Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Book Back QuestionsTnpsc

மக்களாட்சி Book Back Questions 6th Social Science Lesson 23

6th Social Science Lesson 23

23] மக்களாட்சி

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

“மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி மக்களாட்சி” – ஆப்ரகாம் லிங்கன்.

நேரடி மக்களாட்சியில் மக்களே சட்டங்களை உருவாக்குகின்றனர். அனைத்து சட்டத்திருத்தங்களையும் மக்கள்தான் அங்கீகரிப்பர். அரசியல்வாதிகள் நாடாளுமன்ற செயல்முறைகளின்படி ஆட்சி செய்வர். நேரடி மக்களாட்சியை வெற்றிகரமான செயல்படுத்தும் வரலாற்றை சுவிட்சர்லாந்து பெற்றுள்ளது.

மக்களாட்சியின் பிறப்பிடம் கிரேக்கம் ஆகும்”.

பிரதிநிதித்துவ மக்களாட்சி: நாடாளுமன்ற மக்களாட்சி-இந்தியா, இங்கிலாந்து.

அதிபர் மக்களாட்சி-அமெரிக்க ஐக்கிய நாடுகள், கனடா.

மக்களாட்சி:

நேரடி மக்களாட்சி-சுவிட்சர்லாந்து. சட்டங்கள் மற்றும் விதிகள். வாக்குகள். மக்கள்.

பிரதிநிதித்துவ மக்களாட்சி-இந்தியா, இங்கிலாந்து அமெரிக்க ஐக்கிய நாடுகள். சட்டங்கள் மற்றும் விதிகள். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள். வாக்குகள்.

2007ல் ஐ. நா. சபை செப்டம்பர் 15ஆம் நாளை உலக மக்களாட்சி தினமாக அறிவித்துள்ளது.

இந்தியக் குடிமக்களின் 79% பேர் தங்களது நாட்டின் மக்களாட்சியின் மீது நம்பிக்கை கொண்டுள்ளதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக உலக அளவிலான இப்பட்டியலில் இந்தியாவிற்கு முதலிடம் கிடைத்துள்ளது.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. ஆதிமனிதன் __________ பகுதியில் குடியேறி விவசாயம் செய்யத் தொடங்கியனான்.

(அ) சமவெளி

(ஆ) ஆற்றோரம்

(இ) மலை

(ஈ) குன்று

2. மக்களாட்சியின் பிறப்பிடம் _________

(அ) சீனா

(ஆ) அமெரிக்கா

(இ) கிரேக்கம்

(ஈ) ரோம்

3. உலக மக்களாட்சி தினம் __________

(அ) செப்டம்பர் 15

(ஆ) அக்டோபர் 15

(இ) நவம்பர் 15

(ஈ) டிசம்பர் 15

4. நேரடி மக்களாட்சியில் வாக்களிப்பவர் __________

(அ) ஆண்கள்

(ஆ) பெண்கள்

(இ) பிதிநிதிகள்

(ஈ) வாக்காளர்கள்

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. நேரடி மக்களாட்சியைச் செயல்படுத்தும் நாடு _________

2. மக்களாட்சிக்கான வரையறையை வகுத்தவர் _________

3. மக்கள் __________ அளிப்பதன் மூலம் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

4. நம் நாட்டில் __________ மக்களாட்சி செயல்படுகிறது.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. ஆற்றோரம் 2. கிரேக்கம் 3. செப்டம்பர் 15 4. வாக்காளர்கள்

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. சுவிட்சர்லாந்து 2. ஆபிரகாம் லிங்கன் 3. வாக்கு 4. பிரதிநிதித்துவம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!