Book Back QuestionsTnpsc

மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும் Book Back Questions 8th Social Science Lesson 20

8th Social Science Lesson 20

20] மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

சைரஸ் சிலிண்டர் கி. மு. (பொ. ஆ. மு) 539: பண்டைய பாரசீகத்தின் முதல் மன்னரான மகா சைரஸ், அடிமைகளை விடுவித்து மக்கள் அனைவரும் தங்கள் சொந்த மதத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உண்டு என்று அறிவித்தார். இன சமத்துவத்தை நிலைநாட்டினார். மேற்கூறியவைகளும், மற்ற ஆணைகளும் கியூனிபார்ஃம் எழுத்துக்களில் அக்காடியன் மொழியில் சிலிண்டர் வடிவிலான சுட்ட களிமண்ணில் பதிவு செய்யப்பட்டன. இது ஐக்கிய நாடுகள் சபையின் ஆறு அலுவல் மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இவை உலக மனித உரிமைகள் பிரகடனத்தின் முதல் நான்கு விதிகளுக்கு இணையாக உள்ளன.

மனித உரிமைகளுக்கான உலகளாவிய அறிவிப்பு – முகவுரை: மனிதர்கள் அனைவரும் சுதந்திரமாகவே பிறக்கின்றனர். அவர்கள் மதிப்பிலும், உரிமைகளிலும் சமமானவர்கள். அவர்கள் அறிவாற்றலையும் மனசாட்சியையும் இயற்பண்பாகக் கொண்டவர்களாகவும் எல்லா மக்களிடையேயும் பொதுவான சகோதரத்துவத்தின் உணர்வை வளர்க்க கடமைப்பட்டவர்களும் ஆவர்.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10ஆம் நாள் உலக மனித உரிமைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. மனித உரிமைகளை உலக அளவில் அறிவித்த பெருமை ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையையே சாரும்.

இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவுகள்: பிரிவு 24 – குழந்தைத் தொழிலாளர் முறையைத் தடை செய்கிறது. பிரிவு 39 (f) – ஆரோக்கியமாக குழந்தைகள் வளர வழிவகைச் செய்கிறது. பிரிவு 45 – 6 வயது வரை அனைத்துக் குழந்தைகளுக்கும் ஆரம்ப கால குழந்தை பராமரிப்பு மற்றும் கல்வியை வழங்க அரசு முயல்கிறது.

1098 குழந்தைகளுக்கான உதவி மைய எண்: இது இந்தியாவில் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட 24 மணிநேர கட்டணமில்லா அவசரத் தொலைத் தொடர்பு சேவையாகும். குழந்தைத் தொழிலாளர்கள், குழந்தைத் திருமணம் மற்றும் ஏதேனும் வன்கொடுமை ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குச் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.

1978 – சர்வதேச பெண்கள் ஆண்டு. 1979 – சர்வதேச குழந்தைகள் ஆண்டு என ஐ. நா. சபை அறிவித்துள்ளது.

பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு மற்றும் நலவாழ்வுச் சட்டம், 2007: இந்தச் சட்டம் மூத்த குடிமக்களுக்கும் பெற்றோர்களுக்கும் பராமரிப்பை வழங்குவதற்கும் அவர்களின் குழந்தைகள் மற்றும் வாரிசுதாரர்களின் சட்டப்பூர்வமான கடமையாகிறது. முதுமை காலத்தில் பாதுகாப்பும் ஆதரவும் மனித உரிமைகளாக கருதப்படுகின்றன.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் __________ மனித உரிமைகளைப் பாதுகாக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

(அ) ஐ. நா. சபை

(ஆ) உச்ச நீதிமன்றம்

(இ) சர்வதேச நீதிமன்றம்

(ஈ) இவைகளில் எதுவுமில்லை

2. 1995ஆம் ஆண்டில் உலகம் முழுவதிலும் இருந்து பெண்கள் ____________ இல் கூடினர்.

(அ) பெய்ஜிங்

(ஆ) நியூயார்க்

(இ) டெல்லி

(ஈ) எதுவுமில்லை

3. தேசிய மனித உரிமைகள் ஆணையம் நிறுவப்பட்ட ஆண்டு

(அ) 1990

(ஆ) 1993

(இ) 1978

(ஈ) 1979

4. ஐ. நா. சபை 1979ஆம் ஆண்டை ___________ சர்வதேச ஆண்டாக அறிவித்தது.

(அ) பெண் குழந்தைகள்

(ஆ) குழந்தைகள்

(இ) பெண்கள்

(ஈ) இவற்றுள் எதுவுமில்லை

5. உலக மனித உரிமைகள் தினமாக அனுசரிக்கப்படும் நாள் எது?

(அ) டிசம்பர் 9

(ஆ) டிசம்பர் 10

(இ) டிசம்பர் 11

(ஈ) டிசம்பர் 12

6. மனித உரிமைகளின் நவீன சர்வதேச மகாசாசனம் என அழைக்கப்படுவது எது?

(அ) மனித உரிமைகளுக்கான உலகளாவிய அறிவிப்பு (UDHRC)

(ஆ) தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC)

(இ) மாநில மனித உரிமைகள் ஆணையம் (SHRC)

(ஈ) சர்வதேசப் பெண்கள் ஆண்டு

7. தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்படுபவர் யார்?

(அ) ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி

(ஆ) ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

(இ) குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் ஏதேனும் ஒருவர்

(ஈ) ஏதேனும் ஒரு நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி

8. உலக மனித உரிமைகள் அறிவிப்பில் உள்ள சட்டப்பிரிவுகளின் எண்ணிக்கை யாவை?

(அ) 20

(ஆ) 30

(இ) 40

(ஈ) 50

9. தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவரின் பதவிக் காலம் என்ன?

(அ) 5 ஆண்டுகள் அல்லது 62 வயது வரை

(ஆ) 5 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை

(இ) 6 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை

(ஈ) 5 ஆண்டுகள் அல்லது 70 வயது வரை

10. தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?

(அ) புது டெல்லி

(ஆ) மும்பை

(இ) அகமதாபாத்

(ஈ) கொல்கத்தா

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. ஒவ்வொரு தனிமனிதனும் கண்ணியமான வாழ்க்கை வாழ ___________ உண்டு.

2. மனித உரிமைகள் என்பது ___________ உரிமைகள்.

3. மாநில மனித உரிமைகள் ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு ____________

4. இந்திய அரசியலமைப்பின் 24வது சட்டப்பிரிவு ____________ ஐ தடை செய்கிறது.

5. ஐக்கிய நாடுகள் சபை நிறுவப்பட்ட ஆண்டு ___________

பொருத்துக:

1. எலினார் ரூஸ்வெல்ட் – உலகின் முதல் மனித உரிமைகள் சாசனம்

2. சைரஸ் சிலிண்டர் – 1997

3. பெண்களை கேலி செய்வதற்கு

ஏதிரான சட்டம் – அடிமைத் தனத்திலிருந்து விடுதலை

4. குழந்தை உதவி மைய எண் – மனித உரிமைகளுக்கான ஆணையம்

5. வாழ்வியல் உரிமைகள் – வாக்களிக்கும் உரிமை

6. அரசியல் உரிமை – 1098

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக:

1. மனித உரிமைகள் மற்றும் வாழ்வியல் உரிமைகள் ஒரே மாதிரியானவை.

2. மனித மற்றும் குடிமகனின் உரிமைகள் அறிவிப்பு இந்தியாவில் அறிவிக்கப்பட்டது.

3. 1993ஆம் ஆண்டு மனித உரிமைச் சட்டம் தேசிய மனித உரிமைகள் ஆணையம் உருவாக் வழிவகுத்தது.

4. பாதிக்கப்பட்டவர்களுக்குத் தண்டனை வழங்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் அதிகாரம் பெற்றுள்ளது.

5. மனித உரிமைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தேசிய, மாநில அளவிலான மனித உரிமைகள் ஆணையம் நிறுவப்பட்டுள்ளது.

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. தவறான இணையைக் கண்டறிக:

அ) தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஒரு சட்ட ரீதியான அமைப்பாகும்.

ஆ) தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஓர் அரசியலமைப்பு சார்ந்த அமைப்பாகும்.

இ) தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஒரு சுதந்திரமான அமைப்பாகும்.

ஈ) தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஒரு பலதரப்பு நிறுவனங்களைக் கொண்டதாகும்.

2. தேசிய மனித உரிமைகள் ஆணையம் குறித்து பின்வரும் எந்த கூற்று சரியானது அல்ல.

(அ) இது 1993இல் நிறுவப்பட்டது.

(ஆ) மனித உரிமை மீறல் வழக்குகளில் குற்றவாளியைத் தண்டிக்க ஆணையத்திற்கு எந்த உரிமையும் இல்லை.

(இ) இந்த ஆணையத்தின் தலைவரும் உறுப்பினர்களும் இந்திய உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்படுகிறார்கள்.

(ஈ) இந்த ஆணையம் தனது ஆண்டு அறிக்கையை மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு அனுப்புகிறது.

3. கூற்று: டிசம்பர் 10ஆம் நாள் மனித உரிமைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

காரணம்: இது எலினார் ரூஸ்வெல்டின் பிறந்த நாளை நினைவு கூர்கிறது.

(அ) கூற்று சரி ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

(ஆ) கூற்று சரி காரணம் கூற்றை விளக்குகிறது

(இ) கூற்று காரணம் இரண்டும் சரி

(ஈ) கூற்று காரணம் இரண்டும் தவறு

4. பின்வரும் கூற்றை ஆராய்க:

1. மாநில மனித உரிமைகள் ஆணையம் பல உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பு ஆகும்.

2. மாநில மனித உரிமைகள் ஆணையம் ஒரு தலைவர் மற்றும் மூன்று உறுப்பினர்களைக் கொண்டதாகும்.

மேற்கூறிய கூற்றுகளில் எது/எவை சரியானது/சரியானவை?

(அ) 1 மட்டும்

(ஆ) 2 மட்டும்

(இ) 1, 2

(ஈ) எதுவுமில்லை

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. ஐ. நா. சபை 2. பெய்ஜிங் 3. (1993) 4. குழந்தைகள் 5. டிசம்பர் 10

6. மனித உரிமைகளுக்கான உலகளாவிய அறிவிப்பு

7. ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி 8. (30)

9. (5 ஆண்டுகள் அல்லது 70 வயது வரை) 10. புதுடெல்லி

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. உரிமை 2. அடிப்படை 3. (17, ஏப்ரல் 1997) 4. குழந்தை தொழிலாளர் முறையை

5. (24, அக்டோபர் 1945)

பொருத்துக: (விடைகள்)

1. எலினார் ரூஸ்வெல்ட் – மனித உரிமைகளுக்கான ஆணையம்

2. சைரஸ் சிலிண்டர் – உலகின் முதல் மனித உரிமைகள் சாசனம்

3. பெண்களை கேலி செய்வதற்கு எதிரான சட்டம் – 1997

4. குழந்தை உதவி மைய எண் – 1098

5. வாழ்வியல் உரிமைகள் – அடிமைத் தனத்திலிருந்து விடுதலை

6. அரசியல் உரிமை – வாக்களிக்கும் உரிமை

சரியா / தவறா எனக் குறிப்பிடுக: (விடைகள்)

1. தவறு

சரியான விடை: மனித உரிமைகள் மற்றும் வாழ்வியல் உரிமைகள் வெவ்வேறானவை.

2. தவறு

சரியான விடை: மனித மற்றும் குடிமகனின் உரிமைகள் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் வேரூன்றியிருந்தது.

3. சரி

4. தவறு

சரியான விடை: 1948 மனித உரிமைகளுக்கான உலகளாவிய அறிவிப்பு தேசிய மனித உரிமைகள் ஆணையம் உருவாக வழிவகுத்தது.

5. சரி

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றைத் தேர்வு செய்க:

1. தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஓர் அரசியலமைப்புச் சார்ந்த அமைப்பாகும்.

2. இந்த ஆணையத்தின் தலைவரும் உறுப்பினர்களும் இந்திய உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்படுகிறார்கள்.

3. கூற்று சரி ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.

4. 1 மட்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!