Winmeen Online Course - Subscribe Here

Tnpsc Test Series - Group 1, 2, 4 & VAO Exams
Tnpsc

10th & 11th July 2021 Tnpsc Current Affairs in Tamil & English

10th & 11th July 2021 Tnpsc Current Affairs in Tamil & English

Hello aspirants, you can read 10th & 11th July 2021 Tnpsc Current Affairs in Tamil & English from this article.

July Daily Current Affairs Pdf

Monthly Current Affairs

Weekly Current Affairs

10th & 11th July 2021 Tnpsc Current Affairs in Tamil & English

1. மத்திய நிதி அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, COVID சிகிச்சை செலவினங்களுக்கு, பிறிதொரு நபரிடமிருந்து எவ்வளவுவரை நிதி பெறப்பட்டால், அதற்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது?

அ) `1 இலட்சம்

ஆ) `5 இலட்சம்

இ) `10 இலட்சம்

ஈ) `25 இலட்சம்

  • நிதி அமைச்சகத்தின் சமீபத்திய அறிவிப்பின்படி, பணி வழங்குநர்கள் (அ) வேறு நபர்களால் மேற்கொள்ளப்படுகிற ஊழியரின் COVID சிகிச்சையில் ஏற்படும் செலவினங்களுக்கான வரிக்கு விலக்களிக்கப்படுகிறது. இந்த விலக்கு, பணிவழங்குநர் செலுத்தும் யாதொரு தொகைக்கும் பொருந்தும். மேலும், பிறிதொரு நபரிடமிருந்தும் நிதி பெறப்பட்டால், அதற்கான வரையறை `10 இலட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • இது, 2019-20 நிதியாண்டு மற்றும் அதனைத் தொடர்ந்த ஆண்டுகளில் மேற்கொள்ளப்படும் COVID சிகிச்சைகளையும் உள்ளடக்கியதாகும்.

2. அதிநவீன பினாகா ஏவுகணை மற்றும் காலிபர் ஏவுகணைகளை பரிசோதனை செய்கின்ற அமைப்பு எது?

அ) எச்.ஏ.எல்

ஆ) டிஆர்டிஓ

இ) இஸ்ரோ

ஈ) எல் அண்ட் டி

  • உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 122 எம்எம் காலிபெர் ராக்கெட் மற்றும் மேம்படுத்தப்பட்ட பினாகா ராக்கெட் ஆகியவற்றை ஒடிசா கடற்கரைக்கு அருகில் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த பரிசோதனை தளத்தில் அமைந்துள்ள பல்முனை ராக்கெட் ஏவும் வசதியில் இருந்து டிஆர்டிஓ என்றழைக்கப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் வெற்றிகரமாக சோதனை செய்தது.

3.Hylocereusundatus’ என அறிவியல் பூர்வமாக குறிப்பிடப்படுகிற பழம் எது?

அ) டிராகன் பழம்

ஆ) ஆரஞ்சு

இ) சீதாப்பழம்

ஈ) தர்பூசணி

  • அறிவியல் பூர்வமாக ‘Hylocereusundatus’ என்று குறிப்பிடப்படும் டிராகன் பழம், தாமரை மலர் போன்று இருப்பதால் இந்தியாவில் ‘கமலம்’ என்று அழைக்கப்படுகிறது. வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகத்தின் அண்மைய அறிவிப்பின்படி, மகாராஷ்டிர மாநிலத்தின் சாங்லி மாவட்ட உழவர்களிடமிருந்து பெறப்பட்ட டிராகன் பழத்தின் முதல் சரக்குகளை, இந்தியா, துபாய்க்கு ஏற்றுமதி செய்தது.

4. சமீபத்தில், உலக நலவாழ்வு அமைப்பால் மலேரியா இல்லாததாக அறிவிக்கப்பட்ட ஆசிய நாடு எது?

அ) வங்கதேசம்

ஆ) சீனா

இ) தாய்லாந்து

ஈ) நேபாளம்

  • உலக நலவாழ்வு அமைப்பானது சீனாவுக்கு, ‘மலேரியா இல்லாத’ நாடு என அதிகாரப்பூர்வமாக சான்றிதழ் அளித்துள்ளது. 2016ஆம் ஆண்டில் இலங்கைக்கு இத்தகைய சான்றிதழ் அளிக்கப்பட்ட பிறகு, ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் இச்சான்றிதழைப்பெற்ற இரண்டாவது நாடு இதுவாகும். கடந்த 1940’களில், சீனா, 30 மில்லியன் பாதிப்புகளையும் ஆண்டுக்கு 300,000 இறப்புகளையும் கொண்டிருந்தது.

5. சௌதி அரேபியாவின் மிகப்பெரிய வானூர்தி நிறுவனம் எது?

அ) எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்

ஆ) எட்டிஹாட் ஏர்வேஸ்

இ) சௌதி அரேபிய ஏர்லைன்ஸ்

ஈ) குவாண்டாஸ் ஏர்லைன்ஸ்

  • அரசுக்கு சொந்தமான சௌதி அரேபிய ஏர்லைன்ஸ் நிறுவனம் சௌதி அரேபியாவின் மிகப்பெரிய வானூர்தி நிறுவனமாகும். சமீபத்தில், சௌதி அரேபியா 2ஆவது தேசிய வானூர்தி சேவையை தொடங்குவதற்கான திட்டங்களை அறிவித்தது. அது வானூர்தி போக்குவரத்தைப் பொறுத்த மட்டில் சௌதி அரேபியாவை உலக அளவில் ஐந்தாவது மிகப்பெரிய வானூர்தி சேவை நாடாக மாற்றும்.

6. இந்தியாவில் அவசரகால பயன்பாட்டு உரிமத்தைப் பெறும் முதல் mRNA தடுப்பூசி எது?

அ) ஸ்புட்னிக்

ஆ) சினோவாக்

இ) மாடர்னா mRNA 1273

ஈ) பைசர் தடுப்பூசி

  • இந்தியா தனது நான்காவது COVID-19 தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்தது. அது முதல் மற்றும் மாடர்னாவின் mRNA-1273 தடுப்பூசியாகும். அது, அமெரிக்காவில், ‘ஸ்பைகேவாக்ஸ்’ என்ற பெயரில் விற்கப்படுகிறது. தற்போது மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்தாமல் இந்தத் தடுப்பூசிகளை இந்தியாவுக்கு இறக்குமதி செய்யலாம். 94.1 சதவிகித செயல்திறனைக் கொண்ட மாடர்னா தடுப்பூசி, இந்திய மருந்து நிறுவனமான சிப்லாமூலம் இந்தியாவில் விநியோகிக்கப்படுகிறது.

7. பனை கச்சா மீதான எந்த வரி, அண்மையில், பத்து சதவீதமாகக் குறைக்கப்பட்டது?

அ) கலால் வரி

ஆ) சுங்க வரி

இ) சரக்கு மற்றும் சேவை வரி

ஈ) மேற்கூறிய எதுவும் இல்லை

  • மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் (CBIC) சமீபத்திய அறிவிப்பின்படி, கச்சா பனையெண்ணெய்மீதான அடிப்படை சுங்க வரி 10 சதவீதமாகவும், சுத்திகரிக்கப்பட்ட பனையெண்ணெய்மீதான அடிப்படை சுங்க வரி 37.5 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
  • இவ்வரி குறைப்பு சோயா எண்ணெய் & சூரியகாந்தி எண்ணெயைவிட பனையெண்ணெயின் நுகர்வை அதிகமாக மாற்றக்கூடும். அது இறக்குமதியை அதிகரிக்கும் மற்றும் சமையல் எண்ணெய் விலையை குறைக்கும். இந்த குறைந்த வரி விகிதம் ஜூன்.30 முதல் செப்டம்பர்.30 வரை பொருந்தும்.

8. COVID நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படும் DRDO’இன் 2-DG மருந்தைத் தயாரிக்கும் மருந்து நிறுவனம் எது?

அ) டாக்டர் ரெட்டிஸ்

ஆ) சன் பார்மா

இ) சீரம் நிறுவனம்

ஈ) பாரத் பயோடெக்

  • 2-டியோக்ஸி-டி-குளுக்கோஸ் (2-DG) மருந்தினை டாக்டர் ரெட்டியின் நிறுவனத்துடன் இணைந்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO) ஆய்வகமான அணு மருத்துவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அறிவியல் நிறுவனம் உருவாக்கியது. டாக்டர் ரெட்டியின் ஆய்வகங்கள் வணிகரீதியாக 2-DG மருந்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அது COVID நோயாளிகளின் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் வாய்வழி மருந்தாகும்.

9. பர்மிய திராட்சை, சிவப்பரிசி மற்றும் எலுமிச்சை ஆகியவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த இந்திய மாநில அரசு எது?

அ) மேற்கு வங்கம்

ஆ) பீகார்

இ) அஸ்ஸாம்

ஈ) அருணாச்சல பிரதேசம்

  • அஸ்ஸாமி மொழியில் ‘லெட்டெகு’ என்று குறிப்பிடப்படும் புதிய பர்மிய திராட்சைகள் சமீபத்தில் கௌகாத்தியிலிருந்து வான்வழியாக துபாய்க்கு ஏற்றுமதிசெய்யப்பட்டது. வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து நிறைந்த இப்பழங்களை ஏற்றுமதி செய்வதற்கு APEDA உதவி செய்தது.
  • சமீபத்தில், அமெரிக்காவிற்கு ‘சிவப்பரிசி’ மற்றும் புவிசார் குறியீடு பெற்ற அஸ்ஸாம் எலுமிச்சை ஆகியவற்றை இலண்டனுக்கு ஏற்றுமதி செய்ய APEDA உதவியது.

10. 2021ஆம் ஆண்டுக்கான ஜப்பானின புகுயோகா பரிசைவென்ற இந்தியர் யார்?

அ) அமர்த்தியா சென்

ஆ) P சாய்நாத்

இ) உர்ஜித் படேல்

ஈ) இரகுராம் இராஜன்

  • மூத்த இதழியலாளர் P சாய்நாத், 2021ஆம் ஆண்டுக்கான ஜப்பானின் புகுயோகா பரிசைப்பெற்ற மூவருள் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கிராமப்புற இந்தியா குறித்த படைப்புகள் மற்றும் வர்ணனைகள்மூலம் அறிவைப்பரப்புவது மற்றும் உள்நாட்டு ஒத்துழைப்பை மேம்படுத்துவது ஆகியவற்றுக்காக, சாய்நாத், புக்குயோகா பரிசை வென்றுள்ளார். இதுவரை, 11 இந்தியர்கள் புகுயோகா பரிசைப் பெற்றுள்ளனர்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. கொலோன் பல்கலைக்கு நிதி: முதல்வருக்கு அயல்நாட்டினர் நன்றி

ஜெர்மனியின் கொலோன் பல்கலைக்கழக தமிழ்த்துறைக்கு நிதி வழங்கிய முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு பல்வேறு தரப்பினரும் நன்றி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்தி: ஜெர்மனியில் உள்ள கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை தொடர்ந்து இயங்கிட `1.25 கோடி நிதியை வழங்கிட முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டார். தமிழ்மொழியின் தொடர் பயன்பாட்டுக்கும், முன்னேற்றத்துக்கும் வலுசேர்த்து பல சர்வதேச பல்கலைக்கழகங்களில் தமிழ் இடம்பெறும் வகையில் இந் நிதியுதவி அமைந்துள்ளது.

2. உலக அளவில் பட்டினியால் நிமிடத்துக்கு 11 பேர் உயிரிழப்பு; உணவுப் பஞ்சம் 6 மடங்கு அதிகரிப்பு: ஆக்ஸ்ஃபாம் ஆய்வில் தகவல்

உலக அளவில் பட்டினியில் நிமிடத்துக்கு 11 பேர் உயிரிழக்கிறார்கள். உணவுப்பஞ்சம் உள்ளிட்ட சூழல் உலக அளவில் கடந்த ஆண்டைவிட ஆறு மடங்கு அதிகரித்துள்ளது என்று வறுமைக்கு எதிரான அமைப்பான ஆக்ஸ்ஃபாம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

வறுமைக்கு எதிரான அமைப்பான ஆக்ஸ்ஃபாம், உலகளவில் கரோனா காலத்தில் பட்டினி குறித்து ‘பல்கிப்பெருகிய பட்டினி வைரஸ்’ என்ற தலைப்பில் ஆய்வு நடத்தியது.

அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: “கரோனாவால் ஏற்பட்ட உணவுப்பஞ்சம் கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் ஆறுமடங்கு அதிகரித்துள்ளது. இந்த உணவுப் பஞ்சத்தால் மட்டும் உலக அளவில் நிமிடத்துக்கு ஏழு பேர் உயிரிழக்கின்றனர். பட்டினியால் உலக அளவில் நிமிடத்துக்கு 11 பேர் உயிரிழக்கின்றனர்.

உலக அளவில் கடந்த ஆண்டு பட்டினி, உணவுப் பாதுகாப்பின்மை, பஞ்சம் போன்ற காரணிகளால் 2 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால், தற்போது அது உலக அளவில் 15.5 கோடியாக அதிகரித்துள்ளது. மக்கள் உலக அளவில் வறுமையையும், பட்டினியையும், பஞ்சத்தையும் எதிர்கொள்ள உலக நாடுகளுக்கு இடையே நடக்கும் போர் முக்கியக் காரணமாக இருக்கிறது.

பட்டினியுடன் போரிடுவதற்கு பதிலாக, உலக நாடுகள் தங்களுக்குள் போரிட்டு வருகின்றன. கோடிக்கணக்கான மக்கள் ஏற்கெனவே காலநிலையால் ஏற்படும் பேரழிவுகளாலும், பொருளாதார இடர்ப்பாடுகளாலும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் பட்டினியும் சேர்ந்துள்ளது. உலக அளவில் ராணுவத்துக்குச் செலவிடும் தொகை 5,100 கோடி டாலர்களாக (ரூ.38 ஆயிரம் கோடி) அதிகரித்துள்ளது. உலக அளவில் பட்டினியால் வாடும் மக்களுக்கு உதவி வரும் ஐ.நா. செலவிடும் தொகையில் இது 6 மடங்காகும்.

ஆப்கானிஸ்தான், எத்தியோப்பியா, தெற்கு சூடான், சிரியா, ஏமன் ஆகிய நாடுகளில் பட்டினி மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. போரில் பட்டினி ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குடிமக்களுக்கு உணவு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை மனிதநேய உதவிகள் கூட மறுக்கப்படுகின்றன.

மக்கள் பாதுகாப்பாக வாழ முடியாது, உணவைத் தேட முடியாது. அதற்கு முன்பாகவே நாடுகள் சந்தைகளையும், உணவுச் சந்தைகளையும், கால்நடைகளையும் குறிவைத்து அழித்துவிடுகின்றன. தொடர்ந்து ஏற்பட்டு பேரழிவு தரக்கூடிய பட்டினியை நிறுத்த நாடுகளுக்கு இடையே நடக்கும் போரை நிறுத்த வேண்டும். போர் நடக்கும் பகுதியில் தொண்டு நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதநேய உதவி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். ஐ.நா.வின் பட்டினி போக்கும் முயற்சிக்கு உலக நாடுகள் உதவ வேண்டும்”. இவ்வாறு ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3. 11.07.2021 – விடுதலைப் போராட்ட வீரர் ‘மாவீரன்’ அழகுமுத்துக்கோனின் 311ஆவது பிறந்தநாள்

மாவீரன் அழகுமுத்துக்கோன் வாழ்க்கை குறிப்பு:

மாவீரன் அழகுமுத்துக்கோன், வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் வீரத்திலகமாய் விளங்கிய மாவீரர் ஆவார். மாவீரன் அழகுமுத்துக்கோன் 11.07.1710 அன்று தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள கட்டாலங்குளத்தில் பிறந்தார். இவரது தந்தை முத்துக்கோன், தாயார் பாக்கியத்தாய் அம்மாள் ஆவர்.

1755ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் நெல்லைச் சீமையிலுள்ள எல்லா பாளையக்காரர்களிடமும் நேரடியாக வரி வசூலிப்பதை விடுதலை உணர்வு நிரம்பப்பெற்ற வீரர் அழகுமுத்துக்கோன் எதிர்த்தார். எட்டப்ப மன்னர் வரிகட்ட மறுத்ததால், 1756-இல் மதுரை, நெல்லைச் சீமைக்கு ஆங்கிலேயர்களின் கமாண்டராக இருந்த கான்சாகிப்பின் பீரங்கிப்படை எட்டயபுரத்தைத் தாக்கியதைத் தொடர்ந்து எட்டயபுரம் ஆங்கிலேயர் வசமானது.

விடுதலை வீரர் அழகுமுத்துக்கோன் எட்டப்ப மன்னரைக் காப்பாற்றி அவரை பெருநாழிக்காட்டில் பாதுகாப்பாக வைத்திருந்தார். எட்டயபுரத்தை மீட்டெடுக்க விடுதலை வீரர் அழகுமுத்துக்கோன் மாவேலி ஓடை பெத்தநாயக்கனூர் பகுதியிலிருந்து வீரர்கள் அடங்கிய படையினைத் திரட்டி மன்னர் வெங்கடேஸ்வர எட்டப்பர், மாவீரன் அழகுமுத்துக்கோன் ஆகியோர் தலைமையில் இருபெரும் படைகள் இருவேறு திசையில் போர் தொடுக்கப் புறப்பட்டனர்.

மாவீரன் அழகுமுத்துக்கோன் படையினர் பெத்தநாயக்கனூர் கோட்டையில் இரவில் தங்கியிருந்ததை உளவறிந்த கான்சாகிப் படையினர் திடீர் தாக்குதலை நடத்தியதால், இத்தாக்குதலை எதிர்கொள்ள இயலாமல் வீரர்கள் இப்போரில் வீர மரணம் அடைந்தனர்.

மாவீரன் அழகுமுத்துக்கோன் மற்றும் 255 வீரர்களை நடுக்காட்டூர் சீமை என்ற இடத்திற்கு இழுத்துச்சென்று அவர்களில் 248 பேரின் வலது கரங்களை வெட்டி எறிந்த கொடுமையை நிகழ்த்தினார்கள் ஆங்கிலேயர்கள். மாவீரன் அழகுமுத்துக்கோன், கெச்சிலணன் சேர்வை, வெங்கடேசுரரெட்டு சேர்வை, முத்தழகு சேர்வை, பரிவாரம் முத்திருளன் இவரது தம்பி செகவீர ரெட்டுலட்சுமணன், தலைக்காட்டுபுரம் மயிலுப்பிள்ளை ஆகிய 7 பேரையும் பீரங்கி வாயில் கட்டி வைத்துச் சுட்டுத்தள்ளினார்கள்.

1759ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்தக் கொடூரத்தை நிகழ்த்தினார்கள் வெள்ளையர்கள். சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் வீரத்தையும் வரலாற்றையும் உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில் தூத்துக்குடி மாவட்டம், கட்டாலங்குளத்தில் உள்ள அன்னாரது நினைவு மண்டபத்தில் ஆண்டுதோறும், அவரது பிறந்தநாள் விழா அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

4. விம்பிள்டன் டென்னிஸ்: ஆஷ்லி பர்டி சாம்பியன்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஆஸி வீராங்கனை ஆஷ்லி பர்டி சாம்பியனானார். விம்பிள்டனில் இது அவரது முதல் பட்டமாகும். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் இது அவரது 2ஆவது சாம்பியன் பட்டம். இதற்குமுன் 2019 பிரெஞ்சு ஓபனில் அவர் வாகை சூடியிருந்தார். லண்டனில் நடைபெற்ற இறுதிச்சுற்றில், உலகின் 13ஆம் நிலையில் உள்ள செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவை அவர் எதிர்கொண்டார்.

5. விண்வெளி செல்லும் 3-ஆவது இந்திய வம்சாவளிப் பெண்

அமெரிக்காவின் வா்ஜின் கலாக்டிக் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட விண்வெளி ஓடத்தில் செல்லும் குழுவுக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரீஷா பண்ட்லா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் நிறுவனமான வர்ஜின் கலாக்டிக், மனிதர்களை ஏற்றிச் செல்லக்கூடிய ‘ஸ்பேஸ்ஷிப்-2 யூனிட்டி’ என்ற தனது விண்வெளி ஓடத்தை சோதனை முறையில் விண்வெளியில் செலுத்துகிறது.

அந்த ஓடத்தில் வர்ஜின் கலாக்டிக் நிறுவன உரிமையாளரான சர் ரிச்சர்ட் பிரான்ஸனுடன் 6 பேர் செல்கின்றனர். அவர்களில் ஒருவராக, இந்திய வம்சாவளியைச்சேர்ந்த ஸ்ரீஷா பண்டலா (34) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஆந்திராவில் பிறந்த அவர், அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணம், ஹூஸ்டனில் வளர்ந்தவர். ஸ்பேஸ்ஷிப்-2 யூனிட்டி சோதனை வெற்றிகரமாக நிறைவடையும்போது, விண்வெளிக்குச் சென்ற 3ஆவது பெண் வீராங்கனை என்ற பெருமையை ஸ்ரீஷா பெறுவார். ஏற்கெனவே, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் விண்வெளிக்குச் சென்று வந்துள்ளது நினைவுகூரத்தக்கது.

5. கீழடி அகழாய்வில் தொட்டி போன்ற அமைப்பு கண்டுபிடிப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்று வரும் ஏழாம் கட்ட அகழாய்வில் சனி்க்கிழமை தொட்டி போன்ற அமைப்பு கண்டறியப்பட்டுள்ளது. கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட நான்கு இடங்களில் தமிழக தொல்லியல் துறை சார்பில் ஏழாம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் 13ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. கீழடியில் கணேசன் என்பவரது நிலத்தில் இதுவரை ஏழு குழிகள் தோண்டப்பட்டு அவற்றில் சுடுமண் பகடை, கிண்ணம், மூடியுடன் கூடிய பானை, பானை ஓடுகள், உழவு கருவி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கண்டறியப்பட்டன.

கீழடியில் தோண்டப்பட்ட 6 ஆவது குழியில் சிறிய வேலைப்பாடுடன் கூடிய பானை ஒடு கண்டறியப்பட்டது. இது தற்போது முழுமையாக தோண்டப்பபட்ட நிலையில் உருளை வடிவிலான தொட்டி போன்ற அமைப்பு வெளியே காணப்பட்டது. 44 செ.மீ உயரமும், 77 செ.மீ அகலமும் கொண்ட இது சிறிய தொட்டியாக இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது. கீழடி உள்ளிட்ட நான்கு தளங்களில் நடைபெற்று வரும் அகழாய்வில் கீழடி தொழில் சார்ந்த நகரமாகவும், கொந்தகை பண்டைய கால மக்கள் இடுகாடாகவும் பயன்படுத்தியுள்ளனர். அகரம் சமையல் கூடமாக இருந்திருக்க வாய்ப்புண்டு, இதுவரை நடந்த அகழாய்வில் அதற்கான சான்றுகள் கிடைத்துள்ளது. கீழடியில் ஏற்கனவே நடந்த அகழாய்வில் நெசவு தொழிலில் பயன்படுத்தப்படும் தக்கழி, களிமண் குண்டு, நெசவு ஊசி உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டன. தற்போது கிடைத்துள்ள தொட்டி போன்ற அமைப்பும் தொழிற்சாலையில் பயன்படுத்தியிருக்கலாம் என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

இனி வரும் நாட்களில் கீழடி அகழாய்வுத்தளத்தில் மேலும் கட்டடங்கள் போன்ற அமைப்புகள் வெளியே தெரிய வாய்ப்பிருப்பதாக நம்பப்படுகிறது.

1. As per the Finance Ministry’s notification, what is the limit of tax exemption on Covid treatment expenses if received from another person?

A) Rs 1 lakh

B) Rs 5 lakh

C) Rs 10 lakh

D) Rs 25 lakh

  • As per the Finance Ministry’s recent notification, tax on expenses incurred on Covid treatment of an employee, borne by employers or any another person, is exempted.
  • This exemption is applicable to any amount paid by the employer, and limited to Rs 10 lakh if received from any other person. This covers treatment of Covid–19 during FY20 and subsequent years.

2. Which organisation test–fired enhanced Pinaka rocket and Caliber Rockets?

A) HAL

B) DRDO

C) ISRO

D) L&T

  • The Defence Research and Development Organisation (DRDO) successfully test fired an extended range version of indigenously developed “Pinaka” rocket.
  • 25 Enhanced Pinaka Rockets were test fired at Integrated Test Range (ITR) in Chandipur off the coast of Odisha. The 122 mm Caliber rockets were launched from a Multi–Barrel Rocket Launcher (MBRL).

3. Which fruit is scientifically referred to as ‘Hylocereusundatus’?

A) Dragon fruit

B) Orange

C) Custard Apple

D) Watermelon

  • Scientifically referred to as Hylocereusundatus, the dragon fruit is called as ‘Kamalam’ in India, due to its resemblance to a lotus flower. Recently, India exported its first consignment of the Dragon Fruit sourced from the farmers of Sangli district, Maharashtra to Dubai, as per the announcement from the Ministry of Commerce and Industry.

4. Which Asian country was declared Malaria–Free by the World Health Organisation recently?

A) Bangladesh

B) China

C) Thailand

D) Nepal

  • China has been officially certified as ‘Malaria–free’ by the World Health Organization (WHO). It is only the second country in the Asia Pacific region to get the tag, after Sri Lanka in 2016. In the 1940s, it had an estimated 30 million cases and 300,000 deaths per year.

5. Which is the biggest air carrier in Saudi Arabia?

A) Emirates Airlines

B) Etihad Airways

C) Saudi Arabian Airlines

D) Qantas Airlines

  • Saudi Arabian Airlines, owned by the state is the biggest carrier in the kingdom of Saudi Arabia. Others include low–cost carrier Flyadeal sand Flynas. Recently, Saudi Arabia announced plans to launch a second national airline. This would push the kingdom to the fifth rank globally in terms of air transit traffic.

6. Which is the first mRNA vaccine, to get Emergency Use License in India?

A) Sputnik

B) Sinovac

C) Moderna mRNA 1273

D) Pfizer vaccine

  • India approved its fourth Covid–19 vaccine, and its first mRNA vaccine, Moderna’s mRNA–1273. It is sold under the brand name ‘Spikevax’ in the US. Now the vaccines can be imported to India without bridging clinical studies. Moderna vaccine which has 94.1 percent efficacy will be available in India through the Indian pharma company Cipla.

7. Which tax on crude Palm oil was recently reduced to 10 percent?

A) Excise Duty

B) Customs Duty

C) Goods and Services Tax

D) None of the above

  • As per a recent notification by the Central Board of Indirect Taxes and Customs (CBIC), the basic customs duty on crude palm oil has been cut to 10 percent and refined palm oil to 37.5 percent.
  • This tax cut could make palm oil more attractive than rival soyoil and sunflower oil, which will boost imports and bring down the edible oil prices. This lower tax rate will apply from June 30 to September 30.

8. Which pharma company manufactures the DRDO drug 2–DG to treat Covid patients?

A) Dr Reddys

B) Sun Pharma

C) Serum Institute

D) Bharat Biotech

  • 2–deoxy–D–glucose (2–DG) was developed by the Institute of Nuclear Medicine & Allied Sciences (INMAS), a laboratory of the Defence Research and Development Organisation (DRDO), in collaboration with Dr Reddy’s company.
  • Dr Reddy’s Laboratories (DRL) has commercially launched 2–DG drug, an oral drug used to treat moderate to severe Covid patients.

9. Which Indian state exported Burmese grapes, Red Rice and Lemon, to foreign countries?

A) West Bengal

B) Bihar

C) Assam

D) Arunachal Pradesh

  • A shipment of fresh Burmese grapes referred as ‘Leteku’ in Assamese language has been recently exported to Dubai from Guwahati by air route.
  • APEDA facilitated the export of the fruits rich in vitamin C and Iron. Recently, APEDA assisted in exports of the first consignment of ‘red rice’ to the USA and GI–certified KajiNemu (Assam lemon) to London.

10. Which Indian won the Japan’s Fukuoka Prize for 2021?

A) Amartya Sen

B) P Sainath

C) Urjit Patel

D) Raghuram Rajan

  • Veteran journalist P. Sainath has been selected as one of the three recipients of the Japan’s Fukuoka Prize for 2021.
  • Sainath will receive the Grand Prize of the Fukuoka Prize, for spreading knowledge through writings and commentaries on rural India and for promoting civil cooperation. Eleven Indians have received the Fukuoka Prize so far.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!