Tnpsc

10th 11th March 2020 Current Affairs in Tamil & English

10th 11th March 2020 Current Affairs in Tamil & English

10th 11th March 2020 Current Affairs in Tamil & English – Today Current affairs Pdf link available here.

10th 11th March 2020 Current Affairs Tamil

10th 11th March 2020 Current Affairs English

 

Previous Daily Current Affairs

Monthly Current Affairs

Weekly Current Affairs

நடப்பு நிகழ்வுகள்

1. ‘சப்சார் குட்’ என்பது எந்த இந்திய மாநிலத்தின் / யூனியன் பிரதேசத்தின் பிரபலமான திருவிழாவாகும்?

அ. மத்திய பிரதேசம்

ஆ. அஸ்ஸாம்

இ. மிசோரம்

ஈ. அருணாச்சல பிரதேசம்

  • ‘சப்சார் குட்’ என்பது மிசோரம் மாநிலம் முழுவதும் கொண்டாடப்படும் ஒரு பிரபலமான திருவிழாவாகும். வசந்த காலத்தை வரவேற்கும் நோக்கில் இவ்விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை அதனுடன் தொடர்புடைய பல கலாசார நிகழ்வுகளுடன் மாநில மக்கள் அனைவரும் கொண்டாடுகின்றனர். சேராவ் (பாரம்பரிய மூங்கில் நடனம்) உள்ளிட்ட நடன மற்றும் இசைநிகழ்வுகளில் மக்கள் அனைவரும் திரளாகப் பங்கேற்கின்றனர்.

2.அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் மேம்பட்ட ஆய்வுகளை மேற்கொள்ளும் நிறுவனத்தின் (IASST) அண்மைய ஆய்வின்படி, ‘Endophytic Actinobacteria’ஐ பயன்படுத்துவதன்மூலம் எந்தத் தாவரத்தில் வேதி உரத்தின் பயன்பாடுகளை குறைக்க முடியும்?

அ. கரும்பு

ஆ. தேயிலை

இ. பருத்தி

ஈ. காப்பி

  • கெளகாத்தியில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் மேம்பட்ட ஆய்வுகளை மேற்கொள்ளும் நிறுவனத்தின் (IASST) ஆராய்ச்சியாளர்கள், ‘எண்டோபைடிக் ஆக்டினோபாக்டீரியா’வில் பூஞ்சைக் காளான் வளர்ச்சியை எதிர்க்கும் செயற்கூறுகள் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். ‘எண்டோபைடிக் ஆக்டினோபாக்டீரியா’வைப் பயன்படுத்துவதன்மூலம், தேயிலைத்தோட்டப்பயிரில், வேதியுரங்களின் பயன்பாடுகளைக் குறைக்கமுடியும் என்பதையும் அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • IASST என்பது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின்கீழ் இயங்கிவரும் ஒரு தன்னாட்சிமிக்க நிறுவனமாகும். இக்கண்டுபிடிப்பு, பூச்சிக்கொல்லி பயன்பாட்டைக் குறைக்கவும், இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட தேயிலையின் ஏற்றுமதியை பல நாடுகளுக்கு அதிகரிக்கவும் உதவும்.

3.அண்மையில் எந்தத் தொழில்நுட்ப நிறுவனத்தின் இந்தியப்பிரிவின் தகவல் தொடர்பு இயக்குநராக பிபாஷா சக்கரவர்த்தி நியமிக்கப்பட்டார்?

அ. அமேசான்

ஆ. பேஸ்புக்

இ. கூகிள்

ஈ. மைக்ரோசாப்ட்

  • CISCO’இன் முன்னாள் நிர்வாகி பிபாஷா சக்கரவர்த்தி, சமீபத்தில், பேஸ்புக் இந்தியாவின் புதிய தகவல் தொடர்புத்தலைவராக நியமிக்கப்பட்டார். பேஸ்புக் இந்தியாவில் தகவல் தொடர்பு இயக்குநராக தனது புதிய பாத்திரத்தின்கீழ், இந்தியாவில் பெருநிறுவன தகவல் தொடர்பு மற்றும் மக்கள் தொடர்புகளை பிபாஷா சக்கரவர்த்தி வழிநடத்துவார். பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய இரண்டின் இந்தியப் பிரிவு தகவல் தொடர்புத்துறையையும் அவரே கையாளுவார்.

4. ‘முழு மரபணு தொடர்வரிசையாக்கம்’ ஆராய்ச்சியுடன் தொடர்புடைய துறை எது?

அ. வேளாண்மை

ஆ. மரபியல்

இ. சுற்றுச்சூழல்

ஈ. ஆற்றல்

  • ‘GenomeIndia: Cataloguing the Genetic Variation in Indians’ என்ற மரபணு ஆராய்ச்சித் திட்டத்தை, 3 ஆண்டு காலத்திற்கு மேற்கொள்வதற்கு, 20 நிறுவனங்களுக்கு, உயிரித்தொழில்நுட்பத்துறை அனுமதி தந்துள்ளது. இந்தத்திட்டத்தின்கீழ், நாட்டின் பலதரப்பட்ட மக்கள் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 10,000 நபர்களை பகுப்பாய்வு செய்யும், ‘Whole Genome Sequencing’ மேற்கொள்ளப்படவுள்ளது. இதன் விளைவாக வரும் தகவல்களைக்கொண்டு, எதிர்காலத்தில் மானுட மரபியல் குறித்த ஆராய்ச்சியை செயல்படுத்த முடியும் மற்றும் நோய்களுக்கான துல்லியமான நோயறிதல்களை உருவாக்க முடியும்.

5.அயல்நாட்டு பங்களிப்புகளைப் பெறுவதற்கான ஓர் அமைப்பின் உரிமைகுறித்த, உச்சநீதிமன்றத்தின் அண்மைய தீர்ப்பின் பின்னணியில், FCRA என்பது எதைக் குறிக்கிறது?

அ. அயல்நாட்டு நாணய (ஒழுங்குமுறை) சட்டம்

ஆ. அயல்நாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டம்

இ. அயல்நாட்டு நாணய (உரிமைகள்) சட்டம்

ஈ. அயல்நாட்டு பங்களிப்பு (உரிமைகள்) சட்டம்

  • பொதுநலனுக்காக, ‘கடையடைப்பு’ மற்றும் ‘வேலைநிறுத்தம்’ போன்ற நியாயமான எதிர்ப்பின் வழிமுறைகளைக்கொண்டு போராடும் பொதுமக்களை ஆதரிக்கும் ஓர் அமைப்பு, அயல்நாட்டு நிதியைப் பெறுவதற்கான நியாயமான உரிமையை இழக்க முடியாது என இந்திய உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. ஆனால், அரசியல் கட்சிகளால், அயல்நாட்டு நிதியைப் பெறுவதற்கு பயன்படுத்தப்படும் நிறுவனங்கள் அனைத்தும், அயல்நாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டத்தின்கீழ் மிகக்கடுமையான நடவடிக்கைகளுக்கு ஆளாகும் என்றும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
  • அயல்நாட்டு நிதிப்பங்களிப்பை ஏற்றுக்கொள்வதையும் பயன்படுத்துவதையும் கட்டுப்படுத்துவதற்காக, கடந்த 2010ஆம் ஆண்டில் இந்தச்சட்டம் இயற்றப்பட்டது.

6.அண்மையில் மறுசீரமைக்கப்பட்ட, தேசிய பேரிடர் அபாயக் குறைப்புக்‍கான அமைப்பின் தலைவர் யார்?

அ. மத்திய உள்துறை அமைச்சர்

ஆ. மத்திய பாதுகாப்பு அமைச்சர்

இ. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர்

ஈ. மத்திய நிதியமைச்சர்

  • தேசிய பேரிடர் அபாயக் குறைப்புக்‍கான அமைப்பின் (National Platform for Disaster Risk Reduction தலைவராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்சா நியமிக்‍கப்பட்டுள்ளார். உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த அமைப்பை நடுவணரசு, முழுமையாக மாற்றியமைத்துள்ளது.
  • NPDRR’இன் துணைத்தலைவர்களாக உள்துறை அமைச்சகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மைக்குப் பொறுப்பான இணையமைச்சர் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் துணைத் தலைவர்கள் ஆகியோர் உள்ளனர்.மத்திய பாதுகாப்பு அமைச்சர் இராஜ்நாத் சிங், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர், இந்த அமைப்பின் பிற உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

7.மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகமானது எந்தப் பன்னாட்டு அமைப்போடு இணைந்து, “பணியின் எதிர்காலம்: இந்தியாவின் தொழிலாளர்படையில் பெண்கள்” என்ற விவாதத்தை ஏற்பாடு செய்தது?

அ. உலக வங்கி

ஆ. ஐ.நா. பெண்கள்

இ. ஐக்கிய நாடுகள் அவை

ஈ. பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பு

  • மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகமானது உலக வங்கியுடன் இணைந்து புது தில்லியில், “The Future of Work: Women in India’s Workforce” என்ற தலைப்பில் ஒரு விவாதத்தை ஏற்பாடு செய்தது. உலக வங்கியின் இந்திய இயக்குநர் Dr. ஜுனைத் கமல் அகமதுவுடன் இணைந்து மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி ஜூபின் இரானி இந்நிகழ்வைத் தொடங்கிவைத்தார். நடப்பாண்டு (2020) சர்வதேச பெண்கள் நாள் கொண்டாட்ட நிகழ்வுகளின் ஒரு பகுதியாக, வணிகம், அரசாங்கம், தனியார் மற்றும் சமூக அமைப்புகளில் பெண்களின் சாதனைகளை கெளரவிக்கும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

8.சர்வதேச பெண்கள் நாளைக் கொண்டாடுவதற்காக இந்திய இரயில்வே துறை நடத்திய பரப்புரையின் கருப்பொருள் என்ன?

அ. Travel safely ஆ. Each for Equal

இ. We are with you ஈ. He and She

  • சர்வதேச பெண்கள் நாளைக் (மார்ச் 8) கொண்டாடுவதற்காக இந்திய இரயில்வே மார்ச் 1-10 வரை பத்து நாள் நீண்ட பரப்புரையை நடத்திவருகிறது. பாலின சமத்துவத்தைக் குறிக்கும், ‘Each for Equal’ என்பது இப்பரப்புரையின் கருப்பொருளாகும். பெண் சாதனையாளர்களின் எழுச்சியூட்டும் கதைகளை எடுத்துக்கூறும், #SheInspiresU என்றவொன்றிலும் இந்திய இரயில்வே கவனம் செலுத்தியது. இந்தப் பரப்புரையின்கீழ், பெண் பயணிகளுக்கு பிரத்தியேக வசதிகளை வழங்கவும், இந்திய இரயில்வேயில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு அதிகாரம் வழங்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

9. ‘மாணாக்கர் நலவாழ்வு அட்டை’ என்ற பள்ளி நலவாழ்வு கல்வித்திட்டத்தை அண்மையில் அறிமுகம் செய்த மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?

அ. புது தில்லி

ஆ. ஜம்மு & காஷ்மீர்

இ. மத்திய பிரதேசம்

ஈ. இராஜஸ்தான்

  • ஜம்மு–காஷ்மீரில், அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் உடல்நலம் மற்றும் நலவாழ்வுக்காக, ‘மாணாக்கர் நலவாழ்வு அட்டை’ என்றவொரு திட்டத்தை அந்த யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநர் கிரிஷ் சந்திர முர்மு அண்மையில் அறிமுகப்படுத்தினார்.
  • இந்தப்புதிய திட்டத்தின்மூலம், ஆண்டுதோறும் மாணாக்கரை மருத்துவப்பரிசோதனைக்கு உட்படுத்தி, அவர்களின் தடுப்பூசி விவரங்கள் அந்த அட்டையில் பதியப்படும். மாணாக்கரின் உடல்நலன் கண்கா
    -ணிக்கப்படுவதால், நோய்கள் பரவாமல் தடுக்கலாம்.

10.அகர்தலா மற்றும் கோஜடங்கா ஆகிய இரண்டும், அண்மையில், அங்கீகரிக்கப்பட்ட தரைவழி குடிவரவு சோதனைச்சாவடிகளாக அறிவிக்கப்பட்டன. கோஜடங்கா அமைந்துள்ள மாநிலம் எது?

அ. நாகாலாந்து

ஆ. மேற்கு வங்கம்

இ. அஸ்ஸாம்

ஈ. மேகாலயா

  • இந்தியா-வங்கதேச எல்லையில் அமைந்துள்ள திரிபுராவின் தலைநகரமான அகர்தலா மற்றும் மேற்கு வங்கத்தின் கோஜடங்கா ஆகிய இரண்டும், செல்லுபடியாகும் பயண ஆவணங்களுடன் இந்திய நாட்டுக்குள் நுழைய அல்லது வெளியேறுவதற்கென அங்கீகரிக்கப்பட்ட தரைவழி குடிவரவு சோதனை -ச்சாவடிகளாக அண்மையில் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டன.
  • உள்துறை அமைச்சகத்தின் சமீபத்திய அறிவிப்பின்படி, குடிவரவு பணியகத்தின்கீழ், அகர்த்தலா மற்றும் கோஜடங்காவிற்கு மூத்த குடிவரவு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கடவுச்சீட்டு (இந்தியாவுக்குள் நுழைதல்) விதிகள், 1950இன்கீழ் இந்தப்பதவி உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நடப்பு நிகழ்வுகள்

Image result for tamilnadu map logo

  • தமிழ்நாட்டின் திட்டக்குழு துணைத்தலைவராக முன்னாள் அமைச்சர் C.பொன்னையன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச்செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் வெளியிட்டார். தமிழ்நாட்டின் மாநில திட்டக்குழுவானது முதலமைச்சர் தலைமையில் செயல்பட்டு வருகிறது.
  • சர்வதேச பெண்கள் நாளை முன்னிட்டு கோவை – ஈரோடு இடையே இயங்கும் விரைவு இரயிலை, பெண் ஊழியர்கள் இயக்கினர்.
  • நாட்டிலேயே முதன்முறையாக இந்திய உணவுக்கழகம் சார்பில் தஞ்சாவூரில் `1.23 கோடி செலவில் ‘உணவு அருங்காட்சியகம்’ அமைகிறது.
  • பெரம்பலூர் மாவட்டம், எறையூர் சக்கரை ஆலையில் இணை மின்னுற்பத்தி நிலையம் மற்றும் ஆலை நவீனமயமாக்கப்பட்ட பணிகளை சென்னையில் உள்ள தலைமைச்செயலகத்திலிருந்து காணொலிக் காட்சிமூலம் தமிழ்நாட்டின் முதலமைச்சர் பழனிசாமி திறந்துவைத்தார்.
  • சென்னை மாநகராட்சியும், ‘ஸ்டார்ட் இந்தியா’ அறக்கட்டளையும் இணைந்து சென்னையில் பொது மக்களிடையே கலையுணர்வை வளர்க்கும் வகையில், ‘கண்ணகி கலை மாவட்டம்’ என்ற திட்டத்தை தொடங்கியுள்ளன. தமிழ்நாட்டில் இந்தத்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ள முதல் நகரம் சென்னை. இது இந்தியாவிலேயே ஐந்தாவது நகரமாகும். கலையை பொதுமக்களிடம் கொண்டுசேர்ப்பதும், அதனை சமூக முன்னேற்றத்திற்கான ஊடகமாக பயன்படுத்துவதுமே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
  • நடப்பாண்டுக்கான, ‘ஒளவையார் விருது’ திருவண்ணாமலை மாவட்டத்தைச் சார்ந்த ரா.கண்ணகி என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு, `1 இலட்சத்துக்கான காசோலை, 8 கிராம் தங்கப்பதக்கம், சான்றிதழ் ஆகியவற்றை தமிழ்நாட்டின் முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்.
  • கோயம்புத்தூரைச் சார்ந்த கல்வியியல் பட்டதாரி மணிகண்டன் (27), புதுச்சேரியில் பிறந்து அரியலூர் உட்கோட்டை அரசாங்கப் பள்ளியில் இரவுக்காவலராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற இரா.அரிதாசு (71), திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த கல்லூரி மாணவர் த.ஆரோக்கிய ஆலிவர் இராசா ஆகிய மூவரும் தமிழ்நாடு அரசின் அகரமுதலித்திட்ட இயக்ககம் சார்பில், “தூய தமிழ்ப்பற்றாளர்” விருதுக்கு மாநில அளவில் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் யாரிடமும் தயக்கமில்லாமல் தூய தமிழையே பயன்படுத்தும் ஆர்வத்தினராவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!