Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
MCQ Questions

மனிதனும் சுற்றுச்சூழலும் 9th Social Science Lesson 12 Questions in Tamil

9th Social Science Lesson 12 Questions in Tamil

12. மனிதனும் சுற்றுச்சூழலும்

1) சுற்றுசூழல் (Environment) என்ற சொல் என்விரான் (Environ) என்னும் _____________ மொழியில் இருந்து பெறப்பட்டது.

A) பிரெஞ்சு

B) ஆங்கிலம்

C) இலத்தீன்

D) கிரீக்

(குறிப்பு – சுற்றுச்சூழல் என்பது மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையே உள்ள தொடர்புகளைப் பற்றியது ஆகும். அது என்விரான்மெண்ட் (Environment) என்னும் பதத்தால் குறிக்கப்படுகிறது. என்விரான் (Environ) என்ற சொல் பிரெஞ்சு மொழியிலிருந்து பெறப்பட்டது ஆகும்.

2) எந்த ஆண்டு நடைபெற்ற ஸ்டாக்ஹோம் மாநாட்டில் மனிதன் சுற்றுசூழலை வடிவமைக்கிறான் என அறிவிக்கப்பட்டது.

A) 1970ஆம் ஆண்டு

B) 1972ஆம் ஆண்டு

C) 1974ஆம் ஆண்டு

D) 1976ஆம் ஆண்டு

(குறிப்பு – கி.பி.1972 ஆம் ஆண்டு ஸ்டாக்ஹோம் மாநாட்டில் மனிதன் சுற்றுச் சூழலை உருவாக்கி வடிவமைக்கறான் என அறிவிக்கப்பட்டது)

3) 1992ஆம் ஆண்டு எந்த இடத்தில் புவி உச்சி மாநாடு நடைபெற்றது?

A) பாரிஸ்

B) ரியோடி ஜெனிரோ

C) வாஷிங்டன்

D) கலிபோர்னியா

(குறிப்பு – ரியோடி ஜெனிரோ நகரில் 1992ஆம் ஆண்டு நடைபெற்ற புவி உச்சிமாநாடு ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி மாநாடு என அழைக்கப்பட்டது.)

4) சுற்றுச்சூழலின் வகைப்பாடுகளுள் அல்லாதது எது?

A) இயற்கை சுற்றுச்சூழல்

B) மனித சுற்றுச்சூழல்

C) மனிதனால் உருவாக்கப்பட்ட சுற்றுசூழல்

D) இயற்கையும் மனிதனும் இணைந்து உருவாக்கிய சுற்றுசூழல்

(குறிப்பு – சுற்றுச்சூழலின் வகைப்பாடுகள் 3 ஆகும். அவை இயற்கை சுற்றுச்சூழல், மனித சுற்றுச்சூழல், மனிதனால் உருவாக்கப்பட்ட சுற்றுச்சூழல் ஆகும்)

5) மனிதரால் உருவாக்கப்பட்ட சுற்றுச்சூழல் வகையை சாராதது எது?

A) காடு

B) பூங்கா

C) கட்டிடம்

D) தொழிற்சாலை

(குறிப்பு – மனிதனால் உருவாக்கப்பட்ட சுற்றுச்சூழல் என்பது மனிதன் தனது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவும் தன் வாழ்க்கையை ஏதுவானதாகவும், எளிதானதாகவும் அமைத்துக்கொள்ள உருவாக்கப்பட்டதாகும்)

6) மக்கள் தொகையியல் (demography) குறித்த சரியான கூற்று எது?

I. கிரேக்க மொழியில் Demos என்றால் மக்கள் என்று பொருளாகும்

II. கிரேக்க மொழியில் Graphis என்றால் கணக்கிடுதல் என்று பொருளாகும்

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – மக்கள் தொகையியல் என்பது புள்ளியியல் முறையில், மக்கள் தொகையைக் கணக்கிடுவதாகும் )

7) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

I. மக்கள் தொகை என்பது மாறிக் கொண்டே இருக்கக் கூடியது ஆகும்.

II. மனிதகுல வரலாற்றில் எப்போதும் இறப்பைவிட பிறப்பு சற்று அதிகமாகவே இருந்து வருகிறது.

A) I மட்டும் சரி

B) II மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

(குறிப்பு – ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாழும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பை மக்கள் தொகை வளர்ச்சி என்கிறோம். மக்கள் தொகை பிறப்பின் மூலம் அதிகரிக்கும், இறப்பின் மூலம் குறையும்)

8) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

கூற்று 1 – மக்கள் தொகை வளர்ச்சி என்பது பிறப்பு விகிதம் திற்கும் இறப்பு விகிதம் துக்கும் இடையே உள்ள வேறுபாடு ஆகும்.

கூற்று 2 – பொதுவாக மக்கள் தொகை எப்போதும் அதிகரித்துக் கொண்டே இருக்கும் ஆனால் சில சமயங்களில் மக்கள் தொகை வளர்ச்சி குறையும்.

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) இரண்டு கூற்றுகளும் சரி

D) இரண்டு கூற்றுகளும் தவறு

(குறிப்பு – பொதுவாக பஞ்சம், நிலச்சரிவு, புவி அதிர்ச்சி போன்ற இயற்கை சீற்றங்கள் மற்றும் மனிதனால் ஏற்படும் அழிவுகளான போர் போன்ற காரணங்களால் மக்கள் தொகை வளர்ச்சி குறைகிறது )

9) பொருத்துக

I. 1650 – a) 8 பில்லியன்

II. 1850 – b) 9 பில்லியன்

III. 2025 – c) 1000 மில்லியன்

IV. 2050 – d) 500 மில்லியன்

A) I-c, II-d, III-a, IV-b

B) I-d, II-a, III-c, IV-b

C) I-c, II-b, III-a, IV-d

D) I-d, II-a, III-b, IV-c

(குறிப்பு – பொதுவாக பிறப்பு மற்றும் குடியிறக்கம் (Immigration) காரணமாக மக்கள் தொகை அதிகரிக்கிறது. இறப்பு மற்றும் குடியேற்றம் (Emigration) காரணமாக மக்கள் தொகை குறைகிறது )

10) எந்த நூற்றாண்டில் ஏற்பட்ட ப்ளேக் நோயினால் 30 முதல் 60 சதவீதம் மக்கள் இறந்தனர் என கணக்கிடப்பட்டுள்ளது.

A) பதிமூன்றாம் நூற்றாண்டு

B) பதினான்காம் நூற்றாண்டு

C) பதினைந்தாம் நூற்றாண்டு

D) பதினாறாம் நூற்றாண்டு

(குறிப்பு – 14ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் பிளேக் என்ற கொள்ளை நோயினால் 30 முதல் 60 சதவீதம் மக்கள் இறந்தனர் என கணக்கிடப்பட்டுள்ளது)

11) பொருத்துக

I. பிறப்பு விகிதம் – a) ஒரு சதுர கி.மீ பரப்பளவில் வாழும் மக்களின் சராசரி

எண்ணிக்கை

II. மக்கள் தொகை வளர்ச்சி – b) ஒரு ஆண்டில் 1000 பேருக்கு உயிருடன் பிறக்கும்

குழந்தைகளின் எண்ணிக்கை

III. மக்களடர்த்தி – c) ஒரு ஆண்டின் சராசரி மக்கள் தொகை அதிகரிப்பு

IV. வாழ்நாள் மதிப்பீடு – d) ஒரு நபரின் சராசரி ஆயுட்காலம்

A) I-b, II-c, III-a, IV-d

B) I-d, II-a, III-c, IV-b

C) I-c, II-b, III-a, IV-d

D) I-d, II-a, III-b, IV-c

(குறிப்பு – மேற்கண்ட செய்தி தமிழ்நாட்டின் மக்கள் தொகை தொடர்புடைய முக்கிய அம்சங்கள் பற்றி விவரிக்கிறது)

12) பொருத்துக

I. பிறப்பு விகிதம் (2014) – a) 996

II. மக்கள் தொகை வளர்ச்சி (2011) – b) 15.6%

III. பாலின விகிதம் (2011) – c) 15.4%

IV. கல்வியறிவு விகிதம் (2011) – d) 80.09%

A) I-c, II-b, III-d, IV-a

B) I-d, II-a, III-c, IV-b

C) I-c, II-b, III-a, IV-d

D) I-d, II-a, III-b, IV-c

(குறிப்பு – தமிழ்நாட்டின் மக்களடர்த்தி 2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி 555 /சதுர கிலோமீட்டர் என்ற அளவில் உள்ளது. குழந்தைகளின் இறப்பு விகிதம் என்பது 2016ஆம் ஆண்டின்படி 17/1000 என்ற அளவில் உள்ளது )

13) தமிழ்நாட்டில் வாழும் ஒரு நபரின் சராசரி ஆயுட்காலம் என்பது 2010-2014 ஆண்டின்படி?

A) 70.6 ஆண்டுகள்

B) 71.3 ஆண்டுகள்

C) 72.5 ஆண்டுகள்

D) 70.8 ஆண்டுகள்

(குறிப்பு – வாழ்நாள் மதிப்பீடு என்பது ஒரு நபரின் சராசரி ஆயுட்காலம் ஆகும். தமிழ்நாட்டில் வாழும் ஒரு நபரின் சராசரி ஆயுட்காலம் என்பது 70.6 ஆண்டுகளாக உள்ளது )

14) உலகின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு எந்த ஆண்டு நடந்தது?

A) கி.மு.3500

B) கி.மு.3600

C) கி.மு.3700

D) கி.மு.3800

(குறிப்பு – உலகின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு கி.மு.3500 ஆண்டு நடந்தது. இது பாபிலோனில் நடத்தப்பட்டது)

15) நவீன உலகில் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்திய முதல் நாடு எது?

A) பிரான்ஸ்

B) டென்மார்க்

C) ஸ்பெயின்

D) இத்தாலி

(குறிப்பு – நவீன உலகில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திய முதல் நாடு டென்மார்க் ஆகும்)

16) இந்தியாவில் எந்த ஆண்டில் முதன்முதலாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது?

A) 1872 ஆம் ஆண்டு

B) 1874 ஆம் ஆண்டு

C) 1876 ஆம் ஆண்டு

D) 1878 ஆம் ஆண்டு

(குறிப்பு – இந்தியாவில் முதன்முதலில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 1872 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. 1881ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு வருகிறது)

17) உலக மக்கள் தொகை தினம் எந்த நாடு கடைபிடிக்கப்பட்டு வருகிறது?

A) ஜூலை 10

B) ஜூலை 11

C) ஜூலை 12

D) ஜூலை 13

(குறிப்பு – உலக மக்கள் தொகை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11-ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்மூலம் உலக மக்கள் தொகை பிரச்சனைகள் பற்றிய ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது)

18) உலகில் மக்கள் தொகை பரவலுக்கான காரணங்களுள் சரியானது எது?

I. இயற்கை காரணிகள்

II. வரலாற்று காரணிகள்

III. பொருளாதார காரணிகள்

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – இயற்கைக் காரணிகளாக வெப்பநிலை, மழை, மண், நிலதோற்றம் போன்றவை மக்கள் தொகை பரவலுக்கான காரணிகள் ஆகும்.)

19) மக்கள் தொகை பரவலுக்கான பொருளாதார காரணிகளுள் அல்லாதவை எது?

A) கல்விக்கூடங்கள்

B) வேலைவாய்ப்புகள்

C) உற்பத்தி தொழிற்சாலைகள்

D) கனிம வளங்களின் பரவல்

(குறிப்பு – கனிம வளங்களின் பரவல் என்பது மக்கள் தொகை பரவலுக்கான இயற்கை காரணி ஆகும். கல்விக்கூடங்கள், வேலைவாய்ப்புகள், உற்பத்தி தொழிற்சாலைகள், ஆடம்பர வசதிகள், வியாபாரம், வணிகம் போன்றவை ஓரிடத்தில் மக்கள் தொகை பரவலுக்கான பொருளாதார காரணிகள் ஆகும்)

20) உலக மக்கள் தொகை தினம் எந்த ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது?

A) 1985ஆம் ஆண்டு முதல்

B) 1987ஆம் ஆண்டு முதல்

C) 1989ஆம் ஆண்டு முதல்

D) 1988ஆம் ஆண்டு முதல்

(குறிப்பு – உலக மக்கள்தொகை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11-ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இது 1985ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது)

21) உலகின் அதிக மக்களடர்த்தி பகுதிகளில் அல்லாதது எது?

A) கிழக்கு ஆசியா

B) வடமேற்கு ஐரோப்பா

C) காங்கோ

D) தெற்கு ஆசியா

(குறிப்பு – ஒரு சதுர கிலோமீட்டர் நிலப் பரப்பில் 50க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்வதை அதிக மக்கள் அடர்த்தி பகுதி என்கிறோம். கிழக்கு ஆசியா, தெற்கு ஆசியா, வட மேற்கு ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவின் கிழக்கு பகுதி ஆகியவை அதிக மக்கள் அடர்த்தி பகுதிகள் ஆகும்)

22) உலகின் மிதமான மக்களடர்த்தி பகுதிகளுள் அல்லாதவை எது?

A) அங்கோலா

B) காங்கோ

C) மேற்கு ஆஸ்திரேலியா

D) நைஜீரியா

(குறிப்பு – மிதமான மக்களடர்த்தி பகுதிகள் என்பது ஒரு சதுர கிலோமீட்டர் நிலப் பரப்பில் 10 முதல் 50 பேர் வரை வசிப்பதை குறிப்பது ஆகும். மிதவெப்ப மண்டலப் பகுதியில் உள்ள அங்கோலா, காங்கோ, நைஜீரியா மற்றும் ஆப்பிரிக்காவிலுள்ள சாம்பியா ஆகும் )

23) இந்திய அரசின் அதிகார பூர்வமான மக்கள் தொகை கொள்கை எந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது?

A) 1942 ஆம் ஆண்டு முதல்

B) 1952 ஆம் ஆண்டு முதல்

C) 1962 ஆம் ஆண்டு முதல்

D) 1972 ஆம் ஆண்டு முதல்

(குறிப்பு – 1952ஆம் ஆண்டுமுதல் இந்திய அரசின் அதிகாரபூர்வமான மக்கள் தொகை கொள்கை நடைமுறைபடுத்தப்பட்டது. இது போன்றதொரு கொள்கையை முதன் முதலில் அறிவித்த நாடு இந்தியா ஆகும்)

24) இடப்பெயர்வுக்கான காரணங்கள் ஆவன கீழ்க்கண்டவற்றுள் எது ?

I. சமூக ஏற்றத்தாழ்வுகள்

II. பொருளாதார வாய்ப்புகள்

III. கலாச்சார முரண்பாடுகள்

IV. அரசியல் காரணங்கள்

A) I, II, III மட்டும் சரி

B) II, III, IV மட்டும் சரி

C) I, III, IV மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – இடப்பெயர்வு என்பது நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவே தங்களின் பிறப்பிடத்தை விட்டு தனியாகவோ அல்லது குழுவாகவோ செல்லுவதை இடப்பெயர்வு என்கிறோம். மேற்கண்ட அனைத்து காரணங்களும் இடப்பெயர்வுக்கான காரணிகள் ஆகும்)

25) கீழ்கண்டவற்றுள் எது சரியானது?

கூற்று 1 – குடியேற்றம் என்பது ஒரு இடத்தை விட்டு வெளியேறுவது ஆகும்.

கூற்று 2 – குடியிறக்கம் என்பது ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து இருப்பிடத்தை அமைத்துக் கொள்வது ஆகும்.

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) இரண்டு கூற்றுகளும் சரி

D) இரண்டு கூற்றுகளும் தவறு

(குறிப்பு – இடப்பெயர்வு என்பது உள்நாட்டு இடப்பெயர்வு மற்றும் பன்னாட்டு இடப்பெயர்வு என இருவகைப்படும்.)

26) இடப்பெயர்வுக்கான தள்ளுகாரணிகளில் அல்லாதவை எது?

A) குறைந்த மருத்துவ வசதி

B) குறைந்த அடிப்படை கட்டமைப்பு

C) அரசியல் மற்றும் சமய சுதந்திரமின்மை

D) சிறந்த மருத்துவமனை வசதி

(குறிப்பு – மக்களை புதிய வாழ்விடத்தை நோக்கி வளைந்து இடம்பெயரச் செய்யும் காரணிகள் தள்ளுகாரணிகள் எனப்படும். குறைந்த மருத்துவ வசதி, குறைந்த அடிப்படை கட்டமைப்பு, அரசியல் மற்றும் சமய சுதந்திரமின்மை ஆகியவை இடப்பெயர்வுக்கான தள்ளுகாரணிகள் ஆகும்)

27) இடப்பெயர்வுக்கான ஈர்ப்பு காரணிகளில் அல்லாதவை எது?

A) சிறந்த வேலை வாய்ப்பு வசதிகள்

B) நல்ல அடிப்படை கட்டமைப்பு

C) அரசியல் மற்றும் சமய சுதந்திரம்

D) முன்னேற்றம் அடையாத வாழ்க்கை நிலை

(குறிப்பு – ஈர்ப்பின் காரணமாக புதிய வாழ்விடத்தை நோக்கி மக்கள் இடம்பெயர்வது இருக்கும் காரணிகள் ஆகும். சிறந்த வேலை வாய்ப்பு, நல்ல அடிப்படை கட்டமைப்பு, அரசியல் மற்றும் சமய சுதந்திரம் ஆகியவை இடப்பெயர்வுக்கான ஈர்ப்பு காரணிகள் ஆகும்)

28) வேளாண் பரிணாம வளர்ச்சி கீழ்க்காணும் எந்த ஆற்றுப்படுகைகளில் ஏற்பட்டது?

I. நைல்

II. சிந்து

III. ஹவாங்கோ

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – மக்கள் தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ ஓரிடத்தில் தங்கி வேலை செய்து ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட வாழ்க்கையை வாழ்வதை குடியிருப்பு என்கிறோம். பண்டைய காலத்தில் வேளாண் பரிணாம வளர்ச்சி மேற்கண்ட ஆற்றுப்படுகைகளில் காணப்பட்டது)

29) கிராம குடியிருப்புகளில் நடைபெறும் தொழில்களில் சரியானது எது?

I. வேளாண்மை

II. வனத்தொழில்

III. மீன் பிடித்தல்

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – முதன்மை தொழில்களான வேளாண்மை தொழில், கனிம தொழில் மற்றும் மீன் பிடித்தல் போன்றவற்றை மேற்கொண்டிருக்கும் குடியிருப்புகள் கிராம குடியிருப்புகள் எனப்படுகின்றன)

30) கிராம குடியிருப்புகளின் வகைகளுள் சரியானது எது?

I. செவ்வக வடிவ குடியிருப்புகள்

II. வட்ட வடிவ குடியிருப்புகள்

III. நட்சத்திர வடிவ குடியிருப்புகள்

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – கிராமக் குடியிருப்புகளின் வகைகள் ஆவன, செவ்வக வடிவ குடியிருப்புகள், வட்ட வடிவ குடியிருப்புகள், முக்கோண வடிவ குடியிருப்புகள் ஆகியன ஆகும் )

31) பொருத்துக

I. செவ்வக வடிவ குடியிருப்பு – a) கப்பியிடப்பட்ட சாலைகள்

II. வட்ட வடிவ குடியிருப்பு – b) ஆறுகள் சேரும் இடம்

III.முக்கோண வடிவ குடியிருப்பு – c) சமவெளி பகுதிகள்

IV. நட்சத்திர வடிவ குடியிருப்பு – d) ஏரிகள், குளங்களை சுற்றிய பகுதி

A) I-c, II-d, III-b, IV-a

B) I-d, II-a, III-c, IV-b

C) I-c, II-b, III-a, IV-d

D) I-d, II-a, III-b, IV-c

(குறிப்பு – மேற்கண்ட அனைத்தும் கிராம குடியிருப்புகள் ஆகும். இவை நிலைத்த, நிரந்தர குடியிருப்புகள் ஆகும். கிராம குடியிருப்புகளின் தனித்தன்மை அதை சுற்றி இருக்கும் பரந்த பசுமையும், மாசற்ற சுற்றுப்புற சூழல் உண்டாகும்)

32) மூன்று சாலைகள் சந்திக்கும் இடங்களில் வளர்ச்சியடையும் குடியிருப்புகள் எது?

I. T வடிவ குடியிருப்பு

II. Z வடிவ குடியிருப்பு

III. Y வடிவ குடியிருப்பு

A) I, II மட்டும் சரி

B) I, III மட்டும் சரி

C) II, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – T வடிவ, Y வடிவ, சிலுவை வடிவ, குறுக்கு வடிவ குடியிருப்புகள் மூன்று சாலைகள் சந்திக்கும் இடங்களில் வளர்ச்சியடையையும். இவை அனைத்தும் கிராம குடியிருப்புகள் வகையை சார்ந்தது ஆகும்)

33) நகரங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளதில் சரியான வரிசை எது?

A) பெருநகரம், மாநகரம், சிறு நகரம், கிராமம்

B) மாநகரம், பெருநகரம், சிறுநகரம், கிராமம்

C) மாநகரம், பெருநகரம், குக்கிராமம், கிராமம்

D) எல்லாமே தவறு

(குறிப்பு – நகர்ப்புறம் என்ற சொல் நகரங்கள் மற்றும் பெருநகரங்களோடு தொடர்புடையது. அது மாநகரம், பெருநகரம், சிறுநகரம், கிராமம், குக்கிராமம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது )

34) பொருத்துக

I. நகரம் – a) சென்னை

II. பெருநகரம் – b) அரக்கோணம்

III. மாநகரம் – c) கோயம்புத்தூர்

IV. மீப்பெருநகரம் – d) மதுரை

A) I- b, II-c, III-d, IV-a

B) I-d, II-a, III-c, IV-b

C) I-c, II-b, III-a, IV-d

D) I-d, II-a, III-b, IV-c

(குறிப்பு – நகரப் பகுதிகள் அதன் பரப்பு, கிடைக்கும் சேவைகள் மற்றும் நடைபெறும் செயல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் நகரம், பெருநகரம், மாநகரம். மீப்பெருநகரம், நகரங்களின் தொகுதி என வகைப்படுத்தப்பட்டுள்ளன)

35) உலகிலேயே மிகப்பெரிய நகரம் எது?

A) பெய்ஜிங்

B) கல்கத்தா

C) டோக்கியோ

D) கலிபோர்னியா

(குறிப்பு – உலகிலேயே மிகப்பெரிய நகரம் ஜப்பானின் டோக்கியோ நகரம் ஆகும். இது 38 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்டது)

36) உலகின் மிகப் பழமையான நகரம் எது?

A) லண்டன்

B) பாரிஸ்

C) டமாஸ்கஸ்

D) ஏதன்ஸ்

(குறிப்பு – உலகின் மிகப் பழமை பழமையான நகரம் டமாஸ்கஸ் ஆகும். இங்கு 11, 000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே மக்கள் வாழ்ந்து வருகிறார்கள் )

37) 2016ஆம் ஆண்டு யுனேஸ்கோவின் மெர்சர் தகவலின்படி மக்கள் சிறந்த வாழ்க்கை தரத்தை பெற்று வாழ்ந்து வருவதில் முதலிடம் பெற்றுள்ள நாடு எது?

A) பாரிஸ்

B) கலிபோர்னியா

C) மும்பை

D) வியன்னா

(குறிப்பு – 2016 ஆம் ஆண்டின்படி, யுனெஸ்கோவின் மெர்சர் தகவலின்படி மக்கள் சிறந்த வாழ்க்கைத் தரத்தை பெற்று வாழ்ந்து வருகையில் வியன்னா முதலிடமும் சூரிச் இரண்டாம் இடமும் பெற்றுள்ளன)

38) பொருத்துக

I. முதல்நிலை தொழில்கள் – a) ஆலோசனை வழங்குதல்

II. இரண்டாம் நிலை தொழில்கள் – b) வங்கிகள்

III. மூன்றாம் நிலை தொழில்கள் – c) ஆடு மேய்த்தல்

IV. நான்காம் நிலை தொழில்கள் – d) வாகன உற்பத்தி

A) I-c, II-d, III-b, IV-a

B) I-d, II-a, III-c, IV-b

C) I-c, II-b, III-a, IV-d

D) I-d, II-a, III-b, IV-c

(குறிப்பு – பொருளாதார நடவடிக்கை என்பது ஒரு பகுதியில் அனைத்து நிலைகளிலும் நடைபெறும் பகிர்வு, நுகர்வு, உற்பத்தி மற்றும் சேவைகளை குறிப்பதாகும். பொருளாதார நடவடிக்கைகளில் வகைகள் ஆவன, முதல்நிலை தொழில்கள், இரண்டாம் நிலை தொழில்கள், மூன்றாம் நிலை தொழில்கள், நான்காம் நிலை தொழில்கள் மற்றும் ஐந்தாம் நிலை தொழில்கள் ஆகும்)

39) உருவாக்குதல் மறுகட்டமைப்பு செய்தல் பயன்பாட்டில் உள்ள பழைய கருத்துக்கள் மற்றும் புதிய கருத்துக்களை விவரணம் செய்வது உள்ளிட்ட செயல்பாடுகளை உள்ளடக்கியது எது?

A) இரண்டாம்நிலை தொழில்கள்

B) மூன்றாம் நிலை தொழில்கள்

C) நான்காம் நிலை தொழில்கள்

D) ஐந்தாம் நிலை தொழில்கள்

(குறிப்பு – ஐந்தாம் நிலை தொழில்கள் என்பதில் சமூக அல்லது பொருளாதாரத்தில் உயர்மட்ட முடிவுகள் எடுப்பது உள்ளடங்கும். எடுத்துக்காட்டு வணிக அமைப்புகளின் தலைமை அதிகாரிகள், அறிவியல் அறிஞர்கள் மற்றும் அரசாங்கத்தின் கொள்கைகளை முடிவு எடுப்பவர்கள் ஐந்தாம் நிலை தொழில்கள் வகையைச் சார்ந்தவர் ஆவர்)

40) கீழ்க்கண்டவற்றுள் சுற்றுச்சூழல் பிரச்சினை அல்லாதது எது?

A) காடுகளை அழித்தல்

B) நகரமயமாதல்

C) கழிவு அகற்றுதல்

D) கணினிமயமாக்கல்

(குறிப்பு – சுற்றுச்சூழல் பிரச்சனைகள் ஒரு இடத்திற்கு, அல்லது ஒரு பகுதிக்கு மட்டும் உட்பட்டதல்ல. அது ஒரு பன்னாட்டு பிரச்சனையாகும். காடுகளை அழித்தல், காற்று நிலம் நீர் ஒளி போன்றவை மாசடைதல், நகரமயமாதல், நீர்ம விசையியல் முறிவு, கழிவு அகற்றுதல் போன்றவை சில சமூக சுற்றுச்சூழல் பிரச்சினைகள் ஆகும்)

41) உலக சுற்றுச்சூழல் வளர்ச்சிக்கான ஆகிய நாடுகளின் உச்சி மாநாடு எங்கு நடைபெற்றது?

A) ரியோ டி ஜெனிரோ

B) பெய்ஜிங்

C) கலிபோர்னியா

D) பாரிஸ்

(குறிப்பு – உலக சுற்றுச்சூழல் வளர்ச்சிக்கான ஐக்கிய நாடுகளின் புவி உச்சி மாநாடு பிரேசில் நாட்டில் உள்ள ரியோடி ஜெனிரோ நகரில் கூட்டப்பட்டது)

42) உலக சுற்றுச்சூழல் வளர்ச்சிக்கான ஐக்கிய நாடுகளின் புவி உச்சி மாநாடு நடந்த ஆண்டு?

A) 1990ஆம் ஆண்டு

B) 1992ஆம் ஆண்டு

C) 1994ஆம் ஆண்டு

D) 1996ஆம் ஆண்டு

(குறிப்பு – இந்த மாநாட்டில் கலந்து கொண்ட உறுப்பு நாடுகள் கரிமில வாயு, மீத்தேன் மற்றும் பசுமை குடில் வாயுக்கள் வெளியேறும் அளவை குறைத்து உலக வெப்பமயமாதலுக்கு காரணமான அனைத்து காரணிகளையும் தவிர்க்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது)

43) கீழ்காணும் கூற்றுகளுள் எது சரியானது?

கூற்று 1 – காடு வளர்ப்பும், மீள் காடாக்குதலும் வெவ்வேறானவை.

கூற்று 2 – காடுகளில் எந்த வகை மரம் வெட்டப்பட்டது அதே வகை மரத்தை அதன் எண்ணிக்கை குறையாத வகையில் நட்டு வளர்ப்பது மீள் காடாக்குதல் என்பதாகும்.

கூற்று 3 – காடு வளர்த்தல் என்பது தரிசு நிலங்களில் புதிய காடுகளை உருவாக்குவது ஆகும்.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1 மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – காடுகளை அழித்தல் என்பது மக்கள் தங்களின் பிற பயன்பாடுகளுக்காக காடுகளில் உள்ள மரங்களை நிரந்தரமாக வெட்டி எடுத்து நிலத்தை பதப்படுத்தி பயன்படுத்துவதாகும். காடுகள் அழிக்கப்படுவதால் வெள்ளம் மற்றும் வறட்சி, மண்வளம் இழத்தல், உலகம் வெப்பமயமாதல், பாலைவனம் விரிவடைதல் போன்ற விளைவுகள் ஏற்படுகின்றன)

44) இந்தியாவில் மரம் நடு விழா ஒவ்வொரு ஆண்டும் ______________________ கொண்டாடப்படுகிறது.

A) ஜூலை 1 முதல் ஜூலை 7 வரை

B) ஜூலை 10 முதல் ஜூலை 17 வரை

C) ஜூலை மாதம் கடைசி வாரம்

D) ஜூலை மாதம் கடைசி 3 நாட்கள்

(குறிப்பு – இந்தியாவில் மரம் நடு விழா வனமகா உற்சவம் என அழைக்கப்படுகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1 முதல் ஜூலை 7 வரை ஒரு வார காலம் கொண்டாடப்படுகிறது)

45) மாசுறுதலின் வகைகளுள் அல்லாதவை எது?

I. காற்று மாசுறுதல்

II. நீர் மாசுறுதல்

III. நிலம் மாசுறுதல்

IV. கனிமவளம் மாசுறுதல்

A) I, II, III மட்டும் சரி

B) II, III, IV மட்டும் சரி

C) I, III, IV மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – மாசுறுதல் என்பதற்குப் பொருள் சீரழித்தல் அல்லது அசுத்தம் அடைய செய்தல் என்பதாகும். காற்று, நீர், நிலம், ஒலி, ஒளி மாசுறுதல் என்பன மாசுறுதலின் வகைகளாகும் )

46) இயற்கையால் ஏற்படும் காற்று மாசுபடுதலில் தவறானது எது?

A) எரிமலை வெடிப்பு

B) காற்று அரித்தல்

C) மகரந்தத்தூள் பரவல்

D) சுத்திகரிப்பு புகை

(குறிப்பு – மாசுப் பொருட்கள் இயற்கையான மற்றும் மனிதனால் உருவாக்கப்படும் மாசுகள் என வகைப்படுத்தப்படுகின்றன. எரிமலை வெடிப்பு, காற்று அரித்தல், மகரந்தத்தூள் பரவல், ஆவியாகும் கரிம கலவைகள் மற்றும் கதிரியக்க தனிமங்கள் போன்றவை காற்று மாசுபடுதலில் இயற்கையால் ஏற்படுவன ஆகும் )

47) பசுமைகுடில் வாயு அல்லாதவை எது?

A) கார்பன் டை ஆக்சைடு

B) கார்பன் மோனாக்சைடு

C) நைட்ரஜன் டை ஆக்ஸைடு

D) குளோரோ புளோரோ கார்பன்

(குறிப்பு – பசுமைக்குடில் வாயுக்கள் ஆவன, கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன், நீர் மூலக்கூறுகள், குளோரோ புளோரோ கார்பன், கார்பன் மோனாக்சைடு, ஒளிப்பட வேதியியல் தனிமங்கள் மற்றும் ஹைட்ரோகார்பன் போன்றவை ஆகும் )

48) அமில மழை என்பது?

A) நைட்ரிக் அமிலம்

B) ஹைட்ரோ குளோரிக் அமிலம்

C) சல்பியூரிக் அமிலம்

D) இவை எதுவும் அல்ல

(குறிப்பு – மாசுப் பொருட்கள் நீர் ஆவியோடு சேர்ந்து சூரிய ஒளி மற்றும் உயிர்வளி துணையோடு நீர்த்த கந்தக அமிலம் மற்றும் நைட்ரிக் அமிலமாக மாறுகிறது. இந்தக் கலவை மழை நீரில் கரைந்து மழையாக பெய்வதை அமிலமழை என்கிறோம்.)

49) அமில மழைக்குக் காரணமான வாயு எது?

I. கந்தக டை ஆக்சைடு

II. நைட்ரஜன் ஆக்சைடு

III. கார்பன் டை ஆக்சைடு

A) I, II மட்டும்

B) II, III மட்டும்

C) I, III மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – அமில மழைக்குக் காரணமான வாயுக்கள் கந்தக டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு, கார்பன் டை ஆக்சைடு, மற்றும் படிம எரிபொருள் அழிக்கப்படுதல் மூலம் வெளியேறும் கண்ணுக்கு தெரியாத பொருள்கள் ஆகும்)

50) ஓசோன் படல சிதைவுக்கு காரணமான வாயு எது?

I. குளோரோ புளோரோ கார்பன்

II. ஹைட்ரோ புளோரோ கார்பன்

III. மெத்தில் புரோமைடு

IV. சில்வர் அயோடைடு

A) I, II மட்டும்

B) I, III மட்டும்

C) II, IV மட்டும்

D) I, II, III மட்டும்

(குறிப்பு – ஓசோன் படலத்தில் சிதைவுற செய்பவை குளோரோ புளோரோ கார்பன், ஹைட்ரோ கார்பன், மெத்தில் புரோமைடு போன்ற வாயுக்கள் ஆகும். ஓசோன் படலம் சிதைவுறுவதால் புற ஊதாக் கதிர்கள் ஒளிபரப்பை வந்தடைகிறது. இதனால் புவி வெப்பமயம் அதிகம் ஆகிறது)

51) ஓசோன் அடுக்கு பாதுகாப்பதற்கான சர்வதேச நாள்___________ ஆகும்.

A) செப்டம்பர் 16

B) அக்டோபர் 22

C) நவம்பர் 15

D) டிசம்பர் 6

(குறிப்பு – ஓசோன் அடுக்கு பாதுகாப்பதற்கான சர்வதேச நாள் செப்டம்பர் 16 அன்று கடைபிடிக்கப்படுகிறது)

52) ஓசோன் படலம்_________________ ஆக்சிஜன் அணுக்களால் ஆன மூலக்கூறுகளை கொண்ட ஒரு நச்சு வாயு ஆகும்.

A) மூன்று O3

B) நான்கு O4

C) ஐந்து O5

D) ஆறு 06

(குறிப்பு – ஓசோன் படலம் என்பது மூன்று ஆக்சிஜன் அணுக்கள் அழகான மூலக்கூறுகளை கொண்ட ஒரு நச்சு வாயு ஆகும். இது வளிமண்டலத்தில் மிக அரிதாக காணப்படும் வாயு ஆகும். வளிமண்டலத்தின் ஒவ்வொரு 10 மில்லியன் மூலக்கூறுகளில், ஓசோன் மூன்று மூலக்கூறுகளை கொண்டுள்ளது)

53) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – ஓசோன் படலம் என்பது ஒருவளிமண்டல அடுக்கு ஆகும்.இது வளிமண்டலத்தில் நிறைந்து இருக்கிறது.

கூற்று 2 – ஓசோன் படலம் என்பது ஒரு வளிமண்டல அடுத்து அல்ல. இது படுகையடுக்கில் பரவிக் காணப்படுகிறது.

கூற்று 3 – ஓசோன் படலம் சூரியனிடமிருந்து வரும் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களை ஈர்த்துக் கொள்கிறது.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – ஓசோன் படலம் என்பது படுகையடுக்கில் (Stratosphere) 19 முதல் 30 கிலோமீட்டர் வரை பரவிக் காணப்படுகிறது. எனினும் இது உண்மையில் ஒரு வளிமண்டல அடுக்கு அல்ல)

54) சரியான வரிசையில் தேர்வு செய்க

A) வெளி அடுக்கு, வெப்ப அடுத்து, படுகை அடுத்து, இடை அடுக்கு, கீழ் அடுக்கு

B) வெளி அடுக்கு, வெப்ப அடுக்கு, இடை அடுக்கு, படுகை அடுக்கு, கீழ் அடுக்கு

C) வெப்ப அடுக்கு, வெளி அடுக்கு, இடை அடுக்கு, படுகை அடுக்கு, கீழ் அடுக்கு

D) வெளி அடுக்கு, இடை அடுக்கு, வெப்ப அடுக்கு, படுகை அடுக்கு, கீழ் அடுக்கு

(குறிப்பு – வெளி அடுக்கு, வெப்ப அடுக்கு, இடை அடுக்கு, படுகை அடுக்கு மற்றும் கீழ் அடுக்கு என்பன வளிமண்டலத்தில் உள்ள காற்று அடுக்குகள் ஆகும். ஓசோன் படலம் என்பது படுகை அடுக்கில் காணப்படுகிறது)

55) நீர் மாசடைதலின் விளைவுகளுள் சரியானது எது?

I. சிறுநீரக பாதிப்பு

II. எலும்பு குறைபாடு

III. கல்லீரல் பாதிப்பு

IV. புற்றுநோய்

A) I, II, III மட்டும் சரி

B) I, II, IV மட்டும் சரி

C) II, III, IV மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – நீர் மாசடைதலின் விளைவுகள் ஆவன பேதி, கல்லீரல் பாதிப்பு, நுரையீரல் புற்றுநோய், சிறுநீரக பாதிப்பு, பக்கவாதம், நாள்பட்ட வலி, எலும்பு குறைபாடு, புற்றுநோய் மற்றும் உயிரிழப்பு ஆகியன ஆகும்).

56) சந்திப்பூர் ஏவுகணை ஏவுதளத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் இருந்து கடல் பறவைகள் இடம் பெயர்ந்ததற்கான காரணம் எது?

A) நீர் மாசுபாடு

B) நில மாசுபாடு

C) ஒளி மாசுபாடு

D) ஒலி மாசுபாடு

(குறிப்பு – அடிப்படையில் ஒளி மாசுறுதல் பெரும்பாலும் நகர்ப் பகுதிகளிலும் தொழிற்சாலை பகுதிகளிலும் நெரிசல் மிகுந்த போக்குவரத்து பகுதிகளிலும் மற்றும் பல பகுதிகளில் காணப்படுகிறது. மனித மற்றும் விலங்குகளின் சமநிலையை ஒலிமாசு கடுமையாக பாதிக்கிறது)

57) ஒலி மாசுபாட்டினை கட்டுப்படுத்தும் வழிமுறைகளுள் தவறானது எது?

I. பசுமை மண்டலங்களை உருவாக்குதல்

II. நெடுஞ்சாலை ஓரங்களிலும் மக்கள் கூடும் இடங்களிலும் ஒலி அளவிடும் கருவிகளை பொருத்துதல்

III. வீடுகளைச் சுற்றிலும் உயரமான மரங்களை வளர்த்தல்

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – மேற்கண்ட அனைத்தும் ஒலி மாசுபாட்டினை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் ஆகும்.)

58) ஒளி மாசுபாடு கீழ்க்கண்டவற்றில் எதை பாதிக்கிறது?

I. சக்தி வளங்கள்

II. வன உயிரி வளங்கள்

III. மனிதர்கள் மற்றும் வானவியல் ஆராய்ச்சி

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – ஒளி மாசுபாடு என்பது அதிகப்படியான ஒளியினை திறந்தவெளியில் ஏற்படுத்துவதால் உண்டாகும் ஒரு வேண்டத்தகாத நிகழ்வாகும். குறிப்பாக வானம் ஒளிர்தல், ஒளிமீறல் மற்றும் கண்களை உறுத்தும் ஒளி போன்றவை ஒளிமாசு ஆகும் )

59) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1- பனிப்புகை என்பது புகை, வாயுக்கள் மற்றும் வேதிப்பொருள்களின் கலவை வளிமண்டலத்தில் கரும்புகையை ஏற்படுத்துவது ஆகும்.

கூற்று 2 – பனிப்புகை என்பது ஒளிமாசுபாடு மற்றும் காற்று மாசுபாடு ஆகும்.

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) இரண்டு கூற்றுகளும் சரி

D) இரண்டு கூற்றுகளும் தவறு

(குறிப்பு – பனிப்புகை என்பது காற்றையும், ஒளியையும் மாசுபடுத்துகிறது. மேலும் இது பல தீங்குகளையும் விளைவிக்கிறது )

60) செயற்கை முறையில் சில அழுத்தம் மிகுந்த பிற வகைகளை பயன்படுத்தி பாறைகளை உடைத்து எண்ணெய் மற்றும் இயற்கை வாயுவை புவியிலிருந்து வெட்டி எடுக்கும் தொழில் நுட்பத்திற்கு _____________ என்று பெயராகும்.

A) நீர்ம கனிம விசையியல் தொழில்நுட்பம்

B) நீர்ம விசையியல் முறிவு

C) நீர்ம விசைப்படு தொழில்நுட்பம்

D) இவை எதுவும் இல்லை

(குறிப்பு – நீர்ம விசையியல் முறிவு முறையில் புவியை துளை இடுவதற்கு மிகவும் அழுத்தம் மிக்க கலவையாக நீர் மணல் மற்றும் திடப்படுத்தும் பொருட்கள் சேர்ந்த கலவை பயன்படுத்தப்படுகிறது)

61) பாறைகளை துளையிட நீர்ம விசையியல் கூழ்மம் என்ற தொழில்நுட்பம் எந்த ஆண்டு முதல் பெயரிடப்பட்டது?

A) 1950ஆம் ஆண்டு

B) 1955ஆம் ஆண்டு

C) 1960ஆம் ஆண்டு

D) 1965ஆம் ஆண்டு

(குறிப்பு – இந்த முறையில் நீர், மணல், திடப்படுத்தும் பொருட்கள் சேர்ந்த கலவை ஆகியன மிகவும் அழுத்தம் மிக்க கலவையாக மாற்றப்பட்டு பாறைகளை துளையிட பயன்படுத்தப்படுகிறது)

62) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – நீர்ம விசையியல் நீர் மற்றும் காற்று மாசுற செய்கிறது.

கூற்று 2 – நீர்ம விசையியல் மண்ணை மாசுற செய்கிறது.

கூற்று 3 – நீர்ம விசையியல் செயலின் போது சிதறும் என்னை மண்வளத்தை மட்டுமல்லாது தாவரங்களையும் பாதிக்கிறது.

A) கூற்று 1, 2 மட்டும் சரி

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 1, 3 மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – நீர்ம விசையியல் முறையில் எண்ணெய் எடுப்பதற்கு பயன்படுத்தப்படும் உயர் அழுத்தமும் சேர்ந்துள்ள நீர் சேகரிப்பு பகுதியில் புவி அதிர்வை ஏற்படுத்தலாம்)

63) கழிவுகளின் வகைகளுள் சரியானது எது?

I. ஈரக்கழிவுகள்

II. வறண்ட கழிவுகள்

III. உயிரி கழிவுகள்

A) I, II மட்டும் சரி

B) II, III மட்டும் சரி

C) I, III மட்டும் சரி

D) எல்லாமே சரி

(குறிப்பு – பொருள்கள் அவற்றின் முழு பயன்பாட்டிற்கு பின் கழிவுகள் ஆகின்றன. கழிவுகள் மேற்கண்ட மூன்று வகைகளாக பிரிக்கப்படுகிறது.)

64) நகரப்பகுதிகளில் எத்தனை சதவீதம் திரவக் கழிவுகளை வெளியேற்றும் கட்டமைப்பு உள்ளது?

A) 56.4%

B) 55%

C) 76%

D) 47.8%

(குறிப்பு – இந்தியாவில் கிராமப்புறங்களில் திரவக் கழிவுகளை வெளியேற்றுவதற்காக எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை. மாறாக நகர்பகுதிகளில் 56.4% மட்டுமே திரவக் கழிவுகளை வெளியேற்றும் கட்டமைப்பு உள்ளது)

65) இந்தியாவில் எத்தனை சதவீத கழிவு நீர் ஆறுகள், ஏரிகள் மற்றும் குளங்களில் கலக்கின்றன?

A) 60%

B) 70%

C) 80%

D) 90%

(குறிப்பு – இந்தியாவில் 80 சதவீத கழிவு நீர் ஆறுகள் ஏரிகள் மற்றும் குளங்களில் கலக்கின்றன. இந்த சுத்திகரிக்கப்படாத கழிவு நீரானது நீர்நிலைகளை மாசுபடுத்துகிறது)

65) பொருத்துக

I. ஈரக்கழிவுகள் – a) நெகிழி

II. வறண்டகழிவுகள் – b) கட்டுத்துணி

III. உயிரிகழிவுகள் – c) கைபேசி கருவி

IV.மின்னணு கழிவுகள் – d) சமையல் அறை கழிவு

A) I-d, II-a, III-b, IV-c

B) I-b, II-a, IIi-c, IV-d

C) I-d, II-c, III-a, IV-b

D) I-a, II-c, III-d, IV-b

(குறிப்பு – மேற்கண்ட அனைத்தும் கழிவுகள் ஆகும். இவைகளால் நிலம், நீர் போன்றவை மாசுபடுகிறது)

66) எந்த ஆண்டு பிரண்டலேண்டு குழு வளம் குன்றா வளர்ச்சி என்ற சொல்லுக்கான விளக்கத்தை அளித்தது?

A) 1983ஆம் ஆண்டு

B) 1985ஆம் ஆண்டு

C) 1987ஆம் ஆண்டு

D) 1989ஆம் ஆண்டு

(குறிப்பு – வளம் குன்றா வளர்ச்சி என்பது எதிர்கால சந்ததியினரின் தேவைகளை இருப்பை உறுதி செய்வதோடு நிகழ்கால தேவையையும் பூர்த்தி செய்து கொள்வதாகும் என்பது அதன் விளக்கமாகும். இது 1987 ஆம் ஆண்டு விளக்கப்பட்டது )

67) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – சிறந்த பொது விநியோகத் திட்டத்தை அமல் படுத்துவதன் மூலம் வளம் குன்றா பொருளாதார வளர்ச்சி அடையலாம்.

கூற்று 2 – வளம்குன்றா பொருளாதார வளர்ச்சி நல்ல ஆரோக்கியமான சுற்றுச் சூழல் சமநிலையையும் பொருளாதார வளர்ச்சியையும் உறுதி செய்கிறது.

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) இரண்டு கூற்றுகளும் சரி

D) இரண்டு கூற்றுகளும் தவறு

(குறிப்பு – பூமியில் வாழும் மக்கள் தங்களுடைய தேவைக்கு அதிகமாக வளங்களை பயன்படுத்துகிறார்கள். எனவே வளம்குன்றா பொருளாதார வளர்ச்சி என்பது மிக அவசியமாகிறது)

68) புவியை பாதுகாப்பதற்காக ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம்________ வளம் குன்றா வளர்ச்சி இலக்குகளை நிர்ணயித்துள்ளது.

A) 15

B) 17

C) 19

D) 20

(குறிப்பு – பிரிகை பாதுகாப்பதற்காக ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் (UNDP) 17 வளம் குன்றா வளர்ச்சி இலக்குகளை (SDGs) நிர்ணயித்துள்ளது)

69) வறுமையின்மை, பாலின சமத்துவம், ஏற்றத்தாழ்வு குறைத்தல், ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு போன்றவை ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் வளம் குன்றா வளர்ச்சி இலக்குகளுள் எது?

A) 5வது வளம் குன்றா வளர்ச்சி இலக்கு

B) 8வது வளம் குன்றா வளர்ச்சி இலக்கு

C) 11வது வளம் குன்றா வளர்ச்சி இலக்கு

D) 15வது வளம் குன்றா வளர்ச்சி இலக்கு

(குறிப்பு – வறுமையின்மை, பட்டினியின்மை, ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு, தரமான கல்வி, பாலின சமத்துவம், தூய்மையான குடிநீர் மற்றும் சுகாதாரம், மலிவான மற்றும் சுகாதாரமான ஆற்றல், கண்ணியமான வேலை மற்றும் பொருளாதார வளர்ச்சி, காலநிலை செய்கைகள் போன்றவை 11வது வளம் குன்றா வளர்ச்சி இலக்குகள் ஆகும்)

70) இந்தியாவின் தென் கிழக்கு கடற்கரை பகுதியில் தமிழ்நாட்டின் கோடியக்கரைக்கு இராமேஸ்வரத்துக்கும் இடையில் அமைந்துள்ளது எது?

A) பாக் வளைகுடா

B) மன்னார் வளைகுடா

C) கட்ச் வளைகுடா

D) பாம்பன் வளைகுடா

(குறிப்பு – பாக் வளைகுடா ராமேஸ்வரத்திற்கும், கோடியக்கரைக்கும் இடையில் அமைந்துள்ளது. மாங்குரோவ் காடுகள் அல்லது ஓதசதுப்பு நிலத்தின் இல்லமாக பாக் வளைகுடா விளங்குகிறது.)

71) பாக்.வளைகுடாவில் மீன் வளத்தை தொடர்ந்து பராமரித்து இளம் மீன்கள் வளர்வதற்கான ஏற்ற சூழலை அளிப்பது எது?

A) முருகைபாறைகள்

B) பவளப்பாறைகள்

C) மிதக்கும் பாறைகள்

D) இவை எதுவும் இல்லை

(குறிப்பு – பாக் வளைகுடாவில் உள்ள உயர் ஒரு புல் கடல்நீரில் மாங்குரோவ் மரங்கள் நன்றாக வளரக் கூடியவை ஆகும். இந்த சதுப்பு நிலத்தில் பல் உயிரினங்கள் செறிந்துள்ளன. மாக்ரோ மரங்கள் கடல் அரிப்பில் இருந்து கடற்கரையை பாதுகாக்கின்றன)

72) எந்த ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலையால் பாக் வளைகுடாவில் உள்ள மாங்குரோவ் காடுகள் பேரழிவை சந்தித்தன?

A) 2003ஆம் ஆண்டு

B) 2004ஆம் ஆண்டு

C) 2005ஆம் ஆண்டு

D) 2006ஆம் ஆண்டு

(குறிப்பு – பாக் வளைகுடாவில் 2004ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் ஆழிப்பேரலை (சுனாமி) ஏற்பட்டது. இது இலங்கை, இந்தியாவின் கிழக்கு கடற்கரை பகுதிகள், இந்தோனேஷியா போன்ற பகுதிகளில் பெருத்த சேதத்தை ஏற்படுத்தியது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!