Book Back QuestionsTnpsc

வேதிவினைகளின் வகைகள் Book Back Questions 10th Science Lesson 10

10th Science Lesson 10

10] வேதிவினைகளின் வகைகள்

Book Back Questions with Answer and Do You Know Box Content

உங்களுக்குத் தெரியுமா?

சமன்படுத்தப்பட்ட வேதிச்சமன்பாடு என்பது ஒரு வேதிவினையின் வேதி இயைபு, வினைபடு மற்றும் வினை விளைபொருள்களின் இயற்பியல் நிலைமை மற்றும் வினை நடைபெறும் சூழ்நிலைகளை குறிக்கும் எளிய (குறிப்பு) குறியீடாகும்

ஒரு வேதிவினையில் ஈடுபடும் பொருள்களின் நிலை மற்றும் இயற்பியல் நிலையை ஒரு அடைப்புக்குறிக்குள் சுருக்க குறியீடுகளைப் பயன்படுத்தி குறிப்பிடலாம். எடுத்துக்காட்டாக, திண்ம பொட்டாசியம், நீருடன் வினை புரிந்து பொட்டாசியம் ஹைட்ராக்சைடையும், ஹைட்ரஜன் வாயுவையும் தருகிறது. இவ்வினை சார்ந்த அனைத்து தகவல்களும் கீழ்கண்டவாறு வேதிச்சமன்பாட்டில் குறிக்கப்படுகின்றன.

2K(s) + 2H2O(I) 🡪 2KOH(aq) + H2(g)

குறியீடு நிலைமை அல்லது இயல்நிலை
S திண்மம்
I நீர்மம்
G வாயு
Aq நீர்க்கரைசல்

சுவற்றில் வெள்ளையடிக்க நீற்றுச் சுண்ணாம்பு கரைசலைப் பயன்படுத்துகிறோம். கால்சியம் ஹைட்ராக்சைடு, காற்றில் இருக்கும் கார்பன்-டை-ஆக்சைடுடன் வினை புரிந்து கால்சியம் கார்பனேட் உருவாகி மெல்லிய படலமாக சுவர்களில் படிகிறது. வெள்ளையடித்த இரண்டு அல்லது மூன்று தினங்களில் கால்சியம் கார்பனேட் சுவர்களுக்கு ஒரு மினுமினுப்புத் தன்மையைத் தருகிறது. சுண்ணாம்புக்கல்லின் (மார்பிள்) வேதி வாய்ப்பாடு CaCO3.

Ca(OH)2(aq) + CO2(g) 🡪 CaCO3(S) + H2O(I)

நீற்றுச் சுண்ணாம்பு கார்பன் டை ஆக்சைடு கால்சியம் கார்பனேட் நீர்

காயங்களில் ஹைட்ரஜன் பெராக்சைடை ஊற்றும் போது H2O2 என்பது நீராகவும், ஆக்சிஜனாகவும் சிதைவடைகிறது. உருவான ஆக்சிஜன் குமிழ்கள் வெளியேறி விடுவதால் மீண்டும் H2O2 உருவாகுதல் தடுக்கப்படுகிறது.

அறை வெப்ப நிலையில் வைக்கப்படும் உணவு பொருளானது குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்படும் உணவை விட விரைவாக கெட்டுப்போகிறது. குளிர்சாதன பெட்டிகள் வெப்பநிலையானது அறை வெப்ப நிலை விட குறைவாக இருக்கும். வினையின் வேகம் குறைவாக இருப்பதால் உணவு கெட்டுப்போகும் வேகமும் குறைவாக இருக்கும்.

காற்றடைக்கப்பட்ட குளிர்பானங்களில் கார்பன் டை ஆக்சைடு நீரில் கரைக்கப்பட்டு (சோடா) ஒரு பாட்டிலில் வைக்கப்பட்டுள்ளது. வாயு வெளியேறா வண்ணம் அடைக்கப்பட்டுள்ள நிலையில் பாட்டிலில் கரைக்கப்பட்ட கார்பன் டை ஆக்சைடு வாயுவும் (கார்பானிக் அமிலம்), வாயு நிலை கார்பன் டை ஆக்சைடு வாயுவம் ஒன்றுடன் ஒன்று சமநிலையில் உள்ளன. நீங்கள் பாட்டிலைத் திறந்தவுடன் வாயுநிலை கார்பன் டை ஆக்சைடு வெளியேறுகிறது. எனவே கரைக்கப்பட்ட கார்பன் டை ஆக்சைடு வாயு வெளியேறும் பொருட்டு கரையா நிலைக்கு மீண்டும் திரும்புகிறது. எனவே தான் நீ பாட்டிலைத் திறந்து நீண்ட நேரம் வைக்கும் பொழுது கார்பன் டை ஆக்சைடு அனைத்தும் வெளியேறி CO2 இல்லாத திரவமாக மாறுகிறது.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

1. H2(g) + Cl2(g) 🡪 2HCl(g) என்பது

(அ) சிதைவுறுதல் வினை

(ஆ) சேர்க்கை வினை

(இ) ஒற்றை இடப்பெயர்ச்சி வினை

(ஈ) இரட்டை இடப்பெயர்ச்சி வினை

2. ஒளிச்சிதைவு என்பது இதனால் நடைபெறும் சிதைவு வினையாகும்.

(அ) வெப்பம்

(ஆ) மின்னாற்றல்

(இ) ஒளி

(ஈ) எந்திர ஆற்றல்

3. கார்பன் மற்றும் ஆக்சிஜன் இடையேயான ஒரு வினை பின்வருமாறு குறிக்கப்படுகிறது.

C(s) + O2(g) 🡪 CO2(g)

இது எவ்வகை வினையாக வகைப்படுத்தப்படுகிறது.

(i) சேர்க்கை வினை (ii) எரிதல் வினை (iii) சிதைவுறுதல் வினை (iv) மீளா வினை

(அ) (i) மற்றும் (ii)

(ஆ) (i) மற்றும் (iv)

(இ) (i), (ii) மற்றும் (iii)

(ஈ) (i), (ii) மற்றும் (iv)

4. Na2SO4(aq) + BaCl2(aq) 🡪 BaSO4(s) ↓ 2 NaCl(aq) என்ற வேதிச்சமன்பாடு பின்வருவனவற்றுள் எவ்வகை வினையைக் குறிக்கிறது.

(அ) நடுநிலையாக்கல் வினை

(ஆ) எரிதல் வினை

(இ) வீழ்படிவாதல் வினை

(ஈ) ஒற்றை இடப்பெயர்ச்சி வினை

5. வேதிச் சமநிலை பற்றிய பின்வரும் கூற்றுகளில் எவை சரியானவை?

(i) இயக்கத்தன்மை உடையது.

(ii) சமநிலையில் முன்னோக்கு மற்றும் பின்னோக்கு வினைகளில் வினைவேகம் சமம்.

(iii) மீளா வினைகள் வேதிச் சமநிலையை அடைவதில்லை

(iv) வினைபடு பொருள் மற்றும் வினைவிளை பொருள்களில் செறிவு வேறுபடலாம்.

(அ) (i), (ii) மற்றும் (iii)

(ஆ) (i), (ii) மற்றும் (iv)

(இ) (ii), (iii) மற்றும் (iv)

(ஈ) (i), (iii) மற்றும் (iv)

6. X(s) + 2HCl(aq) 🡪 XCl2(aq) + H2(g) என்ற ஒற்றை இடப்பெயர்ச்சி வினையில் X என்பது பின்வருவனவற்றுள் எதைக் குறிக்கிறது

(i) Zn (ii) Ag (iii) Cu (iv) Mg

சரியான இணையைத் தேர்ந்தெடு

(அ) (i) மற்றும் (ii)

(ஆ) (ii) மற்றும் (iii)

(இ) (iii) மற்றும் (iv)

(ஈ) (i) மற்றும் (iv)

7. பின்வருவனவற்றுள் எது “தனிமம் + தனிமம் 🡪 சேர்மம்” வகை அல்ல

(அ) C(s) + O2(g) 🡪 Co2(g)

(ஆ) 2K(s) + Br2(I) 🡪 2KBr(s)

(இ) 2CO(g) + O2(g) 🡪 2CO2(g)

(ஈ) 4Fe(s) + 3O2(g) 🡪 2Fe2O3(s)

8. பின்வருவனவற்றுள் எது வீழ்படிவாதல் வினையை குறிக்கிறது.

(அ) A(s) + B(s) 🡪 C(s) + D(s)

(ஆ) A(s) + B(aq) 🡪 C(aq) + D(/)

(இ) A(aq) + B(aq) 🡪 C(s) + D(aq)

(ஈ) A(aq) + B(s) 🡪 C(aq) + D(/)

9. ஒரு கரைசலின் pH மதிப்பு 3 எனில், அதன் (OH) ஹைடிராக்சைடு அயனி செறிவு என்ன?

(அ) 1 x 10-3 M

(ஆ) 3 M

(இ) 1 x 10-11 M

(ஈ) 11 M

10. தூளாக்கப்பட்ட CaCO3; கட்டியான CaCO3 விட தீவிரமாக வினைபுரிகிறது. காரணம்

(அ) அதிக புறப்பரப்பளவு

(ஆ) அதிக அழுத்தம்

(இ) அதிக செறிவினால்

(ஈ) அதிக வெப்ப நிலை

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. அமிலம் மற்றும் காரத்திற்கு இடையேயான வினை ____________ என்று அழைக்கப்படுகிறது.

2. ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் லித்தியம் உலோகம் வினை புரியும்போது _________ வாயு வெளியேறுகிறது.

3. பனிக்கட்டி உருகுதல் செயலில் நிகழும் சமநிலை ___________ என்று அழைக்கப்படுகிறது.

4. ஒரு பழச்சாரின் pH மதிப்பு 5.6 இதனுடன் நீர்த்த சுண்ணாம்பு சேர்க்கும் போது இதன் pH மதிப்பு ___________ (அதிகமாகிறது/குறைகிறது)

5. 25oC வெப்ப நிலையில் நீரின் அயனிப் பெருக்கத்தின் மதிப்பு ____________

6. மனித ரத்தத்தின் பொதுவான pH மதிப்பு ____________

7. மின்னாற்பகுப்பு என்பது ___________ வகை வினையாகும்.

8. தொகுப்பு வினைகளில் உருவாகும் வினை விளை பொருள்களின் எண்ணிக்கை ___________

9. வேதி எரிமலை என்பது _____________ வகை வினைக்கு எடுத்துக்காட்டாகும்.

10. ஹைடிரஜன் (H+) அயனி நீரில் கரைவதால் உருவாகும் அயனி __________ என்று அழைக்கப்படுகிறது.

பொருத்துக:

1. வினையின் வகைகளை அடையாளம் காண்:

வினை வகை
NH4OH(aq) + CH3COOH(AQ) 🡪 CH3CHCOONH4(aq) + H2O(I) ஒற்றை இடப்பெயர்ச்சி வினை
Zn(S) + CuSO4(aq) 🡪 ZnSO4(aq) + Cu(S) எரிதல் வினை
ZnCO3(S) வெப்பம் 🡪 ZnO(S) + CO2(g) நடுநிலையாக்கல் வினை
C2H4(g) + 4O2(g) 🡪 2CO2(g) + 2H2O(g) + வெப்பம் வெப்பச் சிதைவு வினை

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக

1. சில்வர் உலோகம் நைட்ரிக் அமிலத்தில் ஹைடிரஜன் வாயுவை இடப்பெயர்ச்சி செய்ய வல்லது.

2. SO3, CO2, NO2 போன்ற வாயுக்கள் கரைந்துள்ள மழைநீரின் pH மதிப்பு 7-யை விட குறைவாக இருக்கும்.

3. ஒரு மீள் வினையின் சமநிலையில் வினைவினை மற்றும் வினைபடு பொருள்களின் செறிவு சமமாக இருக்கும்.

4. ஒரு மீள் வினையின் ஏதேனும் ஒரு வினைவிளை பொருளை அவ்வப்பொழுது நீக்கும் பொழுது அவ்வினையின் விளைச்சல் அதிகரிக்கிறது.

5. pH தாளை ஒரு கரைசலில் நனைக்கும் பொழுது மஞ்சளாக மாறுகிறது. எனவே அக்கரைசல் காரத்தன்மை கொண்டது.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: (விடைகள்)

1. சேர்க்கை வினை, 2. ஒளி, 3. i ii மற்றும் iv, 4. வீழ்படிவாதல் வினை, 5. i ii மற்றும் iii, 6. i மற்றும் iv,
7. 2CO(g) + O2(g) → 2CO2(g), 8. A(aq) + B(aq) → C(s) +D(aq), 9. 1×10-11M 10. அதிக புறப்பரப்பளவு

கோடிட்ட இடங்களை நிரப்புக: (விடைகள்)

1. நடுநிலையாக்கல் வினை, 2. ஹைட்ரஜன், 3. இயற்பியல் சமநிலை, 4. குறைகிறது, 5. (1.00×10-14 மோல்2 டெசி.மீ-6),
6. (7.35 முதல் 7.45 வரை), 7. மின்னாற் சிதைவு, 8. ஒன்று, 9. வெப்பச் சிதைவு, 10. ஹைட்ரேனியம் அயனி

பொருத்துக: (விடைகள்)

வினை வகை
1. NH4OH(aq) + CH3COOH(aq) → CH3COONH4(aq) + H2O(I) நடுநிலையாக்கல் வினை
2. Zn(s) + CuSO4(aq) → ZnSO4(aq) + Cu(s) ஒற்றை இடப்பெயர்ச்சி வினை
3. ZnCO3(s) வெப்பம்→ ZnO(s) + CO2(g) வெப்பச்சிதைவு வினை
4. C2H4(g) + 4O2(g) → 2CO2(g) + 2H2O(g) + வெப்பம் எரிதல் வனை

சரியா அல்லது தவறா எனக் குறிப்பிடுக: (தவறானதைத் திருத்தி எழுதுக)

1. தவறு

சரியான விடை: சில்வர் உலோகம் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தில் ஹைட்ரஜன் வாயுவை வெளியேற்றும்.

2. சரி

3. தவறு

சரியான விடை: ஒரு மீள் வினையின் சமநிலையில் வினைவிளை மற்றும் வினைபடு பொருள்களின் செறிவில் எந்த மாற்றமும் நிகழாது.

4. சரி

5. தவறு

சரியான விடை: PH தாளை ஒரு கரைசலில் நனைக்கும் பொழுது நீலநிறமாக மாறுகிறது. எனவே அக்கரைசல் காரத்தன்மை கொண்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!