Book Back QuestionsTnpsc

புவிப்படங்களைக் கற்றறிதல் Book Back Questions 8th Social Science Lesson 16

8th Social Science Lesson 16

16] புவிப்படங்களைக் கற்றறிதல்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

புவிப்படங்களைக் கற்றறிதல் மற்றும் புவிப்பட உருவாக்க நுணுக்கங்கள் பற்றி விளக்கும் பாடப் பிரிவு புவிப்படவியல் எனப்படும். இது புவிப்பட உருவாக்குதலின் அறிவியல் சார்ந்த ஒரு கலை நுட்பமாகும்.

“கெடஸ்ட்ரல” எனும் வார்த்தை ஃப்ரெஞ்ச் மொழியிலுள்ள “கெடஸ்டர்” எனும் சொல்லிலிருந்து பெறப்பட்டது. இதன் பொருள் “பிராந்திய சொத்துகளின் பதிவேடு” என்பதாகும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. புவிப்பட தயாரிப்பு முறை குறித்து கையாளும் பாடப்பிரிவு ___________ ஆகும்.

(அ) மக்களியல்

(ஆ) புவிப்படவியல்

(இ) இயற்கையமைப்பு

(ஈ) இடவியல்

2. ஒரு பகுதியின் இயற்கையம்சங்களைக் காட்டும் புவிப் படம் ____________

(அ) நிலக்கானி படங்கள்

(ஆ) நிலத்தோற்ற புவிப்படம்

(இ) கால நிலையியல் புவிப்படம்

(ஈ) மூலாதார புவிப்படம்

3. ஆழம் குறைந்த நீர்ப் பகுதிகள் ____________ வண்ணம் மூலம் குறிப்பிடப்படுகிறது.

(அ) மஞ்சள்

(ஆ) பழுப்பு

(இ) வெளிர் நீலம்

(ஈ) அடர் நீலம்

4. பிளான்கள் என்று அழைக்கப்படும் புவிப்படங்கள் ____________ ஆகும்.

(அ) நிலக்கானி புவிப்படங்கள்

(ஆ) தலப்படங்கள்

(இ) சம அளவுக்கோட்டுப் படங்கள்

(ஈ) போக்குவரத்துப் படங்கள்

5. மக்கட்தொகை பரவலை ___________ மூலம் காண்பிக்கலாம்.

(அ) கோடுகள்

(ஆ) வண்ணங்கள்

(இ) புள்ளிகள்

(ஈ) சம அளவுக்கோடுகள்

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. புவிக்கோள மாதிரி என்பது __________ ன் உண்மையான உருவ மாதிரியாக்கமாகும்.

2. புவியின் கோள வடிவத்தை ஒரு சமதளப்பரப்பில் வரையப்படும் முறை __________ எனப்படும்.

3. சம அளவு உயரமுள்ள இடங்களை இணைக்கும் கோடு ___________

4. காணிப்படங்கள் பொதுவாக _________ ஆல் பராமரிக்கப்படுகின்றன.

5. ___________ புவிப்படங்கள் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன.

பொருத்துக:

i. புவிப்பட விளக்கம் – 1. 45o

ii. வடகிழக்கு – 2. பழுப்பு நிறம்

iii. சம உயரக்கோடு – 3. கருத்துப்படங்கள்

iv. காணிப்படங்கள் – 4. புவிப்படத்தின் திறவுகோல்

v. நிழற்பட்டைப் படம் – 5. வரி விதிப்பு

(அ) 3 5 1 4 2

(ஆ) 4 1 2 5 3

(இ) 2 5 1 3 4

(ஈ) 5 2 4 1 3

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. கூற்று: சிறிய அளவைப் புவிப்படங்களில் பிரதான தோற்றங்களை மட்டுமே காண்பிக்கப்படுகின்றன.

காரணம்: குறைந்த அளவு இடமே உள்ளதால், பெரிய பரப்பிலான கண்டங்கள் மற்றும் நாடுகள் போன்றவற்றை மட்டுமே காண்பிக்க இயலும்.

(அ) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு

(ஆ) கூற்று தவறு, காரணம் சரி

(இ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி

(ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு

2. கூற்று: மரபுக் குறியீடுகளும், சின்னங்களும் வரைபடத்தின் திறவுகோல் ஆகும்.

காரணம்: இவை குறைந்த அளவிலான படத்தில் அதிக விவரங்களைத் தருகின்றன.

(அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி

(ஆ) கூற்று தவறு, ஆனால் காரணம் சரி

(இ) கூற்று சரி, காரணம் தவறு

(ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. புவிப்படவியல் 2. நிலத்தோற்ற புவிப்படம் 3. வெளிர் நீலம்

4. நிலக்கனிய புவிப்படங்கள் 5. வண்ணங்கள்

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. புவியின் 2. வரைபட கோட்டுச் சட்டம் 3. சம அளவுக் கோடு 4. அரசாங்கம்

5. கருத்துப்

பொருத்துக: (விடைகள்)

1. புவிப்பட விளக்கம் – வரி விதிப்பு

2. வடகிழக்கு – 450

3. சம உயரக்கோடு – பழுப்பு நிறம்

4. காணிப்படங்கள் – வரி விதிப்பு

5. நிழற்பட்டைப் படம் – கருத்துப்படங்கள்

சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்: (விடைகள்)

1. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி

2. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!