Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Book Back QuestionsTnpsc

விசையும் இயக்கமும் Book Back Questions 7th Science Lesson 2

7th Science Lesson 2

2] விசையும் இயக்கமும்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

1 கிமீ/மணி = 5/18 மீ/வி. இதனை எவ்வாறு நாம் பெறுகிறோம் என்பதனைக் காண்போம். 1 கி.மீ = 1000 மீ. ஒரு மணி = 3600 வி. 1 கி.மீ/மணி = 1000 மீ/3600 வி = 5/18 மீ/வி.

நாட்டிகல் மைல்: வான் மற்றும் கடல் வழி போக்குவரத்துகளில் தொலைவினை அளக்கப் பயன்படுத்தப்படும் அலகு நாட்டிக்கல் மைல் ஆகும். ஒரு நாட்டிக்கல் மைல் என்பது 1.852 கி.மீ ஆகும். கப்பல் மற்றும் விமானங்களின் வேகங்களை அளக்கப் பயன்படும் அலகு நாட் எனப்படும். ஒரு நாட் என்பது ஒரு மணி நேரத்தில் ஒரு நாட்டிக்கல் மைல் தொலைவு கடக்கத் தேவைப்படும் வேகம் ஆகும்.

நான் எவ்வளவு வேகமானவன் பாருங்கள்: சிறுத்தையான நான் மிக வேகமாக ஓடும் விலங்கு ஆவேன். எனது வேகம் 25 மீ/வி முதல் 30 மீ/வி வரை ஆகும். என்னால் இரண்டு விநாடியில் எனது வேகத்தினை 0 விலிருந்து 20 மீ/வி ஆக மாற்றிக் கொள்ள முடியும். எனது முடுக்கம் வியப்பாக உள்ளது அல்லவா!

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. ஒரு பொருளானது r ஆரம் கொண்ட வட்டப்பாதையில் இயங்குகிறது. பாதி வட்டம் கடந்த பின் அப்பொருளின் இடப்பெயர்ச்சி

(அ) சுழி

(ஆ) r

(இ) 2 r

(ஈ) r/2

2. கீழே கொடுக்கப்பட்டிருக்கும் திசைவேகம் காலம் வரைபடத்திலிருந்து அப்பொருளானது

(அ) சீரான இயக்கத்தில் உள்ளது

(ஆ) ஓய்வு நிலையில் உள்ளது

(இ) சீரற்ற இயக்கத்தில் உள்ளது

(ஈ) சீரான முடுக்கத்தில் பொருள் இயங்குகிறது.

3. கீழே உள்ள படங்களில் எப்படமானது இயங்கும் பொருளின் சீரான இயக்கத்தினைக் குறிக்கிறது.

4. ஒரு சிறுவன் குடை இராட்டினத்தில் 10 மீ/வி என்ற மாறாத வேகத்தில் சுற்றி வருகிறான். இக்கூற்றிலிருந்து நாம் அறிவது

(அ) சிறுவன் ஓய்வு நிலையில் உள்ளான்

(ஆ) சிறுவனின் இயக்கம் முடுக்கப்படாத இயக்கமாகும்

(இ) சிறுவனின் இயக்கம் முடுக்கப்பட்ட இயக்கமாகும்

(ஈ) சிறுவன் மாறாத திசைவேகத்தில் இயங்குகிறான்

5. ஒரு பொருளின் சம நிலையை அதிகரிக்கப் பின்வருவனவற்றுள் எம்முறையினைப் பின்பற்றலாம்.

(அ) ஈர்ப்பு மையத்தின் உயரத்தினைக் குறைத்தல்

(ஆ) ஈர்ப்பு மையத்தின் உயரத்தினை அதிகரித்தல்

(இ) பொருளின் உயரத்தினை அதிகரித்தல்

(ஈ) பொருளின் அடிப்பரப்பின் அகலத்தினைக் குறைத்தல்

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. இரு இடங்களுக்கு இடையே உள்ள மிகக் குறைந்த நேர்கோட்டுப் பாதை ___________ எனப்படும்.

2. திசைவேகம் மாறும் வீதம் __________ ஆகும்.

3. ஒரு பொருளின் திசைவேகமானது காலத்தினைப் பொருத்து அதிகரித்தால் அப்பொருள் __________ முடுக்கத்தினைப் பெற்று இருக்கிறது என்கிறோம்.

4. வேகம்-காலம் வரைபடத்தின் சாய்வு __________ மதிப்பினைத் தருகிறது.

5. ___________ சமநிலையில் ஈர்ப்பு மையத்தின் நிலை மாறுவதில்லை.

பொருத்துக:

1. இடப்பெயர்ச்சி – நாட்

2. வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகம் – வடிவியல் மையம்

3. கப்பலின் வேகம் – மீட்டர்

4. ஒழுங்கான பொருள்களின் ஈர்ப்பு மையம் – அகலமான அடிப்பரப்பு

5. சமநிலை – சீரான திசைவேகம்

ஒப்புமை தருக:

1. திசைவேகம்: மீட்டர்/விநாடி:: முடுக்கம்: ___________

2. அளவுகோலின் நீளம்:: மீட்டர்: வானூர்தியின் வேகம் ____________

3. இடப்பெயர்ச்சி/காலம்: திசைவேகம்:: தொலைவு/காலம்: ______________

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. (r/2) 2. சீரான முடுக்கத்தில் பொருள் உள்ளது 3. (ஈ)

4. சிறுவன் மாறாத திசைவேகத்தில் இயங்குகிறான் 5. ஈர்ப்பு மைத்தில் உயரத்தினை குறைத்தல்.

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. இடப்பெயர்ச்சி 2. முடுக்கம் 3. நேர் 4. நேர், எதிர்குறி மாறிலி 5. உறுதி

பொருத்துக: (விடைகள்)

1. இடப்பெயர்ச்சி – மீட்டர்

2. வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகம் – சீரான திசைவேகம்

3. கப்பலின் வேகம் – நாட்

4. ஒழுங்கான பொருள்கிளின் ஈர்ப்புமையம் – வடிவியல் மையம்

5. சமநிலை – அகலமான அடிப்பரப்பு

ஒப்புமை தருக: (விடைகள்)

1. மீ/வி2 2. நாட் 3. வேகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!