Book Back QuestionsTnpsc

மனிதனும் சுற்றுச் சூழலும் Book Back Questions 9th Social Science Lesson 17

9th Social Science Lesson 17

17] மனிதனும் சுற்றுச் சூழலும்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

கி. பி. (பொ. ஆ) 1972-ஆம் ஆண்டு ஸ்டாக்ஹோம் மாநாட்டில் மனிதன் “சுற்றுச் சூழலை உருவாக்கி வடிவமைக்கிறான்” என அறிவிக்கப்பட்டது. ரியோடி ஜெனிரோ நகரில் 1992-ஆம் ஆண்டு நடைபெற்ற புவி உச்சி மாநாடு, ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி மாநாடு என்று அழைக்கப்பட்டது. (UNCED – United Nations Conference on Environment and Development)

மக்கள் தொகையியல் (Demography) என்றால் என்ன? பழங்காலத்தில் கிரேக்க மொழியில் “Demos” என்றால் மக்கள் என்றும் “Graphis” என்றால் கணக்கிடுதல் என்றும் பொருளாகும். எனவே மக்கள் தொகையியல் என்பது புள்ளியியல் முறையில், மக்கள் தொகையைக் கணக்கிடுவதாகும்.

உலக மக்கள்தொகை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜீலை 11ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இதன் மூலம் உலக மக்கள் தொகை பிரச்சனைகள் பற்றிய ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஐக்கிய நாடுகளின் வளர்ச்சி திட்ட அமைப்பு இதை 1989ஆம் ஆண்டு முதல் கொண்டாடி வருகிறது.

14ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் “பிளேக்” என்ற கொள்கை நோயினால் 30-60 சதவீதம் மக்கள் இறந்தனர் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

அதிக மக்கள் தொகை மற்றும் குறைந்த மக்கள் தொகை: அதிக மக்கள்தொகை என்பது, ஒரு நாட்டில் மக்களின் எண்ணிக்கையை விட வளங்களின் அளவு குறைவாக இருப்பதாகும். மாறாக, குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் தொகையும் அதிக அளவிலான வளமும் இருந்தால் அதனைக் குறைந்த மக்கள் தொகை என்கிறோம்

கி. பி. (பொ. ஆ) 1952இல் இந்திய அரசின் அதிகார பூர்வமான மக்கள்தொகை கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டது. இது போன்றதொரு கொள்கையை முதன் முதலில் அறிவித்த நாடு இந்தியா ஆகும். பல்வேறு வகையான குடும்பக்கட்டுப்பாட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்தியதன் மூலம் மக்கள்தொகை வளர்ச்சி கட்டுப்படுத்தப்படுகிறது.

டமாஸ்கஸ் உலகின் மிகப் பழமையான, மக்கள் தொடர்ந்து வாழ்ந்து வரும், ஒரு நகரமாகும். இங்கு 11, 000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மக்கள் வாழ்ந்து வருகின்றனர். டோக்கியோ உலகிலேயே மிகப் பெரிய நகரமாகும். இது 38 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்டது. கி. பி. (பொ. ஆ) 2016ஆம் ஆண்டின் யுனஸ்கோவின் (UNESCO) மெர்சர் (Mercer) தகவலின்படி மக்கள் சிறந்த வாழ்க்கைத் தரத்தைப் பெற்று வாழ்ந்து வருவதில் வியன்னா முதலிடமும் சூரிச் இரண்டாம் இடமும் பெற்றுள்ளன.

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. வாழும் உயிரினங்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தைப் பாதிக்கக் கூடிய காரணிகள் மற்றும் அனைத்து வெளிப்புறச் செல்வாக்குகளை ——————– என்கிறோம்.

(அ) சுற்றுச்சூழல்

(ஆ) சூழலமைப்பு

(இ) உயிர்க் காரணிகள்

(ஈ) உயிரற்றக் காரணிகள்

2. ஒவ்வோர் ஆண்டும் உலக மக்கள் தொகை தினம் —————ஆம் நாள் கடைபிடிக்கப்படுகிறது.

(அ) ஆகஸ்டு 11

(ஆ) செப்டம்பர்11

(இ) ஜீலை 11

(ஈ) ஜனவரி 11

3. மக்கள்தொகை பற்றி புள்ளியியல் விவரக் கல்வி —————- ஆகும்.

(அ) மக்கள்தொகையியல்

(ஆ) புற வடிவமைப்பியல்

(இ) சொல் பிறப்பியல்

(ஈ) நிலநடுக்கவரைவியல்

4. விலை மதிப்பு மிக்க கனிமங்கள் மற்றும் பிற புவி அமைப்பியல் கனிமங்களைச் சுரங்கங்களிலிருந்து வெட்டி எடுப்பது —————– ஆகும்.

(அ) மீன் பிடித்தல்

(ஆ) மரம் வெட்டுதல்

(இ) சுரங்கவியல்

(ஈ) விவசாயம்

5. பொருளாதார நடவடிக்கையில் இரண்டாம் நிலைத் தொழிலில் மூலப்பொருள்களிலிருந்து உற்பத்தி செய்யப்படுவன —————–

(அ) பாதி முடிக்கப்பட்ட பொருள்கள்

(ஆ) முடிக்கப்பட்ட பொருள்கள்

(இ) பொருளாதார பொருள்கள்

(ஈ) மூலப்பொருள்கள்

II. பொருத்துக:

1. ஒலிபெருக்கி – அ] ஒலி மாசுறுதல்

2. ரியோடி ஜெனிரோ பிரேசில் – ஆ] T வடிவ குடியிருப்பு

3. சிலுவை வடிவக் குடியிருப்புகள் – இ] புவி உச்சி மாநாடு

4. இயற்கை பேரிடர் – ஈ] வடிவ குடியிருப்பு

5. சிறந்து வாழும் சூழல் – உ] புவி உச்சி மாநாடு

III. பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. கூற்று (A): படுக்கை அடுக்கில் உள்ள ஓசோன் படலத்தை பாதுகாப்பு கேடயம் என்கிறோம்.

காரணம் (R): புற ஊதாக்கதிர் வீச்சு புவியை அடையாமல் தடுக்கிறது.

(அ) Aவும் Rம் சரி மற்றும் R என்பது Aன் சரியான விளக்கம்

(ஆ) A மற்றும் R இரண்டும் சரி. ஆனால், Aவானது Rன் சரியான விளக்கமல்ல

(இ) A தவறு ஆனால் R சரி

(ஈ) A மற்றும் R இரண்டும் தவறு

2. கூற்று (A): மூன்றாம் நிலைத் தொழிலில், பொருள்கள் நேரடியாக உற்பத்தி செய்யப்படாமல் உற்பத்தி செய்வதற்கான செயல்முறைகளில் உறுதுணையாக உள்ளது.

காரணம் (R): மூன்றாம் நிலைத் தொழிலில் ஈடுபடும் மக்கள் முழுமையாக சுற்றுச் சூழலுக்குச் சாதகமாகச் செயல்படுகிறார்கள்.

(அ) A மற்றும் R இரண்டும் தவறு

(ஆ) A மற்றும் R இரண்டும் சரி. ஆனால் Aவானது Rக்கு விளக்கம் தரவில்லை

(இ) A சரி ஆனால் R தவறு

(ஈ) A மற்றும் R இரண்டும் சரி. Aவானது Rக்கு சரியான விளக்கம் தருகிறது

விடைகள்:

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. சுற்றுச்சூழல், 2. ஜீலை 11, 3. மக்கள்தொகையியல், 4. சுரங்கவியல், 5. முடிக்கப்பட்ட பொருள்கள்

II. பொருத்துக:

1. இ, 2. உ, 3. ஈ, 4. அ, 5. ஆ

III. பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. Aவும் Rம் சரி மற்றும் R என்பது Aன் சரியான விளக்கம், 2. A சரி ஆனால் R தவறு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!