Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Book Back QuestionsTnpsc

புவியின் உள்ளமைப்பு Book Back Questions 7th Social Science Lesson 5

7th Social Science Lesson 5

5] புவியின் உள்ளமைப்பு

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

பூமி ஒரு நீல நிறக் கோள். 71% பூமியின் பரப்பு நீரால் சூழப்பட்டுள்ளது.

புவியின் கொள்ளளவில் புவி மேலோடு 1%, கவசம் 84%, மீதமுள்ள 15% புவிக்கருவையும் கொண்டுள்ளது. புவியின் சுற்றளவு 6371 கி. மீ ஆகும்.

மென் பாறைக் கோளம்: புவி மேலோட்டிற்கும் கவச மேலடுக்கிற்கும் இடையே உள்ள பகுதியே மென் பாறைக் கோளம் ஆகும்.

2. 0 அளவை அல்லது அதற்கு குறைவான ஆற்றல் செறிவினை உணர்வது அரிது. 5. 0 மேல் அதிர்வு அலைகள் ஏற்படும் போதுதான் நிலம் பிளந்து வீழ்வது ஏற்படுகின்றது. 6. 0 அல்லது அதற்கு மேற்பட்ட அளவு அதிக வலிமையானது எனவும், 7. 0க்கு மேல் அதிர்வு அலைகள் ஏற்படும்போது பெரும் சேதம் விளைவிக்கும் நிலநடுக்கம் ஏற்படுகின்றது.

மூன்று வகையான நில அலைகள்: (1) P அலைகள் (அல்லது) அழுத்த அலைகள், (2) S அலைகள் (அல்லது) முறிவு அலைகள், (3) L அலைகள் (அல்லது) மேற்பரப்பு அலைகள்.

இந்தியப் பெருங்கடலில் 26 டிசம்பர் 2004 அன்று ஏற்பட்ட சுனாமி, இந்தோனேஷியா, இந்தியா, இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகளின் கடலோரப் பகுதிகளை அழித்து கடலுக்குள் கொண்டு சென்றது. இது மனித உயிருக்கும் உடமைகளுக்கும் மிகப் பெருத்த சேதத்தை உண்டாக்கியது.

எரிமலைகள் பற்றிய அறிவியல் பூர்வமான ஆய்வுகளை எரிமலை ஆய்வியல் (Volcanology) என அழைக்கின்றனர். ஆய்வு மேற்கொள்ளும் வல்லுநர்கள் எரிமலை ஆய்வியலாளர்கள் (Volcanologist) என அழைக்கப்படுகின்றனர்.

அந்தமானிலுள்ள பேரென்தீவு (Barren Island) அதன் தலைநகரிலிருந்து 135 கி. மீட்டர் கிழக்கே அமைந்துள்ளது. சுமத்ராவிலிருந்து மியான்மர் வரை உள்ள நெருப்பு வளையத்தினுள் இருக்கும் ஒரு செயல்படும் எரிமலை இதுவே ஆகும். கடைசியாக 2017ம் ஆண்டில் இது எரிமலை குழம்பை வெடித்து வெளியேற்றியது.

ஸ்ட்ராம்போலி எரிமலை மத்திய தரைக் கடலின் கலங்கரை விளக்கம் என அழைக்கப்படுகிறது.

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. நைஃப் ————–ஆல் உருவாக்கப்பட்டது.

(அ) நிக்கல் மற்றும் ஃபெர்ரஸ்

(ஆ) சிலிக்கா மற்றும் அலுமினியம்

(இ) சிலக்கா மற்றும் மெக்னீசியம்

(ஈ) இரும்பு மற்றும் மெக்னீசியம்

2. நில நடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்பு —————– நுனியின் அருகில் ஏற்படுகின்றது.

(அ) மலை

(ஆ) சமவெளிகள்

(இ) தட்டுகள்

(ஈ) பீடபூமிகள்

3. நில நடுக்கத்தின் ஆற்றல் செறிவின் அளவினை —————– மூலம் அளக்கலாம்.

(அ) சீஸ்மோகிராஃப்

(ஆ) ரிக்டர் அளவு கோல்

(இ) அம்மீட்டர்

(ஈ) ரோட்டோ மீட்டர்

4. பாறைக் குழம்பு வெளியேறும் குறுகலான குழாயை ————— என்று அழைக்கிறோம்.

(அ) எரிமலைத் துளை

(ஆ) எரிமலைப் பள்ளம்

(இ) நிலநடுக்க மையம்

(ஈ) எரிமலை வாய்

5. எரிமலைக் குழம்பு கூம்புகள் ———— ஆகும்.

(அ) மலைகளின் குவியல்

(ஆ) மலைகளின் உருக்குலைவு

(இ) எஞ்சியமலைகள்

(ஈ) மடிப்பு மலைகள்

6. எரிமலைக் குழம்பு மலைகளின் கூம்பில் உள்ள அழுத்தத்திற்கு ————– என்று பெயர்.

(அ) எரிமலைப் பள்ளம்

(ஆ) லோப்போலித்

(இ) எரிமலைக் கொப்பரை

(ஈ) சில்

7. —————— பகுதி நெருப்பு வளையம் என்று அழைக்கப்படுகிறது.

(அ) பசிபிக்

(ஆ) அட்லாண்டிக்

(இ) ஆர்க்டிக்

(ஈ) அண்டார்ட்டிக்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. புவிக்கருவிற்கும் கவசத்திற்கும் இடையே அமையும் எல்லைக்கோடு —————- என்று அழைக்கப்படுகிறது.

2. நில நடுக்க அலைகளைப் பதிவு செய்யும் கருவியின் பெயர் —————- ஆகும்.

3. பாறைக் குழம்பு வெளியேறி அது பரவிக்கிடக்கும் பகுதி ————— என்று அழைக்கப்படுகிறது.

4. செயல்படும் எரிமலைக்கு உதாரணம் ————– ஆகும்.

5. எரிமலைகளின் அறிவியல் பூர்வமான ஆய்வுகளை —————– என அழைக்கின்றனர்.

III. பொருந்தாததை வட்டமிடுக:

1. மேலோடு, மாக்மா, புவிக்கரு, கவசம்.

2. நில நடுக்க மையம், நில நடுக்க மேல் மையப்புள்ளி, எரிமலைவாய், சிஸ்மிக் அலைகள்.

3. உத்தரகாசி, சாமோலி, கெய்னா, கரக்கட்டாவோ.

4. லாவா, எரிமலைவாய், சிலிக்கா, எரிமலை பள்ளம்.

5. ஸ்ட்ராம்போலி, ஹெலென், ஹவாய், பூயூஜியாமா.

IV. பொருத்துக:

1. நில நடுக்கம் – அ) ஜப்பானிய சொல்

2. சிமா – ஆ) ஆப்பிரிக்கா

3. பசிபிக் நெருப்பு வளையம் – இ) திடீர் அதிர்வு

4. சுனாமி – ஈ) சிலிமா மற்றும் மக்னீசியம்

5. கென்யா மலை -உ) உலக எரிமலைகள்

V. பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. கூற்று: பூமியின் உருவத்தை ஒரு ஆப்பிளோடு கூட ஒப்பிடலாம்.

காரணம்: புவியின் உட்பகுதி மேலோடு மெல்லிய புறத்தோல், புவிக்கரு ஆகியவற்றைக் கொண்டது.

(அ) கூற்றும் காரணமும் சரி கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது

(ஆ) கூற்றும் காரணமும் சரி ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை

(இ) கூற்று சரி காரணம் தவறு

(ஈ) கூற்றும் காரணமும் தவறானவை

2. கூற்று: உலகின் மூன்றில் இரண்டு பங்கு எரிமலைகள் பசிபிக் கடலில் உள்ளது.

காரணம்: பசிபிக் கடலின் மேற்கு மற்றும் கிழக்குக் கடற்கரைப் பகுதியை பசிபிக் நெருப்பு வளையம் என அழைக்கிறோம்.

(அ) கூற்றும் காரணமும் சரி கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது

(ஆ) கூற்றும் காரணமும் சரி ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை

(இ) கூற்று தவறு காரணம் சரி

(ஈ) கூற்றும் காரணமும் தவறானவை

விடைகள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. நிக்கல் மற்றும் ஃபெர்ரஸ், 2. தட்டுகள், 3. ரிக்டர் அளவு கோல், 4. எரிமலைத் துளை, 5. மலைகளின் குவியல், 6. எரிமலைப் பள்ளம், 7. பசிபிக்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. வெய்ச்சார்ட் குட்டன்பெர்க், 2. நில அதிர்வு மானி, 3. பீடபூமி, 4. ஸ்ட்ராம்போலி, 5. எரிமலை ஆய்வியல்

III. பொருந்தாததை வட்டமிடுக:

1. மாக்மா, 2. எரிமலைவாய், 3. கரக்கட்டாவோ, 4. சிலிக்கா, 5. பூயூஜியாமா.

IV. பொருத்துக:

1. இ, 2. ஈ, 3. உ, 4. அ, 5. ஆ

V. பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. கூற்றும் காரணமும் சரி ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை, 2. கூற்றும் காரணமும் சரி கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!