Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
MCQ Questions

பிற்கால சோழரும் பாண்டியரும் 11th History Lesson 6 Questions in Tamil

11th History Lesson 6 Questions in Tamil

6] பிற்கால சோழரும் பாண்டியரும்

1) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – பிற்காலச் சோழரின் தோற்றத்திற்கு வேளாண்மை விரிவாக்கமும் ஒரு காரணமாக கருதப்படுகிறது.

கூற்று 2 – இந்த வேளாண் விரிவாக்கம் ஆற்று வடிநிலங்களில் ஏற்பட்டது.

கூற்று 3 – வைகை ஆற்று வடிநிலப் ஆன மதுரை பகுதியில் பாண்டியர் ஆட்சி செய்யத் தொடங்கினர்.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – பதினான்காம் நூற்றாண்டு வாக்கில் பாண்டியரின் ஆட்சி வலிமை பெற்றது. சோழர் போலவே பாண்டியர்களும் வேளாண்மை, வணிகம் மூலம் பெரும் வருவாய் ஈட்டினர்)

2) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – திருநெல்வேலியிலிருந்து மலபார் கடற்கரை பகுதிக்கு தானியங்களும், பருத்தியும், பருத்தித் துணிகளும், காளைகளும் ஏற்றுமதி செய்யப்பட்டன.

கூற்று 2- பாண்டியர்கள் மேற்கு, தென்கிழக்கு ஆசியப் பகுதிகளுடன் வணிகத்தொடர்பு மேற்கொண்டனர்.

கூற்று 3 – பாண்டியர்கள் உருவாக்கிய பண்பாட்டு மரபானது குப்த அரசர்கள் செவ்வியல் காலத்தில் உருவாக்கியதாக கருதப்படும் பண்பாட்டுடன் ஒத்துள்ளது.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – பாண்டிய மன்னர்கள் மத, பண்பாட்டு, அரசியல் கூறுகளை தொகுத்து உருவாக்கிய பண்பாட்டு மரபானது குப்த அரசர்கள் செவ்வியல் காலத்தில் உருவாக்கியதாக கருதப்படும் ஒற்றை பரிமாண பண்பாட்டிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகும்)

3) சங்க காலத்துக்குப் பிறகு கிடைக்கும் ஆவணங்களின்படி சோழர்கள் யாருக்கு கீழ்நிலை ஆட்சியாளராக இருந்துள்ளார்கள் என தெரிகிறது?

A) பல்லவர்கள்

B) குப்தர்கள்

C) சாளுக்கியர்கள்

D) களப்பிரர்கள்

(குறிப்பு – சங்க காலத்துக்கு பிறகு கிடைக்கும் ஆவணங்களின்படி காவிரி பகுதியில் சோழர்கள் பல்லவர்கள் கீழ்நிலை ஆட்சியாளராக இருந்துள்ளார்கள் என தெரிகிறது)

4) முத்தரையர்களிடம் இருந்து காவிரி ஆற்றின் கழிமுகம் பகுதிகளை வென்றவர் யார்?

A) விஜயாலய சோழன்

B) ராஜராஜ சோழன்

C) ராஜேந்திர சோழன்

D) குலோத்துங்க சோழன்

(குறிப்பு – பொ.ஆ 850 முதல் 871 வரை ஆட்சி செய்து விசயாலய சோழன் முத்தரையர்களிடமிருந்து காவிரி ஆற்றின் கழிமுக பகுதிகளை வென்றார். அவர் தஞ்சாவூரை கட்டமைத்து சோழ அரசை நிறுவினார்.)

5) சோழ அரசு நிறுவப்பட்ட ஆண்டு எது?

A) பொ.ஆ 850

B) பொ.ஆ 853

C) பொ.ஆ 856

D) பொ.ஆ 859

(குறிப்பு – விஜயாலய சோழன் தஞ்சாவூர் நகரை பக் கட்டமைத்து சோழ அரசை நிறுவினார். எனவே வரலாற்று ஆய்வாளர்கள் இச்சோழர்களை பிற்காலச் சோழர் என்றும் பேரரசு சோழர் என்றும் குறிப்பிடுகின்றனர்)

6) பொ.ஆ.907 முதல் 955 வரை ஆண்ட சோழ அரசன் யார்?

A) விஜயாலய சோழன்

B) முதலாம் பராந்தக சோழன்

C) முதலாம் குலோத்துங்க சோழன்

D) ராஜராஜ சோழன்

(குறிப்பு – முதலாம் பராந்தக சோழன், மூன்றாம் குலோத்துங்க சோழன், கரிகால சோழன், போன்றவர்கள் சோழருக்கு பெருமையும் புகழும் சேர்த்தனர். பராந்தகச் சோழன் நாட்டின் எல்லைகளை விரிவுபடுத்தினார். ஆட்சி முறையின் அடித்தளத்தையும் விரிவாக்கினார்)

7) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – சோழர்களின் வரலாற்று ஆவணங்களில் பெரும்பான்மையானவை அரசர்களும் பிறரும் கோயிலுக்கு வழங்கிய கொடை குறித்த தகவல்கள் ஆகவே உள்ளன.

கூற்று 2 – பிற்கால கல்வெட்டுகள் சோழர் சமூக வேறுபாடுகள் குறித்து குறிப்பிடுகின்றன. அவை சமூகத்தில் சாதிகள் மற்றும் துணைசாதிகள் இருந்ததைக் காட்டுகின்றன.

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) இரண்டு கூற்றுகளும் சரி

D) இரண்டு கூறுகளும் தவறு

(குறிப்பு – சோழர்களின் செப்பேடுகளில் அரசர்களின் ஆணைகள் காணப்படுகின்றன. அவற்றிலும் கொடிவழி, போர்கள், வெற்றிகள், நிர்வாக பிரிவுகள், உள்ளாட்சி அமைப்பு, நில உரிமைகள், பல்வேறு வரிகள் குறித்த செய்திகள் உள்ளன.)

8) யாருடைய ஆட்சி காலத்தில் சைவ வைணவ நூல்கள் தொகுத்து முறை படுத்தப்பட்டன?

A) சோழர்கள்

B) சேரர்கள்

C) பாண்டியர்கள்

D) பல்லவர்கள்

(குறிப்பு – சோழர் ஆட்சியில் இலக்கியங்களும் செழித்தன. சைவ மற்றும் வைணவ நூல்கள் தொகுத்து முறைப்படுத்தப்பட்டன. இது சோழர் காலத்தில் நடந்த முக்கியமான சமய இலக்கிய பணியாகும்)

9) சோழர்கள் காலத்தில் இயற்றப்பட்ட நூல்களில் தவறானது எது?

A) கம்பராமாயணம்

B) கலிங்கத்துபரணி

C) மூவருலா

D) தொல்காப்பியம்

(குறிப்பு – பெருங்காவியம் நூலான கம்பராமாயணம், இலக்கிய வடிவிலான வரலாற்று நூல்களான கலிங்கத்து பரணி, குலோத்துங்கசோழன் பிள்ளைத்தமிழ், மூவருலா ஆகியன சோழர் காலத்தில் இயற்றப்பட்டன)

10) சோழர்கள் காலத்தில் இயற்றப்பட்ட இலக்கண நூல்களுள் தவறானது எது?

A) நன்னூல்

B) நேமிநாதம்

C) தொல்காப்பியம்

D) வீரசோழியம்

(குறிப்பு – நன்னூல், நேமிநாதம், வீரசோழியம் ஆகியவை காலத்தில் எழுதப்பட்ட குறிப்பிடத்தக்க இலக்கண நூல்கள் ஆகும். பாண்டிக்கோவை, தக்கயாகப்பரணி ஆகியவை பிற இலக்கிய படைப்புகள் ஆகும்.)

11) கீழ்காணும் கூற்றுகளுள் எது சரியானது?

I. காவிரி ஆற்றின் கழிமுகப் பகுதி சோழ அரசின் மையப் பகுதியாக விளங்கியது.

II. சோழ அரச மரபின் கீழிருந்த ஆட்சிப் பகுதிகள் சோனாடு எனப்படுகிறது.

III. சோழமண்டலம் என்ற சொல் ஐரோப்பியர் நாவில் கோரமண்டல் என திரிபடைந்தது.

IV. தற்போது கோரமண்டல் என்னும் சொல் தென்னிந்தியாவின் கிழக்கு பகுதி முழுவதையும் குறிக்கிறது.

A) I, II, III மட்டும் சரி

B) II, III, IV மட்டும் சரி

C) II, IV மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – சோழர்கள் தமது படை வலிமையைப் பயன்படுத்தி தற்போதைய புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களையும் தற்போதைய மேற்கு தமிழ்நாட்டில் கொங்கு பகுதியையும் இணைத்து சோழப்பேரரசை விரிவுபடுத்தினார்கள்)

12) மும்முடிச் சோழமண்டலம் என்று அழைக்கப்பட்ட பகுதி எது?

A) தெற்கு கர்நாடகத்தை சேர்ந்த கங்கைவடி

B) மலைமண்டலம் என்ற கேரளம்

C) இலங்கையின் வடகிழக்குப் பகுதிகள்

D) இவை எதுவுமல்ல

(குறிப்பு – பதினொன்றாம் நூற்றாண்டு வாக்கில் படையெடுப்புகள் மூலம் தொண்டை நாடு, பாண்டிய நாடு, தெற்கு கர்நாடகத்தை சேர்ந்த கங்கை வடி, மலைமண்டலம் என்ற கேரளம் ஆகிய பகுதிகள் வரை விரிவுபடுத்தினார்கள்.)

13) இந்தியப் பெருங்கடலில் உள்ள மாலத் தீவுகளைக் கைப்பற்றிய சோழ அரசர் யார்?

A) விஜயாலய சோழன்

B) முதலாம் பராந்தகன்

C) ராஜராஜ சோழன்

D) ராஜேந்திர சோழன்

(குறிப்பு – சோழ அரசர்களில் மிகவும் போற்றப்படுபவர் முதலாம் ராஜராஜன் ஆவார். அவரது கடல்கடந்த படையெடுப்புக்கள் மேற்கு கடற்கரை, இலங்கை ஆகியவற்றில் வெற்றியை பெற்று தந்தன. அவர் இந்திய பெருங்கடலில் மாலத் தீவுகளை கைப்பற்றும் இதில் சேரும்.)

14) ராஜராஜசோழன் கட்டிய ராஜராஜேஸ்வரம் என்ற கோவில் எந்த இடத்தில் அமைந்துள்ளது?

A) கேரளா

B) மாலத்தீவு

C) இலங்கை

D) தெற்கு கர்நாடகம்

(குறிப்பு – இலங்கையில் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் நிர்வகிப்பதற்கு ஒரு தமிழ் தளபதியை ராஜராஜசோழன் நியமித்தார். மேலும் இலங்கையில் ஒரு சிவாலயம் கட்டினார். இராஜராஜேஸ்வரம் என்று அழைக்கப்படும் அக்கோவில் இலங்கையின் மகாதிட்டா என்ற பகுதியில் அமைந்துள்ளது)

15) சோழ அரசின் எல்லையை துங்கபத்திரை ஆறு வரை விரிவுபடுத்தியவர் யார்?

A) ராஜராஜ சோழன்

B) முதலாம் ராஜேந்திர சோழன்

C) கரிகால சோழன்

D) முதலாம் குலோத்துங்க சோழன்

(குறிப்பு – ராஜராஜசோழன் தமது வாரிசாக தன் மகன் முதலாம் ராஜேந்திர சோழனை அறிவித்தார். தந்தையின் படையெடுப்புகளில் பங்கேற்று மேலைச் சாளுக்கியரை தாக்கி சோழ அரசின் எல்லையை துங்கபத்திரை ஆறு வரை முதலாம் ராஜேந்திர சோழன் விரிவுபடுத்தினார்)

16) முதலாம் ராஜேந்திர சோழன் அரச பொறுப்பை ஏற்ற ஆண்டு எது?

A) 1020இல்

B) 1023இல்

C) 1026இல்

D) 1029இல்

(குறிப்பு – முதலாம் ராஜேந்திர சோழன் 1023 ஆம் ஆண்டில் அரச பொறுப்பை ஏற்றார். அவர் வட இந்தியாவின் மீது மிகத் தீவிரமான ஒரு படையெடுப்பை நிகழ்த்தினார். இதற்காக படைகளை கோதாவரி ஆறு வரை அவரை வழிநடத்திச் சென்றார்)

17) எந்த சோழ அரசருக்கு கிடைத்த வெற்றியின் நினைவாக கங்கை கொண்ட சோழபுரம் கோவில் கட்டப்பட்டது?

A) ராஜராஜ சோழன்

B) முதலாம் ராஜேந்திர சோழன்

C) கரிகால சோழன்

D) இரண்டாம் குலோத்துங்க சோழன்

(குறிப்பு – கோதாவரி வரை தமது படைகளை முதலாம் ராஜேந்திர சோழன் நடத்திச் சென்றார். அதன் பிறகு தமது தளபதியிடம் ஒப்படைத்தார். ராஜி முதலாம் ராஜேந்திரனுக்கு வட இந்தியாவில் கிடைத்த வெற்றியின் நினைவாக கங்கை கொண்ட சோழபுரம் என்ற கோவில் கட்டப்பட்டது.)

18) சோழர்கள் காலத்தில் ஸ்ரீவிஜயா என்று அழைக்கப்பட்ட இடம் எது?

A) தெற்கு சுமத்ரா

B) கிழக்கு இலங்கை

C) வடக்கு இலங்கை

D) மாலத்தீவு

(குறிப்பு – சோழர் சோழமண்டல கடற்கரை யோடு மலபார் கடற்கரையையும் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர். வங்காள விரிகுடா பகுதிகளில் சோழரின் செல்வாக்கு சில பத்தாண்டு காலத்திற்கு நீடித்தது. முதலாம் இராஜேந்திரனின் கடற்படை ஸ்ரீவிஜயா என்று அழைக்கப்படும் தெற்கு சுமத்திராவின் மீது தாக்குதல் தொடுத்தது)

19) கடாரம் கொண்டான் என்ற பட்டம் எந்த சோழ அரசருக்கு சூட்டப்பட்டது?

A) முதலாம் ராஜேந்திர சோழன்

B) இரண்டாம் ராஜேந்திர சோழன்

C) முதலாம் குலோத்துங்க சோழன்

D) கரிகால சோழன்

(குறிப்பு – குறுநில மன்னரின் ஆட்சியின் கீழ் இருந்த கெடா (கடாரம்) முதலாம் ராஜேந்திர சோழனின் படையால் தோற்கடிக்கப்பட்டன. எனவே முதலாம் ராஜேந்திர சோழனுக்கு கடாரம் கொண்டான் என்ற பட்டம் சூட்டப்பட்டது)

20) சாளுக்கியரின் தலைநகராக விளங்கியது எது?

A) வாரணாசி

B) கல்யாணி

C) நாகபந்தா

D) வாதாபி

(குறிப்பு – மேலைச்சாளுக்கிய அரசின் மீது முதலாம் ராஜேந்திர சோழன் 1009 ஆம் ஆண்டு போர் தொடுத்தார். சாளுக்கியர் தலை நகரான கல்யாணியை தகர்ப்பதற்கு முதலாம் ராஜேந்திரன் தனது மகனை அனுப்பினார்)

21) முதலாம் ராஜேந்திர சோழனுக்கு வழங்கப்பட்ட பட்டங்களுள் சரியானது எது?

I. முடிகொண்ட சோழன்

II. கங்கைகொண்டான்

III. கடாரம் கொண்டான்

IV. சுங்கம் தவிர்த்த சோழன்

A) I, II மட்டும் சரி

B) I, II, III மட்டும் சரி

C) II, II, IV மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – கங்கைகொண்டான், முடிகொண்ட சோழன், கடாரம் கொண்டான், பண்டித சோழன் போன்ற பட்டங்கள் முதலாம் ராஜேந்திர சோழனுக்கு வழங்கப்பட்டவை ஆகும்.)

22) சாளுக்கியர் தலை நகரான கல்யாணியில் இருந்து கொண்டுவரப்பட்ட துவாரபாலகர் என்றழைக்கப்படும் வாயிற்காப்போன் சிலை தற்போது எங்கு வைக்கப்பட்டுள்ளது?

A) கும்பகோணம் தாராசுரம் கோவில்

B) தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில்

C) திருச்சி தாயுமானவர் கோவில்

D) பேரூர் பட்டீஸ்வரர் கோவில்

(குறிப்பு – சாளுக்கியரின் தலைநகரான கல்யாணியை தகர்ப்பதற்கு ராஜேந்திர சோழன் தனது மகனை அனுப்பினார். ராஜேந்திர சோழனின் மகன் சாலுக்கிய வெற்றிகொண்டு, துவாரபாலகர் என்றழைக்கப்படும் வாயிற்காப்போன் சிலையை கைப்பற்றினார்,. அது தற்போது கும்பகோணத்தில் உள்ள தாராசுரம் கோவிலில் வைக்கப்பட்டுள்ளது)

23) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – சோழ அரசு மரபுவழிப்பட்ட முடியாட்சியை அடிப்படையாகக் கொண்டிருந்தது.

கூற்று 2 – சோழர் காலத்தில் மன்னர்கள் பெருமகன், உலகுடைய பெருமாள், உலகு உடைய நாயனார் என்றெல்லாம் அழைக்கப்படுகிறார்.

கூற்று 3 – சோழ அரசர்கள் அரசராக பட்டம் சூட்டும் விழாவின்போது அவரது பெயருக்கு பின் தேவன் என்ற சொல்லை பின்னொட்டமாக சேர்க்கும் நடைமுறை இருந்தது

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – பிற்கால சோழர்கள் பேரரசர் என்ன பொருள் தரும் சக்கரவர்த்தி, மூன்று உலகங்களுக்கும் பேரரசர் என்ற பொருளைத் தரும் திரிபுவன சக்கரவர்த்தி என்ற பட்டங்களை சூடிக்கொண்டனர். அரசர்கள் தங்களை கடவுளின் நண்பன்( தம்பிரான் தோழன்) என்று உரிமை கோரி தங்கள் அதிகாரத்தை நிலை நிறுத்தினர்)

24) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – சோழ அரசர்கள் தங்கள் ஆன்மீக வழிகாட்டி அல்லது ராஜகுருவாக பிராமணர்களை நியமித்தார்கள்.

கூற்று 2 – முதலாம் இராஜராஜனும் முதலாம் இராஜேந்திர சோழனும் தங்களுடைய ராஜ குழுக்களாக உரையே ஈசான சிவன் மற்றும் சர்வ சிவன் ஆகியோரை கல்வெட்டு குறிப்புகளில் குறிப்பிட்டுள்ளனர்.

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) இரண்டு கூற்றுகளும் சரி

D) இரண்டு கூற்றுகளும் தவறு

(குறிப்பு – சோழ அரசர்கள் தங்கள் சமூக மதிப்பையும் அதிகாரத்தையும் உயர்த்திக் கொள்வதற்கான ஒரு வழிமுறையாகவே பிராமணர்களை ஆதரித்தனர் அதன் பொருட்டு பிராமணர்களுக்கு பிரம்மதேயம், சதுர்வேதி மங்கலம் என்ற பெயரில் பெரும் நிலப் பரப்புகளை இறையிலியாக அளித்தனர்)

25) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. முதலாம் ராஜராஜன் அவரது கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பகுதிகளை எல்லாம் மண்டலங்களாக ஒன்றிணைத்து ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு ஆளுநரை நியமித்தார்.

II. இளங்கோ வேளிர், இருக்குவேளிர், மழவர்கள், பானர்கள் போன்ற சிற்றரசர்கள் ஆட்சி செய்த முக்கியத்துவம் குறைந்த பகுதிகளும் பின்னர் சூலமென் அரசுடன் இணைத்துக் கொள்ளப்பட்டன.

III. பாண்டியநாட்டில் சோழபாண்டியர், இலங்கையில் சோலை இலங்கேஸ்வரர், தெற்கு கருநாடகத்தின் வெங்கைவடி பகுதியில் சோழகங்கர் என ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர்.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – சோழர் காலத்தில் சிற்றரசர்கள் மற்றும் திறை செலுத்துபவர்கள் என்று வரலாற்று ஆசிரியர்களால் விளக்கம் அளிக்கப்படும் சிற்றரசர்கள் அல்லது குறுநில மன்னர்கள் போருக்கு பின்னர் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பகுதிகள் சோழ அரசுடன் இணைத்துக் கொள்ளப்பட்டன)

26) சோழப் பேரரசில் இருந்த படைகளின் பிரிவுகள் கீழ்க்கண்டவற்றுள் எது?

I. காலாட்படை

II. குதிரைப்படை

III. யானைப்படை

IV. வில் வீரர்கள், வாள் வீரர்கள்

IV. தற்கொலைப்படை

A) I, II, III மட்டும் சரி

B) I, II, III, IV மட்டும் சரி

C) II, III, IV மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – சோழர்களின் படைப்பிரிவில் காலாட்படை, குதிரைப்படை( குதிரைச் சேவகர்), யானைப்படை(ஆனையாட்கள்), வில் வீரர்கள்( வில்லாளிகள்), வாள்வீரர்கள்(வாளிளர்), ஈட்டி வீரர்கள்(கொண்டுவார்) ஆகியோர் இருந்தனர்)

27) சோழர்கால படைப்பிரிவின் தலைவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?

I. நாயகம்

II. படைமுதலி

III.சேனாபதி

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – சோழர் படையில் படைவீரர்களுக்கு படைபற்று என்ற உரிமை வழங்கப்பட்டிருந்தது. புதிதாக சேர்க்கப்படும் பகுதிகளில் அமைக்கப்பட்ட புறக்காவல் படைகள் நிலைபடைகள் என அழைக்கப்பட்டன.)

28) சோழர்கால படைத்தளபதி எவ்வாறு அழைக்கப்பட்டார்?

I. சேனாபதி

II. நாயகம்

III. தண்ட நாயகம்

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – சோழர்கால படைத்தளபதிகள் சேனாபதி என்றும் தண்டநாயகன் என்றும் அழைக்கப்பட்டனர். சோழர்களிடம் அறுபது ஆயிரம் போர் யானைகள் இருந்தன அவற்றின் முதுகில் வீடு போன்ற அமைப்பு இருக்கும் அதில் வீரர்கள் நிறைந்து இருப்பார்கள் என பதிமூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு சீன புவியியலாளர் கூறும் சான்று விளக்குகிறது)

29) சோழர் காலத்தில் இருந்த உள்ளாட்சி குழுக்கள் எது?

I. ஊரார்

II. சபையார்

III. நகரத்தார்

IV. நாட்டவர்

A) I, II, III மட்டும் சரி

B) II, III, IV மட்டும் சரி

C) I, II, IV மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – சோழர் காலத்தில் பல்வேறு உள்ளாட்சி குழுக்கள் சிறப்பாக இயங்கி உள்ளன. அவை ஊரார், சபையார், நகரத்தார், நாட்டார் ஆகியன ஆகும். இவை ஒப்பீட்டளவில் தன்னாட்சி உரிமை கொண்டவையாக இயங்கின)

30) ஊரார் என்பவர்களின் கடமையாவன எது?

I. கோவில்களின் நிர்வாகத்தையும் குளங்களின் பராமரிப்பு மேற்கொள்ளுதல்.

II. வரி வசூலித்தல்

III. சட்டம் ஒழுங்கைப் பாதுகாத்தல்.

A) I, II மட்டும்

B) I மட்டும்

C) II, III மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – வேளாண்மை விரிவாக்கத்தை தொடர்ந்து கிராமப்புறங்களில் வேளாண் குடியிருப்புகள் அதிக அளவில் தோன்றின. அவை ஊர் என்று அழைக்கப்பட்டன. அந்த ஊர்களில் நிலவுடைமையாளர்கள் ஊரின் பிரதிநிதிகளாக செயல்பட்டார்கள். அவர்கள் ஊரார் என்று அழைக்கப்பட்டார்கள்)

31) சோழர்கால உள்ளாட்சி அமைப்பான சபையார் குறித்த கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. கோவில்கள், அவற்றின் சொத்துக்கள் ஆகியவற்றை நிர்வகிப்பது சபையாரின் பணியாகும்.

II. பிரம்மதேய குடியிருப்புகளை பராமரிப்பது சபையாரின் பணியாகும்.

III. கோவில் நிலங்கள் உடன் இணைக்கப்பட்டிருந்த பாசன குளங்கள் இன் பராமரிப்புக்கு சபை பொறுப்பாக இருந்தது.

A) I, II மட்டும் சரி

B) I, III மட்டும் சரி

C) II, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – ஊர் என்பது நிலவுடைமை சார்ந்தோரின் குடியிருப்பு. பிரம்மதேயம் என்பது பிராமணர்களின் குடியிருப்பு ஆகும். நிர்வாகம், நீதி மற்றும் நிதி ஆகிய துறைகள் சார்ந்த பணிகளையும் சபையார் மேற்கொண்டது)

32) சுங்கம் தவிர்த்த சோழன் என்று அழைக்கப்படும் சோழ அரசர் யார்?

A) முதலாம் ராஜேந்திர சோழன்

B) முதலாம் பராந்தக சோழன்

C) கரிகால சோழன்

D) குலோத்துங்க சோழன்

(குறிப்பு – சோழர் காலத்தில் உள்ளூர் பொருள்கள் நகரங்களில் பரிமாற்றம் செய்து கொள்ளப்பட்டன. பட்டு, பீங்கான், கிராம்பு, சந்தனக்கட்டை போன்றவை இவ்வாறு பரிமாற்றம் செய்யப்பட்டதாக சீன வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. இவ்வாறு பரிமாற்றம் செய்வதற்கான வரியை ரத்து காரணத்தினால் குலோத்துங்க சோழன் சுங்கம் தவிர்த்த சோழன் என அழைக்கப்பட்டார்)

33) சோழர்கால ஆட்சி முறையில் மரபுவழி நில உரிமைகள் பெற்றிருந்த உள்ளாட்சி அமைப்பினர் யார்?

A) ஊரார்

B) சபையார்

C) நகரத்தார்

D) நாட்டார்

(குறிப்பு – பிரம்மதேயங்கள் நீங்களாக பல ஊர்களின் தொகுப்பு நாடு எனப்பட்டது. கால்வாய்கள், குளங்கள் போன்ற பாசன ஆதாரங்களை சுற்றி இவை உருவாக்கப்பட்டிருந்தன. நிலம் வைத்திருந்தவர்களின் மன்றம் நாட்டார் எனப்பட்டது. போலரோ அரச கட்டமைப்பின் அடிப்படை உறுப்புகளாக நாட்டார் செயல்பட்டனர்)

34) சோழர் கால ஆட்சி முறையில் நாட்டார்களுக்கு வழங்கப்பட்ட பட்டங்களுள் சரியானவை எது?

I. ஆசுடையான்

II. கிழவன்.

III. அரையன்

IV. நாட்டு வையவன்

A) I, II, III மட்டும் சரி

B) I, III, IV மட்டும் சரி

C) II, III, IV மட்டும் சரி

D) இவை எல்லாமே சரி

(குறிப்பு – நாடார்களுக்கு மரபுவழி நில உரிமைகள் வழங்கப்பட்டிருந்தன. அவர்களுக்கு மரியாதை செலுத்தும் நோக்கில் ஆசுடையான் ( நில உரிமையாளர்), அரையன்( வழிநடத்துவோர்), கிழவன்(தலைவன்) போன்ற பட்டங்கள் வழங்கப்பட்டன. நாட்டுக் கணக்கு, நாட்டு வையவன் எனும் பணியாளர்கள் நாட்டாரின் நிர்வாக பணிகளை ஆவணப்படுத்தினர்)

35) சோழர்களின் உள்ளாட்சி தேர்தல் பற்றிய உத்திரமேரூர் கல்வெட்டுகளின்படி ஒரு கிராமம் எத்தனை பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது?

A) 30

B) 40

C) 50

D) 60

(குறிப்பு – ஒரு கிராமம் 30 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு உறுப்பினரை தேர்ந்தெடுக்க வேண்டும். தேர்வானவர்கள் அனைவரும் சேர்ந்து வெவ்வேறு குழுக்களை உருவாக்குவார்கள்)

36) சோழர்காலக் உள்ளாட்சி தேர்தலில் உறுப்பினராக தேவையான தகுதி பற்றி உத்திரமேரூர் கல்வெட்டு கூறுவனவற்றுள் எது சரியானது?

I. ஆண்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும்,

II. 35 வயதுக்கு மேலும் 25 வயதுக்கு கீழும் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

III. சொத்தும், சொந்த வீடும் உடையவராக இருக்க வேண்டும்.

IV. வேதங்களிலும், பாஷ்யங்களிலும் தேர்ந்தவராக இருக்க வேண்டும்

A) I, II மட்டும் சரி

B) I, II, IV மட்டும் சரி

C) I, III, IV மட்டும் சரி

D) இவை எல்லாமே சரி

(குறிப்பு – 30 பிரிவுகளில், ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு உறுப்பினரை தேர்ந்தெடுக்க வேண்டும். தேர்வானவர்கள் அனைவரும் சேர்ந்து வெவ்வேறு குழுக்களை உருவாக்குவார்கள். அவை பொதுப்பணி குழு, குளங்களுக்கான குழு, தோட்டங்களுக்கான குழு, பஞ்ச நிவாரண குழு போன்றவை ஆகும்)

37) சோழர்கால ஆட்சி முறையில் நில வருவாய் நிர்வாகத்தை கவனிக்கும் துறையாக செயல்பட்டது எது?

A) நில வருவாய் துறை

B) புறவழிதிணைக்களம் துறை

C) நிலவரித் திணை துறை

D) நில மற்றும் நிதித்துறை

(குறிப்பு – சோழர் கால ஆட்சியில் வேளாண்மையில் கிடைத்த கூடுதல் வருவாய் நிலவரியாக சோழ அரசுக்கு வலுவூட்டியது. நில வருவாய் நிர்வாகத்திற்கு என ‘புறவரிதிணைக்களம்’ பெயரில் ஒரு துறை இயங்கியது. அதன் தலைவராக ‘புறவரி திணைக்கள நாயகம் ‘செயல்பட்டார்)

38) நிலங்களை வகைப்படுத்தி அளவீடு செய்து அதற்கேற்றவாறு வரிகளை விதித்த சோழ அரசர் யார்?

A) ராஜராஜ சோழன்

B) முதலாம் குலோத்துங்க சோழன்

C) மூன்றாம் குலோத்துங்க சோழன்

D) இவர்கள் அனைவரும்

(குறிப்பு – வரிகளை மதிப்பிடுவதற்காக சோழர் விரிவான முறையில் நில அளவை செய்வதிலும், தீர்வை விதிப்பதிலும் ஈடுபட்டார்கள். முதலாம் ராஜராஜன், முதலாம் குலோத்துங்கன், மூன்றாம் குலோத்துங்கன் ஆகிய சோழ அரசர்கள் நிலங்களை வகைப்படுத்தி அளவீடு செய்து அதற்கேற்றவாறு வரிகளை விதித்தனர்.)

39) சோழர்கள் நில அளவீடு செய்ய பயன்படுத்திய அலகுகள் கீழ்க்கண்டவற்றுள் எது?

I. குழி, மா

II. வெளி, பட்டி

III. பாடகம்

IV. சதுரம்

A) I, II மட்டும்

B) I, II, III மட்டும்

C) II, III, IV மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – நில அளவீடு பணியில் ஈடுபட்டவர்கள் நாடு வகை செய்கிற என்று குறிப்பிட்டார்கள். இவர் நிலவுடைமை சமூகத்தை சேர்ந்தவர்களே ஆவர். நில அளவீடு செய்ய மா, குழி, வெளி, பட்டி, பாடகம் முதலிய அலகுகள் பயன்படுத்தப்பட்டன.)

40) சோழர் கால நிலை வருவாய் குறித்த கீழ்காணும் கூற்றுகள் எது சரியானது?

I. நிலத்தின் வளம், நில உடைமையாளர்களின் சமூக மதிப்பு ஆகியவற்றைப் பொருத்து வழி நிர்ணயிக்கப்பட்டது.

II. அரசரும் உள்ளூர் தலைவர்களும் ஓப்படி என்ற வரியை வசூலித்தனர்.

III. பிராமணர்களுக்கும், கோவில்களுக்கும் வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படவில்லை.

A) I, II மட்டும் சரியானது

B) II, III மட்டும் சரியானது

C) I, III மட்டும் சரியானது

D) எல்லாமே சரியானது

(குறிப்பு – கோவில்களுக்கும் பிராமணர்களுக்கும் வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. விளைபொருளாக செலுத்தப்பட்ட வரி இறை கட்டின நெல்லு எனப்பட்டது. இவ்வரிகள் அனைத்தும் பெரும்பாலும் காவிரி சமவெளி பகுதிகளில் தான் நடைமுறையில் இருந்தன)

41) சோழர் கால அளவீடு முறையில் ஒரு களம் என்பது எவ்வளவு?

A) 20 கிலோ ஆகும்

B) 24 கிலோ ஆகும்

C) 28 கிலோ ஆகும்

D) 32 கிலோ ஆகும்

(குறிப்பு – வரியாக வசூலிக்கப்பட்ட நெல் ‘களம்’ என்ற அலகின் அடிப்படையில் வசூலிக்கப்பட்டது. ஒரு களம் என்பது 28கிலோ ஆகும். முதலாம் ராஜராஜன் வரிவசூல் முறைப்படுத்தினார். ஒரு வேலி நிலத்திற்கு(6.5 ஏக்கர்) 100 களம் வரியாக வசூலிக்கப்பட்டது.)

42) சோழர்கால பாசன முறையில் வாய்க்கால் என்பது கீழ்க்கண்டவற்றுள் எதனைக் குறிக்கிறது?

A) வடக்கு தெற்காக ஓடும் நீர்

B) கிழக்கு மேற்காக ஓடும் நீர்

C) கிழக்கு தெற்காக ஓடும் நீர்

D) வடக்கு வட மேற்காக ஓடும் நீர்

(குறிப்பு – சோழர்கால பாசன முறைகளில் வடி, வாய்க்கால் என்ற குறுக்கு மறுக்கு கால்வாய்கள் மழைநீரை சேமித்து வைப்பதற்கு காவிரி வடிநில பகுதிகள் பயன்பட்ட மரபு வழி முறை ஆகும். படி என்பது நீர் வடக்கு தெற்காக ஓடுவதாகும். வாய்க்கால் என்பது கிழக்கு மேற்காக ஓடும் நீராகும்)

43) ராஜேந்திர சோழன் எதனை ஜலமய ஜெயஸ்தம்பம் எனக் குறிப்பிடுகிறார்?

A) வெள்ளத்தைத் தடுக்கும் கட்டுமானம்

B) போரில் வெற்றி பெற்றதற்காக வைக்கப்பட்ட நினைவு தூண்

C) மிகப்பெரிய கப்பல் கட்டுமானம்

D) இவை எதுவுமல்ல

(குறிப்பு – கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழன் மேற்கொண்ட பாசனப்பணி குறிப்பிடத்தக்கது. அங்கு உள்ள ஏரியில் வெள்ளம் ஏற்படுவதை தடுக்கும் நோக்கத்துடன் 16 மைல்கள் நீளமுள்ள ஒரு உறுதியான கட்டுமானத்தை அவர் எழுப்பியுள்ளார். அது ‘ ஜலமைய ஜயஸ்தம்பம்’ எனக் குறிப்பிடுகிறார். அதற்கு ‘நீரில் கிடைத்த வெற்றியின் நினைவாக எழுப்பிய தூண்’ என்று பொருளாகும்)

44) கீழ்க்கண்ட ஏரிகளுள் சோழர்களால் ஏற்படுத்தப்பட்ட ஏரி எது?

A) வைரமேக தடாகம்

B) பாகூர் பெரிய ஏரி

C) கலியனேரி

D) ராஜேந்திரசோழ பேரேரி

(குறிப்பு – சோழர் கல்வெட்டுகள் சில பெரிய பாசன ஏரிகளை குறிப்பிடுகின்றன. சோழ வாரிதி, கலியனேரி போன்றவை சோழர்களால் உருவாக்கப்பட்டவை. பல்லவர்கள் வைரமேகதடாகம், பாகூர் பெரிய ஏரி, ராஜேந்திர சோழ பேரேரி போன்றவைகளை உருவாக்கினார்கள்)

45) சோழர் காலத்தில் கிராம சபைகள் பாசனக் குளங்களை பழுதுபார்க்க வசூலித்த வரியின் பெயர் என்ன?

A) குள ஆயம்

B) ஏரி ஆயம்

C) நீர் ஆயம்

D) இது எதுவும் இல்லை

(குறிப்பு – ஊருக்குப் பொதுவான குளம் ‘எங்கள் குலம்’ என்று அழைக்கப்பட்டது. நன்கொடை யாகவும் மானியமாகவும் நடைபெற்ற நில பரிமாற்றங்களில் நீர் மீதான உரிமைகளும் இணைக்கப்பட்டிருந்தன. சோழர் காலத்தில் கிராம சபைகள் பாசன குளங்களை பழுதுபார்க்க ஏரிஆயம் என்ற வரி வசூலிக்கப்பட்டது)

46) சிவபாதசேகரன் எனும் பட்டம் எந்த சோழ அரசருக்கு வழங்கப்பட்டது?

A) ராஜராஜ சோழன்

B) ராஜேந்திர சோழன்

C) குலோத்துங்க சோழன்

D) முதலாம் பராந்தக சோழன்

(குறிப்பு – தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலில் உள்ள ஒரு சுவர் ஓவியத்தில் முதலாம் இராஜராஜனும் அவருடைய மனைவியும் சிவனை வணங்குவதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. சிவபாதசேகரன் என்பது அவருக்குரிய பட்டங்களில் ஒன்று. இதனுடைய பாதங்களை இறுகப் பற்றியவன் என்பது இதற்குப் பொருள்)

47) சிவஞானபோதம் என்ற நூலை இயற்றியவர் யார்?

A) திருமூலர்

B) திருஞானசம்பந்தர்

C) நக்கீரர்

D) மெய்கண்டர்

(குறிப்பு – சோழர் காலத்தில் முதன்மைக் கடவுளான சிவன் இரு வடிவங்களில் வணங்கப்பட்டார். இக்காலகட்டத்தில் மிகவும் மேம்பட்ட தத்துவமாக சைவ சித்தாந்தம் உருவானது. இத்தத்துவத்தின் அடிப்படை நூலான சிவஞான போதம் மெய்கண்டரால் இயற்றப்பட்டது)

48) சைவ சமய நூல்களை மீட்டெடுத்து திருமுறை என்ற பெயரில் தொகுத்து வரிசைபடுத்தியவர் யார்?

A) திருஞானசம்பந்தர்

B) அப்பர்

C) நம்பியாண்டார் நம்பி

D) மாணிக்கவாசகர்

(குறிப்பு – நம்பியாண்டார் நம்பி சைவ சமய நூல்களை மீட்டெடுத்து திருமுறை என்ற பெயரில் தொகுத்து வரிசைபடுத்தினார். சோழர் காலத்தில் கோவில்களில் தினமும் திருமுறைகளை ஓதுவதற்கு ஓதுவார், பதிகம் பாடுவோர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர்)

49) வைணவ சமயத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்ட சோழ அரசர் யார்?

A) இரண்டாம் ராஜேந்திரச் சோழன்

B) இரண்டாம் குலோத்துங்க சோழன்

C) கரிகால சோழன்

D) முதலாம் ராஜசேகர சோழன்

(குறிப்பு – காலப் போக்கில் சைவம் மீதான சோழ அரசர்களின் பக்தி மிகையான ஆர்வமாக மாறியது. இரண்டாம் குலோத்துங்கனிடம் இத்தகைய தன்மையை காணமுடியும். அரச சமயமான சைவத்துக்கும் வைணவத்துக்கும் இடையே நடந்து வந்த சமய மோதல்களில் வைணவம் ஒதுக்கப்பட்டது.)

50) வைணவத் திருத்தொண்டரான ஸ்ரீ ராமானுஜர் சோழ நாட்டை விட்டு எங்கு குடியேறினார்?

A) கேரளம்

B) கர்நாடகம்

C) ஆந்திரப்பிரதேசம்

D) இது எதுவும் இல்லை

(குறிப்பு – பிற்காலத்தில் சோழ அரச சமயமான சைவத்திற்கும் வைணவத்திற்கும் இடையே நடந்து வந்த சமய மோதல்களில் வைணவம் ஒதுக்கப்பட்டது. இவை வைணவத் திருத்தொண்டரான ஸ்ரீராமானுஜர் சோழ நாட்டை விட்டு வெளியேறி கர்நாடகத்திலுள்ள மேல்கோட்டைக்கு சென்ற நிகழ்வுக்கும் இட்டுச் சென்றது)

51) கீழ்க்கண்டவற்றுள் சரியான இணை எது?

A) கோயிரமர் – கோவில் கணக்காளர்

B) தேவகன்னி – கடவுளின் பிரதிநிதி

C) ஸ்ரீ வைஷ்ணவர் கண்டேசர் – கோயில் மேலாளர்

D) எல்லாமே சரி

(குறிப்பு – சோழர் காலத்தில் கோயில்கள் சமூகத்தில் விழாக்களுக்கான ஒரு களமாக மாறி சமூக நிறுவனங்களாக இயங்கின. சமூகம், அரசியல், பொருளாதாரம், பண்பாடு நடவடிக்கைகளுக்கான மையங்களாக கோவில்கள் விளங்கின.)

52) தஞ்சை பெருவுடையார் கோவிலின் கருவறை மீது அமைக்கப்பட்டுள்ள விமானத்தின் எடை என்ன?

A) 80 டன்கள்

B) 82 டன்கள்

C) 84 டன்கள்

D) 86 டன்கள்

(குறிப்பு – பிரகதீஸ்வரர் கோவில் என்று அழைக்கப்படும் தஞ்சை பெரிய கோவில் கட்டடக்கலை, ஓவியம், சிற்பம், சிலை வடித்தல் ஆகிய கலைகளுக்கு தன்னிகரற்ற எடுத்துக்காட்டாக விளங்குகிறது. ராஜராஜனின் ஆட்சி அதிகாரத்துக்கு இக்கோயில் அழுத்தமான சட்ட அங்கீகாரமாக உள்ளது)

53) தாராசுரம் கோவில் யாரால் கட்டப்பட்டது?

A) முதலாம் ராஜராஜ சோழன்

B) முதலாம் ராஜேந்திர சோழன்

C) இரண்டாம் ராஜராஜ சோழன்

D) இரண்டாம் ராஜேந்திர சோழன்

(குறிப்பு – இரண்டாம் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தாராசுரம் கோவில் சோழர்கால கட்டுமான கலைக்கு மற்றொரு சிறந்த உதாரணம் ஆகும். இக்கோவிலில் கருவறை சுவரில் தளத்தில் பெரிய புராண நிகழ்வுகள் குறுஞ்சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன)

54) சோழர் காலத்து வணிக முறையில் அஞ்சுவண்ணத்தார் யாரை குறித்தது?

I. யூதர்கள்.

II. கிறிஸ்தவர்கள்

III. இஸ்லாமியர்கள்

IV. மேற்கு ஆசியர்கள்

A) I, II மட்டும்

B) I, II, III மட்டும்

C) I, III, IV மட்டும்

D) இவர்கள் அனைவரையும்

(குறிப்பு – சோழர் காலத்தில் வேளாண் உற்பத்தி அதிகரிப்புடன் கைவினைத் தொழில்கள் நடவடிக்கைகளாலும் உற்பத்தி பொருள் அதிகரித்து பண்டமாற்று முறை வணிக வளர்ச்சிக்கு இட்டுச் சென்றது)

55) சோழர் காலத்தில் ஐந்நூற்றுவர், திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர், வளஞ்சியர் போன்ற வணிகக் குழுக்களின் தலைமை வணிகக்குழு எந்த இடத்தில் இயங்கியது?

A) கர்நாடகம்

B) ஆந்திர பிரதேசம்.

C) கேரளம்

D) ஒடிசா

(குறிப்பு – சோழர் காலத்தின் வணிக குழுக்கள் அஞ்சுவண்ணத்தார் மற்றும் மணிக்கிராமத்தார் ஆகிய இரு வணிக குழுக்கள் இருந்ததை அறிய முடிகின்றது. பின்னர் இந்த இருகுழுவும் ஒன்றாகி ஐநூற்றுவர், வளஞ்சியர் போன்ற பெயர்களுடன் இயங்கின. இவர்களது தலைமை வணிகக்குழு கர்நாடகத்தில் உள்ள ஐஹோல் என்ற இடத்தில் இயங்கியது)

56) சோழர் காலத்து கடல் வணிகக் குழுக்களின் மையங்களாக விளங்கிய இடங்களில் தவறானது எது?

A) மயிலாப்பூர்

B) திருவொற்றியூர்

C) விசாகப்பட்டினம்

D) கன்னியாகுமரி

(குறிப்பு – முனை சந்தை(புதுக்கோட்டை), மயிலாப்பூர், திருவொற்றியூர், நாகப்பட்டினம், விசாகப்பட்டினம், கிருஷ்ணபட்டினம் போன்ற இடங்கள் கடல் வணிக குழுக்களின் மையங்களாக மாறின. உள்நாட்டு வணிகம் விலங்குகள், படகுகள் மூலமாக மேற்கொள்ளப்பட்டன)

57) வளஞ்சியர் வெட்டிய ஐந்நூற்றுவப்பேரேரி என்ற பாசன ஏரி எங்கு அமைந்துள்ளது?

A) புதுக்கோட்டை

B) தஞ்சாவூர்

C) அரியலூர்

D) திருச்சிராப்பள்ளி

(குறிப்பு – சோழர் காலத்தில் பாசன நடவடிக்கைகளில் வணிகர்களும் ஆர்வம் கொண்டனர். வளஞ்சியர் குழு வெட்டிய ஐநூற்றுவப்பேரேரி என்ற பாசன ஏரி புதுக்கோட்டையில் அமைந்துள்ளது)

58) சம்புவராயர்கள் சூடிக்கொண்ட பட்டங்கள் கீழ்க்கண்டவற்றுள் எது?

I. சகலலோக சக்கரவர்த்தி

II. மண்கொண்ட சம்புவராயன்

III. ராஜநாராயணன் சம்புவராயன்

A) I, II மட்டும் சரி

B) I, III மட்டும் சரி

C) II, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – சம்புவராயர்கள் ராஜாதி ராஜன், மூன்றாம் குலோத்துங்கன் ஆகிய சோழ அரசர்களின் ஆட்சிக் காலத்தில் வட ஆற்காடு மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் வலிமை படைத்த குறுநில மன்னர்களாக விளங்கினர். தாங்கள் சார்ந்திருந்த பேரரசுகளுக்கு ஆதரவாக போர்களில் ஈடுபட்டனர். சில சமயம் தங்களுக்குள்ளும் போரிட்டுக் கொண்டனர்)

59) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – முதலாம் ராஜேந்திரன் தென் ஆற்காடு பகுதியில் உள்ள எண்ணாயிரத்தில் வேத கல்லூரி ஒன்றை நிறுவினார்..

கூற்று 2 – 1048ஆம் ஆண்டு புதுச்சேரிக்கு அருகிலுள்ள திருபுவனியில் ஒரு வேத கல்லூரி நிறுவப்பட்டது.

கூற்று 3 – 1065ஆம் ஆண்டு செங்கல்பட்டுக்கு அருகில் உள்ள திருமுக்கூடல் என்னும் இடத்தில் ஒரு வேத கல்லூரி அமைந்தன.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லா கூற்றுகளும் சரி

(குறிப்பு – 1061ஆம் ஆண்டு சோழர்களால் செங்கல்பட்டுக்கு அருகில் உள்ள திருமுக்கூடல் என்னும் இடத்தில் ஒரு வேத கல்லூரி நிறுவப்பட்டது. இதுபோன்ற சமஸ்கிருதக் கல்வி மையங்களில் வேதங்கள், சமஸ்கிருத இலக்கணம், சமயம், தத்துவம் போன்றவை கற்றுத்தரப்பட்டன.)

60) சோழர்களின் தலைநகரான கங்கைகொண்ட சோழபுரத்தை பாண்டிய மன்னன் முதலாம் ஜடாவர்மன் எந்த ஆண்டு கைப்பற்றினார்?

A) 1260 இல்

B) 1262 இல்

C) 1264 இல்

D) 1266 இல்

(குறிப்பு – அடிக்கடி நிகழ்ந்த பாண்டியர்களின் தொடர் படையெடுப்புகளால் ஒரு காலத்தில் வலிமை பெற்று விளங்கிய சோழ அரசு தன்னை விட வலிமையில் குறைந்த ஹொய்சாள அரசை சார்ந்து இருக்கும் அளவிற்கு வலுவிழந்தது.)

61) கடைசி சோழ அரசர் யார்?

A) இரண்டாம் குலோத்துங்க சோழன்

B) மூன்றாம் ராஜசேகர சோழன்

C) மூன்றாம் ராஜேந்திர சோழன்

D) குலசேகர சோழன்

(குறிப்பு – 1279 ஆம் ஆண்டு முதலாம் மாறவர்மன் குலசேகரபாண்டியன் கடைசி சோழ அரசரான மூன்றாம் ராஜேந்திர சோழனை தோற்கடித்தார். இத்துடன் சோழரின் ஆட்சி முடிவுக்கு வந்து பாண்டியரின் ஆட்சி தொடங்கியது)

62) கீழ்காணும் எந்த பாடல்களில் கூடல் என்பது பாண்டியர்களின் தலைநகரம் என குறிப்பிடப்பட்டுள்ளது?

I. பட்டினப்பாலை.

II. மதுரைக்காஞ்சி.

III. மணிமேகலை

A) I, II இல் மட்டும்

B) I, III இல் மட்டும்

C) II, III இல் மட்டும்

D) இவை அனைத்திலும்

(குறிப்பு – பாண்டிய நாட்டைச் சேர்ந்த புலிமான்கோம்பை என்ற கிராமத்தில் அண்மையில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டில் கூடல் என்ற சொல் குறிப்பிடப்பட்டுள்ளது. பட்டினப்பாலை மற்றும் மதுரைக்காஞ்சி ஆகிய நூல்களில் கூடல் பாண்டியர் தலைநகரமாக குறிப்பிடப்பட்டுள்ளது)

63) மணிமேகலை என்னும் நூலை இயற்றிய சீத்தலைச் சாத்தனார் எந்த ஊரை சார்ந்தவர் ஆவார்?

A) மதுரை

B) திருச்சிராப்பள்ளி

C) புதுக்கோட்டை

D) திருநெல்வேலி

(குறிப்பு – மணிமேகலையை இயற்றிய சீத்தலை சாத்தனார் மதுரையைச் சேர்ந்தவர் ஆவார். மணிமேகலை என்பது ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றாகும். கூடல்நகர் என்பது மதுரையை குறிப்பதாகும்)

64) பாண்டியரின் ஆட்சி மண்டலம் எவ்வாறு அழைக்கப்பட்டது?

A) பாண்டி மண்டலம்

B) தென் மண்டலம்

C) பாண்டி நாடு

D) இவை அனைத்தும்

(குறிப்பு – பாண்டியரின் ஆட்சி பகுதி மேற்கண்ட அனைத்து பெயர்களில் அழைக்கப்பட்டது. வைகை, தாமிரபரணி ஆகிய ஆறுகளின் வளம்பெறும் சில பகுதிகள் நீங்கலாக பெரும்பாலும் பாறைகளும் குன்றுகளும் மலைகளும் நிறைந்த பகுதியே பாண்டிய நாடு ஆகும்.)

65) பாண்டிய நாட்டின் வட எல்லையாக விளங்கிய ஆறு எது?

A) வைகை

B) தாமிரபரணி

C) காவிரி

D) வெள்ளாறு

(குறிப்பு – புதுக்கோட்டை வழியே ஓடும் வெள்ளாறு பாண்டிய நாட்டின் வட எல்லை ஆகும். இந்திய பெருங்கடல் தென் எல்லை ஆகும். மேற்குத் தொடர்ச்சி மலைகள் மேற்கு எல்லையாக அமைந்துள்ளது. வங்காள விரிகுடா கிழக்கு எல்லையாகவும் அமைந்திருந்தன)

66) அரிகேசரி மாறவர்மன் எந்த ஆண்டு பதவி ஏற்றார் என்று வைகை ஆற்று பகுதி கல்வெட்டுகள் கூறுகின்றன?

A) 640 இல்

B) 642 இல்

C) 644 இல்

D) 646 இல்

(குறிப்பு – தொடக்க கால பாண்டிய அரசர்களில் சிறந்தவரான அரிகேசரி மாறவர்மன் 642 இல் பதவி ஏற்றார் என்பதை வைகை ஆற்றுப் பகுதி கல்வெட்டுகள் கூறுகின்றன. இவர் முதலாம் மகேந்திரவர்மன், முதலாம் நரசிம்மவர்மன் ஆகியோருக்கு சமகாலத்தவர் ஆவார்)

67) மாறவர்மன் அரிகேசரியை சமண மதத்திலிருந்து சைவ மதத்திற்கு மாற்றியவர் யார்?

A) அப்பர்

B) சுந்தரர்

C) திருஞானசம்பந்தர்

D) மாணிக்கவாசகர்

(குறிப்பு – சைவத் துறவியான திருஞானசம்பந்தர் அரிகேசரியை சமண மதத்திலிருந்து சைவ மதத்திற்கு மாற்றினார். சமணர்களை கழுவேற்றிய கூன் பாண்டியனே அரிகேசரி என்று அடையாளம் காணப்படுகிறார்)

68) புகழ்பெற்ற வேள்விக்குடி நிலக்கொடை அளித்த பாண்டிய மன்னர் யார்?

A) கோச்சடையான் ரணதீரன்

B) மாறவர்மன் அரிகேசரி

C) மாறவர்மன் ராஜசிம்மன்

D) பராந்தக நெடுஞ்சடையன்

(குறிப்பு – ஜதில பராந்தக நெடுஞ்சடையன் என்று அழைக்கப்பட்ட முதலாம் வரகுண பாண்டியன் (756-815) மாறவர்மன் ராஜசிம்மனுக்கு பிறகு ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். இவரே புகழ்பெற்ற வேள்விக்குடி நிலக்கொடை அளித்தவர் ஆவார். பாண்டிய அரச மரபில் மிகச் சிறந்தவறான இவர் பல்லவர்களையும் சேரர்களையும் வெற்றிகரமாக எதிர்கொண்டவர்)

69) திருப்புறம்பியம் போரில் அபராஜித பல்லவனால் தோற்கடிக்கப்பட்ட பாண்டிய மன்னன் யார்?

A) ஸ்ரீ மாற ஸ்ரீ வல்லபர்

B) இரண்டாம் வரகுண பாண்டியன்

C) பராந்தக வீரநாராயணன்

D) மாறவர்மன் ராஜசிம்மன்

(குறிப்பு – இரண்டாம் வரகுண பாண்டியன் திருப்புறம்பியம் போரில் அபராஜித பல்லவனால் தோற்கடிக்கப்பட்டார். இவருக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த பராந்தக வீரநாராயணன், இரண்டாம் ராஜசிம்மன் ஆகியோரால் முதலாம் பராந்தகனின் தலைமையில் தோன்றிய சோழரின் எழுச்சிக்கு ஈடுகொடுக்க முடியவில்லை)

70) பாண்டிய நாட்டுக்கு வருகை தந்த இத்தாலி நாட்டு பயணி யார்?

A) யுவான் சுவாங்

B) மார்க்கோ போலோ

C) இபின் பதூதா

D) வாசஃப்

(குறிப்பு – பாண்டிய நாட்டுக்கு வருகை தந்த இத்தாலி நாட்டுப் பயணி மார்க்கோ போலோ நேர்மையான நிர்வாகத்துக்காகவும் வெளிநாட்டு வணிகர்களை சிறந்த முறையில் நடத்தியதற்காக பாண்டிய அரசரை பாராட்டியுள்ளார். உடன்கட்டை ஏறும் வழக்கம், அரசர்கள் பின்பற்றிய பலதார மணமுறை ஆகியவை மார்க்கோபோலோவின் பயணக்கட்டுரையில் பதிவு செய்யப்பட்டுள்ளன)

71) இரண்டாம் பாண்டிய அரசின் சிறப்பு மிக்க ஆட்சியாளராக திகழ்ந்தவர் யார்?

A) மாறவர்மன் குலசேகரன்

B) சுந்தரபாண்டியன்

C) சடையவர்மன் ஸ்ரீவல்லபன்

D) இவர்கள் யாரும் அல்ல

(குறிப்பு – சுந்தரபாண்டியன் தமிழ் நாடு முழுவதையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்ததுடன் ஆந்திராவில் உள்ள நெல்லூர் வரை தனது அரசியல் அதிகாரத்தை செலுத்தினார். இவர் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் என்று அழைக்கப்படுகிறார்)

72) சுந்தரபாண்டியன் யாரை வீழ்த்தி மால்வாவை கைப்பற்றினார்?

A) வீர பரமேஸ்வரன்

B) வீர சோமேசுவரன்

C) வீர விக்னேஸ்வரன்

D) இவர்கள் யாரும் அல்ல

(குறிப்பு – சுந்தர பாண்டியன் சேர அரசரான மலை நாட்டு தலைவரை அடக்கி தனக்கு கப்பம் செலுத்த வைத்தார். சோழரின் வீழ்ச்சிக்கு பின்னர் மால்வா பகுதியை ஆட்சி செய்த போஜ அரசன் வீர சோமேஸ்வரனின் அழைப்பின் பெயரில் நிகழ்ந்த கண்ணனூர் போரில் சுந்தரபாண்டியன் வெற்றி பெற்றார்)

73) அலாவுதீன் கில்ஜியிடம் அடைக்கலம் கேட்டு தில்லி சென்ற பாண்டிய அரசர் யார்?

A) சுந்தரபாண்டியன்

B) மாறவர்மன் குலசேகரன்

C) வீரபாண்டியன்

D) சடையவர்மன் ஸ்ரீவல்லபன்

(குறிப்பு – மாறவர்மன் குலசேகரன் என்னும் பாண்டிய மன்னனின் மூத்த மகன் சுந்தரபாண்டியன் ஆவார். இளைய மகன் வீரபாண்டியனுக்கு இளவரசு பட்டம் சூட்டப்பட்டதினால் ஆத்திரமுற்ற சுந்தரபாண்டியன் அலாவுதீன் கில்ஜியிடம் அடைக்கலம் புகுந்தார். இதுவே மாலிக் கபூரின் படையெடுப்புக்கு காரணமாக அமைந்தது)

74) மாலிக்கபூர் எந்த ஆண்டு மதுரை மீது படையெடுத்தார்?

A) 1309 இல்

B) 1311 இல்

C) 1313 இல்

D) 1315 இல்

(குறிப்பு – 1309 இல் மாலிக்காபூர் மதுரையை அடைந்த போது அங்கே யாரும் இல்லை. வீரபாண்டியன் ஏற்கனவே தப்பியோடியிருந்தார். அங்கிருந்த முத்து, மரகதம், மாணிக்க நகைகள் மாலிக் கபூரால் எடுத்துச் செல்லப்பட்டதாக என தெரிகிறது)

75) மதுரையை ஆட்சி செய்த ஆளுநர் ஜலாலுதீன் ஹசன் ஷா எப்போது தன்னை மதுரை அரசராக அறிவித்துக் கொண்டார்?

A) 1330 இல்

B) 1335 இல்

C) 1340 இல்

D) 1345 இல்

(குறிப்பு – மாலிக் கபூரின் படையெடுப்புக்கு பிறகு மதுரையில் தில்லி சுல்தானின் அரசுக்குக் கட்டுப்பட்ட ஒரு அரசு உருவாகியது. மதுரையை ஆட்சி செய்த ஆளுநர் ஜலாலுதீன் அஸன் ஷா 1335 ஆம் ஆண்டு தன்னை மதுரை அரசராக அறிவித்துக் கொண்டார்)

76) செம்பியன், வானவன், தென்னவன் போன்ற பட்டங்கள் எந்த மரபினைச் சேர்ந்த அரசர்கள் சூடிக்கொண்டவை ஆகும்?

A) சேரர்கள்

B) சோழர்கள்

C) பாண்டியர்கள்

D) பல்லவர்கள்

( குறிப்பு – பாண்டிய அரசர்களை கூடல் கோன், கூடல்நகர் காவலன், மதுராபுரி பரமேஸ்வரன் எனப் போற்றுவது மரபாக இருந்தது. தூய தமிழில் அமைந்த பட்டங்கள் ஆவண செம்பியன், வானவன், தென்னவன் போன்றவை ஆகும்)

77) குறுநில மன்னர்கள் மீது அரசர்களின் சட்டபூர்வ மேலாளுமையை காட்டும் விதத்திலும் அரியணைக்கு பெயரிடும் வழக்கம் எந்த மரபில் இருந்தது?

A) சேரர்கள்

B) சோழர்கள்

C) பாண்டியர்கள்

D) பல்லவர்கள்

(குறிப்பு – பாண்டிய அரசர்கள் நீளமான, ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் அமரும் இடவசதி கொண்ட அரியணையில் அமர்ந்த படி நிர்வாகம் செய்தனர். முன்னையதரையன், பாண்டியதரையன், கலிங்கத்தரையன் என சட்டபூர்வ மேல்ஆளுமையை காட்டும் விதத்தில் அரியணைகளுக்கு பெயரிடும் வழக்கம் பாண்டியர்களிடம் இருந்தது)

78) பாண்டியர்களின் படைத்தளபதிகளுக்கு சூட்டப்பட்ட பட்டங்களில் கீழ்கண்டவற்றுள் எது சரியானது?

I. பள்ளி வேலன்.

II. பராந்தகன் பள்ளி வேலன்.

III. மாறன் ஆதித்தன்

IV. தென்னவன் தமிழவேள்

V. கண்டிசன்

A) I, II, III மட்டும் சரியானது

B) I, II, III, IV மட்டும் சரியானது

C) I, III, IV, V மட்டும் சரியானது

D) எல்லாமே சரியானது

(குறிப்பு – பாண்டிய மரபுகளில் அதிகாரிகள் குழு அரசகட்டளைகளை நிறைவேற்றியது. முதன்மை அமைச்சர் உத்தர மந்திரி எனப்பட்டார். படைத் தளபதிகளுக்கு பள்ளி வேலன், பராந்தகன் பள்ளி வேலன், மாறன் ஆதித்தன், தென்னவன் தமிழவேள் ஆகிய பட்டங்கள் சூட்டப்பட்டன)

79) பாண்டிய நாட்டு அரசியல் பிரிவுகள் சரியான வரிசையில் அமைந்துள்ளதை தேர்ந்தெடு?

A) வளநாடு, நாடு, கூற்றம், மங்கலம், நகரம், ஊர், குடி

B) வளநாடு, கூற்றம், நாடு, மங்கலம், நகரம், ஊர், குடி

C) வளநாடு, மங்கலம், கூற்றம், நாடு, நகரம், ஊர், குடி

D) வளநாடு, மங்கலம், கூற்றம், நகரம், நாடு, ஊர், குடி

(குறிப்பு – பாண்டிய மண்டலம் என்பது பல வளநாடுகள் கொண்டது. ஒரு வளநாடு பல நாடுகளாகவும் கூற்றங்களாகவும் பிரிக்கப்பட்டது. நாடு, கூற்றம் ஆகியன மங்கலம், நகரம், ஊர், குடி ஆகிய குடியிருப்புகளை கொண்டவையாக இருந்தன)

80) பாண்டியர் காலத்தில் பிராமணர்களுக்கு வழங்கப்பட்ட பாசன வசதிகளுடன் கூடிய குடியிருப்புகள் எவ்வாறு அழைக்கப்பட்டது?

A) தச்சர் மானியம்

B) தட்டார் காணி

C) சதுர்வேதி மங்கலம்

D) இது எதுவும் அல்ல

(குறிப்பு – அரசர்களும் குறுநில மன்னர்களும் பாசன வசதிகளுடன்கூடிய குடியிருப்புகளை உருவாக்கி மங்கலம், சதுர்வேதி மங்கலம் என்ற பெயரிட்டு பிராமணர்களுக்கு வழங்கினர். இக்குடியிருப்புகளுக்கு அரசனின் பெயர்களும் கடவுளின் பெயர்களும் சூட்டப்பட்டன)

81) கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானது எது?

I. இஸ்லாமியர்களை தமிழ்நாட்டுக்குள் முதன்முதலாக வரவழைத்தது மாலிக் காபூரின் படையெடுப்பு அல்ல.

II. ஏழாம் நூற்றாண்டிலேயே இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் அரபு குடியிருப்புகள் தோன்றிவிட்டன.

III. காயல் துறைமுக நகரில் அரபு தலைவன் மாடிக்கு இஸ்லாம் ஜமாலுதீன் என்பவரால் ஒரு முகவர் நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. இது பாண்டியர்களுக்கு குதிரைகளை இறக்குமதி செய்யும் பணிகளை மேற்கொண்டுள்ளது.

A) I, II மட்டும் சரியானது

B) II, III மட்டும் சரியானது

C) III மட்டும் சரியானது

D) இவை அனைத்தும் சரியானது

(குறிப்பு – ஏழாம் நூற்றாண்டிலேயே தென்னிந்தியாவின் மேற்கு கடற்கரையில் அரபு குடியிருப்புகள் தோன்றிவிட்டன. இதன் மூலம் தங்கள் வணிகத்தை கிழக்கு கடற்கரையில் இருந்த தமிழர்களுடன் விரிவுபடுத்திக் கொண்டனர். இதன் காரணமாக கிழக்கு கடற்கரையில் இருந்த அரசுகள் இந்த அரபு வணிகர்கள் மீது மிகவும் தாராளமாக கொள்கைகளை தளர்த்தி ஆதரவு அளித்துள்ளனர்)

82) பாண்டியர் கால குதிரை வணிகம் குறித்து பதிவு செய்துள்ளவர் யார்?

A) மார்க்கோ போலோ

B) வாசஃப்

C) இபின்பதூதா

D) யுவான்சுவாங்

(குறிப்பு – காயல் மட்டும் இந்தியாவின் பிற துறைமுகங்களில் ஏறத்தாழ பத்தாயிரம் குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டன. அவற்றுள் 1400 குதிரைகள் காயல் துறைமுக அரபு தலைவன் ஜமாலுதீன் சொந்தமானவை. குதிரையின் சராசரி விலை 220 செம்பொன் தினார்கள் ஆகும் என பாண்டிய காலத்து வெளிநாட்டு பயணியான வாசஃப் எழுதி வைத்திருக்கும் சான்றுகள் கூறுகின்றன)

83) திருவண்ணாமலை கோயில் நிலங்கள் பாசன வசதி பெற பெண்ணை ஆற்றில் இருந்து வாய்க்கால் அமைத்து தந்தவர்கள் யார்?

A) சேரர்கள்

B) சோழர்கள்

C) பாண்டியர்கள்

D) பல்லவர்கள்

(குறிப்பு – ஏரிகளின் கரைகளை அமைக்கும்போது பண்டைய கட்டுமான கலைஞர்கள் கட்டத்தை சமமாக பராமரிக்க நூல் பயன்படுத்தினர். திருவண்ணாமலை கோயில் நிலங்கள் பாசன வசதி பெற ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபன் பெண்ணை ஆற்றில் இருந்து வாய்க்கால் அமைத்து தந்துள்ளார்)

84) பாண்டியர் காலத்தில் இயற்றப்பட்ட முக்கியமான இலக்கிய நூல்களுள் தவறானது எது?

A) திருவெம்பாவை

B) திருவாசகம்

C) திருப்பாவை

D) திருமுறை

(குறிப்பு – பாண்டியர் ஆட்சி காலத்தில் இயற்றப்பட்ட முக்கியமான இலக்கிய நூல்களாவன திருப்பாவை, திருவெம்பாவை, திருவாசகம், கோவை முதலியன ஆகும். தமிழை வளர்க்கவும் மகாபாரதத்தை மொழிபெயர்க்கவும் ஒரு கலைக் கழகம் அமைக்கப்பட்டதாக ஒரு செப்பேடு கூறுகிறது)

85) பாண்டியர்களால் கீழ்காணும் எந்த கோவில் கருவறை விமானங்கள் தங்கத் தகடுகளால் வேயப்பட்ட?

I. திருவரங்கம்

II. திருவேங்கடம்

III. சிதம்பரம்

A) I மட்டும்

B) II, III மட்டும்

C) I, III மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – இடைக்கால பாண்டியரும் பிற்காலப் பாண்டியரும் பல கோயில்களை பழுது பார்த்து அவற்றுக்கு தங்கம் மற்றும் நிலம் ஆகியவற்றை நன்கொடையாக வழங்கியுள்ளனர். திருவரங்கம், சிதம்பரம் ஆகிய கோயில்களில் கருவறை மீது உள்ள விமானங்கள் தங்க தகடுகளால் வேயப்பட்டன)

86) திருவரங்கம் கோவிலில் அரசபட்டம் சூட்டிக் கொண்ட பாண்டிய மன்னர் யார்?

A) சடையவர்மன் சுந்தரபாண்டியன்

B) சடையவர்மன் வீரபாண்டியன்

C) ஸ்ரீவல்லபன்

D) மாறவர்மன் குலசேகரன்

(குறிப்பு – சடையவர்மன் சுந்தரபாண்டியன் திருவரங்கம் கோயிலில் பட்டம் சூட்டினார், அதன் நினைவாக அக்கோயிலுக்கு ஒரு விஷ்ணு சிலையை நன்கொடையாக கொடுத்தார். இக்கோயிலில் ஒற்றர்களும் பிற மூன்று விமானங்களும் தங்கத் தகடுகள் பொருத்தப்பட்டவை ஆகும்)

87) பாண்டிய மன்னர்களால் உருவாக்கப்பட்ட குடைவரைக் கோவில்கள் கீழ்க்கண்டவற்றுள் எது?

I. திருமயம், பிள்ளையார்பட்டி

II. குன்றக்குடி, கன்னியாகுமரி

III. திருச்செந்தூர், கழுகுமலை

A) I, II மட்டும்

B) II, III மட்டும்

C) I, III மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – மேற்கண்ட அனைத்து கோயில்களும் பாண்டியர்களால் உருவாக்கப்பட்ட குடைவரைக் கோவில்கள் ஆகும். சித்தன்னவாசல், அரிட்டாபட்டி, திருமலைபுரம், திருநெடும்கரை ஆகிய கோவில்களில் ஓவியங்கள் காணப்படுகின்றன)

88) பாண்டியர் காலத்தில் கடல் வணிக மையங்களாக இருந்தவை கீழ்கண்டவற்றுள் எது?

I. சிந்தாமணி

II. காவிரிப்பூம்பட்டினம்

III. மைலாப்பூர்

IV. மகாபலிபுரம்

A) I, II, III மட்டும்

B) I, III, IV மட்டும்

C) II, III, IV மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – சிந்தாமணி, மைலாப்பூர், திருவொற்றியூர், திருவாடானை, மகாபலிபுரம் ஆகியவை சுறுசுறுப்பான கடல் வணிக மையங்களாக இருந்தன என்பதைக் கல்வெட்டுகள் வாயிலாக அறிகிறோம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!