Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Book Back QuestionsTnpsc

சுற்றுலா Book Back Questions 7th Social Science Lesson 15

7th Social Science Lesson 15

15] சுற்றுலா

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

‘காஸ்ட்ரோனமி’ என்பது கலாச்சாரச் சுற்றுலாவின் அம்சத்தை குறிக்கின்றது

உள்வரும் சுற்றுலா-சொந்த நாட்டிற்குள் செல்லும் சுற்றுலா. வெளிச்செல்லும் சுற்றுலா-வெளி நாடுகளுக்கு செல்லும் சுற்றுலா.

விசா (VISA) – ஒரு நபருக்கு வழங்கப்படும் ஆவணம் (அல்லது) வெளிநாடு செல்ல விரும்பும் ஒருவரது கடவுச்சீட்டில் குறிக்கப்படும் முத்திரை. சுற்றுலா விசா (Tourist VISA) – கேளிக்கைக்காகச் சுற்றிப் பார்த்தல். மாணவர் விசா (Student VISA) – மேற்படிப்பிற்காகச் செல்லுதல். தொழில் விசா (Employment VISA) – ஒரு நாட்டில் வேலை பார்த்தல். மருத்துவ விசா (Medical VISA) – ஒரு நாட்டிலுள்ள புகழ்பெற்ற மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காகச் செல்லுதல்.

வனவிலங்குப் பாதுகாப்புச் சரணாலயம் காட்டு விலங்குகளின் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்ட நிலப்பகுதி.

ITC – நிறுவனங்களுக்கான உள்ளடக்கிய குழு சுற்றுலா (Inclusive Tours by Charter)

IATA – பன்னாட்டு வான்வழிப் போக்குவரத்துச் சங்கம் (International Air Transport Association).

IATO – இந்தியப் பயண அமைப்பாளர்கள் சங்கம் (Indian Association of Tour Operators).

TAAI – இந்திய பயண முகவர்கள் சங்கம் (Travel Agents Association of India).

TTTHA – தமிழ்நாடு சுற்றுலா பயணம் மற்றும் விருந்தோம்பல் சங்கம் (Tamil Nadu Tour Travel and Hospitality Association).

TTDC – தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் (Tamil Nadu Tourism Development Corporation).

சுற்றுலாப் பயணிகளை வெளியேற்றும் காரணி – கௌரவம். சுற்றுலா பயணிகளைக் கவர்ந்து இழுக்கும் காரணி – சேவை வசதிகள்.

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. சுற்றுலா வகைகளில் மிகப் பழமையானது —————-

(அ) சமயச்சுற்றுலா

(ஆ) வரலாற்றுச் சுற்றுலா

(இ) சாகசச்சுற்றுலா

(ஈ) பொழுதுபோக்குச் சுற்றலா

2. எந்த மாநிலத்தில் காசிரங்கா தேசிய பூங்கா அமைந்துள்ளது?

(அ) இராஜஸ்தான்

(ஆ) மேற்கு வங்காளம்

(இ) அசாம்

(ஈ) குஜராத்

3. பின்வருவனவற்றில் இந்தியாவில் இல்லாத கடற்கரை எது?

(அ) கோவா

(ஆ) கொச்சி

(இ) கோவளம்

(ஈ) மியாமி

4. பின்வருவனவற்றில் இந்தியாவில் இல்லாத பறவைகள் சரணாலயம் எது?

(அ) குஜராத்திலுள்ள நல்சரோவர்

(ஆ) தமிழ்நாட்டிலுள்ள கூந்தன்குளம்

(இ) இராஜஸ்தானிலுள்ள பாரத்பூர்

(ஈ) மத்திய பிரதேசத்திலுள்ள கன்ஹா

5. எந்த மாவட்டத்தில் குற்றாலம் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது?

(அ) தருமபுரி

(ஆ) திருநெல்வேலி

(இ) நாமக்கல்

(ஈ) தேனி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. மூன்று கூறுகளையும் ஒன்றாக இணைக்கும் கோட்பாடு ————- என அழைக்கப்படுகின்றது.

2. “காஸ்ட்ரோனமி” என்பது சுற்றுலாவின் ———- அம்சத்தை குறிக்கின்றது.

3. சுருளி நீர்வீழ்ச்சி ———– என்றும் அழைக்கப்படுகிறது.

4. இரண்டாவது அழகிய, நீண்டக் கடற்கரை ———-

5. TAAI என்பதன் விரிவாக்கம் ————-

III. பொருந்தாததை வட்டமிடுக:

1. போக்குவரத்து, ஈர்ப்புத் தலங்கள், எளிதில் அணுகும் தன்மை, அணுகுதல் சேவை வசதிகள்.

2. நைனிடால், ஷில்லாங், மூணாறு, திகா

3. கார்பெட், சுந்தரவனம், பெரியார், மயானி

4. ஒகேனேகல், கும்பகரை, சுருளி, களக்காடு

5. ரிஷிகோஷ், லடாக், குல்மார்க், கோத்தகிரி

IV. பொருத்துக:

அ – ஆ

1. ஆனைமலை வாழிடம் – அ) மேற்கு வங்காளம்

2. குரங்கு அருவி – ஆ) கோவா

3. டார்ஜிலிங் – இ) கோயம்புத்தூர்

4. இயற்கையின் சொர்க்கம் – ஈ) உயர் விளிம்பு

5. அகுதா கடற்கரை -உ) ஜவ்வாது

V. பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. கூற்று: சுற்றுலா என்பது மக்களின் சமுதாய வாழ்க்கை முறைக்கு ஓர் இன்றியமையாத செயலாக விளங்குகிறது.

காரணம்: சுற்றுலா நாட்டின் சமூக, கலாச்சார கல்வி மற்றும் பொருளாதாரத் துறைகளில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

(அ) கூற்றும் காரணமும் சரி கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.

(ஆ) கூற்றும் காரணமும் சரி. ஆனால், கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை

(இ) கூற்று தவறு காரணம் சரி

(ஈ) கூற்றும் காரணமும் தவறானவை

2. கூற்று: கோவாவிலுள்ள புகழ்பெற்ற கடற்கரைகளுள் ஒன்றான கலங்கட், சாகச விளையாட்டு சுற்றுலாப் பயணிகளின் ஈர்ப்பாகும்.

காரணம்: வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் கலங்கட் கடற்கரைக்குக் குவிகின்றார்கள்

(அ) கூற்றும் காரணமும் சரி கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.

(ஆ) கூற்றும் காரணமும் சரி. ஆனால், கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை

(இ) கூற்று தவறு காரணம் சரி

(ஈ) கூற்றும் காரணமும் தவறானவை

விடைகள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. சமயச்சுற்றுலா, 2. அசாம், 3. மியாமி, 4. மத்திய பிரதேசத்திலுள்ள கன்ஹா, 5. திருநெல்வேலி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. A3, 2. கலாச்சாரம், 3. மேகமலை அல்லது நிலநீர் நீர்வீழ்ச்சி, 4. மெரினா, 5. இந்திய பயண முகவர்கள் சங்கம்

III. பொருந்தாததை வட்டமிடுக:

1. போக்குவரத்து, 2. திகா, 3. மயானி, 4. களக்காடு, 5. லடாக்

IV. பொருத்துக:

1. ஈ, 2. இ, 3. அ, 4. உ, 5. ஆ

V. பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. கூற்றும் காரணமும் சரி கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது, 2. கூற்றும் காரணமும் சரி கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!