Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Book Back QuestionsTnpsc

வளரிளம் பருவமடைதல் Book Back Questions 8th Science Lesson 20

8th Science Lesson 20

20] வளரிளம் பருவமடைதல்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

விந்தகங்கள் மற்றும் அண்டகங்கள் முறையே ஆண் மற்றும் பெண்ணின் முதல்நிலை பால் உறுப்புகள் என்று அழைக்கப்படுகின்றன.

பருவமடைதல் நிகழும் போது, குரல் வளையின் வளர்ச்சியானது பெண்களை விட ஆண்களில் அதிகமாக உள்ளது. ஆண்களில் வளர்ந்து பெரிதாகி வெளியே துருத்திக் கொண்டிருக்கும் குரல் ஒலிப் பெட்டகமானது ஆடம்ஸ் ஆப்பிள் எனப்படுகிறது. இதனால், குரலானது ஆழமாகவும், கரகரப்பாகவும் காணப்படுகிறது. இது முக்கியமாக வளரிளம் பருவத்தில் சுரக்கக் கூடிய சில ஆண் இன ஹார்மோன்களால் (ஒழுங்குபடுத்தும் வேதிப்பொருள்கள்) ஏற்படுகின்றது. இதன் விளைவாக, குருத்தெலும்புடன் இணைந்துள்ள தசைகள் (குரல்வளை) தளர்ச்சியுற்று தடிமனாகின்றன. இந்த தளர்ச்சியுற்ற தடித்த குரல்வளைப் பகுதிக்குள் காற்று நுழையும் போது கரகரப்பான ஒலியானது உருவாகின்றது. பெண்களில் குரல்வளை சிறியதாக இருப்பதால் அது வெளியில் தெரிவதில்லை. எனவே, குரலானது உரத்த சுருதியுடன் காணப்படுகிறது.

வளரிளம் பருவத்தில் வியர்வை மற்றும் தோலுக்கு அடியில் காணப்படக் கூடிய சுரப்பிகளின் (எண்ணெய்ச் சுரப்பிகள்) செயல்பாடு அதிகரிப்பதால் அவற்றின் சுரப்பு அதிகரிக்கின்றது. தோலில் காணப்படக்கூடிய இத்தகைய சுரப்பிகளின் அதிகப்படியான சுரப்பின் காரணமாக பல ஆண்கள் மற்றும் பெண்களின் முகத்தில் பருக்கள் தோன்றுகின்றன. கூடுதல் சுரப்பு காரணமாக சில நேரங்களில் அவர்களின் உடலிலிருந்து நாற்றமும் உருவாகிறது.

ஈஸ்ட்ரோஜன் ஒரு தனித்த ஹார்மோன் அல்ல. அது ஒன்றுக்கொன்று தொடர்புடைய பல ஸ்டீராய்டு ஹார்மோன்களின் தொகுப்பாகும்.

சமீப காலங்களில் பெண்கள் மிகச்சிறிய வயதிலேயே பருவம் அடைகின்றனர். இது உணவுப் பழக்கத்தினால் ஏற்படுகிறது. அதிக அளவில் சத்தற்ற நொறுக்குத்தீனி (Junk Food) உணவை நீங்கள் உண்ணும் போது, உடல் வளர்ச்சி அதிகரித்து பெரியவர்களைப் போன்ற தோற்றம் ஏற்படுகிறது.

வளரிளம் பருவத்தினரின் நலமான வாழ்விற்கு தூக்கம் மிகவும் அவசியம் ஆகும். தேவையான அளவு தூக்கம் பதின்ம வயதில் ஏற்படும் மன அழுத்தத்தை மேற்கொள்ள உதவுகிறது. இந்த வயதினர் சிறப்பாக செயல்பட, ஒவ்வொரு நாள் இரவிலும் சுமார் 8 முதல் 10 மணி நேரம் தூங்குவது அவசியமானதாகும். ஆனால், பதின்ம வயதினோரில் பெரும்பாலானோர் போதுமான அளவு தூங்குவதில்லை.

மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் இரத்த இழப்பை ஈடு செய்ய பெண்கள், அதிக அளவில் இரும்புச்சத்து நிறைந்த உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்.

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. ______________ வயதிற்கு இடைப்பட்ட காலம் வளரிளம் பருவம் எனப்படும்.

அ) 10 முதல் 16

ஆ) 11 முதல் 17

இ) 11 முதல் 19

ஈ) 11 முதல் 20

2. உயிரினங்கள் பாலின முதிர்ச்சியடையும் காலம் _____________ என்று அழைக்கப்படுகிறது.

அ) பருவமடைதல்

ஆ) வளரிளம் பருவம்

இ) வளர்ச்சி

ஈ) முதிர்ச்சி

3. பருவமடைதலின் போது, இடுப்பிற்குக் கீழ் உள்ள பகுதி ஆனது ____________ல் அகன்று காணப்படுகிறது.

அ) ஆண்கள்

ஆ) பெண்கள்

இ) அ மற்றும் ஆ

ஈ) எதுவுமில்லை

4. ஆடம்ஸ் ஆப்பிள் என்பது இதன் வளர்ச்சியைக் குறிக்கிறது

அ) தொண்டைக் குழி

ஆ) தைராய்டு

இ) குரல்வளை

ஈ) பாரா தைராய்டு

5. வளரிளம் பருவ ஆண்கள் மற்றும் பெண்கள் பலரின் முகத்தில் காணப்படும் பருக்கள் _____________ சுரப்பியின் சுரப்பினால் உண்டாகின்றன.

அ) வியர்வை

ஆ) எண்ணெய்

இ) வியர்வை மற்றும் எண்ணெய்

ஈ) எதுவுமில்லை

6. விந்து செல்லானது _______________ஆல் உற்பத்தி செய்யப்படுகிறது.

அ) ஆண்குறி

ஆ) அண்டகம்

இ) கருப்பை

ஈ) விந்தகங்கள்

7. நாளமில்லா சுரப்பிகளால் உற்பத்தி செய்யப்படும் வேதிப் பொருள்கள் ______________ எனப்படும்.

அ) ஹார்மோன்கள்

ஆ) நொதிகள்

இ) புரதங்கள்

ஈ) கொழுப்பு அமிலங்கள்

8. ஆன்ட்ரோஜன் உற்பத்தி _______________ஆல் ஒழுங்குபடுத்தப்படுகிறது.

அ) GH ஹார்மோன்

ஆ) LH ஹார்மோன்

இ) TSH ஹார்மோன்

ஈ) ACTH ஹார்மோன்

9. மாதவிடாயின் போது புரோஜெஸ்டிரானின் அளவு _____________

அ) குறைகிறது

ஆ) அதிகரிக்கிறது

இ) நின்று விடுகிறது

ஈ) இயல்பாக உள்ளது.

10. நமது வாழ்வின் பிந்தைய பகுதியில் ஆஸ்டியோபோரோசிஸைத் தடுக்க ________ எடுத்துக் கொள்வது அவசியமாகும்.

அ) பொட்டாசியம்

ஆ) பாஸ்பரஸ்

இ) இரும்பு

ஈ) கால்சியம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. பெண்களில் அண்டகத்தால் ____________ உற்பத்தி செய்யப்படுகிறது.

2. இனப்பெருக்க உறுப்புகளால் உற்பத்தி செய்யப்படும் ஹார்மோன்கள் _____________ஆல் கட்டுப்படுத்தப்படுகின்றன.

3. பாலூட்டுதலின் போது பால் உற்பத்தியானது _____________ ஹார்மோனால் கட்டுப்படுத்தப்படுகிறது

4. ஆண் மற்றும் பெண் இனச் செல்கள் இணைந்து ______________ஐ உருவாக்குகின்றன.

5. பருவமடைதலின் போது ஏற்படும் முதல் மாதவிடாய் சுழற்சி ____________ என்று அழைக்கப்படுகிறது.

6. பொதுவாக அண்டம் விடுபட்ட 14 நாட்களுக்குப் பின் ___________ ஏற்படுகிறது.

7. _______________ என்பது புரதங்கள், கார்போ ஹைட்ரேட்டுகள், கொழுப்பு மற்றும் உயிர்ச்சத்துக்களை குறிப்பிட்ட அளவில் உள்ளடக்கியதாகும்.

8. தைராய்டு சுரப்பி தொடர்புடைய நோய்களைத் தடுப்பதில் _____________ உதவுகிறது.

9. இரும்புச் சத்துப் பற்றாக்குறை ______________க்கு வழிவகுக்கிறது.

10. பெண்களில் கருவுறுதல் _____________ல் நிகழ்கிறது.

III. சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக

1. ஆண்கள் மற்றும் பெண்களில் பருவமடைதலின் போது, திடீரென உயரம் அதிகரிக்கின்றது.

2. கருப்பையிலிருந்து அண்டம் வெளியேறுதல் அண்டம் விடுபடுதல் என அழைக்கப்படுகிறது.

3. கர்ப்பத்தின் போது, கார்பஸ்லூட்டியம் தொடர்ந்து வளர்ந்து அதிக அளவில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜேஸ்டிரானை உற்பத்தி செய்கிறது.

4. ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய நாப்ன்கள் அல்லது டாம்பூன்களைப் பயன்படுத்துதல் நோய்த் தொற்றிற்கான வாய்ப்பை அதிகரிக்கின்றது.

5. சுத்தமான கழிவறைகளை மலம் கழிக்கப் பயன்படுத்துதல் ஒரு நல்ல பழக்கமாகும்.

IV. பொருத்துக:

1. பருவமடைதல் – அ. டெஸ்ட்டோஸ்டீரான்

2. ஆடம்ஸ் ஆப்பிள் – ஆ. தசை உருவாக்கம்

3. ஆண்ட்ரோஜன் – இ. 45 முதல் 50 வயது

4. ICSH – ஈ. பாலின முதிர்ச்சி

5. மாதவிடைவு – உ. குரல் மாற்றம்

விடைகள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. 11 முதல் 19, 2. பருவமடைதல், 3. பெண்கள், 4. குரல்வளை, 5. எண்ணெய், 6. விந்தகங்கள், 7. ஹார்மோன்கள், 8. LH ஹார்மோன், 9. நின்று விடுகிறது, 10. கால்சியம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. ஈஸ்ட்ரோஜன், 2. பிட்யூட்ரி முன்கதுப்பு, 3. புரோலாக்டின், 4. கருவினை, 5. பூப்படைதல், 6. மாதவிடாய், 7. சரிவிகித உணவு, 8. அயோடின், 9. ரத்த சோகை, 10. பெலோப்பியன் நாளத்தில்

III. சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக

1. சரி, 2. அண்டத்திலிருந்து, 3. சரி, 4. குறைகிறது, 5. சரி

IV. பொருத்துக:

1. ஈ, 2. உ, 3. ஆ, 4. அ, 5.இ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!