Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

10th & 11th April 2021 Tnpsc Current Affairs in Tamil & English

10th & 11th April 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 10th & 11th April 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

April Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

10th & 11th April 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. ‘அரிய நோய்களுக்கான தேசிய கொள்கை – 2021’க்கு ஒப்புதல் அளித்துள்ள அமைச்சகம் எது?

அ) உள்துறை அமைச்சகம்

ஆ) சுகாதார அமைச்சகம்

இ) கல்வி அமைச்சகம்

ஈ) நிதி அமைச்சகம்

  • அரிய நோய்களுக்கான தேசிய கொள்கை – 2021’க்கு மத்திய சுகாதார அமைச்சகம் சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் தேசிய கொள்கை அரிய நோய்களுக்கான சிகிச்சைக்கான அதிக செலவைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தக் கொள்கை நாட்டின் பல்வேறு பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்து ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
  • PM-JAY’இன்கீழ் வரும் 40% பயனாளிகள் இந்தக்கொள்கையின்மூலம் பயனடைவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

2. வாரணாசியிலிருந்து களவாடப்பட்ட, ‘18ஆம் நூற்றாண்டைச்சார் -ந்த அன்னபூர்ணா தேவியின் சிலை’யைத் திருப்பித்தரவுள்ள நாடு எது?

அ) கனடா

ஆ) பிரேஸில்

இ) போர்ச்சுகல்

ஈ) சீனா

  • 18ஆம் நூற்றாண்டில் வாரணாசியில் உள்ள ஒரு கோவிலில் இருந்து களவாடப்பட்ட அன்னபூர்ணா தேவியின் சிலையை கனடா நாடு திருப்பி அனுப்பவுள்ளது. அரசாங்க அறிக்கையின்படி, சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு இந்தச் சிலை திருடப்பட்டது. இந்த சிலை கனடாவின் மெக்கென்சி கலைக்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது ஒட் -டவாவிற்கான இந்திய உயராணையரிடம் ஒப்படைக்கப்பட்டது.

3. சமீப செய்திகளில் இடம்பெற்ற, “Ingenuity” என்றால் என்ன?

அ) NASA’இன் செவ்வாய் ஹெலிகாப்டர்

ஆ) ISRO’இன் திட்டம்

இ) COVID-19 தடுப்பூசி

ஈ) புதிய கோள்

  • “Ingenuity” என்பது செவ்வாய் கிரகத்தில் உந்துதலுக்காக NASA உருவா -க்கிய ஒரு மினி ஹெலிகாப்டர் ஆகும். சமீபத்தில் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய NASA’இன் ‘Perseverance’ ஊர்திமூலம் இது சரிசெய்யப்பட்டது.
  • இந்த ஹெலிகாப்டர் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் வெற்றிகரமாக இறக்கிவிடப்பட்டது. ஏப்.11 அன்று செவ்வாயின் வளிமண்டலத்தின்மீது அது இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

4. ஏவுகணை அமைப்புகளின் உற்பத்தியில் பங்கெடுக்க, தனியார் துறை நிறுவனங்களை அனுமதித்துள்ள அமைப்பு எது?

அ) ISRO

ஆ) DRDO

இ) BEML

ஈ) HAL

  • ஏவுகணை அமைப்புகளின் மேம்பாடு மற்றும் உற்பத்தியில் தனியார் துறை நிறுவனங்கள் அதனுடன் கைகோர்க்க பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (DRDO) அனுமதித்துள்ளது. வளர்ச்சியுடன் கூடிய உற்பத்தி கூட்டாண்மை திட்டத்தின்கீழ் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், Vertical Launched Short-Range Surface to Air Missile system (VL-SRSAM) ஆகியவை அடங்கும்.

5. 2021 ஜனவரியில் அறிவிக்கப்பட்ட வாடகை மற்றும் குத்தகை ஒப்பந்தங்களை ஒழுங்குபடுத்துவதற்கான அவசர ஆணைக்கு ஒப்புதல் அளித்துள்ள மாநிலம் எது?

அ) குஜராத்

ஆ) உத்தரபிரதேசம்

இ) பீகார்

ஈ) மத்திய பிரதேசம்

  • உத்தர பிரதேச அமைச்சரவை உத்தரபிரதேச நகர்ப்புற வளாகத்தின் குத்தகை (2ஆவது) அவசர ஆணை 2021’க்கு ஒப்புதல் அளித்துள்ளது. இது, ஒரு சொத்தை வாடகைக்கு எடுக்க, ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை கட்டாயமாக்குவதால் குத்தகை தகராறுகளை குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • தற்போதைய சட்டத்தின்கீழ் மோதல் தீர்வுக்கான தெளிவான வழிமுறை ஏதுமில்லை. இது, 2021 ஜனவரியில் உ பி மாநிலத்தில் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது.

6. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, Receivables Exchange of India (RXIL) என்பதுடன் தொடர்புடைய துறை எது?

அ) வேளாண்மை

ஆ) அந்நிய செலாவணி

இ) MSME’கள்

ஈ) தங்க இறக்குமதி

  • MSME’களுக்கான விலைப்பட்டியல் தள்ளுபடி தளமாக Receivables Exchange of India (RXIL) உள்ளது. இது, ரிசர்வ் வங்கியின் அங்கீகாரம் பெற்ற TReDS (Trade Receivables Discounting System) பரிமாற்ற தளம் ஆகும். இத்தளம் 7000’க்கும் மேற்பட்ட பதிவுசெய்யப்பட்ட MSME’களைக் கொண்டுள்ளது. 2017ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து 5,00,000 விலைப்பட்டியல்களை அது செயலாக்கியுள்ளது.

7. தருண் பஜாஜை அடுத்து புதிய பொருளாதார விவகாரத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டவர் யார்?

அ) அஜை சேத்

ஆ) B P கனுங்கோ

இ) அனில் குமார் ஜா

ஈ) R காந்தி

  • 1987ஆம் ஆண்டு இஆப அதிகாரியும், பெங்களூரு மெட்ரோ இரயில் கார் -ப்பரேஷனின் நிர்வாக இயக்குநருமான அஜை சேத் பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய வருவாய் செயலாளராக தற்போதைய பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் தருண் பஜாஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

8. கீழ்காணும் எந்த நாட்டில், பெஞ்சமின் நெதன்யாகு அவர்கள் புதிய அரசாங்கத்தை அமைக்கவுள்ளார்?

அ) இத்தாலி

ஆ) இஸ்ரேல்

இ) ஆப்கானிஸ்தான்

ஈ) ஈரான்

  • இஸ்ரேலின் மிகநீண்டகால தலைவரும், தற்போதைய பிரதம அமைச்சருமான பெஞ்சமின் நெதன்யாகு இஸ்ரேலிய அதிபரிடமிருந்து புதிய அரசாங்கம் அமைப்பதற்கான ஆணையைப் பெற்றார். 2 ஆண்டுகளில் நான்காவது முறையாக மார்ச்.23 அன்று நடந்த இஸ்ரேல் தேர்தல், ஒரு முடிவில்லாத தேர்தலாக முடிந்தது.
  • நெதன்யாகு, 2009 முதல் தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்து வருகிறார், இப்போது ஒரு புதிய அரசாங்கத்தை உருவாக்க, அவருக்கு 28 நாட்கள் கெடு வைக்கப்பட்டுள்ளது.

9. சமீபசெய்திகளில் இடம்பெற்ற செனோபாட்கள், எவ்வுயிரினத்தின் ஸ்டெம் செல்களிலிருந்து உருவாக்கப்படுகிற ரோபோக்களாகும்?

அ) முதலை

ஆ) தவளை

இ) முயல்

ஈ) ஆடு

  • டப்ட்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தவளைகளின் ஸ்டெம் செல்களிலிருந்து ‘ஜெனோபாட்ஸ்’ என்ற ரோபோக்களை உருவாக்கியுள்ளனர். இந்த ரோபோக்கள், ஏதேனும் சேதமடைந்தால் தாங்களாகவே அதை ஆற்றிக்கொள்ளும் திறன் படைத்தவை. அவற்றின் மேற்பரப்பில் உள்ள ‘சிலியா’ துகள்களைப் பயன்படுத்தி அவற்றால் நகரவும் முடியும்.
  • அவற்றால் அணிகளாக திரண்டு ஒன்றாக வேலை செய்யவியலும். மேலும், அவற்றின் சுற்றுப்புறங்கள்பற்றிய தகவல்களையும் அவற்றால் பதிவுசெய்யவியலும். இந்த ரோபோக்களை உயிரி-மருத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வுகளில் பயன்படுத்த முடியும்.

10.சந்தை மூலதனத்தில் $100 பில்லியன் அமெரிக்க டாலர்களைக் கடந்து, இந்தியாவில் மூன்றாவது இடத்தைப்பிடித்த நிறுவனங்கள் குழுமம் எது?

அ) ரிலையன்ஸ்

ஆ) TATA

இ) மைக்ரோசாப்ட்

ஈ) அதானி

  • TATA குழுமம் மற்றும் ரிலையன்ஸ் குழுமத்திற்குப் பிறகு, கெளதம் அதானியின் அதானி நிறுவனங்கள் குழுமம், சந்தை மூலதனத்தில் $100 பில்லியன் டாலர்களைக் கடக்கும் இந்தியாவின் மூன்றாவது நிறுவனம் என ஆனது. அதானி குழுமத்தின் 6 பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மொத்த சந்தை மூலதனம், `7.84 இலட்சம் கோடி அல்லது $106.8 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது என்று பங்கு பரிவர்த்தனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. இந்திய கடல்பகுதியில் அனுமதியின்றி அமெரிக்க கடற்படை பயிற்சி

இந்திய கடல்பகுதியில் மத்திய அரசின் முன் அனுமதியைப் பெறாமல் அமெரிக்காவின் கடற்படைக் கப்பல் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. சர்வதேச சட்டங்களுக்கு உள்பட்டு இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இதற்கு இந்திய தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் கடற்கரையோரப் பகுதிகளிலிருந்து 200 கடல்மைல் தொலைவானது (சுமார் 370 கிமீ) பிரத்தியேக பொருளாதார மண்டலமாக வரையறுக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதிகளில் மற்ற நாடுகள் இராணுவப் பயிற்சி உள்ளிட்டவற்றை மேற்கொள்வதற்கு, முன் அனுமதியைப் பெற வேண்டும் என்று இந்திய அரசு விதிகளை வகுத்துள்ளது. ஆனால், இந்த விதிகளை அமெரிக்கா ஏற்க மறுத்துவருகிறது.

சர்வதேச விதிகளுக்குள்பட்டு எந்தக் கடல்பகுதியிலும் பயணிக்கவோ பயிற்சிகளை மேற்கொள்ளவோ அனுமதி உண்டு என்று அந்நாட்டு கடற் படை கூறிவருகிறது. இத்தகைய சூழலில், இலட்சத்தீவுகளுக்கு அருகே உள்ள கடல்பகுதியில் அமெரிக்க கடற்படை பயிற்சியை மேற்கொண்டது. இதுதொடர்பாக அந்நாட்டு கடற்படைசார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘லட்சத்தீவுகளில் இருந்து 130 கடல்மைல் தொலைவில் ‘USS ஜான் பால் ஜோன்ஸ்’ என்ற தாக்குதல் கப்பலில் கடந்த 7 அன்று பயிற்சி மேற்கொள்ளப் -பட்டது. இது இந்தியாவின் பிரத்யேக பொருளாதார மண்டலப் பகுதிக்குள் வருகிறது.

எனினும், பயிற்சி மேற்கொள்வது தொடா்பாக இந்திய அரசிடமிருந்து முன் அனுமதி பெறப்படவில்லை. சர்வதேச சட்டங்களுக்கு உள்பட்டு இப்பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. சுதந்திரமாகக் கடற்பயணம் மேற்கொள்வதைத் தடுக்கும் வகையில் இந்திய அரசின் விதிகள் உள்ளன. அந்த விதிகளுக்கு சவால் விடுக்கும் வகையிலும், அதே வேளையில் சர்வதேச சட்டங்களுக்கு உள்பட்டும் அமெரிக்க கடற்படை பயிற்சி மேற்கொண்டது.

2. தமிழ்நாட்டில் டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக N S சந்தோஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

3. கிரிஜா வைத்தியநாதன் நியமனத்திற்கு உயர்நீதிமன்றம் தடை

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நியமனத்துக்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மத்திய அமைச்சரவையின் பணி நியமனக்குழு கடந்த டிச.12 அன்று, தமிழகத்தின் தலைமைச்செயலாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற கிரிஜா வைத்தியநாதன், வருவாய் நிர்வாக ஆணையராக பணியாற்றி ஓய்வுபெற்ற சத்யகோபால், மற்றும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இந்திய வனத்துறை அதிகாரி அருண்குமார் வர்மா உள்ளிட்ட மூவரை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக நியமனம் செய்ய ஒப்புதல் அளித்திருந்தது.

தேசிய பசுமைத் தீர்ப்பாய சட்டப்பிரிவின்படி நிபுணத்துவ உறுப்பினராக நியமனம் செய்யப்பட கூடிய நபருக்கு 15 ஆண்டுகள் இந்திய ஆட்சிப்பணி அனுபவமும், அதில் ஐந்து ஆண்டுகள் சுற்றுச்சூழல் சார்ந்த துறையில் பணியாற்றிய அனுபவமும் இருக்கவேண்டும். கிரிஜா வைத்யநாதனுக்கு 15 ஆண்டுகளுக்கு மேல் இந்திய ஆட்சிப்பணி அனுபவம் இருந்தாலும், 5 ஆண்டுகளுக்கு சுற்றுச்சூழல் சார்ந்த பணிகளின் அனுபவம் இல்லை.

அவர் மூன்று ஆண்டுகள் 6 மாத காலம் மட்டுமே சுற்றுச்சூழல் துறையில் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டுள்ளார். எனவே, அவரது நியமனம் தேசிய பசுமைத் தீர்ப்பாய விதிகளுக்கு எதிரானது. இதனைக் கருத்தில் கொண்டு அவரது நியமனத்தை இரத்து செய்ய வேண்டும் என கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மத்திய அரசு, கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், பல்வேறு பதவிகளை வகித்திருந்தாலும் சுற்றுச்சூழல் விவகாரங்களை கையாண்டது தொடர்பான அனுபவம் கிரிஜா வைத்தியநாதனுக்கு இல்லை, சட்டப்படி தேவைப்படும் தகுதியையும் அவர் பெற்றிருக்கவில்லை என கருத்து தெரிவித்தனர். பின்னர் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணர் குழு உறுப்பினராக முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நியமனத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டனர். இதுதொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் துறை, மத்திய பணியாளர் துறை கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். கிரிஜா வைத்தியநாதன் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி பதவியேற்க இருந்தது குறிப்பிடத்தக்கது.

4. இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் பிலிப் காலமானார்

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் பிலிப் காலமானார். அவருக்கு வயது 99. இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் பிலிப், உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சில மாதங்களாக சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் இன்று அவர் காலமானார். தனது வின்ஸ்டர் கேட்சில் அரசு மாளிகையில் இளவரசர் பிலிப்பின் உயிர் பிரிந்ததாக பக்கிங்காம் அரண்மனையிலிருந்து தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளவரசர் சார்லஸின் தந்தையான பிலிப், வயோதிகம் காரணமாக கடந்த 2017ஆம் ஆண்டு பொது வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற்றார். மேலும், இங்கிலாந்து அரச குடும்ப வரலாற்றில் மிக அதிக காலம் இளவரசராக இருந்தவர் பிலிப் என்பது குறிப்பிடத்தக்கது. இளவரசர் பிலிப்பின் மறைவால் ஏற்பட்ட துக்கத்தில் உலகெங்கிலும் உள்ள மக்களுடன் இங்கிலாந்து அரச குடும்பமும் இணைகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5. ஆன்லைனில் தேன் விற்பனை – தேனீ வாரியத்துடன் இந்தியன் வங்கி ஒப்பந்தம்:

தேன் மற்றும் தேன் பொருட்களை இணையவழிமூலம் பெறுவதற்காக, தேசிய தேனீ வாரியத்துடன் இந்தியன் வங்கி ஒப்பந்தம் செய்துள்ளது.

தேன் மற்றும் தேன் பொருட்களை இந்தியன் வங்கி, தங்களது வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் இணையதளம் மூலம் பெறுவதற்கான புதிய வசதியை ஏற்படுத்தி உள்ளது. இதற்காக, தேசிய தேனீ வாரியத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

‘மது கிரந்தி’

இதைத்தொடர்ந்து, தேன் மற்றும் தேன் பொருட்களை வாங்குவதற்காக, ‘மது கிரந்தி’ என்ற இணையதளத்தை மத்திய விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தொடங்கிவைத்தார். இந்த இணையதளம்மூலம், தேன் & தேன் பொருட்களை பெறுவதோடு, அவை எங்கெல்லாம் கிடைக்கு -ம் என்ற விவரத்தையும் தெரிந்து கொள்ளலாம்.

1. Which Ministry has approved the “National Policy for Rare Diseases 2021”?

A) Ministry of Home Affairs

B) Ministry of Health

C) Ministry of Education

D) Ministry of Finance

  • The Union Health Ministry has recently approved the National Policy for Rare Diseases 2021. This national policy aims to bring down the high cost of treatment for rare diseases.
  • This policy has been drafted and approved in consultation with multiple stakeholders of the nation. It is also stated that 40% of beneficiaries covered under PM–JAY will benefit from the policy.

2. ‘The 18th century idol of Goddess Annapurna’, which was stolen from Varanasi, is being returned by which country?

A) Canada

B) Brazil

C) Portugal

D) China

  • The 18th century idol of Goddess Annapurna that was stolen from a temple in Varanasi, is being returned by Canada. As per a government statement, the ancient idol was stolen about 100 years ago. The idol is said to have housed in Canada’s MacKenzie Art Gallery. It was handed over to India’s High Commissioner to Ottawa.

3. What is “Ingenuity”, which is in news recently?

A) NASA’s Mars Helicopter

B) ISRO’s Project

E) COVID–19 vaccine

D) New planet

  • Ingenuity is a mini–helicopter developed by NASA for propulsion in Mars. This was fixed with the NASA’s Perseverance rover that successfully landed in Mars recently. The helicopter has been dropped successfully on Mars’s surface and is expected to make its flight through Mars atmosphere on 11th April.

4. Which organisation has allowed private sector firms to partner in production of missile systems?

A) ISRO

B) DRDO

C) BEML

D) HAL

  • The Defence Research Development Organisation (DRDO) has allowed private sector firms to join hands with it in development and production of missile systems. This announcement has been made under the Development–cum–Production Partner programme.
  • The programmes covered under the programme include the Vertical Launched Short–Range Surface to Air Missile system (VL–SRSAM).

5. Which state has approved ordinance to regulate rent and tenancy agreements, which was promulgated in January 2021?

A) Gujarat

B) Uttar Pradesh

C) Bihar

D) Madhya Pradesh

  • The Uttar Pradesh Cabinet has approved the Uttar Pradesh Regulation of Urban Premises Tenancy (second) Ordinance 2021. It aims to reduce tenancy disputes as it makes signing of contract compulsory to rent out a property. There is no clear mechanism for conflict resolution under the present law. It was promulgated and implemented in the state of January 2021.

6. Receivables Exchange of India (RXIL), which was making news recently, is associated with which sector?

A) Agriculture

B) Foreign Exchange

C) MSMEs

D) Gold Import

  • Receivables Exchange of India (RXIL) is the invoice discounting platform for MSMEs. It is a TReDS (Trade Receivables Discounting System) Exchange Platform accredited by the RBI. The platform has over 7000 registered MSMEs and have processed over 5,00,000 invoices, since its launch in 2017.

7. Who has been appointed as the new Department of economic affairs secretary, succeeding Tarun Bajaj?

A) Ajay Seth

B) B P Kanungo

C) Anil Kumar Jha

D) R Gandhi

  • Ajay Seth, a 1987–batch Indian Administrative Service (IAS) officer and the Managing director of Bangalore Metro Rail Corporation, has been appointed as the Department of economic affairs (DEA) secretary. Tarun Bajaj, the present Department of economic affairs (DEA) secretary, has been appointed as the new Revenue secretary.

8. Benjamin Netanyahu is set to form a new Government in which country?

A) Italy

B) Israel

C) Afghanistan

D) Iran

  • Israel’s longest–serving leader and the incumbent Prime Minister Benjamin Netanyahu received a mandate from Israel’s president to form a new government. Israel’s election on March 23, was its fourth in two years and ended with an inconclusive election.
  • Netanyahu was in power consecutively since 2009, and now has 28 days to form a new Government.

9. Xenobots, which were seen in the news recently, are robots developed from the stem cells of which organism?

A) Crocodile

B) Frog

C) Rabbit

D) Sheep

  • Researchers at Tufts University have developed robots named ‘Xenobots’ from the stem cells of frogs. These robots are able to self–heal after damage and move using particles on their surface –cilia.
  • They can work together in teams and can record information about their surroundings. The robots can be used in bio–medical and environmental studies.

10. Which group of companies has become 3rd in India to cross USD 100 billion in market capitalisation?

A) Reliance

B) TATA

C) Microsoft

D) Adani

  • Gautam Adani’s Adani group of companies has become the 3rd in India to cross $100 billion in market capitalisation, after Tata Group and Reliance Group. The total market capitalisation of Adani group’s 6 listed companies touched Rs.7.84 lakh crore or $106.8 billion, according to stock exchange data.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!