Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
MCQ Questions

வளங்கள் மற்றும் தொழிலகங்கள் 10th Social Science Lesson 5 Questions in Tamil

10th Social Science Lesson 5 Questions in Tamil

5] வளங்கள் மற்றும் தொழிலகங்கள்

1) இயற்கையிலிருந்து பெறப்பட்டு உயிரினங்களால் பயன்படுத்தப்படும் அனைத்து வளங்களும் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

a) இயற்கை வளம்

b) புதுப்பிக்கத்தக்க வளம்

c) புதுப்பிக்கவியலா வளம்

d) உயிரி வளம்

விளக்கம்: இயற்கையிலிருந்து பெறப்பட்டு உயிரினங்களால் பயன்படுத்தப்படும் அனைத்து வளங்களும் இயற்கை வளம்’ என்று அழைக்கப்படுகிறது. காற்று, நீர்,மண்,தாதுக்கள்,புதைப் படிம எரிபொருள் தாவரங்கள், வன விலங்குகள் போன்றவை இயற்கை வளங்களில் அடங்கும். பல இயற்கை வளங்கள் மூலப்பொருட்களாக பயன்படுகின்றன. இயற்கை வளங்கள் எந்த ஒரு பிரதேசத்தின் பொருளாதார வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கிறன. பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இயற்கை வளங்கள் வகைப்படுத்தப்படுகிறன. தொடர்ந்து கிடைக்கும் தன்மையின் அடிப்படையில் வளங்கள் இரண்டு வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன.

2) கீழ்க்கண்டவற்றுள் புதுப்பிக்கவியலா வளங்களுக்கு எடுத்துக்காட்டு எது/எவை?

a) நிலக்கரி

b) பெட்ரோலியம்

c) இயற்கை வாயு

d) இவை அனைத்தும்

விளக்கம்: புதுப்பிக்கக்கூடிய வளங்கள் பயன்பாட்டிற்கு பிறகு இயற்கை முறையில் மீட்டுருவாக்கம் செய்து கொள்கின்றன. சூரிய ஆற்றல், காற்று சக்தி, உயிரி வளிமம், ஓதசக்தி, அலைசக்தி போன்றவை புதுப்பிக்கக்கூடிய வளங்கள் ஆகும். பயன்பாட்டிற்கு பிறகு மீண்டும் மீட்டுருவாக்கம் செய்ய இயலா வளங்கள் புதுப்பிக்க இயலா வளங்கள் ஆகும். நிலக்கரி, பெட்ரோலியம், இயற்கை வாயு போன்றவை இவ்வகையைச் சார்ந்தவை.

3. ஒரு குறிப்பிட்ட வேதியியல் மற்றும் இயற்பியல் பண்புகளைக் கொண்ட உயிருள்ள மற்றும் உயிரற்ற இயற்கை மூலங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

a) தனிமம்

b) சேர்மம்

c) கனிமம்

d) இயற்கை வளம்

விளக்கம்: ஒரு குறிப்பிட்ட வேதியியல் மற்றும் இயற்பியல் பண்புகளைக் கொண்ட உயிருள்ள மற்றும் உயிரற்ற இயற்கை மூலங்கள் கனிமங்கள் ஆகும். புவியிலிருந்து கனிமங்களை அகழ்ந்தெடுக்கும் முறைக்கு சுரங்கத் தொழில் என்று பெயர். ஆழம் குறைந்த புவியோட்டிற்கு அருகில் உள்ள சுரங்கங்கள் திறந்தவெளிச் சுரங்கங்கள் என்றும் ஆழமாக உள்ள சுரங்கங்கள் ஆழ்ச் சுரங்கங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

4. இந்திய நிலவியல் களஆய்வு நிறுவனத்தின் தலைமையிடம் எங்கு அமைந்துள்ளது?

a) கொல்கத்தா

b) நாக்பூர்

c) ஹைதராபாத்

d) பூனே

விளக்கம்: இந்தியாவில் உள்ள கனிமங்கள் மற்றும் அதனோடு தொடர்புடைய அமைப்புகள் : 1. இந்திய நிலவியல் களஆய்வு நிறுவனத்தின் தலைமையிடம் – கொல்கத்தா 2. இந்தியச் சுரங்கப் பணியகம் – நாக்பூர் 3. இரும்பு சாரா தொழில் நுட்ப மேம்பாட்டு மையம் – ஹைதராபாத் 4. இந்தியாவில் உள்ள சுரங்கங்கள் மற்றும் கனிமங்களின் நிர்வாகத்திற்கான பொறுப்பு சுரங்கப்பணி அமைச்சகத்திடம் உள்ளது. (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறைச் சட்டம் , 1957 )

5) வேதியியல் மற்றும் இயற்பியல் பண்புகளின் அடிப்படையில் கனிமங்கள் எத்தனை பெரும் பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன?

a) இரண்டு

b) மூன்று

c) நான்கு

d) ஐந்து

விளக்கம்: வேதியியல் மற்றும் இயற்பியல் பண்புகளின் அடிப்படையில் கனிமங்கள் இரண்டு பெரும் பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன. அவை அ. உலோகக் கனிமங்கள் ஆ. அலோகக் கனிமங்கள்

6) அரிதாகவும் இயற்கையான அடர்ந்த தாது படிவங்களாகவும் காணப்படுபவை எவை?

a) உலோக கனிமங்கள்

b) அலோக கனிமங்கள்

c) a) மற்றும் b)

d) இரும்பு தாதுக்கள்

விளக்கம்:உலோகக் கனிமங்கள்: உலோகக் கனிமங்கள் என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உலோகங்களைக் கொண்டிருக்கும். உலோகக் கனிமங்கள் அரிதாகவும் இயற்கையான அடர்ந்த தாது படிவங்களாகவும் காணப்படுகின்றன. உலோகப் படிவுகளில் இரும்பு, மாங்கனீசு, தாமிரம், பாக்சைட், நிக்கல், துத்தநாகம், காரியம், தங்கம் போன்ற மதிப்பு மிக்க உலோகங்கள் காணப்படுகின்றன.

7) தீப்பாறைகள் மற்றும் உருமாறியப் பாறைகளின் கலவையாக காணப்படும் தாது எது?

a) பாக்சைட்

b) இரும்பு

c) தங்கம்

d) மாங்கனீசு

விளக்கம்: இரும்புத்தாது புவியின் மேலோட்டில் அதிகம் பரவி காணப்படும் ஒன்றாகும். இவை தனித்த நிலையில் அரிதாகக் காணப்படுகிறது. இது தீப்பாறைகள் மற்றும் உருமாறியப் பாறைகளின் கலவையாக காணப்படுகிறது.

8. கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

a) இந்தியாவில் காணப்படும் இரும்புத்தாது வளங்களில் சுமார் 602 மில்லியன் டன் ஹேமடைட் வகையையும், சுமார் 408 மில்லியன் டன்கள் மேக்னடைட் வகையையும் சார்ந்தவை

b) சுமார் 79 சதவீதம் ஹேமடைட் இரும்புத்தாது படிவுகள், அசாம், பீகார், சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஒடிசா மற்றும் உத்தரப்பிரதேசம் மாநிலங்களில் உள்ளது

c) a) மற்றும் b)

d) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: இந்தியாவில் காணப்படும் இரும்புத்தாது வளங்களில் சுமார் 9,602 மில்லியன் டன் ஹேமடைட் வகையையும், சுமார் 3,408 மில்லியன் டன்கள் மேக்னடைட் வகையையும் சார்ந்தவை. சுமார் 79 சதவீதம் ஹேமடைட் இரும்புத்தாது படிவுகள், அசாம், பீகார், சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஒடிசா மற்றும் உத்தரப்பிரதேசம் மாநிலங்களில் உள்ளது.

9) இந்தியாவில் உள்ள மேக்னடைட் படிவுகளில் எந்த மாநிலம் மட்டும் 72 சதவீத பங்கினைக் கொண்டுள்ளது?

a) தமிழ்நாடு

b) ஆந்திரா

c) சத்தீஸ்கர்

d) கர்நாடகா

விளக்கம்: சுமார் 93 சதவீதம் மேக்னடைட் இரும்புத்தாது படிவுகள் ஆந்திரப்பிரதேசம், கோவா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு பகுதிகளில் காணப்படுகிறன. இந்தியாவில் உள்ள மேக்னடைட் படிவுகளில் கர்நாடக மாநிலம் மட்டும் 72 சதவீத பங்கினைக் கொண்டுள்ளது.

10) நாட்டின் மொத்த இரும்புத்தாது உற்பத்தியில் முதன்மை உற்பத்தியாளராக திகழும் மாநிலம் எது?

a) ஜார்க்கண்ட்

b) ஒடிசா

c) சத்தீஸ்கர்

d) உத்திரப்பிரதேசம்

விளக்கம்: நாட்டின் மொத்த இரும்புத்தாது உற்பத்தியில் ஜார்கண்ட் மாநிலம் 25 சதவீதம் உற்பத்தி செய்து முதன்மையான உற்பத்தியாளராகத் திகழ்கிறது. சிங்பும், ராணிகஞ்ச், தன்பாத் மற்றும் ராஞ்சி மாவட்டங்கள் இம்மாநிலத்தின் முக்கிய உற்பத்தியாளர்களாகும். ஒடிசா மாநிலம் 21 சதவீத உற்பத்தியுடன் இரண்டாம் நிலையில் உள்ளது. சுந்தர்கார், மயூர்பஞ்ச், சம்பல்பூர் மற்றும் கீயோஞ்சர் மாவட்டங்கள் இதன் முக்கிய உற்பத்தி மாவட்டங்களாகும்.

11) நாட்டின் மொத்த இரும்புத்தாது உற்பத்தியில் முதன்மை உற்பத்தியாளராக திகழும் மாநிலம் எது?

a) ஜார்க்கண்ட்

b) ஒடிசா

c) சத்தீஸ்கர்

d) உத்திரப்பிரதேசம்

விளக்கம்: சத்தீஸ்கர் மாநிலத்தின் மேக்னடைட் உற்பத்தி 18 சதவீதமாகும். ராஜ்கார் மற்றும் பிலாஸ்பூர் மாவட்டங்கள் இதன் முக்கிய உற்பத்தியாளராகும். கர்நாடக மாநிலத்தின் 20 சதவீத மேக்னடைட் உற்பத்தி சித்திரதுர்கா சிக்மகளூர், சிமோகா மற்றும் தார்வார் மாவட்டங்கள் உற்பத்தி செய்கின்றன. ஆந்திரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஒவ்வொன்றும் சுமார் 5 சதவீத உற்பத்தியைச் செய்கின்றன.

12.கீழ்க்கண்டவற்றுள் தமிழ்நாட்டில் இரும்பு உற்பத்தி செய்யும் மாவட்டங்கள் எவை?

a) நாமக்கல்

b) சேலம்

c) திருவண்ணாமலை

d) இவை அனைத்தும்

விளக்கம்: ஆந்திரப்பிரதேசத்தில் கர்னூல், குண்டூர், கடப்பா மற்றும் அனந்தபூர் மாவட்டங்களும் தமிழ்நாட்டில் சேலம், நாமக்கல், திருவண்ணாமலை, திருச்சி, கோயம்புத்தூர், மதுரை, மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களும் குறிப்பிடத்தக்க அளவு இரும்புத்தாது உற்பத்தி செய்கின்றன.

13) கீழ்க்கண்டவற்றுள் இரும்புத்தாதுக்கள் எந்த நிறங்களில் காணப்படுகிறது?

ⅰ) அடர் சாம்பல்

ⅱ) வெளிர் மஞ்சள்

ⅲ) அடர் ஊதா

ⅳ) சிவப்பு

a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)

b) ⅱ), ⅲ)

c) ⅲ), ⅳ)

d) ⅰ), ⅱ), ⅲ)

விளக்கம்: பாறை மற்றும் க னி மங்க ளி லி ரு ந் து இரும்புத்தா துக்க ள் பெறப்படுகி ன்றன . இரும்புத்தாதுகளில் இரும்பு ஆக்சைடுகள் அதிகம் உள்ளது. இவை அடர் சாம்பல், வெளிர் மஞ்சள், அடர் ஊதா நிறங்களில் இருந்து பழுப்பு கலந்த ஆரஞ்சு நிறம் வரை பல நிறங்களில் காணப்படுகிறது.

14) இரும்புத்தாது கீழ்க்கண்ட எந்த வடிவத்தில் காணப்படுகிறது?

ⅰ) லைமனைட்

ⅱ) சிடரைட்

ⅲ) கோதைட்

ⅳ) ஹேமடைட்

a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)

b) ⅱ), ⅲ)

c) ⅲ), ⅳ)

d) ⅰ), ⅱ), ⅲ)

விளக்கம்:

15) கீழ்க்கண்டவற்றுள் சுண்ணாம்புக்கல் எங்கு பயன்படுகிறது?

ⅰ) சோடா சாம்பல்

ⅱ) எரிசோடா

ⅲ) வெளுக்கும் தூள்

ⅳ) காகிதம்

a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)

b) ⅱ), ⅲ)

c) ⅲ), ⅳ)

d) ⅰ), ⅱ), ⅲ)

விளக்கம்: சோடா சாம்பல், எரிசோடா, வெளுக்கும் தூள் (bleaching powder) காகிதம், சிமெண்ட், இரும்பு எஃகு உற்பத்தி, கண்ணாடி மற்றும் உரங்கள் தயாரிப்பு தொழிற்சாலைகளில் சுண்ணம்புக்கல் பயன்படுகிறது.

16. சுண்ணாம்புக்கல்லின் முக்கிய உற்பத்தியாளர் மாநிலம்/கள் எது/எவை?

a) ஆந்திரா

b) ஒடிசா

c) மத்தியப்பிரதேசம்

d) a) மற்றும் b)

விளக்கம்: சுண்ணம்புக்கல்லின் முக்கிய உற்பத்தியாளர்கள் ஆந்திர மாநிலத்தின் (20 சதவீதம்) கடப்பா, கர்னூல், குண்டூர் மாவட்டங்களாகும். தெலுங்கானா மாநிலமும் 20 சதவீத உற்பத்தியைச் செய்கின்றது. இம்மாநிலத்தின் கோல்கொண்டா, அடிலாபாத், வாரங்கல் மற்றும் கரீம்நகர் ஆகிய மாவட்டங்கள் முக்கிய உற்பத்தி மாநிலங்களாகும். இராஜஸ்தான், மாநில உற்பத்தியில் 18 சதவீதம் ஜோத்பூர், அஜ்மீர், பிக்காநர் மற்றும் கோட்டா மாவட்டங்கள்,(12%) மத்தியப்பிரதேசம், மாநில உற்பத்தியில் 12 சதவீதம் ஜபல்பூர், சாட்னா மாவட்டங்கள், தமிழ்நாட்டின் உற்பத்தியில் 8.4 சதவீதம் சேலம், காஞ்சிபுரம், திருச்சிராப்பள்ளி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் விருதுநகர் மாவட்டங்களும் முக்கிய உற்பத்தியாளர்களாகும்.

17) நாட்டின் மொத்த சுண்ணாம்பு படிவுகளில் முதலிடம் வகிக்கும் மாநிலம்?

a) கர்நாடகா

b) ஒடிசா

c) மத்தியப்பிரதேசம்

d) a) மற்றும் b)

விளக்கம்: நாட்டின் மொத்த படிவுகளில் 27 சதவீதத்துடன் கர்நாடக மாநிலம் முதலிடத்திலும், ஆந்திரா மற்றும் இராஜஸ்தான் மாநிலங்கள் தலா 12 சதவீதத்துடனும், குஜராத் 10 சதவீதமும், மேகாலயா 9 சதவீதமும், தெலுங்கானா 8 சதவீதமும், சத்தீஸ்கர் மற்றும் மத்தியப்பிரதேச மாநிலங்கள் தலா 5 சதவீத சுண்ணாம்பு படிவுகளையும் கொண்டுள்ளன. மீதமுள்ள இருப்புகள் மற்ற மாநிலங்களில் காணப்படுகின்றன.

18) கால்சியம் சல்ஃபேட்டின் நீர்ம கனிமம் எது?

a) ஜிப்சம்

b) மாங்கனீசு

c) மைக்கா

d) சுண்ணக்கல்

விளக்கம்: ஜிப்சம் என்பது கால்சியம் சல்ஃபேட்டின் நீர்ம கனிமமாகும். இது சுண்ணாம்புப்பாறை, மணற்பாறை, மாக்கல் போன்ற படிவுப்பாறைகளில் ஒளிப்புகும், வெண்ணிறமான தாதுவாக காணப்படுகிறது.

19) சிமெண்ட், உரங்கள், சுவர்ப்பட்டிகள், பாரிஸ் சாந்து (plaster of paris) போன்றவற்றின் உற்பத்திற்கு மூலப்பொருளாக விளங்குவது எது?

a) ஜிப்சம்

b) மாங்கனீசு

c) மைக்கா

d) சுண்ணக்கல்

விளக்கம்: இது சிமெண்ட், உரங்கள், சுவர்ப்பட்டிகள், பாரிஸ் சாந்து (plaster of paris) போன்றவற்றின் உற்பத்திற்கு மூலப்பொருளாகவும், மண் வளமூட்டியாகவும் பயன்படுகிறது.

20) மொத்த ஜிப்சம் இருப்பில் 81% சதவீத படிவுகளைக் கொண்டு முன்னிலை வகிக்கும் மாநிலம் எது?

a) ராஜஸ்தான்

b) மத்தியப்பிரதேசம்

c) உத்திரப்பிரதேசம்

d) ஜார்க்கண்ட்

விளக்கம்: மொத்த இருப்பில் இராஜஸ்தான் மாநிலம் மட்டும் 81% சதவீத படிவுகளைக் கொண்டுள்ளது. ஜம்மூ- காஷ்மீரில் 14 சதவீதம், தமிழ்நாட்டில் 2 சதவீதம், மீதமுள்ள 3 சதவீதம் குஜராத், இமாச்சலப்பிரதேசம், கர்நாடகம், உத்ரகாண்ட், ஆந்திரப்பிரதேசம் மற்றும் மத்தியப்பிரதேச மாநிலங்களில் காணப்படுகின்றன.

21) ஜோத்பூர், பிக்காநர், ஜெய்சால்மர் ஆகிய மாவட்டங்கள் முதன்மையாக உற்பத்தி செய்யும் கனிமம் எது?

a) இரும்பு

b) காப்பர்

c) ஜிப்சம்

d) மைக்கா

விளக்கம்: இராஜஸ்தான் மாநிலம் 82 சதவீதம் ஜிப்சத்தை உற்பத்தி செய்கிறது. ஜோத்பூர், பிக்காநர், ஜெய்சால்மர் ஆகிய மாவட்டங்கள் இவற்றின் முக்கிய உற்பத்தியாளராகும். ஜம்மூ-காஷ்மீர் மாநில உற்பத்தியின் 14 சதவிதம் பாராமுல்லா, தோடா, ஊரி போன்ற மாவட்டங்கள் அதிக உற்பத்தி செய்கின்றன. குஜராத் (பவநகர், ஜாம்நகர் மாவட்டங்கள்), உத்ரகாண்ட் (டேராடூன், முசெளரி மாவட்டங்கள்), ஆந்திரப்பிரதேசம் (நெல்லூர், குண்டூர், பிரகாசம் மாவட்டங்கள்) மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் தலா 4 சதவீத உற்பத்தியை அளிக்கின்றன.

22) மின்சாரம் உற்பத்தி செய்ய பயன்படும் வளங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

a) உயிரி வளங்கள்

b) மின் வளங்கள்

c) எரிசக்தி வளங்கள்

d) b) மற்றும் c)

விளக்கம்: மின்சாரம் உற்பத்தி செய்ய பயன்படும் வளங்களை எரிசக்தி வளங்கள் என்று அழைக்கின்றோம். மின்சாரம் நம் வாழ்க்கையில் ஒரு முக்கிய அங்கம் ஆகும். தினசரி வாழ்க்கையில் நம்மால் மின்சார பயன்பாடு இன்றி இருக்க முடியாது. இது அனைத்து பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்கு மூலாதாரமாக உள்ளது. ஏற்கனவே குறிப்பிட்டுள்ளது போல் ஆற்றல் வளங்களைப் புதுப்பிக்கக்கூடிய வளம் மற்றும் புதுப்பிக்க இயலாத வளங்கள் என வகைப்படுத்தப்படுள்ளன.

23) நிலக்கரி கருப்பு தங்கம் என்றழைக்கப்பட காரணம்?

a) தொழிற்சாலை வளர்ச்சிக்கு மிக இன்றியமையாததாக இருப்பதால்

b) மின் வளம்

c) கார்பனை கொண்டுள்ளதால்

d) பெட்ரோலியத்தின் உப பொருள் என்பதால்

விளக்கம்: நிலக்கரி என்பது எளிதில் எரியக்கூடிய உயிரின படிமங்கள் கொண்ட ஒரு நீரக கனிமம் ஆகும். இது படிவுப் பாறைகளில் கிடைக்கிறது, ஒரு நாட்டின் தொழிற்சாலை வளர்ச்சிக்கு மிக இன்றியமையாததாக இருப்பதால் இது கருப்பு தங்கம் (Black gold) என அழைக்கப்படுகிறது.

24) பொருத்துக

A. ஆந்தரசைட் 1. 80 – 90 %

B. பிட்டுமனஸ் 2. 60 – 80 %

C. பழுப்பு நிலக்கரி 3. 40 – 60 %

D. மரக்கரி 4. < 40%

A B C D

a. 1 2 3 4

b. 4 3 1 2

c. 3 2 4 1

d. 2 3 1 4

விளக்கம்: கரிம அளவின் அடிப்படையில் நிலக்கரி கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்படுகிறது. ஆந்தரசைட்: 80 முதல் 90 சதவீதம். பிட்டுமினஸ்: 60 முதல் 80 சதவீதம். பழுப்பு நிலக்கரி: 40 முதல் 60 சதவீதம். மரக்கரி: 40 சதவீதத்திற்கும் குறைவு.

25) அமுக்கப்பட்ட இயற்கை எரிவாயு கீழ்க்கண்டவற்றுள் எதற்கு பதிலாக பயன்படுத்தப்படுகிறது?

a) பெட்ரோல்

b) டீசல்

c) திரவ பெட்ரோலிய எரிவாயு

d) மேற்கண்ட அனைத்தும்

விளக்கம்: இது காற்றை விட லகுவானதாகும். அதிவேகமாக பரவும் தன்மை கொண்டதால் விரைவில் மறைந்து விடுகிறது. இதனால் மற்ற எரிபொருள்களை விட ஆபத்து குறைவானதாகும். விவசாயக்கழிவுகளிலிருந்து எடுக்கப்படும் உயிரி வாயு புதுடெல்லி, அகமதாபாத், மும்பை, பூனா, கொல்கத்தா, லக்னோ, கான்பூர், வாரணாசி, போன்ற நகரங்களில் வாகனங்களுக்கு பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது.

26) இயற்கை எரிவாயு கீழ்க்கண்டவற்றுள் எதனை உள்ளடக்கியது?

ⅰ) மீத்தேன்

ⅱ) மதுக்கரியம்

ⅲ) கார்பன்- டை- ஆக்ஸைடு

ⅳ) நைட்ரஜன்

a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)

b) ⅱ), ⅲ)

c) ⅲ), ⅳ)

d) ⅰ), ⅲ)

விளக்கம்: இயற்கை எரிவாயு பொதுவாக பெட்ரோலிய பகுதிகளுடன் இணைந்து காணப்படுகிறது. இது இயற்கையாக உருவாகும் ஒரு நீர்ம கரிம வாயுவாகும்.இவற்றின் பெரும்பகுதி மீத்தேன் வாயுவும் பல்வேறு அளவுகளில் உள்ள மதுக்கரியம் (alkaline) சிறிய சதவீதத்திலான கார்பன்- டை- ஆக்ஸைடு, நைட்ரஜன் மற்றும் நைட்ரஜன் சல்பைடு கலந்த கலவைகளால் ஆனது.

27) இயற்கை எரிவாயு கீழ்க்கண்ட எந்த காரணத்தினால் உருவாகிறது?

a) அதிக வெப்பம்

b) அழுத்தம்

c) a) மற்றும் b)

d) இவற்றில் எதுவுமில்லை

விளக்கம்: இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் அழிந்து புதையுண்ட தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் அதிக வெப்பம் மற்றும் அழுத்தம் காரணமாக மக்குவதன் மூலம் உண்டாக்கூடிய ஒரு வாயு.

28) தேசிய அனல்மின் நிறுவனம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

a) 1975

b) 1985

c) 1995

d) 1965

விளக்கம்: உயிரினப்படிமங்களான நிலக்கரி, பெட்ரோலியம், டீசல் மற்றும் இயற்கை வாயு, போன்றவற்றிலிருந்து அனல்மின்சக்தி தயாரிக்கப்படுகிறது. தற்சமயம் தேசிய அனல்மின் நிலையத்தின் கீழ் 13 நிலக்கரி சார் அனல்மின் திட்டங்களும் 7 இயற்கை எரிவாயு திரவ எரிபொருள் சார்ந்த அனல் மின் திட்டங்களும் அசாம், பீகார், ஜார்கண்ட், சத்தீஸ்கர், மிசோரம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது.

29) மின்அழுத்திகள், எந்த செயல்பாட்டின் மூலம், சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றுகின்றன?

a) ஒளி விலகல்

b) ஒளி மின் விளைவு

c) ஒளி மின்னிறக்கம்

d) ஒளிகுவிப்பு

விளக்கம்: வில்லைகள் அல்லது கண்ணாடிகள் கொண்டு சிறிய ஒளிக்கற்றையாக ஒரு கலத்தின் மீது குவிக்கப்படுகிறது. மின்அழுத்திகள், ஒளிமின் விளைவு, செயல்பாட்டின் மூலம், சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றுகின்றன.

30) சூரிய வெப்ப ஆற்றல் திட்டத்தின் முக்கிய பல்நோக்கங்கள் எவை?

ⅰ) மின்விநியோகம்

ⅱ) சந்தைப்படுத்துதல்

ⅲ) அழகு நிலையங்கள்

ⅳ) தொழிற்சாலைகளுக்குத் தேவையான பல்வேறு வகையான வெப்ப ஆற்றலை வழங்குதல்

a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)

b) ⅱ), ⅲ)

c) ⅲ), ⅳ)

d) ⅰ), ⅱ), ⅳ)

விளக்கம்: மின்விநியோகம், சந்தைப்படுத்துதல், வீடுகள், நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்குத் தேவையான பல்வேறு வகையான வெப்ப ஆற்றலை வழங்குதல் போன்றவை சூரிய வெப்ப ஆற்றல் திட்டத்தின் முக்கிய பல்நோக்கங்கள்ஆகும். இதனை மரபுசாரா எரிசக்தி வள அமைச்சகம் (MNES) செயல்படுத்திவருகிறது.

31) கீழ்க்கண்ட எந்த மாநிலங்களில் அதிக அளவு மின்சாரம் சூரிய ஒளியிலிருந்து உற்பத்தி செய்யப்படுகின்றன?

ⅰ) ஆந்திரப்பிரதேசம்,

ⅱ) குஜராத்

ⅲ) இராஜஸ்தான்

ⅳ) மகாராஷ்டிரம்

a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)

b) ⅱ), ⅲ)

c) ⅲ), ⅳ)

d) ⅰ), ⅱ), ⅲ)

விளக்கம்: சூரியஆற்றலானது, நீர் கொதிகலன்கள், குளிர்ச் சாதனப்பெட்டிகள், உலர்ப்பான்கள், தெருவிளக்குகள், சமையல், நீரேற்றுதல், மின்சார உற்பத்தி, மின்அழுத்திகள், அழகு நிலையங்கள் போன்றவற்றிற்கு சூரிய சக்தி பயன்படுகிறது. ஆந்திரப்பிரதேசம், குஜராத், இராஜஸ்தான், மகாராஷ்டிரம், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிக அளவு மின்சாரம் சூரிய ஒளியிலிருந்து உற்பத்தி செய்யப்படுகின்றன.

32) இந்திய சூரிய சக்தி நிறுவனத்தின் தலைமை இடம் எங்கு அமைந்துள்ளது?

a) பூனே

b) கொச்சி

c) சென்னை

d) டெல்லி

விளக்கம்:

33) நீர் ஏற்றுவதற்கும், கப்பல்களை இயக்குவதற்கும் பயன்படுத்தப்படும் மின்சாரம் எது?

a) சூரிய சக்தி

b) காற்று சக்தி

c) அனல் மின் சக்தி

d) புனல் மின் சக்தி

விளக்கம்: காற்று வீச்சினால் அல்லது உந்துதலால் ஏற்படும் ஆற்றலை காற்று விசைச்சுற்று கலன்களின் உதவியோடு மின்னாற்றலாக மாற்றப்பட்டு காற்றாலை மின்சாரம் பெறப்படுகிறது. இது ஒரு மலிவான மற்றும் புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் வளமாகும். காற்றாலை மின்சாரமானது நீர் ஏற்றுவதற்கும், கப்பல்களை இயக்குவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

34) ⅰ) மிக அதிகமாக கிடைக்ககூடிய, புதுப்பிக்கத்தக்க, அனைத்துப் பகுதிகளிலும் பரவி இருக்கின்றன.

ⅱ) நிறுவுவதற்கு குறைவான இடமே போதுமானது.

மேற்கண்ட கூற்றுகளுடன் தொடர்புடைய மின்சாரம் எது?

a) சூரிய சக்தி

b) காற்று சக்தி

c) அனல் மின் சக்தி

d) புனல் மின் சக்தி

விளக்கம்: காற்று சக்தியானது மிக அதிகமாக கிடைக்ககூடிய, புதுப்பிக்கத்தக்க, அனைத்துப் பகுதிகளிலும் பரவி இருக்கின்றன, சுத்தமான, மாசற்ற புவிமண்டலத்தை வெப்பமயமாக்கும் வாயுக்களை வெளிப்படுத்தாத ஒரு வளமாகும். காற்றாலை நிறுவுவதற்கு குறைவான இடமே போதுமானது.

35) இந்தியாவிலேயே அதிக அளவு காற்றாலைகளைக் கொண்டுள்ள மாநிலமாக விளங்குவது எது?

a) ராஜஸ்தான்

b) குஜராத்

c) தமிழ்நாடு

d) கர்நாடகா

விளக்கம்: இந்தியாவிலேயே அதிக அளவு காற்றாலைகளைக் கொண்டுள்ள மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முப்பந்தல் -பெருங்குடிப்பகுதி உலகிலேயே ஒரு பகுதியில் அதிக காற்றாலைகளைக் கொண்ட பெரிய காற்றாலை பண்ணை ஆகும்.

36) இந்தியாவில் காற்றாலை மின் உற்பத்தி 1986 ஆம் ஆண்டு முதன் முதலில் எங்கு தொடங்கப்பட்டது?

ⅰ) தமிழ்நாடு

ⅱ) மகாராஷ்டிரா

ⅲ) குஜராத்

ⅳ) ராஜஸ்தான்

a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)

b) ⅱ), ⅲ)

c) ⅲ), ⅳ)

d) ⅰ), ⅱ), ⅲ)

விளக்கம்: இந்தியாவில் காற்றாலை மின் உற்பத்தி 1986 ஆம் ஆண்டு முதன் முதலில் குஜராத்தில் உள்ள கடற்கரைப் பகுதியான ஓகா, மகாராஷ்டிரா கடற்கரைப் பகுதியான இரத்தினகிரி, தமிழ்நாட்டிலுள்ள கடற்கரைப் பகுதியான தூத்துக்குடியில் 55 கிலோவாட் உற்பத்தி திறனுடன் நிறுவப்பட்ட காற்றாலைகள் மூலம் வளர்ச்சியடைய ஆரம்பித்தது.

37) இந்தியா உலக அளவில் அதிக காற்றாலைத் திறன் கொண்ட நாடுகளில் எத்தனையாவது இடத்தில் உள்ளது?

a) மூன்றாவது

b) நான்காவது

c) இரண்டாவது

d) ஐந்தாவது

விளக்கம்: கடந்த சில வருடங்களாக காற்றாலை மின் உற்பத்தி திறன் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. இந்தியா உலக அளவில் அதிக காற்றாலைத் திறன் கொண்ட நாடுகளில் நான்காவது இடத்தில் உள்ளது.

38) போதுமான காற்றோட்ட வசதி அற்ற இடங்களில் வேலை செய்யும் பஞ்சாலை தொழிலாளர்களுக்கு ஏற்படும் நோய் எது?

a) சிவப்பு நுரையீரல் நோய்

b) பழுப்பு நுரையீரல் நோய்

c) கருப்பு நுரையீரல் நோய்

d) வெண்நிற நுரையீரல் நோய்

விளக்கம்: போதுமான காற்றோட்ட வசதி அற்ற இடங்களில் வேலை செய்யும் பஞ்சாலை தொழிலாளர்கள் பஞ்சு நுண்துகள்களால் பைசின்னோசிஸ் எனப்படும் பழுப்புநுரையீரல் நோயினால் (Monday fever) பாதிக்கப்படுகின்றனர்

39) இந்தியா பருத்தி உற்பத்தியில் உலகின் எத்தனையாவது பெரிய நாடாகும்?

a) மூன்றாவது

b) நான்காவது

c) இரண்டாவது

d) ஐந்தாவது

விளக்கம்: தற்போது இந்தியா பருத்தி உற்பத்தியில் உலகின் மூன்றாவது பெரிய நாடாகவும் தறிகளையும் நூற்பு கருவிகளின் எண்ணிக்கையில் முதன்மையான நாடாகவும் உள்ளது.

40) கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது?

ⅰ) தற்போது பருத்தி நெசவாலைகள் இந்தியாவின் மிக பெரிய நவீன தொழிலக பிரிவாக உள்ளது.

ⅱ) தொழிலக மூலதனத்தில் 16 சதவிகிதத்தினை கொண்டது.

ⅲ) இத்துறை 20 சதவிகித தொழிலாளலர்களை இத்தொழிலகங்களில் பணியமர்த்தியுள்ளது.

ⅳ) தொழிலக உற்பத்தியில் 14 சதவிகிதத்தை கொண்டது.

a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)

b) ⅱ), ⅲ)

c) ⅲ), ⅳ)

d) ⅰ), ⅱ), ⅲ)

விளக்கம்: தற்போது பருத்தி நெசவாலைகள் இந்தியாவின் மிக பெரிய நவீன தொழிலக பிரிவாக உள்ளது. தொழிலக மூலதனத்தில் 16 சதவிகிதத்தினையும், தொழிலக உற்பத்தியில் 14 சதவிகிதத்தையும் கொண்ட இத்துறை 20 சதவிகித தொழிலாளலர்களை இத்தொழிலகங்களில் பணியமர்த்தியுள்ளது.

41) ஜின்னிங் முறை கீழ்க்கண்டவற்றுள் எதனோடு தொடர்புடையது

a) பருத்தி

b) கரும்பு

c) கம்பளி

d) சணல்

விளக்கம்: பருத்தி இழையிலிருந்து, விதைகளை பிரித்தெடுக்கும் முறைக்கு ஜின்னிங் என்று பெயர்.

42) மும்பையில் அதிக அளவு பருத்தி நெசவாலைகள் இருப்பதற்கு காரணங்கள் எவை?

ⅰ) கரிசல் மண், சந்தை வசதி, சிறந்த போக்குவரத்து வசதி

ⅱ) ஈரப்பத காலநிலை

ⅲ) மும்பைத் துறைமுகம்

ⅳ) எளிதில் கிடைக்கும் நீர்மின்சக்தி

a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)

b) ⅱ), ⅲ)

c) ⅲ), ⅳ)

d) ⅰ), ⅱ), ⅲ)

விளக்கம்: மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதியில் பருத்தியாலைகள் செரிந்து காணப்படுவதால் மும்பை, இந்தியாவின் “மான்செஸ்டர்” என்று அழைக்கப்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் காணப்படும் கரிசல் மண், ஈரப்பத காலநிலை, மும்பைத் துறைமுகம், எளிதில் கிடைக்கும் நீர்மின்சக்தி, சந்தை வசதி, சிறந்த போக்குவரத்து வசதி ஆகியன மும்பையில் அதிக அளவு பருத்தி நெசவாலைகள் இருப்பதற்கு காரணங்களாக அமைகிறது.

43) கோயம்புத்தூர் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுவதற்கான காரணம்?

a) அதிக எண்ணிக்கையிலான பருத்தி நெசவாலைகள்

b) தரமான துணிகள்

c) தொழிலாளர்கள் அதிகம்

d) பருத்தி அதிகம் விளைவதால்

விளக்கம்: மகாராஷ்டிரம், குஜராத், மேற்கு வங்கம், உத்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பருத்தி நெசவாலைகள் செறிந்து காணப்படுகின்றது. தமிழ்நாட்டில் உள்ள கோயம்புத்தூரில் அதிக எண்ணிக்கையிலான பருத்தி நெசவாலைகள் உள்ளன. இதனால் கோயம்புத்தூர் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகிறது.

44) தமிழ்நாட்டில் உள்ள மொத்த நெசவாலைகளின் எண்ணிக்கை?

a) 435

b) 460

c) 200

d) 345

விளக்கம்: தமிழ்நாட்டில் உள்ள 435 நெசவாலைகளில் 200 நெசவாலைகள் கோயம்புத்தூர் பகுதியில் அமைந்துள்ளன. ஈரோடு, திருப்பூர், கரூர், சென்னை, திருநெல்வேலி, மதுரை, தூத்துக்குடி, சேலம் மற்றும் விருதுநகர் ஆகியன மாநிலத்தின் பிற முக்கிய நெசவாலை நகரங்களாகும்.

45) குறைவான விலையில் கிடைக்ககூடிய இழைநார் எது?

a) சணல்

b) பருத்தி

c) ரோமம்

d) பட்டு

விளக்கம்: சணல் என்பது குறைவான விலையில் கிடைக்ககூடிய இழைநார். இது சிப்பங்கள் மற்றும் சாக்கு பைகள் தயாரிக்க பயன்படுகிறது.

46) உலக மொத்த சணல் பொருட்கள் உற்பத்தியில் இந்தியா மட்டும் எத்தனை சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ளது?

a) 25%

b) 35%

c) 45%

d) 12%

விளக்கம்: தற்காலத்தில் சணலானது பருத்தி மற்றும் ரோமத்துடன் சேர்த்து நெசவு செய்யப்படுகிறது. சணல் பொருட்கள் உலக மொத்த உற்பத்தியில் இந்தியா மட்டும் 35% பங்களிப்பைக் கொண்டுள்ளது.

47) இந்தியாவின் இரண்டாவது பெரிய நெசவாலைத் துறை எது?

a) சணல்

b) பருத்தி

c) வைக்கோல்

d) பட்டு

விளக்கம்: பருத்தி நெசவாலைகளுக்கு அடுத்தாற்போல் சணல் ஆலைகள் இந்தியாவின் இரண்டாவது பெரிய நெசவாலைத் துறையாக உள்ளது.

48) சணல் தங்க இழைப்பயிர் என்றழைக்கப்பட காரணம்?

ⅰ) புதுபிக்கக் கூடியது

ⅱ) எளிதில் மக்கக்கூடியது

ⅲ) சுற்றுச்சூழலுக்கு உகந்தது

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅱ), ⅲ)

c) ⅲ)மட்டும்

d) ⅰ), ⅱ)

விளக்கம்: இயற்கையான சணல் என்பது புதுபிக்கக் கூடிய எளிதில் மக்கக்கூடிய, சுற்றுச்சூழலுக்கும் உகந்ததாகவும் உள்ளதால் இது தங்க இழைப்பயிர் என்றும் அழைக்கப்படுகிறது.

49) தேசிய சணல் வாரியத்தின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?

a) டெல்லி

b) கொல்கத்தா

c) மும்பை

d) சென்னை

விளக்கம்: தேசிய சணல் வா ரி ய த் தி ன் த லைமை ய க ம் கொல்கொத்தாவி ல் அமைந்துள்ளது.

50) இந்தியாவின் முதல் சணல் ஆலை எங்கு தொடங்கப்பட்டது?

a) லெபாக்ஷி

b) ரிஷ்ரா

c) தன்ஷ்வானே

d) செராம்பூர்

விளக்கம்: இந்தியாவின் முதல் சணல் ஆலை, ஆங்கிலேயேரான ஜார்ஜ் ஆக்லாண்டு என்வரால் 1854 ஆம் ஆண்டு கொல்கத்தாவிற்கு அருகில் உள்ள ரிஷ்ரா என்னுமிடத்தில் தொடங்கப்பட்டது.

51) சணல் உற்பத்தியில் இந்தியாவுக்கு அடுத்து காணப்படும் நாடு எது?

a) நேபாளம்

b) பூட்டான்

c) வங்க தேசம்

d) மியான்மர்

விளக்கம்: இந்தியா சணல் உற்பத்தியில் முதலிடத்திலும், சணல் பொருட்கள் உற்பத்தியில் வங்கதேசத்திற்கு அடுத்தாதாக இரண்டாமிடத்திலும் உள்ளது.

52) கீழ்க்கண்டவற்றுள் தமிழ்நாட்டில் அனல்மின் நிலையம் அமைந்துள்ள இடங்கள்?

ⅰ) மேட்டூர்

ⅱ) தூத்துக்குடி

ⅲ) நெய்வேலி

ⅳ) எண்ணூர்

a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)

b) ⅱ), ⅲ)

c) ⅲ), ⅳ)

d) ⅰ), ⅱ), ⅲ)

விளக்கம்: இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் அனல்மின் சக்தியில் தமிழ்நாடு 5% உற்பத்தி செய்கிறது.

53) இந்தியாவின் முதல் காகிதத் தொழிற்சாலை எங்கு தொடங்கப்பட்டது?

a) லெபாக்ஷி

b) ரிஷ்ரா

c) தன்ஷ்வானே

d) செராம்பூர்

விளக்கம்: இந்தியாவின் முதல் காகிதத் தொழிற்சாலை 1812 ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் உள்ள செராம்பூர் என்னுமிடத்தில் தொடங்கப்பட்டது.

54) உயர்தர அச்சி தாள்கள் மற்றும் செய்தித்தாள் உற்பத்திக்கு மூலப் பொருட்களாக பயன்படுவது எது?

a) செம்மரம்

b) மென்மரம்

c) கடின மரம்

d) கரும்பு

விளக்கம்: உயர்தர அச்சி தாள்கள் மற்றும் செய்தித்தாள் உற்பத்திக்கு மென் மரங்கள் மூலப் பொருட்களாக பயன்படுகின்றன.காகித பயன்கள் கல்வி மற்றும் கல்வி சார்ந்த பயன்பாட்டிற்கும் சமுதாயத்தின் ஒட்டுமொத்த நல வாழ்வினை அளவிடும் கருவியாக உள்ளது.

55) ராயல் பெங்கால் காகிதத் தொழிற்சாலை நிறுவப்பட்ட இடம்

a) லெபாக்ஷி

b) ரிஷ்ரா

c) தன்ஷ்வானே

d) பாலிகஞ்ச்

விளக்கம்: முதன் முதலில் இந்தியாவில் ராயல் பெங்கால் காகிதத் தொழிற்சாலை கொல்கத்தாவிற்கு அருகில் உள்ள பாலிகஞ்ச் என்னும் இடத்தில் 1867 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

56) பொருத்துக

A. லக்னோ 1. 1879

B. திட்டகார் 2. 1882

C. பூனா 3. 1887

D. ராணிகஞ்ச் 4.1892

A B C D

a. 1 2 3 4

b. 4 3 1 2

c. 3 2 4 1

d. 2 3 1 4

விளக்கம்: அடுத்ததாக 1879 ஆம் ஆண்டு லக்னோவிலும், 1882 ஆம் ஆண்டு திட்டகாரிலும், 1887ஆம் ஆண்டு பூனாவிலும், 1892 ஆம் ஆண்டு ராணிகஞ்சிலும், 1892 ஆம் ஆண்டில் கன்கின்றாவிலும்,1918 ஆம் ஆண்டு நைகாத்திலும் காகிதத் தொழிற்சாலைகள் நிறுவப்பட்டன.

57) கீழ்க்கண்டவற்றுள் காகிதத் தொழிற்சாலைக்கு தேவையான மூலப்பொருட்கள் எவை?

ⅰ) மரக்கூழ் மற்றும் உபயோகப்படுத்தப்பட்ட காகிதங்கள்

ⅱ) மூங்கில்

ⅲ) சலாய் மற்றும் சவாய் புற்கள்

ⅳ) கரும்பு சக்கை

a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)

b) ⅱ), ⅲ)

c) ⅲ), ⅳ)

d) ⅰ), ⅱ), ⅲ)

விளக்கம்: மரக்கூழ், மூங்கில், சலாய் மற்றும் சவாய் புற்கள், உபயோகப்படுத்தப்பட்ட காகிதங்கள், கரும்பு சக்கை போன்றவை காகிதத் தொழிற்சாலைக்கு தேவையான மூலப்பொருட்களாகும்.

58) இந்தியாவில் காகித உற்பத்தி செய்யும் முக்கிய மாநிலம் எது?

a) தமிழ்நாடு

b) மேற்கு வங்காளம்

c) மத்திய பிரதேசம்

d) மகாராஷ்ட்ரா

விளக்கம்: மேற்கு வங்காளம் இந்தியாவில் காகித உற்பத்தி செய்யும் முக்கிய மாநிலமாகும். மத்திய பிரதேசம், ஒரிசா, தமிழ்நாடு போன்றவை காகித உற்பத்தியில் குறிப்பிடத்தக்க மாநிலங்களாகும்.

59) தேசிய செய்திகள் மற்றும் காகித ஆலைகள் எங்கு அமைந்துள்ளது?

a) தமிழ்நாடு

b) மேற்கு வங்காளம்

c) மத்திய பிரதேசம்

d) மகாராஷ்ட்ரா

விளக்கம்: தேசிய செய்திகள் மற்றும் காகித ஆலைகள் (NEPA) மத்திய பிரதேச மாநில பர்கான்பூர் மாவட்டத்தில் உள்ள நேபாநகர் என்னும் இடத்தில் அமைந்துள்ளது.

60) அடிப்படையான உலோக தொழிற்சாலை என அழைக்கப்படுவது எது?

a) அலுமினிய தொழிற்சாலை

b) தாமிர தொழிற்சாலை

c) இரும்பு எஃகு தொழிற்சாலைகள்

d) இவை அனைத்தும்

விளக்கம்: இரும்பு எஃகு தொழிற்சாலைகள் இதன் உற்பத்தி பொருள்களை மற்ற தொழிலகங்களுக்கு தேவையான மூலப்பொருளை அளிப்பதனால் அடிப்படையான உலோக தொழிற்சாலை என அழைக்கப்படுகிறது.

61) ஒரு நாட்டின் தொழில் வளர்ச்சி எந்த உலோக உற்பத்தியின் அளவைக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது?

a) அலுமினியம்

b) தாமிரம்

c) இரும்பு மற்றும் எஃகு

d) இவை அனைத்தும்

விளக்கம்: பொறியியல், கனரக இயந்திரங்கள், எந்திரக் கருவிகள், வாகனங்கள், ரயில் இன்ஜின்கள் மற்றும் ரயில்வே உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இரும்பை மூலப் பொருள்களாகப் பயன்படுத்துகின்றன. ஒரு நாட்டின் தொழில் வளர்ச்சி இரும்பு எஃகு உற்பத்தியின் அளவைக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது.

62) டாட்டா இரும்பு எஃகு தொழிற்சாலை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

a) 1909

b) 1906

c) 1907

d) 1908

விளக்கம்: டாட்டா இரும்பு எஃகு தொழிற்சாலை, 1907 ஆம் ஆண்டு ”சாக்சி” என்றழைக்கப்பட்ட ஜாம்ஷெட்பூரில் தொடங்கப்பட்ட முதல் நவீன தொழிற்சாலையாகும்.

63) டாட்டா இரும்பு எஃகு தொழிற்சாலைக்கு தேவையான தாது படிவுகள் எவை?

ⅰ) டோலமைட்

ⅱ) மாங்கனீஷ்

ⅲ) சிலிகான்

ⅳ) பாக்சைட்

a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)

b) ⅱ), ⅲ)

c) ⅲ), ⅳ)

d) ⅰ), ⅱ), ⅲ)

விளக்கம்: ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ஒடிசா, ஆகிய மாநிலங்களில் செறிந்து காணப்படுகின்றன. ஜாரியா ராணிகஞ்ச், பொகாரோ, கரன்புரா ஆகிய நிலக்கரி வயல்களும் மற்றும் மயூர்பஞ்ச், இயோன்ஜர் மற்றும் புரேனா ஆகிய இரும்பு தாது சுரங்கங்களும் ஒன்றுக்கொன்று அருகாமையில் அமைந்திருப்பது இதன் காரணமாகும். இத்தொழிற்சாலைக்குத் தேவையான டோலமைட், மாங்கனீஷ் மற்றும் சிலிகான் போன்ற தாது படிவுகள் போதுமான அளவில் கிடைக்கின்றன.

64) இரும்பு மற்றும் எஃகு உற்பத்தி தொழிற்சாலை முதன் முதலில் தமிழ்நாட்டில் எங்கு அமைக்க பட்டது?

a) போர்டோ நாவோ

b) சென்னை

c) சேலம்

d) விழுப்புரம்

விளக்கம்: இரும்பு மற்றும் எஃகு உற்பத்தி தொழிற்சாலை முதன் முதலில் 1830 ல் தமிழ்நாட்டில் போர்டோ நாவோவில் அமைக்க பட்டது.

65) இந்தியாவின் முதல் வாகனத் தொழிலகம் எந்த ஆண்டு மும்பையில் தொடங்கப்பட்டது?

a) 1947

b) 1948

c) 1952

d) 1944

விளக்கம்: இந்தியா, உள்நாட்டு வாகன சந்தையின் தேவையை பூர்த்தி செய்வதோடு மட்டுமல்லாமல் உலகளாவிய வாகனச் சந்தையிலும் ஒரு முக்கிய பங்காற்றும் வகையில் வாகன உற்பத்தியில் முன்னேறி வருகிறது. இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் தொழிலகங்களில் இதுவும் ஒன்றாகும். இந்தியாவின் முதல் வாகனத் தொழிலகம் மும்பைக்கு அருகில் உள்ள குர்லா என்னும் இடத்தில் 1947 ல் பிரீமியர் வாகன நிறுவனம் என்ற பெயரில் தொடங்கப்பட்டது.

66) 1948 ஆம் ஆண்டு இந்துஸ்தான் மோட்டார் நிறுவனம் எங்கு தொடங்கப்பட்டது?

a) போர்டோ நாவோ

b) உத்தர்பாரா

c) செராம்பூர்

d) லெபாக்ஷி

விளக்கம்: 1948 கொல்கத்தாவிற்கு அருகில் உள்ள உத்தர்பாரா என்னும் இடத்தில் இந்துஸ்தான் மோட்டார் நிறுவனம் தொடங்கப்பட்டது.

67) தற்போது இந்தியா வாகன உற்பத்தியில் எத்தனையாவது பெரிய நாடாக விளங்குகிறது?

a) ஏழாவது

b) எட்டாவது

c) ஐந்தாவது

d) நான்காவது

விளக்கம்: தற்போது இந்தியா வாகன உற்பத்தியில் ஏழாவது பெரிய நாடாக விளங்குகிறது. இந்துஸ்தான் மோட்டார் நிறுவனமானது இரு சசக்கர வாகனங்கள், மகிழுந்துகள், ஜீப், மூன்று சக்கர வாகனங்கள் வர்த்தக ரீதியிலான வாகனங்கள் போன்றவற்றை உற்பத்தி செய்கிறது.

68) சென்னை ஆசியாவின் டெட்ரோய்ட் என்று அழைக்கப்பட காரணம்?

a) அதிக தொழிற்சாலைகள் காணப்படுவதால்

b) வேலை வாய்ப்பு அதிகம்

c) உற்பத்தி காரணிகள் அதிகம்

d) வாகனத் தொழிற்சாலைகள்

விளக்கம்: பிரதான வாகனத் தொழிற்சாலைகளும் அதனை சார்ந்த தொழிற்சாலைகளும் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் இருப்பதால் சென்னை ஆசியாவின் டெட்ரோய்ட் என்று அழைக்கப்படுகிறது.

69) 2004 இல் தொடங்கப்பட்ட இந்தியாவில் உற்பத்தி செய்யும் திட்டத்தின் முக்கிய நோக்கம் எது?

a) அதிக தொழிற்சாலைகள் உருவாக்குதல்

b) வேலை வாய்ப்பு அளித்தல்

c) உற்பத்தி காரணிகலாய் பெருக்குதல்

d) இந்தியாவை ஒரு சிறந்த தொழிலக உற்பத்தி மையமாக்குதல்

விளக்கம்: இந்தியாவில் உற்பத்தி செய்யும் திட்டம் (Make in india programme) 2004 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் முக்கிய நோக்கம் உலக வரைப்படத்தில் இந்தியாவை ஒரு சிறந்த தொழிலக உற்பத்தி மையமாக காண்பிப்பதாகும்.

70) மக்கள் பயணிக்கும் பெரிய கார்களை தயாரிக்கும் இந்திய நிறுவனங்கள் எவை?

ⅰ) மாருதி சுசுகி

ⅱ) மஹிந்திரா & மகேந்திரா

ⅲ) இந்துஸ்தான் மோட்டார்ஸ்

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅱ), ⅲ)

c) ⅲ)

d) ⅰ), ⅱ)

விளக்கம்: மோட்டார்ஸ், மாருதி சுசுகி, மஹிந்திரா & மகேந்திரா இந்துஸ்தான் மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்கள் மக்கள் பயணிக்கும் பெரிய கார்களை தயாரிக்கும் இந்திய நிறுவனங்களாகும்.

71) கீழ்க்கண்டவற்றுள் இந்தியாவில் நிறுவப்பட்டுள்ள பன்னாட்டு நிறுவனங்கள் எவை?

ⅰ) மெர்சிடிஸ்

ⅱ) பென்ஸ்

ⅲ) ஃபியட் ஜெனரல் மோட்டார்ஸ்

ⅳ) டொயோட்டா

a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)

b) ⅱ), ⅲ)

c) ⅲ), ⅳ)

d) ⅰ), ⅱ), ⅲ)

விளக்கம்: இந்தியாவில் நிறுவப்பட்டுள்ள பன்னாட்டு நிறுவனங்களான மெர்சிடிஸ், பென்ஸ், ஃபியட் ஜெனரல் மோட்டார்ஸ், டொயோட்டா மற்றும் சமீபத்தில் இந்தியாவில் நுழைந்துள்ள பிஎம்டபிள்யூ. ஆடி, வோக்ஸ்வேகன்,வால்வோ ஆகியன இந்திய வாகன தயாரிப்பு மேலும் சிறப்புற செய்துள்ளது.

72) வர்த்தக ரீதியிலான வாகனங்களை உற்பத்தி செய்யம் இந்திய நிறுவனங்கள் எவை?

ⅰ) டாடா மோட்டார்ஸ்

ⅱ) அசோக் லைலேண்ட்

ⅲ) இஷர் மோட்டார்ஸ்

ⅳ) மஹிந்திரா & மஹிந்திரா

a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)

b) ⅱ), ⅲ)

c) ⅲ), ⅳ)

d) ⅰ), ⅱ), ⅲ)

விளக்கம்: டாடா மோட்டார்ஸ், அசோக் லைலேண்ட்,இஷர் மோட்டார்ஸ், மஹிந்திரா & மஹிந்திரா மற்றும் ஃபோர்டு மோட்டார்ஸ் ஆகிய இந்திய நிறுவனங்கள் வர்த்தக ரீதியிலான வாகனங்களை உற்பத்தி செய்கின்றன.

73) வர்த்தக ரீதியிலான வாகனங்களை உற்பத்தி செய்யம் பன்னாட்டு நிறுவனங்கள் எவை?

ⅰ) MAN

ⅱ) ITEC

ⅲ) மெஸ்சிடர்ஸ்-பென்ஸ்

ⅳ) ஸ்கேனியா மற்றும் ஹூண்டாய்

a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)

b) ⅱ), ⅲ)

c) ⅲ), ⅳ)

d) ⅰ), ⅱ), ⅲ)

விளக்கம்: MAN, ITEC, மெஸ்சிடர்ஸ்-பென்ஸ், ஸ்கேனியா மற்றும் ஹூண்டாய் போன்ற பன்னாட்டு நிறுவனங்களும் வர்த்தக ரீதியிலான வாகனங்களை உற்பத்தி செய்கின்றன. இரு சக்கர வாகனங்கள் உற்பத்தியில் இந்திய நிறுவனங்களான ஹீரோ, பஜாஜ் ஆட்டோ மற்றும் டிவிஎஸ் நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன.

74) இந்தியாவில் வாகனத் தொழிலகங்கள்எத்தனை திரள்களாக காணப்படுகின்றன?

a) நான்கு

b) ஐந்து

c) ஆறு

d) மூன்று

விளக்கம்: இந்தியாவில் வாகனத் தொழிலகங்கள் நான்கு திரள்களாக காணப்படுகின்றன. அவை வட இந்தியாவில் டெல்லி குர்கான் மற்றும் மனேசர், மேற்கு இந்தியாவில் போனா, நாசிக், ஹலோல் மற்றும் ஓளரங்காபாத், தென்னிந்தியாவில் சென்னை, பெங்களூரு மற்றும் ஓசூர், கிழக்கு இந்தியாவில் ஜம்ஷெட்பூர் மற்றும் கொல்கத்தாவாகும்.

75) மின்சார உற்பத்திக்கு தேவையான உபகரணங்கள், மின்மாற்றிகள் போன்றவற்றை உற்பத்தி செய்யும் தொழிலகம் எது?

a) மின் தொழிலகம்

b) கனரக மின்னியல்

c) ஏரி மின்நிலையங்கள்

d) இவை அனைத்தும்

விளக்கம்: கனரக மின்னியல், தொழிலகங்களானது, மின்சார உற்பத்திக்கு தேவையான உபகரணங்கள், மின்மாற்றிகள், நீராவி கொதிகலன்கள், நீர்மின் சக்தி தொழிலகங்களுக்கு தேவைப்படும் விசைகடத்திகள், அனல் மின் உற்பத்தி தொழிலகங்களுக்கு தேவையான கொதி கலன்கள்,ஜெனரேட்டர்கள், மின்மாற்றிகள் ஸ்விட்ச்கியர்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்கின்றன.

76) பாரத கனரக மின்சாதன (BHEL) நிறுவனத்தின் கிளைகள் அமைந்துள்ள இடங்கள்?

a) ஹரிதுவார்

b) போபால்

c) ஐதராபாத்

d) இவை அனைத்தும்

விளக்கம்:இந்தியாவில் கனரக மின்சாதன தொழிலகங்களில் மிக முக்கியமானது பாரத கனரக மின்சாதன (BHEL) நிறுவனமாகும். இந்நிறுவனம் ஹரிதுவார், போபால் , ஐதராபாத், ஜம்மு, பெங்களூரு, ஜான்சி மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் கிளைகளைக் கொ ண்டுள்ளது.

77) பாரத கனரக மின்சாதன (BHEL) நிறுவனம் கீழ்க்கண்டவற்றுள் எந்த துறை சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்ய பயன்படுகிறது?

ⅰ) தொலைக்காட்சிப் பெட்டிகள்

ⅱ) வானொலிப் பெட்டிகள்

ⅲ) தொலைபேசி இணைப்பகங்கள்

ⅳ) ரயில்வே பாதுகாப்பு

ⅴ) செல்லுலார் தந்தி

ⅵ) கணினிகள் மற்றும் அஞ்சல்

a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ), ⅴ), ⅵ)

b) ⅱ), ⅲ), ⅳ), ⅴ)

c) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)

d) ⅰ), ⅱ), ⅲ)

விளக்கம்: இந்நிறுவனமானது தொலைக்காட்சிப் பெட்டிகள், வானொலிப் பெட்டிகள், தொலைபேசி இணைப்பகங்கள், வானொலிப்பெட்டிகள், செல்லுலார் தந்தி, கணினிகள் மற்றும் அஞ்சல், ரயில்வே பாதுகாப்பு, வானிலையியல் போன்ற துறைகளுக்கு தேவையான பல்வேறு சாதனங்களை உற்பத்திச் செய்கிறது.

78) ”இந்தியாவின் மின்னியல் தலைநகரம்” என்று அழைக்கப்படும் நகரம் எது?

a) ஹைதராபாத்

b) பெங்களூரு

c) ஜெய்ப்பூர்

d) சென்னை

விளக்கம்: இந்தியாவில் அதிக மின்னணு சாதனங்களை உற்பத்தி செய்யும் நகரம் பெங்களூருவாகும். எனவே பெங்களூரு ”இந்தியாவின் மின்னியல் தலைநகரம்” என்று அழைக்கப்படுகிறது. ஹைதராபாத், புதுதில்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, கான்பூர், பூனா, லக்னோ, ஜெய்ப்பூர் மற்றும் கோயம்புத்தூர் இதர முக்கிய மின்னியல் உற்பத்தி மையங்களாகும்.

79) இந்திய மென்பொருள் தொழிலகங்களானது எத்துறை சார்ந்த தீர்வுகள் அளிப்பதில் உலக பிரசித்தி பெற்றவைகளாக உள்ளன?

a) தகவல் தொழில்நுட்பம்

b) வணிகம்

c) a) மற்றும் b)

d) விவசாயம்

விளக்கம்: இந்தியா உலகில் உள்ள மிகச்சிறந்த சில மென்பொருள் நிறுவனங்களின் தாயகமாக உள்ளது. இந்திய மென்பொருள் தொழிலகங்களானது தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிகம் சார்ந்த தீர்வுகள் அளிப்பதில் உலக பிரசித்தி பெற்றவைகளாக உள்ளன.இந்திய பொருளாதார வளர்ச்சியில் ஒரு மிகப்பெரிய வெற்றியை இந்திய மென்பொருள் தொழிலகங்கள் அடைந்துள்ளன.

80) இந்தியாவின் முதல் மென்பொருள் தொழிலகம் எது?

a) டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்

b) எல் & டி

c) இன்போடெக்

d) காக்னிசன்ட்

விளக்கம்: டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் இந்தியாவின் முதல் மென்பொருள் தொழிலகம் ஆகும். இது 1970 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.இத்துடன் எல் & டி, இன்போடெக், ஜ – பிளக்ஸ், அசெஞர், காக்னிசன்ட், கேலக்ஸி சொல்யுசன்ஸ், இந்தியா பிரைவேட் லிமிடெட், ஜ டி சி, இன்போடெக் போன்றவைகளும் இந்தியாவின் முக்கியமான மென்பொருள் தொழிலகங்களாகும்.

81) இந்தியா முழுவதும் எத்தனைக்கும் மேற்பட்ட மென்பொருள் தொழிலகங்கள் உள்ளன?

a) 500

b) 400

c) 300

d) 600

விளக்கம்: தற்சமயம், இந்தியா முழுவதும் 500 க்கும் மேற்பட்ட மென்பொருள் தொழிலகங்கள் உள்ளன. இந்நிறுவனங்கள் உலகின் சுமார் 95 நாடுகளுக்கு மென்பொருள் ஏற்றுமதி சேவையை செய்கிறது. சென்னை, கோயம்புத்தூர், திருவனந்தபுரம், பெங்களூரு, மைசூரு, ஹைதராபாத், விசாகப்பட்டினம், மும்பை, பூனா, இந்தூர், காந்திநகர், ஜெய்ப்பூர், நொய்டா, மொகாலி மற்றும் ஸ்ரீநகர் இந்தியாவின் முக்கிய மென்பொருள் மையங்களாகும்.

82) கீழ்க்கண்டவற்றுள் இந்தியத் தொழிலகங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் எவை?

a) மின் பற்றாக்குறையும் சீரற்ற மின் வினியோகம் „

b) தொழிலகங்கள் நிறுவுவதற்கு ஏற்ற பரந்த நிலப்பரப்பு இல்லாமை

c) கடன் பெறுவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள்

d) இவை அனைத்தும்

விளக்கம்: இந்தியத் தொழிலகங்கள் பல சவால்களை எதிர்கொண்டுள்ளன. அவற்றில் சில முக்கிய பிரச்சினைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. „ மின் பற்றாக்குறையும் சீரற்ற மின் வினியோகம் „ தொழிலகங்கள் நிறுவுவதற்கு ஏற்ற பரந்த நிலப்பரப்பு இல்லாமை „ கடன் பெறுவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள். „ கடனுக்கான அதிக வட்டி விகிதம். „ மலிவான ஊதியத்திற்கு வேலையாட்கள் கிடைக்காமை. „ ஊழியர்களுக்கான தொழில்நுற்ப மற்றும் தொழில் முறை பயிற்சிகள் இல்லாமை. „ தொழிற்பேட்டைகளுக்கருகில் வசிப்பதற்கு ஏற்ற சூழல் இல்லாமை.

83) ஒரு டன் இரும்பு எஃகு உற்பத்தி செய்வதற்கு தேவையான மங்கனீசின் அளவு?

a) 10 கிலோ

b) 100 கிலோ

c) 50 கிலோ

d) 25 கிலோ

விளக்கம்: மாங்கனீசு ஒரு வெளிர் சாம்பல் நிறமுடைய மிகவும் கடினமான ஆனால் எளிதில் உடையும் தன்மையுடையது. மாங்கனீசு எப்போதும் இரும்பு மற்றும் லேட்ரைட் மற்றும் பிற தாதுக்களுடன் கலந்து காணப்படும். இரும்பு எஃகு உற்பத்தி செய்வதற்கு அடிப்படையான மூலப்பொருள் ஆகும். வெளுக்கும் தூள், பூச்சிக்கொல்லிகள், வண்ணப்பூச்சுகள், மின்கலங்கள் போன்றவை தயாரிப்பதற்கு பயன்படுகிறது.

84) இந்திய மாங்கனீசு தாது நிறுவனத்தின் தலைமை இடம் எங்கு அமைந்துள்ளது?

a) நாக்பூர்

b) பூனே

c) டெல்லி

d) லக்னோ

விளக்கம்:

85) மாங்கனீசு படிவுகள் பெரும்பாலும் எவ்வகை பாறைகளில் காணப்படுகிறது?

a) தீப்பாறைகள்

b) உருமாறிய பாறைகள்

c) படிவுப்பாறைகள்

d) a) மற்றும் b)

விளக்கம்: மாங்கனீசு படிவுகள் பெரும்பாலும் உருமாறிய பாறைகளில் காணப்படுகிறது. அதிக மாங்கனீசு படிவுகள் ஒடிசா(22%), மத்தியப்பிரதேசம் (12%), மகாராஷ்டிரா,கோவா(7%), ஆந்திரப்பிரதேசம் (4%), ஜார்க்கண்ட் (2%) போன்ற மாநிலங்களில் காணப்படுகிறது.

86) வரலாற்றுக்கு முந்தைய காலத்திலேயே மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட முதல் உலோகம் எது?

a) வெண்கலம்

b) தாமிரம்

c) தங்கம்

d) வெள்ளி

விளக்கம்: தாமிரத்தை துத்தநாகத்துடன் கலந்து பித்தளையும், தகரத்துடன் சேர்த்து வெண்கலமும் உருவாக்கப்படுகிறது. தாமிரமானது சமையல் பாத்திரங்கள், மின்சாதன பொருட்கள், கம்பி வடங்கள், மின்சாரக்கம்பிகள் போன்றவை தயாரிக்க பயன்படுகிறது.

87) கீழ்க்கண்டவற்றுள் இந்துஸ்தான் தாமிர நிறுவனத்தின் செயல்பாடுகளுள் அடங்குபவை எவை?

a) அகழ்ந்து எடுத்தல்

b) பயன்பாடு

c) உருக்குதல்

d) இவை அனைத்தும்

விளக்கம்:

88) தாமிர படிவு அதிகமுள்ள மாநிலம் எது?

a) தமிழ்நாடு

b) ராஜஸ்தான்

c) மத்தியப்பிரதேசம்

d) ஒடிசா

விளக்கம்: தாமிரப்படிவு அதிகமுள்ள மாநிலம் ராஜஸ்தான் ஆகும். இதை தொடர்ந்து ஜார்க்கண்ட் மற்றும் மத்தியப்பிரதேசம், ஆகிய மாநிலங்களில் குறிப்பிடத்தகுந்த அளவு காணப்படுகிறது.

89) இந்தியாவின் மொத்த தாமிர உற்பத்தியில் 62% உற்பத்தி செய்யும் மாநிலம் எது?

a) ஜார்க்கண்ட்

b) சத்தீஸ்கர்

c) ஒடிசா

d) மத்தியப்பிரதேசம்

விளக்கம்: சிங்பும் மற்றும் ஹசாரி பாக் மாவட்டங்கள் இம்மாநிலத்தில் அதிகமாக உற்பத்தி செய்கின்றன.

50.2% உடன் ஒடிசா மாநிலம் மற்றொரு முக்கிய உற்பத்தியாளராக திகழ்கிறது. இராஜஸ்தான் 28% உற்பத்தியுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. தமிழ்நாடு இந்திய தாமிர உற்பத்தியில் 7% பங்களிப்பை அளிக்கிறது.

90) சரளை மண் காணப்படும் பகுதிகளில் புவியின் மேற்பரப்பில் படிவுகளாக காணப்படுவது எது?

a) பாக்சைட்

b) தாமிரம்

c) மைக்கா

d) சுண்ணாம்புக்கல்

விளக்கம்: லும்மினியம் பாக்சைட் தாதுவிலிருந்து பெறப்படுகிறது. இத்தாது நீரேற்ற அலுமினியம் ஆக்சைட் உள்ள பாறைகளில் காணப்படுகிறது. குறைந்த எடை மற்றும் கடினத்தன்மை கொண்ட பண்புகளால் அலுமினியமானது விமானக்கட்டுமானங்களிலும் தானியங்கி எந்திரங்களிலும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

91) சிமெண்ட் மற்றும் இரசாயனத்தொழிற்சாலைகளில் பயன்படுவது எது?

a) பாக்சைட்

b) தாமிரம்

c) மைக்கா

d) சுண்ணாம்புக்கல்

விளக்கம்: 50.2 பாக்சைட் சதவீத தாதுக்கள் ஒடிசா மாநிலத்திலும், 15.8% குஜராத் மாநிலத்திலும், 11.9% ஜார்க்கண்ட் மாநிலத்திலும், 9.9% மகாராஷ்டிரா மாநிலத்திலும், 2.2% தமிழ்நாட்டிலும் காணப்படுகின்றன.

92) தேசிய அலுமினிய நிறுவனத்தின் மையங்கள் எந்த மாநிலத்தில் காணப்படுகின்றன?

a) ஒடிசா

b) பஞ்சாப்

c) ஜார்க்கண்ட்

d) மகாராஷ்டிரா

விளக்கம்:

93) கீழ்க்கண்டவற்றுள் அலோகக்கனிமங்கள் எவை?

ⅰ) மைக்கா

ⅱ) சுண்ணாம்பு

ⅲ) ஜிப்சம் நைட்ரேட்

ⅳ) பொட்டாஷ் டோலமைட்

ⅴ) நிலக்கரி

ⅵ) பெட்ரோலியம்

a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ),ⅴ), ⅵ)

b) ⅱ), ⅲ), ⅵ)

c) ⅲ), ⅳ), ⅴ)

d) ⅰ), ⅱ), ⅲ)

விளக்கம்: ⅰ) மைக்கா

ⅱ) சுண்ணாம்பு

ⅲ) ஜிப்சம் நைட்ரேட்

ⅳ) பொட்டாஷ் டோலமைட்

ⅴ) நிலக்கரி

ⅵ) பெட்ரோலியம்

போன்றவை அலோகக் கனிமங்களாகும்.

94) பண்டைய காலத்தில் ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்ட அலோகக்கனிமம் எது?

a) மைக்கா

b) சுண்ணாம்பு

c) ஜிப்சம் நைட்ரேட்

d) பொட்டாஷ் டோலமைட்

விளக்கம்: மின் தொழிலக வளர்ச்சியால் மைக்கா மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அப்ராக் வகை நல்ல தரமான மைக்காவாகும். இது ஒளி புகும் தன்மை கொண்டது. எளிதில் மிக மெல்லிய பட்டைகளாக பிரிக்கப்படக்கூடியது.

95) கீழ்க்கண்டவற்றுள் மைக்காவின் பண்புகள் எவை?

ⅰ) நிறமற்றவை

ⅱ) நெகிழும் தன்மை உடையவை

ⅲ) குறைந்த மின் இழப்பு

ⅳ) அதிக மின் அழுத்தத்தை தாங்கும் திறன்

a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)

b) ⅱ), ⅲ)

c) ⅲ), ⅳ)

d) ⅰ), ⅱ), ⅲ)

விளக்கம்: விளக்கம்: இவை மின்கடத்தா தன்மையுடையவை ஆதலால் மின் சாதனப்பொருட்கள் தயாரிப்பில் பயன்படுகிறது. மேலும் மசகு எண்ணெய், மருந்துகள், வர்ணப்பூசுதல், மற்றும் மெருகு எண்ணெய் போன்ற தயாரிப்புகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.

96) அதிக மைக்கா படிவுகளை கொண்ட மாநிலம் எது?

a) ஆந்திரா

b) கேரளா

c) கர்நாடகா

d) மகாராஷ்ட்ரா

விளக்கம்: ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள நெல்லூர், விசாகப்பட்டினம், மேற்கு கோதாவரி மற்றும் கிருஷ்ணா மாவட்டங்கள், அதிக மைக்கா படிவுகளை கொண்டுள்ளன. ராஜஸ்தான்(21%), ஒடிசா(20%) ஆகியன முக்கிய மைக்கா உற்பத்தியாளராகும்.

97) சுண்ணாம்புக்கல் கீழ்க்கண்ட எ தைக்கொண்ட பாறைகளில் காணப்படுகிறது?

a) கால்சியம் கார்போனேட்

b) கால்சியம் மற்றும் மெக்னீசியம்

c) a) மற்றும் b)

d) படிவுப்பாறை

விளக்கம்: கால்சியம் கார்போனேட் கொண்ட பாறைகளிலோ, கால்சியம் மற்றும் மெக்னீசியம் கொண்ட பாறைகளிலோ, அல்லது இரண்டும் கலந்த பாறைகளிலோ காணப்படுகிறது. சுண்ணாம்புக்கல் சிறிய அளவிலான சிலிக்கா, அலுமினா, இரும்பு ஆக்ஸைடு, பாஸ்பரஸ் மற்றும் கந்தகம் ஆகியவற்றைக்கொண்டுள்ளன.

98) நாட்டின் நிலக்கரி படிவுகளில் 90% கொண்ட மாநிலங்கள் எவை?

ⅰ) ஜார்க்கண்ட்

ⅱ) மேற்கு வங்கம்

ⅲ) மத்தியப்பிரதேசம்

ⅳ) ஒடிசா

a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)

b) ⅱ), ⅲ)

c) ⅲ), ⅳ)

d) ⅰ), ⅱ), ⅲ)

விளக்கம்: இந்தியாவில் காணப்படும் நிலக்கரி வயல்கள் கோண்டுவானா பாறைகளோடு தொடர்புடையவை. இவை தீபகற்ப இந்தியப்பகுதிகளில் காணப்படுகின்றன.

99) மூன்றாம் வகையை சேர்ந்த நிலக்கரி அதிகமாக காணப்படும் மாநிலங்கள் எவை?

a) அசாம்

b) பஞ்சாப்

c) ஜம்மு காஷ்மீர்

d) a) மற்றும் b)

விளக்கம்: 2% நிலக்கரி மூன்றாம் வகையை சார்ந்தது. ஜார்க்கண்ட் மாநிலம் இந்தியாவில் அதிக நிலக்கரியை உற்பத்தி செய்கிறது. சத்தீஸ்கர், மேற்கு வங்கம், மத்தியப்பிரதேசம், ஆந்திரப்பிரதேசம், மற்றும் மகாராஷ்ட்ரா மாநிலங்கள் முக்கிய உற்பத்தியாளர்களாகும்.

100) பழுப்பு நிலக்கரி காணப்படும் இடங்கள் எவை?

ⅰ) தமிழ்நாடு

ⅱ) கேரளா

ⅲ) புதுச்சேரி

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅱ), ⅲ)

c) ⅲ)

d) ⅰ), ⅱ)

விளக்கம்: தென் மற்றும் மேற்கு தீப கற்ப பகுதிகளில் குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் பழுப்பு நிலக்கரி காணப்படுகிறது. இந்திய நிலக்கரி அமைச்சகமானது நிலக்கரி அகழாய்வு மற்றும் உற்பத்தி மேம்பாட்டு கொள்கைகளை முடிவு செய்கிறது.

101) பின்வருவனவற்றுள் நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் வரும் பொதுத்துறை நிறுவனங்கள் எவை?

a) இந்திய நிலக்கரி நிறுவனம்

b) இந்திய தேசிய பழுப்பு நிலக்கரி நிறுவனம்

c) சிங்கரேணி கோலாரிஸ் நிலக்கரி நிறுவனம்

d) இவை அனைத்தும்

விளக்கம்: இந்திய நிலக்கரி நிறுவனம், இந்திய தேசிய பழுப்பு நிலக்கரி நிறுவனம், சிங்கரேணி கோலாரிஸ் நிலக்கரி நிறுவனம் ஆகியன இவ்வமைச்சகத்தின் பொதுத்துறை நிறுவனங்களாகும்.

102) தாது எண்ணெய் என்று அழைக்கப்படுவது எது?

a) பெட்ரோலியம்

b) நிலக்கரி

c) டீசல்

d) இவை அனைத்தும்

விளக்கம்: பெட்ரோலியம் புவியிலுள்ள பாறைப்படிவுகளிலிருந்து பெறப்படும் எண்ணெய் ஆகும். 90 – 95% நீரக கரிமமும் மீதமுள்ள 5 – 10% ஆக்சிஜன், ஹைட்ரஜன், கந்தகம், கரிம உலோகங்களையும் கொண்ட எளிதில் எரியக்கூடிய திரவம் ஆகும்.

103) கீழ்க்கண்டவற்றுள் பெட்ரோலியத்தின் உப பொருட்கள் எவை?

ⅰ) மசகு எண்ணெய்

ⅱ) தார் மற்றும் மெழுகு

ⅲ) சோப்பு

ⅳ) டெர்லின்

a) ⅰ), ⅱ), ⅲ), ⅳ)

b) ⅱ), ⅲ)

c) ⅲ), ⅳ)

d) ⅰ), ⅱ), ⅲ)

விளக்கம்: பெட்ரோலியமானது எரிசக்தி உற்பத்திக்கும், வாகனங்கள், வானூர்திகள், கப்பல்கள் மற்றும் ரயில்களுக்கு எரிபொருளாக பயன்படுகிறது. மசகு எண்ணெய், மண்ணெண்ணெய், களிம்புகள், தார், சோப்பு, டெர்லின், மெழுகு ஆகியன இதன் உப பொருட்கள் ஆகும். இந்தியாவில் கச்சா எண்ணெயானது கடற்கரைப்பகுதிகளிலும், உள்நாட்டு பகுதிகளிலும் கிடைக்கிறது.

104) இந்திய நிலக்கரி நிறுவனத்தின் தலைமை இடம் எங்கு அமைந்துள்ளது?

a) கொல்கத்தா

b) பூனே

c) போபால்

d) ராணிகன்ச்

விளக்கம்:

105) பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் பின்வரும் எந்த செயல்பாடுகளுக்கு பொறுப்பேற்கிறது?

ⅰ) எண்ணெய் பாதுகாப்பு

ⅱ) இயற்கை எரிவாயு

ⅲ) பெட்ரோலிய உற்பத்தி பொருள்

a) ⅰ), ⅱ), ⅲ)

b) ⅱ), ⅲ)

c) ⅲ)

d) ⅰ), ⅱ)

விளக்கம்:

106) நாட்டின் மிகப்பெரிய எண்ணெய் வயல் எங்கு அமைந்துள்ளது?

a) மும்பை ஹை

b) குஜராத்

c) பேஸ்ஸைம் எண்ணெய் வயல்

d) அங்கலேஸ்வர்

விளக்கம்:

107) கீழ்க்கண்டவற்றுள் கிழக்கு கடற்கரைக்கு அருகில் உள்ள எண்ணெய் வயல் எது?

a) ருத்ரசாகர்-லாவா எண்ணெய் வயல்

b) குஜராத்

c) பேஸ்ஸைம் எண்ணெய் வயல்

d) அங்கலேஸ்வர்

விளக்கம்:

108) கீழ்க்கண்டவற்றுள் கிழக்கு கடற்கரைக்கு அருகில் உள்ள எண்ணெய் வயல் எது?

a) திக்பாய் எண்ணெய் வயல்

b) நாகர்காட்டியா எண்ணெய் வயல்

c) மோரான் ஹக்ரிஜன் –எண்ணெய் வயல்

d) இவை அனைத்தும்

விளக்கம்:

109) இந்திய இயற்கை எரிவாயு நிறுவனத்தின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?

a) டார்ஜிலிங்

b) கொல்கத்தா

c) டெல்லி

d) அம்ரித்சர்

விளக்கம்:

110) தமிழகத்தில் இயற்கை எரிவாயு காணப்படும் இடம் எது?

a) மங்க மடம்

b) நெய் பள்ளத்தூர்

c) a) மற்றும் b)

d) விளார்

விளக்கம்: ஒரு காலத்தில் ஆழம் குறைந்த கடலுக்கு அடியில் இருந்த பாறைகள் இயற்கை வாயு பதிவுகளாக உருவாகின. அதிக அளவிலான இயற்கை எரிவாயு மும்பை ஹை மற்றும் பேசைம் எண்ணெய் வயல் பகுதிகளில் காணப்படுகிறது.

111) இந்தியாவில் அணுமின் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

a) 1940

b) 1935

c) 1948

d) 1947

விளக்கம்: யுரேனியம் மற்றும் தோரியம் தாதுக்களில் இருந்து அணுசக்தி பெறப்படுகிறது. இந்தியாவில் அணுமின் திட்டம் 1940 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு பின்னர் 1948 ஆம் ஆண்டு டாடா அணு ஆராய்ச்சி கழகம் இத்துடன் இணைக்கப்பட்டது.

112) இந்தியாவின் முதல் அணுமின் நிலையம் எங்கு நிறுவப்பட்டது?

a) தாராப்பூர்

b) இரவத் பட்டா

c) நரோரா

d) கைகா

விளக்கம்: 320 மெகாவாட் உற்பத்தி திறனுடன் இந்தியாவின் முதல் அணுமின் நிலையம் 1969 ஆம் ஆண்டு மும்பைக்கு அருகில் உள்ள தாராப்பூரில் நிறுவப்பட்டது. பின்னர் ராஜஸ்தான் மாநிலத்தில் கேட்டாவிற்கு அருகில் உள்ள இரவத் பட்டா என்னுமிடங்களில் அணுமின் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டன.

113) இந்திய அணுமின் சக்தி நிறுவனத்தின் தலைமை இடம் எங்கு அமைந்துள்ளது?

a) கொல்கத்தா

b) டெல்லி

c) மும்பை

d) டார்ஜிலிங்

விளக்கம்:

114) நீர்மின் சக்தி உலக மின் தேவையில் எத்தனை சதவீதத்தை உற்பத்தி செய்கிறது?

a) 7%

b) 8%

c) 5%

d) 10%

விளக்கம்: குறைந்த உற்பத்தி செலவினை உடையது. தேவைக்கு ஏற்ப உற்பத்தியை உடனடியாக அதிகரிக்கவோ, குறைக்கவோ கூடிய தன்மையுடையது.

115) இந்திய தேசிய நீர்மின் சக்தி நிறுவனம் எங்கு அமைந்துள்ளது?

a) பரிதாபாத்

b) டெல்லி

c) அசாம்

d) அமராவதி

விளக்கம்:

116) இந்தியாவின் முதல் நீர்மின் நிலையம் எங்கு நிறுவப்பட்டது?

a) பரிதாபாத்

b) டார்ஜிலிங்

c) தாமோதர்

d) அமராவதி

விளக்கம்: இந்தியாவின் முதல் நீர்மின் நிலையம் 1897 ஆம் ஆண்டு டார்ஜிலிங்கில் நிறுவப்பட்டது.

117) தேசிய காற்றாற்றல் நிறுவனம் எங்கு அமைந்துள்ளது?

a) பரிதாபாத்

b) சென்னை

c) ஹைதராபாத்

d) அமராவதி

விளக்கம்:

118) இந்தியாவின் உயிரி எரிசக்தி உற்பத்தி திறன் எவ்வளவு?

a) 18 GW

b) 28 GW

c) 8 GW

d) 15 GW

விளக்கம்: இந்தியாவில் பயன்படுத்தப்படும் எரிசக்தி பயன்பாட்டில் 32% உயிரி எரிசக்தியிலிருந்து பெறப்படுகிறது. உயிரி எரி சக்தி பெரும்பாலும் வீட்டு உபயோகங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.

119) ஓத சக்தி உற்பத்திக்கு மிக உகுந்த இடமாக உள்ளது எது?

a) காம்பே வளைகுடா

b) கட்ச் வளைகுடா

c) சுந்தரவனப்பகுதி

d) இவை அனைத்தும்

விளக்கம்: இந்தியாவின் கடலலை சக்தி திறன் மதிப்பு 40000MW என கணக்கிடப்பட்டுள்ளது. 150KW உற்பத்தி திறன் கொண்ட அலை சக்தி ஆளை திருவனந்தபுரத்திற்கு அருகில் உள்ள விழிஞ்சம் என்ற பகுதியில் நிறுவப்பட்டுள்ளது. இதே போன்று மற்றொரு ஆலை அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு அருகில் நிறுவப்பட்டுள்ளது.

120) இந்தியாவின் முதல் பருத்தி நெசவாலை எங்கு நிறுவப்பட்டது?

a) கொல்கத்தா

b) மும்பை

c) சென்னை

d) லக்னோ

விளக்கம்: இந்தியாவின் முதல் பருத்தி நெசவாலை 1818 ஆம் ஆண்டு கொல்கத்தாவிற்கு அருகில் உள்ள போர்ட் க்ளாஸ்டர் என்னும் இடத்தில் தொடங்கப்பட்டது.

121) மத்திய பட்டு ஆராய்ச்சி தொழில் நுட்ப நிறுவனம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது?

a) கொல்கத்தா

b) பெங்களூர்

c) சென்னை

d) ஹைதராபாத்

விளக்கம்:

122) மத்திய பட்டு ஆராய்ச்சி தொழில் நுட்ப நிறுவனம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது?

a) கர்நாடகா

b) ஆந்திரா

c) தமிழ்நாடு

d) தெலங்கானா

விளக்கம்: கர்நாடகா மாநிலம் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 8200 மெட்ரிக் டன் பட்டு உற்பத்தி செய்து நாட்டின் மொத்த உற்பத்தியில் 1/3 பங்கு உற்பத்தி செய்து இந்தியாவில் முதன்மை மாநிலமாக உள்ளது.

123) இந்தியாவில் கைத்தறி வளர்ச்சி ஆணையர் அலுவலகம் எங்கு அமைந்துள்ளது?

a) புது டெல்லி

b) பெங்களூர்

c) ஹைதராபாத்

d) பரிதாபாத்

விளக்கம்: இந்திய வர்த்தகத்துறை அமைச்சகத்தின் கீழ் நவம்பர் 20, 1975 இல் தொடங்கப்பட்ட கைத்தறி வளர்ச்சி ஆணையர் அலுவலகம் தற்போது இந்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ் புது டெல்லியில் உள்ள உத்யோக் பவனில் தலைமையிடமாக கொண்டு செயல் பட்டு வருகிறது.

124) சர்க்கரை தொழில் எதனை அடுத்து இரண்டாவது பெரிய வேளாண் சார்ந்த தொழில் ஆகும்?

a) பருத்தி

b) நெல்

c) சணல்

d) திணைப்பயிர்கள்

விளக்கம்: கரும்பு, சர்க்கரை கிழங்கு, சர்க்கரை பொருள்கள் அடங்கிய பயிர்களில் இருந்து சர்க்கரை தயாரிக்கப்படுகிறது. இந்தியாவில் சர்க்கரை பெரும்பாலும் கரும்பிலிருந்து எடுக்கப்படுகிறது.

125) கரும்பு உற்பத்தியில் இந்தியா எத்தனையாவது இடம் வகிக்கிறது?

a) முதலாவது

b) இரண்டாவது

c) மூன்றாவது

d) நான்காவது

விளக்கம்: 2.86 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கிறது. கரும்பு எளிதில் எடை இழக்கும் தன்மை உடையதாகும். போக்குவரத்திற்கு அதிக எடை கொண்டதாகவும் இத்தொழிற்சாலைகள் கரும்பு பயிரிடும் பகுதிகளுக்கு அருகாமையில் உள்ளன.

126) நாட்டின் மொத்த சர்க்கரை உற்பத்தியில் 50% கொண்டு முதலிடம் வகிக்கும் மாநிலம் எது?

a) உத்தரப்பிரதேசம்

b) மத்த்தியப்பிரதேசம்

c) மஹாராஷ்ட்ரா

d) பீகார்

விளக்கம்: மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரப்பிரதேசம், தமிழ்நாடு, பீகார், பஞ்சாப், குஜராத், ஹரியானா, மற்றும் மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் 90% ஆலைகளையும், உற்பத்தி செய்யும் மாநிலங்களாகவும் உள்ளன.

127) கலப்பு தேனிரும்பு மற்றும் கடல் பாசி எஃகு உற்பத்தி செய்யும் நிறுவனம் எது?

a) டாட்டா இரும்பு எஃகு நிறுவனம்

b) இந்தியா இரும்பு எஃகு நிறுவனம்

c) விஸ்வேஷ்வரியா இரும்பு எஃகு நிறுவனம்

d) இந்துஸ்தான் எஃகு நிறுவனம்

விளக்கம்:

128) ஜெர்மனியின் தொழில்நுட்ப உதவியுடன் தொடங்கப்பட்ட இந்துஸ்தான் எஃகு நிறுவனம் எங்கு அமைந்துள்ளது?

a) கர்நாடகா

b) சத்தீஸ்கர்

c) மேற்கு வங்கம்

d) ஒடிசா

விளக்கம்:

129) இங்கிலாந்தின் தொழில்நுட்ப உதவியுடன் தொடங்கப்பட்ட இந்துஸ்தான் எஃகு நிறுவனம் பின்வரும் எப்பொருள்களை தயாரிக்கிறது?

a) உலோக கலவை

b) கட்டுமானபொருட்கள்

c) இரயிவே உபகரணங்கள்

d) இவை அனைத்தும்

விளக்கம்:

130) துருப்பிடிக்காத இரும்பு எங்கு தயாரிக்கப்படுகிறது?

a) துர்காபூர்

b) ரூர்கேலா

c) பொகாரோ

d) சேலம்

விளக்கம்:

131) நீண்ட மற்றும் பட்டை எஃகுகள் எங்கு தயாரிக்கப்படுகிறது?

a) விசாகப்பட்டினம்

b) டோர் நகல்

c) பொகாரோ

d) சேலம்

விளக்கம்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!