Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Book Back QuestionsTnpsc

வரி மற்றும் அதன் முக்கியத்துவம் Book Back Questions 7th Social Science Lesson 27

7th Social Science Lesson 27

27] வரி மற்றும் அதன் முக்கியத்துவம்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

ஆடம் ஸ்மித்தின் நால்வகையான வரிவிதிப்புக் கோட்பாடுகள்: 1. சமத்துவ விதி. 2. உறுதிப்பாட்டு விதி. 3. வசதி விதி. 4. சிக்கன விதி.

மத்திய வருமானச் சட்டம் 1963இன் கீழ் “நேர்முக வரிகளுக்கான மத்திய வருவாய் வாரியம்” என்னும் பெயரில் தனி வாரியம் (CBDT) ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரி – ஓர் அறிமுகம்: முந்தைய மறைமுக வரி கட்டமைப்பு மற்றும் அதன் சிரமங்கள் இந்திய வரிவிதிப்பு வரலாறு பண்டைய காலத்திற்குச் செல்கிறது. கௌடில்யர் எழுதிய அர்த்த சாஸ்திரத்தின் கூற்றுப்படி, பண்டைய காலங்களில் வரி விதிக்கப்பட்டு ரொக்கமாகவும், வேறு வகையாகவும் சேகரிக்கப்பட்டது. மறைமுக வரிகளின் நவீன வரலாறு 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து உப்பு, சர்க்கரை, வாகன எரிபொருள் போன்றவற்றுக்கும் மத்திய கலால் வரி விதிக்கப்பட்டதிலிருந்து தொடங்குகிறது. படிப்படியாகக் கலால் வரிகளின் அடிப்படை விரிவுபடுத்தப்பட்டது. சுதந்திரம் பெற்ற நேரத்தில், தேசிய அளவில் மத்திய கலால் வரி மற்றும் மாநில அளவில் விற்பனை வரி ஆகியவை நடைமுறையில் இருந்தன நீண்ட கால முயற்சிகள் மற்றும் திருத்தங்களுக்கு பிறகு, 2003ஆம் ஆண்டில் இந்திய மாநிலமான ஹரியானாவில் முதன்முதலில் மதிப்பு கூட்டு வரி (VAT) அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பிறகு பஞ்சாப், சண்டிகர், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் டெல்லி உள்ளிட்ட 24 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் 2005இல் மதிப்பு கூட்டு வரி (VAT) அறிமுகப்படுத்தப்பட்டது.

மதிப்புச் கூட்டு வரி முன்பு இருந்த விற்பனை வரியை விடப் பெரிய வளர்ச்சியாக இருந்திருந்தாலும், சரக்கு மற்றும் சேவை வரி உண்மையில் குறிப்பிடத்தக்க ஒரு முன்னேற்றமாகும். மேலும், நாட்டின் வரி விதிப்பு அமைப்பில் முழுமையை உணர்ந்து கொள்வதற்கான தர்க்க அடிப்படையிலான படியாகும் ஆரம்பத்தில் ஒரு முனை மற்றும் தேசிய அளவிலான சரக்கு மற்றும் சேவை வரி (GST) இருக்கும் என்று முன்மொழியப்பட்டது. இருப்பினும் சரக்கு மற்றும் சேவை வரி விதி (GST) இறுதியாக 2017 ஜீலை 1 முதல் இந்தியா முழுவதும் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் ஒரு பொருளாதார அமைப்பு ஒரு வரி, ஒரு சந்தை மற்றும் ஒரு தேசத்துடன் உள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி (GST) என்பது நாம் வாங்கும் அனைத்துப் பொருள்கள் மற்றும் சேவைகளுக்கான வரி. இது மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (CGST) மற்றும் மாநில சரக்கு மற்றும் சேவை வரி (SGST) என இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது. இது ஒரு வெளிப்படையான வரி. நீங்கள் வாங்கும் பொருள்களுக்கான ரசீது சிடைத்தால், பின்வரும் தகவல்களை காண்பீர்கள்:

தயாரிப்பு மதிப்பு = ரூ. 100 SGST 9% ரூ9.

CGST 9% = ரூ9 மொத்தம் ரூ. 118.

மசோதாவில் GST 18% அது சமமாகப் பிரிக்கப்ட்டுள்ளது மத்திய மற்றும் மாநிலத்திற்கும் தனித்தனியாக ரூ. 9க்கு 9% எனவே ரூ. 9 மாநில அரசுக்கும், மேலும் ரூ. 9. மத்திய அரசுக்கும் செல்லும். தமிழ்நாட்டில் ஒரு விற்பனையாளர் ஒரு பொருளை வெறுமாநிலத்தில் வாங்குபவருக்கு விற்றால் (எடுத்துக்காட்டாக கர்நாடகா), அது மாநிலங்களுக்கு இடையேயான வர்த்தகம் என்று அழைக்கப்படுகிறது. மாநிலங்களுக்கு இடையிலான வர்த்தகத்தை பொருத்தவரை. மசோதா கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

உற்பத்தியின் மதிப்பு = ரூ. 100.

IGST 18% = ரூ. 18.

மொத்தம் = ரூ. 118.

ரூ. 18 மத்திய அரசுக்குச் செல்லும். மத்திய அரசு ரூ. 9 எடுத்து கர்நாடக அரசுக்கு மேலும் ரூ. 9 அனுப்பும் வரி 0 சதவீதம், 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம் மற்றும் 28 சதவீதம் என ஐந்து அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. GST மத்திய அரசால் வசூலிக்கப்பட்டாலும், பெட்ரோலியப் பொருள்கள், ஆல்கஹால், மின்சாரம் ஆகியவற்றின் மீதான வரி தனித்தனியாக மாநில அரசால் வசூலிக்கப்படுகிறது மற்றும் காய்கறிகள் மற்றும் உணவு தானியங்கள் போன்ற வாழ்க்கையின் அனைத்து அத்தியாவசிய பண்டங்களுக்கும் இந்த வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன.

சுங்க வரியும் சாலை வரியும்: அரசால் மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகளை நாம் அடிக்கடி பயன்படுத்துகிறோம். அதற்காக விதிக்கப்படும் வரி, சுங்கம் மற்றும் சாலை வரிகளாகும். எடுத்துக்காட்டாக, நாம் பயன்படுத்தும் சாலைகள் மற்றும் பாலங்கள் போன்றவற்றைக் கூறலாம். சாலை/பாலம் வசதிகளின் பராமரிப்புப் பணிக்காகவும் குறிப்பிட்ட திட்டங்களைச் செயல்படுத்துவதற்காகவும் இவ்வரிகள் பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்படுகின்றன.

தூய்மை பாரத வரி: இந்திய அரசால் இவ்வரி விதிக்கப்படுகிறது. தூய்மை பாரதத்தின் பெயரால் வசூலிக்கப்படும் இவ்வரி, 2015ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 15ஆம் நாள் தொடங்கப்பட்டது. இஃது அனைத்து வகையான வரிச் சேவைகளுக்கும் பொருந்தும். இதன் வரி விகிதம் 0. 5% ஆகும். தற்போது, 14%க்கும் மேற்பட்ட சேவை வரி நடைமுறையில் உள்ளது.

நேர்முக வரி: வரி செலுத்துவோர், தமக்கு விதிக்கப்பட்ட வரிச்சுமையைப் பிறருக்கு மாற்ற இயலாது. தனியாள் மற்றும் நிறுவனங்கள் பெறும் வருமானங்கள் மீது வரி விதிக்கப்படுகிறது. பணவீக்க அழுத்தம் இல்லை. வரித் தாக்கமும் வரி நிகழ்வும் சமமாக உள்ளன. நெகிழ்வுத் தன்மை குறைவு.

மறைமுக வரி: ஒருவர், தமக்கு விதிக்கப்பட்ட வரிச்சுமையை மிக எளிதாக வேறொருவருக்கும் மாற்ற இயலும். பல்வேறு பொருள் மற்றும் சேவைகளின் மீது வரி விதிக்கப்படுகிறது. பணவீக்கம் அழுத்தம் உண்டு. வரித் தாக்கமும் வரி நிகழ்வும் வெவ்வேறாக உள்ளன. நெகிழ்வுத்தன்மை அதிகம்.

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. வரிகள் என்பவை ——– செலுத்தப்பட வேண்டும்

(அ) விருப்பத்துடன்

(ஆ) கட்டாயமாக

(இ) அ மற்றும் ஆ

(ஈ) இவற்றில் எதுவுமில்லை

2. வசூலிக்கப்படும் வரியிலிருந்து குறைந்த அளவிலேயே தொகை செலவழிக்கப்படுவது ———-

(அ) சமத்துவ விதி

(ஆ) உறுதிப்பாட்டு விதி

(இ) சிக்கன விதி

(ஈ) வசதி விதி

3. வளர்வீத வரிக்கு எதிராக அமைந்துள்ள வரி ———-

(அ) விகிதச்சாரா வரி

(ஆ) தேய்வு வீத வரி

(இ) அ மற்றும் ஆ

(ஈ) இவற்றில் எதுவுமில்லை

4. வருமான வரி என்பது ———-

(அ) நேர்முக வரி

(ஆ) மறைமுக வரி

(இ) அ மற்றும் ஆ

(ஈ) இவற்றில் எதுவுமில்லை

5. சேவை வழங்குவதன் அடிப்படையில் விதிக்கப்படுவது ———

(அ) செல்வ வரி

(ஆ) நிறுவன வரி

(இ) விற்பனை வரி

(ஈ) சேவை வரி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. வழக்கமாக, அரசால் விதிக்கப்படும் வரியையே ———– என்னும் சொல்லால் குறிக்கிறோம்.

2. வருமான அளவைப் பொருட்படுத்தாமல் ஒரே மாதிரியாக வரி விதிப்பது ———

3. ———– வரி என்பது, அன்பளிப்பின் மதிப்பைப் பொருத்து, அன்பளிப்பு பெறுபவர் அரசுக்குச் செலுத்துவதாகும்.

4. —– வரிச்சுமையை வரி செலுத்துவோர் மாற்ற முடியாது.

5. மறைமுக வரி என்பது ——- நெகிழ்ச்சி உடையது.

III. பொருத்துக:

1. வரி விதிப்புக் கொள்கை – அ) நேர்முக வரி

2. சொத்து வரி – ஆ) சரக்கு மற்றும் சேவை வரி

3. சுங்கவரி – இ) ஆடம்ஸ்மித்

4. 01. 07. 2017 – ஈ) குறைந்த நெகிழ்ச்சி உடையது

5. நேர்முக வரி மறைமுக வரி

IV. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்

1. பின்வருவனவற்றில் எது மறைமுக வரி அல்ல?

(அ) சேவை வரி

(ஆ) மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT)

(இ) சொத்துவரி

(ஈ) சுங்கவரி

V. சரியான ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்

1. பின்வரும் வரியில் எது நேர்முக வரி?

(அ) சேவை வரி

(ஆ) செல்வ வரி

(இ) விற்பனை வரி

(ஈ) வளர் விகித வரி

விடைகள்:

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. கட்டாயமாக, 2. சிக்கன விதி, 3. தேய்வு வீத வரி, 4. நேர்முக வரி, 5. சேவை வரி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. வரிவிதிப்பு, 2. விகிதாச்சார விதி, 3. அன்பளிப்பு, 4. நேரடி, 5. அதிக

III. பொருத்துக:

1. இ, 2. ஆ, 3. உ, 4. ஆ, 5. ஈ

IV. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்

1, சொத்துவரி

V. சரியான ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்

1. செல்வ வரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!