Book Back QuestionsTnpsc

விஜயநகர், பாமினி அரசுகள் Book Back Questions 7th Social Science Lesson 11

7th Social Science Lesson 11

11] விஜயநகர், பாமினி அரசுகள்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

முதலாம் புக்கருடைய மகனான குமார கம்பணா மதுரை சுல்தானியத்திற்கு முற்றுப்புள்ளி வைத்ததோடு அங்கு ஒரு நாயக்க அரசை நிறுவுவதிலும் வெற்றி பெற்றார். குமார கம்பணாவின் மனைவி கங்காதேவியால் எழுதப்பெற்ற மதுரா விஜயம் என்னும் நூலில் விஜயநகரப் பேரரசால் மதுரை கைப்பற்றப்பட்டதைத் தெளிவாக விளக்குகிறது.

கிழக்குக் கர்நாடகத்தில், துங்கபத்ரா நதியின் கரையில் உள்ள விஜயநகரம் இருந்த இடம் தற்போது ‘ஹம்பி’ என அழைக்கப்படுகிறது. ஹம்பி சீர் குலைந்து இடிபாடுகளாகக் காணப்படுகிறது. யுனெஸ்கோ ஹம்பியை பாரம்பரியச் சின்னமாக அறிவித்துள்ளது.

“அமுக்தமால்யதா” தெலுங்கு இலக்கியத்தின் தலைசிறந்த படைப்பாகக் கருதப்படுகிறது. இது, பெரியாழ்வாரின் மகளான கோதை தேவியைப் பற்றியதாகும். கடவுள் ரங்கநாதருக்கு அணிவிப்பதற்காகத் தொடுக்கப்பட்ட மாலைகளை அவருக்குச் சூடுவதற்கு முன்பாக இவ்வம்மையார் சூடிக்கொள்வார். அமுக்தமால்யதா என்பதற்கு தான் அணிந்த பின்னர் கொடுப்பவர் எனப்பொருள்.

பச்சை கலந்த நீல வண்ணக் கல்லானது விலையுயர்ந்த அணிகலன்களில் பயன்படுத்தப்படும் கல்லாகும். பாரசீக அரசர்களின் அணிகலன்களால் அலங்கரிக்கப்பட்ட சிம்மாசனங்களில் இத்தகைய வண்ணக்கல்லால் ஆன அரியணையும் ஒன்றாகுமெனப் பிர்தௌசி தன்னுடைய ஷா நாமா எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

கோல்கொண்டா கோட்டையானது ஹைதராபாத்திலிருந்து 11 கி. மீ தொலைவில், ஒரு குன்றின் மீது 120 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. ஒலி தொடர்பான கட்டடக்கலை அம்சங்களுக்கு இக்கோட்டை பெயர் பெற்றதாகும். கோட்டையின் மிக உயரமான இடம் பால ஹிசார் ஆகும். தர்பார் மண்டபத்திலிருந்து குன்றின் கீழே அமைந்துள்ள அரண்மனைக்குச் சுரங்கப்பாதை இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

பாமினி அரசின் எட்டு அமைச்சர்கள்:

1. வக்கீல்-உஸ்-சல்தானா அல்லது அரசின் பிரதம அல்லது முதலமைச்சர் அரசருக்கு அடுத்த நிலையில் துணையதிகாரியாகச் செயல்பட்டவர்.

2. பேஷ்வா நாட்டின் பிரதம மந்திரியோடு இணைந்து செயல்பட்டவர்.

3. வஸிரி-குல் ஏனைய அமைச்சர்களின் பணிகளை மேற்பார்வையிட்டவர்.

4. அமிர்-இ-ஜிம்லா நிதியமைச்சர்.

5. நஷீர்- உதவி நிதியமைச்சர்.

6. வஷிர்-இ-அசாரப்-வெளியுறவுத்துறை அமைச்சர்.

7. கொத்தவால்-காவல்துறைத் தலைவர் மற்றும் நகர குற்றவியல் நடுவர்.

8. சதார்-இ-ஜகான்-தலைமை நீதிபதி, சமயம் மற்றும் அறக்கொடைகளின் அமைச்சர்.

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. சங்கம வம்சத்தின் மிக சிறந்த ஆட்சியாளர் யார்?

(அ) புக்கர்

(ஆ) தேவராயா II

(ஈ) ஹரிஹரர் II

(ஈ) கிருஷ்ண தேவராயர்

2. விஜயநகர கட்டட தூண்களில் பெரும்பாலும் காணப்படும் விலங்கு எது?

(அ) யானை

(ஆ) குதிரை

(இ) பசு

(ஈ) மான்

3. சங்கம வம்சத்தின் கடைசி அரசர் யார்?

(அ) ராமராயர்

(ஆ) திருமலதேவராயா

(இ) இரண்யம் தேவராயர்

(ஈ) இரண்டாம் விருபாக்சராயர்

4. மதுரை சுல்தானிய அரசை முடிவுக்குக் கொண்டு வந்தவர்

(அ) சாளுவ நரசிம்மர்

(ஆ) இரண்டாம் தேவராயர்

(இ) குமார கம்பண்ணா

(ஈ) திருமலை தேவராயர்

5. பாமினி அரசில் சிறந்த மொழியறிஞராகவும், கவிஞராகவும் விளங்கியவர்

(அ) அலாவுதீன் ஹசன்விரா

(ஆ) முகம்மது I

(இ) சுல்தான் பெரோஸ்

(ஈ) முஜாஹித்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. ஆரவீடு வம்சத்தின் தலைநகரம் —————-

2. விஜயநகரப் பேரரசர்களால் வெளியிட்டப்பட்ட நாணயங்களுக்கு ————– என்று பெயர்.

3. முகமது கவான் வெடிமருந்து தயாரிக்கவும் அதனைப் பயன்படுத்துவது பற்றி விளக்குவதற்காகவும் ————— வேதியியல் அறிஞர்களை வரச் செய்தார்.

4. விஜயநகர் நிர்வாகத்தில் கிராம விவகாரங்களை ————— கவனித்தார்.

III. பொருத்துக:

அ – ஆ

1. விஜயநகரா – அ) ஒடிசாவின் ஆட்சியாளர்

2. பிரதாபருத்ரா – ஆ) அஷ்டதிக்கஜம்

3. கிருஷ்ண தேவராயா -இ) பாண்டுரங்க மகாமத்தியம்

4. அப்துர் ரசாக் – ஈ) வெற்றியின் நகரம்

5. தெனாலிராமகிருஷ்ணா – உ) பாரசீக சிற்ப கலைஞர்

IV. பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

கூற்று: இந்தியாவில் விஜயநகர அரசின் இராணுவம் அச்சுறுத்தக் கூடியதாக இருந்தது.

காரணம்: விஜயநகர இராணுவம் பீரங்கி படை மற்றும் குதிரைப் படையை கொண்டிருந்தது.

(அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல

(ஆ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்

(இ) காரணம் மற்றும் கூற்று தவறு

(ஈ) காரணம் மற்றும் கூற்று சரி

2. தவறான இணையைக் கண்டறிக:

(அ) பட்டு – சீனா

(ஆ) வாசனைப் பொருட்கள் – அரேபியா

(இ) விலைமதிப்பற்ற கற்கள் – பர்மா

(ஈ) மதுரா விஜயம் – கங்கா தேவி

3. பொருந்தாததைக் கண்டறிக:

(அ) ஹரிஹரர் II

(ஆ) மகமுது I

(இ) கிருஷ்ண தேவராயர்

(ஈ) தேவராயா I

4. பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

I. பச்சைக்கலந்த நீலவண்ணத்தைக் கொண்ட விலையுயர்ந்த கற்களால் ஆன அரியணை பாரசீக அரசர்களின் அரசவையை அலங்கரித்தன என பிர்தௌசி தன்னுடைய ஷா நாமா எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

II. விஜயநகர, பாமினி அரசர்களுக்கிடையே மோதல்கள் ஏற்படுவதற்குக் கிருஷ்ணா-துங்கபத்ரா நதிகளுக்கு இடைப்பட்ட செழிப்பான பகுதி மற்றும் கிருஷ்ணா-கோதாவரி நதிகளுக்கு இடைப்பட்ட கழிமுகப் பகுதியே காரணமாக அமைந்தன.

III. முதலாம் முகமது முல்தானில் கல்வி பயின்றார்.

IV. முகமது கவான் மூன்றாம் முகமதுவின் கீழ் தனித்தன்மை மிக்க பிரதம அமைச்சராக பணியாற்றினார்.

(அ) I மற்றும் II சரி

(ஆ) I, II மற்றும் III சரி

(இ) II, III மற்றும் IV சரி

(ஈ) III மற்றும் IV சரி

V. சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக:

1. பாமினி அரசைத் தோற்றுவித்தவர்கள் ஹரிஹரர் மற்றும் புக்கர் ஆவார்கள்.

2. இருபது ஆண்டுகள் ஆட்சி செய்த கிருஷ்ணதேவராயர் சங்கம வம்சத்தின் மிகச்சிறந்த அரசராவார்.

3. அஸ்டதிக்கஜத்தில் அல்லசானி பெத்தண்ணா குறிப்பிட தகுந்தவராவார்.

4. விஜயநகரப் பேரரசில் அரசுரிமை என்பது பரம்பரையாகவும், பிறப்புரிமையின் அடிப்படையிலும் வழங்கப்பட்டது.

5. பாமினி அரசில் 18 முடியரசுகள் இருந்தன.

விடைகள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. தேவராயா II, 2. குதிரை, 3. இரண்டாம் விருபாக்சராயர், 4. குமார கம்பண்ணா, 5. சுல்தான் பெரோஸ்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. பெனுகொண்டா, 2. வராகன், 3. பாரசீக, 4. கௌடா

III. பொருத்துக:

1. ஈ, 2. அ, 3. ஆ, 4. உ, 5. இ

IV. பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

1. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம், 2. வாசனைப் பொருட்கள் – அரேபியா, 3. மகமுது I, 4. II, III மற்றும் IV சரி

V. சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக:

1. 1. விஜயநகர பேரரசை, 2. துளுவ, 3. சரி, 4. சரி, 5. சரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!