Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Book Back QuestionsTnpsc

மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது Book Back Questions 8th Social Science Lesson 17

8th Social Science Lesson 17

17] மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

குடியரசுத் தலைவர் மாநில ஆளுநரை நியமிக்கும் போது மத்திய அமைச்சரவையின் ஆலோசனையின்படி செயல்படுகிறார். மேலும் தொடர்புடைய மாநில அரசையும் கலந்தாலோசிக்கிறார். பொதுவாக ஒருவர் ஆளுநராக அவரது சொந்த மாநிலத்தில் நியமிக்கப்படுவது இல்லை.

இந்தியாவில் தற்போது ஆறு மாநிலங்களில் மட்டும் சட்ட மன்ற மேலவை நடைமுறையில் உள்ளது. அவை பீகார், உத்திரப்பிரதேசம், மகாராஷ்டிரம், கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகும்.

மாநில சட்ட மன்றமும் சாதாரண அல்லது பண மசோதாக்களை நிறைவேற்றுவதில் பாராளுமன்றம் பின்பற்றும் நடைமுறைகளையே பின்பற்றுகிறது. சட்டமன்ற பேரவை சட்ட மன்ற மேலவையைக் காட்டிலும் அதிக அதிகாரம் கொண்டதாகும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. ஒரு மாநிலத்தின் ஆளுநர் யாரால் நியமிக்கப்படுகிறார்?

(அ) குடியரசுத் தலைவர்

(ஆ) துணைக் குடியரசுத் தலைவர்

(இ) பிரதம மந்திரி

(ஈ) முதலமைச்சர்

2. மாநில அமைச்சரவைக் குழுவின் தலைவர்

(அ) ஆளுநர்

(ஆ) முதலமைச்சர்

(இ) சபாநாயகர்

(ஈ) உள்துறை அமைச்சர்

3. மாநில சட்டமன்ற கூட்டத்தைக் கூட்டவும், ஒத்தி வைக்கவும் அதிகாரம் பெற்றவர்.

(அ) உள்துறை அமைச்சர்

(ஆ) குடியரசுத் தலைவர்

(இ) சபாநாயகர்

(ஈ) ஆளுநர்

4. உயர் நீதி மன்ற நீதிபதிகளை நியமிப்பதில் பங்கு பெறாதவர் யார்?

(அ) ஆளுநர்

(ஆ) முதலமைச்சர்

(இ) உயர் நீதி மன்ற தலைமை நீதிபதி

(ஈ) குடியரசுத் தலைவர்

5. உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயது

(அ) 62

(ஆ) 64

(இ) 65

(ஈ) 58

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. இந்தியாவில் உள்ள மொத்த மாநிலங்களின் எண்ணிக்கை ___________ ஆகும்.

2. ஆளுநரின் பதவிக்காலம் ___________ ஆண்டுகள் ஆகும்.

3. மாவட்ட நீதிபதிகள் __________ ஆல் நியமிக்கப்படுகின்றனர்.

4. ஆளுநர் ஒரு மாநிலத்தின் ___________ ஆவார்.

5. ஒருவர் சட்டப்பேரவை உறுப்பினராக ____________ வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.

பொருத்துக:

1. ஆளுநர் – கீழவை

2. முதலமைச்சர் – பெயரளவுத் தலைவர்

3. சட்டமன்ற பேரவை – மேலவை

4. சட்டமன்ற மேலவை – உண்மையான தலைவர்

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக:

1. முதலமைச்சர் மாநிலத்தின் தலைமை நிர்வாகி ஆவார்.

2. ஆளுநர் சட்ட மன்றத்திற்கு இரண்டு ஆங்கிலோ இந்திய உறுப்பினர்களை நியமிக்கிறார்.

3. உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை நிலையாகவும் ஒரே மாதிரியாகவும் இருப்பதில்லை.

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் கீழ்கண்டவர்களுள் யாரைத் தேர்ந்தெடுப்பதில் பங்கு பெறுகின்றனர்.

i. குடியரசுத் தலைவர்

ii. துணை குடியரசுத் தலைவர்

iii. ராஜ்ய சபை உறுப்பினர்கள்

iv. சட்டமன்ற மேலவை உறுப்பினர்கள்

(அ) i, ii & iii சரி

(ஆ) i மற்றும் iii சரி

(இ) i, iii மற்றும் iv சரி

(ஈ) i, ii, iii மற்றும் iv சரி

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. குடியரசுத் தலைவர் 2. முதலமைச்சர் 3. ஆளுநர் 4. முதலமைச்சர் 5. (62)

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. (29) 2. ஐந்து 3. ஆளுநரால் 4. நிர்வாகத் தலைவர் 5. (25)

பொருத்துக: (விடைகள்)

1. ஆளுநர் – பெயரளவுத் தலைவர்

2. முதலமைச்சர் – உண்மையான தலைவர்

3. சட்டமன்ற பேரவை – கீழவை

4. சட்டமன்ற மேலவை – மேலவை

சரியா / தவறா எனக் குறிப்பிடுக:

1. சரி

2. தவறு

சரியான விடை: ஆளுநர் சட்டமன்றத்திற்கு ஒரு ஆங்கிலோ இந்திய உறுப்பினர்களை நியமிக்கிறார்.

3. சரி

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றைத் தேர்வு செய்க:

1. i iii மற்றம் iv சரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!