Book Back QuestionsTnpsc

மரபியல் Book Back Questions 10th Science Lesson 18

10th Science Lesson 18

18] மரபியல்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

புன்னட் கட்டம் என்பது R.C.புன்னட்டால் உருவாக்கப்பட்ட சோதனைப் பலகை ஆகும். மரபியல் கலப்பில் ஜீனோடைப் எவ்வாறு உருவாகிறது என்பதைத் தெரிந்து கொள்ளும் ஒரு வரைபட முறையாகும்.

மரபியலின் குரோமோசோம்களின் பங்கு பற்றிய கண்டுபிடிப்பிற்கான நோபல் பரிசு 1993ஆம் ஆண்டு T.H.மோர்கனுக்கு வழங்கப்பட்டது.

டீலோமியர்கள் ஒவ்வொரு செல்லின் முதுமையை உணர்த்தும் கடிகாரங்களாகச் செயல்படுகின்றன. டீலோமியர்கள், குரோமோசோம்களில் காணப்படும் பாதுகாப்பு நியூக்ளியோடைட் தொடர்வரிசை ஆகும். ஒவ்வொரு முறை செல் பகுப்படையும் போதும் அவை குறுகல் அடைகின்றன. டீலோமியர்கள் மிகவும் குறுகி, தங்கள் வேலையைச் செய்ய முடியாத போது, செல்கள் முதுமையடைய காரணமாகின்றன.

டி.என்.ஏ நைட்ரஜன் காரம் இணைவுறுதலுக்கான சார்காஃப் விதி: எட்வின் சார்காஃப் கூற்றுப்படி, டி.என்.ஏவில் எப்பொழுதும் அடினைனின் விகிதமும் தைமினின் விகிதமும் சமமாக உள்ளன. மேலும், குவானைனின் விகிதமும் சைட்டோசினின் விகிதமும் எப்பொழுதும் சமமாக உள்ளன.

ஒற்றை ஜீனில் ஏற்படும் திடீர் மாற்றத்தால் கதிர் அரிவாள் இரத்த சோகை நோய் ஏற்படுகிறது. இந்த ஜீனில் ஏற்படும் மாற்றம், ஹீமோ குளோபின் மூலக்கூறில் உள்ள புரதப் பகுதியின் அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. புரத மூலக்கூறில் ஏற்பட்ட மாற்றத்தினால், இந்த ஹீமோகுளோபினைக் கொண்டுள்ள சிவப்பு இரத்த செல்கள் கதிர் அரிவாள் வடிவத்தைப் பெறுகின்றன.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. மெண்டலின் கருத்துப்படி அல்லீல்கள் கீழ்க்கண்ட பண்புகளைப் பெற்றுள்ன.

(அ) ஒரு ஜோடி ஜீன்கள்

(ஆ) பண்புகளை நிர்ணயிப்பது

(இ) மரபணுக்களை (ஜீன்) உருவாக்குவது

(ஈ) ஒடுங்கு காரணிகள்

2. எந்நிகழ்ச்சியின் காரணமாக 9:3:3:1 உருவாகிறது?

(அ) பிரிதல்

(ஆ) குறுக்கே கலத்தல்

(இ) சார்பின்றி ஒதுங்குதல்

(ஈ) ஒடுங்கு தன்மை

3. செல் பகுப்படையும் போது, ஸ்பின்டில் நார்கள் குரோமோசோமுடன் இணையும் பகுதி

(அ) குரோமோமியர்

(ஆ) சென்ட்ரோசோம்

(இ) சென்ட்ரோமியர்

(ஈ) குரோமோனீமா

4. சென்ட்ரோமியர் மையத்தில் காணப்படுவது ______________ வகை குரோமோசோம்

(அ) டீலோ சென்ட்ரிக்

(ஆ) மெட்டா சென்ட்ரிக்

(இ) சப்-மெட்டா சென்ட்ரிக்

(ஈ) அக்ரோ சென்ட்ரிக்

5. டி.என்.ஏ வின் முதுகெலும்பாக _____________ உள்ளது.

(அ) டீ ஆக்ஸி ரைபோஸ் சர்க்கரை

(ஆ) பாஸ்பேட்

(இ) நைட்ரஜன் காரங்கள்

(ஈ) சர்க்கரை பாஸ்பேட்

6. ஓகசாகி துண்டுகளை ஒன்றாக இணைப்பது _____________

(அ) ஹெலிகேஸ்

(ஆ) டி.என்.ஏ.பாலிமெரேஸ்

(இ) ஆர்.என்.ஏ.பிரைமர்

(ஈ) டி.என்.ஏ.லிகேஸ்

7. மனிதனில் காணப்படும் குரோமோசோம்களின் எண்ணிக்கை ___________

(அ) 22 ஜோடி ஆட்டோசோம்கள் மற்றும் 1 ஜோடி அல்லோசோம்கள்

(ஆ) 22 ஆட்டோசோம்கள் மற்றும் 1 அல்லோசோம்

(இ) 46 ஆட்டோசோம்கள்

(ஈ) 46 ஜோடி ஆட்டோசோம்கள் மற்றும் 1 ஜோடி அல்லோசோம்கள்

8. பன்மய நிலையில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குரோமோசோம்களை இழத்தல் _________ என அழைக்கப்படுகிறது.

(அ) நான்மய நிலை

(ஆ) அன்யூபிளாய்டி

(இ) யூபிளாய்டி

(ஈ) பல பன்மய நிலை

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. மெண்டலின் ஒரு ஜோடி வேறுபட்ட பண்புகள் _____________ என அழைக்கப்படுகின்றது.

2. ஒரு குறிப்பிட்ட பண்பின் (ஜீனின்) வெளித்தோற்றம் ____________ எனப்படும்.

3. ஒவ்வொரு செல்லின் உட்கருவில் காணப்படும் மெல்லிய நூல் போன்ற அமைப்புகள் _________ என அழைக்கப்படுகின்றன.

4. ஒரு டி.என்.ஏ இரண்டு _____________ இழைகளால் ஆனது.

5. ஒரு ஜீன் அல்லது குரோமோசோம் ஆகியவற்றின் அமைப்பு அல்லது அளவுகளில் ஏற்படக்கூடிய பரம்பரையாகத் தொடரக்கூடிய மாற்றங்கள் ___________ என அழைக்கப்படுகின்றன.

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக

1. மெண்டலின் இரு பண்பு கலப்பு விகிதம் F2 தலைமுறையில் 3:1 ஆகும்.

2. ஒடுங்கு பண்பானது ஓங்கு பண்பினால் மாற்றப்படுகிறது.

3. ஒவ்வொரு கேமீட்டும் ஜீனின் ஒரே ஒரு அல்லீலைக் கொண்டுள்ளது.

4. ஜீன் அமைப்பில் வேறுபட்ட இரண்டு தாவரங்களைக் கலப்பினம் செய்து பெறப்பட்ட சந்ததி கலப்புயிரி ஆகும்.

5. சில குரோமோசோம்களில் டீலோமியர் எனப்படும் நீண்ட குமிழ் போன்ற இணையுறுப்பு காணப்படுகிறது.

6. டி.என்.ஏ பாலிமெரேஸ் நொதியின் உதவியுடன் புதிய நியூக்ளியோடைடுகள் சேர்க்கப்பட்டு புதிய நிரப்பு டி.என்.ஏ இழை உருவாகிறது.

7. டவுன் நோய்க் கூட்டு அறிகுறி என்பது 45 குரோமோசோம்கள் உள்ள மரபியல் நிலை.

பொருத்துக:

1. ஆட்டோசோம்கள் – டிரைசோமி 21

2. இருமய நிலை – 9:3:3:1

3.அல்லோசோம்கள் – 22 ஜோடி குரோமோசோம்கள்

4. டவுன் நோய்க் கூட்டு அறிகுறி – 2n

5. இருபண்புக்கலப்பு – 23வது ஜோடி குரோமோசோம்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. பண்புகளை நிர்ணயிப்பது, 2. சார்பின்றி ஒதுங்குதல், 3. சென்ட்ரோமியர், 4. மெட்டா சென்ட்ரிக், 5. நைட்ரஜன் காரங்கள்,
6. டி.என்.ஏ.லிகேஸ், 7. 22 ஜோடி ஆட்டோசோம்கள் மற்றும் 1 ஜோடி அல்லோசோம்கள், 8. அன்யூப்பிளாய்டி

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. அல்லீல்கள் அல்லது அல்லிலோமார்ஃபுகள், 2. பினோடைப், 3. குரோமோசோம், 4. பாலிநியூக்ளியோடைடு, 5. சடுதி மாற்றம்

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக:

1. தவறு

சரியான விடை: மெண்டலின் ஒரு பண்பு கலப்பு விகிதம் க2 தலைமுறையில் 3 : 1 ஆகும்.

2. தவறு

சரியான விடை: ஒடுங்கு பண்பானது ஓங்கு பண்பினால் மறைக்கப்படுகிறது.

3. சரி

4. சரி

5. தவறு

சரியான விடை: சில குரோமோசோம்களில் சாட்டிலைட் எனப்படும். நீண்ட குமிழ் போன்ற இணையுறுப்பு காணப்படுகிறது.

6. சரி

7. தவறு

சரியான விடை: டவுன் நோய் கூட்டு அறிகுறி என்பது 47 குரோமோசோம்கள் உள்ள மரபியல் நிலை.

பொருத்துக: (விடைகள்)

1. ஆட்டோசோம்கள் – 22வது ஜோடி குரோமோசோம்கள்

2. இருமய நிலை – 2n

3. அல்லோசோம்கள் – 23வது ஜோடி குரோமோசோம்கள்

4. டவுன் நோய்க் கூட்டு அறிகுறி – டிரைசோமி 21

5. இருபண்புக் கலப்பு – 9:3:3:1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!