Book Back QuestionsTnpsc

வடஇந்தியப் புதிய அரசுகளின் தோற்றம் Book Back Questions 7th Social Science Lesson 2

7th Social Science Lesson 2

2] வடஇந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

மாளவத்தின் கூர்ஜரப் பிரதிகாரர்கள், தக்காணத்தைச் சேர்ந்த ராஷ்டிரகூடர்கள், வங்காளத்துப் பாலர்கள் ஆகிய மூவருள் ஒவ்வொருவரும் வளம் நிறைந்த கன்னோஜின் மீது அவர்களின் மேலாதிக்கத்தை நிறுவ முயன்றனர். இதனால் ஏற்பட்ட நீண்ட, நெடிய மும்முனைப் போட்டியில் இம்மூன்று சக்திகளும் பலவீனமடைந்தன.

பிருதிவிராஜ் சௌகானின் மறைவுக்குப் பின் சில நூற்றாண்டுகள் கழிந்த பின்பு சந்த் பார்தை எனும் கவிஞர் “பிருதிவிராஜ ராசோ” எனும் பெயரில் ஒரு நீண்ட காவியத்தை இயற்றினார். காவியம் கூறும் கதை பின்வருமாறு: கன்னோஜின் அரசனுடைய மகளுக்குத் திருமணம் செய்ய வேண்டும். அவள் தனது கணவனைத் தேர்வு செய்வதற்கெனச் சுயம்வரம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஏற்கெனவே பிருதிவிராஜனிடம் காதல் வயப்பட்டிருந்த இளவரசி அவரையே மணந்துகொள்ள விரும்பினாள். ஆனால் பிருதிவிராஜ் அவள் தந்தையின் எதிரியாவார். பிருதிவிராஜை அவமானப்படுத்தும் நோக்கத்தில் கன்னோஜின் அரசர் அவருக்கு அழைப்பு அனுப்பவில்லை. மேலும் பிருதிவிராஜ் சௌகானைப் போன்று ஒரு சிலை செய்து தனது அரச சபையின் வாயிலில் வாயிற்காப்போனைப் போல நிறுத்தி வைத்தார். கூடியிருந்தோரெல்லாம் அதிர்ச்சி அடையும் வண்ணம் இளவரசி அங்கிருந்த இளவரசர்களை மறுத்து பிருதிவிராஜின் சிலைக்கு மாலையிட்டுத் தனது விருப்பத்தை வெளிப்படுத்தினாள். சற்று தொலைவில் மறைந்திருந்த பிருதிவிராஜ் இளவரசியை அழைத்துக்கொண்டு குதிரையில் தப்பினார். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

ரக்ஷாபந்தன் (ராக்கி) எனும் பண்பாட்டு மரபானது ராஜபுத்திரர்களுக்கு உரியதாகும். “ரக்ஷா” எனில் பாதுகாப்பு என்றும், “பந்தன்” என்பது கட்டுதல் அல்லது உறவு என்னும் பொருளாகும். இது சகோதரத்துவத்தையும், அன்பையும் கொண்டாடும் விழாவாகும். ஒரு பெண் ஒர் ஆடவனின் மணிக்கட்டில் ராக்கியைக் கட்டிவிட்டால் அப்பெண் அந்த ஆடவனை சகோதரனாகக் கருதுகிறாள் என்று பொருள். அப்படியான ஆடவர்கள் அப்பெண்களைப் பாதுகாக்கக் கடமைப்பட்டவர்கள் ஆவர். 1905ஆம் ஆண்டு வங்கப் பிரிவினையின்போது ரவீந்திரநாத் தாகூர் பெருமளவில் மக்கள் பங்கேற்ற ரக்ஷாபந்தன் விழாவைத் தொடங்கினார். அவ்விழாவில் இந்து மற்றும் முஸ்லீம் பெண்கள் அடுத்த சமூகத்தைச் சேர்ந்த ஆடவர் கைகளில் ராக்கியைக் கட்டி அவர்களைச் சகோதரர்களாக ஏற்க வைத்தார். இந்து, முஸ்லீம்களுக்கிடையே பிளவை ஏற்படுத்த ஆங்கிலேயர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு எதிராக இச்செயல்பாடு மேற்கொள்ளப்பட்டது.

சிந்துவை அராபியர் கைப்பற்றியதும் அதன் தாக்கமும்: கி. பி. (பொ. ஆ) 712ஆம் ஆண்டு உமையது அரசின் படைத்தளபதியான முகமது பின் காசிம் சிந்துவின் மீது படையெடுத்தார். சிந்துவின் அரசர் தாகீர், முகமது பின் காசிமால் தோற்கடிக்கபட்டுக் கொல்லப்பட்டார். சிந்துவின் தலைநகர் அரோர் கைப்பற்றப்பட்டது. காசிம் முல்தானையும் கைப்பற்றினார். சிந்துவில் நிர்வாக ஏற்பாடுகளைச் செய்தார். சிந்துப்பகுதிவாழ் மக்களுக்குப் “பாதுகாக்கப்பட்ட மக்கள்” எனும் தகுதி வழங்கப்பட்டது. மக்களின் வாழ்க்கையிலும் அவர்களின் மதங்களிலும் எவ்விதத் தலையீடும் செய்யப்படவில்லை. ஆனால் காசிம் வெகுவிரைவில் கலீஃபாவால் திரும்ப அழைக்கப்பட்டார். அராபிய அறிஞர்கள் சிந்துவிற்கு வந்து பல இந்திய இலக்கியங்களைக் கற்றனர். வானியல், தத்துவம், கணிதம், மருத்துவம் தொடர்பாகச் சமஸ்கிருத மொழியிலிருந்த பல நூல்களை அவர்கள் அராபிய மொழியில் மொழியாக்கம் செய்தனர். 0 முதல் 9 வரையிலான எண்களை அவர்கள் இந்தியாவிலிருந்தே கற்றுக்கொண்டனர் அதுவரையிலும் மேலை நாட்டினர் பூஜ்யத்தின் பயன்பாட்டை அறிந்திருக்கவில்லை. ஐரோப்பியர்கள் கணிதம் தொடர்பான அதிக அறிவை அராபியர் வாயிலாகப் பெற்றனர். பூஜ்யத்தின் முக்கியத்துவத்தை அவர்கள் இந்தியாவிலிருந்தே கற்றுக்கொண்டனர். மேலைநாட்டவரும் அராபியர்களும் சதுரங்க விளையாட்டை இந்தியர்களிடமிருந்தே கற்றுக்கொண்டதாக நம்பப்படுகிறது.

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. “பிருதிவிராஜ ராசோ” எனும் நூலை எழுதியவர் யார்?

(அ) கல்ஹணர்

(ஆ) விசாகதத்தர்

(இ) ராஜசேகரர்

(ஈ) சந்த் பார்தை

2. பிரதிகார அரசர்களுள் முதல் தலைசிறந்த அரசர் யார்?

(அ) முதலாம் போஜா

(ஆ) முதலாம் நாகபட்டர்

(இ) ஜெயபாலர்

(ஈ) சந்திரதேவர்

3. கஜினி என்னும் ஒரு சிறிய அரசு எங்கு அமைந்திருந்தது?

(அ) மங்கோலியா

(ஆ) துருக்கி

(இ) பாரசீகம்

(ஈ) ஆப்கானிஸ்தான்

4. கஜினி மாமூதின் படையெடுப்பிற்கு முக்கியக் காரணம் யாது?

(அ) சிலை வழிபாட்டை ஒழிப்பது

(ஆ) இந்தியாவின் செல்வத்தைக் கொள்ளையடிப்பது

(இ) இந்தியாவில் இஸ்லாமைப் பரப்புவது

(ஈ) இந்தியாவில் ஒரு முஸ்லீம் அரசை நிறுவுவது

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. விக்கிரமசீலா பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்தவர் —————- ஆவார்.

2. கி. பி. ———–இல் சிந்துவை அராபியர் கைப்பற்றினர்.

3. ஆஜ்மீர் நகரத்தை நிர்மாணித்தவர் ———– ஆவார்.

4. காந்தர்யா கோவில் ————–ல் அமைந்துள்ளது.

III. பொருத்துக:

அ – ஆ

1. கஜீராகோ – அ) அபு குன்று

2. சூரியனார் கோவில் – ஆ) பந்தேல்கண்ட்

3. தில்வாரா கோவில் – இ) கொனாரக்

IV. சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக:

1. “ராஜபுத்ர” என்பது ஒரு லத்தீன் வார்த்தை ஆகும்.

2. அரசர் கோபாலர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

3. அபுகுன்றில் அமைந்துள்ள கோவில் சிவபெருமானுக்குப் படைத்தளிக்கப்பட்டுள்ளது.

4. “ரக்ஷாபந்தன்” சகோதர உறவு தொடர்பான விழாவாகும்.

5. இந்தியர்கள் 0 முதல் 9 வரையிலான எண்களை அராபியர்களிடமிருந்து கற்றுக் கொண்டனர்.

V. பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. கூற்று: கன்னோஜின் மீது ஆதிக்கத்தை நிறுவவே மும்முனைப் போராட்டம் நடைபெற்றது.

காரணம்: கன்னோஜ் மிகப்பெரும் நகரமாக இருந்தது.

(அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமே

(ஆ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல

(இ) கூற்று தவறு. காரணம் சரி

(ஈ) கூற்றும் காரணமும் தவறு

2. கூற்று I: மகிபாலரால் தனது நாட்டை வாரணாசியைக் கடந்து விரிவுபடுத்த முடியவில்லை.

கூற்று II: மகிபாலரும் முதலாம் ராஜேந்திர சோழனும் சமகாலத்தவர் ஆவார்.

(அ) I சரி

(ஆ) II சரி

(இ) I மற்றும் II சரி

(ஈ) I மற்றும் II தவறு

3. கூற்று: இந்தியாவில் இஸ்லாமியக் காலக்கட்டம் கி. பி. (பொ. ஆ) 712இல் அராபியர் சிந்துவைக் கைப்பற்றிய உடன் தொடங்கவில்லை.

காரணம்: கூர்ஜரப்பிரதிகாரர்கள் அராபியரைக் கடுமையாக எதிர்த்தனர்.

(அ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே

(ஆ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல

(இ) கூற்று சரி, காரணம் தவறு

(ஈ) கூற்று தவறு, காரணம் சரி

4. கூற்று: இரண்டாம் தரெய்ன் போரில் பிருதிவிராஜ் தோல்வியடைந்தார்.

காரணம்: ராஜபுத்திரர்களிடையே ஒற்றுமை இல்லை.

(அ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே

(ஆ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல

(இ) கூற்று சரி, காரணம் தவறு

(ஈ) கூற்று தவறு, காரணம் சரி

5. சரியானவற்றை தேர்வு செய்க:

1. “ரக்ஷாபந்தன்” மரபு ராஜபுத்திரர்களுடையது.

2. வங்கப்பிரிவினையின்போது ரவீந்திரநாத் தாகூர் பெருமளவில் மக்கள் பங்கேற்ற “ரக்ஷாபந்தன்” விழாவைத் தொடங்கினார்.

3. இந்துக்களையும் முஸ்லீம்களையும் பிரிப்பதற்காக ஆங்கிலேயர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு எதிரானதாக இது திட்டமிடப்பட்டது.

(அ) கூற்று 1 சரியானது

(ஆ) கூற்று 2 சரியானது

(இ) கூற்று 3 சரியானது

(ஈ) மேற்கண்ட அனைத்தும் சரியானவை

விடைகள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. சந்த் பார்தை, 2. முதலாம் நாகபட்டர், 3. ஆப்கானிஸ்தான், 4. இந்தியாவின் செல்வத்தைக் கொள்ளையடிப்பது

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. தர்மபாலர், 2. 712, 3. சிம்மராஜ், 4. மத்தியபிரதேசம்

III. பொருத்துக:

1. இ, 2. ஆ, 3. அ

IV. சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக:

1. சமஸ்கிருதம், 2. சரி, 3. பந்தல்கண்ட், 4. சரி, 5. அரபியர்கள் இந்தியர்களிடமிருந்து கற்றுக்கொண்டனர்

V. பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல, 2. I மற்றும் II சரி, 3. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல, 4. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே, 5. மேற்கண்ட அனைத்தும் சரியானவை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!