MCQ Questions

மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி – ஓர் அறிமுகம் 10th Social Science Lesson 10 Questions in Tamil

10th Social Science Lesson 10 Questions in Tamil

10] மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி – ஓர் அறிமுகம்

1) ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற அனைத்து பண்டங்கள் மற்றும் பணிகளின் அங்காடி மதிப்பை_________என்னும் பதத்தால் குறிப்பிடலாம்.

A) மொத்த உள்நாட்டு உற்பத்தி

B) மொத்த நாட்டு உற்பத்தி

C) மொத்த நாட்டு வருமானம்

D) இவை எதுவும் அல்ல

(குறிப்பு – ஒரு நாடு எவ்வாறு செயல்படுகிறது அல்லது செயல்படவில்லை என்பதை மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) என்பதை கொண்டு அளவிடமுடியும்.)

2) தொட்டு உணர முடியாத பொருளாதார நடவடிக்கைகள் பொருளியலில் எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?

A) பணிகள்

B) சேவைகள்

C) பண்டங்கள்

D) இவை எதுவும் இல்லை

(குறிப்பு – பண்டங்கள் என்பது தொடக்கூடிய பொருளும், பணிகள் என்பது தொட்டு உணர முடியாததுமான நடவடிக்கைகளாகும்)

3) இந்திய செலவாணிக்கு எது பயன்படுத்தப்படுகிறது?

A) டாலர்

B) யூரோ

C) ரூபாய்

D) யென்

(குறிப்பு – நம் நாட்டில் இந்திய செலாவணியான ரூபாயில் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள் மற்றும் பணிகளை அளவிடுவதற்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) பயன்படுத்தப்படுகிறது)

4) கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – ஒரு பண்டத்தையோ அல்லது பணியையோ அங்காடியில் விற்கவில்லை எனில் அதை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேர்க்க முடியாது.

கூற்று 2- எந்த ஒரு பண்ட, பணிகள் அங்காடியின் மதிப்பில் சேர்க்கப்படுகிறதோ, அது மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) ஆகும்.

A) கூற்று 1 மட்டும் சரியானது

B) கூற்று 2 மட்டும் சரியானது

C) இரண்டு கூற்றுகளும் சரியானது

D) இரண்டு கூற்றுகளும் தவறானது

(குறிப்பு – அங்காடியில் விலையை குறிக்க பணமதிப்பை பயன்படுத்தலாம். அவ்வாறு அங்காடியில் விலை கொடுத்து வாங்கும் பொருளை அல்லது பண்டம் அல்லது பணியை மட்டுமே மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேர்த்துக்கொள்ள முடியும்.)

5) கீழ்க்கண்டவற்றுள் எது மொத்த உள்நாட்டு உற்பத்தியை சாரும்?

I. தேனீர் கடையில் தேனீர் வாங்குதல்.

II. கணினி மையத்தில் தட்டச்சு செய்து வாங்குதல்.

III. கைவினை பொருளை விற்றல்.

A) I, II மட்டும்

B) I, III மட்டும்

C) II, III மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – மேற்கண்ட அனைத்தும் அங்காடி மதிப்பில் சேர்க்கப்படுகிறது. எந்த ஒரு பொருளோ அல்லது பணியும் அங்காடி மதிப்பில் சேர்க்கப்படும்போது அது மொத்த உள்நாட்டு உற்பத்தி (Gross Domestic Product) ஆகிறது)

6) இடைநிலை பண்டங்கள் என்பதின் பொருளை வரையறுத்த பொருளியல் வல்லுனர்கள் கீழ்க்கண்டவற்றுள் யார்?

I. டைலர் கோவன்

II. அலெக்ஸ் டாபர்ராக்

III. வில்லியம் ஸ்மித்

A) I, II மட்டும் சரியானது

B) II, III மட்டும் சரியானது

C) I, III மட்டும் சரியானது

D) இவை அனைத்தும் சரியானது

(குறிப்பு – எந்த ஒரு பண்டமோ அல்லது பணியோ மற்றொரு பண்ட, பணிகளை உற்பத்தி செய்யப்பயன்படுகிறதோ அது இடைநிலை பண்டம் என வரையறுக்கப்படுகிறது)

7) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?

கூற்று 1 – மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இறுதிநிலை பண்டங்கள் மட்டும் சேர்க்கப்படுகிறது.

கூற்று 2 – மொத்த உள்நாட்டு உற்பத்தி கணக்கிட இடைநிலை பண்டங்களை கணக்கில் எடுப்பதில்லை. ஏனெனில் அவற்றின் மதிப்பு இறுதிநிலை பண்டத்தில் சேர்க்கப்படுகிறது.

A) கூற்று 1 மட்டும் சரியானது

B) கூற்று 2 மட்டும் சரியானது

C) இரண்டு கூற்றுகளும் சரியானது

D) இரண்டு கூற்றுகளும் தவறானது

(குறிப்பு – இடைநிலை பண்டத்தின் மதிப்பை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேர்த்தால் அதன் விளைவை இருமுறை கணக்கிடுதல் என அழைக்கிறது)

8) கீழ்க்கண்டவற்றுள் எது சரியான கூற்று ஆகும்?

கூற்று 1 – தேநீர் என்பது இடைநிலை பண்டமாகும்.

கூற்று 2 – தேநீரில் இருக்கும் சர்க்கரையானது ஒரு இடைநிலை பண்டமாகும்.

கூற்று 3 – தேனீர் விற்பது என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அடங்கும்.

A) கூற்றுகள் 1, 2 மட்டும் சரியானது

B) கூற்றுகள் 2, 3 மட்டும் சரியானது

C) கூற்றுகள் 1, 3 மட்டும் சரியானது

D) கூற்று 1 மட்டும் சரியானது

(குறிப்பு – தேனீர் வாங்குதல் அல்லது விற்பது என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அடங்கும். அது ஒரு இறுதிநிலை பண்டமாகும்.அதில் இருக்கும் சர்க்கரையானது ஒரு இடைநிலை பண்டமாகும்)

9) ஒரு கோப்பை தேனீர் வாங்கும் போது கீழ்க்கண்டவற்றுள் எதன்மதிப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அடங்காது?

A) பால்

B) தேயிலை

C) சர்க்கரை

D) பாத்திரங்கள்

(குறிப்பு – ஒரு கோப்பை தேநீரில் பாத்திரங்கள் இறுதிநிலை பண்டத்தின் ஒரு பகுதியாக அமையாது. எனவே அதன் சந்தை மதிப்பை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேர்க்க முடியாது)

10) _____________ என்பது ஒரு நாட்டில் ஓர் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பு ஆகும்.

A) தனி மனித வருமானம்

B) நாட்டு வருமானம்

C) தனிமனித + நாட்டு வருமானம்

D) மொத்த உள்நாட்டு உற்பத்தி

(குறிப்பு – நாட்டு வருமானம் என்பது ஒரு நாட்டில் ஓர் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பு ஆகும். பொதுவாக நாட்டு வருமானத்தை மொத்த நாட்டு உற்பத்தி ( Gross National Product ))

11) மொத்த நாட்டு உற்பத்தி எவ்வாறு குறிக்கப்படுகிறது?

A) GNP = C + I + G + (X-M) + NFIA

B) GNP = C + I + G + (X+M) + NFIA

C) GNP = C + I + G + (X-M) -NFIA

D) GNP = C + I + G / (X-M) + NFIA

(குறிப்பு – C-நுகர்வோர், I-முதலீட்டாளர், G-அரசு செலவுகள், (X-M) – ஏற்றுமதி – இறக்குமதி, NFIA- வெளிநாட்டிலிருந்து ஈட்டப்பட்ட நிகர வருமானம்)

12) கீழ்க்கண்ட கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது அந்த நாட்டு மக்களால் ஒரு வருடத்தில் உற்பத்தி செய்யப்பட்ட வெளியீடுகளின் மதிப்பை குறிக்கும்.

கூற்று 2 – வெளிநாட்டு முதலீடு மூலம் ஈட்டிய லாபம் மொத்த நாட்டு உற்பத்தியில் அடங்காது.

A) கூற்று 1 மட்டும் சரியானது

B) கூற்று 2 மட்டும் சரியானது

C) இரண்டு கூற்றுகளும் சரியானது

D) இரண்டு கூற்றுகளும் தவறானது

(குறிப்பு – மொத்த நாட்டு உற்பத்தியில், வெளிநாட்டு முதலீடு மூலம் ஈட்டிய லாபமும் அடங்கும். மொத்த நாட்டு உற்பத்தி = GNP = C + I + G + (X-M) + NFIA என்னும் பதத்தால் குறிப்பிடப்படுகிறது. இதில் NFIA என்பது வெளிநாட்டு முதலீடு மூலம் ஈட்டிய லாபம் ஆகும்)

13) நிகர நாட்டு உற்பத்தி எவ்வாறு குறிப்பிடப்படும்?

A) நிகர நாட்டு உற்பத்தி = மொத்த நாட்டு உற்பத்தி + தேய்மானம்

B) நிகர நாட்டு உற்பத்தி = மொத்த நாட்டு உற்பத்தி – தேய்மானம்

C) நிகர நாட்டு உற்பத்தி = மொத்த நாட்டு உற்பத்தி / தேய்மானம்

D) நிகர நாட்டு உற்பத்தி = மொத்த நாட்டு உற்பத்தி × தேய்மானம்

(குறிப்பு – மொத்த நாட்டு உற்பத்தியில் இருந்து மூலதன தேய்மானத்தின் மதிப்பை நீக்கியபின் கிடைக்கும் பண மதிப்பு நிகர நாட்டு உற்பத்தி (NNP) என அழைக்கப்படுகிறது.

14) நிகர உள்நாட்டு உற்பத்தி எவ்வாறு குறிக்கப்படுகிறது?

A) நிகர உள்நாட்டு உற்பத்தி = மொத்த உள்நாட்டு உற்பத்தி + தேய்மானம்

B) நிகர உள்நாட்டு உற்பத்தி = மொத்த உள்நாட்டு உற்பத்தி × தேய்மானம்

C) நிகர உள்நாட்டு உற்பத்தி = மொத்த உள்நாட்டு உற்பத்தி / தேய்மானம்

D) நிகர உள்நாட்டு உற்பத்தி = மொத்த உள்நாட்டு உற்பத்தி – தேய்மானம்

(குறிப்பு – நிகர உள்நாட்டு உற்பத்தி என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு பகுதியாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இருந்து தேய்மானத்தை கழித்த பின் கிடைப்பது நிகர உள்நாட்டு உற்பத்தி ஆகும்)

15) இந்தியாவின் வறுமை மற்றும் ஒரு பிரிட்டிஷ் இல்லா ஆட்சி என்னும் புத்தகத்தை எழுதியவர் யார்?

A) சுரேந்திரநாத் பானர்ஜி

B) தாதாபாய் நௌரோஜி

C) பக்கிம் சந்திர சாட்டர்ஜி

D) அமரேந்திர பால் பானர்ஜி

(குறிப்பு – 1867-68ஆம் ஆண்டுகளில் முதன்முதலாக தாதாபாய் நௌரோஜி தனது இந்தியாவின் வறுமை மற்றும் ஒரு பிரிட்டிஷ் இல்லாத ஆட்சி என்ற புத்தகத்தில் தனிநபர் வருமானத்தை பற்றி கூறியுள்ளார்)

16) பொருத்துக

I. மொத்த உள்நாட்டு உற்பத்தி – a) NDP

II. நிகர நாட்டு உற்பத்தி – b) GDP

III. மொத்த நாட்டு உற்பத்தி – c) NNP

IV. நிகர உள்நாட்டு உற்பத்தி – d) GNP

A) I-b, II-c, III-d, IV-a

B) I-a, II-d, III-b, IV-c

C) I-c, II-a, III-b, IV-d

D) I-d, II-b, III-c, IV-a

(குறிப்பு – மேற்கண்ட அனைத்தும் நாட்டு வருமானத்தை அளவிட தொடர்புடைய பல்வேறு கருத்துக்கள் ஆகும்)

17) பொருத்துக

I. நிகர உள்நாட்டு உற்பத்தி – a) மொத்த நாட்டு உற்பத்தி – தேய்மானம்

II. நிகர நாட்டு உற்பத்தி – b) பண்டங்கள் + பணிகளின் மொத்த மதிப்பு

III. தலா வருமானம் – c) மொத்த உள்நாட்டு உற்பத்தி – தேய்மானம்

IV. மொத்த உள்நாட்டு உற்பத்தி – d) நாட்டு வருமானத்தை மக்கள் தொகையால் வகுத்தல்

A) I-c, II-a, III-d, IV-b

B) I-a, II-d, III-b, IV-c

C) I-c, II-a, III-b, IV-d

D) I-d, II-b, III-c, IV-a

(குறிப்பு – மொத்த உள்நாட்டு உற்பத்தி, மொத்த நாட்டு உற்பத்தி, நிகர நாட்டு உற்பத்தி, நிகர உள்நாட்டு உற்பத்தி தலா வருமானம் அல்லது தனி நபர் வருமானம் போன்றவைகளைக் கொண்டு நாட்டு வருமானத்தை அளவிட முடியும்)

18) மொத்த உள்நாட்டு உற்பத்தி = C + I + G + (X-M) + NFIA என்பதில் I என்பது எதை குறிக்கிறது?

A) நுகர்வோர்

B) முதலீட்டாளர்

C) அரசு செலவுகள்

D) வெளிநாட்டிலிருந்து ஈட்டப்பட்ட நிகர வருமானம்

(குறிப்பு – மொத்த நாட்டு உற்பத்தி என்பது அந்த நாட்டு மக்களால் ஒருவருடத்தில் உற்பத்தி செய்யப்பட்ட வெளியீடுகளின் (பண்டங்கள் + பணிகள் ) மதிப்பை குறிக்கும்.)

19) செலவிட தகுதியான வருமானம் என்பதை கீழ்க்கண்டவற்றுள் எவ்வாறு குறிக்கலாம்?

A) தனிப்பட்ட வருமானம் + நேர்முக வரி

B) தனிப்பட்ட வருமானம் – நேர்முக வரி

C) தனிப்பட்ட வருமானம் + நேர்முக வரி + மறைமுக வரி

D) தனிப்பட்ட வருமானம் × நேர்முக வரி

(குறிப்பு – தனிநபர்கள் மற்றும் குடும்பங்களின் உண்மையான வருமானத்தில் நுகர்வுக்கு செலவிடப்படுகின்ற வருமானம் என்பது செலவிட தகுதியான வருமானம் என அழைக்கப்படுகிறது)

20) கீழ்க்கண்டவற்றுள் எது சரியானது?

I. செலவிட தகுதியான வருமானம் = தனிப்பட்ட வருமானம் + நேர்முக வரி.

II. நுகர்வு முறையில் செலவிட தகுதியான வருமானம் = நுகர்வு செலவு + சேமிப்பு.

A) I மட்டும் சரியானது

B) II மட்டும் சரியானது

C) I, II இரண்டும் சரியானது

D) I, II இரண்டும் தவறானது

(குறிப்பு – தனிநபர்கள் மற்றும் குடும்பங்களில் உண்மையான வருமானத்தில் நுகர்வுக்கு சில விடுகின்ற வருமானத்தை செலவிட தகுதியான வருமானம் என அழைக்கப்படுகிறது)

21) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – காஷ்மீரில் உற்பத்தி செய்யப்பட்ட ஆப்பிளின் அங்காடி மதிப்பு GDPயில் சேர்க்கப்பட்டுள்ளது.

கூற்று 2 – கலிபோர்னியாவில் உற்பத்தி செய்யப்பட்ட ஆப்பிளின் அங்காடி மதிப்பு, இந்தியாவின் அங்காடியில் விற்பனை செய்தால், அது GDPயில் சேர்க்கப்படுகிறது

A) கூற்று 1 மட்டும் சரியானது

B) கூற்று 2 மட்டும் சரியானது

C) இரண்டு கூற்றுகளும் சரியானது

D) இரண்டு கூற்றுகளும் தவறானது

(குறிப்பு – இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்ற பண்டங்கள் மற்றும் பணிகளின் அங்காடி மதிப்பு மட்டுமே இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) என அழைக்கப்படுகிறது.)

22) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – காலாண்டு மற்றும் ஆண்டுதோறும் என இரண்டு வகையில் இந்தியாவின் GDP கணக்கிடப்படுகிறது.

கூற்று – 2017ஆம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட மிதிவண்டியை 2018 ஆம் ஆண்டின் GDPக்கு சேர்க்க முடியாது.

A) கூற்று 1 மட்டும் சரியானது

B) கூற்று 2 மட்டும் சரியானது

C) இரண்டு கூற்றுகளும் சரியானது

D) இரண்டு கூற்றுகளும் தவறானது

(குறிப்பு – ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பண்ட பணிகளின் அங்காடி மதிப்பே ஒரு நாட்டின் GDP ஆகும். முந்தைய காலங்களில் உற்பத்தி செய்யப்பட்ட பல பணிகளை சேர்த்துக் கொள்வதில்லை)

23) கீழ்க்கண்டவற்றுள் ஒரு நிதியாண்டு என்பதில் சரியானது எது?

A) ஏப்ரல் 2017 முதல் 2018 மார்ச் 31 வரை

B) ஏப்ரல் 2017 முதல் 2018 மார்ச் 1 வரை

C) ஏப்ரல் 2017 முதல் 2018 ஏப்ரல் 30 வரை

D) ஜனவரி 2017 முதல் 2018 டிசம்பர் 31 வரை

(குறிப்பு – ஆண்டு GDP என்பது ஒரு நிதியாண்டு அதாவது எடுத்துக்காட்டிற்கு ஏப்ரல் 2017 முதல் 31 மார்ச் 2018 வரையாகும். இதை 2017-2018 என்று எழுதுவர். )

24) கீழ்க்கண்டவற்றுள் எது சரியானது?

A) முதலாவது காலாண்டு அல்லது Q1 – மார்ச், ஏப்ரல், மே

B) இரண்டாம் காலாண்டு அல்லது Q2 – ஜூன், ஜூலை, ஆகஸ்ட்.

C) மூன்றாம் காலாண்டு அல்லது Q3 – அக்டோபர், நவம்பர், டிசம்பர்

D) நான்காம் காலாண்டு அல்லது Q4 – டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி

(குறிப்பு – இந்தியாவின் நிதி ஆண்டை நான்கு கால் ஆண்டுகளாக GDP மதிப்பிடுகிறது. முதல் காலாண்டு ஏப்ரல், மே, ஜூன் எனவும் இரண்டாம் காலாண்டு ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் எனவும் மூன்றாம் காலாண்டு அக்டோபர், நவம்பர், டிசம்பர் எனவும் நான்காம் காலாண்டு ஜனவரி, பிப்ரவரி, மார்ச் எனவும் கணக்கிடப்படுகிறது)

25) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – 2017-18ன் நிதி ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட பண்ட பணிகளை அந்த ஆண்டில் GDP க்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

கூற்று 2 – Q2வின் GDP, Q2யில் உற்பத்தி செய்யப்பட்ட பண்ட பணிகள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

A) கூற்று 1 மட்டும் சரியானது

B) கூற்று 2 மட்டும் சரியானது

C) இரண்டு கூற்றுகளும் சரியானது

D) இரண்டு கூற்றுகளும் தவறானது

(குறிப்பு – Q2வின் GDP, Q2யில் உற்பத்தி செய்யப்பட்ட பண்ட பணிகள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. Q1இல் உற்பத்தி செய்யப்பட்டதை எடுத்துக் கொள்வதில்லை)

26) கீழ்க்கண்டவற்றுள் மொத்த உள்நாட்டு உற்பத்தி எவ்வாறு குறிக்கப்படுகிறது?

A) C + I + G + ( X – M)

B) C + I + G / ( X – M)

C) C + ( I – G) + ( X – M)

D) C – I + G + ( X – M)

(குறிப்பு – மொத்த உள்நாட்டு உற்பத்தி ஒரு நாட்டின் பொருளாதார நலனை பிரதிபலிக்கிறது. குறிப்பிட்ட காலத்தில் ஒரு நாட்டின் எல்லைக்குள் உற்பத்தி செய்கின்ற அனைத்து இறுதிகட்ட பண்ட பணிகளின் பண மதிப்பை அது குறிக்கிறது)

27) GDP யின் நவீன கருத்து முதன் முதலில் யாரால் உருவாக்கப்பட்டது?

A) சைமன் ரூஷ்வால்ட்

B) சைமன் குஸ்நட்

C) சைமன் ஆண்ட்ரு

D) சைமன் ஜேக்கப்

(குறிப்பு – 1934ஆம் ஆண்டின் காங்கிரஸ் அறிக்கையின் படி, சைமன் குஸ்நட் என்பவரால் GDPயின் நவீன கருத்து முதன் முதலில் உருவாக்கப்பட்டது)

28) மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வருமான கணக்கீட்டு முறை படி கீழ்க்கண்ட பதங்களுள் எது சரியானது?

A) வருமானம் = கூலி + வாரம் + வட்டி + லாபம்

B) வருமானம் = கூலி + வாரம் – வட்டி + லாபம்

C) வருமானம் = கூலி + வாரம் + வட்டி – லாபம்

D) வருமானம் = கூலி + வாரம் – வட்டி – லாபம்

(குறிப்பு – பண்டங்கள் மற்றும் பணிகளை உற்பத்தி செய்வதில் ஈடுபட்டுள்ள ஆண்கள் மற்றும் பெண்களின் வருமானத்தை கணக்கிட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியை இந்த முறை கூறுகிறது. இதன்படி வருமானம் = கூலி + வாரம் + வட்டி + லாபம் என்பதாகும்)

29) கீழ்க்கண்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பயன்களில் எது தவறானது?

A) இது பணவீக்கம் மற்றும் பணவாட்டம் சிக்கல்கள் பற்றி அறிய உதவுகிறது.

B) வாங்கும் திறன் மதிப்பீடு செய்வதற்கு இது உதவுகிறது.

C) உலகின் வளர்ந்த நாடுகளுடன் ஒப்பீடு செய்வதற்கு பயன்படுகிறது.

D) தனியார் துறை பற்றி அனைவரும் அறிந்து கொள்ள பயன்படுகிறது.

(குறிப்பு – மொத்த உள்நாட்டு உற்பத்தி பொதுத்துறை பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள பயன்படுகிறது)

30) GDP பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – சந்தையில் விற்கப்படும் பண்டங்கள் மற்றும் பணிகளின் மதிப்பு மட்டுமே மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அடங்கும்.

கூற்று 2 – சுத்தமான காற்று ஆரோக்கியமான வாழ்க்கைக்கு முக்கியமானது. எனினும் இதற்கு சந்தை மதிப்பு இல்லை.

A) கூற்று 1 மட்டும் சரியானது

B) கூற்று 2 மட்டும் சரியானது

C) இரண்டு கூற்றுகளும் சரியானது

D) இரண்டு கூற்றுகளும் தவறானது

(குறிப்பு – சுத்தமான காற்றுக்கு சந்தை மதிப்பு இல்லை. எனவே இவை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வரம்புக்கு வருவதில்லை. பெற்றோர்கள் அவர்களுடைய குழந்தைகளுக்கு செய்யும் சேவைகள் மிக முக்கியமானது. எனினும் அது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேர்க்கப்படுவதில்லை)

31) எந்த காலகட்டங்களில் பள்ளிகள் மட்டும் வங்கிகளில் பந்து முனை பேனாக்கள் பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை?

A) 1960களில்

B) 1970களில்

C) 1980களில்

D) 1990களில்

(குறிப்பு – 1970களில் பந்து முனை பேனாக்கள் இந்தியாவில் கிடைக்கக்கூடிய மிக தரமற்ற பொருளாக இருந்தது. எனவே இவை பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை.)

32) மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைபாடுகளுள் எது தவறான செய்தி ?

A) GDP யில் பல முக்கிய பண்டங்கள் மற்றும் பணிகள் சேர்க்கப்படவில்லை.

B) GDP அளவை மட்டும் அளவிடுகிறது.

C) GDP யில் நாட்டு வருமான பகிர்ந்தளிப்பு பற்றி கூறப்படவில்லை.

D) GDP தரத்தை மட்டும் அளவிடுகிறது

(குறிப்பு – GDP அளவை மட்டுமே அளவிடுகிறது. தரத்தை அளவிடுவது இல்லை. ஒரு பண்டத்தின் தரம் என்பது மிக முக்கியமானது. எனினும் அது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பின்பற்றப்படுவதில்லை)

33) GDP கீழ்க்கண்டவற்றுள் இவற்றைக் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை?

I. மிகவும் குறைந்த சுகாதார நிலை

II. மக்கள் ஜனநாயகமற்ற அரசியலமைப்பு

III. அதிகமாக மற்றும் உயர் தற்கொலை விகிதம்

A) I, II மட்டும்

B) I, III மட்டும்

C) II, III மட்டும்

D) இவை அனைத்தையும்

(குறிப்பு – மொத்த உள்நாட்டு உற்பத்தி மக்கள் வாழும் வாழ்க்கை முறையைப் பற்றி கூறவில்லை. GDP மிகவும் குறைந்த சுகாதார நிலை, மக்கள் ஜனநாயகமற்ற அரசியலமைப்பு, அதிகமாக மற்றும் உயர் தற்கொலை விகிதம் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளாமல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உயர்மட்ட தனிநபர் வருமானத்துடன் கைகோர்த்து செல்கிறது)

34) GDP சம்பந்தப்பட்ட ஆவணங்களை பாதுகாப்பது எது?

A) மத்திய புள்ளியியல் அமைப்பு

B) மத்திய தகவல் தொலைத்தொடர்பு அமைப்பு

C) மத்திய நிதி நிர்வாக அமைப்பு

D) இவை எதுவும் அல்ல

(குறிப்பு – புள்ளியியல் துறை அமைச்சரவையின் கீழேயுள்ள மத்திய புள்ளியியல் அமைப்பு GDP சம்பந்தப்பட்ட ஆவணங்களை பாதுகாக்கிறது)

35) மத்திய புள்ளியியல் அமைப்பு தொழில் துறையின் உற்பத்தியை ஆண்டு கணக்கெடுப்பு நடத்தி சில குறியீடுகளை வெளியிடுகிறது.அவ்வாறு வெளியிடப்படும் குறியீடுகளில் கீழே உள்ளவற்றில் எது சரியானது ?

I. தொழில்துறை உற்பத்தி குறியீடு – IIP

II. நுகர்வோர் விலைக் குறியீடு – CPI

III. புள்ளியியல் தகவல் குறியீடு – SIP

A) I, II மட்டும்

B) I, III மட்டும்

C) II, III மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – மத்திய புள்ளியியல் அமைப்பு தொழில்துறை உற்பத்தி குறியீடு, நுகர்வோர் விலைக் குறியீடு போன்ற குறியீடுகளை வெளியிடுகிறது)

36) இந்திய பொருளாதாரம் பரவலாக மூன்று துறைகளாக பிரிக்கப்படுகிறது. அவற்றுள் தவறானது எது?

A) விவசாயத்துறை

B) தொழில்துறை

C) பணிகள் துறை

D) நிர்வாகத்துறை

(குறிப்பு – இந்திய பொருளாதாரம் பரவலாக மூன்று துறைகளாக பிரிக்கப்படுகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயம் அதை சார்ந்த நடவடிக்கை, தொழில்கள், பணிகள் ஆகிய துறைகள் பங்களிக்கின்றன)

37) இந்திய பொருளாதாரத்தின் வேளாண்மைத் துறையை எவ்வாறு அழைக்கலாம்?

A) முதன்மை துறை

B) இரண்டாம் துறை

C) மூன்றாம் துறை

D) கடைநிலை துறை

(குறிப்பு – வேளாண்மைத் துறையை முதன்மைத் துறை எனவும் அழைக்கலாம். இதில் வேளாண் சார்ந்த நடவடிக்கைகள் மற்றும் விவசாய நடவடிக்கைகள் அடங்கும்)

38) இரண்டாம் நிலைத் துறை என்று அழைக்கப்படும் தொழில் துறைகளில் அல்லாதது கீழ்க்கண்டவற்றுள் எது?

A) ஜவுளி, சணல் போன்ற தொழில்

B) சர்க்கரை, சிமெண்ட் போன்ற தொழில்

C) காகிதம், பெட்ரோலியம் போன்ற தொழில்

D) கால்நடை பண்ணைகள், சுரங்கங்கள் போன்ற தொழில்

(குறிப்பு – கால்நடை பண்ணைகள், மீன் பிடித்தல், சுரங்கங்கள், காடு வளர்த்தல் போன்றவை முதன்மை துறை என்று அழைக்கப்படும் வேளாண் துறையை சார்ந்தவை ஆகும்)

39) மூன்றாம் நிலைத் துறை என்று அழைக்கப்படும் பணிகள் துறைகளுள் கீழ்க்காணும் எந்த தொழில்கள் அடங்கும்?

I. அரசு, அறிவியல் ஆராய்ச்சி, போக்குவரத்து போன்றவை.

II. வங்கி, கல்வி, தகவல் தொடர்பு போன்றவை.

III. வர்த்தகம், பொழுதுபோக்கு, சுகாதாரம் போன்றவை.

A) I, II மட்டும்

B) II, III மட்டும்

C) I, III மட்டும்

D) இவை அனைத்தும்

(குறிப்பு – மேற்கண்ட அனைத்து தொழில்களும் பணிகள் துறை என்று அழைக்கப்படும் மூன்றாம் துறை தொழில்கள் ஆகும். இருபதாம் நூற்றாண்டில் பொருளாதார நிபுணர்கள் பாரம்பரிய மூன்றாம் நிலை பணிகளை நான்காம் நிலை மற்றும் ஐந்தாம் நிலை பணிகள் துறைகளிலிருந்து மேலும் வேறுபடுத்த முடியும் என்றனர்)

40) பொருத்துக

I. GDPயின் மதிப்பீடு – a) காடுகள் வளர்த்தல்

II. முதன்மை துறை – b) மத்திய புள்ளியியல் அமைப்பு

III. இரண்டாம் துறை – c) ஆட்டோமொபைல்ஸ்

IV. மூன்றாம் துறை – d) வர்த்தகம்

A) I-b, II-a, III-c, IV-d

B) I-b, II-d, III-c, IV-a

C) I-b, II-c, III-a, IV-d

D) I-b, II-c, II-d, III-a

(குறிப்பு – இந்திய பொருளாதாரம் பரவலாக மூன்று துறைகளாக பிரிக்கப்படுகிறது. அவை வேளாண்மை, தொழில்துறை மற்றும் பணிகள் துறை என்பன ஆகும் )

41) நடப்பு விலையில் மொத்த மதிப்பு கூடுதலில் (GVA) பணிகள் துறைகள் 2018-2019ஆம் ஆண்டில் __________ என மதிப்பிடப்பட்டுள்ளன.

A) 90.54லட்சம் கோடி

B) 92.34லட்சம் கோடி

C) 92.26லட்சம் கோடி

D) 95.47லட்சம் கோடி

(குறிப்பு – இந்தியாவில் பணிகள் துறை மிகப்பெரிய துறையாகும். பணிகள் துறைகள் மட்டும் 2018-2019 ஆம் ஆண்டில் நடப்பு விலையில் மொத்த மதிப்பு கூடுதலில் 92.26லட்சம் கோடிகள் என மதிப்பிடப்பட்டுள்ளது)

42) இந்தியாவில் மொத்த மதிப்பு கூடுதலான 169.61 லட்சம் கோடியில், ____________ பணிகள் துறையின் பங்குகள் ஆகும்.

A) 52.30 %

B) 54.40 %

C) 55.67 %

D) 58.34 %

(குறிப்பு – இந்தியாவில் மொத்த மதிப்பு கூடுதலில் 54.40 சதவீதம் பணிகள் துறையின் பங்குகள் ஆகும். மொத்த மதிப்பு கூடுதலான ரூபாய் 50.43 லட்சம் கோடியில், தொழில் துறையின் பங்களிப்பு 29.74 சதவீதமும், வேளாண்மை சார்ந்த சார்பு துறையின் பங்கு 15.87 சதவீதமும் ஆகும்)

43) விவசாய பண்டங்களின் உற்பத்தியில் இந்தியா_____________பெரிய நாடாகும்.

A) இரண்டாவது

B) மூன்றாவது

C) நான்காவது

D) ஐந்தாவது

(குறிப்பு – விவசாய பண்டங்களின் உற்பத்தியில் இந்தியா இரண்டாவது பெரிய நாடு ஆகும். உலகின் மொத்த விவசாய பொருட்களின் வெளியீட்டில் 7.39% இந்தியாவினால் வெளியிடப்படுகிறது)

44) கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

கூற்று 1 – இந்தியா தொழில் துறையில் எட்டாவது இடத்தில் இருக்கிறது.

கூற்று 2 – இந்தியா பணிகள் துறையில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

A) கூற்று 1 மட்டும் சரியானது

B) கூற்று 2 மட்டும் சரியானது

C) இரண்டு கூற்றுகளும் சரியானது

D) இரண்டு கூற்றுகளும் தவறானது

(குறிப்பு – இந்தியா பணிகள் துறையில் ஆறாவது இடத்தில் உள்ளது)

45) இந்தியாவின் GDP யின் விவசாயத்துறை பங்களிப்பை பொருத்துக.

I. 2013-2014 ஆம் ஆண்டு – a) 17.09 %

II. 2015-2016ஆம் ஆண்டு – b) 17.01 %

III. 2016-2017 ஆம் ஆண்டு – c) 17.07 %

IV. 2017-2018ஆம் ஆண்டு – d) 18.20 %

A) I-d, II-c, III-a, IV-b

B) I-a, II-b, III-d, IV-c

C) I-c, II-a, III-b, IV-d

D) I-d, II-c, III-a, IV-b

(குறிப்பு – மேற்கண்ட அட்டவணை இந்தியாவில் GDP யின் விவசாயத்துறை பங்களிப்பை காட்டுகின்றது)

46) இந்தியாவின் GDP யின் தொழில்கள் துறை பங்களிப்பை பொருத்துக.

I. 2013-2014 ஆம் ஆண்டு – a) 29.08 %

II. 2015-2016ஆம் ஆண்டு – b) 29.03 %

III. 2016-2017 ஆம் ஆண்டு – c) 29.01 %

IV. 2017-2018ஆம் ஆண்டு – d) 24.77 %

A) I-d, II-a, III-b, IV-c

B) I-a, II-b, III-d, IV-c

C) I-c, II-a, III-b, IV-d

D) I-d, II-c, III-a, IV-b

(குறிப்பு – மேற்கண்ட அட்டவணை இந்தியாவில் GDP யின் தொழில்கள் துறை பங்களிப்பை காட்டுகின்றது)

47) இந்திய பொருளாதாரத்தில் விவசாயத் துறையின் பங்களிப்பு உலக சராசரி __________ விட அதிகமாக உள்ளது.

A) 4.5 சதவீதம்.

B) 6.4 சதவீதம்

C) 7.5 சதவீதம்

D) 5.5 சதவீதம்

(குறிப்பு – இந்திய பொருளாதாரத்தின் விவசாயத் துறையின் பங்களிப்பு உலக சராசரி 6.4 சதவீதத்தை விட அதிகமாக உள்ளது. ஆனால் தொழில் துறை மற்றும் பணிகள் துறைகளின் பங்களிப்பு உலக சராசரியைவிட முறையே 30 சதவீதம் மற்றும் 63 சதவீதம் குறைவாக உள்ளது)

48) மொத்த மதிப்பு கூடுதல் எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?

A) மொத்த மதிப்பு கூடுதல் = GDP + மானியம் – வரிகள்

B) மொத்த மதிப்பு கூடுதல் = GDP + மானியம் + வரிகள்

C) மொத்த மதிப்பு கூடுதல் = GDP – மானியம் – வரிகள்

D) மொத்த மதிப்பு கூடுதல் = GDP – மானியம் – வரிகள்

(குறிப்பு – ஒரு பொருளாதாரத்தில் ஒரு பகுதி தொழில் அல்லது துறையில் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள் மற்றும் பணிகளின் மதிப்பே மொத்த மதிப்பு கூடுதல் (GVA) ஆகும்)

49) பொருளாதார வளர்ச்சி என்பது பொருளாதார முன்னேற்றத்தின் ஓர் அம்சமாகும் என்பது யாருடைய கருத்து ஆகும்?

A) அமர்த்தியா சென்

B) ஆடம் ஸ்மித்

C) ஜான் வாக்கர்

D) இவர் யாருமல்ல

(குறிப்பு – பொருளியல் அறிஞர் அமர்த்தியா சென் கருத்துப்படி, பொருளாதார வளர்ச்சி என்பது பொருளாதார முன்னேற்றத்தின் ஓர் அம்சமாகும். பொருளாதார வளர்ச்சி மனிதனின் பொருள்சார் தேவைக்கு மட்டும் கவனம் செலுத்துகிறது. ஆனால் ஐக்கிய நாடுகளின் பார்வையில் பொருளாதார வளர்ச்சி என்பது வாழ்க்கைத்தரம் உயர்தல் அல்லது ஒட்டுமொத்த வளர்ச்சியில் கவனம் செலுத்துதல் ஆகும்)

50) பொருளாதாரத்தின் உண்மையான முன்னேற்றத்தை அளப்பதற்கு எது முக்கியமாக கருதப்படுகிறது?

A) மனிதவள மேம்பாடு குறியீடு

B) மொத்த நாட்டு உற்பத்தி

C) தனி மனித வருமானம்

D) மொத்த நாட்டு வருமானம்

(குறிப்பு – பொருளாதாரத்தின் உண்மையான முன்னேற்றத்தை அளப்பதற்கு மனிதவள மேம்பாடு குறியீடு (Human Resource Development Index)சரியானதாகும்)

51) பொருளாதார வளர்ச்சி குறித்த தவறான கூற்று எது?

A) பொருளாதார வளர்ச்சி ஒரு குறுகிய கருத்து ஆகும்.

B) ஒரு குறிப்பிட்ட காலத்தில் பொருளாதாரத்தில் வெளியீட்டில் இது நேர்மறை அளவு மாற்றத்தை கொடுக்கும்.

C) இது வளர்ந்து வருகின்ற நாடுகளுக்குப் பொருந்தும்.

D) இதன் அளவீட்டு நுட்பங்கள் நாட்டு வருமானத்தை அதிகரித்தல் ஆகும்.

(குறிப்பு – பொருளாதார வளர்ச்சி என்பது வளர்ந்த நாடுகளுக்கு பொருந்தும் தன்மை உடையது. இது இயற்கையில் குறுகிய காலத்தை உடையது)

52) பொருளாதார முன்னேற்றம் குறித்த தவறான செய்தி எது?

A) பொருளாதார முன்னேற்றம் ஒரு பரந்த கருத்து ஆகும்.

B) பொருளாதார முன்னேற்றத்தின் அணுகுமுறை இயல்பானது தரத்தின் இயல்பு ஆகும்.

C) வாழ்க்கை எதிர்பார்ப்பு விகிதம், குழந்தை எழுத்தறிவு விகிதம் போன்றவை இதன் நோக்கங்கள் ஆகும்.

D) பொருளாதார முன்னேற்றம் என்பது ஒரு குறிப்பிட்ட காலம் நிகழ்வின் அதிர்வெண் கொண்டது.

(குறிப்பு – பொருளாதார முன்னேற்றம் என்பது தொடர்ச்சியான செயல்முறை நிகழ்வின் அதிர்வெண் கொண்டது ஆகும் )

53) வெளிநாட்டு நிறுவனங்களை இந்திய பொருளாதாரத்திற்குள் எந்த ஆண்டு முதல் இந்தியா அனுமதித்தது?

A) 1991ஆம் ஆண்டு முதல்

B) 1992ஆம் ஆண்டு முதல்

C) 1995ஆம் ஆண்டு முதல்

D) 1990ஆம் ஆண்டு முதல்

(குறிப்பு – இந்தியாவின் எல்லைகளை பிறந்த வர்த்தகத்திற்கு திறக்க முடிவு செய்து அதன் பொருளாதாரம் தாராளமயமாக்கல் வெளிநாட்டு நிறுவனங்களை இந்திய பொருளாதாரத்திற்கு அனுமதிப்பது 1991ஆம் ஆண்டு முதல் துவங்கியது)

54) இந்தியாவில் கடந்த இரண்டு சகாப்தங்களாக GDP யின் நிலையான அதிக வளர்ச்சியால் கீழ்கண்டவற்றுள் எது அதிகரித்துள்ளது?

A) நாட்டு வருமானம்

B) தனிநபர் வருமானம்

C) மனிதவள மேம்பாடு

D) இது எதுவும் அல்ல

(குறிப்பு – இந்தியாவில் கடந்த இரண்டு சகாப்தங்களாக GDP யின் நிலையான அதிக வளர்ச்சியால் தனிநபர் வருமானம் அதிகரிக்கும் முழு வறுமை குறைந்தும் காணப்படுகின்றன. 12 ஆண்டுகளில் தனிநபர் வருமானம் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது)

55) இந்தியா தனிநபர் வருமானத்தில்__________ நாடுகளின் பிரிவில் இடம் பிடித்துள்ளது.

A) நடுத்தர வருவாய்

B) உயர்தர வருவாய்

C) குறைந்த வருவாய்

D) மிகக் குறைந்த வருவாய்

(குறிப்பு – இந்தியாவின் GDP யின் நிலையான அதிக வளர்ச்சியால் தனிநபர் வருமானம் அதிகரிக்கும் முழு வறுமை குறைந்தும் காணப்படுகிறது. இதன் மூலம் இந்தியா தனிநபர் வருமானத்தில் நடுத்தர வருவாய் நாடுகளின் பிரிவில் இடம் பிடித்துள்ளது)

56) இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட___________ குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடுடன் உள்ளனர்.

A) 44%

B) 40%

C) 50%

D) 56%

(குறிப்பு – பின் போது எதிர்பார்க்கப்பட்ட ஆயுட்காலம் 65 ஆண்டுகள் மற்றும் 5 வயதுக்குட்பட்ட 44 சதவீத குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடுடன் உள்ளனர்)

57) இந்தியாவில் 15 வயதும் அதற்கு மேலும் உள்ள மக்கள் தொகையில் ____________ கல்வியறிவு பெற்றவர்களாக உள்ளனர்.

A) 60%

B) 63%

C) 66%

D) 69%

(குறிப்பு – இந்தியாவில் 15 வயதும் அதற்கு மேலும் உள்ள மக்கள்தொகையில் 63 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றவர்களாக உள்ளனர். இது ஒப்பீட்டளவில் குறைந்த நடுத்தர வருவாய் நாடுகளில் 71% ஆகும்.)

58) இந்தியாவில் 35 வயதிற்கு உட்பட்ட விலைக்கும் வயதில் வேகமாக வளரும் மக்கள் தொகையில் இருப்போரின் எண்ணிக்கை என்ன?

A) 500 மில்லியன்

B) 600 மில்லியன்

C) 700 மில்லியன்

D) 800 மில்லியன்

(குறிப்பு – இந்தியாவில் 35 வயதிற்கு உட்பட்ட உழைக்கும் வயதில் வேகமாக வளரும் மக்கள் தொகையில் 700 மில்லியன் பேர் உள்ளனர்.அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சிக்கான மக்கள் தொகை குறைவாக உள்ளது)

59) மனிதவள மேம்பாட்டு குறியீடு எந்த நாட்டவரால் அறிமுகப்படுத்தப்பட்டது?

A) பாகிஸ்தான்

B) இந்தியா

C) ஜெர்மனி

D) பிரான்ஸ்

(குறிப்பு – மனித மேம்பாட்டு குறியீடு என்பது பாகிஸ்தான் நாட்டைச் சார்ந்த பொருளியல் அறிஞர் முகஹப் – உல் – ஹிக் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது)

60) மனித மேம்பாட்டு குறியீடு (HDI) அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு எது?

A) 1990

B) 1993

C) 1995

D) 1997

(குறிப்பு – மனிதவள மேம்பாட்டு குறியீடு (HDI) பாகிஸ்தான் நாட்டைச் சார்ந்த பொருளியல் அறிஞர் முகஹப் – உல் – ஹிக் என்பவரால் 1990ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது)

61) UNP யில் வெளியிடப்பட்ட மனித வளர்ச்சி மதிப்பீடுகளில் இந்தியா _____________ இடத்திற்கு உயர்ந்துள்ளது.

A) 120வது

B) 130வது

C) 140வது

D) 150வது

(குறிப்பு – இந்தியாவில் 2017 ஆம் ஆண்டின் மதிப்பானது 0.640 ஆகும். இது நாட்டை நடுத்தர மனித மேம்பாட்டு பிரிவின் கீழ் இடம் பெற வைக்கிறது)

62) இந்தியாவில் 1990-2017 ன் இடைப்பட்ட காலத்தில் பிறப்பின்போது வாழ்நாள் எதிர்பார்ப்பு __________ ஆண்டுகள் அதிகரித்துள்ளது.

A) பதினோரு

B) பதினைந்து

C) பதினாறு

D) பதினெட்டு

(குறிப்பு – 1990-2017 ன் இடைப்பட்ட காலத்தில் பிறப்பின்போது வாழ்நாள் எதிர்பார்ப்பு 11 ஆண்டுகள் அதிகரித்து பள்ளியின் எதிர் பார்ப்பு ஆண்டுகள் குறிப்பிடத்தக்க அளவிற்கு சாதகமாக்கி உள்ளது)

63) இந்தியாவில் 1990 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் GSI வளர்ச்சி விகிதம் என்ன?

A) 245 சதவீதம்

B) 266 சதவீதம்

C) 280 சதவீதம்

D) 253 சதவீதம்

(குறிப்பு – 1990ஆம் ஆண்டுகளைவிட இந்தியாவில் பள்ளி செல்லும் குழந்தைகள் 4.7 ஆண்டுகள் அதே சமயம் 1990 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் GSI 266.6 சதவீதம் அதிகரித்துள்ளது)

64) கீழ்காணும் இந்தியாவின் வேளாண் கொள்கைகளுள் தவறானது எது?

A) பொருளாதார நிலைத்தன்மை

B) சுற்றுச்சூழல் நிலைத்தன்மையும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு

C) வெளிநாட்டு பொருட்களுக்கான சந்தை அணுகல்

D) இடர் மேலாண்மை மற்றும் சரி செய்தல்

(குறிப்பு – உள்நாட்டு வேளாண்மை மற்றும் வெளிநாட்டு வேளாண்மை இறக்குமதிப் பொருட்கள் பற்றிய அரசின் முடிவுகளையும் நடவடிக்கைகளையும் பற்றியது வேளாண்கொள்கையாகும். வெளிநாட்டு பொருட்களுக்கான சந்தை அணுகல் என்பது இந்திய வேளாண் கொள்கைகளுள் தவறானது ஆகும்)

65) எந்த ஆண்டு முதல் பல தொழில்துறை கொள்கைகள் பெரிய அளவிலான தொழிற்சாலைகளுக்காக ஏற்படுத்தப்பட்டது?

A) 1945ஆம் ஆண்டு முதல்

B) 1948ஆம் ஆண்டு முதல்

C) 1952ஆம் ஆண்டு முதல்

D) 1957ஆம் ஆண்டு முதல்

(குறிப்பு – தொழில்துறை முன்னேற்றம் எந்த ஒரு பொருளாதாரத்திற்கும் முக்கியமான அம்சமாகும். இது வேலை வாய்ப்பை உருவாக்குகிறது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஊக்குவிக்கிறது.)

66) மொத்த தேசிய மகிழ்ச்சி (GNH) என்பது எந்த அரசாங்கத்தை வழிநடத்தும் ஒரு தத்துவமாகும்?

A) நேபாளம்

B) பூட்டான்

C) வங்கதேசம்

D) இலங்கை

(குறிப்பு – மொத்த தேசிய மகிழ்ச்சி என்பது பூட்டானின் அரசாங்கத்தை வழிநடத்தும் ஒரு தத்துவமாகும். அது ஒரு மக்கள் தொகை கூட்டு மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்வை அளவிடப் பயன்படும் குறியீட்டை உள்ளடக்கியது ஆகும்)

67) மொத்த தேசிய மகிழ்ச்சி (GNH) பூட்டான் அரசியலமைப்பால் எப்போது சட்டபூர்வமாக்கபட்டது?

A) 18 ஜூலை, 2008

B) 23 ஜூன், 2008

C) 16 ஆகஸ்ட், 2009

D) 11 டிசம்பர், 2009

(குறிப்பு – மொத்த தேசிய மகிழ்ச்சி என்பது பூட்டான் அரசியலமைப்பு 18 julai, 2008 ஆண்டுமுதல் சட்டப்பூர்வமாக்கி பூட்டான் அரசு அமைத்துள்ளது.)

68) மொத்த தேசிய மகிழ்ச்சி (GNH) என்ற வார்த்தையை உருவாக்கிய பூட்டான் மன்னர் யார்?

A) ஜாக்மே ஜிஹான்

B) ஜிக்மே சிங்கயே வாங்ஹக்

C) ஜுவான் ஜீபன்

D) இவர் யாரும் அல்ல

(குறிப்பு – தேசிய மகிழ்ச்சி என்ற வார்த்தையை உருவாக்கியவர் ஜிக்மே சிங்கயே வாங்ஹக் பூட்டான் அரசர் ஆவார். இது 1972 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. )

69) எந்த ஆண்டு ஐக்கிய நாடு சபை வளர்ச்சிக்கான ஒரு முழுமையான அணுகுமுறைக்கு மகிழ்ச்சி என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது?

A) 2011ஆம் ஆண்டு

B) 2013ஆம் ஆண்டு

C) 2015ஆம் ஆண்டு

D) 2017ஆம் ஆண்டு

(குறிப்பு – 2011 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை வளர்ச்சிக்கான ஒரு முழுமையான அணுகுமுறை மகிழ்ச்சி என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. உறுப்பு நாடுகள் பூட்டை ஒரு எடுத்துக்காட்டாக பின்பற்றி மகிழ்ச்சியையும் நல்வழி யையும் மகிழ்ச்சி என அழைத்தனர்)

70) மொத்த தேசிய மகிழ்ச்சியின் நான்கு தூண்களாக கருதப்படுவனவற்றுள் தவறானது எது?

A) நிலையான மற்றும் சமமான சமூக பொருளாதார வளர்ச்சி

B) சுற்றுச்சூழல் பாதுகாப்பு

C) கலாச்சாரத்தை பாதுகாப்பதும் மேம்படுத்துவதும்

D) நிலையான ஆட்சி

(குறிப்பு – மொத்த தேசிய மகிழ்ச்சி ஒன்பது மகிழ்ச்சியின் களங்கள் (Domains) மற்றும் மொத்த தேசிய மகிழ்ச்சியின் நான்கு தூண்களாக விளங்குவது நிலையான மற்றும் சமமான சமூக பொருளாதார வளர்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கலாச்சாரத்தை பாதுகாப்பதும் மேம்படுத்துவதும் மற்றும் நல்ல ஆட்சி என்பன ஆகும்)

71) மொத்த தேசிய மகிழ்ச்சியின் 9 கலங்கலாக கருதப்படுவனவற்றுள் கீழ்க்கண்டவகைகளில் எது தவறானது?

A) உளவியல் நலன்

B) உடல்நலம்

C) சேமிப்பு

D) சமூகத்தின் உயர்வு

(குறிப்பு – உளவியல் நலன், உடல்நலம், நேரம் பயன்பாடு, கல்வி, கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் பின்னடைவு, நல்ல ஆட்சி, சமூகத்தின் உயர்வு, சுற்றுச்சூழல் பன்முகத்தன்மை மற்றும் பின்னடைவு, வாழ்க்கைத் தரம் ஆகியவை மொத்த தேசிய மகிழ்ச்சியில் 9 கலங்கலாக கருதப்படுகிறது)

72) இந்தியாவின் 2019-2020 ஆம் ஆண்டிற்க்கான GDP வளர்ச்சி விகிதம் ____________ என உலக வங்கி திட்டமிட்டுள்ளது.

A) 7.0 சதவீதம்

B) 7.5 சதவீதம்

C) 8.0 சதவீதம்

D) 8.5 சதவீதம்

(குறிப்பு – இந்தியாவின் 2018-19ஆம் ஆண்டிற்கான GDP வளர்ச்சி விகிதம் 7.3 சதவீதம் எனவும், 2019-2020 ஆம் ஆண்டிற்கான GDP வளர்ச்சி விகிதம் 7.5 சதவீதம் எனவும் உலக வங்கி திட்டமிட்டுள்ளது)

73) 1970 மற்றும் 1980ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் சராசரி பொருளாதார வளர்ச்சி 8எவ்வளவாக இருந்தது?

A) 3.57

B) 4.41

C) 5.67

D) 6.75

(குறிப்பு – 1970 மற்றும் 1980 ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் சராசரி பொருளாதார வளர்ச்சி 4.41ஆகும். இது 1999-2000 ஆம் ஆண்டுகளில் 1.0 சதவீதம் உயர்ந்து 5.4 பதவி இதமாக இருந்தது)

74) பன்னாட்டு நிதி நிறுவனத்தின்(IMF) உலகப் பொருளாதார கண்ணோட்டம் 2018 ஆம் ஆண்டின்படி இந்தியாவின் GDP வளர்ச்சி விகிதம் எவ்வளவாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது?

A) 7.3 சதவீதம்

B) 7.5 சதவீதம்

C) 8.0 சதவீதம்

D) 8.3 சதவீதம்

(குறிப்பு – பன்னாட்டு நிதி நிறுவனம் ஜூலை 1944ஆம் ஆண்டு நிறுவப்பட்டது)

75) பன்னாட்டு நிதி நிறுவனத்தின் உலகப் பொருளாதார கண்ணோட்டம்-2018 என்னும் அறிக்கை இந்தியா உலகின் ____________ மிக வேகமாக வளர்ந்து வருகின்ற நாடு எனவும் கூறுகிறது.

A) 3 வது

B) 4 வது

C) 5 வது

D) 6 வது

(குறிப்பு – பன்னாட்டு நிதி நிறுவனத்தின் உலகப் பொருளாதார கண்ணோட்டம்-2018 ஆண்டு அறிக்கையின்படி இந்தியா மிக வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. நான்காவது இடத்தில் வங்கதேசம் உள்ளது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!