MCQ Questions

முகலாயப் பேரரசு 11th History Lesson 9 Questions in Tamil

11th History Lesson 9 Questions in Tamil

9] முகலாயப் பேரரசு

முகலாயப் பேரரசு 1526 ஆண்டு பானிப்பட் போரில், பாபர் ___________ ஐ தோற்கடித்த பின் நிறுவப்பட்டது.

A) தௌலத்கான் லோடி

B) இப்ராகிம் லோடி

C) முகமது பின் துக்ளக்

D) காசிம் மாலிக்

(குறிப்பு: இவ்வாறு தொடங்கிய முகலாய சகாப்தம் 1526 முதல் 1857 வரை நீடித்தது.)

___________ ஆண்டு ஒளரங்கசீப்பின் மறைவைத் தொடர்ந்து முகலாய பேரரசு வீழ்ச்சியடைந்தது.

A) 1698 B) 1702 C) 1707 D) 1709

(குறிப்பு: முகலாயப் பேரரசு வீழ்ச்சியடைந்தாலும் 1707 முதல் 1857 வரை முகலாயர் அரசு பெயரளவுக்கு ஓர் அரசாக இயங்கி வந்தது.)

சரியான இணையத் தேர்ந்தெடு.

1. உஸ்பெக்குகள் – துருக்கிய இனக்குழு

2. சபாவி – ஈரானை ஆட்சி செய்த அரச வம்சத்தினர், ஷியா முஸ்லீம் பிரிவை ஆதரித்தவர்கள்

3. உதுமானியத் துருக்கியர் – சன்னி முஸ்லீம் பிரிவைச் சேர்ந்தவர்கள்

A) அனைத்தும் சரி

B) 1, 2 சரி

C) 2, 3 சரி

D) 1, 3 சரி

(குறிப்பு: மத்திய ஆசியாவில் மேற்கண்டோரிடையே நடைபெற்ற மேலாதிக்கத்திற்கான போட்டி, சாமர்கண்ட் பகுதியின் அரசரான பாபரை, தனது வாழ்க்கை வளத்துக்கான வாய்ப்புகளை வேறு இடங்களில் தேடிச் செல்லக் கட்டாயப்படுத்தியது.)

கூற்று 1: வரலாற்று ரீதியாக மத்திய ஆசிய நாடுகள் பட்டுப்பாதை வழியாக இந்தியாவோடு செய்து வந்த வர்த்தகம் பாபருக்கு இந்தியாவை பற்றிய தகவல்களை வழங்கியது.

கூற்று 2: ஒன்றேகால் நூற்றாண்டுக்கு முன்னர் தைமூர் செய்தததை மீண்டும் செய்ய வேண்டுமெனக் கனவு கண்டு கொண்டிருந்த பாபர், தில்லி சுல்தானியம் அரசியல் ரீதியாகச் சிதைவுற்றதைத் தொடர்ந்து 1526ல் தில்லியைத் தலைநகராகக் கொண்டு முகலாயப் பேரரசை நிறுவுவதில் வெற்றிபெற்றார்.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

பாபர் _____________ வயதில் தனது தந்தையிடமிருந்து சமர்கண்டை மரபுரிமைச் சொத்தாகப் பெற்றார்.

A) 11 B) 12 C) 13 D) 14

(குறிப்பு: சாமர்கண்ட் என்பது தற்போது உஸ்பெக்கிஸ்தானிலுள்ள ஒரு நகரம் ஆகும்.)

பாபர் _____________ ஆண்டுகளுக்கு இடையே பேரா, சியால்கோட் லாகூர் ஆகியவற்றின் மீது படையெடுத்து இந்துஸ்தானை கைப்பற்றும் உறுதியான எண்ணத்தை வெளிக்காட்டினார்.

A) 1509 – 1520

B) 1512 – 1528

C) 1519 – 1524

D) 1518 – 1520

(குறிப்பு: காபூல், கஜினி ஆகியவற்றை கைப்பற்றிய பாபர் சிந்து நதியைக் கடந்து ஒரு சிறிய அரசை ஏற்படுத்தினார்.)

கூற்று: பாபர் இந்தியாவின் மீது படையெடுத்து வரவேண்டும் என்ற வேண்டுகோளோடு இப்ராகிம் லோடியின் எதிரியான தௌலத்கான் லோடியும், மேவாரின் அரசனும் ரஜபுத்திர அரசுகளின் கூட்டமைப்பின் தலைவருமான ராணா சங்காவும் பாபரிடம் தூதுக் குழுக்களை அனுப்பினர்.

காரணம்: லோடி வம்சத்தை சேர்ந்த தில்லி சுல்தான் இப்ராகிம் லோடி தன் நாட்டை விரிவுபடுத்த மேற்கொண்ட முயற்சிகள் ஆப்கானியர், ரஜபுத்திரர் ஆகியோரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தன.

A) கூற்று சரி மற்றும் காரணம் தவறு

B) கூற்று தவறு மற்றும் காரணம் சரி

C) கூற்று சரி மற்றும் காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று சரி மற்றும் காரணம் கூற்றை விளக்கவில்லை

கூற்று 1: பாபர் இந்தியாவின் மீது படையெடுத்து வந்தபோது முதலில் தனக்கு உதவி செய்வதாக உறுதிகூறி பின்னர் பின் வாங்கிய தெளலத்கான் லோடியின் படைகளை டெல்லியில் வென்றார்.

கூற்று 2: பின்னர் பாபர் லோடியால் ஆளப்பட்ட பஞ்சாப்பை நோக்கித் திரும்பி, இப்ராகிம் லோடியின் பெரும்படையை பானிப்பட்டில் தோற்கடித்தார்.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: பாபர் இந்தியாவின் மீது படையெடுத்து வந்தபோது முதலில் தனக்கு உதவி செய்வதாக உறுதிகூறி பின்னர் பின் வாங்கிய தெளலத்கான் லோடியின் படைகளை லாகூரில் வென்றார்.)

பீரங்கியைப் பயன்படுத்தும் ராணுவப் படைப்பிரிவு _____________ ஆகும்.

A) territory

B) artillery

C) artifact

D) firepower

(குறிப்பு: பீரங்கி ஒருவருக்கும் மேற்பட்ட நபர்களால் இயக்கப்படும். பாபருக்கு முன்பாக இந்தியாவில் போர்களில் பீரங்கிகள் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லை.)

வெடிமருந்து முதன்முதலில் சீனர்களால் கண்டுபிடிக்கப்பட்டு _____________ நூற்றாண்டில் ஐரோப்பாவை அடைந்தது.

A) கி.பி 11

B) கி.பி 12

C) கி.பி 13

D) கி.பி 14

(குறிப்பு: பதினான்காம் நூற்றாண்டின் இடைப்பகுதியிலிருந்து வெடிமருந்து துப்பாக்கிகளிலும் பீரங்கிகளிலும் பயன்படுத்தப்பட்டது.)

1527ஆம் ஆண்டு நடைபெற்ற கான்வா போர் பாபருக்கும் _______________க்கும் இடையே நடைபெற்றது.

A) ராணா பிரதாப் சிங்

B) ராணா சங்கா

C) ராஜா ஹரிசிங்

D) ஹுமாயூன்

(குறிப்பு: சித்தூரின் ராணா சங்கா என்பவர் மேவாரின் அரசனும் ராஜஸ்தான் மாளவம் ஆகிய பகுதிகளில் பெரும் செல்வாக்கு பெற்றுத் திகழ்ந்தவர் ஆவார்.)

கான்வா போரில் ரானா சங்காவுக்கு உதவியவர்கள் யார்?

1. ஆப்கன் முஸ்லீம்கள் 2. முகமது லோடி

3. மேவாட்டின் அரசன் ஹசன்கான் மேவாட்டி 4. இப்ராகிம் லோடி

A) 1, 2, 3 B) 2, 3, 4 C) 1, 3, 4 D) 3, 4

(குறிப்பு: முகமது லோடி என்பவர் இப்ராகிம் லோடியின் சகோதரர் ஆவார். இப்போரில் பாபரின் வெற்றியை தொடர்ந்து குவாலியர், தோல்பூர் ஆகிய கோட்டைகள் கைப்பற்றப்பட்டன.)

பாபருக்கும் மேதினிராய்க்கும் இடையே சந்தேரி போர் ____________ ஆண்டு நடைபெற்றது.

A) 1527 B) 1528 C) 1529 D) 1530

(குறிப்பு: சந்தேரி போர் சிறப்பு வாய்ந்த மாளவப் பகுதியின் மீது பாபரின் மேலாதிக்கத்தை உறுதி செய்தது. இப்போரின் வெற்றியைத் தொடர்ந்து பாபர் ஆப்கானியரின் வளர்ந்துவரும் கிளர்ச்சி நடவடிக்கைகளுக்கு எதிராகத் திரும்பினார்.)

ஆப்கானியர்களுக்கு எதிராக பாபர் மேற்கொண்ட இறுதிப்போர்

A) கான்வா போர்

B) காக்ரா போர்

C) சந்தேரி போர்

D) பானிபட் போர்

(குறிப்பு: கங்கை நதியின் துணை நதியான காக்ரா ஆற்றின் கரையில் இறுதியாக நடைபெற்ற போரில் பாபர் ஆப்கானியரைத் தோற்கடித்தார்.)

கூற்று 1: காக்ரா போரின்போது போது சுல்தான் இப்ராகிம் லோடியின் சகோதரனான முகம்மது லோடியும் அவரது மருமகனான சுல்தான் நஸ்ரத்ஷாவும் பாபருக்கு எதிராகச் சதி செய்தனர்.

கூற்று 2: காக்ரா போரில் வெற்றி பெற்ற பாபர் ஆக்ராவிலிருந்து திரும்பி லாகூர் செல்லும் வழியில் 1529இல் காலமானார்.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: காக்ரா போரில் வெற்றி பெற்ற பாபர் ஆக்ராவிலிருந்து திரும்பி லாகூர் செல்லும் வழியில் 1530இல் காலமானார்.)

சரியான கூற்றைத் தேர்ந்தெடு.

1. முகலாயப் பேரரசை நிறுவிய பாபர் பாரசீக அராபிய மொழிகளில் புலமை பெற்றவராவார்.

2. தனது வாழ்க்கையைப் பற்றிய பாபரின் நினைவுக் குறிப்புகளான துசுக்-இ-பாபுரி (பாபர் நாமா) உலகச் செவ்வியல் இலக்கியமாகக் கருதப்படுகிறது.

3. பாபர் தனது மகன் ஹூமாயூனுக்கு இடர்பாடுகள் நிறைந்த பணியை விட்டுச் சென்றார்.

A) அனைத்தும் சரி

B) 1, 2 சரி

C) 2, 3 சரி

D) 1, 3 சரி

(குறிப்பு: இந்துஸ்தானத்தின் தலையாய மேன்மை எதுவெனில் இது ஒரு மிகப் பெரிய நாடு. பெருமளவிலான தங்கத்தையும் வெள்ளியையும் கொண்டுள்ளது என்று பாபர் இந்தியாவை பற்றி குறிப்பிடுகிறார்.)

ஹீமாயூனின் சகோதரரான கம்ரான் பொறுப்பு வகித்த பகுதிகள்?

1. பீகார் 2. காபூல்

3. குஜராத் 4. காந்தகார்

A) அனைத்தும் B) 1, 2 C) 1, 3 D) 2, 4

(குறிப்பு: கம்ரான் தன்னுடைய அதிகாரத்தைப் பஞ்சாப் வரை நீட்டித்தார். ஹூமாயூன் பஞ்சாப் மீதான கம்ரானின் ஆட்சியதிகாரத்தை ஓர் உள்நாட்டுப் போரைத் தவிப்பதற்காக ஏற்றுக்கொண்டார்.)

ஹூமாயூன் ______________ ஆண்டு தெளரா என்னுமிடத்தில் ஆப்கானியரைத் தோற்கடித்து பலம் வாய்ந்த சுனார் கோட்டையை முற்றுகையிட்டார்.

A) 1529 B) 1530 C) 1531 D) 1532

(குறிப்பு: நான்கு மாதங்களுக்குப் பின்னர் முகலாயருக்கு விசுவாசமாக இருப்பேன் எனப் பொய்யாக வாக்குறுதியளித்த ஷெர்ஷாவின் வார்த்தைகளை நம்பி ஹுமாயூன் சுனார் கோட்டை முற்றுகையை கைவிட்டார்.)

ஷெர்கான் (ஷெர்ஷா) என்பவரின் தலைமையில் ஆப்கானியரின் அதிகாரம் வளர்ந்து வந்த பகுதிகள்

1. டெல்லி 2. தெளலதாபாத்

3. பீகார் 4. உத்திரப் பிரதேசம்

A) அனைத்தும் B) 1, 2 C) 2, 3 D) 3, 4

(குறிப்பு: வளர்ந்து வரும் ஆப்கானியரின் அதிகாரத்திற்கு எதிராக ஹூமாயூன் நடவடிக்கைகள் மேற்கொண்டு சுனார் கோட்டையைக் கைப்பற்றினார்.)

தில்லியில் ‘தீன்பனா’ என்ற புதிய நகரை உருவாக்கியவர்

A) பாபர்

B) ஷெர்ஷா

C) ஹூமாயூன்

D) கம்ரான்

(குறிப்பு: ஹூமாயூன் தீன்பனா நகரை உருவாக்கிய சமயத்தில் பகதூர்ஷா ராஜஸ்தானைக் கைப்பற்றி இணைத்துக் கொண்டதோடு முகலாயர்களுக்கு எதிரானவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து அவர்களைத் தூண்டியும் விட்டார்.)

பகதூர்ஷாவின் மேல் போர் தொடுத்து குஜராத்தையும் மாளவத்தையும் கைப்பற்றி அவற்றை ___________ன் பொறுப்பில் விட்டார்.

A) கம்ரான்

B) அஸ்காரி

C) ஹிண்டால்

D) ஷெர்ஷா

(குறிப்பு: குஜராத் மக்களின் கலகங்களை அடக்க இயலாத நிலையில் அஸ்காரி ஆக்ரா செல்ல தீர்மானித்தார். அஸ்காரி ஆக்ராவைக் கைப்பற்றி தனதாக்கிக் கொள்வார் என்ற அச்சத்தில் மாண்டுவில் தங்கியிருந்த ஹூமாயூன் குஜராத்தையும் மாளவத்தையும் கைவிட்டு விட்டுப் சகோதரரை பின் தொடர்ந்தார். இருவரும் ராஜஸ்தானில் சந்தித்து சமாதானமாயினர்.)

ஷெர்கானை எதிர் கொள்வதற்காக ஹூமாயூன் கவுர் அல்லது கெளடா என்ற இடத்தை அடைந்தபோது கலகத்தில் ஈடுபட்டவர்

A) கம்ரான்

B) அஸ்காரி

C) ஹிண்டால்

D) பகதூர் ஷா

(குறுப்பு: ஹூமாயூன் இக்கலகத்தை அடக்குவதற்காக ஆக்ரா நோக்குப் புறப்பட்டார்.)

செளசா போர் பற்றிய கூற்றுகளில் சரியானதைத் தேர்ந்தெடு.

1. இப்போரில் 7000 முகலாயப் பிரபுக்களும் வீரர்களும் கொல்லப்பட்டனர்.

2. தன்னுயிரைக் காத்துக் கொள்ளத் தப்பியோடிய ஹூமாயூன் கங்கை நதியை நீந்திக் கடந்தார்.

3. ஆக்ராவை சென்றடைந்த ஹூமாயூன், சகோதரர்கள் அஸ்காரி, ஹிண்டால் ஆகியோரின் உதவியோடு ஷெர்கானை எதிர்கொள்ள படையொன்றைத் திரட்டினார்.

A) அனைத்தும் சரி

B) 1, 2 சரி

C) 2, 3 சரி

D) 1, 3 சரி

(குறிப்பு: செளசா போரில், ஷெர்கான் தனது மேலான, அரசியல், ராணுவத் திறமைகளால் வெற்றி பெற்றார். ஹூமாயூன் பெருந்தோல்வியைச் சந்தித்தார்.)

செளசா போரைத் தொடர்ந்து ஹூமாயூன் ஷெர்ஷா இடையேயான இறுதி மோதல் _____________ல் நடைபெற்றது.

A) வங்காளம்

B) ஆக்ரா

C) கன்னோசி

D) செளசா

(குறிப்பு: கன்னோசிப் போரில் ஹூமாயூனின் படைகள் முற்றிலுமாகத் தோற்கடிக்கப்பட்டன. அவர் நாடற்ற அரசரானார்.)

கன்னோசி போரில் தோல்வியடைந்த ஹூமாயூன் தனது அரியணையை துறந்த பின்னர் மீண்டும் தில்லியைக் கைப்பற்றித் தன் அதிகாரத்தை மீட்ட ஆண்டு

A) 1545 B) 1548 C) 1553 D) 1555

(குறிப்பு: இந்த இடைப்பட்ட காலத்தில் சூர் வம்சத்தைச் சேர்ந்த ஷெர்ஷாவால் தில்லி ஆளப்பட்டது.)

ஒரு ஜாகீர்தாரின் குடும்பத்தில் பிறந்து பரித் என்றழைக்கப்பட்டவர்

A) அக்பர்

B) பாபர்

C) ஷெர்கான்

D) ஜஹாங்கீர்

(குறிப்பு: பரீத் ஒரு புலியைக் (ஹிந்தியில் ஷெர்) கொன்றதனால் ஷெர்கான் என்னும் பெயரைப் பெற்றார். அரியணை ஏறிய பின் ஷெர்ஷா என்றழைக்கப்பட்டார்.)

ஷெர்ஷா குறித்த கூற்றுகளில் தவறானதைத் தேர்ந்தெடு.

A) தன் திறமையினாலும் ஆற்றலினாலும் இந்தியாவிலிருந்த ஆப்கானியரின் தலைவரானார்.

B) மாளவம் போரிடாமலேயே ஷெர்ஷாவிடம் வீழ்ந்தது.

C) மேவாரின் உதய்சிங் எதிர்ப்பேதும் தெரிவிக்காமல் ஷெர்ஷாவிடம் சரணடைந்தார்.

D) கலிஞ்சாரைக் கைப்பற்ற வேண்டும் என்ற முயற்சியில் ஷெர்ஷா வெற்றிபெற்றார்.

(குறிப்பு: கலிஞ்சாரைக் கைப்பற்ற வேண்டும் என்ற முயற்சியில் ஷெர்ஷா தோல்விகண்டார்.)

வெடிகுண்டு விபத்தின் காரணமாக ஷெர்ஷா உயிரிழந்த ஆண்டு

A) 1544 B) 1545 C) 1549 D) 1553

(குறிப்பு: ஷெர்ஷாவிற்க்கு பின் பதவியேற்ற அவருடைய இரண்டாவது மகன் இஸ்லாம்ஷா 1553 வரை ஆட்சி புரிந்தார்.)

விவசாயி சீர்குலைந்தால் அரசன் சீர்குலைவான் என நம்பியவர்

A) பாபர்

B) அக்பர்

C) ஷாஜகான்

D) ஷெர்ஷா

(குறிப்பு: படைகள் ஓரிடம் விட்டு வேறிடங்களுக்கு செல்கையில் பயிர்களுக்குச் சேதம் ஏற்படக் கூடாது என்பதில் ஷெர்ஷா தனிக்கவனம் செலுத்தினார்.)

ஹூமாயூனைப் பின்தொடர்ந்த ஷெர்ஷா அதற்கு முன்னர் ___________ என்பவரை வங்காளத்தின் ஆளுநராக நியமித்திருந்தார்.

A) இஸ்லாம்ஷா

B) பகதூர்ஷா

C) கிசிர்கான்

D) ஹிண்டால்

(குறிப்பு: கிசிர்கான் வங்காளத்தின் முன்னாள் ஆட்சியரான சுல்தான் மகமுதுவின் மகளை மணந்தவர்.)

ஷெர்ஷாவின் சீர்திருத்தங்களில் தவறானதை தேர்ந்தெடு.

A) நிலங்கள் முறையாக அளவை செய்யப்பட்டு நிலங்களின் வளத்திற்கு ஏற்றவாறு வரி நிர்ணயம் செய்யப்பட்டது.

B) சிந்து பகுதியிலிருந்து வங்காளத்தில் சோனார்கான் வரையிலான முக்கிய பெருவழியைச் செப்பனிட்டதோடு குஜராத் கடற்கரைத் துறைமுகங்களை ஆக்ராவோடும் ஜோத்பூரோடும் இணைக்கும் புதிய சாலைகளை அமைத்தார்.

C) ஷெர்ஷாவுடைய நாணய முறையானது முகலாயர் காலம் முழுவதும் பின்பற்றப்பட்டு ஆங்கிலேயர் காலத்து நாணய முறைக்கு அடித்தளமானது.

D) ஷெர்ஷா காலத்தில் ஜாகீர்தாரி முறையும் ஜமீன்தாரி முறையும் முற்றிலும் ஒழிக்கப்பட்டன.

(குறிப்பு: ஷெர்ஷா காலத்தில் ஜாகீர்தாரி முறையும் ஜமீன்தாரி முறையும் சில பகுதிகளில் தொடர்ந்து செயல்படுவதற்கு அனுமதிக்கப்பட்டன.)

கீழ்க்கண்டவற்றுள் ஷெர்ஷா காலத்தில் வசூலிக்கப்பட்ட வரிகள் எவை?

1. நுழைவு வரி 2. வருமான வரி

3. விற்பனை வரி 4. ஏற்றுமதி வரி

A) அனைத்தும் B) 1, 2 C) 2, 3 D) 1, 3

(குறிப்பு: ஷெர்ஷா வணிகத்தை ஊக்குவிப்பதற்காக வணிக வரிகளை எளிமைப்படுத்தினார். தங்கம், வெள்ளி, செப்புக் காசுகளில் இடம்பெறும் உலோகங்களின் தர அளவு வரையறை செய்யப்பட்டது வணிகத்திற்கு வசதி கொடுத்தது.)

ஷெர்ஷா காலத்தில் அனைத்து சாலைகளிலும் _____________ எனப்படும் சத்திரங்கள் அமைக்கப்பட்டு வணிகர்கள் தங்கவும் உணவருந்தவும் வசதிகள் செய்துதரப்பட்டன.

A) சன்னி

B) ஜாகீர்

C) சராய்

D) இலாகி

(குறிப்பு: ஷெர்ஷாவால் உருவாக்கப்பட்ட ஒரு சில சராய்கள் இன்றளவும் உள்ளன. இத்தகைய சராய்கள் தங்களுக்கு அருகே நகரங்கள் உருவாவதையும் உறுதி செய்தன.)

ஷெர்ஷா தன்னுடைய கல்லறை மாடத்தை _______________ என்னுமிடத்தில் கட்டினார்.

A) புராணகிலா

B) சசாரம்

C) டெல்லி

D) ஆக்ரா

(குறிப்பு: ஷெர்ஷா தில்லியில் கோட்டைச் சுவர்களுடன் கூடிய ஒரு புதிய நகரத்தை நிர்மாணிக்கத் தொடங்கினார். பின்னர் அது புராண கிலா என அழைக்கப்பட்டது.)

ஷெர்ஷா 1545 இல் காலமான பின்னர் அவருக்கு பின் வந்த வலிமை குன்றிய அரசர்கள் ____________ ஆண்டுகள் ஆட்சி புரிந்தனர்.

A) 8 B) 10 C) 15 D) 18

கன்னோசிப் போரில் தோற்று தப்பியோடிய ஹூமாயூன் _____________ல் தஞ்சம் புகுந்தார்.

A) காபூல்

B) காந்தகார்

C) பாரசீகம்

D) ஈரான்

(குறிப்பு: பாரசீகப் படைகளுடன் ஆப்கானிஸ்தான் சென்ற ஹூமாயூன் காந்தகாரையும் காபூலையும் கைப்பற்றினார்.)

“வாழ்க்கை முழுவதும் தவறி விழுந்த ஹீமாயூன் வாழ்க்கையை விட்டே தவறி விழுந்து இறந்தார்” என்பது யாருடைய வார்த்தைகள்

A) அமீர் குஸ்ரு

B) அமீர் ஹாசன்

C) குலாம் ரசூல்

D) ஸ்டேன்லி லேன்பூல்

(குறிப்பு: ஹூமாயூன் தில்லி கோட்டைக்குள் இருந்த நூலகம் ஒன்றின் மாடிப்படிகளில் இடறி விழுந்து இறந்தார்.)

ஜலாலுதீன் என்று அறியப்பட்ட அக்பர் பிறந்த ஆண்டு

A) 1539 B) 1540 C) 1541 D) 1542

(குறிப்பு: ரஜபுதனத்துப் பாலைவனங்களில் ஹுமாயூன் அலைந்து திரிந்தபோது அவருடைய மனைவி 1542 இல் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுத்தார். அவரே அக்பர் என்றழைக்கப்பட்டார்.)

கூற்று 1: பதினோறாவது வயதில் அக்பருக்கு முடிசூட்டப்பட்டது.

கூற்று 2: அக்பர், பைராம்கான் என்ற தலைசிறந்த பாதுகாவலரை பெற்றிருந்தார்.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: பதினான்காவது வயதில் அக்பருக்கு முடிசூட்டப்பட்டது. அக்பர் அரியணை ஏறிய போது இன்னும் வலிமையாக இருந்த ஆப்கானியரும் ரஜபுத்திரரும் பெரும் சவாலாகத் திகழ்ந்தனர்.)

அக்பர் ஹெமு இடையே இரண்டாம் பானிபட் போர் எப்போது நடைபெற்றது?

A) 1556 ஆகஸ்ட்

B) 1556 அக்டோபர்

C) 1556 நவம்பர்

D) 1556 டிசம்பர்

(குறிப்பு: இரண்டாம் பானிபட் போர் ஹெமுவுக்கு சாதகமாக முடியவிருந்த தருவாயில் அவர் கண்ணில் அம்பொன்று பாய மயக்கமுற்று கீழே விழுந்தார். தலைமை இல்லாத ஆப்கானிய படைகளை முகலாயப் படைகள் வெற்றிபெற்றன.)

சரியானக் கூற்றைத் தேர்ந்தெடு.

1. தில்லியில் வீற்றிருந்த ஷெர்ஷாவின் வழிவந்த ஆப்கானிய அரசன் அடில்ஷாவின் இந்து படைத்தளபதியான ஹெமு, முகலாயருக்கு எதிராக ஆப்கானியர் படைகளுக்கு தான் தலைமையேற்றுச் செல்ல அனுமதிக்குமாறு அரசனைக் கேட்டுக்கொண்டார்.

2. அரசர் ஹெமுவிற்கு ஊக்கம் அளிக்கவே, ஹெமு முதலில் குவாலியரைக் கைப்பற்றி அதன் முகலாய ஆளுநரை வெளியேற்றினார்.

3. அடுத்து எவ்வித எதிர்ப்புமின்றி ஆக்ராவைக் கைப்பற்றினார்.

A) அனைத்தும் சரி

B) 1, 2 சரி

C) 1 மட்டும் சரி

D) 2, 3 சரி

கூற்று 1: அக்பரின் முதல் நான்காண்டு ஆட்சிக்காலத்தில் பகர ஆளுநர் பைராம்கானின் கீழ், நாடு குவாலியர், அஜ்மீர் உட்பட காபூலிலிருந்து ஜான்பூர் வரை விரிவடைந்தது.

கூற்று 2: பைராம்கான் அறிவுக் கூர்மை மிக்க மேதையாக கான்-இ-கானான் என்ற பட்டத்துடன் அக்பரின் அவையில் ஒளிர்ந்தார்.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: பைரம்கானின் மகன் அப்துர் ரகீம் அறிவுக் கூர்மை மிக்க மேதையாக கான்-இ-கானான் என்ற பட்டத்துடன் அக்பரின் அவையில் ஒளிர்ந்தார்.)

அக்பர் _____________ ஆண்டு மாளவத்தை பாஜ்பகதூரிடமிருந்து கைப்பற்றினார்.

A) 1560 B) 1562 C) 1564 D) 1566

(குறிப்பு: மாளவம் கைப்பற்றப்பட்ட பிறகு பாஜ்பகதூர் அக்பரின் அரசவையில் ஒரு மன்சப்தாராக ஆக்கப்பட்டார்.)

இந்தியாவின் மையப் பகுதியிலிருந்த கோண்டுவானா _____________ ஆண்டு அக்பரால் கைப்பற்றப்பட்டது.

A) 1560 B) 1563 C) 1564 D) 1566

(குறிப்பு: கோண்டுவானா அதன் ராணி துர்காதேவி அவ்வம்மையாரின் மகன் வீர்நாராயணன் ஆகியோருடனான மூர்க்கமான போருக்குப்பின் கைப்பற்றப்பட்டது.)

கூற்று 1: அக்பர், மேவார் அரசரான ராணா உதய்சிங்கிடமிருந்து சித்தூரை ஆறுமாதகால முற்றுகைக்கு பின்னர் கைப்பற்றினார்.

கூற்று 2: ராணா உதய்சிங்கின் தளபதிகளான ஜெய்மால், பட்டா ஆகியோரின் துணிச்சலைக் கண்டு பெரும் வியப்படைந்த அக்பர் அவர்களின் நினைவாகவும் அவர்களைச் சிறப்பிக்கும் வகையிலும் ஆக்ரா கோட்டையின் பிரதான வாசலில் அவர்களின் சிலைகளை நிறுவினார்.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: சித்தூர் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து ரஜபுத்திர அரசுகளான ராந்தம்பூர், கலிஞ்சார், பிக்கானீர், ஜோத்பூர், ஜெய்சால்மார் ஆகியவை அக்பரிடம் சரணடைந்தன.)

அக்பர் ____________ ஆண்டு முசாபர்ஷாவிடமிருந்து குஜராத்தைக் கைப்பற்றினார்.

A) 1568 B) 1570 C) 1572 D) 1573

(குறிப்பு: மத்திய இந்திய பகுதிகளைக் கீழ்படிய வைத்த பின்னர் அக்பர் தனது கவனத்தை செல்வச் செழிப்புமிக்க, கடல்சார் வணிகத்திற்குப் புகழ்பெற்ற குஜராத் மீது செலுத்தினார்.)

பீகார், வங்காளம் ஆகிய பகுதிகளை ஆண்டு வந்த தாவுத்கான் அக்பரால் தோற்கடிக்கப்பட்டு அவ்விரு பகுதிகளும் _____________ ஆண்டு முகலாய பேரரசோடு இணைக்கப்பட்டன.

A) 1574 B) 1575 C) 1576 D) 1577

கூற்று 1: ராஜா மான்சிங், பகவன்தாஸ் ஆகியோரின் உதவியுடன் அக்பர் காபூலைச் சேர்ந்த மிர்சா ஹக்கீமைத் தோற்கடித்தார்.

கூற்று 2: 1586 ஆம் ஆண்டு காஷ்மீரையும் 1590 ஆம் ஆண்டு சிந்துவையும் அக்பர் கைப்பற்றியது வடமேற்கில் அவருடைய பேரரசை வலுப்படுத்தியது.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: அக்பர் 1591 ஆம் ஆண்டு சிந்துவை கைப்பற்றினார்.)

அக்பருடைய படைகள் _____________ ஆண்டு காண்டேஷ் பகுதியைக் கைப்பற்றின.

A) 1591 B) 1592 C) 1593 D) 1594

அக்பரின் படைகள் சாந்த்பீபியிடமிருந்து பெராரை கைப்பற்றிய ஆண்டு _____________.

A) 1592 B) 1594 C) 1596 D) 1598

(குறிப்பு: சாந்த்பீபி அம்மையார் அகமதுநகரின் நிஜாம்சாகி வம்சத்தை சேர்ந்த தன் உடன்பிறப்பின் மகனான முசாபர்ஷாவினுடைய பகர ஆளுநராக அகமதுநகரைத் தாக்கிய முகலாயப் படைகளை எதிர்த்து வீரத்தோடு போராடினார். 1600 இல் அகமதுநகர் அரசின் ஒரு சில பகுதிகள் முகலாயர் படைகளின் கைவசமானது.)

1604 இல் செப்டம்பர் மாதம் அக்பர் நோய்வாய்ப்பட்டு ____________ நாள் இயற்கை எய்தினார்.

A) 1604 அக்டோபர் 21

B) 1605 மார்ச் 18

C) 1605 ஆகஸ்ட் 28

D) 1605 அக்டோபர் 27

(குறிப்பு: அக்பருக்குப் பின் அவருடைய மகன் சலீம் நூருதீன் ஜஹாங்கீர் என்ற பட்டப் பெயருடன் அரியணை ஏறினார்.)

அக்பர் குறித்த கூற்றுகளில் தவறானதைத் தேர்ந்தெடு.

A) முஸ்லீம் அல்லாத மக்களின் மீது விதிக்கப்பட்டிருந்த ஜிசியா வரியையும் (தலைவரி) இந்து புனித யாத்திரைகளின் மீது விதிக்கப்பட்டிருந்த வரியையும் நீக்கினார்.

B) இந்து விதவைகள் பின்பற்றிய உடன்கட்டை ஏறும் முறை ஒழிக்கப்பட்டது.

C) அக்பருடை காலத்தில் போர்க்கைதிகளை அடிமைகளாக்கும் நடைமுறை கைவிடப்பட்டது.

D) மேவார், மார்வார் ஆகிய ரஜபுத்திர அரசுகள் முகலாய பேரரசின் நட்பு நாடுகளாக திகழ்ந்தன.

(குறிப்பு: மேவார், மார்வார் ஆகியவை முகலாயப் பேரரசை எதிர்த்து நின்ற ரஜபுத்திர அரசுகளாகும்.)

ஆம்பர் நாட்டு அரசர் ராஜா பார்மல் (பீகாரிமால் என்று அறியப்பட்டவரின்) மகளான ஹர்க்கா பாயை மணந்தவர்

A) ராஜா பகவன்தாஸ்

B) ராஜா மான்சிங்

C) அக்பர்

D) ஹூமாயூன்

(குறிப்பு: ஹர்க்காபாய் பின்னாளில் ஜோதா அக்பர் என்று அழைக்கப்பட்டார்.)

சரியான கூற்றைத் தேர்ந்தெடு.

1. பிக்கானீர், ஜெய்சால்மர் ஆகிய ரஜபுத்திர அரசுகளின் இளவரசிகளை அக்பர் திருமணம் செய்து கொண்டார்.

2. ஹர்க்காபாய் பெற்றெடுத்த இளவரசர் சலீம் பின்னர் ராஜா பகவன்தாஸின் மகளைக் கரம்பற்றினார்.

3. ராஜா பகவான்தாஸின் மகனான ராஜா மான்சிங் அக்பரின் நம்பிக்கைக்குரிய படைத்தளபதியானார்.

A) அனைத்தும் சரி

B) 1, 2 சரி

C) 2, 3 சரி

D) 1, 3 சரி

(குறிப்பு: அக்பரின் அவையில் வருவாய்த்துறை நிர்வாகத்தில் நிபுணத்துவம் உடைய ராஜா தோடர்மால் திவானாக பதவி உயர்த்தப்பட்டார்.)

முகலாயப் படைகளுக்கும் ராணா பிரதாப் சிங்குக்குமிடையே நடைபெற்ற நேரடி போர்

A) கான்வா போர்

B) சௌசா போர்

C) ஹால்டிகாட் போர்

D) இரண்டாம் பானிபட் போர்

(குறிப்பு: ஹால்டிகாட் போர் 1576 ஆம் ஆண்டு நடைபெற்றது.)

ராணா உதய்சிங்கின் மரணத்திற்கு பின்னர் அவருடைய மகன் ராணா பிரதாப்சிங் அக்பரின் அதிகாரத்தை ஏற்காமல் __________இல் தனது மரணம் வரை தொடர்ந்து போரிட்டார்.

A) 1578 B) 1586 C) 1592 D) 1597

(குறிப்பு: மார்வாரில் (ஜோத்பூர்) மால்தியோ ராத்தோரின் மகனான அரசர் சந்திரா சென் 1581 இன் தான் இறக்கும்வரை முகலாயரை எதிர்த்தார்.)

தொடக்கத்தில் _____________ அக்பரின் தலைநகராக இருந்தது.

A) குவாலியர்

B) டெல்லி

C) ஆக்ரா

D) பதேபூர்சிக்ரி

(குறிப்பு: பின்னாளில் பதேபூர்சிக்ரி என்னும் புதிய தலைநகரை அக்பர் உருவாக்கினார். தற்போது கைவிடப்பட்ட நகரமாக இருந்தாலும் இன்றும் அது அழகான மசூதிகளோடு உன்னதமான புலந்தர்வாசா மற்றும் ஏனைய கட்டடங்களோடும் திகழ்கிறது.)

சரியானக் கூற்றைத் தேர்ந்தெடு.

1. ஷெர்ஷா அறிமுகப்படுத்திய மன்சப்தாரி முறையை அக்பர் மேலும் விரிவுப்படுத்தினார்.

2. பிரபுக்கள், குடிமைப் பணிசார்ந்த இராணுவ நிர்வாகம் சார்ந்த அதிகாரிகள் ஆகிய அனைவரும் ஒன்றுபடுத்தப்பட்டு ஒரே பணியின் கீழ் கொண்டுவரப்பட்டனர். ஒவ்வொருவருக்கும் மன்சப்தார் என்ற பட்டம் வழங்கப்பட்டது.

3. மன்சப்தார் தகுதி ஜாட், சவார் என இருவகைப்பட்டது.

A) அனைத்தும் சரி

B) 1, 2 சரி

C) 2, 3 சரி

D) 1, 3 சரி

(குறிப்பு: மன்சப்தாரி முறையை அறிமுகம் செய்தவர் அக்பர்.)

கூற்று 1: மன்சப்தாரி முறையில் ஜாட் என்பது ஒவ்வொரு மன்சப்தாரும் பெறும் ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை நிர்ணயம் செய்வதாகும். அவ்வெண்ணிக்கை 10 முதல் 10000 வீரர்கள் வரை ஆனதாகும்.

கூற்று 2: சவார் என்பது மன்சப்தாரின் கீழிருக்கும் குதிரைகளின் எண்ணிக்கையைக் குறிக்கும்.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: வீரர்களின் எண்ணிக்கை, குதிரைகளின் எண்ணிக்கை ஆகியவற்றை அதிகரிப்பது அல்லது குறைப்பதன் மூலம் ஒரு மன்சப்தாரின் உயர்வும் தாழ்வும் நிர்ணயம் செய்யப்பட்டன.)

தவறான கூற்றைத் தேர்ந்தெடு.

A) அக்பரின் தொடக்கக் காலங்களில் பிரபுக்கள் முற்றிலுமாக மத்திய ஆசியாவைச் சேர்ந்தவர்களாகவும் பாரசீகத்தை சார்ந்தவர்களாகவும் மட்டுமே இருந்தனர்.

B) மன்சப்தாரி முறை அறிமுகமான பின்னர் ரஜபுத்திரரும் ஷேக்சதா என்றழைக்கப்பட்ட இந்திய முஸ்லீம்களும் பிரபுக்கள் வரிசையில் இடம் பெறலாயினர்.

C) மன்சப்தார்களின் ஊதியம் பணமாக நிர்ணயம் செய்யப்பட்டாலும் அதற்கு மாறாக அவர்களுக்கு நிலங்கள் (ஜாகீர்) ஒதுக்கப்பட்டன.

D) மன்சப்தார் முறை பரம்பரை உரிமையாக காணப்பட்டது.

(குறிப்பு: மன்சப்தார் முறை பரம்பரை உரிமை சார்ந்ததல்ல. ஒரு மன்சப்தார் மரணமடைந்துவிட்டால் அவருக்கு வழங்கப்பட்டிருந்த ஜாகீரை அரசு உடனடியாக கையகப்படுத்தும்.)

அக்பரின் மதக்கொள்கை குறித்த கூற்றுகளில் தவறானதைத் தேர்ந்தெடு.

A) அக்பர், சூபி தத்துவங்கள் ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக ஓர் இணக்கமான போக்கை மேற்கொண்டார்.

B) அக்பா அனைவருக்கும் அமைதி (சுல்க்-இ-குல்) என்னும் தத்துவத்தைப் பரப்புரை செய்தார்.

C) அக்பர் இபாதத்கானா எனும் வழிபாட்டுக் கூடத்தை நிறுவினார்.

D) இபாதத் கானாவில் நடைபெற்ற விவாதங்கள் மதங்களிடையே கசப்புணர்வை ஏற்படுத்தியதால் 1578 இல் அக்பர் அவ்விவாதங்களை நிறுத்தினார்.

(குறிப்பு: அக்பர் 1582 இல் இபாதத் கானாவில் நடந்த விவாதங்களை நிறுத்தினார்.)

அக்பர் இஸ்லாமைப் புறக்கணித்தார் என குற்றம் சாட்டிய அக்பர் காலத்து வரலாற்று அறிஞர்

A) நூனிஸ்

B) பதானி

C) ராஜா தோடர்மால்

D) ராஜா பீர்பால்

(குறிப்பு: மதங்களுக்கு இடையிலான தொடர்புகள் பற்றி அக்பர் மேற்கொண்ட தத்துவ விவாதங்கள் மீது பதானி வெறுப்பு கொண்டு இவ்வாறு கூறினார்.)

கூற்று 1: அக்பருடைய தத்துவத்தை விளக்குவதற்கு அக்பரும் பதானியும் பயன்படுத்திய சொல் ‘தெளகித்-இ-இலாகி’ (தீன் இலாகி) என்பதாகும்.

கூற்று 2: தெளகித்-இ-இலாகி என்ற சொல்லின் நேரடிப் பொருள் தெய்வீக ஒரு கடவுள் கோட்பாடாகும்.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: பல்வகைப்பட்ட மதங்களின் பெயர்களுக்கு பின்னே ஒரே ஒரு கடவுள் மட்டும் இருப்பதாக அக்பர் உணர்ந்தார். இதுவே அவருடைய தத்துவமாக விளங்கியது.)

கூற்று 1: சமஸ்கிருத, அராபிய, கிரேக்க மற்றும் ஏனைய மொழி நூல்களைப் பாரசீக மொழியில் மொழியாக்கம் செய்வதற்காக ஒரு பெரிய மொழியாக்கத் துறையை அக்பர் உருவாக்கினார்.

கூற்று 2: இராமாயாணம், மகாபாரதம், அதர்வவேதம், விவிலியம், குரான் ஆகியவை அனைத்தும் பாரசீக மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டன.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: அக்பரின் உண்மையான நோக்கம் மதச்சார்பற்ற கோட்பாடுகளை, பல்வேறு நம்பிக்கைகளைச் சார்ந்தவர்களுக்குக் சரி சமமான சகிப்புத்தன்மையையும் சம மதிப்பையும் வழங்குவதை குறிக்கோளாகக் கொண்ட ஓர் அரசை உருவாக்குவதாகும்.)

ஜஹாங்கீர் அரசரானதை எதிர்த்து அவரது மூத்தமகன் குஸ்ரு சீக்கிய குரு___________ன் ஆதரவோடு கலக்கத்தில் இறங்கினார்.

A) குரு கோபிந்த் சிங்

B) குரு தேஜ் பகதூர்

C) குரு அர்ஜுன் தேவ்

D) குரு ராம்தாஸ்

(குறிப்பு: ஜஹாங்கீரால் கலகம் ஒடுக்கப்பட்டு இளவரசர் கைது செய்யப்பட்டு விழிகள் அகற்றப்பட்டன. கலகத்தைத் தூண்டியதாக குரு அர்ஜூன் தேவ் கொல்லப்பட்டார்.)

தக்காண அரசான அகமது நகர் மாலிக் ஆம்பரின் தலைமையின் கீழ் தன்னை சுதந்திர அரசாக அறிவித்த ஆண்டு

A) 1603 B) 1606 C) 1608 D) 1609

(குறிப்பு: அகமது நகரை இளவரசர் குர்ரம் கைப்பற்ற மேற்கொண்ட பல முயற்சிகள் கடைசியில் தோல்வியில் முடிந்தன. 14 மாத கால முற்றுகைக்குப் பின்னர் காங்ரா கோட்டையைக் கைப்பற்றுவதில் வெற்றி பெற்றார்.)

கூற்று 1: வங்காளத்தில் தனக்கெதிராகக் கலகம் செய்த ஆப்கானியரான உஸ்மான் கான் என்பவரை ஜஹாங்கீர் பணிய வைத்தார்.

கூற்று 2: ராணா உதய்சிங், ராணா பிரதாப் சிங் ஆகியோர் காலத்தில் முகலாயருக்கு அடிபணிய மறுத்த மேவார் ராணா உதய்சிங்கின் பேரன் ராணா அமர்சிங்கிற்கு எதிராக ஜஹாங்கீர் தனது மகன் இளவரசர் குர்ரம் தலைமையில் படையெடுப்பு நடத்தி ஒழுங்குக்கு கொண்டுவரப்பட்டது.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: ஜஹாங்கீர், குர்ரம் (ஷாஜகான்) இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமர்சிங் ஜஹாங்கீரின் மேலதிகாரத்தை ஏற்றுக்கொண்ட அரசராகத் தனது பகுதிகளை ஆண்டார்.)

1595 இல் பாரசீகர்களிடமிருந்து அக்பரால் கைப்பற்றப்பட்ட காந்தகாரை ______________இல் பாரசீக அரசர் ஷா அப்பாஸ் மீட்டிருந்தார்.

A) 1602 B) 1614 C) 1619 D) 1622

(குறிப்பு: காந்தகாரை மீண்டும் கைப்பற்ற முயன்ற ஜஹாங்கீரால் குர்ரம் மேற்கொண்ட கிளர்ச்சியின் காரணமாக அதை செய்ய இயலவில்லை.)

தாமஸ் ரோ இங்கிலாந்து அரசர் முதலாம் ஜேம்ஸ் அனுப்பிய தூதுவராய் __________ நகரில் ஒரு வணிக குடியேற்றத்தை அமைத்து கொள்வதற்கான அனுமதியை ஜஹாங்கீரிடம் பெற்றார்.

A) கோவா

B) வங்காளம்

C) ஆக்ரா

D) சூரத்

(குறிப்பு: ஜஹாங்கீரின் ஆட்சி வில்லியம் ஹாக்கின்ஸ் மற்றும் சர் தாமஸ் ரோ என்ற இரு ஆங்கிலேயரின் வருகைக்கு சாட்சியமா சாட்சியமானது. இந்தியாவில் ஆங்கிலேய வணிகக் குடியேற்றம் ஒன்றை நிறுவுவதற்குப் பேரரசின் அனுமதியை ஹாக்கின்சால் பெற இயலவில்லை.)

ஜாகீர்தாரி முறை குறித்த கூற்றுகளில் தவறானதைத் தேர்ந்தெடு.

1. இது ஒரு நில உடைமை முறையாகும்.

2. தில்லி சுல்தானியர் காலத்தில் இம்முறை வளர்ச்சி பெற்றது.

3. இம்முறையின் கீழ் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வரிவசூல் செய்கின்ற அதிகாரமும் அப்பகுதியை நிர்வகிக்கிற அதிகாரமும் அரசாங்கத்தை சேர்ந்த ஒரு அதிகாரியிடம் ஒப்படைக்கப்படும்.

A) அனைத்தும் சரி

B) 1, 2 சரி

C) 1, 3 சரி

D) 2, 3 சரி

கூற்று 1: பாரசீக மொழியில் ஜமீன்தார் என்ற வார்த்தைக்கு நிலத்தின் உடைமையாளர் என்று பொருள்.

கூற்று 2: முகலாயர் காலத்தில் பிரபுக்கள் வர்க்கத்தை சேர்ந்தோரே ஜமீன்தார்களாக இருந்தனர். அக்பர் பிரபுக்களுக்கும் முந்தைய அரச குடும்பங்களின் வழித்தோன்றல்களுக்கும் நிலங்களை வழங்கி அவற்றை பரம்பரையாக அனுபவிக்கும் உரிமையையும் வழங்கினார்.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: ஜமீன்தார்கள் குத்தகைதாரர்களிடமிருந்தும் விவசாயிகளிடமிருந்தும் வரி வசூல் செய்து ஒரு குறிப்பிட்ட தொகையை அரசுக்குச் செலுத்தினர்.)

தவறானக் கூற்றைத் தேர்ந்தெடு.

1. தக்காணத்தில் முஸ்லீம்களும் மராத்தியர்களும் தங்கள் அரசியல் மற்றும் பிராந்தியத் தனித்தன்மைகளைப் பாதுகாக்கும் முயற்சியில் ஒருங்கிணைந்து முகலாயரின் மேலாதிக்கத்தை எதிர்த்தனர். இதன் பின்னே மூளையாக செயல்பட்டவர் மாலிக் ஆம்பர்.

2. 1624 இல் மே 14 இல் மாலிக் ஆம்பர் தன்னுடைய 78ஆம் வயதில் மரணமடைந்த போது அவரால் பயிற்றுவிக்கப்பட்ட மராத்தியர்கள் ஓர் அங்கீகரிக்கப்பட்ட சக்தியாக மாறினர்.

3. எத்தியோப்பாவிலிருந்து இந்தியாவுக்கு ஓர் அடிமையாக கொண்டுவரப்பட்டவர் மாலிக் ஆம்பர்.

A) 1 மட்டும் தவறு

B) 2 மட்டும் தவறு

C) 2, 3 தவறு

D) 3 மட்டும் தவறு

(குறிப்பு: மாலிக் ஆம்பர் 1626 மே 14 இல் மரண மடைந்தார்.)

கூற்று: ஜஹாங்கீரின் பாரசீக மனைவி மெகருன்னிசா அரியணையின் பின்னே உண்மையான அதிகாரம் கொண்டவராகத் திகழ்ந்தார்.

காரணம்: ஜஹாங்கீர் அரசு விஷயங்களைக் காட்டிலும் கலை, ஓவியம், தோட்டம், மலர்கள் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார்.

A) கூற்று சரி மற்றும் காரணம் தவறு

B) கூற்று தவறு மற்றும் காரணம் சரி

C) கூற்று சரி மற்றும் காரணம் கூற்றை விளக்குகிறது

D) கூற்று சரி மற்றும் காரணம் கூற்றை விளக்கவில்லை

(குறிப்பு: ஜஹாங்கீரால் நூர்ஜகான் எனப் பெயரிடப்பட்டவர் மெகருன்னிசா.)

கூற்று 1: ஜஹாங்கீர் இறந்தவுடன் நூர்ஜகான் தன் மருமகன் ஷாரியர் என்பவருக்கு மணிமுடி சூட்ட முயன்றார்.

கூற்று 2: நூர்ஜகானின் சகோதரரும் குர்ரமின் மாமனாருமான ஆசப்கான் மேற்கொண்ட முயற்சிகளால் குர்ரம் ஷாஜகான் என்ற பெயருடன் அடுத்த முகலாய அரசராக அரியணை ஏறினார்.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: 1641இல் ஷாஜகானின் அமைச்சரும் மாமனாருமான ஆசப்கான் மரணமடைந்தார்.)

பத்து ஆண்டுகள் நாட்டையாண்ட நூர்ஜகான், ____________இல் ஜஹாங்கீரின் இறப்புக்குப் பின்னர் அதிகாரத்தையும் செல்வாக்கையும் இழந்தார்.

A) 1623 B) 1625 C) 1627 D) 1631

(குறிப்பு: நூர்ஜகான் ஓய்வு பெற்ற பின் பிரச்சனைகள் எதையும் ஏற்படுத்தவில்லை.)

ஆசப்கானின் சகோதரியும் ஷாஜகானின் முன்னாள் எதிரியுமான நூர்ஜகான்_____________ வரை உயிரோடிருந்தார்.

A) 1641 நவம்பர்

B) 1643 அக்டோபர்

C) 1644 செப்டம்பர்

D) 1645 டிசம்பர்

ஷாஜகான் ஆட்சியின் தொடக்கத்தில் தெற்கு பிராந்தியங்களின் ஆளுநராக இருந்தவர்

A) கான்ஜகான்

B) இரண்டாம் மூர்தசா

C) இராதத்கான்

D) ஆசம்கான்

(குறிப்பு: ஷாஜகானிடம் பகைமைப் பாராட்டிய ஆப்கானிய பிர்லோடியின் பட்டப்பெயர் கான்ஜகான் ஆகும்.)

கான்ஜகான் ஷாஜகானுக்கு எதிராக கலகத்தில் ஈடுபட்டதால் அவரை தொடர்ந்து _____________ என்பவர் தக்காணத்தின் ஆளுநராக அமர்த்தப்பட்டார்.

A) பிர்லோடி

B) இரண்டாம் மூர்தசா

C) இராதத்கான்

D) ஆகம்கான்

(குறிப்பு: ஆசம்கான் எனும் பட்டத்தைப் பெற்ற இராதத்கான், இரண்டாம் மூர்தசா மற்றும் கான்ஜகானுக்கு எதிராக பால்காட் பகுதியைத் தாக்கினார்.)

கான்ஜகான் தௌலதாபாத்திலிருந்து தப்பி மாளவம் சென்றதும் தக்காணத்தில் அமைதி நிலவியது. பின் ஷாஜகான் தக்காணத்தை விட்டு செல்லும் முன்பாக அப்பகுதியை_____________ மாநிலங்களாகப் பிரித்தார்.

A) 2 B) 3 C) 4 D) 5

(குறிப்பு: தௌலதாபாத் உள்ளிட்ட அகமதுநகர், காண்டேஷ், பெரார், தெலுங்கானா ஆகியவை தக்காணத்தின் நான்கு மாநிலங்களாகும். அந்நான்கு மாநிலங்களுக்கும் ஆளுநராக பதினெட்டே வயது நிரம்பிய தனது மகன் ஒளரங்கசீப்பை நியமித்தார்.)

தவறான இணையைத் தேர்ந்தெடு.

1. கோல்கொண்டா – குதுப்ஷாகி

2. பீஜப்பூர் – அடில்ஷாஹி

3. பெரார் – இமத்ஷாஹி

4. பீடார் – பரித்ஷாஹி

5. அகமதுநகர் – நிஜாம்ஷாஹி

A) 2, 4 தவறு

B) 1, 3 தவறு

C) 1, 3, 5 தவறு

D) எதுவுமில்லை

(குறிப்பு: மேற்கண்ட அனைத்து அரசுகளும் கூட்டாகத் தக்காணச் சுல்தானியம் என்றழைக்கப்படுகிறது.)

ஷாஜகான் மகபத்கானின் உதவியோடு அகமதுநகரின் நிஜாம் ஷாஹி அரசர்களைப் பணியச் செய்த ஆண்டு

A) 1626 B) 1632 C) 1636 D) 1642

(குறிப்பு: 1638இல் ஷாஜகான் பாரசீகப் பேரரசில் அரங்கேறிய அரசியல் சூழ்ச்சிகளைப் பயன்படுத்தி, அக்பரால் கைப்பற்றப்பட்டு ஜஹாங்கீரால் இழக்கப்பட்ட காந்தகாரைக் கைப்பற்றி இணைத்துக்கொண்டார்.)

அல்புகர்க் பீஜப்பூர் சுல்தானிடமிருந்து _____________ ஆண்டு கோவாவைக் கைப்பற்றி அதைக் கீழ்த்திசை போர்த்துகீசியப் பேரரசின் தலைநகராக்கினார்.

A) 1508 B) 1509 C) 1510 D) 1512

(குறிப்பு: மேற்குக் கடற்கரையில் டாமன், சால்செட், பம்பாய் ஆகிய இடங்களிலும் போர்த்துகீசியர் குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டன.)

பொருத்துக. (டச்சுக்காரர்களின் வணிக நிலையங்கள் அமைக்கப்பட்ட ஆண்டு)

1. மசூலிப்பட்டினம் i) 1605

2. புலிக்காட் ii) 1610

3. சூரத் iii) 1616

4. பிமிலிபட்டினம் iv) 1641

A) i ii iv iii v

B) ii iv iii i v

C) ii i iii v iv

D) ii i iii iv v

தவறான இணையைத் தேர்ந்தெடு (டச்சுக்காரர்களின் வணிக நிலையங்கள் அமைக்கப்பட்ட ஆண்டு)

A) காரைக்கால் – 1645

B) சின்சுரா – 1653

C) கொச்சி – 1663

D) பாலசோர் – 1656

(குறிப்பு: காசிம் பஜார், பாராநகர், பாட்னா, பாலசோர், நாகப்பட்டினம் அனைத்திலும் 1658 ஆம் ஆண்டு டச்சுக்காரர்கள் வணிகதளங்களை ஏற்படுத்தினர்.)

டேனியர்கள் தரங்கம்பாடியில் குடியேற்றத்தை நிறுவிய ஆண்டு

A) 1605 B) 1616 C) 1618 D) 1620

(குறிப்பு: வங்காளத்தில் செராம்பூர் டேனியர்களின் தலைமையிடமாக இருந்தது.)

தவறான இணையைத் தேர்ந்தெடு. (பிரெஞ்சுக்காரர்களின் தொடக்க காலக் குடியேற்றங்கள் – அமைக்கப்பட்ட ஆண்டு)

A) சூரத் – 1668

B) மசூலிப்பட்டினம் – 1669

C) புதுச்சேரி – 1673

D) சந்தன்நகர் (வங்காளம்) – 1680

(குறிப்பு: சந்தன்நகர் – 1690)

மலபாரில் உள்ள மாஹி, சோழ மண்டல கடற்கரையில் உள்ள ஏனாம் ஆகியவை பிரெஞ்சுக்காரர்களால் கைப்பற்றப்பட்ட ஆண்டு

A) 1715 B) 1721 C) 1725 D) 1728

(குறிப்பு: பிரெஞ்சுக்காரர்கள் 1739 ஆம் ஆண்டு காரைக்காலைக் கைப்பற்றினர்.)

ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி சூரத்தில் வணிக நிறுவனத்தை அமைத்த ஆண்டு

A) 1610 B) 1611 C) 1612 D) 1613

(குறிப்பு: பின்னர் சென்னை (1639), பம்பாய் (1668), கல்கத்தா (1690) ஆகியவற்றைப் ஆங்கிலேயர்கள் பெற்றனர்.)

பிரான்ஸ் அரசன் XIV ஆம் லூயியின் சமகாலத்து அரசனான ஷாஜகான் ___________ ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்.

A) 20 B) 22 C) 25 D) 30

(குறிப்பு: ஷாஜகான் காலத்தில் அரசருக்காகப் புகழ்பெற்ற மயிலாசனம் செய்யப்பட்டது.)

பொருத்துக. (ஷாஜகான் ஆட்சியில் இந்தியாவிற்கு வந்த ஐரோப்பியர்கள்)

1. பெர்னியர் i) இத்தாலிய எழுத்தாளர், பயணி

2. தாவர்னியர் ii) இங்கிலாந்து வணிகர்

3. மான்டெல்சோ iii) ஜெர்மன் பயணி, துணிச்சல் வீரர்

4. பீட்டர்முன்டி iv) பிரெஞ்சு வைர வியாபாரி, பயணி

5. மனுச்சி v) பிரெஞ்சு மருத்துவர், பயணி

A) i ii iii iv v

B) ii iii i v iv

C) v iv iii ii i

D) v iii ii iv i

தாராஷூகோ குறித்த கூற்றுகளில் சரியானதைத் தேர்ந்தெடு.

1. தாராஷூகோ சன்னி இஸ்லாமியப் பிரிவைச் சேர்ந்தவராயினும் சூபி தத்துவங்களின் மேல் ஆர்வம் கொண்டிருந்தார்.

2. தில்லி அரியணைக்கான வாரிசுரிமைப் போரில் ஒளரங்கசீப்பிடம் தோற்றுப்பான தாராஷூகோ தத்துவஞான இளவரசர் என அறியப்பட்டார்.

3. தாராஷூகோ சமஸ்கிருத மொழியிலமைந்த உபநிடதங்களைப் பாரசீக மொழியில் மொழிபெயர்த்தார்.

4. பல்வேறு பண்பாடுகளை உரையாடலுக்கு உட்படுத்திய தாராஷூகோ இந்து மதத்திற்கும் இஸ்லாத்துக்குமிடையே நெருங்கிய தொடர்புகள் இருப்பதைக் கண்டறிந்தார்.

A) அனைத்தும் சரி

B) 1, 2, 3 சரி

C) 1, 2, 4 சரி

D) 2, 3, 4 சரி

(குறிப்பு: ஷாஜகானின் நான்கு மகன்களிடையே நடைபெற்ற வாரிசுரிமைப் போரில் மூன்றாவது மகன் ஒளரங்கசீப் வெற்றி பெற்றார்.)

கூற்று 1: தாஜ்மஹால் இந்தியப் பாரசீக இஸ்லாமியக் கட்டடக் கலைகளின் கூட்டுக் கலவையாகும்.

கூற்று 2: பாரசீக வம்சாவளியைச் சேர்ந்த இந்தியராகிய உஸ்தத் அகமத் லஹாவ்ரி என்பவர் தலைமை கட்டடக்கலை நிபுணராக இருந்தாலும் தாஜ்மகாலுக்கான வரைபடத்தை தயாரித்த பெருமை அக்காலக்கட்டத்தை சேர்ந்த கட்டடக்கலை நிபுணர்களைச் சாரும்.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: 1612 இல் திருமணமானதில் தொடங்கி 1631இல் குழந்தைப் பேறின் போது மரணமடையும் வரை இணைபிரியாமல் உற்ற துணையாய் இருந்த தனது மனைவி மும்தாஜுக்கு அழியாப் புகழை அளிப்பதற்காக ஷாஜகான் தாஜ்மஹாலைக் கட்டினார்.)

தாஜ்மகால் குறித்த கூற்றுகளில் தவறானதைத் தேர்ந்தெடு.

1. தாஜ்மகாலின் கட்டிட வேலைகள் 1632 இல் தொடங்கின.

2. இந்தியா, பாரசீகம், உதுமானியப் பேரரசு, ஐரோப்பா ஆகியவற்றிலிருந்து இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கல்லறை மாடப் பணியை 1638-39இல் முடிப்பதற்காகப் பணியமர்த்தப்பட்டனர்.

3. அருகிலுள்ள ஏனைய கட்டடங்கள் 1643 இல் முடிவடைந்தன.

4. அலங்கார வேலைகள் குறைந்தபட்சம் 1644 வரை தொடர்ந்தது.

A) 1 மட்டும் தவறு

B) 2, 3 தவறு

C) 1, 4 தவறு

D) 4 மட்டும் தவறு

(குறிப்பு: தாஜ்மகாலின் அலங்கார வேலைகள் குறைந்தபட்சம் 1647 வரை தொடர்ந்தது.)

ஒளரங்கசீப்பால் வீட்டு சிறையிலடைக்கப்பட்ட ஷாஜகான் அரண்மனைக் கைதியாகவே இருந்து எப்போது மரணமடைந்தார்?

A) 1665 ஜனவரி

B) 1665 செப்டம்பர்

C) 1666 ஜனவரி

D) 1666 செப்டம்பர்

(குறிப்பு: ஷாஜகான், தாஜ்மகாலில் அவரது மனைவியின் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டார்.)

ஒளரங்கசீப் ஆலம்கீர் வாரிசுரிமைப் போரில் அரியணைக்காகத் தன்னோடு போட்டியிட்ட தாராஷூகோ, ஷூஜா, முராத் ஆகியோரை வெற்றிக் கொண்டு __________ ஆண்டு அரியணை ஏறினார்.

A) 1652 B) 1657 C) 1658 D) 1659

(குறிப்பு: ஒளரங்கசீப் ஆலம்கீர் என்பதற்கு உலகை வெல்பவர் என்று பொருள்.)

ஒளரங்கசீப் குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.

A) ஒளரங்கசீப் தனது ஐம்பது ஆண்டுகால ஆட்சியில் முதல் இருபத்தைந்து ஆண்டுகள் வட இந்திய அரசியலில் பெரும்பாலும் ஈடுபட்டிருந்தார்.

B) ஒளரங்கசீப் ஆட்சியின் தொடக்கத்தில் தக்காணப் பகுதி அவருடைய ஆளுநர்களின் கைகளில் விடப்பட்டிருந்தன.

C) 1681இல் ஒளரங்கசீப்புடைய மகன்களில் ஒருவரான இளவரசர் அக்பர் மேற்கொண்ட கிளர்ச்சியின் காரணமாய் ஒளரங்கசீப் தக்காணம் சென்று மீண்டும் தில்லிக்கு திரும்பவில்லை.

D) ஒளரங்கசீப் அகமதுநகரில் 1705இல் காலமானார்.

(குறிப்பு: ஒளரங்கசீப் 1707 ஆம் ஆண்டு அகமதுநகரில் காலமானார்.)

ஒளரங்கசீப் ஆட்சியின் தொடக்கத்தில் ___________ அவரின் தலைநகராக அமைந்தது.

A) ஆக்ரா

B) குவாலியர்

C) அலகாபாத்

D) ஷாஜகானாபாத்

(குறிப்பு: இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் தனது நீண்ட படையெடுப்புகளின்போது ஒளரங்கசீப் எங்கெல்லாம் முகாமிட்டாரோ அவ்விடங்களுக்குத் தலைநகர் மாறியது.)

வட இந்தியாவில் ஒளரங்கசீப்பிற்கு எதிராக கலகம் செய்தவர்கள் யார்?

1. ஜாட் 2. சத்னாமியர்

3. சீக்கியர் 4. ஈரானியர்

A) 1, 2, 3 B) 2, 3, 4 C) 1, 3, 4 D) 1, 2, 4

(குறிப்பு: ஜஹாங்கீர், ஷாஜகான் காலத்திலேயே தொடர்ந்து கலகம் செய்யும் இயல்பினைக் கொண்ட ஜாட்டுகளின் 1669 ஆம் ஆண்டு கலகம் ஒடுக்கப்பட்டாலும் ஒளரங்கசீப் இறப்பிற்கு பின் மீண்டும் கலகத்தில் ஈடுபட்டனர். சத்னாமியர் கிளர்ச்சியானது உள்ளூர் இந்து ஜமீன்தார்களின் உதவியோடு ஒடுக்கப்பட்டது. சீக்கியர் கலகமானது ஒன்பதாவது குருவான தேஜ்பகதூர் கொல்லப்பட்டதோடு கிளர்ச்சி முடிவுற்றது.)

மார்வாரில் ஜஸ்வந்த் சிங்கின் மரணத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட வாரிசுரிமை சிக்கல் காரணமாக ஒளரங்கசீப் ______________ என்பவரை பெயரளவிற்கு அரச பதவியில் அமர்த்த முயற்சி மேற்கொண்டார்.

A) ராணி ஹாடி

B) இந்திர சிங்

C) ராஜ் சிங்

D ஜெய் சிங்

(குறிப்பு: ஒளரங்கசீப்பின் இம்முயற்சியை ஜஸ்வந்த் சிங்கின் மனைவி ராணி ஹாடி வெறுத்தார். இது தொடர்பாக, ரத்தோர் ராஜபுத்திரரின் உதவியோடு மேற்கொள்ளப்பட்ட முயற்சி ஒடுக்கப்பட்டது.)

மார்வார் அரசியலில் ஒளரங்கசீப் தலையிட்டதால் வெறுப்பு கொண்ட மேவார் ராணாவான ____________ என்பவர் கலகத்தில் ஈடுபட்டார்.

A) ராணி ஹாடி

B) இந்திர சிங்

C) ராஜ் சிங்

D ஜெய் சிங்

(குறிப்பு: ராஜ் சிங்கின் கிளர்ச்சியை ஒளரங்கசீப்பின் மகன் இளவரசர் அக்பர் ஆதரித்தார். இருந்தபோதிலும் முகலாயர் படைகளுக்கு ராணா இணையானவர் அல்ல என்பதால் கொரில்லா போர்முறையைக் கையாண்டு 1680இல் தான் மரணமடையும்வரை ராணா போராடினார்.)

மேவாரின் புதிய ராணாவாக ராணா ஜெய்சிங் பதவியேற்ற ஆண்டு

A) 1680

B) 1681

C) 1682

D) 1683

(குறிப்பு: ராணா ஜெய் சிங் ஒளரங்கசீப்புடன் ஒரு அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட்டார்.)

ஒளரங்கசீப்பின் தக்காணக் கொள்கையின் நோக்கம்,

1. வளர்ந்து வந்த மராத்தியரின் செல்வாக்கைக் கட்டுப்படுத்துவது.

2. ஷியா பிரிவைச் சேர்ந்த தக்காணச் சுல்தானியங்களானக் கோல்கொண்டா, பீஜப்பூர் ஆகியவற்றின் கிளர்ச்சிப் போக்கிற்கு அணைபோடுவது

3. தக்காணத்தை புகலிடமாகக் கொண்ட தனது மகன் இளவரசர் அக்பரின் கிளர்ச்சிகளை ஒடுக்குவது

4. ஷியா முஸ்லிம்களின் கலகங்களை ஒடுக்குவது.

A) அனைத்தும்

B) 1, 2, 3

C) 2, 3, 4

D) 1, 2, 4

பீஜப்பூரின் அடிச்சாஹி வம்சத்தைச் சேர்ந்த சுல்தான் __________ என்பவர் ஒளரங்கசீப்பின் பல படையெடுப்புகளை எதிர்த்து நின்றார்.

A) அப்துல் ஹசன்

B) முகமது அடில்ஷா

C) சிக்கந்தர் அடில்ஷா

D) ஹசன் அடில்ஷா

(குறிப்பு: ஒளரங்கசீப் 1685 இல் தனது மகன் ஆசாம் ஷாவையும் பின் ஷா ஆலமையும் பீஜப்பூரை கைப்பற்ற அனுப்பி வைத்தார். இதில் பலன் கிட்டாததால் ஒளரங்கசீப் நேரடியாகப் போர்க்களத்தில் இறங்கி இறுதிவரை போரிடும்படி தனது படைகளுக்கு உற்சாகம் அளித்தார். இதனால் பீஜப்பூர் சுல்தான் தோல்வியடைந்தார்.)

கோல்கொண்டா சுல்தான் அப்துல் ஹசன் _____________ ஆண்டு ஒளரங்கசீப்பால் தோற்கடிக்கப்பட்டு கோல்கொண்டா கோட்டை கைப்பற்றப்பட்டது.

A) 1682 B) 1684 C) 1686 D) 1687

சிவாஜியை கைது செய்ய ஒளரங்கசீப்பால் அனுப்பி வைக்கப்பட்ட தளபதிகள்

A) ராஜ் சிங், செயிஷ்டகான்

B) இந்திரசிங், செயிஷ்டகான்

C) ஹரிசிங், செயிஷ்டகான்

D) ஜெய்சிங், செயிஷ்டகான்

(குறிப்பு: ஜெய்சிங் சிவாஜியைக் கைது செய்து தில்லிக்கு அழைத்துச் சென்றார். ஆனால் அங்கிருந்து தப்பிய சிவாஜி மீண்டும் தக்காணத்தை அடைந்தார்.)

கொரில்லா போர் முறையைப் பின்பற்றி முகலாயர்களை எதிர்த்து போர் செய்த சிவாஜி மரணமடைந்த ஆண்டு

A) 1678 B) 1679 C) 1680 D) 1681

(குறிப்பு: சிவாஜியின் மகன்களும் தொடர்ந்து எதிர்த்து ஒளரங்கசீப்பை 1707இல் அவர் மரணமடையும் வரை பெரும் சோதனைக்கு உள்ளாக்கினர்.)

கூற்று 1: ஒளரங்கசீப், அரியணைப் போட்டியில் தனக்கு எதிரான முக்கிய போட்டியாளரான தனது சகோதரர் தாராஷூகோவுக்கு சீக்கியர் உதவினர் என்ற காரணத்திற்காக அவர்களின் மீது வெறுப்புக் கொண்டார்.

கூற்று 2: ஒளரங்கசீப்பின் உத்தரவின்படியே குரு தேஜ்பகதூர் கொல்லப்பட்டார்.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: ஒளரங்கசிப்பிற்கு கடுமையான எதிர்ப்பென்பது மராத்தியரிடமிருந்தே வந்தது.)

கோல்கும்பாஸ் குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.

1. 1480 முதல் 1686 வரை பீஜப்பூரை ஆட்சி செய்த அடில்ஷாஹி மன்னர் காலத்தில் கட்டப்பட்டதாகும்.

2. அடர் சாம்பல் நிறக் கருங்கற்களால் கட்டப்பட்ட இதிலுள்ள 4 மூலைகளும் எண்கோண வடிவில் அமைந்துள்ளன.

3. கோல்கும்பாஸ் உலகின் இரண்டாவது பெரிய குவிமாடக் கட்டடமாகும்.

4. உயரமான இக்கட்டடம் 135 அடி சராசரி அளவில் அமைக்கப்பட்டுள்ளதுடன் 178 அடி உயர தளமேடை கொண்டதாகவும் உள்ளது.

A) 4 மட்டும் தவறு

B) 1, 2 தவறு

C) 3 மட்டும் தவறு

D) எதுவுமில்லை

(குறிப்பு: கோல்கும்பாஸில் முகமது அடில்ஷா அவர் மனைவி அருஸ்பீபி, அவர் மகள், பேரன், பேரனின் பிரிய மனைவி ரம்பா ஆகியோரின் ஐந்து கல்லறைகள் உள்ளன.)

சிவாஜியின் மகன் சாம்பாஜி ______________ ஆண்டு ஒளரங்கசீப்பால் கைது செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார்.

A) 1687 B) 1688 C) 1689 D) 1690

(குறிப்பு: கலகத்தில் ஈடுபட்ட ஒளரங்கசீப்பின் மகன் அக்பர் தக்காணத்தில் சாம்பாஜியின் உதவியை பெற்றார். ஒளரங்கசீப் நேரடியாகக் களத்தில் இறங்கவே பாரசீகத்திற்கு தப்பிச் சென்றார். சாம்பாஜி கொல்லப்பட்டார்.)

ஒளரங்கசீப் குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.

1. ஒளரங்கசீப் ‘ஜிஸியா’ வரியை மீண்டும் விதித்தார்.

2. ஒளரங்கசீப் ஆட்சிக் காலத்தில் புதிய கோவில்கள் கட்டவும், பழைய கோவில்கள் பழுது நீக்கவும் அனுமதிக்கவில்லை.

3. வழக்கமாக விதிக்கப்படும் நிலவரிக்கு மேலாக வசூலிக்கப்பட்ட ‘அப்வாப்’ என்னும் வரிவசூலை, அது ஷரியத் சட்டத்தால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்ற காரணத்திற்காக நிறுத்தினார்.

4. ஒரங்கசீப்பின் ஆட்சிக் காலத்தில் இந்து அதிகாரிகள் அதிகமான எண்ணிக்கையில் அரசு நிர்வாகத்தில் பணியாற்றினர்.

A) 3 மட்டும் தவறு

B) 3, 4 தவறு

C) 4 மட்டும் தவறு

D) 2 மட்டும் தவறு

(குறிப்பு: ஒளரங்கசீப் ஆட்சிக் காலத்தில் புதிய கோவில்கள் கட்டப்படக் கூடாதெனவும், பழைய கோவில்கள் பழுது நீக்கும் பணிகள் அனுமதிக்கப்பட்டன.)

கூற்று 1: முகலாயர் ஆட்சியில் முக்காடம் என்றழைக்கப்பட்டக் கிராமத் தலைவர்கள் கிராமத்தின் நிர்வாக உறுப்பான பஞ்ச் (பஞ்சாயத்து) என்ற அமைப்பினை உருவாக்கினர்.

கூற்று 2: கிராம அளவில் வரிகளை வசூலிப்பதும் அவை தொடர்பான கணக்குகளைப் பராமரிப்பதும் இப்பஞ்சாயத்தின் பொறுப்பாகும்.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படாத நிலங்களைக் கிராமக் கைவினைஞர்கள், கடைநிலை ஊழியர்கள், சேவை செய்வோர் ஆகியோருக்கு அவர்கள் செய்யும் சேவைகளுக்குக் கைமாறாக இப்பஞ்சாயத்து வழங்கியது.)

_____________ என்பவர் தன்னுடைய நூலில் முகலாயர் ஆட்சியில் ஜமீன்தார்கள் ஆவதற்கான தகுதிகளையுடைய சாதிகளைப் பட்டியலிட்டுள்ளார்.

A) அபுல் பைசி

B) அபுல் பாசல்

C) பாணினி

D) நூனிஸ்

(குறிப்பு: அபுல் பாசல் தன்னுடைய அய்னி அக்பரி நூலில் இதைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். பெரும்பாலும் இந்து மேல் சாதிகளைச் சேர்ந்தோரும் ரஜபுத்திரர்களும் ஜமீன்தார்களாக இருந்தனர். சில பகுதிகளில் முஸ்லீம்களும் ஜமீன்தார்களாக இருந்துள்ளனர்.)

அக்பருடைய ஆட்சிக் காலத்தில் ______________ விழுக்காடுக்கும் மேற்பட்ட பிரபுக்கள் ரஜபுத்திரர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.

A) 15 B) 20 C) 25 D) 30

(குறிப்பு: ராஜா தோடர்மால், ராஜா மான்சிங், ராஜா பீர்பால் ஆகியோர் அக்பர் காலத்தில் புகழ்பெற்ற பிரபுக்களாவர்.)

கூற்று 1: ரஜபுத்திரர்கள் அரசு நிர்வாகத்திலிருந்த பல்வேறு பணியிடங்களுக்கு காயஸ்தர், கத்ரி சமூகத்தை சேர்ந்தவர்களை நியமித்தனர்.

கூற்று 2: ஜஹாங்கீர், ஷாஜகான், ஒளரங்கசீப் ஆகியோர் மராத்தியரைப் பிரபுக்களாக நியமித்தனர்.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

புகையிலையும், மக்காச்சோளமும் ______________ நூற்றாண்டில் இந்தியாவில் அறிமுகமாயின.

A) 15 B) 16 C) 17 D) 18

(குறிப்பு: இதற்குப் பின்னரே மிளகாயும் வேர்க்கடலையும் அறிமுகமாயின.)

முகலாயர் காலத்தில் ரபி, காரிப் ஆகிய இரு வேளாண் பருவங்களில் பயிர்செய்யப்பட்டப் பயிர் வகைகளை____________நூல் பட்டியலிடுகிறது.

A) அக்பர் நாமா

B) அய்னி அக்பரி

C) பாதுஷா நாமா

D) ரசகங்காதரா

(குறிப்பு: அன்னாசிப்பழம் பதினாறாம் நூற்றாண்டில் அறிமுகமானது. ஒட்டுமுறையில் பல மாம்பழ ரகங்களை போர்த்துகீசியர் வளர்த்தார்கள்.)

முகலாயர் காலத்தில் ____________பட்டு உற்பத்தியில் பிரமிப்பூட்டும் வளர்ச்சியைப் பெற்று உலக சந்தைக்கு அதிகமான பட்டுத் துணியை அனுப்பிவைக்கும் தலைமை பட்டு உற்பத்தி மையமாயிற்று.

A) குஜராத்

B) ஆக்ரா

C) அகமது நகர்

D) வங்காளம்

சரியானக் கூற்றைத் தேர்ந்தெடு.

1. முகலாயர் காலத்தில் முஸ்லீம் மணப்பெண்கள் திருமணத்தின்போது ‘மகர்’ எனும் பணப்பரிசை பெறுவதற்கு உரிமை பெற்றிருந்தனர்.

2. முகலாயர் ஆட்சியில் கிணற்று நீர்ப்பாசனமே முக்கியப் பாசன முறையாக இருந்தது.

3. முகலாய ஆளும் வர்க்கத்தாருக்கு நிலவரியே மிக முக்கியமான வருவாயாகும்.

A) அனைத்தும் சரி

B) 1, 2 சரி

C) 2, 3 சரி

D) 1, 3 சரி

(குறிப்பு: அரசு நிர்வாகம் நிலத்தின் உற்பத்தித் திறனை மதிப்பிட்டு, நிலத்தை அளவை செய்து மொத்த அளவை அடிப்படையாகக் கொண்டு வரியை நிர்ணயம் செய்தது.)

தோடர்மாலால் அறிமுகம் செய்யப்பட்ட ஜப்தி முறையை பிரகடனம் செய்த முகலாய மன்னர்

A) அக்பர்

B) ஜஹாங்கீர்

C) ஷாஜகான்

D) ஒளரங்கசீப்

(குறிப்பு: பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் செலுத்த வேண்டிய வரிகள் தொடர்பான விவரங்களைக் கொண்ட அட்டவணைகள் தஸ்தர் என அழைக்கப்பட்டன.)

முகலாயர் காலத்தில் _____________ என்னும் தொழிற்கூடங்களில் விலையுயர்ந்த கைவினைப்பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன.

A) பர்கானா

B) கர்கானா

C) பஞ்சாரா

D) சைன்

(குறிப்பு: அரசக் குடும்பங்களுக்குத் தேவையான பொருட்களை அரண்மனை சார்ந்த கர்கானாக்கள் உற்பத்தி செய்தன.)

முகலாயர் கால வர்த்தகம் குறித்த கூற்றுகளில் சரியானதை தேர்ந்தெடு.

1. அரிசி, சர்க்கரை, மஸ்லின் பட்டு, உணவு தானியம் ஆகியவற்றை ஏற்றுமதி செய்வதில் வங்காளம் முக்கிய மையமாகத் திகழ்ந்தது.

2. சோழமண்டலக் கடற்கரை, தனது பருத்தித் துணி உற்பத்திக்காகப் புகழ்பெற்றிருந்தது.

3. காஷ்மீர் சால்வைகளும் தரைவிரிப்புகளும் கைவினைப் பொருட்களின் உற்பத்திக்குப் பெயர் பெற்றிருந்த லாகூரிலிருந்து விநியோகமாகின.

A) அனைத்தும் சரி

B) 1, 2 சரி

C) 2, 3 சரி

D) 1, 3 சரி

முகலாயர் காலத்தில் பொருட்கள் இடம் விட்டு இடம் செல்வதற்கு ___________ என்றழைக்கப்பட்ட கடன் பத்திரங்கள் உதவின.

A) சராய்

B) பஞ்சாரா

C) சைன்

D) உண்டி

(குறிப்பு: முகலாயர் காலத்தில் ஒருங்கிணைக்கப்பட்டிருந்த “சராய்கள்” (ஓய்வுவிடுதிகள்) வணிகர்களின் பயணங்களை ஊக்குவித்தன.)

தவறான இணையைத் தேர்ந்தெடு. (வணிக சமூகத்தினர்)

A) வங்காளம் – பேராமுஸ்லிம்கள்

B) ரஜபுதனம் – மார்வாரிகள்

C) சோழமண்டல கடற்கரை – செட்டியார்கள்

D) மலபார் – முஸ்லீம்கள்

(குறிப்பு: பேராமுஸ்லிம்கள் – குஜராத்.)

தவறானக் கூற்றைத் தேர்ந்தெடு.

A) இராமர் வழிபாட்டு மரபை தனது புகழ்பெற்ற பக்திப் பாடல்கள் வழி முன்மொழிந்த துளசிதாசர் (ராமசரிதமனஸ்) இராமரைக் கடவுளின் அவதாரமாகக் சித்தரித்தார்.

B) வல்லபாச்சாரியார் அவருடைய மகன் வித்தால் நாத் ஆகியோர் கிருஷ்ண வழிபாட்டை பரப்புரை செய்தனர்.

C) சூர்தாஸ் சூர்-சராவளி என்னும் இலக்கியத்தை உள்ளூர் மொழியில் எழுதினார்.

D) ஏகநாதர், துக்காராம் ஆகியோர் வங்காளத்தை சேர்ந்த பக்தி இயக்கக் கவிஞர்களாவர்.

(குறிப்பு: ஏகநாதர், துக்காராம் ஆகியோர் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த பக்தி இயக்கக் கவிஞர்களாவர்.)

வியாசரால் பிரபலப்படுத்தப்பட்ட ‘தசருதா’ இயக்கம் எப்பகுதியை சேர்ந்த பக்தி இயக்கம்?

A) தமிழ்நாடு

B) கர்நாடகா

C) ஆந்திரா

D) வங்காளம்

(குறிப்பு: பக்தி இயக்கத்தின் மிக முக்கிய ஆளுமை கபீர் ஆவார். இவர் முழுமையான ஒரு கடவுள் கோட்பாட்டை முன்வைததார்.)

தவறான இணையைத் தேர்ந்தெடு.

A) கபீர் – நெசவாளர்

B) ரவிதாஸ் – தோல் பதனிடும் தொழிலாளி

C) சைன் – சிகையலங்காரத் தொழில்

D) தாது – நெசவாளர்

(குறிப்பு: தாது – பருத்தியைச் சுத்தம் செய்பவர்.)

கூற்று 1: சீக்கியரின் புனித நூலான குரு கிரந்த சாகிப் இஸ்லாமிய மத குருவான ஷேக் பரித், பக்தி இயக்கப் புலவர்களான நாமதேவர், கபீர், சைன், ரவிதாஸ் ஆகியோரின் போதனைகளை உள்ளடக்கமாய்க் கொண்டுள்ளது.

கூற்று 2: “கடவுள் ஒருவரே” என குரு நானக் நம்பினார். அக்கடவுள் உருவமற்றவர், எங்கும் நிறைந்திருப்பவர் என கூறினார்.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

டேனியர்களின் ஆதரவின் கீழ் முதல் லூத்தரன் மத பரப்பாளர்கள் _____________ ஆண்டு தரங்கம்பாடிக்கு வந்தனர்.

A) 1702 B) 1705 C) 1706 D) 1709

(குறிப்பு: அவர்களில் ஒருவரான சீகன்பால்கு விவிலியத்தின் புதிய ஏற்பாட்டை 1714 இல் தமிழில் மொழியாக்கம் செய்தார்.)

ஐரோப்பாவிலிருந்த பல்கலைக் கழகங்களுக்கு நிகராக இந்தியாவில் கல்வி நிறுவனங்கள் இல்லை என கூறிய பிரான்ஸ் நாட்டு பயணி

A) ராபர்ட்-டி-நோபிலி

B) பெர்னியர்

C) அல்புகர்க்கு

D) அல்மெய்டா

(குறிப்பு: இதனால் அறிவியல் பாடங்களைக் கற்பிப்பது இயலாத நிலையில் இருந்தது. இருந்தபோதிலும் கணிதம், வானியல் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தப்பட்டது.)

பாஸ்கராச்சாரியாரின் புகழ்பெற்ற கணித நூலான லீலாவதியை மொழிப்பெயர்த்த அக்பர் அவைக்களப் புலவர்

A) ராஜா தோடர்மால்

B) அபுல் பாசல்

C) பெய்சி

D) பெர்னியர்

நீர் இறைப்பதற்காகப் பல பீப்பாய்கள் இணைக்கப்பட்ட சக்கரமான பாரசீகச் சக்கரம் யாருடைய காலத்தில்இந்தியாவில் அறிமுகமானது?

A) அக்பர்

B) ஹூமாயூன்

C) ஷாஜகான்

D) பாபர்

(குறிப்பு: வரிசையாக விசைச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட சற்றே கடினமான நீர் இறைக்கும் இயந்திரம் பதேபூர் சிக்ரியில் நிறுவப்பட்டது.)

கப்பலின் ஒட்டகம் என சொல்லப்படும் தொழில்நுட்பத்தை உலகத்திலேயே கண்டறிந்த முதல் மனிதர்

A) அக்பர்

B) ஹூமாயூன்

C) ஷாஜகான்

D) பாபர்

(குறிப்பு: இத்தொழில் நுட்பத்தின்படி ஒரு பெரிய படகின் மீதே கப்பல் கட்டப்படும். அவ்வாறு கட்டப்படுவது அக்கப்பல்களை கடலுக்குள் கொண்டு செல்வதை எளிதாக்கியது.)

“தொழில்நுட்பத்தில் இந்தியாவின் பின் தங்கிய நிலை வெளிப் படையாகத் தெரிகிறது. இந்தியப் படைகளில் மேட்ச் லாக் எனப்படும் பழைய பாணியிலானத் துப்பாக்கிக்கள் அதிகமான பயன்பாட்டில் இருந்தபோது ஐரோப்பாவில் பிளின்ட்லாக் எனப்படும் நவீனத் துப்பாக்கிகள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன. செலவு மிக்க செம்பிலான பீரங்கிகளை இந்தியா தொடர்ந்து பயன்படுத்தி வந்தபோது ஐரோப்பாவில் முன்னதாகவே அவை பயன்பாட்டிலிருந்து நீங்கிவிட்டன. இதற்கு காரணம் 17ஆம் நூற்றாண்டில் கூட இந்தியாவால் வார்ப்பிரும்பை உற்பத்தி செய்ய இயலாமல் போனதேயாகும்’ என்று கூறியவர்

A) இர்பான் ஹபீப்

B) பெர்னியர்

C) அல்புகர்க்கு

D) அல்மெய்டா

கூற்று 1: மணற்பாறைகளால் கட்டப்பட்ட ஆக்ரா கோட்டை ரஜபுத்திர பாணிகளை இணைத்து கட்டப்பட்டதற்கு ஒரு எடுத்துக்காட்டாய் திகழ்கிறது.

கூற்று 2: ஆக்ராவுக்கு அருகே சிக்கந்தராவிலுள்ள அக்பரின் கல்லறை மாடம் சில பௌத்த கட்டடக்கலைக் கூறுகளையும் கொண்டுள்ளது.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: அக்பரின் கல்லறை மாடம் அக்பர் காலத்தில் தொடங்கப்பட்டு ஜஹாங்கீரின் காலத்தில் நிறைவு பெற்றது.)

முகலாயர் காலத்திய முதல் வெள்ளை நிறப் பளிங்கு கற்களால் கட்டப்பட்ட கட்டடம்

A) தாஜ்மகால்

B) புராணகிலா

C) சசாரம்

D) இதிமத் உத் தெளலா கல்லறை

(குறிப்பு: நூர்ஜஹானின் தந்தையான இதிமத் உத் தெளலாவின் கல்லறையை கட்டியவர் ஜஹாங்கீர்.)

யாருடைய காலத்தில் முகலாயக் கட்டடக்கலை அதன் சிகரத்தை எட்டியது?

A) ஜஹாங்கீர்

B) ஷாஜகான்

C) அக்பர்

D) ஒளரங்கசீப்

(குறிப்பு: திவானி ஆம், திவானி காஸ், மோதி மஹால், ஹுரமஹால் போன்ற பிரமிப்பூட்டும் கட்டடங்களால் சூழப்பட்டுள்ள செங்கோட்டை ஷாஜகான் காலத்து கட்டடக்கலைத் திறன்களைப் பிரதிபலிக்கின்றன.)

வெடியுப்பை பயன்படுத்தி நீரைக் குளிர்விக்கும் முறையைப் பரவலாக்கிய பெருமை ____________ ஐச் சாரும்.

A) அக்பர்

B) ஹூமாயூன்

C) ஷாஜகான்

D) பாபர்

யாருடைய காலத்தில் லாகூரில் பாதுஷாகி மசூதி கட்டப்பட்டது?

A) ஜஹாங்கீர்

B) ஷாஜகான்

C) அக்பர்

D) ஒளரங்கசீப்

(குறிப்பு: ஒளரங்காபாத்தில் ரபியா உத் தெளராணியின் பளிங்கிலான கல்லறையும் கட்டப்பட்டது. இக்கல்லறை பீபிமக்பரா (பெண்ணின் கல்லறை) என்றழைக்கப்படுகிறது.)

முகலாயர் கால ஓவியக்கலை குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.

A) இந்தியா வந்த நுண் ஓவியக் கலைஞர்களான அப்துல் சமத், மீர் சையத் அலி ஆகியோரிடமிருந்து இந்திய ஓவியர்கள் ஊக்கம் பெற்றனர்.

B) தஷ்வந்த், பசவன் ஆகியோர் பாபரின் அவையை அலங்கரித்த முக்கிய ஓவியர்களாவர்.

C) ஜஹாங்கீர் காலத்தில் உருவுப் படத்தை வரைதலும் விலங்குகளை வரைவதும் வளர்ச்சி பெற்றன.

D) முகலாய நுண்ணோவியங்கள் டச்சு நாட்டின் தலைச்சிறந்த ஓவியரான ரெம்பிராண்ட் மீது தாக்கத்தை ஏற்படுத்தின.

(குறிப்பு: தஷ்வந்த், பசவன் ஆகியோர் அக்பரின் அவையை அலங்கரித்த முக்கிய ஓவியர்களாவர்.)

பல மெல்லிசைப் பாடல்களை இயற்றிய குவாலியரை சேர்ந்த தான்சென் ஏனைய 35 இசைக் கலைஞர்களோடு _____________ ஆல் ஆதரிக்கப்பட்டார்.

A) அக்பர்

B) ஹூமாயூன்

C) ஷாஜகான்

D) ஒளரங்கசீப்

(குறிப்பு: இச்செய்தியை அய்னி அக்பரி நூல் குறிப்பிடுகிறது.)

கூற்று 1: ஜஹாங்கீரும் ஷாஜகானும் இசையை ஆதரித்தனர். ஒளரங்கசீப் இசைக்கு எதிரானவராகத் திகழ்ந்தார்.

கூற்று 2: பாபர் நாமா, பாதுஷா நாமா ஆகிய நூல்களில் இசைக்கருவிகளோடு பெண்கள் நடனமாடும் ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: ஒளரங்கசீப் இசைக்கு எதிரானவர் அல்ல. அவருடைய காலத்தில்தான் இந்தியாவின் செவ்வியல் இசை குறித்த பல நூல்கள் எழுதப்பட்டன.)

முகலாயப் பேரரசிலும் தக்காண அரசுகளிலும் ____________மொழி நிர்வாக மொழியாக இருந்தது.

A) சமஸ்கிருதம்

B) பாரசீகம்

C) உருது

D) தெலுங்கு

(குறிப்பு: பாரசீகம், சமஸ்கிருதம் மற்றும் பிராந்திய மொழிகள் முகலாயர் காலத்தில் நன்கு வளர்ச்சியடைந்தன.)

அக்பர் நாமா என்னும் நூலில் அக்பரின் வரலாற்றை தொகுத்து வழங்கியவர்

A) அக்பர்

B) முகமது காஸிம்

C) அபுல் பாசல்

D) முகமது வாரிஸ்

(குறிப்பு: அபுல் பாசல் முகலாய நிர்வாகத்தைப் பற்றி அய்னி அக்பரியில் விவரித்துள்ளார்.)

ஒளரங்கசீப்பின் முதல் பத்தாண்டு கால ஆட்சியைப் பற்றி விளக்கும் ஆலம்கீர் நாமா என்னும் நூலை இயற்றியவர்

A) முகமது வரிஸ்

B) முகமது காஸிம்

C) அபுல் பாசல்

D) முகமது காஸிம்

(குறிப்பு: அப்துல் ஹமீது லகோரி, முகமது வரிஸ் ஆகிய இருவரும் இணைந்து எழுதிய ஷாஜகான் வாழ்க்கை வரலாறான பாதுஷா நாமா அய்னி அக்பரியை முன்னுதாரணமாகக் கொண்டு எழுதப்பட்டது. ஆலம்கீர் நாமாவும் இதே முறையைப் பின்பற்றி எழுதப்பட்டது.)

_____________ என்னும் நூல் பல்வேறு மதங்களின் நம்பிக்கைககள், அம்மதங்கள் தொடர்பான நூல்கள் ஆகியன குறித்துப் பாரபட்சமற்ற விபரங்களைக் கொண்டுள்ளது.

A) அக்பர் நாமா

B) பாதுஷா நாமா

C) தபிஸ்தான்

D) சர்-இ-அக்பர்

(குறிப்பு: பாபரின், சகாட்டி துருக்கிய மொழியில் எழுதிய சுயசரிதையை அப்துல் ரகீம் கானி-இ-கானான் என்பவர் பாரசீக மொழியில் மொழியாக்கம் செய்தார்.)

உபநிடதங்களை ‘சர்-இ-அக்பர்’ (மாபெரும் ரகசியம்) என்னும் பெயரில் மொழிபெயர்த்தவர்

மொழிப்பெயர்த்த அக்பர் அவைக்களப் புலவர்

A) ராஜா தோடர்மால்

B) அபுல் பாசல்

C) தாராஷூகோ

D) பெர்னியர்

(குறிப்பு: அபுல் பெய்சியின் மஸ்னாவி, உத்பி, நசிரி ஆகியன இந்தியாவில் பாரசீகக் கவிதைகளுக்கு வளம் சேர்த்தன.)

யாருடைய மேற்பார்வையில் மகாபாரதம் பாரசீக மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது?

A) முகமது வரிஸ்

B) முகமது காஸிம்

C) அபுல் பெய்சி

D) முகமது காஸிம்

(குறிப்பு: சமஸ்கிருத நூல்களை மொழி பெயர்த்ததால் பாரசீக மொழி வளம் பெற்றது.)

கல்ஹனார் காஷ்மீரின் முழுமையான வரலாறு குறித்து எழுதிய நூல்

A) தஜிகனிலகந்தி

B) ரசகங்காதரா

C) ராஜவலிபதகா

D) மஸ்னாவி

(குறிப்பு: இந்நூல் அக்பர் ஆட்சிக் காலத்தில் பிரக்ஞபட்டரால் தொகுக்கப்பட்டது.)

தஜிகனிலகந்தி என்னும் வானியல் ஆய்வு நூலைப் படைத்த நீலகண்டர் யாருடைய வானியலறிஞராக திகழ்ந்தார்?

A) அக்பர்

B) ஹூமாயூன்

C) ஷாஜகான்

D) ஒளரங்கசீப்

(குறிப்பு: ஷாஜகானின் அவைக்களப் புலவரான ஜெகநாத பண்டிதர் ‘ரசகங்காதரா’ எனும் சிறப்புக்குரிய நூலை எழுதினார்.)

கூற்று 1: அப்துர் ரகீம் கான்-இ-கானான் என்பவர் வாழ்க்கை குறித்த மனித உறவுகள் தொடர்பான பாரசீகர்களின் சிந்தனைகள் இழையோடும் பக்திப் பாடல்களை இந்தியின் கிளை மொழியான பிரிஜி என்னும் வடிவத்தில் எழுதினார்.

கூற்று 2: கிழக்கு உத்திரப்பிரதேசத்து மக்கள் பேசிய இந்தி மொழியின் வட்டார மொழியான அவதியில் துளசிதாசர் எழுதிய பாடல்கள் அவற்றின் பக்திச் சிந்தனைகளுக்காகப் பிரபலமாயின.

A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

B) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

C) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி

D) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

(குறிப்பு: முக்தீஸ்வரர் மகாபாரதத்தையும் இராமாயணத்தையும் இலக்கிய வளம் கொண்ட மராத்திய மொழியில் எழுதினார்.)

மாபெரும் சைவப் புலவரான குமரகுருபரர் ______________ நூற்றாண்டின் பிற்பகுதியில் காசி சென்று வந்ததாகக் கூறப்படுகிறது.

A) 15 B) 16 C) 17 D) 18

(குறிப்பு: குமரகுருபரர் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், நீதிநெறி விளக்கம் ஆகிய முக்கிய இலக்கியங்களை இயற்றினார்.)

தவறானக் கூற்றைத் தேர்ந்தெடு.

1. விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயர் தனது அமுக்தமால்யதா மூலமாகவும், அவருடைய அவைக்களப்புலவரான அல்லசானி பெத்தண்ணா தனது ‘மனுசரித்திரா’ எனும் நூலின் மூலமாகவும் தெலுங்கு இலக்கியத்தின் கலங்கரை விளக்கங்களாகத் திகழ்கின்றனர்.

2. அஸ்ஸாமிய மொழியில் பக்திப் பாடலை முன்மாதிரியாகக் கொண்டு சங்கர தேவர் ஒரு புதிய இலக்கியமரபை உருவாக்கினார்.

3. கிருஷ்ணருக்கும் ராதைக்குமான காதலைச் சித்தரிக்கும் கவிதைகளை கொண்ட சைதன்ய வழிபாட்டு முறை வங்காள இலக்கியத்தை மேம்படுத்தியது.

A) அனைத்தும் சரி

B) 1, 2 சரி

C) 2, 3 சரி

D) 1, 3 சரி

கீழே உள்ள ஆட்சியாளர்களுள் யார் அக்பரின் சமகாலத்தவர் இல்லை?

A) இங்கிலாந்தின் எலிசபெத்

B) ஷேக்ஸ்பியர்

C) பிரான்ஸின் நான்காம் ஹென்றி

D) இங்கிலாந்தின் விக்டோரியா மகாராணி

(குறிப்பு: ஐரோப்பாவில் நடைபெற்ற ஸ்பானிய ஆட்சிக்கு எதிராக நெதர்லாந்தின் கிளர்ச்சி அக்பரின் காலத்தில் தொடங்கி ஏறத்தாழ எண்பது ஆண்டுகள் தொடர்ந்து 1648 இல் முடிவடைந்தது. சாபாவி அரச வம்சத்தின் மாபெரும் வலிமைமிக்க அரசனான மகா அப்பாஸும் அக்பர் காலத்தில் பாரசீகத்தை ஆண்டார்.)

ஜஹாங்கீர் மற்றும் _____________ அமைத்த ஷாலிமர் தோட்டங்கள், இந்திய தோட்டக்கலையில் குறிப்பிடத்தக்கவையாகும்.

A) அக்பர்

B) ஷாஜகான்

C) ஹுமாயூன்

D) ஒளரங்கசீப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!