Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Book Back QuestionsTnpsc

விலங்குகளின் இயக்கம் Book Back Questions 8th Science Lesson 19

8th Science Lesson 19

19] விலங்குகளின் இயக்கம்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

பாம்புகளுக்கு கால்கள் கிடையாது. நகர்வதற்கு அவை தங்களது தசைகள் மற்றும் செதில்களைப் பயன்படுத்துகின்றன.

சிறுத்தை மணிக்கு 76 கி.மீ வேகத்தில் ஓடக்கூடியது. நீர் யானை மனிதனை விட வேகமாக ஓடக்கூடியது. 6 கால்களில் நடக்கும் விலங்குகள் கரப்பான் பூச்சியே வேகமாக ஓடக்கூடியது. அது, 1 மீட்டர் தூரத்தை கிட்டத்தட்ட 1 வினாடியில் கடக்கும். மிக விரைவாக நீந்தும் பாலூட்டியான டால்பின் ஒரு மணி நேரத்தில் 35 மைல்கள் வரை நீந்தும்.

மீன்கள் கூர்மையான உடல் அமைப்பைப் பெற்றுள்ளன. எனவே, அவற்றால் நீரின் ஓட்டத்துடன் சீராகச் செல்ல முடிகிறது. உடல் மற்றும் வாலில் உள்ள தசைகள் மற்றும் செதில்கள் சமநிலையைப் பேணுவதற்கு அவற்றிற்கு உதவுகின்றன.

மூட்டுகள் என்பவை இரண்டு எலும்புகள் சந்திக்கும் அல்லது இணையும் இடமாகும். தசைநார்கள் என்பவை இணைப்புத் திசுக்களின் கடினமான குறுகிய பட்டைகள் ஆகும். இவை ஒரு எலும்புடன் மற்றொரு எலும்பை இணைத்து மூட்டுகளை உருவாக்குகின்றன. டெண்டான்கள் என்பவை மீள் திசுக்களால் ஆனவை. அவை மூட்டுகளின் செயல்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

மூட்டுகளின் அழற்சி என்பது பொதுவாக குருத்தெலும்பில் ஏற்படும் உராய்வின் காரணமாகவோ அல்லது மூட்டுகளில் சினோவியல் திரவம் இல்லாதாலோ ஏற்படுகின்றது. இந்த நிலையில் ஒருவர், மூட்டுகளை நகர்த்தும் போது மூட்டுகளில் கடுமையான வலியை உணர்கிறார். இந்த நோய் கீழ்வாதம் அல்லது மூட்டு வீக்கம் (ஆர்த்ரைடிஸ்) என்று குறிப்பிடப்படுகிறது. மூட்டுகளில் யூரிக் அமிலப் படிகங்கள் படிவதாலும் மூட்டு வீக்கம் ஏற்படுகிறது.

பீமர் அல்லது தொடை எலும்பே மனித எலும்புக் கூட்டின் மிக நீளமான மற்றும் வலிமையான எலும்பு ஆகும். நடுச்செவியில் உள்ள “ஸ்டேபஸ்” என்ற எலும்பே மனித எலும்புக் கூட்டின் மிகச்சிறிய மற்றும் லேசான எலும்பு ஆகும்.

மனிதன் மற்றும் ஒட்டகச் சிவிங்கியின் கழுத்தில் ஒரே எண்ணிக்கையிலான எலும்புகள் உள்ளன. ஆனால், ஒட்டகச் சிவிங்கியின் முதுகெலும்புகள் மிக நீளமானவை.

முடியின் வேர்களில் தசைகள் உள்ளன. அவை உங்களுக்கு சிலிப்புகளைக் கொடுக்கின்றன. புன்னகைக்க 17 தசைகளும், கோபப்பட 42 தசைகளும் தேவைப்படுகின்றன. அதிகமாக வேலை செய்யும் தசைகள் கண்ணில் காணப்படுகின்றன.

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. நமது உடலின் பின்வரும் பாக்ங்களுள் எவை இயக்கத்திற்கு உதவுகின்றன?

(i) எலும்புகள்

(ii) தோல்

(iii) தசைகள்

(iv) உறுப்புகள்

கீழே உள்ளவற்றிலிருந்து சரியான பதிலைத் தேர்வு செய்க:

அ) (i) மற்றும் (iii)

ஆ) (ii) மற்றும் (iv)

இ) (i) மற்றும் (iv)

ஈ) (iii) மற்றும் (ii)

2. பின்வரும் உயிரினங்களுள் எதில் இயக்கதிற்குத் தேவையான தசைகள் மற்றும் எலும்புகள் காணப்படுவதில்லை?

அ) நாய்

ஆ) நத்தை

இ) மண்புழு

ஈ) மனிதர்

3. மூட்டுகள் அசையாதவை

அ) தோள்பட்டை மற்றும் கை

ஆ) முழங்கால் மற்றும் மூட்டு

இ) மேல் தாடை மற்றும் மண்டை ஓடு

ஈ) கீழ் தாடை மற்றும் மேல் தாடை

4. நீருக்கடியில் நீந்துபவர்கள் ஏன் காலில் துடுப்பு போன்ற ஃபிளிப்பர்களை அணிகிறார்கள்?

அ) தண்ணீரில் எளிதாக நீந்த

ஆ) ஒரு மீன் போல காணப்பட

இ) நீரின் மேற்பரப்பில் நடக்க

ஈ) கடலின் அடிப்பகுதியில் நடக்க (கடல் படுக்கை)

5. உங்கள் வெளிப்புறக் காதினைத் (பின்னா) தாங்குவது எது?

அ) எலும்பு

ஆ) குருத்தெலும்பு

இ) தசைநார்

ஈ) காப்ஸ்யூல்

6. கரப்பான் பூச்சி எதன் உதவியுடன் நகர்கிறது?

அ) கால்

ஆ) எலும்பு

இ) தசைக்கால்

ஈ) முழு உடல்

7. முதுகெலும்புகளின் பின்வரும் வகைகளில் எதற்கு சரியான எண்ணிக்கை உள்ளது?

அ) கழுத்தொலும்பு-7

ஆ) மார்பெலும்பு-10

இ) இடுப்பு எலும்பு-4

ஈ) வால் எலும்பு-4

8. _______________ என்பது சுருங்கி விரியும் திசுக்கற்றை.

அ) எலும்பு

ஆ) எலும்புக்கூடு

இ) தசை

ஈ) மூட்டுகள்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. உயிரினங்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்வது ___________ எனப்படும்

2. ____________ என்பது ஒரு உயிரினத்தின் உடல் பகுதியின் நிலையிலுள்ள மாற்றத்தைக் குறிக்கிறது.

3. உடலுக்கு வலிமையான கட்டமைப்புபை வழங்கும் அமைப்பு _____________ எனப்படும்.

4. மனிதனின் அச்சு எலும்புக்கூடு ____________,_______________,_______________ மற்றும் ___________ ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

5. மனிதனின் இணைப்பு எலும்புக் கூடு _____________ மற்றும் _____________ ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

6. இரண்டு எலும்புகள் சந்திக்கும் இடம் ______________ என அழைக்கப்படுகிறது.

7. அசையாத மூட்டு _______________ல் காணப்படும்

8. இரத்த நாளங்கள், கருவிழி, மூச்சுக்குழாய் மற்றும் தோல் போன்ற உடலின் மென்மையான பாகங்களுடன் _____________ இணைக்கப்பட்டுள்ளது.

9. _____________ தசை கண்பாவையை அகலமாக்குகிறது.

III. சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக

1. மனிதர்களின் மண்டை ஓடு 22 எலும்புகளைக் கொண்டுள்ளது.

2. மனித முதுகுத் தண்டில் 30 முதுகெலும்புகள் உள்ளன.

3. மனித உடலில் 12 ஜோடி விலா எலும்புகள் உள்ளன.

4. இடுப்பு என்பது அச்சு எலும்புக் கூட்டின் ஒரு பகுதியாகும்.

5. கீல் மூட்டு சற்று நகரக் கூடிய மூட்டு.

6. இதயத் தசை ஒரு இயக்கு தசை.

7. கையில் காணப்படும் வளைதசைகளும் நீள் தசைகளும் எதிரெதிர் தசைகளாகும்.

விடைகள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. (i) மற்றும் (iii), 2. நத்தை, 3. மேல் தாடை மற்றும் மண்டை ஓடு, 4. தண்ணீரில் எளிதாக நீந்த, 5. குருத்தெலும்பு, 6. முழு உடல், 7. கழுத்தொலும்பு-7, 8. தசை

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. இடம் பெயர்தல், 2. இயக்கம் , 3. எலும்பு மண்டலம், 4. மண்டைஓடு, முக எலும்புகள், ஸ்டெர்னம், விலா எலும்புகள் மற்றும் முதுகெலும்பு தொடர், 5. தோள்பட்டை மற்றும் இடுப்பெலும்பு, 6. மூட்டு , 7. மண்டைஓடு, 8. வரியற்ற மென்மையான தன்னிச்சையற்ற தசை, 9. ரேடியல்

III. சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக

1 .சரி, 2. 27, 3. சரி, 4. இணையுருப்பின், 5. சரி, 6. இயங்கு, 7. சரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!