Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Book Back QuestionsTnpsc

பொருளாதார உயிரியல் Book Back Questions 9th Science Lesson 23

9th Science Lesson 23

23] பொருளாதார உயிரியல்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

உழவன் செயலி: தமிழ்நாடு அரசு உழவன் செயலி என்ற கைபேசி பயன்பாட்டுச் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் அரசு வழங்கும் விவசாய மானியங்கள், விவசாய உபகரணங்கள், பயிர்க் காப்பீட்டுத் தகவல்கள் மற்றும் காலநிலை ஆகியவை பற்றிய தகவல்களைப் பெறமுடியும். மேலும் அரசு மற்றும் தனியார் நிலையங்களில் உள்ள விதை மற்றும் உரங்களின் கையிருப்பைப் பற்றிய தகவல்களையும் வழங்குகின்றது.

பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டம் (PMFBY): இது இந்திய நடுவண் அரசின் வேளாண் பயிர்க் காப்பீட்டுத் திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் மத்திய அரசு விவசாயிகளுக்கு நிதி உதவியும், பயிர்க் காப்பீடும் வழங்குகின்றது. இது 2016ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18ஆம் நாள் அறிமுகப்படுத்தப்பட்டது.

உயிரி உரத்திட்டம்: இத்திட்டம் தமிழ்நாடு அரசால் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இயற்கை விவசாயத்தை முறையாக நிர்வகிப்பதும், மண் வளத்தை அதிகரிப்பதற்கு உதவி செய்வதும் இதன் நோக்கமாகும்.

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் கழகம் (CSIR), தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனம் (NBRI) மற்றும் மருத்துவ, நறுமணத் தாவரங்களுக்கான மத்திய நிறுவனம் (CIMAP) ஆகியவை கூட்டாக இணைந்து BGR – 34 எனப்படும் நீரழிவு ஆயுர்வேத தடுப்பு மருந்தை (BGR – Blood Glucose Regulator) அறிமுகப்படுத்தியுள்ளன. இது 34 வகையான தாவர மூலிகை வளங்களை அங்கமாகக் கொண்டது. இது இரத்த அழுத்தத்தைக் கட்டுபடுத்துகின்றது.

தமிழகத்தை தாயகமாகக் கொண்ட இழுவை மாடுகள்:

காங்கேயம்: இவை காங்கேயத்தில் உருவாகியவை. தாராபுரம், பெருந்துறை, ஈரோடு, பவானி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் காணப்படுகின்றன.

புலிக்குளம் மாடுகள்: இவ்வின மாடுகள் தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்திலுள்ள கம்பம் பள்ளத்தாக்குகளில் பொதுவாகக் காணப்படுகின்றன. இவை ஜல்லிக்கட்டு மாடு எனவும் அழைக்கப்படுகின்றன. நிலத்தினை உரமேற்றவும், உழவு செய்யவும் இவ்வகை மாட்டினங்கள் அதிகம் பயன்படுகின்றன.

முனைவர் வர்கீஸ் குரியன் என்பவரால் தேசிய பால் பண்ணை வளர்ச்சிக் கழகமானது (NDDB) உருவாக்கப்பட்டது. எனவே, அவர் நவீன இந்தியாவின் பால் பண்ணைத் தொழில் சிற்பி என்றும், வெண்மைப் புரட்சியின் தந்தை என்றும் அழைக்கப்படுகிறார். NDDB என்ற அமைப்பானது, உலகின் மிகப்பெரிய பால் பண்ணை மேம்பாட்டுத் திட்டமான Operation Flood என்ற திட்டத்தை செயல்படுத்தியது.

கடலிலும், உள் நன்னீர் இடங்களிலும் (ஏரி, குளங்கள், ஆறுகள்) மற்றும் கடலோர நீர் வாழ் உயிரிகள் வளர்ப்பு நிலைகளிலும் அதிகமான மீன் வளங்களைக் கொண்டுள்ள முன்னோடி மாநிலமாக நமது தமிழ்நாடு விளங்குகிறது. மாநிலத்தின் கடல்வாழ் மீன்களின் வளமானது 0.719 மில்லியன் டன் அளவாக (மில்லியன் டன் – 10 லட்சம் கிலோ) உள்ளது. அதைப்போலவே நன்னீர் மீன் வளர்ப்பானது 4.5 லட்சம் மெட்ரிக் டன்கள் (மெட்ரிக் டன் – 1000 கிலோகிராம்) அளவாக இருக்கிறது. கடலோர மீன் வளர்ப்பில் தமிழ்நாடானது பிற கடலோர மாநிலங்களை ஒப்பிடும் போது 6வது இடத்தில் உள்ளது.

1947ஆம் ஆண்டு கேரளா மாநிலத்திலுள்ள கொச்சின் என்ற இடத்தில் மத்திய கடல்சார் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிறுவனமானது (The Central Marine Fisheries Reasearch Institute – CMFRI) நிறுவப்பட்டது. இந்நிறுவனமானது கடல் மீன் வளர்ப்பு நிலையங்கள், வகைப்பாட்டியல் மற்றும் உயிரிகளின் பொருளாதாரப் பண்புகளை ஆராய்ச்சி செய்தல் போன்ற செயல்களில் அதிக கவனம் செலுத்துகின்றது.

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு 1987ம் ஆண்டு மத்திய உவர் நீர் வாழ் உயிரி வளர்ப்பு நிறுவனமானது (CIBA – Central Institue of Brackish water aquaculture) நிறுவப்பட்டது. இந்த நிறுவனத்தின் நோக்கமானது, கிளிஞ்சல்கள் மற்றும் துடுப்புள்ள மீன்களை வளம் குன்றாமல் உவர் நீர்நிலைகளில் வளர்த்து நிர்வகித்தல் ஆகும். இந்நிறுவனமானது, துடுப்பு மீன் மற்றும் இறால் ஆகியவற்றை சிறிய அளவில் வளர்ப்போருக்கு நவீன தொழில் நுட்பங்களை வழங்கி உதவி புரிகிறது.

தேனீ தனது ஒரு பயணத்தில் குறைந்தது 50 முதல் 100 மலர்களிடம் தேனை சேகரிக்கும். சராசரியாக ஒரு தேனீ தனது வாழ்நாளில் ½ தேக்கரண்டி தேனை மட்டுமே சேகரிக்கிறது. 1 கி.கி தேனில் 3200 கலோரி ஆற்றல் உள்ளது. இது ஆற்றல் மிகுந்த உணவாகும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. மீன் உற்பத்தி மற்றும் மேலாண்மை என்பது

(அ) பிஸ்ஸி கல்ச்சர்

(ஆ) செரிகல்ச்சர்

(இ) அக்வா கல்ச்சர்

(ஈ) மோனா கல்ச்சர்

2. கீழ்கண்டவற்றில் எது அயல்நாட்டு இனம் அல்ல?

(அ) ஜெர்சி

(ஆ) ஹேல்ஸ்டீன்-பிரிஸன்

(இ) ஷகிவால்

(ஈ) ப்ரௌன் சுவிஸ்

3. பின்வருவனவற்றில் எது அயல்நாட்டு மாட்டு இனம் அல்ல?

(அ) ஏபிஸ் மெல்லிபெரா

(ஆ) ஏபிஸ் டார்சோட்டா

(இ) ஏபிஸ் ப்ளோரா

(ஈ) ஏபிஸ் சிரானா

4. பின்வருவன்வற்றில் எந்த ஒன்று முக்கிய இந்திய கெண்டை மீன் இல்லை?

(அ) ரோகு

(ஆ) கட்லா

(இ) மிரிகால்

(ஈ) சின்காரா

5. தேன் கூட்டில் காணப்படும் வேலைக்காரத் தேனீக்கள் எதிலிருந்து உருவாகின்றன?

(அ) கருவுறாத முட்டை

(ஆ) கருவுற்ற முட்டை

(இ) பார்த்தினோஜெனிஸிஸ்

(ஈ) ஆ மற்றும் இ

6. கீழ்க்கண்டவற்றில் அதிக அளவு பால் கொடுக்கும் பசுவினம் எது?

(அ) ஹோலஸ்டீன்-பிரிஸன்

(ஆ) டார்ஸெட்

(இ) ஷகிவால்

(ஈ) சிவப்பு சிந்தி

7. தேனீ வளர்ப்பில் பொதுவாக பயன்படுத்தப்படும் இந்திய தேனீ எது?

(அ) ஏபிஸ் டார்சோட்டா

(ஆ) ஏபிஸ் ப்ளோரா

(இ) ஏபிஸ் பெல்ல பெரா

(ஈ) ஏபிஸ் இண்டிகா

8. மண்ணில்லாமல் தாவரங்களை வளர்க்கும் முறை ___________

(அ) தோட்டக்கலை

(ஆ) ஹைட்ரோபோனிக்ஸ்

(இ) போமாலஜி

(ஈ) இவற்றில் எதுவுமில்லை

9. பூஞ்சைகள் மற்றும் வாஸ்குலார் தாவரங்கள் நடத்தும் கூட்டுயிர் வாழ்க்கை __________

(அ) லைக்கன்

(ஆ) ரைசோபியம்

(இ) மைக்கோரைசா

(ஈ) அசிட்டோபாக்டர்

10. காளான்களின் தாவர உடலம் என்பது _________

(அ) காளான் விதை

(ஆ) மைசீலியம்

(இ) இலை

(ஈ) இவை அனைத்தும்

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. குயினைன் மருந்து _________ லிருந்து பெறப்படுகிறது.

2. கேரிக்கா பப்பையா இலை ________ நோயை சரிசெய்ய பயன்படுகிறது.

3. மண்புழு உரத்தை உருவாக்குவது __________ மற்றும் நுண்ணுயிரிகள் ஆகும்.

4. __________ வளர்ப்பின் மூலம் இறால், முத்து மற்றும் உண்ணக்கூடிய சிப்பிகளை உற்பத்தி செய்யலாம்.

5. தேன் கூட்டில் உள்ள வளமான தேனீ ___________ ஆகும்.

6. ___________ தேனைப் பதப்படுத்துகிறது.

7. __________ முறையில் பல்வேறுபட்ட மீன் வகைகளை நீர் நிலைகளில் வளர்க்கலாம்.

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக

1. மைக்கோரைசா ஒரு பாசி.

2. பால் கொடுக்கும் விலங்குகள், விவசாயம் மற்றும் போக்குவரத்திற்குப் பயன்படுகின்றன.

3. ஏபிஸ் புளோரியா என்பது பாறைத் தேனீ.

4. ஓங்கோல் கால்நடைகள் ஒரு வெளிநாட்டு இனம்.

5. வெள்ளாட்டு எருவானது தொழு உரத்தைக் காட்டிலும் அதிக சத்தினைக் கொண்டுள்ளது.

பொருத்துக:

1. பெரிய கடல் நண்டு – கடல் மீன்

2. கட்லா – முத்து

3. கொடுவா மீன் – ஓடு மீன்

4. பொக்காலி – துடுப்பு மீன்

5. பிளிரோட்டஸ் சிற்றினம்- சோரியாஸிஸ்

6. சர்ப்பகந்தா – சிப்பி காளான்

7. ஓலேரி கலச்சர் – ரெஸ்பிரைன்

8. ரைட்டா டிங்டோரியா – காய்கறிப் பண்ணை

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. பிஸ்ஸி கல்ச்சர் 2. ஷகிவால் 3. குறிப்பு: வினாவில் தவறு உள்ளது. –ல் உள்ளவை மாட்டு இனமல்ல, தேனீக்கள் வகைகளாகும். “பின்வருவனவற்றில் இத்தாலிய வகை தேனீ எது” என்பது வினாவானால், அதற்கு. ஏபிஸ் மெல்லிபெரா என்பது விடையாகும். 4. சின்காரா 5. கருவுறாத முட்டை 6. ஹோல்ஸ்டீன் – பிரிஸன் 7. ஹைட்ரோபோனிக்ஸ்
8. மைக்கோரைசா 9. மைக்கோரைசா 10. மைசீலியம்

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. சின்சோனா மரத்தில் 2. டெங்கு 3. மண்புழுக்கள் 4. நீர் உயிரி 5. இராணித் தேனீ 6. பார்மிக் அமிலம் 7. கலப்பு மீன் வளர்ப்பு அல்லது பல வகை மீன் வளர்ப்பு

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: (தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக)

1. தவறு

சரியான விடை: மைக்கோரைசா ஒரு பூஞ்சை

2. தவறு

சரியான விடை: இருபலனை தரும் விலங்குகள் விவசாயம் மற்றும் போக்குவரத்திற்குப் பயன்படுகின்றன.

3. தவறு

சரியான விடை: ஏபிஸ் டார்சேட்டா என்பது பாதைத் தேனீ

4. தவறு

சரியான விடை: ஓங்கோல் கால்நடைகள் ஒரு உள்நாட்டு இனம்

5. சரி

பொருத்துக:

1. பெரிய கடல் நண்டு – ஓடு மீன்

2. கட்லா – துடுப்பு மீன்

3. கொடுவா மீன் – கடல் மீன்

4. பொக்காலி – நெற்பயிரோடு இறால் வளர்ப்பு

5. பிளிரோட்டஸ் சிற்றினம்- சிப்பி காளான்

6. சர்ப்பகந்தா – ரெஸ்பிரைன்

7. ஒலேரி கல்ச்சர் – காய்கறிப் பண்ணை

8. ரைட்டா டிங்டோரியா – சோரியாஸிஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!