Book Back QuestionsTnpsc

மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும் Book Back Questions 6th Social Science Lesson 10

6th Social Science Lesson 10

10] மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

சமணம் (Jain) என்னும் சொல் ஜினா (Jina) என்ற சமஸ்கிருத சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும். அதன் பொருள் தன்னையும், வெளியுலகத்தையும் வெல்வது என்பதாகும்.

இயற்பெயர் – வர்த்தமானர்; பிறப்பு – வைசாலிக்கு அருகேயுள்ள குந்த கிராமம், பீகார்; பெற்றோர் – சித்தார்த்தர், திரிசலா; இறப்பு – பவபுரி-பீகார்.

மகாவீரரின் தலைமைச் சீடரான கௌதமசுவாமி, மகாவீரரின் போதனைகளைத் தொகுத்தார். அதன் பெயர் ஆகம சித்தாந்தம் எனப்படும்.

கர்மா அல்லது கர்மவினை என்றால் என்ன? இப்பிறவியில் ஒருவர் செய்யும் செயல்களே அவருடைய/அவளுடைய இப்பிறவியின் பிற்பகுதி வாழ்ககையையும், அடுத்த பிறவியில் அவர் வாழப்போகும் வாழ்க்கையையும் தீர்மானிக்கிறது என்ற நம்பிக்கை ஆகும்.

மோட்சம் என்பது பிறப்பு மற்றும் இறப்பின் சுழற்சியில் இருந்து விடுதலை பெறுதல் ஆகும்.

இயற்பெயர் – சித்தார்த்தா; பிறப்பு – லும்பினி தோட்டம் நேபாளம்; பெற்றோர் – சுத்தோதனா, மாயாதேவி; இறப்பு – குசி நகரம், உ. பி.

சைத்தியம் – ஒரு பௌத்தக் கோவில் அல்லது தியானக் கூடம்; விகாரைகள் – மடாலயங்கள்/துறவிகள் வாழும் இடங்கள்; ஸ்தூபி – புத்தருடைய உடல் உறுப்புகளின் எஞ்சிய பாகங்கள் மீது கட்டப்பட்டிருக்கும் கட்டடம். இவை கலைத்திறமை வாய்ந்த நினைவுச் சின்னங்கள் ஆகும்.

சுவரோவியங்கள்: மகாராஷ்டிர மாநிலம் ஒளரங்காபாத்தில் உள்ள அஜந்தா குகைகளின் சுவர்களிலும் மேற்கூரையிலும் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் ஜாதக கதைகளை சித்தரிக்கின்றன.

இடை வழி (நடுவு நிலை வழி): உலக சுகங்களின் மீது தீவிரமான பற்றும் இல்லாமல், அதே சமயம் கடுமையான தவ வாழ்வையும் மேற்கொள்ளாமல் இருப்பதைக் குறிக்கிறது.

பௌத்த மாநாடுகள்: முதலாவது – இராஜகிருதம்; இரண்டாவது – வைசாலி; மூன்றாவது – பாடலிபுத்திரம்; நான்காவது – காஷ்மீர்.

ஜாதகக் கதைகள்: ஜாதகக் கதைகள் புகழ் பெற்றவை. புத்தர் முந்தைய பிறவிகளில் மனிதராகவும், விலங்காகவும் இருந்ததைக் குறித்த கதைகளாகும். இவை அறநெறிகளைக் கூறுவன ஆகும்.

மரங்கொத்திப் பறவையும் சிங்கமும் (ஜாதகக் கதை): முன்னொரு காலத்தில் ஒரு மரங்கொத்திப் பறவையும் ஒரு சிங்கமும் வாழ்ந்து வந்தன. ஒரு நாள் சிங்கம் ஒரு காட்டு எருமையை வேட்டையாடி உண்ணத் தொடங்கியது. அவ்வாறு உண்ணும்போது ஒரு பெரிய எலும்பு சிங்கத்தின் தொண்டையில் சிக்கிக் கொண்டது. சிங்கத்தால் அந்த எலும்பை எடுக்க முடியவில்லை. சிங்கத்திற்குக் கடுமையாக வலித்தது. இரக்க மனம் கொண்ட மரங்கொத்திப் பறவை சிங்கத்திற்கு எலும்பை எடுக்க உதவி செய்வதாகக் கூறியது. இருந்த போதிலும் எலும்பை எடுக்கும் போது தன்னை சிங்கம் விழுங்கிவிட மாட்டேன் என்று சத்தியம் செய்து கொடுத்தால் மட்டுமே எலும்பை எடுக்க முடியும் என்று மரங்கொத்தி கூறியது. சிங்கமும் மகிழ்ச்சியாக ஒத்துக்கொண்டு மரங்கொத்தியின் முன்னால் தனது வாயைத் திறந்தது. சிங்கத்தின் வாய்க்குள் நுழைந்த மரங்கொத்தி எளிதாக அந்த எலும்பை வெளியே எடுத்துவிட்டது.

சிங்கமும் தனது வாக்குறுதியைக் காப்பாற்றியது மரங்கொத்திப் பறவை பறந்து சென்றது. பிறிதொருநாள் அதே சிங்கம் மற்றொரு காட்டெருமையைக் கொன்றது. சிங்கத்தோடு சேர்ந்து உண்ணலாம் என்று நினைப்பில் மரங்கொத்தி தனக்கும் சிறிது மாமிசம் தருமாறு சிங்கத்தைக் கேட்டது. மரங்கொத்தி ஏமாற்றம் அடையும் வகையில் சிங்கம் தனது உணவில் மரங்கொத்திக்குப் பங்குதர அப்பட்டமாக மறுத்ததோடு, எவ்வளவு துணிச்சல் இருந்தால் என்னிடம் மறுபடியும் சகாயம் செய்யும்படி கேட்பாய்? உனக்கு நான் ஏற்கனவே நிறையச் செய்தாயிற்று என்றது. சிங்கம் எதைப்பற்றிப் பேசுகின்றது என்று மரங்கொத்திக்குப் புரியவில்லை. பின்னர் சிங்கம் தெளிவு படுத்தியது. “நீ எனது தொண்டையிலிருந்து எலும்பை எடுக்கிறபோது, உன்னை விழுங்காமல் விட்டுவிட்டேன். அதற்காக நீ எனக்கு நன்றி சொல்ல வேண்டும். இப்போது என்னிடமிருந்து எதையும் எதிர்பார்க்காதே போய்விடு” என்றது. “நன்றியில்லாத இந்த ஜென்மத்திற்கு உதவி செய்தது என்னுடைய தவறு” என மரங்கொத்தி தனக்குத்தானே சொல்லிக்கொண்டது. மேலும் இதைப்போலத் தகுதியற்ற ஒருவரின் மேல் கோபம் கொள்வதில் அல்லது வருத்தம் அடைவதில் எப்பயனுமில்லை என்று கூறிப்பறந்தது.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. பௌத்த நூல்களின் பெயர் என்ன?

(அ) அங்கங்கள்

(ஆ) திரிபிடகங்கள்

(இ) திருக்குறள்

(ஈ) நாலடியார்

2. சமணத்தின் முதல் தீர்த்தங்கரர் யார்?

(அ) ரிஷபா

(ஆ) பார்சவ

(இ) வர்தமான

(ஈ) புத்தர்

3. சமணத்தின் எத்தனை தீர்த்தங்கரர்கள் இருந்தனர்?

(அ) 23

(ஆ) 24

(இ) 25

(ஈ) 26

4. மூன்றாம் பௌத்த சபை எங்குக் கூட்டப்பட்டது?

(அ) ராஜகிரகம்

(ஆ) வைசாலி

(இ) பாடலிபுத்திரம்

(ஈ) காஷ்மீர்

5. புத்தர் தனது முதல் போதனை உரையை எங்கு நிகழ்த்தினார்?

(அ) லும்பினி

(ஆ) சாரநாத்

(இ) தட்சசீலம்

(ஈ) புத்தகயா

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. கூற்று: ஒரு சாதாரண மனிதரால் உபநிடதங்களைப் புரிந்து கொள்ள இயலாது.

காரணம்: உபநிடதங்கள் மிகவும் தத்துவம் சார்ந்தவை.

(அ) கூற்றும் அதன் காரணமும் சரியானவை

(ஆ) கூற்று தவறானது

(இ) கூற்று சரியானது; ஆனால் அதற்கான காரணம் தவறானது

(ஈ) கூற்று காரணம் ஆகிய இரண்டுமே தவறு

2. கூற்று: ஜாதகங்கள் புகழ் பெற்ற கதைகளாகும்.

காரணம்: அஜந்தா குகையின் சுவர்களிலும் மேற்கூரையிலும் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் ஜாதகக் கதைகளைச் சித்தரிக்கின்றன.

(அ) கூற்றும் அதற்கான காரணமும் சரி

(ஆ) கூற்று தவறு

(இ) கூற்று சரி; ஆனால் அதற்கான காரணம் தவறு

(ஈ) கூற்றும் அதற்கான காரணம் ஆகிய இரண்டும் தவறு

3. சரியான விடையைக் கண்டறியவும்: விகாரைகள் எதற்காகப் பயன்படுத்தப்பட்டன?

1. கல்விக் கூடமாக 2. பௌத்தத் துறவிகளின் தங்குமிடம்

3. புனிதப் பயணிகள் தங்குவதற்காக 4. வழிபாட்டுக் கூடம்

(அ) 2 சரி

(ஆ) 1 மற்றும் 3 சரி

(இ) 1, 2, 4 ஆகியவை சரி

(ஈ) 1 மற்றும் 4 சரி

4. சமணமும் பௌத்தமும் உருவாவதற்கு கீழ்க்கண்டக் கூற்றுகளைக் காரணமாகக் கருதலாமா?

1. வேள்விச்சடங்குகள் பெருஞ்செலவு மிக்கதாக இருந்தன.

2. மூடநம்பிக்கைகளும் பழக்கவழக்கங்களும் சாதாரண மனிதர்களைக் குழப்பமுறச் செய்தன.

மேற்சொல்லப்பட்ட கூற்றில்/கூற்றுகளில், எது/எவை சரியானது/சரியானவை:

(அ) 1 மட்டும்

(ஆ) 2 மட்டும்

(இ) 1 மற்றும் 2

(இ) 1 மற்றும் 2ம் இல்லை

5. சமணம் குறித்த கீழ்க்கண்டவற்றுள் எது சரியானது?

(அ) உலகைக் கடவுள் தோற்றுவித்தவர் கடவுள் என்பதைச் சமணம் மறுக்கிறது.

(ஆ) உலகைத் தோற்றுவித்தவர் கடவுள் என்பதை சமணம் ஒத்துக் கொள்கிறது.

(இ) சமணத்தின் அடிப்படைத் தத்துவம் சிலை வழிபாடாகும்.

(ஈ) இறுதித் தீர்ப்பு எனும் நம்பிக்கையைச் சமணம் ஒத்துக் கொள்கிறது.

6. சித்தார்த்த கௌதமர் குறித்து கீழே காண்பனவற்றுள் ஒன்றைத் தவிர மற்ற அனைத்தும் சரி.

(அ) இந்து மதத்தை நிறுவியவர் அவரே

(ஆ) அவர் நேபாளத்தில் பிறந்தார்

(இ) அவர் நிர்வாணம் அடைந்தார்

(ஈ) அவர் சாக்கியமுனி என்று அறியப்பட்டார்

பொருந்தாததை வட்டமிடு:

பார்சவா, மகாவீரர், புத்தர், ரிஷபர்

தவறான இணையைக் கண்டறிக:

(அ) அகிம்சை – காயப்படுத்தாமல் இருத்தல்

(ஆ) சத்யா – உண்மைபேசுதல்

(இ) அஸ்தேய – திருடாமை

(ஈ) பிரம்மச்சரியா – திருமண நிலை

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. மகாவீரரின் கோட்பாடு _________ என்று அழைக்கப்படுகிறது.

2. __________ என்பது துன்பங்களிலிருந்தும் மறுபிறவியிலிருந்தும் விடுதலை பெற்ற ஒரு நிலை.

3. பௌத்தத்தை நிறுவியவர் __________ ஆவார்.

4. காஞ்சிபுரத்திலுள்ள, திருப்பருத்திக்குன்றம் என்னும் கிராமம் ஒரு காலத்தில் _________ என்று அழைக்கப்பட்டது.

5. _________ என்பது புத்தரின் உடல் எச்சங்கள் மீது கட்டப்பட்டனவாகும்.

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக:

1. புத்தர் கர்மாவை நம்பினார்

2. புத்தருக்குச் சாதி முறை மேல் நம்பிக்கை இருந்தது.

3. கௌதம சுவாமி, மகாவீரரின் போதனைகளைத் தொகுத்தார்.

4. விகாரைகள் என்பன கோவில்களாகும்.

5. அசோகர் பௌத்த மதத்தைப் பின்பற்றினார்.

பொருத்துக:

1. அங்கங்கள் – வர்தமானா

2. மகாவீரர் – துறவிகள்

3. புத்தர் – பௌத்தக் கோவில்கள்

4. சைத்யா – சாக்கியமுனி

5. பிட்சுக்கள் – சமண நூல்

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. திரிபிடகங்கள் 2. ரிஷபா 3. (24) 4. பாடலிபுத்திரம் 5. சாரநாத்

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றைத் தேர்வு செய்க:

1. கூற்றும் அதன் காரணமும் சரியானவை.

2. கூற்றும் அதற்;கான காரணமும் சரி.

3. (2 சரி)

4. (1 மற்றும் 2)

5. உலகைக் கடவுள் தோற்றுவித்தார் என்பதைச் சமணம் மறுக்கிறது.

6. பொருந்தாததை வட்டமிடு: (விடை)

புத்தர்

7. தவறான இணையைக் கண்டுபிடி: (விடை)

பிரம்மச்சரியா – திருமண நிலை

8. இந்து மதத்தை நிறுவியவர் அவரே

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. திரிரத்தினங்கள் 2. நிர்வானம் (அ) முக்தி

3. கௌதம புத்தர் 4. ஜைனக் காஞ்சி

5. ஸ்தூபி

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: (விடைகள்)

1. சரி

2. தவறு

சரியான விடை: புத்தருக்குச் சாதி முறை மேல் நம்பிக்கை இல்லை.

3. சரி

4. தவறு

சரியான விடை: விகாரைகள் என்பது கல்விக் கூடங்களாகவும்இ துரவிகள் தங்குமிடமாகவும் இருந்தது.

5. சரி

பொருத்துக: (விடைகள்)

1. அங்கங்கள் – சமண நூல்

2. மகாவீரர் – வர்தமானா

3. புத்தர் – சாக்கியமுனி

4. சைத்யா – பௌத்தக் கோவில்கள்

5. பிட்சுக்கள் – துறவிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!