Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Book Back QuestionsTnpsc

வெப்ப இயற்பியல் Book Back Questions 10th Science Lesson 3

10th Science Lesson 3

3] வெப்ப இயற்பியல்

Book Back Questions with Answer and Do You Know Box Content

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. பொது வாயு மாறிலியின் மதிப்பு

(அ) 3.81 J மோல்-1 K-1

(ஆ) 8.03 J மோல்-1 K-1

(இ) 1.38 J மோல்-1K-1

(ஈ) 8.31 J மோல்-1 K-1

2. ஒரு பொருளை வெப்பப்படுத்தினாலோ அல்லது குளிர்வித்தாலோ அப்பொருளின் நிறையில் ஏற்படும் மாற்றம்

(அ) நேர்க்குறி

(ஆ) எதிர்க்குறி

(இ) சுழி

(ஈ) இவற்றில் எதுவுமில்லை

3. ஒரு பொருளை வெப்பப்படுத்து போது அல்லது குளிர்விக்கும் போது ஏற்படும் நீள் வெப்ப விரிவு எந்த அச்சு வழியாக நடைபெறும்?

(அ) X அல்லது -X

(ஆ) Y அல்லது -Y

(இ) அ மற்றும் ஆ

(ஈ) அ அல்லது ஆ

4. மூலக்கூறுகளின் சராசரி ____________ வெப்பநிலை ஆகும்.

(அ) இயக்க ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலுக்கிடையே உள்ள வேறுபாடு

(ஆ) இயக்க ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலின் கூடுதல்

(இ) மொத்த ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலுக்கிடையேயான வேறுபாடு

(ஈ) இயக்க ஆற்றல் மற்றும் மொத்த ஆற்றலுக்கிடையேயான வேறுபாடு

5. கொடுக்கப்பட்டுள்ள படத்தில் வெப்ப ஆற்றல் பரவும் திசைகள்

(அ) A🡨 B, A🡨 C, B 🡨 C

(ஆ) A 🡪 B, A🡪 C, B 🡪 C

(இ) A 🡪B, A🡨 C, B 🡪 C

(ஈ) A 🡨 B, A 🡪 C, B 🡨 C

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. அவகேட்ரோ எண்ணின் மதிப்பு ___________

2. வெப்பம் மற்றும் வெப்பநிலை என்பது __________ அளவுகள்

3. __________ நிறையுள்ள நீரின் வெப்ப நிலையை ___________ உயர்த்த தேவையான வெப்ப ஆற்றலின் அளவு ஒரு கலோரி என வரையறுக்கப்படுகிறது.

4. பாயில் விதியின் படி, மாறா வெப்ப நிலையில் ஒரு குறிப்பிட்ட நிறையுடைய வாயுவின் அழுத்தம் அவ்வாயுவின் ____________ எதிர்த்தகவில் அமையும்.

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக

1. திரவத்திற்கு ஒரு குறிப்பிட்ட வெப்ப ஆற்றல் அளிக்கும் போது ஏற்படும் தோற்ற விரிவு என்பது இயல்பு விரிவை விட அதிகம்.

2. ஒரு பொருளில் வெப்ப ஆற்றலானது எப்பொழுதும் உயர் வெப்ப நிலை பகுதியிலிருந்து குறைந்த வெப்ப நிலை பகுதிக்குப் பரவும்.

3. சார்லஸ் விதியின்படி, மாறா அழுத்தத்தில் உள்ள வாயுவில் வெப்ப நிலை பருமனுக்கு எதிர் தகவில் அமையும்.

பொருத்துக:

1. நீள் வெப்ப விரிவு – அ. பருமனில் மாற்றம்

2. பரப்பு வெப்ப விரிவு – ஆ. சூடான பொருளிலிருந்து குளிர்ச்சியான பொருள்

3. பரும வெப்ப விரிவு – இ. 1.381 X 10-23 JK-1

4. வெப்ப ஆற்றல் பரவல் – ஈ. நீளத்தில் மாற்றம்

5. போல்ட்ஸ்மேன் மாறிலி – உ. பரப்பில் மாற்றம்

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை தேர்வு செய்க:

(அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம்.

(ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமல்ல.

(இ) கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியல்ல.

(ஈ) கூற்று தவறானது. ஆனால், காரணம் சரியானது.

1. கூற்று: ஒரு உலோகத்தின் ஒரு முனையில் வெப்பப்படுத்தும் போது மற்றொரு முனையும் வெப்பம் அடையும்.

காரணம்: வெப்ப ஆற்றலானது வெப்ப நிலை குறைவாக உள்ள பகுதியிலிருந்து வெப்ப நிலை அதிகமாக உள்ள பகுதிக்கு பரவும்.

2. கூற்று: திட மற்றும் திரவ பொருள்களை விட வாயு பொருட்கள் அதிக அமுக்கத்திற்கு உட்படும்.

காரணம்: அணுக்கள் அல்லது மூலக்கூறுகளுக்கு இடையே உள்ள தொலைவு ஒப்பிடத் தகுந்த வகையில் அதிகம்.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. (8.31 J மோல்-1K-1) 2. சுழி 3. அ அல்லது ஆ 4. மொத்த ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலுக்கிடையேயான வேறுபாடு
5. A←B, A←C, B←C

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. 6.023×1023 மோல், 2. ஸ்கேலார், 3. ஒரு கிராம், 10C, 4. பருமனுக்கு

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக:

1. தவறு

சரியான விடை: திரவத்திற்கு ஒரு குறிப்பிட்ட வெப்ப ஆற்றல் அளிக்கும்போது ஏற்படும் உண்மை விரிவு என்பது தோற்ற விரிவை விட அதிகம்.

2. சரி

3. தவறு

சரியான விடை: சார்லஸ் விதியின்படி, மாறாத அழுத்தத்தில் உள்ள வாயுவில் வெப்பநிலை பருமனுக்கு நேர்த்தகவில் அமையும்.

பொருத்துக: (விடைகள்)

1. நீள் வெப்பவிரிவு – நீளத்தில் மாற்றம்

2. பரப்பு வெப்ப விரிவு – பரப்பில் மாற்றம்

3. பரும வெப்ப விரிவு – பருமனில் மாற்றம்

4. வெப்ப ஆற்றல் பரவல் – சூடான பொருளிலிருந்து குளிர்ச்சியான பொருள்

5. போல்ட்ஸ்மேன் மாறிலி – 1.381×10-23 JK-1

பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றைத் தேர்வு செய்க: (விடைகள்)

1. கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியல்ல.

2. கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!