கியா ஆகியவை உலகின் முக்கியமான செயல்படும் எரிமலைகளாகும்.

படிவுப் பாறைகள் நிலக்கரி, எண்ணெய் மற்றும் இயற்கை வாயு போன்ற இயற்கை வளங்கள் உருவாக முக்கிய ஆதாரமாகும்.

உலகின் மிகப் பழமையான படிவுப் பாறைகள் கிரீன்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றின் வயது 3.9 பில்லியன் ஆண்டுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

உலக அதிசயங்களில் ஒன்றான இந்தியாவில் உள்ள தாஜ்மஹால் உருமாறிய பாறையிலிருந்து உருவான வெள்ளை பளிங்கு கற்களால் (White Marble) கட்டப்பட்டது.

குவார்ட்சைட் மற்றும் சலவைக் கற்கள் பொதுவாக கட்டுமானம் மற்றும் சிற்ப வேலைபாடுகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. சலவைக் கற்கள் பரவலாக அழகான சிலைகள், அலங்கார பொருள்கள் குவளை, சிறிய பரிசு பொருள்கள் தயாரிக்கப் பயன்படுகின்றன. சலவைக்கற்களின் துகள்களிலிருந்து நெகிழி (Plastic), காகிதம் போன்ற பொருள்கள் உற்பத்தி செய்யப்பயன்படுகிறது.

ஓவ்வொரு ஆண்டும் டிசம்பர் 5ஆம் நாள் உலக மண் நாளாக கொண்டாடப்படுகிறது.

மண் உருவாகும் காலம்: காலநிலையைப் பொருத்து மண் உருவாகிறது. மித வெப்ப மண்டல காலநிலைப் பிரதேசங்களில் 1 செ. மீ மண் உருவாக 200 முதல் 400 வருடங்கள் ஆகும். அயன மண்டல ஈரக் காலநிலைப் பகதிகளில் மண் விரைவாக உருவாகிறது. இதற்கு சுமார் 200 வருடங்கள் ஆகும். நன்கு வளமான மண் உருவாக ஏறத்தாழ 3000 வருடங்கள் ஆகும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. கீழ்க்கண்டவற்றுள் எது பாறைக் கோளம் என அழைக்கப்படுகிறது?

(அ) வளிமண்டலம்

(ஆ) உயிர்க்கோளம்

(இ) நிலக்கோளம்

(ஈ) நீர்க்கோளம்

2. உலக மண் நாளாக கடைபிடிக்கப்படும் நாள்

(அ) ஆகஸ்ட் 15

(ஆ) ஜனவரி 12

(இ) அக்டோபர் 15

(ஈ) டிசம்பர் 5

3. உயிரினப் படிமங்கள் __________ பாறைகளில் காணப்படுகின்றன.

(அ) படிவுப் பாறைகள்

(ஆ) தீப்பாறைகள்

(இ) உருமாறியப் பாறைகள்

(ஈ) அடியாழப் பாறைகள்

4 மண்ணின் மேல் நிலை அடுக்கு

(அ) கரிம மண் அடுக்கு

(ஆ) அடி மண் அடுக்கு

(இ) அடி மண்

(ஈ) அடித்தள பாறை

5. பருத்தி வளர ஏற்ற மண்

(அ) செம்மண்

(ஆ) கரிசல் மண்

(இ) வண்டல் மண்

(ஈ) மலை மண்

6. மண்ணின் முக்கிய கூறு

(அ) பாறைகள்

(ஆ) கனிமங்கள்

(இ) நீர்

(ஈ) இவை அனைத்தும்

7. கீழ்க்கண்டவற்றில் எவ்வகை மண் பரவலாகவும் அதிக வளமுள்ளதாகவும் உள்ளது?

(அ) வண்டல் மண்

(ஆ) கரிசல் மண்

(இ) செம்மண்

(ஈ) மலை மண்

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. பாறைகளைப் பற்றிய அறிவியல் சார்ந்த படிப்பு ____________

2. ____________ மண் தினைப் பயிர்கள் விளைவிப்பதற்கு ஏற்றதாகும்.

3. “புவியின் தோல்” என்று ___________ அழைக்கப்படுகிறது.

4. உருமாறிய பாறைகளின் ஒரு வகையான ___________ பாறை தாஜ்மகால் கட்ட பயன்படுத்தப்பட்டது.

5. __________ பாறை “முதன்மை பாறை” என்று அழைக்கப்படுகிறது.

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக:

1. தீப்பாறைகள் முதன்மை பாறைகள் என்று அழைக்கப்படுகிறது.

2. களிமண் பாறையிலிருந்து பலகைக்கல் (Slate) உருவாகிறது.

3. செம்மண் சுவருதல் (Leaching) செயல்முறைகளில் உருவாகிறது.

4. இயற்கை மணலுக்கு மாற்றாக கட்டுமான பணிகளுக்கு “செயற்கை மணல்” (M-Sand) பயன்படுகிறது.

5. படிவுப் பாறைகளைச் சுற்றி எரிமலைகள் காணப்படுகின்றன.

பொருத்துக:

i. கிரானைட் – 1. ஆடிப்பாறை

ii. மண் அடுக்கு – 2. அடியாழப் பாறைகள்

iii. பாரன் தீவு – 3. பட்டைப் பயிரிடல் வேளாண்மை

iv. மண் வளப்பாதுகாப்பு – 4. செயல்படும் எரிமலை

i ii iii iv

(அ) 2 1 4 3

(ஆ) 2 1 3 4

(இ) 4 3 2 1

(ஈ) 3 4 2 1

2.

i. பசால்ட் (கருங்கல்) – 1. ஆந்த்ரசைட்

ii. சுண்ணாம்புப் பாறை – 2. வெளிப்புற தீப்பாறைகள்

iii. நிலக்கரி – 3. உருமாறியப் பாறைகள்

iv. ஜெனிஸ் (நைஸ்) – 4. படிவுப்பாறைகள்

i ii iii iv

(அ) 2 4 1 3

(ஆ) 2 4 1 3

(இ) 3 1 2 4

(ஈ) 3 1 4 2

தவறான இணையைக் கண்டறிக:

1. அ) தீப்பாறைகள் முதன்மைப் பாறைகள் என்று அழைக்கப்படுகிறது

ஆ) பாறைகள் வானிலை சிதைவினால் மண்ணாக உருமாறுகிறது.

இ) படிவுப் பாறைகள் கடினமான தன்மை கொண்டவை

ஈ) தக்காண பீடபூமி பகுதிகள் தீப்பாறைகளால் உருவானவை.

2. அ) மண்ணரிப்பு மண் வளத்தை குறைக்கிறது

ஆ) இயக்க உருமாற்றம் அதிக வெப்பத்தினால் உருவாகிறது.

இ) மண் ஒரு புதுப்பிக்கக் கூடிய வளம்.

ஈ) இலை மக்குகள் மேல் மட்ட மண்ணின் ஒரு பகுதியாகும்.

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. கூற்று 1: படிவுப் பாறைகள் பல்வேறு அடுக்குகளைக் கொண்டவை.

கூற்று 2: படிவுப்பாறைகள் பல்வேறு காலங்களில் உருவானவை.

(அ) கூற்று 1 மற்றும் 2 சரி ஆனால் கூற்று 2 ஆனது கூற்று 1க்கு சரியான விளக்கம்.

(ஆ) கூற்று 1 மற்றும் 2 சரி ஆனால் கூற்று 2 ஆனது கூற்று 1க்கு சரியான விளக்கம் அல்ல.

(இ) கூற்று 1 சரி ஆனால் கூற்று 2 தவறு.

(ஈ) கூற்று 2 சரி ஆனால் கூற்று 1 தவறு

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. நிலக்கோளம் 2. டிசம்பர் 5 3. படிவுப் பாறைகள் 4. கரிம மண் அடுக்கு

5. கரிசல் மண் 6. இவை அனைத்தும் 7. வண்டல் மண்

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. பாறையியல் 2. செம்மண் 3. மண் 4. வெள்ளைப் பளிங்கு 5. தீப்பாறை

சரியா தவறா எனக் குறிப்பிடுக: (விடைகள்)

1. சரி

2. தவறு

சரியான விடை: கருங்கல் பாறையிலிருந்து பலகைக்கல் உருவாகிறது.

3. தவறு

சரியான விடை: சரளை மண் சுவருதல் செயல்முறைகளில் உருவாகிறது.

4. சரி

5. தவறு

சரியான விடை: தீப்பாறைகளைச் சுற்றி எரிமலைகள் காணப்படுகின்றன.

பொருத்துக: (விடைகள்)

1.

1. கிரானைட் – அடியாழப் பாறைகள்

2. மண் அடுக்கு – அடிப்பாறை

3. பாரன் தீவு – செயல்படும் எரிமலை

4. மண் வளப்பாதுகாப்பு – பட்டைப் பயிரிடல் வேளாண்மை

2.

1. பசால்ட் – வெளிப்புற தீப்பாறைகள்

2. சுண்ணாம்புப் பாறை – படிவுப்பாறைகள்

3. நிலக்கரி – ஆந்த்ரசைட்

4. ஜெனிஸ் (நைஸ்) – உருமாறியப் பாறைகள்

கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்ந்து தவறான விடையைத் தேர்வு செய்க:

1.

விடை: படிவுப் பாறைகள் கடினமான தன்மை கொண்டவை.

2.

விடை: இயக்க உருமாற்றம் அதிக வெப்பத்தினால் உருவாகிறது.

கொடுக்கப்பட்ட கூற்றுகளை ஆராய்ந்து சரியான கூற்றைக் கண்டுபிடித்து சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

1. கூற்று 1 மற்றும் 2 சரி ஆனால் கூற்று 2 ஆனது கூற்று 1 க்கு சரியான விளக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!