Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Book Back QuestionsTnpsc

பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்தனர் Book Back Questions 6th Social Science Lesson 18

6th Social Science Lesson 18

18] பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்தனர்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

லிச்சாவி பழமையான கன சங்கங்களில் ஒன்றாகும். அதனுடைய ஆட்சிப் பகுதி கங்கை நதிக்கும் நேபாள நாட்டிற்கும் இடைப்பட்டதாக இருந்தது.

பிரசஸ்தி/மெய்க்கீர்த்தி: பிரசஸ்தி என்பது ஒரு சமஸ்கிருதச் சொல். அதன் பொருள் ஒருவரைப் பாராட்டிப் “புகழ்வதாகும்”. அவைக்களப் புலவர்கள் அரசர்களைப் புகழ்ந்து பாடி அவர் தம் சாதனைகளைப் பட்டியலிட்டனர். இவை பின்னர் மக்கள் படித்துத் தெரிந்து கொள்வதற்காகத் தூண்களில் பொறிக்கப்பட்டன.

சமுத்திரகுப்தர் ஒரு விஷ்ணு பக்தராவார். போர்களில் வெற்றி பெற்றதன் நினைவாக நடத்தப்படும் வேதகாலச் சடங்கான குதிரைகளைப் பலியிடும் வேள்வியைச் சமுத்திர குப்தர் மீண்டும் நடைமுறைப்படுத்தினார். அவர் தங்க நாணயங்களை வெளியிட்டார். அவற்றுள் ஒன்றில் அவர் வீணை வாசிப்பது போன்ற உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. அவர் மிகச் சிறந்த படையெடுப்பாளர் மட்டுமல்ல; கவிதைப் பிரியரும் இசைப் பிரியருமாவார். அதனால் “கவிராஜா” எனும் பட்டம் பெற்றார்.

இலங்கையைச் சேர்ந்த ஸ்ரீ மேகவர்மன் எனும் பௌத்த அரசன் சமுத்திர குப்தரின் சமகாலத்தவராவார்.

இரண்டாம் சந்திரகுப்தரின் பட்டப் பெயர்கள்: விக்கிரமாதித்தியர், நரேந்திர சந்திரர், சிம்ம சந்திரர், நரேந்திர சிம்மர், விக்கிரம தேவராஜர், தேவ குப்தர், தேவஸ்ரீ.

பாகியான்: இரண்டாம் சந்திர குப்தரின் ஆட்சிக் காலத்தில், சீனாவைச் சேர்ந்த பௌத்தத் துறவி பாகியான் இந்தியாவிற்கு வந்தார். அவருடைய பயணக் குறிப்புகள் குப்தர் காலத்து மக்களின் சமூக-பொருளாதார, மத, ஒழுக்க நிலைகள் பற்றிய செய்திகளை நமக்கு வழங்குகின்றன. பாகியான் கூற்றுப்படி மகதத்து மக்கள் மகிழ்ச்சியோடும் செழிப்போடும் வாழ்ந்தனர். கடுமையான தண்டனையின்றி நீதி வழங்கப்பட்டது. மரண தண்டனை வழங்கப்படவில்லை. கயா பாழடைந்திருந்தது. கபிலவஸ்து காடாகியிருந்தது. ஆனால் பாடலிபுத்திரத்தில் மக்கள் செல்வத்தோடும் செழிப்போடும் வாழ்ந்தனர்.

நாளந்தா பல்கலைக்கழகம்: நாளந்தா பல்கலைக்கழகம் ஐந்தாம் மற்றும் ஆறாம் நூற்றாண்டுகளில் குப்தப் பேரரசின் ஆதரவில் தழைத்தோங்கியது. பின்னர் கன்னோசியைச் சேர்ந்த பேரரசர் ஹர்ஷரின் ஆதரவில் சிறப்புற்றது. நாளந்தாவில் பௌத்தத் தத்துவமே முக்கியப் பாடப்பிரிவாக இருந்தது. யோகா, வேத இலக்கியங்கள், மருத்துவம் ஆகியவையும் கற்பிக்கப்பட்டன. அப்பல்கலைக்கழகத்தில் யுவான்-சுவாங் பௌத்த தத்துவத்தைப் பற்றிப் படிப்பதில் பல ஆண்டுகள் செலவழித்தார். அந்த வளாகத்தில் எட்டு மகாபாடசாலைகளும் மூன்று மிகப்பெரிய நூலகங்களும் இருந்தன. நாளந்தா பல்கலைக்கழகம் பக்தியார் கில்ஜி என்பாரின் தலைமையில் வந்த மம்லுக்குகள் என அழைக்கப்பட்ட துருக்கிய இஸ்லாமிய அடிமை வீரர்களால் அழித்துத் தரைமட்டம் ஆக்கப்பட்டது. நாளந்தா யுனெஸ்கோவின் உலகப்பாரம்பரியச் சின்னமாகும்.

ஹீணர்கள் என்போர் யாவர்? ஹீணர்கள் என்போர் நாடோடிப் பழங்குடியினராவர். தங்கள் மாபெரும் தலைவர் அட்டில்லாவின் தலைமையில் இவர்கள் ரோமாபுரியையும் கான்ஸ்டாண்டி நோபிளையும் பேரச்சத்திற்கு உள்ளாக்கினர். இவர்களோடு தொடர்புடைய வெள்ளை ஹீணர்கள் மத்திய ஆசியா வழியாக இந்தியா வந்தனர். தங்கள் தொடர் படையெடுப்புகளின் மூலமாக எல்லையோர நாடுகளுக்குத் தொந்தரவு கொடுத்து வந்தனர். ஸ்கந்த குப்தரைத் தோற்கடித்த பின்னர் இவர்கள் மத்திய இந்தியப் பகுதிகளில் பரவினர். அவர்களின் தலைவரான தோரமானர் தனக்குத் தானே அரசராக முடி சூட்டிக் கொண்டார். அவருக்குப் பின்னர் அவரது மகன் மிகிரகுலர் ஆட்சி செய்தார். முடிவில், மத்திய இந்தியாவில் மாளவத்தை ஆட்சி செய்து வந்த யசோதர்மன் அவர்களைத் தோற்கடித்து அவர்களின் ஆட்சிக்கு முடிவு கட்டினார்.

குப்தர்களால் பயன்படுத்தப்பட்ட உலோகங்கள்: இரும்பு, தங்கம், தாமிரம், தகரம், ஈயம், பித்தளை, செம்பு, மணி வெண்கலம், மைக்கா, மாங்கனீசு, சிகப்புச் சுண்ணம் ஆகியவையாகும்.

குப்தர்களின் நாணய அமைப்பு முறையை அறிமுகப்படுத்தியவர் சமுத்திர குப்தர் ஆவார். குஷாணர்களின் நாணயங்கள் சமுத்திர குப்தருக்கு உந்துதலை வழங்கின. குப்தர்களின் பொற்காசுகள் தினாரா என்றழைக்கப்பட்டன. குப்தர்கள் வெளியிட்ட பொற்காசுகளை விட வெள்ளி, செப்புக் காசுகள் குறைவாகவே வெளியிடப்பட்டன. குப்தர்களுக்கு அடுத்து வந்த காலத்தில் பொற்காசுகளின் சுழற்சியில் வீழ்ச்சி ஏற்பட்டது. அது பேரரசினுடைய வளங்களின் வீழ்ச்சியைச் சுட்டிக் காட்டுவதாய் உள்ளது.

ஹர்ஷர் சீனப்பயணி யுவான் சுவாங்கை முதன்முதலாக ராஜ்மகாலுக்கு (ஜார்கண்ட்) அருகேயுள்ள கஜன்கலா என்ற இடத்தில் சந்தித்தார்.

“புனித யாத்ரீகர்களின் இளவரசன்” என்றழைக்கப்படும் யுவான் சுவாங், ஹர்ஷரின் ஆட்சியின் போது இந்தியாவுக்கு வந்தார். சி-யூ-கி எனும் அவரது பயணக் குறிப்புகள் அடங்கிய ஆவணங்களின் தொகுப்பு, ஹர்ஷர் காலத்து இந்தியாவின் சமூக பொருளாதார, மத, பண்பாட்டு நிலைகள் குறித்து விரிவான செய்திகளை வழங்குகிறது. ஹர்ஷர் ஒரு பௌத்தராக இருந்த போதும், பிரயாகையில் நடைபெற்ற மாபெரும் கும்பமேளா விழாவில் கலந்து கொள்ளச் சென்றார் என்று யுவான் சுவாங் குறிப்பிட்டுள்ளார்.

கன்னோசி பௌத்தப் பேரவையில் 20 அரசர்கள் பங்கேற்றனர். பெரும் எண்ணிக்கையில் பௌத்த, சமண, வேத அறிஞர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர். பௌத்த மடாலயம் ஒன்றில் புத்தரின் தங்கச் சிலையொன்று நிறுவப்பட்டது. புத்தரது மூன்றடி உயரம் கொண்ட வேறொரு சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. பிரயாகைப் பேரவையில் ஹர்ஷர் தனது செல்வங்களைப் பௌத்தத் துறவிகளுக்கும் வேத வித்தகர்களுக்கும் ஏழைகளுக்கும் கொடையாக விநியோகித்தார். நான்கு நாட்கள் நடைபெற்ற அந்த நிகழ்வில் அனைத்து நாட்களிலும் அவர் பௌத்தத் துறவிகளுக்கு, அளவிட முடியாத பரிசுகளை அள்ளிக் கொடுத்தார்.

உலகம் அந்நாளில்: முதலாம் சந்திர குப்தர், கான்ஸ்டாண்டி நோபிள் நகரை உருவாக்கிய ரோமானியப் பேரரசர் மகா கான்ஸ்டன்டைனின் சமகாலத்தவர் ஆவார். ஹர்ஷரின் காலப்பகுதி சீனாவின் தாங் அரச வம்சத்தின் தொடக்க காலப் பகுதியோடு இணைந்து செல்கிறது. சீனர்களின் தலைநகரான சியான் (Xi-an) மாபெரும் கலை மற்றும் கல்விக்கான மையமாகத் திகழ்ந்தது.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. குப்த வம்சத்தை நிறுவியவர் __________ ஆவார்.

(அ) முதலாம் சந்திர குப்தர்

(ஆ) ஸ்ரீ குப்தர்

(இ) விஷ்ணு கோபர்

(ஈ) விஷ்ணு குப்தர்

2. பிரயாகை மெய்கீர்த்தியை இயற்றியவர் ___________ ஆவார்.

(அ) காளிதாசர்

(ஆ) அமர சிம்மர்

(இ) ஹரிசேனர்

(ஈ) தன்வந்திரி

3. சந்திர குப்தரால் நிறுவப்பட்ட ஒற்றை இரும்புத் தூண் ____________ என்ற இடத்தில் உள்ளது.

(அ) மெக்ராலி

(ஆ) பிதாரி

(இ) கத்வா

(ஈ) மதுரா

4. அறுவைச் சிகிச்சைச் செயல்முறை குறித்து விளக்கிய முதல் இந்தியர் ____________

(அ) சரகர்

(ஆ) சுஸ்ருதர்

(இ) தன்வந்திரி

(ஈ) அக்னிவாசர்

5. வங்காளத்தின் கௌட அரசர் ____________

(அ) சசாங்கர்

(ஆ) மைத்திரகர்

(இ) ராஜவர்த்தனர்

(ஈ) இரண்டாம் புலிகேசி

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. கூற்று: வட இந்தியாவில் பல சிறிய நாடுகளைக் கைப்பற்றிய பின்னர், முதலாம் சந்திர குப்தர் ஒரு பெரிய நாட்டின் முடியரசராகத் தனக்குத் தானே முடி சூட்டிக் கொண்டார்.

காரணம்: முதலாம் சந்திர குப்தர் லிச்சாவி குடும்பத்தைச் சேர்ந்த குமார தேவியை மணமுடித்தார்.

(அ) காரணமும் கூற்றும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே

(ஆ) காரணமும் கூற்றும் சரி, ஆனால் காரணம்

(ஆ) காரணமும் கூற்றும் சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல

(இ) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு

(ஈ) கூற்று தவறு, ஆனால் காரணம் சரி

2. கூற்று 1: தென்னிந்திய அரசர்களோடு இரண்டாம் சந்திர குப்தர் சுமுகமான உறவைக் கொண்டிருக்கவில்லை.

கூற்று 2: குப்தர்கள் தெய்வீக உரிமைக் கோட்பாட்டினைப் பின்பற்றினர்.

(அ) முதலாம் கூற்று தவறு, ஆனால் இரண்டாம் கூற்று சரி

(ஆ) இரண்டாம் கூற்று தவறு, ஆனால் முதல் கூற்று சரி

(இ) இரண்டு கூற்றுகளும் சரி

(ஈ) இரண்டு கூற்றுகளும் தவறு

3. கீழ்க்காண்பனவற்றில் கால வரிசைப்படி அமைந்துள்ளது எது?

(அ) ஸ்ரீகுப்தர் – முதலாம் சந்திர குப்தர் – சமுத்திர குப்தர் – விக்கிரமாதித்யர்

(ஆ) முதலாம் சந்திர குப்தர் – விக்கிரமாதித்யர் – ஸ்ரீ குப்தர் – சமுத்திர குப்தர்

(இ) ஸ்ரீ குப்தர் – சமுத்திர குப்தர் – விக்கிரமாதித்யர் – முதலாம் சந்திர குப்தர்

(ஈ) விக்கிரமாதித்யர் – ஸ்ரீகுப்தர் – சமுத்திர குப்தர் – முதலாம் சந்திரகுப்தர்

4. கீழ்க்காணும் கூற்றுகளைச் சிந்திக்கவும். அவற்றில் எது/எவை சரியானது/சரியானவை என்பதைக் கண்டறியவும்.

1. அதிக வட்டிக்குப் பணத்தைக் கடன் வழங்கும் முறை பழக்கத்தில் இருந்தது.

2. மட்பாண்டம் செய்தலும் சுரங்கம் தோண்டுவதும் செழித்தோங்கிய தொழில்களாக இருந்தன.

(அ) 1 மட்டும் சரி

(ஆ) 2 மட்டும் சரி

(இ) 1 மற்றும் 2 ஆகிய இரண்டுமே சரி

(ஈ) 1 மற்றும் 2 ஆகிய இரண்டுமே தவறு

5. பொருந்தாததை வட்டமிடுக:

1. காளிதாசர், ஹரிசேனர், சமுத்திரகுப்தர், சரகர்.

2. ரத்னாவளி, ஹர்சசரிதா, நாகநந்தா, பிரியதர்சிகா.

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. இலங்கை அரசர் ___________ சமுத்திர குப்தரின் சமகாலத்தவர் ஆவார்.

2. இரண்டாம் சந்திர குப்தரின் ஆட்சியின் போது சீனாவைச் சேர்ந்த பௌத்தத் துறவி ___________ இந்தியாவிற்கு வந்தார்.

3. ___________ படையெடுப்பு குப்தர்களின் வீழ்ச்சிக்கு வழிகோலியது.

4. ___________ அரசாங்கத்தின் முக்கிய வருவாயாக இருந்தது.

5. குப்தர்களின் அலுவலக மொழி ___________

6. பல்லவ அரசர் ___________ சமுத்திர குப்தரால் தோற்கடிக்கப்பட்டார்.

7. வர்த்தன அரச வம்சத்தின் புகழ்பெற்ற அரசர் ___________ ஆவார்.

8. ஹர்ஷர் தலைநகரை __________ லிருந்து கன்னோசிக்கு மாற்றினார்.

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக:

1. தன்வந்திரி மருத்துவத்துறையில் ஒரு புகழ்பெற்ற அறிஞராக திகழ்ந்தார்.

2. குப்தர்களின் காலத்தில் கட்டப்பட்ட கட்டுமானக் கோவில்கள் இந்தோ-ஆரிய பாணியை ஒத்துள்ளன.

3. குப்தர்களின் ஆட்சிக்காலத்தில் உடன்கட்டை ஏறும் பழக்கம் இல்லை.

4. ஹர்ஷர் ஹீனயான பௌத்த பிரிவைச் சேர்ந்தவர்.

5. ஹர்ஷர் அவருடைய மத சகிப்புத் தன்மையின்மைக்காகப் பெயர் பெற்றவர்.

பொருத்துக:

அ)

அ. மிகிரகுலா – 1. வானியல்

ஆ. ஆரியபட்டர் – 2. குமாரகுப்தர்

இ. ஓவியம் – 3. ஸ்கந்தகுப்தர்

ஈ. நாளந்தா பல்கலைக்கழகம் – 4. இடம் விட்டு இடம் செல்லும் வணிகர்கள்

உ. சார்த்தவாகர்கள் – 5. பாக்

(அ) 1, 2, 4, 3, 5

(ஆ) 2, 4, 1, 3, 5

(இ) 3, 1, 5, 2, 4

(ஈ) 3, 2, 1, 4, 5

ஆ)

அ. பாணர் – 1. 10, 000 மாணவர்கள்

ஆ. ஹர்ஷர் – 2. பிரயாகை

இ. நாளந்தா பல்கலைக்கழகம் – 3. ஹர்ஷ சரிதம்

ஈ. யுவான் சுவாங் – 4. ரத்னாவளி

உ. பௌத்த சபை – 5. சி-யூ-கி

(அ) 4, 3, 2, 1, 5

(ஆ) 5, 2, 1, 3, 4

(இ) 3, 5, 1, 2, 4

(ஈ) 2, 1, 3, 4, 5

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. ஸ்ரீ குப்தர் 2. ஹரிசேனர் 3. மெக்ராலி

4. சுஸ்ருதர் 5. சசாங்கர்

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றைத் தேர்வு செய்க: (விடைகள்)

1. காரணமும் கூற்றும் சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.

2. முதலாம் கூற்று தவறு, ஆனால் இரண்டாம் கூற்று சரி

3. ஸ்ரீ குப்தர் – முதலாம் சந்திரகுப்தர் – சமுத்திரகுப்தர் – விக்கிரமாதித்யர்

4. (1 மட்டும் சரி)

5. பொருந்தாததை வட்டமிடுக: (விடைகள்)

(i) சமுத்திரகுப்தர் (ii) ஹர்சசரிதா

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. ஸ்ரீ மேகவர்மன் 2. பாகியான் 3. ஹீனர்கள் 4. நிலவரி

5. சமஸ்கிருதம்

6. விஷ்னுகோபன் 7. ஹர்ஷவர்தன் 8. தானேஸ்வரம்

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: (விடைகள்)

1. சரி

2. தவறு

சரியான விடை: குப்தர்களின் காலத்தில் கட்டப்பட்ட கட்டுமானக் கோவில்கள் திராவிட பாணியை ஒத்துள்ளன.

3. தவறு

சரியான விடை: குப்தர்களின் ஆட்சிக்காலத்தில் உடன்கட்டை ஏறும் பழக்கம் இருந்தது.

4. தவறு

சரியான விடை: ஹர்ஷர் மகாயான பௌத்த பிரிவைச் சேர்ந்தவர்.

5. சரி

பொருத்துக: (விடைகள்)

(அ).

1. மிகிரகுலா – ஸ்கந்தகுப்தர்

2. ஆரியபட்டர் – வானியல்

3. ஓவியம் – பாக்

4. நாளந்தா பல்கலைக்கழகம் – குமாரகுப்தர்

5. சார்த்தவாகர்கள் – இடம் விட்டு இடம் செல்லும் வணிகர்கள்

(ஆ).

1. பாணர் – ஹர்ஷ சரிதம்

2. ஹர்ஷர் – ரத்னாவளி

3. நாளந்தா பல்கலைக்கழகம் – 10000 மாணவர்கள்

4. யுவான் சுவாங் – சி-யூ-கி

5. பௌத்த சபை – பிரயாகை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!