Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Book Back QuestionsTnpsc

வகைப்பாட்டியலின் அடிப்படைகள் Book Back Questions 7th Science Lesson 12

7th Science Lesson 12

12] வகைப்பாட்டியலின் அடிப்படைகள்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

அரிஸ்டாட்டில் என்பவர் ஒரு கிரேக்க தத்துவ மற்றும் சிந்தனையாளர். இவர் 2400 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர். இவர் உருவாக்கிய தொகுப்பு அமைப்பு, இவர் இறந்து 2000 வருடங்களுக்குப் பிறகு பயன்பாட்டிற்கு வந்தது. இவர் அனைத்து உயிரினங்களையும் தாவரங்கள் அல்லது விலங்குகள் எனப் பிரித்தார். இவர் விலங்குகளை இரத்தம் உடைய விலங்குகள் மற்றும் இரத்தம் அற்ற விலங்குகள் எனப்பிரித்தார். இறுதியாக விலங்குகளை இடப்பெயர்ச்சியின் அடிப்படையில் நடப்பவை, பறப்பவை, நீந்துபவை என மூன்று தொகுதிகளாகப் பிரித்தார்.

சில உயிரிகளின் அறிவியல் பெயர்கள்
வ.எண் பொதுப்பெயர் அறிவியல் பெயர்
1 மனிதன் ஹோமோ சேப்பியன்ஸ்
2 வெங்காயம் அல்லியம் சட்டைவம்
3 எலி ரேட்டஸ் ரேட்டஸ்
4 புறா கொலம்பா லிவியா
5 புளிய மரம் டேமரின்டஸ் இண்டிகா
6 எலுமிச்சை சிட்ரஸ் அருண்டிஃபோலியா
7 வேப்ப மரம் அசாடிரேக்டா இண்டிகா
8 தவளை ரானா ஹெக்சா டாக்டைலா
9 தேங்காய் காக்கஸ் நியூசிபெரா
10 நெல் ஓரைசா சட்டைவா
11 மீன் கட்லா கட்லா
12 ஆரஞ்சு சிட்ரஸ் சைனன்ஸிஸ்
13 இஞ்சி ஜிஞ்சிபர் அஃபிஸினேல்
14 பப்பாளி காரிகா பப்பாயா
15 பேரிச்சை ஃபோனிக்ஸ் டாக்டைலி PG103 பெரா

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. கீழ்கண்டவற்றுள் வகைப்பாட்டியலுக்கு எது இன்றியமையாதது?

(அ) ஒற்றுமை

(ஆ) வேறுபாடு

(இ) இரண்டும்

(ஈ) எதுவும் இல்லை

2. ஏறத்தாழ புவியில் காணப்படும் சிற்றினங்களின் எண்ணிக்கை

(அ) 8.7 மில்லியன்

(ஆ) 8.6 மில்லியன்

(இ) 8.5 மில்லியன்

(ஈ) 8.8 மில்லியன்

3. உயிரி உலகில் மிகப்பெரிய பிரிவு

(அ) வரிசை

(ஆ) பேருலகம்

(இ) தொகுதி

(ஈ) குடும்பம்

4. ஐந்து உலக வகைப்பாடு யாரால் முன்மொழியப்பட்டது?

(அ) அரிஸ்டாட்டில்

(ஆ) லின்னேயஸ்

(இ) விட்டேக்கர்

(ஈ) பிளேட்டோ

5. புறாவின் இருசொற் பெயர்

(அ) ஹோமோ செப்பியன்

(ஆ) ராட்டஸ் ராட்டஸ்

(இ) மாஞ்சிபெரா இண்டிகா

(ஈ) கொலம்பா லிவியா

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. __________ 1623ல் இருசொற் பெயரிடு முறையை அறிமுகப்படுத்தினார்.

2. சிற்றினம் என்பது ____________ வகைப்பாட்டின் நிலை ஆகும்.

3. __________ பச்சையமற்ற மற்றும் ஒளிச் சேர்க்கை தன்மையற்றது.

4. வெங்காயத்தின் இரு சொற் பெயர் ____________

5. ____________ தந்தை, கரோலஸ் லின்னேயஸ் ஆவர்.

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக:

1. உயிரினம் உருவாகுதல் மற்றும் பரிணாம முக்கியத்துவத்தை அறிய வகைப்பாட்டியல் உதவுகிறது.

2. மீன்கள் நீரில் வாழும் முதுகெலும்புடையவை ஆகும்.

3. 1979ஆம் ஆண்டு ஐந்து உலக வகைப்பாடு முன்மொழியப்பட்டது.

4. உண்மையான உட்கரு புரோகேரியாட்டிக் செல்களில் காணப்படுகிறது.

5. விலங்கு செல்கள் செல்சுவர் பெற்றவை.

பொருத்துக:

1. மொனிரா – மோல்டுகள்

2. புரோடிஸ்டா – பாக்டீரியா

3. பூஞ்சை – வேம்பு

4. ப்ளாண்டே – வண்ணத்துப்பூச்சி

5. அனிமேலியா – யூக்ளினா

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. கூற்று: இரு சொல் பெயர் என்பது உலகளாகிய பெயராகும். இது இரு பெயர்களைக் கொண்டது

காரணம்: கரோலஸ் லின்னேயஸ் என்பவரால் முதன்முதலில் இது அறிமுகப்படுத்தப்பட்டது.

(அ) கூற்று சரி, காரணமும் சரி

(ஆ) கூற்று சரி, காரணம் தவறு

(இ) கூற்று தவறு, காரணம் சரி

(ஈ) கூற்று மற்றும் காரணம் தவறு.

2. கூற்று: அடையாளம் காணுதல், வகைப்படுத்துதல், தொகுத்தல் ஆகியவை வகைப்பாட்டியலில் அவசியமானவை.

காரணம்: இவை வகைப்பாட்டியலின் அடிப்படைப் படி நிலைகள்.

(அ) கூற்று சரி, காரணமும் சரி

(ஆ) கூற்று சரி, காரணம் தவறு

(இ) கூற்று தவறு, காரணம் சரி

(ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.

சரியான விடையைத் தேர்ந்தெடுடக்கவும்: (விடைகள்)

1. இரண்டும் 2. (8.7 மில்லியன்) 3. பேருலகம் 4. விட்டேக்கர்

5. கொலம்பா லிவியா

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. காஸ்பார்டு பாஹின் 2. அடிப்படை 3. பூஞ்சைகள் 4. அல்லியம் சட்டைவம்

5. நவீன வகைப்பாட்டியல்

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான வாக்கியத்தைத் திருத்தி எழுதுக:

1. சரி

2. சரி

3. தவறு

சரியான விடை: 1969 ஆம் ஆண்டு ஐந்து உலக வகைப்பாடு முன்மொழியப்ட்டது.

4. தவறு

சரியான விடை: உண்மையான உட்கரு புரோகேரியாட்டிக் செல்களில் காணப்படுவதில்லை.

5. தவறு

சரியான விடை: விலங்கு செல்கள் செல்சுவர் அற்றவை.

பொருத்துக: (விடைகள்)

1. மொனிரா – பாக்டீரியா

2. புரோடிஸ்டா – யூக்ளினா

3. பூஞ்சை – மோல்டுகள்

4. ப்ளாண்டே – வேம்பு

5. அனிமேலியா – வண்ணத்துப் பூச்சி

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றைத் தேர்வு செய்க:

1. கூற்று சரி, காரணம் தவறு

2. கூற்று சரி, காரணம் தவறு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!