Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Book Back QuestionsTnpsc

வளிமண்டலம் Book Back Questions 9th Social Science Lesson 14

9th Social Science Lesson 14

14] வளிமண்டலம்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

டேனியல் ரூதர்ஃபோர்டு பொ. ஆ 1772ஆம் ஆண்டு வளிமண்டலத்தில் நைட்ரஜன் வாயு உள்ளதென்பதையும் பொ. ஆ. 1774ஆம் ஆண்டு ஜோசப் பிரிஸ்ட்லி ஆக்சிஜன் வளிமண்டலத்தில் உள்ளதென்பதையும் கண்டறிந்தார்.

வெளியடுக்கிற்கு அப்பால் அமைந்துள்ள அடுக்கு காந்தக்கோளமாகும். இது புவியின் காந்த மண்டலமாகும். இம்மண்டலம் சூரியனிடமிருந்து வெளிப்படும் புரோட்டான்கள் மற்றும் எலக்ட்ரான்களை தக்க வைத்துக் கொள்கிறது. புவியின் மேல்பரப்பிலிருந்து சுமார் 64, 000 கி. மீட்டர் வரை இக்காந்த வயல் பரவியுள்ளது.

சூரியனின் மேற்பரப்பில் உருவாகும் காந்தப்புயலின் காரணமாக வெளியேற்றப்படும் மின்னணுக்களால் துருவப் பகுதிகளில், நள்ளிரவு வானத்தில் வானவேடிக்கையின் போது உருவாகும் பல வண்ண ஒளிச்சிதறல் போன்றக் காட்சி தோன்றுகின்றது. இதுவே “அரோராஸ்” எனப்படுகின்றது.

பகல் வேளைகளில், கடலை விட நிலப்பகுதி விரைவாக வெப்பமடைந்து காற்று மேல்நோக்கிச் செல்கிறது. இதன் காரணமாக கடலை ஒட்டியுள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்தம் உருவாகிறது. இதனால் கடலிலிருந்து காற்று மதிய வேலைகளில் நிலத்தை நோக்கி வீசுகின்றது. இது “கடற்காற்று” (Sea breeze) என்று அழைக்கப்படுகிறது. இக்கடற்காற்றுகள் கோடைக் காலங்களில் நிலப்பகுதிகளில் வெப்பம் குறைவதற்கு காரணமாக உள்ளது. இரவு வேளைகளில் கடலை விட நிலம் விரைவாக குளிர்ந்து விடுகிறது. இக்குளிர்ந்த காற்று கீழ்நோக்கி இறங்கி அதிக அழுத்தத்தை உருவாக்குகிறது. இதனால் நிலத்திலிருந்து காற்று கடல் பகுதியை நோக்கி வீசுகிறது. இதுவே “நிலக்காற்று” (Land breeze) என அழைக்கப்படுகிறது.

வீசும் காற்றின் எதிர் திசையிலுள்ள மலைப் பகுதியை, “காற்று மோதும் பக்கம்” (Windward side) என்று அழைக்கின்றோம். இங்கு அதிக மழைப்பொழிவு கிடைக்கின்றது காற்று வீசும் திசைக்கு மறைவாக உள்ள பகுதியை “காற்று மோதாபக்கம்” (Leeward side) என்று அழைக்கின்றோம். இங்கு மிகவும் குறைவான மழை கிடைக்கிறது.

புவியின் சுழற்சி காரணமாக காற்று தான் வீசும் பாதையிலிருந்து விலகி வீசும். இவ்வாறு காற்று தன் பாதையிலிருந்து விலகி வீசுவதை “கெரியாலிஸ் விளைவு” என்கிறோம். காற்று வட அரைக்கோளத்தில் G. G. கொரியாலிஸ் வலப்புறமாகவும் தென் அரைக்கோளத்தில் இடப்புறமாகவும் விலகி விசுகின்றன. இதுவே ‘ஃபெரல்ஸ் விதி’ எனப்படுகிறது. ஃபெரல்ஸ் விதியை முன்மொழிந்தவர் வில்லியம் பெரல் ஆவார். வில்லியம் பெரல் G. G. கொரியாலிசின், கொரியாலிஸ் விசையை பயன்படுத்தி பெரல்ஸ் விதியை நிரூபித்தார்.

சூப்பர் சைக்ளோன் (Super Cyclone): 1999ம் வருடம் அக்டோபர் 29ம் நாள் வெள்ளிக்கிழமை அன்று இந்தியாவின் ஒடிஷா மாநிலத்தின் கடற்கரையோர பகுதிகளை பெரும் சூறாவளி தாக்கியது. இது இந்திய வரலாற்றிலேயே அதிக வலுவுடன் வீசி மிகப் பெரிய பேரழிவை ஏற்படுத்திய சூறாவளி ஆகும். காற்று 260 கி. மீ வேகத்தில் வீசியது. கடலலை 7 மீட்டர் உயரத்திற்கு எழும்பி கடற்கரையிலிருந்து 20 கி. மீ தூரம் வரை உள்ளப் பகுதிகளில் சேதத்தை ஏற்படுத்தியது. மேலும் இச்சூறாவளியால் ஒடிஷாவின் 12 கடலோர மாவட்டங்களில் வாழ்ந்த 10 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டார்கள். சுமார் 10, 000 பேர் உயிரிழந்தனர்.

இந்தியப் பெருங்கடலில் உருவாகும் சூறாவளிகளுக்கு பெயர் சூட்டுவது தொடர்பாக வங்கதேசம், இந்தியா, மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் பங்கேற்று பொ. ஆ. 2000 ஆண்டு ஆலோசனை கூட்டம் நடத்தின. பின்னர் 2004ஆம் ஆண்ட ஒவ்வொரு நாடும் சூறாவளிக்கு பெயர்ப்பட்டியலை கொடுத்தன. இதனடிப்படையில், ஒவ்வொரு முறை சூறாவளி உருவாகும் போதும் இப்பட்டியலில் உள்ள பெயர்களை வரிசைக் கிரமமாக பயன்படுத்தி வருகிறோம்.

வளிமண்டலக் கீழ் அடுக்கில் (Troposhere) மட்டும் தான் அனைத்து வகையான மேகங்களும் காணப்படும்.

சூரிய மறைவின் பொழுது கீற்று மேகங்கள் பல வண்ணத்தில் காட்சியளிப்பதால் “பெண்குதிரை வால்கள்” (Mare’s Tails) என்றும் அழைக்கப்படுகிறது.

இடியுடன் கூடிய கல்மாரி மழை கல்மாரி புயல் என அழைக்கப்படுகிறது. இது வானிலை நிகழ்வுகளில் மிகவும் அஞ்சத்ததக்கதாகும். கல்மாரி மழை தாவரங்கள், மரங்கள் வேளாண் பயிர்கள், விலங்குகள் மற்றும் மனித உயிர்களை பறிக்கும் ஒரு பலத்த இயற்கை சீற்றமாகும்.

இந்தியாவில் அதிக மழையைப் பெறும் இடம் மௌசின்ராம். இது பூர்வாச்சல் மலையின் காற்று மோதும் பக்கம் அமைந்துள்ளது. ஆனால் இம்மலையின் காற்று மோதா பக்கம் அமைந்துள்ள “ஷில்லாங்” மிக குறைந்த அளவே மழையைப் பெறுகிறது. இதைப் போன்றே மும்பையும், பூனாவும் அமைந்துள்ளன.

காற்றின் ஒப்ப ஈரப்பதம் நூறு சதவிகிதமாக இருக்கும்போது காற்று பூரித நிலையை அடைகிறது. இந்நிலையில் காற்று நீராவியை உறிஞ்சாது. இந்தப் பூரித நிலையை “பனிவிழுநிலை” (Dew point) எனப்படுகிறது. ஈரப்பதத்தை அளப்பதற்கு ஈரப்பதமானி (Hygrometer) அல்லது ஈர உலர்க்குமிழ் வெப்பமானி (Wet and dry bulb) பயன்படுத்தப்படுகிறது.

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. ———— உயிர் வாழ இன்றியமையாத வாயுவாகும்.

(அ) ஹீலியம்

(ஆ) கார்பன்-டை-ஆக்சைடு

(இ) ஆக்சிஜன்

(ஈ) மீத்தேன்

2. வளிமண்டலத்தில் கீழாக உள்ள அடுக்கு ————– ஆகும்.

(அ) கீழடுக்கு

(ஆ) மீள் அடுக்கு

(இ) வெளியடுக்கு

(ஈ) இடையடுக்கு

3. ————- வானொலி அலைகளை பிரதிபலிக்கிறது.

(அ) வெளியடுக்கு

(ஆ) அயன அடுக்கு

(இ) இடையடுக்கு

(ஈ) மீள் அடுக்கு

4. புவியின் மேற்பரப்பில் காணப்படும் வெப்பத்தின் சராசரி அளவு————-

(அ) 12°

(ஆ) 13°

(இ) 14°

(ஈ) 15°

5. வாயு நிலையிலிருந்து திரவ நிலைக்கு நீரானது மாறுகின்ற செயல்பாட்டினை ————– என்று அழைக்கிறோம்.

(அ) பொழிவு

(ஆ) ஆவியாதல்

(இ) நீராவிப்போக்கு

(ஈ) சுருங்குதல்

6. ————— புவியின் முக்கிய ஆற்றல் மூலமாகும்.

(அ) சூரியன்

(ஆ) சந்திரன்

(இ) நட்சத்திரங்கள்

(ஈ) மேகங்கள்

7. அனைத்து வகை மேகங்களும் —————ல் காணப்படுகிறது.

(அ) கீழடுக்கு

(ஆ) அயன அடுக்கு

(ஈ) இடையடுக்கு

(ஈ) மேலடுக்கு

8. ———— செம்மறி ஆட்டு மேகங்கள் என்று அழைக்கப்படுகிறது.

(அ) இடைப்பட்ட திரள் மேகங்கள்

(ஆ) இடைப்பட்ட படை மேகங்கள்

(இ) கார்படை மேகங்கள்

(ஈ) கீற்றுப்படை மேகங்கள்

9. பருவக்காற்று என்பது ————-

(அ) நிலவும் காற்று

(ஆ) காலமுறைக் காற்றுகள்

(இ) தலக்காற்று

(ஈ) மேற்கண்ட எதுவுமில்லை

10. பனித்துளி பனிப்படிகமாக இருந்தால் ———– என்று அழைக்கின்றோம்.

(அ) உறைபனி

(ஆ) மூடுபனி

(இ) பனி

(ஈ) ஆலங்கட்டி

11. ———— புயலின் கண் என்று அழைக்கப்படுகிறது.

(அ) அழுத்தம்

(ஆ) காற்று

(இ) சூறாவளி

(ஈ) பனி

12. காற்றின் செங்குத்து அசைவினை ————— என்று அழைக்கின்றோம்.

(அ) காற்று

(ஆ) புயல்

(இ) காற்றோட்டம்

(ஈ) நகர்வு

II. பொருத்துக:

1. வானிலையியல் – அ] காற்றின் வேகம்

2. காலநிலையியல் – ஆ] காற்றின் திசை

3. காற்று வேகமானி – இ] கீற்று மேகம்

4. காற்று திசைமானி – ஈ] காலநிலை பற்றிய படிப்பு

5. பெண் குதிரை வால் – உ] வானிலை பற்றிய படிப்பு

6. காற்று மோதாப்பக்கம் – ஊ] ஆஸ்திரேலியா

7. வில்லி வில்லி – எ] மழை மறைவுப்பகுதி

விடைகள்:

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. ஆக்சிஜன், 2. கீழடுக்கு, 3. இடையடுக்கு, 4. 13°, 5. சுருங்குதல், 6. சூரியன், 7. கீழடுக்கு, 8. இடைப்பட்ட திரள் மேகங்கள், 9. காலமுறைக் காற்றுகள், 10. பனி, 11. சூறாவளி, 12. காற்றோட்டம்

II. பொருத்துக:

1. உ, 2. ஈ, 3. அ, 4. ஆ, 5. இ, 6. எ, 7. ஊ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!