Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Book Back QuestionsTnpsc

மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி Book Back Questions 7th Social Science Lesson 13

7th Social Science Lesson 13

13] மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

சத்ர (குடை) பதி (தலைவன் அல்லது பிரபு) எனும் சமஸ்கிருதச் சொல் அரசன் அல்லது பேரரசன் என்பதற்கு இணையானது. இச்சொல்லை மராத்தியர்கள் குறிப்பாக சிவாஜி பயன்படுத்தினார்.

சாம்பாஜி, தம்முடைய குடும்ப அர்ச்சகரான கவிகலாஷ் என்பவரின் ஒழுக்கக்கேடான செல்வாக்கிற்கு ஆட்பட்டிருந்தார். சிவாஜி ஆக்ராவிலிருந்து தப்பியபோது வாரணாசியில் கவிகலாஷ், சாம்பஜியின் பாதுகாவலராய் இருந்தார். பின்னர், சாம்பாஜியைப் பத்திரமாக ரெய்கார்க்கு அழைத்து வந்தார். அனைத்து விடயங்களுக்கும் சாம்பாஜி அவரின் வழிகாட்டுதலை எதிர்பார்த்ததால் அரச சபையில் அவரின் முழுமையான மேலாதிக்கம் நிலவியது. கவிகலாஷ் புகழ்பெற்ற அறிஞரும் கவிஞருமாவார்; ஆனால், அவர் மாந்திரீகம் செய்பவராகவுமிருந்தார். இதனால் அரசவையில் இருந்த வைதீக இந்துக்கள் அவர்மீது ஆழமான வெறுப்பைக் கொண்டிருந்தனர். முகலாயப் படைகள் சாம்பாஜியைக் கைது செய்த போது கவிகலேஷீம் உடனிருந்தார். ஆகவே, இருவரும் ஒளரங்கசீப்பின் கட்டளையின்படி அனைத்து வகைப்பட்ட சித்திரவதைகளுக்கும் உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. சிவாஜியின் ஆசிரியராகவும் மற்றும் பாதுகாவரராகவும் இருந்தவர் யார்?

(அ) தாதாஜி கொண்ட தேவ்

(ஆ) கவிகலாஷ்

(இ) ஜீஜாபாய்

(ஈ) ராம்தாஸ்

2. மராத்திய பிரதம மந்திரிகள் எவ்வாறு அழைக்கப்பட்டார்கள்?

(அ) தேஷ்முக்

(ஆ) பேஷ்வா

(இ) பண்டிட்ராவ்

(ஈ) பட்டீல்

3. சாம்பாஜியின் தினசரி வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்திய அவருடைய குரு யார்?

(அ) ஷாகு

(ஆ) அனாஜி தத்தா

(இ) தாதாஜி கொண்ட தேவ்

(ஈ) கவிகலாஷ்

4. சிவாஜியின் ராணுவத்தில் ஆரம்ப கட்டத்தில் அவருக்குப் பக்கபலமாக இருந்தது.

(அ) பீரங்கிப்படை

(ஆ) குதிரைப்படை

(இ) காலட்படை

(ஈ) யானைப்படை

5. குஜராத் மற்றும் மாளவத்தை முகலாய ஆதிக்கத்திலிருந்து விடுபட அவர்களுக்கெதிராக போரை அறிவித்தவர்.

(அ) பாலாஜி விஸ்வநாத்

(ஆ) பாஜிராவ்

(இ) பாலாஜி பாஜிராவ்

(ஈ) ஷாகு

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. மகாராஷ்டிராவில் பரவிய ———– இயக்கம் மராத்திய மக்களிடையே விழிப்புணர்வும் இணக்கமும் ஏற்பட உதவியது.

2. பேஷ்வாக்ககளின் முக்கிய வருவாய் அலுவலர் ——–

3. மராத்தியர்களின் குறுகிய காலப் பேரரசு 1761ஆம் ஆண்டு ——- இடத்தில் சோகமாய் முடிந்தது.

4. அஷ்டவிரதானில் இடம் பெற்ற வெளியுறவுத்துறை அமைச்சர் ——–

5. சிவாஜியைத் தொடர்ந்து ———- வுடனான சச்சரவிற்குப் பின்னர் சாம்பாஜி ஆட்சிப் பொறுப்பேற்றார்.

III. பொருத்துக:

அ – ஆ

1. ஷாஜி போன்ஸ்லே – அ) சிவாஜியின் தாய்

2. சாம்பாஜி – ஆ) பீஜப்பூர் தளபதி

3. ஷாகு – இ) சிவாஜியின் தந்தை

4. ஜீஜாபாய் – ஈ) சிவாஜியின் மகன்

5. அப்சல்கான் – உ) சிவாஜியின் பேரன்

IV. சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக:

1. மலை மற்றும் மலைப் பள்ளத்தாக்குகள் மராத்தியர்களை அந்நிய படையெடுப்பாளர்களிடமிருந்து பாதுகாத்தது.

2. பக்தி இயக்கத்தின் மந்திரங்கள் சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டது, அனைத்து சமூகத்தினராலும் பக்தி இயக்கப் பாடல்கள் பாடப்பட்டன.

3. சிவாஜி புரந்தரை முகலாயர்களிடமிருந்து கைப்பற்றினார்.

4. தேஷ்முக்குகள் கிராமங்களில் வாழ்ந்தனர், அவர்கள் 20 முதல் 200 வரையிலான கிராமங்களில் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

5. அப்தாலி டெல்லியை கைப்பற்றுவதற்கு பத்துமுறை படையெடுத்தார்.

V. பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. கூற்று: மராத்தியப் போர்வீரர்கள் தங்கள் வசிப்பிடத்திற்குத் தொலைவில் உள்ள கோட்டைகளிலும், நகரங்களிலும் வாழ்ந்தனர்.

காரணம்: மராத்திய வீரர்கள் ஒவ்வோர் ஆண்டும் போர்க்களத்திலிருந்து தங்கள் நிலங்களின் வேளாண் பணிகளுக்காகச் சென்று வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

(அ) கூற்றிற்கான காரணம் சரி

(ஆ) கூற்றிற்கான காரணம் தவறு

(இ) கூற்று சரி, காரணம் தவறு

(ஈ) கூற்று மற்றும் காரணம் தவறு

2. வாக்கியம் I: செய்திப்பரிமாற்றக் கடிதங்கள் அடங்கிய கோப்புகளையும், கணக்குப் பதிவேடுகளையும் மதிப்பீடு செய்கையில், ஆவணங்களைத் துல்லியமாகப் பராமரிப்பதில் பேஷ்வாக்கள் கவனமுடன் இருந்தனர்.

வாக்கியம் II: இரண்டாம் பானிப்பட் போரில் பீரங்கிப்படை முக்கியத்துவம் பெற்றிருந்தது.

(அ) I சரி

(ஆ) II சரி

(இ) I மற்றும் II சரி

(ஈ) I மற்றும் II தவறு

3. பொருந்தாததைத் தேர்ந்தெடுக்கவும்

ரகுஜி, ஷாஜி போன்ஸ்லே, சிவாஜி, சாம்பாஜி, ஷாகு.

4. தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக:

1. கெய்க்வாட் – பரோடா

2. பேஷ்வா – நாக்பூர்

3. ஹோல்கர் – இந்தூர்

4. சிந்தியா – குவாலியர்

5. காலவரிசைப்படி நிகழ்வுகளை வரிசைப்படுத்துக:

I. சிவாஜி, தம் பாதுகாவலர் இறந்தவுடன் சுதந்திரமான அரசரானார்.

II. பாலாஜி பாஜிராவ் அரசப்பதவி ஏற்றார்.

III. சிவாஜியின் தந்தை இறந்தவுடன் ஜாவலியின் மீது படையெடுத்தார்.

IV. பாலாஜி விஸ்வநாத் பேஷ்வாவாக பொறுப்பேற்றார்.

விடைகள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. தாதாஜி கொண்ட தேவ், 2. பேஷ்வா, 3. கவிகலாஷ், 4. காலட்படை, 5. பாஜிராவ்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. பக்தி, 2. காமவிஸ்தார், 3. பானிபட், 4. சுமந்த் அல்லது துபிர், 5. அனாஜி தத்தா

III. பொருத்துக:

1. இ, 2. ஈ, 3. உ, 4. அ, 5. ஆ

IV. சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக:

1. சரி, 2. சரி, 3. சரி, 4. சரி, 5. 9முறை

V. பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. கூற்றிற்கான காரணம் சரி, 2. I மற்றும் II சரி, 3. ரகுஜி, 4. பேஷ்வா – நாக்பூர், 5. சிவாஜி, தம் பாதுகாவலர் இறந்தவுடன் சுதந்திரமான அரசரானார், சிவாஜியின் தந்தை இறந்தவுடன் ஜாவலியின் மீது படையெடுத்தார், பாலாஜி விஸ்வநாத் பேஷ்வாவாக பொறுப்பேற்றார், பாலாஜி பாஜிராவ் அரசப்பதவி ஏற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!