Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Book Back QuestionsTnpsc

புரட்சிகளின் காலம் Book Back Questions 9th Social Science Lesson 9

9th Social Science Lesson 9

9] புரட்சிகளின் காலம்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

இங்கிலாந்து திருச்சபையைச் சீர்திருத்த வேண்டும் என்னும் நோக்கத்தில் செயல்பட்ட மதச் சீர்திருத்த இயக்கத்திற்குத் தலைமையேற்ற சீர்திருத்தவாதிகள், ரோமானியக் கத்தோலிக்கத் திருச்சபையின் போதனைகளையும் நடைமுறைகளையும் ஏற்க மறுத்தனர். இவர்களே பியூரிட்டானியர் (தூய நெறியாளர் எனப் பொருள்) என அறியப்பட்டனர். இங்கிலாந்து திருச்சபையைச் சீர்திருத்த இவர்கள் மேற்கொண்ட முயற்சிகளை முதலாம் ஜேம்ஸ், முதலாம் சார்லஸ் ஆகிய ஸ்டூவர்ட் வம்ச அரசர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. இவ்வரசர்கள் மேற்கொண்ட அடக்குமுறை நடவடிக்கைகளால் பெருவாரியான பியூட்டானியர் இங்கிலாந்திலிருந்து புலம் பெயர்ந்து வேறு பகுதிகளில் குடியேறினர். தாங்கள் உருவாக்கிய குடியேற்றங்களில் இவர்கள் பியூரிட்டானியர் வாழ்க்கை முறையை மேற்கொண்டனர்.

குவேக்கர்கள் இங்கிலாந்தில் ஜார்ஜ் பாக்ஸ் என்பவரால் நிறுவப்பட்ட நண்பர்கள் குழாம் என்னும் கிறித்துவ மதக் குழுவின் உறுப்பினர் ஆவர். புனித ஆவிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த இவர்கள் சடங்குச் சம்பிரதாயங்களையும், சமயக் குருமார் அமைப்பையும் எதிர்த்தனர். இவர்கள் போருக்கு எதிராகவும் அமைதிக்கு ஆதரவாகவும் மேற்கொண்ட பணிகளுக்காக நற்பெயர் பெற்றவர்களாவர்.

ஐரோப்பியர் அமெரிக்காவில் குடியேறுவதற்கு முன்பாகவே அம்மண்ணின் மைந்தர்களாக அமெரிக்காவைச் சொந்த நாடாகக் கொண்ட பூர்வ குடிகள் பொதுவாகச் செவ்விந்தியர் என அழைக்கப்பட்டவர்கள் (தற்போது அச்சொல் இழிவானதெனக் கருதப்படுவதால் வரலாற்று அறிஞர்கள் அச்சொல்லைப் பயன்படுத்துவதில்லை) அமெரிக்கா முழுவதும் பரவலாக வாழந்துவந்தனர். பல இனக்குழுக்களாகப் பிரிந்திருந்த அவர்கள் தங்களுக்குள்ளே போரிட்டுக்கொண்டிருந்தனர். மேலும் அடிமைச் சூழலில் வேலை செய்யவும் அவர்கள் மறுத்தனர். அரசியல் தந்திரம், வன்முறை ஆகிய இரண்டின் மூலமாக ஐரோப்பியர் அவ்வினக்குழுக்களைத் தோற்கடித்து அவர்களது இடங்களைக் கைப்பற்றினர். எண்ணிக்கையில் மிகக் குறைந்துவிட்ட அவர்கள் இன்றைய தினம் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் வாழ்கின்றனர்.

காரன்வாலிஸ்: பிரபுக்கள் குடும்பத்தில் பிறந்த இவர் ஈட்டனிலும், கேம்பிரிட்ஜிலும் கல்வி கற்றார். 1757இல் இராணுவத்தில் சேர்ந்தார். 1762இல் தந்தையார் இறந்தபோது இவர் கோமான் காரன்வாலிஸ் ஆன பின்னர் இங்கிலந்து நாடாளுமன்றத்தின் மேலவையான பிரபுக்கள் அவையில் இடம் பெற்றார். அமெரிக்க விடுதலைப் போரின் போது இவர் மேற்கொண்ட போர் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவையாக இருந்தன. சில இடங்களில் அமெரிக்கப் படைகளைத் தோற்கடித்த இவர் இறுதியில் யார்க்டவுனில் தனது படைகளுடன் சரணடைந்தார். இத்தோல்விக்குப் பின்னும் அடுத்தடுத்து வந்த இங்கிலாந்து அரசாங்கங்களின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்து, தொடர்ந்து முக்கியப் பணிகளில் பணியமர்த்தப்பட்டார். 1786இல் நைட் (knight) பட்டம் சூட்டப்பட்ட அவர் அதே ஆண்டில் இந்தியாவில் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியின் கவர்னர் ஜெனரலாகவும், இராணுவத்தின் தலைமைத் தளபதியாகவும் பணியமர்த்தப்பட்டார்.

மனிதன் மற்றும் குடிமகனின் உரிமைகள் பிரகடனம்: இப்பிரகடனம் லஃபாயட், தாமஸ் ஜெபர்சன், மிரபு ஆகியோர்களால் எழுதப்பட்டது. மனிதர்கள் மனிதர்களாய் இருப்பதினாலேயே இயல்பாகவே சில உரிமைகளைப் பெற்றுள்ளார்கள் என்பதை உறுதிப்படுத்தும் இயற்கை விதியை இது அடிப்படையாகக் கொண்டது. அவ்வுரிமைகள் உலகம் தழுவியவை அனைத்து இடங்களிலும் அனைத்துக் காலங்களிலும் செல்லத்தக்கவை. அறிவொளிக் காலத்துத் தத்துவஞானிகளால் ஈர்க்கப்பட்டு எழுதப்பட்ட இப்பிரகடனம் பிரெஞ்சுப் புரட்சியினுடைய லட்சியங்களின் சாரத்தை விளக்குவதாய் அமைந்தது. உலகளாவிய அளவில் சுதந்திரமும் ஜனநாயகமும் தழைத்தோங்குவதில் பெரும் தாக்கத்தை இப்பிரகடனம் ஏற்படுத்தியது.

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. அமெரிக்காவில் ஏற்படுத்தப்பட்ட முதல் ஆங்கிலேய காலனி ————— ஆகும்.

(அ) நியூயார்க்

(ஆ) பிலடெல்பியா

(இ) ஜேம்ஸ்டவுன்

(ஈ) ஆம்ஸ்டெர்டாம்

2. பிரெஞ்சுப் புரட்சியின் முன்னோடியாக, வாஷிங்டனுடன் கூட்டுச் சேர்ந்து ஆங்கிலேருக்கு எதிராக போராடியவர் —————-

(அ) மிரபு

(ஆ) லஃபாயெட்

(இ) நெப்போலியன்

(ஈ) டான்டன்

3. லஃபாயாட், தாமஸ் ஜெபர்சன், மிரபு ஆகியோர் ————– எழுதினர்.

(அ) சுதந்திர பிரகடனம்

(ஆ) பில்னிட்ஸ் பிரகடனம்

(இ) மனிதன் மற்றும் குடிமகன் உரிமைகள் பற்றிய பிரகடனம்

(ஈ) மனித உரிமை சாசனம்

4. ————–இல் ஆங்கிலேயரின் தோல்வி பிரான்சிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நட்புக்கு வழிவகுத்தது.

(அ) டிரென்டன்

(ஆ) சாரடோகா

(இ) பென்சில் வேனியா

(ஈ) நியூயார்க்

5. பிரான்சில் அரச சர்வாதிகாரத்தின் சின்னமாக ———– இருந்தது.

(அ) வெர்செயில்ஸ்

(ஆ) பாஸ்டைல் சிறைச்சாலை

(இ) பாரிஸ் கம்யூன்

(ஈ) ஸ்டேட்ஸ் ஜெனரல்

6. ஆஸ்திரியா மற்றும் பிரஷ்யாவின் படைகள், பிரெஞ்சுப் புரட்சியாளர் படைகளால் ————- போர்க்களத்தில் தோற்கடிக்கப்பட்டன.

(அ) வெர்ணா

(ஆ) வெர்செயில்ஸ்

(இ) பில்னிட்ஸ்

(ஈ) வால்மி

7. “கான்டீட்” என்ற நூல் ————–ஆல் எழுதப்பட்டது.

(அ) வால்டேர்

(ஆ) ரூசோ

(இ) மாண்டெஸ்கியூ

(ஈ) டாண்டன்

8. பதினாறாம் லூயியின் கீழ்க் குறைந்தபட்ச அதிகாரங்களைக் கொண்ட முடியாட்சியைத் தக்க வைத்துக்கொள்ள விரும்பிய மிதவாத தாராளவாதிகள் ——————

(அ) ஜெரோண்டியர்

(ஆ) ஜேக்கோபியர்

(இ) குடியேறிகள்

(ஈ) அரச விசுவாசிகள்

9. ———–ஆம் ஆண்டில் பாரிஸ் உடன்படிக்கையின்படி அமெரிக்க சுதந்திர அமைதி போர் முடிவுக்கு வந்தது.

(அ) 1776

(ஆ) 1779

(இ) 1781

(ஈ) 1783

10. தாமஸ் பெயின் எழுதிய புகழ்வாய்ந்த நூல் ————- ஆகும்.

(அ) இயல்பறிவு

(ஆ) மனித உரிமைகள்

(இ) உரிமைகள் மசோதா

(ஈ) அடிமைத்தனத்தை ஒழித்தல்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. இரண்டாம் கண்டங்கள் மாநாட்டால் அஞ்சல்துறை தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் ————

2. பங்கர் குன்றுப் போர் நடைபெற்ற ஆண்டு ————-

3. ————- சட்டம் கடனைத் தங்கமாகவும் வெள்ளியாகவும் திரும்பச் செலுத்த வற்புறுத்தியது.

4. பிரான்சின் தேசியச் சட்டமன்றத்தின் தலைவர் ————– ஆவார்

5. சுதந்திரத்திற்கும் பகுத்தறிவிற்கும் பெரும் விழா நடத்தியதால் ————— கில்லட்டினால் கொல்லப்பட்டார்.

6. பதினாறாம் லூயி பிரான்சை விட்டு தப்பியோட முயன்றபோது —————- நகரில் அவர் தனது குடும்பத்துடன் கைது செய்யப்பட்டார்.

III. பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. (i) கடலாய்வுப் பயணங்களை மேற்கொண்டதில் போர்த்துகீசியர் முன்னோடியாவர்.

(ii) பென் என்ற குவேக்கரால் புதிய பிளைமவுத் பெயரிடப்பட்டது.

(iii) குவேக்கர்கள் போருக்கு ஆதரவாக இருந்தமைக்கு நற்பெயர் பெற்றனர்.

(iv) ஆங்கிலேயர்கள் நியூ ஆம்ஸ்டர்டாமை நியூயார்க் என பெயர் மாற்றம் செய்தனர்.

(அ) i மற்றும் ii சரியானவை

(ஆ) iii சரி

(இ) iv சரி

(ஈ) i மற்றும் iv சரியானவை.

2. i) அமெரிக்க விடுதலைப் போர் இங்கிலாந்துடன் செய்யப்பட்ட போராக மட்டுமல்லாது உள்நாட்டுப் போராகவும் அமைந்தது.

ii) ஆங்கிலேயப் படைகள் யார்க்டவுனில் வெற்றிபெற்றன.

iii) வளர்ந்துவரும் நடுத்தர வர்க்கத்தினரைப் பிரெஞ்சு பிரபுக்கள் ஆதரித்தனர்.

iv) ஆங்கிலேய நாடாளுமன்றம் காகிதத்தின் மீதான வரி நீங்கலாக ஏனைய பொருட்களின் மீதான டவுன்ஷெண்ட் சட்டங்களை ரத்து செய்தது.

(அ) i மற்றும் ii சரியானவை

(ஆ) iii சரி

(இ) iv சரி

(ஈ) i மற்றும் iv சரியானவை

3. கூற்று (கூ): ஆங்கிலேயப் பொருட்களைப் பாஸ்டன் வணிகர்கள் புறக்கணித்தனர்.

காரணம் (கா): ஆங்கிலேய நிதி அமைச்சர், அமெரிக்க காலனிகளில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் மீது புதிய வரி அறிமுகப்படுத்தினார்.

அ) கூற்று சரி, காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல

ஆ) கூற்று தவறு, காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல

இ) கூற்று சரி, காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்

ஈ) கூற்றும் காரணமும் தவறானவை

4. கூற்று (கூ): கட்டாய இராணுவச் சேவைக்கு எதிராக வெண்டி என்னுமிடத்தில் விவசாயிகள் ஒரு பெரும்புரட்சி செய்தனர்.

காரணம் (கா): அரசரின் ஆதரவாளர்கள் விவசாயிகள் அவருக்கெதிராகப் போரிட விரும்பவில்லை.

(அ) கூற்றும் காரணமும் தவறானவை

(ஆ) கூற்றும் காரணமும் சரியானவை

(இ) கூற்று சரி, காரணம் தவறு

(ஈ) கூற்று தவறு, காரணம் சரி

IV. பொருத்துக:

1. ஜான் வின்திராப் – அ] பிரான்சின் நிதி அமைச்சர்

2. டர்காட் – ஆ] ஜீலை 4

3. சட்டத்தின் சாரம் – இ] இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ்

4. மேரி அண்டாய்னெட் – ஈ] மாசாசூசட்ஸ் குடியேற்றம்

5. ஏழாண்டுப்போர் – உ] பதினாறாம் லூயி

6. அமெரிக்கச் சுதந்திர தினம் – ஊ] மான்டெஸ்கியூ

விடைகள்:

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. ஜேம்ஸ்டவுன், 2. லஃபாயெட், 3. மனிதன் மற்றும் குடிமகன் உரிமைகள் பற்றிய பிரகடனம், 4. சாரடோகா, 5. வெர்செயில்ஸ், 6. வால்மி, 7. வால்டேர், 8. ஜெரோண்டியர், 9. 1783, 10. இயல்பறிவு

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. பெஞ்சமின் பிராங்கிளின், 2. 1775, ஜூன் 17, 3. செலவாணிச், 4. மிரபு, 5. ஹெர்பர்ட், 6. வெர்னே

III. பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. i மற்றும் iv சரியானவை, 2. i மற்றும் ii சரியானவை, 3. கூற்று சரி, காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும், 4. கூற்று சரி, காரணம் தவறு

IV. பொருத்துக:

1. ஈ, 2. அ, 3. ஊ, 4. உ, 5. இ, 6. ஆ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!