Book Back QuestionsTnpsc

வெப்பம் Book Back Questions 9th Science Lesson 7

9th Science Lesson 7

7] வெப்பம்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

சிலநேரங்களில் நாய் தனது நாக்கை வெளியே தொங்கவிட்டுக் கொண்டே சுவாசிப்பதைப் பார்த்திருப்பீர்கள். அப்படி சுவாசிக்கும் போது அதன் நாக்கிலிருக்கும் ஈரப்பதம் திரவமாக மாறி, பின் ஆவியாகிவிடும், திரவநிலை வாயு நிலைக்கு மாற வெப்ப ஆற்றல் தேவைப்படும். இந்த வெப்ப ஆற்றல் நாயின் நாக்கில் இருந்து பெறப்படுகிறது. இவ்வாறு நாய் தன் நாக்கில் இருக்கும் தன் வெப்பத்தை வெளியேற்றி தன்னைக் குளிர்வித்துக்கொள்கிறது.

விறகு அடுப்பைப் பயன்படுத்தும் போது வெப்பம் பரவும் மூன்று வழிகளையும் நாம் பார்க்கலாம். விறகினை எரிக்கும் போது ஒரு முனையில் இருந்து மறுமுனைக்கு வெப்பக்கடத்தல் மூலம் வெப்பம் பரவுகிறது. எரியும் விறகின் மேற்பகுதியில் இருக்கும் காற்று வெப்பமாகி மேலெழுந்து செல்வதால் வெப்பச்சலம் மூலம் வெப்பம் கடத்தப்படுகிறது. வெப்பக் கதிர்வீச்சினால் அடுப்பிலிருந்து வரும் வெப்பத்தை நாம் உணர முடிகிறது.

கணக்கீடு 1: வெப்பநிலை அளவீட்டை மாற்றுக: i) 25o C ஐ கெல்வின் அளவீட்டிற்கு மாற்றுக. ii) 200 K ஐ oC அளவீட்டிற்கு மாற்றுக.

தீர்வு: (i) TK = ToC + 273.15 = 25 + 273.15 = 298.15 K

(ii) ToC = TK = 273.15 = ToC = 200 – 273.15 = -73.15oC

கணக்கீடு 2: வெப்பநிலை அளவீட்டை மாற்றுக: i) 35oC ஐ பாரன்ஹீட் (oF) அளவீட்டிற்கு மாற்றுக. ii) 14oF ஐ oC அளவீட்டில் எழுதுக.

தீர்வு: (i) ToF = ToC x 1.8 + 32 = 25oC x 1.8 + 32 = 77oF

(ii) ToC =(ToF – 32)/1.8 = (14oF – 32)/1.8 = -10oC

கணக்கீடு 3: 2 கிகி நீரின் வெப்ப நிலையை 10oC லிருந்து 50oF க்கு அதிகரிக்கத் தேவைப்படும் வெப்ப ஆற்றல் எவ்வளவு? (நீரின் தன் வெப்ப ஏற்புத் திறன் 4200 JKg-1K-1)

தீர்வு: கொடுக்கப்பட்டுள்ள தரவுகள்: m = 2 Kg, ∆T = (50 – 10) = 40oC

கெல்வினில் மாற்றும் பொழுது

(323.15 – 283.15) = 40 K

C = 4200 JKg-1 K-1

ஃ தேவையான வெப்பம்,

Q = m x C x ∆T = 2 x 4200 x 40 = 3,36,000 J

பல்வேறு நிலைகளில் இருக்கும் நீரின் தன் வெப்ப ஏற்புத் திறன் அளவு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நீர் (திரவநிலை) = 4200 JKg-1 K-1; பனிக்கட்டி (திட நிலை) = 2100 JKg-1 K-1; நீராவி (வாயு நிலை) = 460 JKg-1 K-1.

கணக்கீடு 4: ஒரு இரும்புக் குண்டுக்கு அதனுடைய வெப்பநிலையை 20oC உயர்த்திக் கொள்ள 5000 J வெப்ப ஆற்றல் கொடுக்கப்படுகிறது. அந்த இரும்புக் குண்டின் வெப்ப ஏற்புத் திறன் எவ்வளவு?

தீர்வு: கொடுக்கப்பட்டுள்ள தரவுகள்: Q = 5000 J, t = 20oC = 20 K

ஃ வெப்ப ஏற்புத் திறன் = தேவையான வெப்ப ஆற்றல், Q/வெப்ப நிலை மாற்றம், t = 5000/20 = 250 JK-1

கணக்கீடு 5: 5 கிகி பனிக்கட்டி உருகுவதற்கு எவ்வளவு வெப்ப ஆற்றல் தேவை? (பனிக்கட்டியின் தன் உள்ளுறை வெப்பம் = 336 Jg-1).

தீர்வு: கொடுக்கப்பட்டுள்ள தரவுகள்: m = 5 கிகி = 5000 கி, L = 336 Jg-1

தேவைப்படும் வெப்ப ஆற்றல் = m x L = 5000 x 336 = 1680000 J அல்லது 1.68 x 106 J

கணக்கீடு 6: 100oC வெப்ப நிலையில் இருக்கும் நீரைப் பயன்படுத்தி 2 கிகி நிறையுள்ள பனிக்கட்டியுடன் சேர்த்த கலவையை 0oC வரை குளிர்விக்க எவ்வளவு வெந்நீர் தேவைப்படும்? நீரின் தன் வெப்ப ஏற்புத் திறன் = 4.2 JKg-1 K-1 மற்றும் பனிக்கட்டியின் உள்ளுறை வெப்பம் = 336 Jg-1.

தீர்வு: கொடுக்கப்பட்டுள்ள தரவுகள்: பனிக்கட்டியின் நிறை = 2 kg = 2000 g. m என்பது வெந்நீரின் நிறையென்க. இழந்த வெப்பம் = பெற்றுக்கொண்ட வெப்பம்

m x C x ∆t = m x L

m x 4.2 x (100 – 0) = 2000 x 336

m = 2000 x 336 / 4.2 x 100 = 1600 கி அல்லது 1.6 கிகி.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. கலோரி என்பது எதனுடைய அலகு?

(அ) வெப்பம்

(ஆ) வேலை

(இ) வெப்பநிலை

(ஈ) உணவு

2. வெப்ப நிலையின் SI அலகு

(அ) ஃபாரன்ஹீட்

(ஆ) ஜீல்

(இ) செல்சியஸ்

(ஈ) கெல்வின்

3. ஒரே நீளமுள்ள இரண்டு உருளை வடிவிலுள்ள கம்பிகளின் குறுக்கு வெட்டுப் பரப்பின் விகிதம் 2:1 இரண்டு கம்பிகளும் ஒரே மாதிரியான பொருளினால் செய்யப்பட்டிருந்தால் எந்தக் கம்பி வெப்பத்தை அதிகம் கடத்தும்?

(அ) இரண்டும்

(ஆ) கம்பி-2

(இ) கம்பி-1

(ஈ) எதுவும் இல்லை.

4. மூலக்கூறுகளின் இயக்கமின்றி வெப்பமானது ஒரு மூலக்கூறில் இருந்து அருகில் இருக்கும் மற்றொரு மூலக்கூறுக்கு வெப்பத்தைக் கடத்தும் முறையின் பெயர் என்ன?

(அ) வெப்பக்கதிர் வீச்சு

(ஆ) வெப்பக்கடத்தல்

(இ) வெப்பச்சலனம்

(ஈ) ஆ மற்றும் இ

5. வெப்பக் கடத்தல், வெப்பச் சலனம், வெப்பக் கதிர்வீச்சு ஆகியவற்றின் மூலம் ஏற்படும் வெப்ப இழப்பைக் குறைக்கும் கருவி.

(அ) சூரிய மின்கலம்

(ஆ) சூரிய அழுத்த சமையற்கலன்

(இ) வெப்பநிலைமானி

(ஈ) வெற்றிடக்குடவை

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. வேகமாக வெப்பத்தைக் கடத்தும் முறை _____________

2. பகல் நேரங்களில், காற்று _________ லிருந்து ___________க்கு பாயும்.

3. திரவங்களும், வாயுக்களும் __________ முறையில் வெப்பத்தைக் கடத்தும்.

4. வெப்பநிலை மாறாமல் பொருளொன்று ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலைக்கு மாறுவதை ___________ என்கிறோம்.

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

அ) கருத்தும் காரணமும் சரி, கருத்துக்கான காரணம் சரியானது.

ஆ) கருத்தும் காரணமும் சரி, ஆனால் கருத்துக்கான காரணம் தவறு.

இ) கருத்து சரி. காரணம் தவறு

ஈ) கருத்து தவறு. காரணம் சரி

1. கருத்து: தாமிரப் பகுதியை அடிப்பகுதியாகக் கொண்ட பாத்திரங்கள் மூலம் விரைவாக சமைக்கலாம்.

காரணம்: தாமிரம் ஒரு எளிதிற் கடத்தி.

2. கருத்து: மதிய வேளையில் அதிகமான சூரியக் கதிர்கள் பூமியை வந்தடைகின்றன.

காரணம்: சூரியக்கதிர்கள் வெப்பக் கதிர்வீச்சு மூலம் பூமியை வந்தடைகின்றன.

3. கருத்து: வெப்பநிலை 100oC எட்டியவுடன் வெப்ப நிலை மேலும் மாறாமல் நீர் நீராவியாக மாறுகிறது.

காரணம்: நீரின் கொதிநிலை 10oC.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. வெப்பம் 2. கெல்வின் 3. கம்பி-1 4. வெப்பக்கதிர்வீச்சு 5. வெற்றிடக் குடவை

கோடிட்ட இடத்தை நிரப்புக: (விடைகள்)

1. வெப்பக்கதிர்வீசல் 2. கடல் பகுதியிலிருந்து, நிலத்திற்கு 3. வெப்பச் சலனம் 4. உள்ளுறை வெப்பம்

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றைத் தேர்வு செய்க: (விடைகள்)

1. கருத்தும் காரணமும் சரி, கருத்துக்கான காரணம் சரியானது.

2. கருத்தும் காரணமும் சரி, கருத்துக்கான காரணம் தவறு

3. கருத்து சரி காரணம் தவறு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!