Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Book Back QuestionsTnpsc

விலங்குலகம் Book Back Questions 9th Science Lesson 17

9th Science Lesson 17

17] விலங்குலகம்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

முதுகு நாண்: இது கருவளர்ச்சியின் போது உடலில் உள்ள நடு முதுகுப் பகுதியில் உருவாக்கப்படும் நீண்ட கோல் வடிவ அமைப்பு ஆகும். இது முதன்மை உயிரிகளில் மட்டும் நிலைத்திருக்கும். ஆனால், மற்ற விலங்குகளில் முதுகெலும்புத் தொடராக மாற்றமடைகிறது.

சென்டிபீட் (பூரான்) என்பதற்கு நூறு காலிகள் என்று பொருள். ஆனால் பெரும்பாலானவை 30 இணைக்கால்களை மட்டுமே பெற்றுள்ளன. மில்லிபீட் (மரவட்டை) என்பதற்கு ஆயிரம் கால்கள் என்று பொருள். இவை நூறு கால்களை மட்டுமே பெற்றுள்ளன.

உணர்ச்சி, தன்விழிப்புணர்வு, ஆளுமை, அறிவாற்றல், தனித்தன்மை மற்றும் மனிதர்களுடனான தொடர்பு போன்ற பண்புகளைக் கொண்ட ஒரே முதுகு நான் அற்ற உயிரி ஆக்டோபஸ் ஆகும். பூமியின் மீது மனிதனுக்கு அடுத்து அதிக ஆதிக்கம் செலுத்துபவைகளாக ஆக்டோபஸ்கள் விளங்கும் என சிலர் யூகிக்கின்றனர்.

மிகச்சிறிய முதுகெலும்பியான பிலிப்பைன் கோபி/குட்டை பிக்மி கோபி (dwaf pygmy goby) வெப்ப மண்டலப் பகுதியில் வாழும் மீனினமாகும். இவை தென்கிழக்காசியாவின் சதுப்பு நிலங்கள் மற்றும் உப்பு நீர்நிலைகளில் காணப்படுகின்றன. இவை 10 மி.மீ மட்டுமே நீளம் கொண்டவை.

சீனாவின் ராட்சத சாலமான்டர் ஆன்டிரியஸ் டாவிடியன்ஸ் (Andrias davidians) உலகிலேயே மிகப்பெரிய இருவாழ்வியாகும். இது ஐந்து அடி மற்றும் பதினொரு அங்குல நீளமும், 65 கிலோ எடையும் உடையது. இது மத்திய மற்றும் தெற்கு சீனாவில் காணப்படுகின்றது.

தமிழ்நாட்டின் மாநிலப் பறவை மரகதப் புறா (Chalcophaps indica).

முதுகெலும்புடைய விலங்குகளில் 35 மீட்டர் நீளமும் 120 டன் எடையும் கொண்ட ராட்சத நீலத் திமிங்கிலமே மிகப் பெரிய விலங்காகும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. பின்வரும் தொகுதிகளில் கடல் வாழ் உயிரினங்களை மட்டும் கண்டறிக.

(அ) மெல்லுடலிகள்

(ஆ) துளையுடலிகள்

(இ) குழியுடலிகள்

(ஈ) முட்தோலிகள்

2. மீசோகிளியா காணப்படுவது

(அ) துளையுடலிகள்

(ஆ) குழியுடலிகள்

(இ) வளைதசையுடலிகள்

(ஈ) கணுக்காலிகள்

3. பின்வரும் ஜோடிகளில் எது குளிர் இரத்தப் பிராணி அல்ல?

(அ) மீன்கள் மற்றும் இரு வாழ்விகள்

(ஆ) இருவாழ்விகள் மற்றும் பறவைகள்

(இ) பறவைகள் மற்றும் பாலூட்டிகள்

(ஈ) ஊர்வன மற்றும் பாலூட்டிகள்

4. நான்கு அறைகளையுடைய இதயம் கொண்ட விலங்கினைக் கண்டறிக.

(அ) பல்லி

(ஆ) பாம்பு

(இ) முதலை

(ஈ) ஓணான்

5. மண்டையோடற்ற உயிரிகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

(அ) ஏக்ரேனியா

(ஆ) ஏசெபாலியா

(இ) ஏப்டீரியா

(ஈ) ஏசீலோமேட்டா

6. இரு பாலின (Hermaphrodite) உயிரிகள் எவை?

(அ) ஹைடிரா, நாடாப்புழு, மண்புழு, ஆம்பியாக்சஸ்

(ஆ) ஹைடிரா, நாடாப்புழு, மண்புழு அசிடியன்

(இ) ஹைடிரா, நாடாப்புழு, மண்புழு, பலனோகிளாசஸ்

(ஈ) ஹைடிரா, நாடாப்புழு, அஸ்காரிஸ், மண்புழு

7. குளிர் இரத்தப் பிராணிகள் எவை?

(அ) மீன், தவளை, பல்லி, மனிதன்

(ஆ) மீன், தவளை, பல்லி, மாடு

(இ) மீன், தவளை, பல்லி, பாம்பு

(ஈ) மீன், தவளை, பல்லி, காகம்

8. காற்றுறைகள் மற்றும் காற்றெலும்புகள் காணப்படுவது எதில்?

(அ) மீன்

(ஆ) தவளை

(இ) பறவை

(ஈ) வெளவால்

9. நாடாப்புழுவின் கழிவு நீக்க உறுப்பு எது?

(அ) சுடர் செல்கள்

(ஆ) நெஃப்ரீடியா

(இ) உடற்பரப்பு

(ஈ) சொலினோசைட்டுகள்

10. குழல் போன்ற உணவுக்குழலைக் கொண்டது எது?

(அ) ஹைடிரா

(ஆ) மண்புழு

(இ) நட்சத்திர மீன்

(ஈ) அஸ்காரிஸ் (உருளைப்புழு)

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. துளையுடலிகளின் கழிவு நீக்கத் துளை ____________

2. டினிடியா என்ற சுவாச உறுப்புகள் __________ ல் காணப்படும்.

3. ஸ்கேட்ஸ் என்பது ____________ மீன்களாகும்.

4. __________ இரு வாழ்விகளின் லார்வா ஆகும்.

5. __________ என்பது தாடையற்ற முதுகெலும்பிகள் ஆகும்.

6. ____________ ஆனது பாலூட்டிகளின் சிறப்புப் பண்பாகும்.

7. முட்கள் கொண்ட எறும்பு உண்ணியானது ___________ பாலூட்டிக்கு உதாரணமாகும்.

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக:

1. கால்வாய் மண்டலம் குழியுடலிகளில் காணப்படுகிறது.

2. இருபால் உயிரிகள் ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க உறுப்புகளைப் பெற்றுள்ளன.

3. வளைதசையுடலிகளின் சுவாச உறுப்பு டிரக்கியா ஆகும்.

4. மெல்லுடலிகளின் லார்வா பின்னேரியா ஆகும்.

5. பலனோகிளாசஸ் குறுஇழை வழி உணவூட்டிகளாகும்.

6. மீன்களின் இதயம் இரண்டு அறைகளை உடையது.

7. மென்மையான மற்றும் ஈரப்பதமான தோலினை ஊர்வன கொண்டுள்ளன.

8. முன்னங்கால்களின் மாறுபாடுகளே பறவைகளின் இறக்கைகளாகும்.

9. பாலூட்டிகளில் பால் சுரப்பிகள் பெண் இனங்களில் காணப்படுகின்றன.

பொருத்துக:

1. குழியுடலிகள் – (i) நத்தை

2. தட்டைப்புழுக்கள் – (ii) நட்சத்திர மீன்

3. முட்தோலிகள் – (iii) நாடாப்புழு

4. மெல்லுடலிகள் – (iv) ஹைட்ரா

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. முட்தோலிகள் 2. குழியுடலிகள் 3. பறவைகள் மற்றும் பாலூட்டிகள் 4. முதலை 5. ஏகாரினியா 6. ஹைடிரா, நாடாப்புழு, மண்புழு, அசிடியன் 7. மீன், தவளை, பல்லி, பாம்பு 8. பறவை 9. சுடர் செல்கள் 10. நட்சத்திர மீன்

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. ஆஸ்குலம் 2. தொகுதி மெல்லுடலிகள் 3. குறுத்தெலும்பினால் ஆன எலும்பு சட்டக 4. தலை பிரட்டை 5. வட்ட வாயுடைய உயிரிகள் 6. தாய்சேய் இணைப்புத்திசு 7. முட்டையிடும்

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: (தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக)

1. தவறு

சரியான விடை: கால்வாய் மண்டலம் துளையுடலிகளில் காணப்படுகிறது.

2. சரி

3. தவறு

சரியான விடை: ஆர்த்ரோபோடா சுவாச உறுப்பு டிரக்கியா ஆகும்.

4. சரி

5. சரி

6. சரி

7. தவறு

சரியான விடை: சொர சொரப்பான முட்கள் போன்ற ஈரப்பதமான தோலிளை ஊர்வன கொண்டுள்ளன.

8. சரி

9. சரி

பொருத்துக:

1. குழியடலிகள் – ஹைட்ரா

2. தட்டைப்புழுக்கள் – நாடாப்புழு

3. முட்தோலிகள் – நட்சத்திர மீன்

4. மெல்லுடலிகள் – நத்தை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!